Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண் போராளியின் தியாகங்கள்

Featured Replies

கல்யாணி என்றாலே எல்லாருக்கும் பிடித்த விஷயம்.. ஆமாம் இந்த கல்யாணியும் அந்த கல்யாணி பூவை போல மணம் வீசியவர்தான்..

.கல்யாணிக்கு ஒரு தங்கை கவிதா.. அப்பா அம்மாவோட யாழில் இருந்தார்கள்..

அவர்களின் வீடு கடல் ஒராமாய் இருந்த படியால் அவள் கடல் அழகை பார்த்து ரசிப்பாள்...எவ்வளவு அமைதியாக இருக்குறது கடல் இப்போது ஆனால் சில நேரம் இந்த சிங்கள வெறி யாளர் களால் கலங்கி போவாது உண்டு..?

கல்யாணி பாடசாலையிலும் தென்றலாய் மணம் வீசினாள்.. அவள் வீட்டில் மட்டும் இல்லை படிப்பிலும் சுட்டி பெண்தான்.. எந்த துறையிலும் கல்யாணி பூவை போல மணம் வீசி கொண்டுதான் இருந்தாள்...

தாய்க்கு தனது மகள் எல்லா துறையிலும் சிறந்து விழங்குவதை நினைத்து பெரு மிதம் அடைந்தாள்..பெத்த மனசு சந்தோசத்தில் இருந்தது...

என்ன அக்கவும் தங்கையும் பாடசாலை வெளிகிட்டு விடீர்கள் போல .. என்ன நேரம் போய் விட்டது என்ன செய்கிறீர்கள் இருவரும்..

இல்லை அப்பா அக்காவாலதான் நேரம் போய் விட்டது இன்று.. அக்கா அம்மாவுக்கு உதவி செய்து கொண்டு இருந்தர்கள்.. அதுதான் இவ்வளவு நேரம் அப்பா

அம்மா பாவம் அப்பா என்று சொல்லி கொண்டே வந்தாள் கல்யாணி அம்மாவுக்கு வருத்தம் நாங்களும் கஸ்ர படுத்தலமா> அதுதான் நேரம் போய் விட்டது...

சரி சரி இருவரும் பேசி கொண்டு இராமல் போயிற்று வாங்கள்..

சரி அப்பா என்று இருவரும் பாடசாலை போனார்கள்..]

இருவரும் பாடசாலை சென்று அவரவர் வகுப்பின் உள் போனார்கள்..

பாடசாலை விடும் நேரம் வந்தது.. கல்யாணி தன் நண்பியோட தங்கை கவிதாவை தேடி போனாள்..தங்கையையும் கூட்டி கொண்டு தெருவின் ஓரம் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்..அப்போதுதான் கல்யாணியின் வாழ்க்கையும் திசை மாறியது..

கல்யாணி பொம்மர் வருகுது போல இருக்கு வாங்க ஒடி போகலாம் என்று கேட்டாள் கல்யாணி நண்பியான திவ்யா..

திவ்யா இரு என்று சொல்லி கல்யாணி வாய் மூட வில்லை குண்டு ஒன்று விழுந்தது பக்கத்து தெருவில் போட்டான்..மூவரும் ஒட்டம் எடுத்தார்கள் ஒவரு பக்கமாய்....

பக்கத்துலை இருக்குற மரத்துக்கு பின்னால் ஒழிந்து கொண்டாள் கல்யாணி .. அப்போதுதான் பார்த்தாள் தன் தங்கையையும் தன் நண்பியை காண வில்லை என்று.. பொம்மர் அடுத்து போட்ட குண்டு அவள் நின்ற இடத்துக்கு பக்கத்தில் வந்து விழுந்தது.. கல்யாணி அழுது கொண்டே காதை பொத்தினாள்.. பொம்மார் போய் முடிய அழுது கொண்டே வேகம் வேகமாய் தங்கையும் நண்பியையும் தேடி ஒடினாள்..

அக்கா என்று பின்னால் ஒரு குரல் தங்கை போல இருக்கே என்று திரும்பி பார்த்தாள்..தங்கை அழுது கொண்டே நடுங்கி கொண்டு இருந்தாள்.. ஒடி போய் தங்கையை அணைத்து கொண்டாள்..

