Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலில் விழ மாத்திரை

Featured Replies

ராதா காதல் வராதா என்று யாரும் இனி பாட்டுப் பாடிக் கொண்டிருக்க தேவையில்லை. காதலில் விழ விரும்புவோருக்காகவே ஒரு ஸ்பெஷல் காதல் மாத்திரை தயாராகி வருகிறது. அதை சாப்பிட்டால் போதுமாம், 'சப்ஜாடாக' காதல் வயப்பட்டு விடலாமாம்.

கேட்கவே காமடியாக இருக்கிறதா?. ஆனால் உண்மைதான். ஆண்டுக்கு ஆண்டு காதலர் தினத்தன்று பல புதுப்புது 'ஐட்டங்களையும் ஐடியா'க்களையும் இறக்கி விடுவோர், இந்த முறை காதல் மாத்திரையை களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

அதேபோல காதலில் தோல்வியுற்றவர்களுக்கு அந்த உணர்வுகளை மறைக்கவும் ஒரு மாத்திரை வரப் போகிறதாம்.

இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், விரைவில் காதலில் விழவும், விழுந்து அடிபட்டு காதல் தோல்வியால் அவதிப்படுபவர்களுக்கு அதை மறைக்கவும் மாதிதரைகள் தயாராகி விடும்.

காதல் என்பது இனிமேல் பஸ் பயணம் மாதிரிதான் இருக்கும். ஒரு ஸ்டாப்பில் ஏறி, அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்வது போன்ற நிலை வந்து விடும். அதற்கு இந்த மாத்திரை கை கொடுக்கும் என்கிறார்கள் அவர்கள்.

காதல் என்பது மனித மூளையில் ஏற்படும் ஒரு ரசாயன மாற்றம்தான். இந்த மாற்றத்தைத் தூண்டுவிக்கும் வகையில் மாத்திரைகளை பயன்படுத்தினால் கண்டிப்பாக காதல் உணர்வு தோன்றும். அதேபோல அந்த உணர்வை மரத்துப் போக வைக்க இன்னொரு மாத்திரையும் சாத்தியம்தான் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

அமெரிக்க நரம்பியல் விஞ்ஞானிகள் இதுகுறித்து கூறுகையில், சரியான கலவையில் உருவாக்கப்படும் இந்த வேதியியல் மாத்திரைகள் நிச்சயம் காதலில் விழவும், காதலிலிருந்து மீளவும் உதவும் என்கிறார்கள்.

அட்லாண்டாவில் உள்ள எமோரி மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லேரி யங் கூறுகையில், மனித மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால்தான் காதல் உணர்வுகள் தோன்றுகின்றன என்பதை நேரடியாக டிவி மூலம் விளக்கும் காலம் வந்து விட்டது.

இதுதொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் காணப்படும் எலியைப் போன்ற தோற்றமுடைய பிரெய்ரி வோல்ஸ் விலங்குகளிடம் நாங்கள் சோதனை மேற்கொண்டுள்ளோம். அதில் மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றமே காதல் உணர்வுகளுக்குக் காரணம் என்பது தெரிய வந்தது.

அந்த உணர்வுகளின் பின்னணி குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.

ஒரு பெண் பிரெய்ரி வோல் மீது ஹார்மோனை செலுத்தியபோது அது இன்னொரு ஆண் விலங்கின் துணையை நாடியதை நாங்கள் கண்டோம்.

பின்னர் அந்த ஹார்மோன் மூளைக்குப் போவதை தடுத்தபோது, ஆண் துணையின் உதவியை அது நாடவில்லை. மாறாக அது இருக்கும் பக்கம் கூட அது போகவில்லை.

மனித மூளையும் இதேபோலத்தான் செயல்படுகிறது. மூளையை தூண்டுவிக்கும் இந்த வகை ஹார்மோன்கள் உண்மையின் மனிதன் பழக்க வழக்கங்களையும் கூட கட்டுப்படுத்துகிறது, மாற்றுகிறது.

