Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களே தமிழர்களே... நாங்கள் எந்தக்காலத்திலுமே திருந்தப்போவது இல்லையா?

Featured Replies

இனிய வணக்கங்கள்,

இன்றுவரை இருபத்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்கள் தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்து உள்ளார்கள்.

இன்றுவரை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் தாயகவிடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை பறிகொடுத்து இருக்கின்றார்கள்.

இன்று தமிழர் தாயகத்தில் பாரிய மனித அவலம் நடக்கின்றது. காணும் இடம் எல்லாம் இரத்தமும் சதையுமாய் மனித உடல்கள் சீரழிந்து இருக்கின்றது.

இந்த நிலமையில்...

இன்றும்கூட... இப்படி நடக்கின்றது:

ஓர் தாய் அதுவும் ஓர் மாவீரரின் தாய் சொன்னார் தனக்கு நல்ல சாதிக்கார மாப்பிள்ளைகள் மூன்றுபேர் தேவையாம்... யாரோ மூன்று பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு.

இங்கு விடயம் என்ன என்றால்...

நான் அவரைக்குற்றம் கூற இல்லை. அவர் நம்மவர்களுக்கு திருமண சம்மந்தங்களை பேசி ஓர் சேவை செய்து வருகின்றார். ஆனால்... ஓர் மாவீரரின் தாய் இப்படி செய்யலாமா? திருமணம் செய்பவர்கள் தமக்கு இப்படி சாதிக்கார சம்மந்தம் தேவை என்று கூறும்போது இவர் அவர்களுக்கு நல்ல அறிவுரை கூறமுடியாதா? உறைக்கிறமாதிரி இரண்டு பேச்சு கொடுக்கத்தெரியாதா? வேறுபாடுகள் பார்க்கின்ற இப்படியான கேவலம் கெட்ட பிறப்புகளிற்கு திருமணம் எல்லாம் ஓர் கேடா?

சாதி, சமயத்திற்கு அப்பாற்பட்ட ஓர் சமத்துவமான, சமவுரிமையுள்ள இனிய தேசத்தை உருவாக்கவே ஆயிரம் ஆயிரம் உயிர்கள் தமது வாழ்வை ஆகுதிஆக்கி இருக்கின்றார்கள். இப்படியான நிலமையில்...

தமிழர்கள் இன்னும்கூட திருந்தாது சாதி, சமயம் பார்த்து இதர தமிழர்களுடன் பழகுவார்களானால்... அந்த புனித ஆத்துமாக்கள் இவர்களை மன்னிக்குமா?

வன்னியில் இறத்த ஆறு ஓடுகின்றது. உங்களுக்கு சிதறிக்கிடக்கும் பிணங்களை பார்க்கும்போது... சதைத்துண்டங்களை பார்க்கும்போது அது எந்த சாதிக்குரிய உயிரின் உடல் என்று இனம்காணக்கூடியதாக இருக்கின்றதா? மாவீரர்களின் கல்லறைகளில் அவர் எந்த சாதி, சமயத்துக்குரியவர் என்று எழுதப்பட்டு இருக்கின்றதா? இந்தியாவில் எமக்காக தீக்குளித்தார்களே.. இவர்கள் எந்த சாதிக்காரர், மதத்தை சேர்ந்தவர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? ஜெனீவாவில் எமக்காக தீக்குளித்த இளைஞன் எந்த சாதியை, மதத்தை சேர்ந்தவன் என்று உங்களுக்கு தெரியுமா? இன்று உலகெங்கும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் உறவுகள், இளைஞர்கள் எந்த சாதி, மதத்தை சேர்ந்தவர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

இன்று ஆயிரமாயிரமாய் தமிழர்கள் உலகெங்கும் கவனயீர்ப்பு பேரணிகளில் கலந்துகொள்கின்றார்களே... இவர்கள் எல்லாரும் சாதி, சமயம் பார்த்தா ஒற்றுமையாக இருக்கின்றார்கள்?

ஆனால்..