அக்கா திவ்யா அக்கா உங்களுடன் வர இல்லையா? என்ன தங்கச்சி நீ பேசுறாய் உன்னுடனும் வர இல்லையா அவள்.. நான் நினைத்தேன் நீங்கள் இருவரும் என் பின்னால் வாறிர்கள் என்று.. திரும்பி பார்த்தால் உங்கள் இருவரையும் காண வில்லை.. நான் உன்னுடன் இருப்பாள் என்று இருந்தன்...

சரி வா பேசிட்டு இருந்து பிரஜோசனம் இல்லை அவளை தேடலம்..இருவரும் தேடி ஒடினார்கள் குண்டு விழுந்த திசை நோக்கி..

அக்கா அங்க பாருங்கோ பனை மரத்துக்கு பின்னால் நம்ம பாடசாலை பிள்ளையள் யாரோ ஒருவருக்கு காயம் போல.. வா தங்கச்சி போய் பாக்கலாம்..

கல்யாணி கிட்ட போனாள் திரும்பி இருந்தது பெண் உடலம் .. அந்த பெண்ணின் கையில் நூல் கட்டி இருந்தது.. கல்யாணி ஜோசனையுடன் தன் கைய திரும்பி பார்த்தாள்.. ஆமாம் போன வாரம் கல்யாணியும் திவ்யாவும் கோவிலுக்கு போன போது நூல் கட்டினார்கள் ஒரே மாதிரி.. தன் கையில் இருக்கும் நூல் போல உள்ளதுவே இது திவ்யாவா இருக்குமா? இல்லை இல்லை இருக்காது யாராய் இருந்தால் என்ன இதுகும் நமது உறவுதானே என்று முகத்தை திருப்பினார்கள்..

கல்யாணி ஐயோ என்று மட்டும்தான் கத்தினாள்.. அதுக்கு அப்புறம் அவளுக்கு என்ன நடந்தது என்று கூட தெரிய வில்லை..கல்யாணி மயக்கத்தில் இருந்த படியால் தன் நண்பி இறந்தது கூட தெரியாமல் பித்து பிடித்தவள் போல இருந்தாள்.. அவள் வீட்டுக்கும் வந்து அவளாள் நம்ப முடிய வில்லை.. தன் நண்பி இறந்து விட்டாள் என்று..

கல்யாணிக்கு உடம்பும் மனமும் சரி ஆக வில்லை.. எத்தினை நாள் இதை எல்லாம் பார்த்துட்டு இருப்பது.. இது யாரால் சிங்கள வெறி யாளர் களால் அல்லவா? ஜோசித்து பார்த்தாள் இன்று என் நண்பி நாளை என் உறவுகள் என்று இது தொடர் கதை ஆகி விடாதா>?

தகப்பனுக்கு ஒரு கடிதம் எழுதினாள் அன்பு உள்ள அப்பா நான் விடுதலை போராட்டத்தில் இணை போகுறேன்..உங்களிடம் சொல்லி போட்டு போய் இருப்பன்.. உங்களுக்கு மனசு தாங்காது அப்பா என்னை விட மாட்டிர்கள் உங்களை குற்றமும் சொல்ல முடியாது... ஆதனால் சொல்லாமல் போகுறேன்.. விடுதலை கிடைத்தால் திரும்பி வருவன் உங்களை பார்க்க .....

அப்பா அம்மா மகளை போய் பார்த்து எந்த பிரஜோசனம் இல்லை என்று போய்அவளை வர சொல்லி கேட்க வில்லை..மகளின் மன உறுதி தெரிந்தவர்கள் அதனால் பேசி பிரஜோசனம் இருக்காது என்று போயு பேச இல்லை.. பாடசாலை சிறந்து விளங்கியாதால் மாணவர்கள்ஆசிரியர்களும் பாடசாலை போய் கேட்டர்கள் அவளை விட சொல்லியும் அவளை கல்யாணியை வர சொல்லியும்.. கல்யாணி தன் முடிவில் உறுதியோட இருந்து விட்டார்...

இன்றுடன் போராட்டத்தில் இணைந்து 15வருடங்கள் தன் சாதனையை நிகழ்த்தினார்கள்.. சிங்கள வெறியர்களை கொண்டு குவித்தார்.. முல்லை தீவு புலிகள் தங்கள் வசம் கொண்டு வந்த வேளை கல்யாணி என்னும் போராளி தன் ஒரு கால்களை இழந்தார்..

