Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியனெனும் பெருமை கொல், தமிழனாய் பெருமை கொள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழத்தின் தாயுறவே!

புலத்தில் உறவுகளையும், புலம் பெயர் தெசத்தில் வாழ்வினையும் தொலைத்து விட்டு நிற்கும் புலம் பெய தேசத்துறவொன்றின் இந்த மடலுக்காய் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கு, ஒன்றித்து வாசி, உடன் செயற்படு. உன் உடன் பிறப்பெனும் உரிமையில் கேட்கின்றேன்.

ஈழத்தின் இறுதிக்கட்டப் போரினை இன்று முடித்து விடுவோம், நாளை முடித்து விடுவோம் என்று இறுமாந்திருந்த சிங்களத்தின் சிந்தனைகளை , சீறியெழுந்த போராளிகள் சிதறடித்தது கண்டு கலங்கிற்று சிங்களச் சிறிலங்கா. ஈந்த நாட்களுக்குள் முடித்து விடும் என்று நம்பி, இந்தியத் தேர்தலுக்கும்ட நாள் குறித்தாகி விட்ட நிலையில், இன்னமும் போர் முடியவில்லை என்பதும், கேள்வி மேல் கேள்வி கேட்கும் சர்வ தேசங்களுக்கு இந்தியாவைக் கேளுங்கள் என சிங்களம் கைகாட்டுவதும் மத்திய அரசுக்கு மகா தலையிடியாயிற்று. இந்நிலையில் எப்பாடு பட்டாயினும், இன்னும் ஒரு வாரத்தில் போரை முடித்துவிட வேண்டும் என விரும்பிய இரு நாடும், நாகரீகம் தொலைத்து நச்சுக் குண்களை நம் மக்கள் மீது பாவிக்கத் தொடங்கிவிட்டன. நரபலி எடுக்கத் தொடங்கிவிட்டன.

மக்களைக் கொன்று மானுடம் அழித்து, ஆளுமையை நிலைநிறுத் இரு அரசுகளும் இணங்கிவிட்டன. இதற்கான எதிர்புக்கள் இலங்கைக்கு வெளியே கிளம்பும் பட்டசத்தில் அவற்றையும் பயங்கரவாதச் செயலாக படங்காட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் இரு இனங்களும் சேர்ந்து வாழ முடியாது என்பதற்கு எத்தனையோ காரணங்கள் காட்டியாயிற்று. சாட்சியங்களும் சொல்லியாயிற்று. இறுதியாக இலங்கைக்குபு வெளியே அவுஸ்திரேலியாவில் நடந்தது அசைக்க முடியா சாட்சியம். இது போலவே ஏனைய நாடுகளிலும் செய்ய எத்தனிப்புக்கள் நடைபெறலாம். ஆனாலும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்து உறவுகள் இனியும் பொறுத்திருக்கப் போவதில்லை. தாம் வாழும் தேசங்களிலெல்லாம் வீடுகளை விட்டு வீதிக்கு இறங்கத் தொடங்கிவிட்டன. இதுவரை காலமும் அமைதியாக எதிர்ப்பைக் காட்டிய ஈழத்தமிழினம் இன்னும் வலுவாகக் காட்டத் தொடங்கிற்று.

இந்தப் போராட்டங்களின்போது இன்னும் ஒன்று இணைந்து கொள்ளப் போகிறது. உறவே , உடன் பிறப்பே மன்னித்துக் கொள். இந்த இனப்படுகொலை யுத்தத்திற்கு இந்தியாவும் ஒரு காரணம் என்பது உலக அரங்கில் இனி உரத்துச் சொல்லப்படப் போகின்றது. சிறிலங்காப் பாராளுமன்றத்தில் உன் தேசத்தின் சிங்களத் தோழனே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்த பிறகு, என் தேசத்தில் எரிகுண்டையும், இரசாயணக் குண்டையும், இருவரும் சேர்ந்தே வீசும்போது, இனி என்ன செய்ய முடியும்.

