Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிள்ளையான் ஐ.தே.க விற்கு ஆதரவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் ஐ.தே.க விற்கு ஆதரவு?

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அமைச்சுப் பதவியை வகிக்கும் கருணாவுடன் தொடர்ச்சியாக நீடித்து வரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக பிள்ளையான் இவ்வாறானதோர் தீர்மானத்தை விரைவில் எடுக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையான் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட தலைவர்களுடன் தற்போது இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக கருணாவை பிள்ளையானும், பிள்ளையானை கருணாவும் பொது இடங்களில் கடுயைமாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காவற்துறை அதிகாரங்கள் தேவையில்லை என்ற கருணாவிற்கு கருத்துக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கடும் ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளது.

கருணாவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு காத்து வரும் அசாமான்ய மௌனம் பிள்ளையானை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நிலைமையின் காரணமாகவே பிள்ளையான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனது ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளார் என பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாண சபைக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி கிடைப்பதில்லை எனவும் அபிவிருத்தி பணிகளுக்கான வெளிநாட்டு உதவிகள் கூட கிடைப்பதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். இதேவேளை முதலமைச்சர் பிள்ளையானுடன் அரசியல் பனிபோரில் ஈடுபட்;டுள்ள அமைச்சர் கருணா, கடந்த வருடம் கிழக்கு மாகாணத்திற்கு சமூர்த்தி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியில் 4 கோடி ரூபா செலவிடாத நிலையில் அந்த நிதி மீண்டும் மத்திய அரசாங்கத்திற்கு திரும்பி சென்றுள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் வெளிநாட்டு உதவிகளும் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்துள்ளதாகவும் பிள்ளையான் உண்மைக்கு புறம்பான விடயங்களை கூறுவதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 15 தமிழ் அரசியல் கட்சிகள் செயற்படுவதாகவும் இந்த கட்சிகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள சர்வக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் தனித் தனியாக கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிப்பதற்கு பதிலாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்திற்கு வந்து, ஒரு யோசனையை முன்வைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும். அத்துடன் தமிழ் கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்துள்ள கருணா, அவ்வாறு ஆதரவளிக்காது போனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது எனவும் கூறியுள்ளார்

http://www.globaltamilnews.net/tamil_news....=7870&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.தே.கவிற்கு ஆதரவு வழங்கினால் பிள்ளையானின் ஆட்களுக்கு மகிந்தா விசேட பரிசு தருவார்.

இதேவேளை முதலமைச்சர் பிள்ளையானுடன் அரசியல் பனிபோரில் ஈடுபட்;டுள்ள அமைச்சர் கருணா

:D:D:(

என்னால முடியல

:D:D:lol:

ஒட்டுக்குளு பரதேசியலுக்குள்ள பனிப்போரோ?... எலும்புக்கான நாச்சண்டை...

எங்க தொடங்கின செய்தி எப்படியெல்லாம் சுத்தி சுத்தி வருகுது.இது முட்டாள்கள் தினத்தையொட்டி டெய்லிமிரர் ஆங்கிலநாளேடு வெளியிட்ட செய்தி :

Gotcha!!

Those of you who believed our page one story titled “Pillayan to support UNP” have been fooled so all we can say to you is – April Fool!!!

It seems several of our readers including those in the government and opposition had believed the story and had even contacted Mr. Pillayan to seek a clarification.

Our apologies to Mr. Pillayan, if our harmless joke caused any pain of mind to him or his party.

Have a great April Fools’ day.

Daily Mirror Editorial.

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள் தினத்திற்க்கு சரியான முட்டாள் மாரைத்தன் பத்திரிகை தெறிவு செய்துள்ளது..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டுபேரையும் ஏத்திவிட்டு கூத்துப்பாக்கிறாங்கள் பாக்கிறம் கிகிகிகி

இரண்டுபேரையும் ஏத்திவிட்டு கூத்துப்பாக்கிறாங்கள் பாக்கிறம் கிகிகிகி

இரண்டு பேருமே முட்டாள்கள்தானே. இரண்டு முட்டாள்கள வச்சு தன்னுடைய வாசகர் அனைவரையும் முட்டாளாக்கியது வேடிக்கையானது.. ஆனானும் இரண்டு முட்டாள்களும் சேர்ந்து ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கிட்டிருப்பதை யாரும் மறந்திடவேண்டாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.