ஒரு காலினை இழந்து முடியவும் தன் மன உறுதியுடன் போரட்டத்தில் இணைந்து இருந்தார்கள்.. வீடு போக விருப்பம் இல்லை நான் சாகும் வரை போரட்டத்தில் இணைந்து இருக்க போகுறேன் என உறுதியோட இருந்தாள்... கல்யாணி என்னும் தியாக சுடருக்கு விடுதலை புலிகள மண மாலை சூட்டி வைத்தார்கள் விடுதலை போரட்டத்தில் இருக்கும் ஒரு போராளிக்கு...

கல்யாணம் முடிந்து 5ஆண்டுகளுக்கு அப்புறம் அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.. தர்போது குழந்தைக்கு இரு வயதுகள் கூட ஆகி விட்டது... போர் உச்ச கட்ட நிலயை அடைந்து இருப்பதால் மீண்டும் கல்யாணி என்னும் ஒளிசுடர் போராளிகளுக்கு பின் உதவி பண்ண போய் சிங்கள வெறியர்கள் போட்ட குண்டுக்கு இலக்காகி மாவிரர் ஆனார்..

இருவரின் உறவுகளும் புலம் பெயர்ந்து விட்டார்கள்... உறவுகள் என்று சொல்ல யாரும் ஊரில் இல்லை ...

கல்யாணியின் கணவரும் குழந்தையை போராளிகளிடமே கொடுத்து விட்டு களம் இறங்கி விட்டார்...

பாவம் இரு வயது குழந்தை அம்மா இறந்தது தெரியாமல் அப்பாவும் களம் இறங்கியது தெரியாமல் தாயின் அன்புக்கு ஏங்கி போராளிகளிடமே இருந்தது...

ஒரு காலினை இழந்த இவர்களே நாட்டுக்காக இவ்வளவும் செய்யும் போது நாம் என்ன செய்ய போகுறோம் நம் நாட்டுக்காக??????

சகோதரிக்கு எனது வீரவணக்கங்கள்..

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

மலரும் ஞாபகங்கள். முந்தி பள்ளி விட்டு வரும் போது கெலி அடிக்க சப்பாத்தையும் கழட்டிப் போட்டு ஓடினது தான் நினைவுக்கு வருது.

  • தொடங்கியவர்

மலரும் ஞாபகங்கள். முந்தி பள்ளி விட்டு வரும் போது கெலி அடிக்க சப்பாத்தையும் கழட்டிப் போட்டு ஓடினது தான் நினைவுக்கு வருது.

நன்றி ரதி உங்கள் நினவை பகிர்ந்து கொண்டமைக்கு

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுஜி அவர்களின் படைப்புக்குப் பாராட்டுகள்.

யதார்தத்தைக் கதையாகியுள்ளமையைக் காண்கிறேன். இன்றைய களநிலமையும் இதுவே. இவர்களின் ஈகத்தின் முன் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டியது எமது கடமையாகும்.

Edited by nochchi

  • தொடங்கியவர்

சுஜி அவர்களின் படைப்புக்குப் பாராட்டுகள்.

யதார்தத்தைக் கதையாகியுள்ளமையைக் காண்கிறேன். இன்றைய களநிலமையும் இதுவே. இவர்களின் ஈகத்தின் முன் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டியது எமது கடமையாகும்.

நொச்சி நன்றி உங்கள் கருத்துக்கு... உண்மைதான் நாம் என்ன செய்ய போகிறோம் என்று சொல்லிட்டு இருப்பதில் பயன் இல்லை... நாம்தான் ஏதும் பண்ணனும்..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுஜி உங்கள் கதைக்கு. இப்படி பல உண்மை கதைகள் ஒவ்வொரு போராளியின் பின்னாலும் உண்டு. போராட்டத்தின் முன்னேற்றம் புலம் பெயர்ந்தவர்களின் கைகளில் தான் உள்ளது.

  • தொடங்கியவர்

நன்றி சுஜி உங்கள் கதைக்கு. இப்படி பல உண்மை கதைகள் ஒவ்வொரு போராளியின் பின்னாலும் உண்டு. போராட்டத்தின் முன்னேற்றம் புலம் பெயர்ந்தவர்களின் கைகளில் தான் உள்ளது.

நன்றி நூணா உண்மைதான் நம் கையில்தான் போரட்டமே இருக்கு... நன்றி உங்கள் கருத்துக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kodiya iruL kizhiththa oLi minnal nEruppE...adimai peN vilangkai udaiththa puthiya peN pirappE...

  • தொடங்கியவர்

kodiya iruL kizhiththa oLi minnal nEruppE...adimai peN vilangkai udaiththa puthiya peN pirappE...

இரணியன் உங்கள் கருத்துக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.