இன்றும்கூட இப்படி சாதி, சமயங்கள் எங்கள் திருமண உறவுகளில் முக்கிய இடத்தைபிடிக்க நாங்கள் விடலாமா? ஏன் நாங்கள் இன்றும்கூட திருந்தாமல் இருக்கின்றோம்? யாழ்குடாநாடு சிறீ லங்கா பயங்கரவாத அரசின் கட்டுப்பாட்டில் வந்தமை சாதிய, சமயவேறுபாடுகள் நம்மவரிடையே ஆதிக்கம் செலுத்துவதை ஊக்கப்படுத்தி இருக்கின்றதா? சிறீ லங்கா பயங்கரவாத அரசு திட்டமிட்டு தமிழ் மக்களிடையே சாதி, சமய, ஊர் வேறுபாடுகளை ஏற்படுத்தி.. அவர்களது ஒற்றுமையை சீர்குழைக்கின்றதா? அல்லது நம்மவரின் அறியாமையே.. கேடுகெட்ட இந்த விடயங்கள் தொடரக்காரணமா?

என்னைப்பொறுத்தவரையில்.. நான் திருமணம் செய்வதாக இருந்தால்... அங்கு சாதி, சமயம் இதற்கு முற்றிலும் இடம்கிடையாது. இதை மிகத்தெளிவாக நான் எனது பெற்றோரிடம் கூறிவைத்து இருக்கின்றேன். சம்பிரதாயம், சடங்குகள்தான் இந்த வேறுபாடுகள் வளர்வதற்கு காரணமாக இருக்குமாக இருந்தால்... அதற்கும் எனது தனிப்பட்ட வாழ்வில் இடம் கிடைக்காது.

சற்று சிந்தித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள். இந்த பிரச்சனையை நாங்கள் ஒவ்வொருவரும் தனிமனிதர்களாக விழிப்புணர்வு அடைந்து கையாளவேண்டும். எமது குடும்பங்களில் இருந்து வேறுபாடுகளை நீக்குகின்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கவேண்டும்.

நன்றி!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இனம் திருந்தாமாடார்கள்......ஒட்டி உறவாடுவார்கள் .........சம்பந்தம் என்று வரும் போது ..........?

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுகள் எல்லாம் பழைய கேசுகள் உதுகள் திருந்தாதுகள் இளைஞர்கள் தாங்களாக உணர்ந்தால் தான் இதை மாற்றமுடியும்,ஆனால் பெரும்பாலான வீடுகளில் சிறுவர்களுக்கே சாதியை பற்றிய பிரிவினையை ஊட்டி வளர்க்கின்றார்கள் என்பதும் கொடுமை.இனிவரும் காலங்கள் உங்களுடையதே................ இளைஞர்களே புதியதோர் மொழிப்பற்று மண்பற்று உள்ள ஓர் சமூகத்தை கட்டியெழுப்புங்கள்,இது உங்களது கடமையும் கூட .

பழசுகளின் சிந்தனையை முற்றாக மாற்றுவது அரிது, ஆனால் காதலித்துத் திருமணம் செய்பவர்கள் கடைசிவரை சேர்ந்து வாழ்ந்து காட்டவேண்டும். அப்படி வாழ்வதால்தான் பழசுகளின் கலியாண புரோக்கர் வேலையை ஓரழவுக்காவது குறைக்முடியும் என்பது எனது அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சனம் திருந்துவது என்பது நடக்காத ஒன்று........................... :rolleyes:

காதல் கல்யாணம் என்று வரும் போது இந்த சாதி சமயங்கள் குறுக்கே வருவது குறைந்து விட்டது - அதுவும் புலம் பெயர் நாடுகளில். இனி வரும் இளையோர் கல்யாணம் பேசி மணம் முடிக்கப்போவதில்லை. பழைய ஆட்கள் மாறுவது குறைவாகத்தான் உள்ளது. ஆனால் நன்றாகப்பழகிய குடும்பங்கள் கல்யாணத்தால் சாதி மத வேறுபாடின்றி ஒன்று சேர்வதைக் காணக்கூடியதாக உள்ளதே.

