Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரச்சனை: பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறார் பாரதிராஜா

Featured Replies

ஈழப்பிரச்சனை: பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறார் பாரதிராஜா

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாததை கண்டித்து, மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து போராடுவதற்காக, தமிழ் திரையுலகினர் சார்பில் 'திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் திரைப்பட வர்த்தகசபை (சென்னை பிலிம் சேம்பர்) வளாகத்தில் இன்று 'தொடர் முழக்க போராட்டம்' நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு 7 மணிவரை நடைபெற்றது.

இப்போராட்டத்தில் திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், மாதர் சங்கத்தினர், இலக்கியவாதிகள், ஓவியர்கள், கலைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

கூட்ட முடிவில் பேசிய இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாத மத்திய அரசு, தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை மீண்டும் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்புவதாக அறிவித்தார்.

இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தாம் மனம் நொந்து இருக்கும் இந்த சூழ்நிலையில், போர் நிறுத்தம் செய்யாத மத்திய அரசு வழங்கிய இந்த பத்மஸ்ரீ விருது, தனது மிகப்பெரிய உறுத்தலாக இருப்பதாகவும், அதனால் அந்த விருதை திருப்பி அனுப்புவதாகவும் குறிப்பிட்டார்

nakkheeran

இலங்கை: 11வது நாளாக பெண்கள் உண்ணாவிரதம்

ஈழப்பிரச்சனை: பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறார் பாரதிராஜா

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாததை கண்டித்து, மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து போராடுவதற்காக, தமிழ் திரையுலகினர் சார்பில் 'திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் திரைப்பட வர்த்தகசபை (சென்னை பிலிம் சேம்பர்) வளாகத்தில் இன்று 'தொடர் முழக்க போராட்டம்' நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு 7 மணிவரை நடைபெற்றது.

இப்போராட்டத்தில் திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், மாதர் சங்கத்தினர், இலக்கியவாதிகள், ஓவியர்கள், கலைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

கூட்ட முடிவில் பேசிய இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாத மத்திய அரசு, தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை மீண்டும் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்புவதாக அறிவித்தார்.

இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தாம் மனம் நொந்து இருக்கும் இந்த சூழ்நிலையில், போர் நிறுத்தம் செய்யாத மத்திய அரசு வழங்கிய இந்த பத்மஸ்ரீ விருது, தனது மிகப்பெரிய உறுத்தலாக இருப்பதாகவும், அதனால் அந்த விருதை திருப்பி அனுப்புவதாகவும் குறிப்பிட்டார்

nakkheeran

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி , முள்ளும் மலரும் பாரதிராஜா ,

எங்கடை , ஊரிலை விருது கிடைக்காதா .... என்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு விசர் நாய் மாதிரி சிலதுகள் திரியுது .

தன்மானமுள்ள தமிழனாய் நீ இருக்கின்றாய்.தமிழினப் பற்றாளன் நீ என்று காட்டிவிட்டாய். இந்த விருதினை விட மிகவுயர்ந்த விருதினை நீ பெறுகின்றாய் எம்மனதினில்.

எம் தேசம் தரும் விருதுக்காய் காத்திருப்பாய் தமிழனே!

அது உன்னை சிகரமேற்றும் அந்நாள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா உன்னையும் மறவாது ஈழம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானமுள்ள தமிழன் பாரதிராஜா.. மேலும் சேரன், அமீர் போன்றோர் கலைமாமணி விருதை தமிழக அரசுக்கு திருப்பி தருகிறார்கள் !!

  • தொடங்கியவர்

ஈழத்தில் போர் நிறுத்தம்? தாமரையின் அனல் பேச்சு!

ம்ஹ§ம், இன்னைக்கு நாம சிரிக்க போறதில்லே!

காரணம், இலங்கை பிரச்சனை. இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையிலே நடந்த உணர்ச்சி பூர்வமான ஆர்ப்பாட்டத்திற்கு போயிருந்தேன். ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்களை கண்டு தவிக்கும் மக்களின் ஆதங்கத்தையும், வேதனையையும், கோபத்தையும் அப்படியே தட்டி எழுப்பியது சிலரது பேச்சு. முக்கியமாக பாடலாசிரியர் தாமரையின் பேச்சு.