எல்லாம் இருக்கட்டும். இனி நீ என் செய்யப் போகின்றாய். இனிவரும் தேர்தலில் யார் வெல்லுவார் என வாக்குக் கணக்குப் போடப்போகின்றாயா அல்லது இது சரியில்லை எனக் கூறிக் கொண்டிருக்கப் போகின்றாயா? . உறவே! எமக்காக இல்லாவிடினும் உங்களை நம்பி உயிலெழுதி வைத்துவிட்டு தீககுளித்துச் செத்தானே ஒருவன், அவன் பின்னால் அடுக்காகச் செத்தனரே உன் உறவுகள், அவர்களுக்காகவேனும் நியாயம் கேட்கப் புறப்படமாட்டாயா?. விழித்தெழு தமிழகமே எனக் குரல் கொடுத்ததற்காக கொண்டு போய் சிறை வைக்கப்பட்டானே சீமான், நீ சீறி எழுவாய், கருத்துச்சிறை தகர்ப்பாய் எனச் சிறைக் கம்பிகளின் பின்னே நம்பிக் கொண்டிருக்கின்றானே அவனுக்காகவேனும் எழுந்து வா.

செய்வதும் செய்யாதிருப்பதும் உன் விருப்பம். ஆனால் ஒன்று சொல்வேன். இன்று செய்யாவிடில் எமக்காய் நீ இனி எப்போதும் செய்யமுடியாதுஎன்பதை மட்டும் நினைவிற் கொள். ஈழத்தின் இனப்படுகொலையில் பங்குகொண்ட தேசத்தின் புதல்வன் என்பதை மற. இந்த உலகில் தமிழன் இருக்குமிடமெல்லாம் இந்த இன அழிப்பிற்காய் போர் தொடுக்கப்படும் போது தாய் தமிழகம் தூங்கிக்கிடத்தலென்பது தர்மமாகுமா? ' வேடிக்கை மனிதராய் வீழ்வேனென்று நினைத்தாயோ' எனப் பாடிச் சென்ற உன் பாட்டனின் வழியில் கேட்டெழு. இல்லை நிதம் சோறு தின்னும் சதைப்பிண்டமாய் சீவித்திருக்கப் போகின்றாயென்றால் சரி போ. ஆனால் கவனம். உன் தேசத் தலைவர்கள் போடும் சோற்றுக்குள், ஒரு ஈழக்குழந்தையின் எலும்புத் துண்டோ, சதைப்பிண்டமோ இருக்கக் கூடும். உண்டு மகிழ்.

உறவே! வரி வரியாய் கவிதை படிக்கும் வார்த்தைக்காறர்களையோ, உணர்ச்சி பொங்க மேடைகளில் முழங்கி நடிக்கும் உச்சக் குரல்காறர்களையோ நம்பவில்லை. நாளைப் பொழுதுண்டெனில் நம் கையே நமக்குச் சோறிடும் எனும் நம்பிக்கையில் வாழும், ஏதுமற்றவன் என்பதனால்தான், எட்டுத் திக்கும் ஏதிலியான ஈழத்தமிழன் உன்னிடம் கேட்கின்றான், ஓரினம் நாம் எனும் உணர்வேடு எழுந்து வா. உன் இனப்படுகொலையைப் பின்னின்று நடாத்தும் இந்தியனெனும் பெருமை கொல். தமிழனாய் பெருமை கொள்.

- ஏங்கும் உறவு

http://4tamilmedia.com/index.php?option=co...&Itemid=390

  • கருத்துக்கள உறவுகள்

தமிழத்தின் தாயுறவே!

புலத்தில் உறவுகளையும், புலம் பெயர் தெசத்தில் வாழ்வினையும் தொலைத்து விட்டு நிற்கும் புலம் பெய தேசத்துறவொன்றின் இந்த மடலுக்காய் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கு, ஒன்றித்து வாசி, உடன் செயற்படு. உன் உடன் பிறப்பெனும் உரிமையில் கேட்கின்றேன்.

நாளைப் பொழுதுண்டெனில் நம் கையே நமக்குச் சோறிடும் எனும் நம்பிக்கையில் வாழும், ஏதுமற்றவன் என்பதனால்தான், எட்டுத் திக்கும் ஏதிலியான ஈழத்தமிழன் உன்னிடம் கேட்கின்றான், ஓரினம் நாம் எனும் உணர்வேடு எழுந்து வா. உன் இனப்படுகொலையைப் பின்னின்று நடாத்தும் இந்தியனெனும் பெருமை கொல். தமிழனாய் பெருமை கொள்.

- ஏங்கும் உறவு

என்ன எழுதுவதுதென்றே தெரியவில்லை...

கண்முன்னே எம்மினத்தின் குரல்கள் அடக்கியொடுக்கப்படும்போது வாளாவிருக்க குருட்டுணர்வாளராகளாக்கிய இத்தமிழக தறுதலை 'தலை'களையெண்ணி நோவதா, வரிந்துகட்டி தமிழனையழிக்க அனைத்து உதவிகளையும் செய்துவரும் இந்திய நாய்களை, தட்டிக்கேட்க திராணியற்று வாக்குப்பெட்டிகளை மட்டுமே நம்பியிருக்கும் தமிழகப் புழுக்களை நோவதா...ஆத்திரமும் கொலைவெறியுமே எம்போன்றவரின் மனங்களில்.. எண்ணங்களில்...