இது எனது மனதில் இருந்த விடையம்.. இந்த கேடு கெட்ட சனம் எப்பவுமே திருந்தாது... எனக்கு தெரிந்த ஒரு குடும்பம்.. அவர்கள் பெண்ணுக்கு மாப்பிளை பேசுகிறார்கள் இப்படித்தான் ஜாதி மதம் என்று பார்த்து பெண்ணுக்கு 39வயது ஆக போகிது இன்னும் மாப்பிளை கிடைக்க வில்லை... என்ன கொடுமை அவர்கள் வீட்டில் எல்லாரும் படித்தவர்கள்... என்னத்தை படித்து கிழித்தார்களே தெரிய வில்லை மன்டையில் ஒன்னும் இல்லை... ஜாதி ஜாதி என்று பேய் மாதிரி அலையுதுகள்... அந்த பெண்ணுக்கு ஆவது அறிவு இருந்து இருக்கனும் காதலித்தாவது பண்ணி இருக்கலாம் அந்த பெண் அப்படி பண்ண இல்லை...தகப்பனுக்கு பின்னாலே இருக்குது.. அந்த கிழவன் என்றைக்கு மண்டையை போட போறனோ தெரிய வில்லை.. மகளின் வாழ்க்கை பத்தி நினைத்தும் பார்த்த மாதிரி தெரிய வில்லை...

எனக்கு அந்த ஆள் பேசுறதை பார்த்தால் கல் எடுத்து மண்டையிலை போட்டு இடலாமா என்று தோணும்.. கவுரம் ஊருக்கு போனால் எங்கட ஜாதி காரன் மதிக்க மட்டான் என்று வேற கதை... சில கிழடு கட்டைக்கும் புரிவது இல்லை சில படித்த மர மண்டைகளுக்கு புரிவது இல்லை... கையை வெட்டி பார்த்தால் இரத்தம் எல்லாம் ஒரே நிறம்தானே.. இதில் எங்க ஜாதி வந்தது.....

இன்னும் ஒன்று ஒரு படித்த மர மண்டைக்கு பெண் தேடுறார்கள்.. அந்த கேடு கெட்ட மர மண்டையே சொல்லுது எங்கட ஜாதி கார பொண்ணுதான் வேணும்... அந்த நபரே சொன்னார் அவன் பனை ஏறுறவன் மீன் புடிக்கிறான்.. அவன் விவசாய வேலை என்னு நாங்கள் நகை கட காரர் அப்படி பட்ட பெண்தான் வேணும் என்னான்... எனக்கு என்றால் புரிய வில்லை இங்க என்னையா நீங்கள் எல்லாரும் வேலை பண்ணுறிர்கள்.. இங்க ஜாதி பார்த்து எப்படி பிரிப்பத்து...

களத்தில் போராடும் புலிகள் எல்லாம் ஜாதி பார்த்த போராடுறார்கள்... ஏன் நீங்கள் திருந்தமால் திரியுதுகள்.. நம் தலைவன் ஆட்சி வரணும் இப்படி பட்டவர்களை எல்லாம் திருத்த பட வேணும் என்று நானும் கார்த்துட்டே இருக்கன்.....

இன்னும் சிலர் எழுத்து முலமும் வாயலையும்தான் சொல்லுவினம் ஆனால் அங்க பொண்ணு மாப்பிளையே தேட போனால் இதை எல்லாம் பார்ப்பவர்களும் உண்டு... இது என் தனிப்பட்ட கருத்து நன்றி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலித்து திருமணம் செய்யுங்கள்!!...

ஜாதிமத பேதங்கள் ஒழியும்!.

நல்மாற்றங்கள் ஏற்படுத்த விரும்பினால் முதலில் அந்த மாற்றத்தை உன்னிடம் இருந்துதொடங்கு - மகாத்மா காந்தி

  • கருத்துக்கள உறவுகள்

பழசுகளின் சிந்தனையை முற்றாக மாற்றுவது அரிது, ஆனால் காதலித்துத் திருமணம் செய்பவர்கள் கடைசிவரை சேர்ந்து வாழ்ந்து காட்டவேண்டும். அப்படி வாழ்வதால்தான் பழசுகளின் கலியாண புரோக்கர் வேலையை ஓரழவுக்காவது குறைக்முடியும் என்பது எனது அபிப்பிராயம்.