அவர் மேடைக்கு வரும்போது சிலர் உட்கார்ந்தவாறே வணக்கம் தெரிவிக்க, எழுந்து நின்று வணக்கம் சொன்னார் சத்யராஜ். இன்னைக்கு தாமரையின் பேச்சு பேரெழுச்சியை ஏற்படுத்தும்ங்கிறதை முன் கூட்டியே தெரிஞ்சு வச்சுருந்தாரோ என்னவோ?

மதியம் இரண்டு மணி இருக்கும். தாமரை பேசுவார்னு மேடையிலே அறிவித்தார்கள். "இன்றைக்கு நான் நிறைய பேசப் போறேன்" என்றபடியே மைக்கை பிடித்தார் தாமரை. பேச்சில் அனல் தெறித்தது. "ஏற்கனவே ஃபெப்சி மீட்டிங்கிலே நான் பேச வந்தேன். அப்போ என்னை பேசக் கூடாதுன்னு தடுத்திட்டாங்க. ஆனா, இப்போ என்னை தடுக்காதீங்க" என்று ஆரம்பித்தவர், பிடி பிடியென்று தமிழக தலைவர்களை பிடித்தார். இடையிலே "அப்படி பேச வேண்டாம்" என்று பாரதிராஜா இருக்கையை விட்டு எழுந்து வந்து தடுக்க, பார்வையாளர்கள் "தடுக்காதே, பேசட்டும்" என்று கூச்சலிட்டார்கள்.

"மத்தியிலே ஆளுற காங்கிரஸ் அரசு முதலாளியாகவும், தமிழகத்தை ஆளுற திமுக அரசு கூலி வாங்குகிற வேலைக்காரனாகவும் இருக்கு. உலக தமிழர்களோட தலைவர்னு சொல்லிகிறீங்க. உங்களால இந்த இனப்படுகொலையை தடுக்கும்படி மத்திய அரசை வற்புறுத்த முடியலேன்னா எதுக்கு பதவியிலே இருக்கீங்க? ராஜினாமா பண்ணிட்டு போக வேண்டியதுதானே? ஜெயலலிதா அரசு இருந்தா இப்படி நீங்க பேச முடியாதுன்னு சொல்றீங்க. ஜெ ஆட்சியிலேயும் பேசினா கைது பண்ணி உள்ளே போடுறாங்க. உங்க ஆட்சியிலேயும் கைது பண்ணி உள்ளே போடுறீங்க. திமுக வும், அதிமுகவும் இல்லேன்னா தனிஈழம் என்னைக்கோ அமைஞ்சிருக்கும்"

"தமிழன்ங்கிறது ஒரு இனம். மலையாளிங்கிறது ஒரு இனம். ஆனால், இந்தியன்ங்கிறது ஒரு இனம் இல்லையே? இதை சொன்னா இறையாண்மைக்கு எதிரா பேசியதா சொல்றீங்க? தேசிய பாதுகாப்பு சட்டத்திலே எங்க டைரக்டரை உள்ளே போட்டீங்க. ஆனா உயர்நீதிமன்றம் என்ன சொல்லுச்சு? உங்களால என்ன பண்ண முடிஞ்சுது?" இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்ட தாமரையை "பேசியது போதும்"னு மறுபடியும் இடை மறித்தார் பாரதிராஜா.

மீண்டும் பார்வையாளர்கள், "அவங்களை பேச விடுங்க" என்று கோஷம் போட்டார்கள். தொடர்ந்தார் தாமரை. "கலைஞர் சொல்றாரு... ஈழத்தந்தை செல்வா தந்தை பெரியாரை பார்த்து ஈழத்திலே நடக்கிற பிரச்சனை பற்றி சொன்னாராம். அப்போ பெரியார், 'ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?'னாராம். 'பெரியாரே அப்படி சொன்னார்'னு ஒரு பதிலை சொல்றீங்களே, நாற்பது வருஷமா தமிழனோட நிலைமை அப்படியே இருக்குன்னு சொல்றதுக்கு நீங்க எதுக்கு தமிழின தலைவர்னு சொல்லிக்கணும்?" என்றார் ஆக்ரோஷமாக!

இந்த முறை வலுக்கட்டாயமாக அவரை அமர வைத்தார்கள் பாரதிராஜாவும், வீ.சேகரும். ஆற்றாமையும், சோகமும் தாக்க கவலையோடு அமர்ந்தார் தாமரை. மாலை ஆறரை மணிவரை நீடித்த கண்டன கூட்டத்தில், தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப மத்திய அரசிடமே திருப்பி கொடுப்பதாக அறிவித்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. 2004 ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட விருது இது.