இந்த ஹார்மோன் அதீதமாக செயல்பட்டால் கண்ணோடு கண் பார்த்து அணுகும் தைரியம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும். காதலில் இது முக்கியமாச்சே.. இதுதான் காதல் உணர்வாக நமக்கு தெரிகிறது என்கிறார் அவர்.

இப்படி மூளையை தூண்ட உதவும் இரு வகையான ரசாயன ஹார்மோன்களை (ஆக்சிடாக்சின் மற்றும் டோபமைன்) தற்போது மாத்திரை வடிவில் மாற்றி புழக்கத்தில் விட்டால், காதல் பழக்கத்திற்கு இது உதவக் கூடிய தோழனாக இருக்கும் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

இனிமேல் பழக வேண்டும் என யாராவது ஆசைப்பட்டால் கையில் பேப்பரும், பேனாவுமாக உட்கார்ந்து, கடலையும், வானத்தையும் பார்த்து கவிதை பாட வேண்டாம்.

பையில் ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டால் போதும். எந்தப் பெண்ணைப் பிடிக்கிறதோ, டக்கென்று ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டால் போதும்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாத்திரை எங்கே கிடைக்கும்

  • தொடங்கியவர்

காதலை வரத்தூண்டும் மாத்திரையா அல்லது காதலை கட் பன்ணும் மாத்திரையா?

காதலைத் தூண்டும் மாத்திரை ஒரு பக்கெட் எவ்வளவு? ஒரே நாளில் எத்தனை பேரிற்கு கொடுக்கலாம்?

ஆண் அல்லது பெண்ணில் ஒருவருக்கு காதலை தூண்டும் மாத்திரையும் மற்றவருக்கு அதனை மரத்து போகச் செய்யும் மாத்திரையும் கொடுத்து அருகருகே விட்டால் என்ன நடக்கும் என்றும் பார்க்க ஆவலாக இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாறிககீறி நீங்கள் வளர்க்கிற நாய்க்கு கொடுத்திடாதேங்கோ பேந்து அவ்வளவுதான் :D

இந்த மாத்திரை வேனுமானவர்கள் குருஜியை தொடர்புகொள்ளவும்

  • தொடங்கியவர்

இருந்தாலும் நிழழிக்கு ஏன் இந்த காதல் கொலை வெறி

  • கருத்துக்கள உறவுகள்

மாறிககீறி நீங்கள் வளர்க்கிற நாய்க்கு கொடுத்திடாதேங்கோ பேந்து அவ்வளவுதான் :(

இந்த மாத்திரை வேனுமானவர்கள் குருஜியை தொடர்புகொள்ளவும்

நமக்கு பொட்டி பொட்டியாக தேவைப்படும் செகுவாரா கெதியா அனுப்புங்க :)

கறுப்பி Posted Yesterday, 12:27 AM

இந்த மாத்திரை எங்கே கிடைக்கும்

கறுப்பி ஏன் இவ்வளவு அவசரம் பொறுமை [யாருக்கோ] :lol:

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாத்திரையை சாப்பிட்டால் பின்விளைவு , முன்விளைவு ஒன்றும் ஏற்படாதா ? :(:lol::)

இந்த மாத்திரையை சாப்பிட்டால் பின்விளைவு , முன்விளைவு ஒன்றும் ஏற்படாதா ? :(:lol::)

பக்கவிளைவுதான் ஏற்படுமாம் :D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி ஏன் இவ்வளவு அவசரம் பொறுமை [யாருக்கோ]

எனக்குத் தாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

காதலை வரத்தூண்டும் மாத்திரையா அல்லது காதலை கட் பன்ணும் மாத்திரையா?

முதலில் காதலை வரத்தூண்டும் மாத்திரை பிறகு.............காதலை கட் பண்ணும் மாத்திரை சரியா. :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறேன் ஆண்களுக்கு தான் இப்படியான மாத்திரைகள் தேவை... மறப்பதற்கு

பெண்களுக்கு தேவை இல்லை...இப்பகூட நாளுக்கு,மணித்தியாலத்திற்கு, கிழமைக்கு என்று மாத்திட்டு இருக்காங்களே...