நல்லாக் கற்பனை மட்டும் பண்ணுறீங்கள்.

காதல் என்று வந்தால் எத்தனையைக் காதலிக்கிறது. பள்ளில நாலு.. யுனில 6.. வேலைக்குப் போற இடத்தில 5.. பாட்டிக்குப் போற இடத்தில 3.. பப்பில 2.. கிளப்பில 3.. டேற்றிங்கில.. 15... எம் எஸ் எனில.. 10.. இப்படியே போயிட்டிருக்குது.

இப்ப உள்ளவை சாதி பார்க்காயினம்.. கார்.. காட் பாப்பினம்.. எதுக்கும் வேண்டி வைச்சுக் கோங்கோ..!

தமிழராவது திருந்திறதாவது. பழசுகள் ஒரு வகை என்றால்.. புதுசுகள் இன்னொரு வகை..! அடிப்படையில் இரண்டும்.. ஒன்று தான்..!

விரும்பினா ஒன்று செய்யுங்கோ.. கட்டுறதென்றால்.. தமிழரைக் கட்டாதேங்கோ. ஒத்துப் போற வேற யாரையும் கட்டுங்கோ..! ஒத்துப் போகல்லைன்னா.. பாச்சிலராவே இருந்திடுங்கோ. ஒரு பிரச்சனையும் இல்ல..! :icon_mrgreen::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்வது இந்தக்காலத்திலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் திருந்துவது கடிணம்தான்

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்து திருமணம் செய்யுங்கள்!!...

திருமணம் எண்டு வரும் போதும் பெருசுகள் விடாயினமே.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது இந்தக்காலத்திலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் திருந்துவது கடிணம்தான்

எந்தக் காலத்திலும் இருப்பார்கள். இது ஒரு வடிவம் என்றால்.. இன்னொரு வடிவத்தில்.. இப்பத்தைய இளையவர்கள் என்று சொல்வோர் இது போன்ற அம்சங்களைக் கடைப்பிடிப்பர்.

ஏன்.. இங்குள்ள தமிழர்கள்.. அதாவது இங்க பிறந்து வளர்ந்தவர்கள்.. கறுப்பினத்தவரை திருமணம் செய்வினமா..??! வெள்ளைக்காரியென்றால் செய்வார்கள். பெருமையாகவும் பேசிக் கொள்வார்கள்.

வசதி படைத்தவர்கள்.. நடுத்தர.. கீழ் நிலையில் காதலிப்பார்களா..???! ஏன் பொஸ்ஸா வாழுற வெள்ளைகளே.. வசதியில் குறைந்த வெள்ளைகளை ஏறெடுத்தும் பார்கிறதில்ல..! பொஸ் (posh).. பொஸ்ஸை தேடும்.. ஊத்தை ஊத்தையைத் தேடும். ஆனால்.. தமிழன் மட்டும்.. சாதி பார்க்கிறான் என்று அழுகிறம். எத்தினை தமிழர்கள் விசா பாக்கினம்.. கார் பாக்கினம்.. பாங் பளன்ஸ் பாக்கினம்.. ஏன் திருமணம் செய்யுறவைக்கு ஏதேனும் ஊனமா.. தாங்களா உழைச்சு.. கார் வாங்க முடியாதோ.. பாங் பளன்ஸ் மெயின்ரெயின் பண்ண முடியாதோ..???!

அடிப்படையில் நம்மவர்கள் மாற பல விடயங்கள் இருக்கின்றன. இந்தச் சாதி ஒன்று மட்டும் எம்மவரிடம் உள்ள கீழ்த்தரமான பழக்கம் என்று சொல்லிட முடியாது. இப்படிப் பல இருக்குது. இன்றைய இளையவர்கள் கூட அவற்றைச் செய்யினம்..! அவை இவையை விட மாறுபட்டவை என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டன். அது சுத்தப் பித்தலாட்டத்தனமான உண்மையை மறைக்க விரும்பிறவையுடைய பார்வை அல்லது உண்மையை தரிசிக்காதவையிட பார்வை என்றே சொல்வேன்..! :o:icon_mrgreen:

திருமணம் எண்டு வரும் போதும் பெருசுகள் விடாயினமே.