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுதுவதுதென்றே தெரியவில்லை...

கண்முன்னே எம்மினத்தின் குரல்கள் அடக்கியொடுக்கப்படும்போது வாளாவிருக்க குருட்டுணர்வாளராகளாக்கிய இத்தமிழக தறுதலை 'தலை'களையெண்ணி நோவதா, வரிந்துகட்டி தமிழனையழிக்க அனைத்து உதவிகளையும் செய்துவரும் இந்திய நாய்களை, தட்டிக்கேட்க திராணியற்று வாக்குப்பெட்டிகளை மட்டுமே நம்பியிருக்கும் தமிழகப் புழுக்களை நோவதா...ஆத்திரமும் கொலைவெறியுமே எம்போன்றவரின் மனங்களில்.. எண்ணங்களில்...

இணைப்புக்கு நன்றி.

தமிழக உறவுகளே தீயாகித் " தியாகிவிட்ட மாவீரன் முத்துக்குமாரனின் " கனவு, தமிழீழம் என்பது தமிழகத்தின் தேவையும் என்பதாகும் என்பது, கடந்த சில மாதங்களில் நிரூபணமாகியுள்ள நிலையில் வாக்காளர்களாக அல்ல ஒரு தன்மாமுள்ள தமிழர்களாக என்ன செய்யப்போகிறோம் என்று சரியான முடிவெடுங்கள் வாக்கு அரசியல்வாதிகளின் வெற்றுப் பேச்சுக்களைவிடுத்து, வாக்களிக்கும் நாளில் வாக்களிக்கப் போவதைவிட வீதிக்pறங்கிப் போராடி, தமிழக மக்களின் மனநிலையை மதிக்காத நடுவணரசின் தேர்தலையே புறக்கணிப்பீர்களாயின், நடுவணரசு உணரும்.

இல்லையேல் சிங்களவன் கடலில் வைத்து நிர்வாணமாக்குகிறான். ஆனால் இந்திய ஆளும் வர்க்கம் உங்களை உங்கள் யூமியில் உங்களோடு உறவாடியவாறு நிர்வாணப்படுத்தகிறது.அந்த நிர்வாணப்படுத்தலுக்கான முகவர்களாகவே தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் இருக்கின்றன. இல்லையென்றால் ஏன் தமிழ் தேசியம் என்று கூப்பாடு போடும் கட்சிகளால் தனித்தோ அல்லது தமிழக மட்டத்திலான தமிழ்த் தேசிய உணர்வுள்ள கட்சிகள் ஒன்றுபட்டு நின்றிருக்க முடியாமல் போனது ஏன்? எல்லாம் பதவியாசை. பதவியாசையை தமிழகம் துறந்திருந்தால் பல்லாயிரம் தமிழ் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

எப்போது அரசியல் விழிப்புணர்வும், எப்போது திராவிட மாயையும் அகன்று , முழுமையான தமிழ்த் தேசிய உணர்வு எப்போது தோற்றம் பெறுகிறதோ (முழுமையாக) அப்போதுதான் தமிழினம் நிமிரும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்வதும் செய்யாதிருப்பதும் உன் விருப்பம். ஆனால் ஒன்று சொல்வேன். இன்று செய்யாவிடில் எமக்காய் நீ இனி எப்போதும் செய்யமுடியாதுஎன்பதை மட்டும் நினைவிற் கொள்.

http://4tamilmedia.com/index.php?option=co...&Itemid=390

என் தமிழக நண்பர்களே,

எங்கே உங்கள் வீரம் கொலைஞ்சறின் சட்ட மிரட்டலுக்கு பயந்து ஒடிங்கிவிட்டனவோ.எங்கே உங்கள் உணர்வு பெரு வெள்ளம்.

தேர்தல் மாயையிள் சிக்கியுள்ளயா.அது முடிவதர்க்குள் முடிக்கவேண்டும் என்பது அவர்கள் கணக்கு.

வன்னியில் உள்ள அனைத்து தமிழர்களையும் கொள்ள போவதாக தற்பொழுது செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன

இனியும் நாம் பார்த்து கொண்டே இருக்க கூடாது .புரட்சி வெடிக்கட்டும். அனைவரிடமும் கை பேசி செய்திகளை அனுப்புங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.