பஸ் பயணம் போலை.... :huh:

  • தொடங்கியவர்

பிரசாந் சரியா சென்னிங்க. கருப்பிட அவசரத்த பாத்தா கட் பன்னுபடப் பேகுது போல பாவம் யார் அந்த ஆனோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரசாந் சரியா சென்னிங்க. கருப்பிட அவசரத்த பாத்தா கட் பன்னுபடப் பேகுது போல பாவம் யார் அந்த ஆனோ?

ஜயோ ஏனப்பா இந்த மாட்டி விடுறவேலை... செருப்பு வீசப்போறாங்கப்பா........... :huh:

இது எங்க கிடைக்கும்

  • தொடங்கியவர்

சவுதி அரேபியாவில்

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ ஏனப்பா இந்த மாட்டி விடுறவேலை... செருப்பு வீசப்போறாங்கப்பா........... :unsure:

யாருங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க கிட்ட நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது...hehehe

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாத்திரை எங்கே கிடைக்கும்

கறுப்பிய நானெல்லோ லவ்வு பன்னுறன் கறுப்பி இனி ஏன் இதெல்லாம் நாம தூள் கிழப்புவமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பிய நானெல்லோ லவ்வு பன்னுறன் கறுப்பி இனி ஏன் இதெல்லாம் நாம தூள் கிழப்புவமா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ .......................... கிழிஞ்சுது போ இனிமல் உருப்பட்டமாதிரித்தான் :o .

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே இதையும் படியுங்கோ...

காதல் ஒரு நோய்: குருட்டுத்தனமானது.

காதல் ஒரு நோய் போன்றது மட்டுமன்றி குருட்டுத்தனமாகவும் செயற்படத் தூண்டுகிறது என்று சொல்கின்றன அறிவியல் ஆய்வுகள்.

காதல் ஆணைப் பெண்ணாக்கிறது பெண்ணை ஆணாக்கிறது

காதல் ஏற்பட்ட ஆண்களுக்கு ஆணியல்புக்குரிய ரெஸ்ரரொஸ்ரெறோன் (testosterone) ஓமோனின் அளவு இயல்பை விடக் குறைவடைய அவனிடம் பெண்ணியல்பு அதிகரிக்கப்பெறுவதாகவும் பெண்களில் ஓமோனின் அளவு அதிகரிப்பதால் ஆணியல்பு அதிகரிக்கப் பெறுவதாகவும் இத்தாலிய University of Pisa வைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

They found that men had lower levels of testosterone than normal, while the women had higher levels of the hormone than usual.

"Men, in some way, had become more like women, and women had become like men," Donatella Marazziti of the University of Pisa told New Scientist magazine.

இதனால் தான் என்னவோ தற்போதெல்லாம் காதலித்த பின்னும் திருமணம் ஆன பின்னும் ஆண்கள் பெண்களுக்கு இலகுவாக அடங்கிப் போய் விடுறாங்களோ என்னவோ..?!

காதல் குருடானது

University College London இல் இடம்பெற்ற பிறிதொரு ஆய்வின் பிரகாரம் காதல் குருட்டுத்தனமானதே என்றும் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். தமிழில் எப்பவோ சொல்லிட்டார்கள். ஆனால் விஞ்ஞானிகள் இப்போதுதான் சமீபத்திய ஆண்டில் இதைக் கண்டறிந்துள்ளனர்.

காதல் வயப்பட்டவர்களின் மூளையின் நடுநிலைச் சுற்றுடன் தொடர்புடைய சில முக்கிய செயற்பாடுகள் பிந்தங்கி விடுவதால் இவர்களால் தீவிரமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இதனால் தான் காதல் வயப்பட்டவர்கள் இலகுவாக ஏமாற்றப்படும் அளவுக்கு தமது இணையின் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றனராம்.

'Love is blind'

They found that the neural circuits that are normally associated with critical social assessment of other people are suppressed when people are in love.

They said the findings may explain why some people are often "blind" to their partner's faults.