பெரிசுகள் சாட்டு. வாழப் போறது நீங்க. துணிவிருந்தா நான் என் விருப்பப்படி கட்டி வாழுவன் என்று முடிவுவெடுக்கிறது தானே. அது முடியாத பலவீனமானவர்களே அப்பா அம்மா பெரியவர்கள் மீது குற்றத்தைச் சுமத்திட்டு தாங்கள் ஒளிஞ்சு ஓடிக்கிறாங்க. இப்படியான பலவீனமானவர்களுடன் அமைக்கும் வாழ்க்கைகள்.. மகிழ்ச்சிகரமாக இருக்குமா என்பதும் கேள்விக் குறியே. அதனால் தான் திருமண முறிவுகளும் அளவு கணக்கில்லாம பெருகிக் கிட்டுப் போகுது. :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

திருந்த குறைந்தது இரண்டு தலைமுறை யாவது போகனும் .

  • கருத்துக்கள உறவுகள்

திருந்த குறைந்தது இரண்டு தலைமுறை யாவது போகனும் .

நான் நினைக்கல்ல.. இது இப்படியே தொடரும். அதுவும் சிங்களவனின்ர கட்டுப்பாட்டுக்க எங்கட ஆக்கள் வரேக்க.. உதுகள் ஊட்டி வளர்க்கப்படும். அவையிட்ட இருந்து புலம்பெயர் நாடுகளுக்கு அது இலவசமா கடத்துப்படும்..! :lol::icon_mrgreen:

நல்லாக் கற்பனை மட்டும் பண்ணுறீங்கள்.

காதல் என்று வந்தால் எத்தனையைக் காதலிக்கிறது. பள்ளில நாலு.. யுனில 6.. வேலைக்குப் போற இடத்தில 5.. பாட்டிக்குப் போற இடத்தில 3.. பப்பில 2.. கிளப்பில 3.. டேற்றிங்கில.. 15... எம் எஸ் எனில.. 10.. இப்படியே போயிட்டிருக்குது.

இப்ப உள்ளவை சாதி பார்க்காயினம்.. கார்.. காட் பாப்பினம்.. எதுக்கும் வேண்டி வைச்சுக் கோங்கோ..!

தமிழராவது திருந்திறதாவது. பழசுகள் ஒரு வகை என்றால்.. புதுசுகள் இன்னொரு வகை..! அடிப்படையில் இரண்டும்.. ஒன்று தான்..!

விரும்பினா ஒன்று செய்யுங்கோ.. கட்டுறதென்றால்.. தமிழரைக் கட்டாதேங்கோ. ஒத்துப் போற வேற யாரையும் கட்டுங்கோ..! ஒத்துப் போகல்லைன்னா.. பாச்சிலராவே இருந்திடுங்கோ. ஒரு பிரச்சனையும் இல்ல..! :icon_mrgreen::lol:

என்ன நெடுக்கு அண்ணா ஒரு சிலர் பார்ப்பார்கள் என்பதுக்காக எல்லாரையும் அப்படி சொல்லுவதா?எல்லாரும் பெண்களைதான் தப்பு சொல்லுவது ஏன் ஆண்கள் மட்டும் எண்ணி எண்ணி காதலிப்பது இல்லையா? எனக்கு ஒரு நண்பர் சொன்னார் அவரோட நண்பன் ஒரு பெண்ணை காதலித்து இருக்கிறான்.. பொண்ணு கொஞ்சம் கறுப்பு.. அவளை காதலித்து விட்டு கை விட்டு விட்டான்.. அந்த பெண் நல்லவள் கேட்டால் அவள் கறுப்பாம்... ஏன் காதலிக்கும் போது இது தெரிய வில்லையா? இத்தினைக்கு அந்த நபர் வெட்டி வேலைதான் பார்க்குது.. அந்த பெண் நல்ல வேலையில் இருந்தாள்.. இந்த வெட்டி வேலை பார்த்தவனுக்கு விசா குடுக்க வில்லை... அப்புறம் என்ன அவளை தேடி போய் கல்யாணம் பண்ண சொல்லி கேட்டு அழுது இருக்கான் ... அந்த முட்டாள் பெண்ணும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாள்.. முக்கிய விடயம் அந்த நபர் கிட்ட ஒன்றும் இல்லை... நான் என்றால் இப்படி பட்ட ஒருவன் என்னிடம் வந்து கேட்டு இருந்தால் பளார் என்று கன்னத்திலை குடுத்து இருப்பன்...