"இந்த விருதை வீட்டிலே மாட்டியிருக்கும்போது பார்க்கிறேன். ஏதோ சிரங்கை பார்ப்பது போல அருவருப்பாக இருக்கிறது. இதை து£க்கி எறியவா? அல்லது உடைக்கவா?" என்றார் பார்வையாளர்களை பார்த்து! நல்லவேளையாக அமீர் இடையில் நுழைந்து "இதை முறைப்படி மத்திய அரசிடம் ஒப்படைப்போம். உடைப்பது தவறு" என்று பார்வையாளர்களையும், பாரதிராஜாவையும் ஆசுவாசப்படுத்தினார்.

http://adikkadi.blogspot.com

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

தன்மானமுள்ள தமிழனாய் நீ இருக்கின்றாய்.தமிழினப் பற்றாளன் நீ என்று காட்டிவிட்டாய். இந்த விருதினை விட மிகவுயர்ந்த விருதினை நீ பெறுகின்றாய் எம்மனதினில்.

எம் தேசம் தரும் விருதுக்காய் காத்திருப்பாய் தமிழனே!

அது உன்னை சிகரமேற்றும் அந்நாள்.

உண்மைதான்

தங்களைப்போல் இன்னும் சிலர் தமிழகத்தில் இருப்பதனால்தான்....

ஓரளவாவது ஆறுதலைகிறது தமிழினம்

நன்றி ஐயா....

அவனவன் காசு குடுத்து யார் யாருக்கோ கு.. கழுவி பத்மஸ்ரீ வாங்கும்போது.... தானாக வந்த விருதை திருப்பி அனுப்பிய பாரதிராஜா அவர் தமிழருள் இமயமாக உயர்கின்றார். அன்பு நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதிராஜா...உங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழவேண்டும் போல நினைக்கிறேன்.

நன்றி அண்ணா உன்னையும் மறவாது ஈழம்

நன்றி!

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்காத இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பத்மசிறீ விருதை திரும்ப ஒப்படைக்கப் போவதாக தமிழ் திரைப்படத்தின் இயக்குநர் இமயமான பாரதிராஜா அறிவித்திருக்கின்றார்.

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் முடிவில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உலகிற்கே தமிழினத்தை அடையாளம் காட்டியவர் பிரபாகரன்தான். தமிழ் இனத்திற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் கடந்த 28 ஆண்டுகளாக போராடி வருகிறார்.

ஆனால் பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் வீழ்த்துவதற்காக இந்திய அரசு புறவழியில் உதவி செய்து வருகிறது. மத்தியில் அமைந்துள்ள ஆட்சியில் அதிகார நடுவமாக விளங்கும் ஒருவர் தமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக 3 ஆண்டுகளாக சிறிலங்கா அரசுக்குப் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். அவரைப் பற்றி பேசக்கூடாது என்று தமிழக காவல்துறை தடை போடுகிறது. அவரைப் பற்றி பேசினால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. அப்படியானால் அவர்தான் தேசமா?.

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடும் பிரபாரனை தீவிரவாதி என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் இந்திய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை உள்ளிட்ட அனைவருமே தீவிரவாதிகள்தான்.

தமிழீழத்தில் பிச்சைக்காரர்களையே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அங்குள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் பிரபாகரன் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட தமிழினம் இன்று உணவுக்கும், மருந்துக்கும் கையேந்தி பிச்சை எடுக்கின்றது.

சிறிலங்கா அரசுக்கும் மத்திய எதிராக தமிழ் மக்களிடையே இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சி முன்பே ஏற்பட்டிருந்தால் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

இலங்கையில் வாழும் எங்கள் சகோதரர்களைக் காப்பாற்ற முடியாத மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் அந்த அரசு எனக்கு அளித்த பத்மசிறீ விருதை திரும்ப ஒப்படைப்பேன் என்று பாரதிராசா அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றனர். இயக்குநர் பாரதிராஜாவுக்கு 2004 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதினம்

நன்றி இயக்குநர் இமயம் அவர்களே!

திரு. அப்துல் கலாம் அவர்கள் பாரத் ரத்னா விருதை திருப்பி அனுப்ப தமிழக மக்கள் அவரிடம் கோரவேண்டும்!!

அதை அவர் செய்வது தன் தாய் தமிழுக்கு செய்யும் நன்றிக்கடனாகும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.