இந்த இரண்டு ஆய்வுகளும் காதல் உடலில் சில ஆபத்தான விளைவுகளை உருவாக்கிறது என்பதைக் காட்டி நிற்கின்றன எங்கின்றனர் உயிரியல் விஞ்ஞானிகள்.

இதைவிட இவற்றுக்கு முந்தைய ஒரு ஆய்வில் இருந்து காதல் வயப்பட்டவர்களில் செறோரொனின் (serotonin) அளவு குறைவடைந்து இருப்பதுடன் இது obsessive compulsive disorder உள்ளவர்களில் உள்ள செறோரொனின் அளவை ஒத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தான் காதலர்கள் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் துணை பற்றி obsess ஆக இருக்கின்றனரோ என்றும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

the researchers said the finding may explain why people who are in love can sometimes obsess about their partner.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=34074

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களே இதையும் படியுங்கோ...

இதனால் தான் என்னவோ தற்போதெல்லாம் காதலித்த பின்னும் திருமணம் ஆன பின்னும் ஆண்கள் பெண்களுக்கு இலகுவாக அடங்கிப் போய் விடுறாங்களோ என்னவோ..?!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=34074

குருவே தங்களின் விளக்கமான போதனையில் நானும் பயன் பெற்றேன் .நானும் நீங்களும் சேர்ந்து எம்முடைய ஆண்களை நல்வழிப்படுத்தும் கொள்கையில் எப்போதும் உறுதியாக பயணிப்போம். மற்றது குருவே உவர் குட்டிபையன் “Love makes life beautiful “ என்று சொல்லிக்கொண்டு திரியிறார் அவருக்கு உங்களின் போதனைகள் தேவைப்படுகின்றது (நான் சொல்லி களைத்துவிட்டேன் :o )

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது குருவே உவர் குட்டிபையன் “Love makes life beautiful “ என்று சொல்லிக்கொண்டு திரியிறார் அவருக்கு உங்களின் போதனைகள் தேவைப்படுகின்றது (நான் சொல்லி களைத்துவிட்டேன் :( )

அவர் சொல்வதில் தவறில்லை. Love makes life beautiful.. எனக்கு எனது ஆசிரியர் சொல்லித் தந்தது Love is God. கடவுளை சிலையில சிற்பத்தில.. புராணத்தில.. தேடாத. உன் மனசில உள்ள அன்பில தேடு. இருப்பான் என்பார். அது 100% உண்மை. நான் உணர்கிறேன். ஒருபோதும் அடுத்தவள் மனசில உனக்கான அன்பு 100% இருக்கும் என்று நம்பக் கூடாது. அதுவே ஏமாற்றப்படக் காரணமாகிறது.

குட்டிப் பையன் சொல்லுறது உண்மை. எப்போ என்றால் ஒரு மனிதன் எப்போ தன்னைக் காதலிக்க ஆரம்பிக்கிறானோ அப்பவே அவன் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ள அனைத்தையும் காதலிக்க ஆரம்பித்துவிடுவான். அப்போ அவனும் அவனுடைய வாழ்வும் அழகாக அமையும். ஆனால் எவனொருவன் தன்னைக் காதலிக்காமல் குமரிகளை காதலிக்க ஆரம்பிக்கிறானோ அப்பவே அவனின் வாழ்வு சீரழிய ஆரம்பித்து விடுகிறது..!!

உதாரணத்துக்கு பாருங்கள்.. பெட்டையோட காதல் வயப்பட்டதுகள்.. குருடுகளாகி.. அவளவை கேட்கிறதை எல்லாம் வாங்கிக் கொடுக்குங்கள். அதனால அவளவை அவரில நிறையக் காதல் கொள்ளுவினம் என்று. ஆனால் அவ்வளவை.. ஆகா நல்ல ஒரு இழிச்ச வாய் அம்பிட்டிட்டு அமுக்கடி அமுக்கு என்று அமுக்கிப் போட்டு.. பாதி வழியில இன்னொரு இழிச்சவாய் அம்பிட்ட உடன அங்கால பாய்ஞ்சிடுவாளவ. இது காதலா.. கருமாரி. இது ஒரு வகை பாலியல் கவர்ச்சி. அவ்வளவே. இது அல்ல காதல்..!