எனக்கு இன்னும் ஒரு விஷயம் புரிய வில்லை உண்மை காதல் என்றால் ஒரு நபரிடம் மட்டும்தானே வரும்... ஆனால் சில ஆண்களுக்கு மட்டும் எப்படி எண்ணி எண்ணி வருகிது.. ஒரு பெண்ணை முதலில் காதலித்து இருப்பார்கள் அவள் விட்டு இட்டு போய் முடிய வேற பெண்ணிடம் போய் சொல்லுவார்கள் நான் உன்னை உண்மையா உயிரிக்கு உயிராய் விரும்புறன்.. அப்ப முதல்ல விரும்பினது என்ன உயிரை விட்டு காதலித்தார்களா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு அந்த ஆள் பேசுறதை பார்த்தால் கல் எடுத்து மண்டையிலை போட்டு இடலாமா என்று தோணும்.. கவுரம் ஊருக்கு போனால் எங்கட ஜாதி காரன் மதிக்க மட்டான் என்று வேற கதை... சில கிழடு கட்டைக்கும் புரிவது இல்லை சில படித்த மர மண்டைகளுக்கு புரிவது இல்லை... கையை வெட்டி பார்த்தால் இரத்தம் எல்லாம் ஒரே நிறம்தானே.. இதில் எங்க ஜாதி வந்தது

இன்னும் சிலர் எழுத்து முலமும் வாயலையும்தான் சொல்லுவினம் ஆனால் அங்க பொண்ணு மாப்பிளையே தேட போனால் இதை எல்லாம் பார்ப்பவர்களும் உண்டு... இது என் தனிப்பட்ட கருத்து நன்றி..

சிலர் இல்லை பலர் அப்படித்தான் சொல்லுக்கும் செயலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது....

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பினா ஒன்று செய்யுங்கோ.. கட்டுறதென்றால்.. தமிழரைக் கட்டாதேங்கோ. ஒத்துப் போற வேற யாரையும் கட்டுங்கோ..! ஒத்துப் போகல்லைன்னா.. பாச்சிலராவே இருந்திடுங்கோ. ஒரு பிரச்சனையும் இல்ல..!

யாரைத்தான் கட்டுறது ஒரே குழப்பமா இருக்கு :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிசுகள் சாட்டு. வாழப் போறது நீங்க. துணிவிருந்தா நான் என் விருப்பப்படி கட்டி வாழுவன் என்று முடிவுவெடுக்கிறது தானே. அது முடியாத பலவீனமானவர்களே அப்பா அம்மா பெரியவர்கள் மீது குற்றத்தைச் சுமத்திட்டு தாங்கள் ஒளிஞ்சு ஓடிக்கிறாங்க. இப்படியான பலவீனமானவர்களுடன் அமைக்கும் வாழ்க்கைகள்.. மகிழ்ச்சிகரமாக இருக்குமா என்பதும் கேள்விக் குறியே. அதனால் தான் திருமண முறிவுகளும் அளவு கணக்கில்லாம பெருகிக் கிட்டுப் போகுது. :lol::icon_mrgreen:

ஆமாம் நெடுக்கு காதலிக்கும் போது மட்டும் ஓம் என்பது பின்னர் அம்மா,அப்பாவை மீறி வரமுடியாது என்பது... எல்லாரையுமே ......

காதல், கல்யானம் என்பது மனசு சம்பந்தமான பிரச்சனை. சாதிவேறுபாடு என்பதுஅனாகரிகமனிதர்களால் கையாளப்படும்தமிழரின் சாபக்கேட்டுப்பிரச்சனை. தயவு செய்து இரண்டையும் ஒன்றுடுடன் ஒன்றிணைத்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது நடக்கக்கூய கதையை கதையுங்கப்ா :unsure:

நாங்களே...சாதி பாக்கேக்க சிங்களவன் இனம்பார்க்கிறதில தப்பேயில்ல :(

என்ன மாப்பு (கலைஞா)....உங்க மாமிக்கு உங்களை பிடிக்காட்டா நேர சொல்லுறதை விட்டுட்டு உதென்ன நல்ல சாதிவேனும்னு சொல்லுறது. போனா போறாக விட்டுடுங்க...உங்க மனசுக்கு நல்ல பொன்னுக கிடைப்பாங்க. :lol:

நல்லாக் கற்பனை மட்டும் பண்ணுறீங்கள்.

காதல் என்று வந்தால் எத்தனையைக் காதலிக்கிறது. பள்ளில நாலு.. யுனில 6.. வேலைக்குப் போற இடத்தில 5.. பாட்டிக்குப் போற இடத்தில 3.. பப்பில 2.. கிளப்பில 3.. டேற்றிங்கில.. 15... எம் எஸ் எனில.. 10.. இப்படியே போயிட்டிருக்குது.

இப்ப உள்ளவை சாதி பார்க்காயினம்.. கார்.. காட் பாப்பினம்.. எதுக்கும் வேண்டி வைச்சுக் கோங்கோ..!

தமிழராவது திருந்திறதாவது. பழசுகள் ஒரு வகை என்றால்.. புதுசுகள் இன்னொரு வகை..! அடிப்படையில் இரண்டும்.. ஒன்று தான்..!

விரும்பினா ஒன்று செய்யுங்கோ.. கட்டுறதென்றால்.. தமிழரைக் கட்டாதேங்கோ. ஒத்துப் போற வேற யாரையும் கட்டுங்கோ..! ஒத்துப் போகல்லைன்னா.. பாச்சிலராவே இருந்திடுங்கோ. ஒரு பிரச்சனையும் இல்ல..! :lol::(

நீங்கள் சொல்வதும் மெய்தான், இப்ப இருக்கிற இளையதலைமுறைனரில அரைவாசிப்பேருக்கு காதலுக்கும் 'Infatuation' வித்தியாசம் புரிவதில்லை. அதனால் தான் பள்ளில நாலு.. யுனில 6.. வேலைக்குப் போற இடத்தில 5.. பாட்டிக்குப் போற இடத்தில 3.. பப்பில 2.. கிளப்பில 3.. டேற்றிங்கில.. 15... எம் எஸ் எனில.. 10.. இப்படியே போயிட்டிருக்குது.

ஆனால் பொற்றோரின் பேச்சுக்கு மதிப்புக்குடுத்து மனம் ஓரளவுக்குப் பக்குவமடையும் வரை நிதானமாக வாழும் இளையோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். 'Stereotype' ஆக பார்பதால் அது மற்றவர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

ஒருகையில் உள்ள 5 விரல்களுமே வித்தியாசமாக இருக்கும் போது எப்படி ஒருசமுதாயத்தில் எல்லோரும் ஒரேமாதிரி இருக்கமுடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நன்றி நன்றிகள் பல நன்றி .......

நல்ல விடயம். நான் நினைக்கிறேன் யாழில் இந்த தலைப்புக்கு மட்டும்தான் 20 பதில் கருத்துக்கள் அதாவது கூடுதலாக எழுதியிருப்போம் என்று. இப்போதைய அவசர நிலையில் எவ்வளவு மணித்தியாலங்களை இந்த தலைப்பில் செலவழித்துள்ளோம். அவசரகால வேலைத்திட்டத்தில் சிலவழித்து முதலில் தமிழ் இனத்தை காப்போமே நண்பர்களே...குறை இல்லாமல் தாழ்மையுடன் வேண்டுகிறேன். :unsure::unsure:

Edited by இனியவன் கனடா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.