இதையே எத்தனை ஆண்கள் ஒருத்தியை தீவிரமா காதலிச்ச பின் அல்லது கலியாணம் ஆன பின் தன்னைத் தானே காதலிக்கினம். பல ஆண்களின் கோலமே உருமாறிப் போயிடுது. சொந்த சுயத்தைக் கூட இழந்து போயிடுறாங்க. இப்படி ஒரு கேடு கெட்ட வாழ்க்கையை இந்த உலகில் எந்த ஜீவராசி வாழுது..??!

ஒரு நாள் என் தோட்டத்தில் இரண்டு ரொபின் பறவைகள் பார்த்தேன். அழகாக அருகிருந்து காதல் செய்யினம். தலை கோதினம்.. எல்லாம் செய்யினம். ஆனால் ஒரு 10 நிமிடத்தின் பின்.. அவையவையே பறந்து போயிடினம். தங்க தங்க தேவைகளை பூர்த்தி செய்ய. ஆனால் மனிதனைப் பாருங்க.. காதல் என்ற உடன.. அவர் எப்பவும் அவாவை குசிப்படுத்திட்டே இருக்கனுமாம். அவாவைக் கவனிச்சிட்டே இருக்கனுமாம். வேண்டிக் கொடுத்துக்கிட்டே இருக்கனுமாம். காரில கூட்டிட்டுப் போகனுமாம். வீடு வாங்கிக் கொடுக்கனுமாம். நகை வாங்கிக் கொடுக்கனுமாம். அப்பதானாம் அவா.. ஒரு கைப்பையைக் காவிக்கிட்டு.. கையைக் கோத்துக்கிட்டு திரிவாவாம். தேவையின்னா இன்னொருத்தன்ர கையையும் பிடிப்பாவாம். ஏண்டா கேணப்பயலுகளா இருக்கீங்க என்று கேட்பது போல இருந்திச்சு.. அந்த ரொபின்களின் காதல்..! எப்போதும் ஆணும் பெண்ணும் அருகிருப்பதல்ல காதல். ஆண் பெண்ணுக்காக வாரி வழங்குவதல்ல காதல். ஆணிடம் என்ன இருக்கு என்று பார்ப்பதல்ல காதல். அன்பு எங்கிருக்கோ அங்கு இருப்பதே காதல். அன்பு இருக்கிறவன்/ள் தன்னைத் தானே காதலிக்கிறவன்/ள் எப்போதும் காதல் என்ற பெயரால் ஏமாற்றிற வேலையைச் செய்யாங்க. அடுத்தவனை நோகடிச்சு.. அவங்க வாழ்க்கையை பாழடிக்காங்க. ஏன்னா அவங்களுக்குப் புரியும்.. தன்னைத் தானே காதலிக்கிறது போலத்தான் அடுத்தவனையும் காதலிக்கனுமின்னு.

வாழ்க்கை சிறியது. அதில காதல் என்ற பெயரில ஏமாற்றங்களை தாறவங்களே அதிகம். அப்படியான ஏமாற்றங்கள் ஏமாற்ற நினைக்கிறவங்களை எதுவும் பண்ணாது. ஆனால் ஏமாறாக் கூடாது தன்ர காதல் காதலிக்கப்படனும் உண்மையா இருக்கனும் என்று நினைக்கிறாங்க பாருங்க.. அவங்க தான் இந்த அடுத்தவர் அவங்க மேல வைக்கும் போலியான காதலால வாடி வதங்கி.. உருக்குலைஞ்சு போயிடுறாங்க. இதனால வாழ்க்கையையே தொலைச்சவங்க பலர். தொலைக்கப் பண்ணினவங்க.. இன்னும் எத்தனையோ பேரை அப்படியே ஏமாற்றிக் கிட்டு வாழ்ந்துகிட்டே இருக்காங்க. இதையெல்லாம் கண்டுபிடிக்க கருவியில்லை. அதனால.. எப்பவும் ஒருவன் தன்னைத் தானே முதலில காதலிக்கனும். அதுக்கு அப்புறமா தான் அடுத்ததைக் காதலிக்க ஆரம்பிக்கனும். அப்பதான் காதல் தோல்வி.. ஏமாற்றம் ஏற்படாது. ஏன்னா அவனுக்கு அவன் மேல உள்ள காதல் எது உண்மைக் காதல் எது போலிக் காதல் என்பதை இலகுவாக அடையாளப்படுத்திவிடும். ஏமாற்றம் என்பதை இலகுவாக இனங்கண்டு.. அதை விலக்கி.. சின்ன வாழ்க்கையை அழகாக்கிக்கவும் முடியும்.

இந்த உலகில் முதலின் நான் என்னைக் காதலிக்க வேண்டும். இன்றேல் என் வாழ்க்கை எப்படி அழகுறும்..! அது சரிதானே. காதல் என்பது பெட்டையோட.. பெட்டைக்குப் பொடியோட வாற பாலியல் கவர்ச்சி சம்பந்தப்பட்ட ஒன்றல்ல என்பது எனது கொள்கை..! பெட்டையோட வாறது காதல் என்பதிலும்.. அதற்கு கருமாரி என்று வைச்சுக் கொள்ளுதல் சிறப்பு..! :o:(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் சொல்வதில் தவறில்லை. Love makes life beautiful.. எனக்கு எனது ஆசிரியர் சொல்லித் தந்தது Love is God. கடவுளை சிலையில சிற்பத்தில.. புராணத்தில.. தேடாத. உன் மனசில உள்ள அன்பில தேடு. இருப்பான் என்பார். அது 100% உண்மை. நான் உணர்கிறேன். ஒரு போது அடுத்தவள் மனசில உனக்கான அன்பு 100% இருக்கும் என்று நம்பக் கூடாது. அதுவே ஏமாற்றப்படக் காரணமாகிறது.

குட்டிப் பையன் சொல்லுறது உண்மை. எப்போ என்றால் ஒரு மனிதன் எப்போ தன்னைக் காதலிக்க ஆரம்பிக்கிறானோ அப்பவே அவன் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ள அனைத்தையும் காதலிக்க ஆரம்பித்துவிடுவான். அப்போ அவனும் அவனுடைய வாழ்வும் அழகாக அமையும். ஆனால் எவனொருவன் தன்னைக் காதலிக்காமல் குமரிகளை காதலிக்க ஆரம்பிக்கிறானோ அப்பவே அவனின் வாழ்வு சீரழிய ஆரம்பித்து விடுகிறது..

உதாரணத்துக்கு பாருங்கள்.. பெட்டையோட காதல் வயப்பட்டதுகள்.. குருடுகளாகி.. அவளவை கேட்கிறதை எல்லாம் வாங்கிக் கொடுக்குங்கள். அதனால அவளவை அவரில நிரையக் காதல் கொள்ளுவினம் என்று. ஆனால் அவ்வளவை.. ஆகா நல்ல ஒரு இழிச்ச வாய் அம்பிட்டிட்டு அமுக்கடி அமுக்கு என்று அமுக்கிப் போட்டு.. பாதி வழியில இன்னொரு இழிச்சவாய் அம்பிட்ட உடன அங்கால பாய்ஞ்சிடுவாளவ. இது காதலா.. கருமாரி.

இதையே எத்தனை ஆண்கள் காதலிச்ச பின்.. கலியாணம் ஆன பின் தன்னைத் தானே காதலிக்கினம். பல ஆண்களின் கோலமே உருமாறிப் போயிடுது. சொந்த சுயத்தைக் கூட இழந்து போயிடுறாங்க. இப்படி ஒரு வாழ்க்கை இந்த உலகில் எந்த ஜீவராசி வாழுது..??!

இந்த உலகில் முதலின் நான் என்னைக் காதலிக்க வேண்டும். இன்றேல் என் வாழ்க்கை எப்படி அழகுறும்..! அது சரிதானே. காதல் என்பது பெட்டையோட வாற பாலியல் கவர்ச்சி சம்பந்தப்பட்ட ஒன்றல்ல என்பது எனது கொள்கை..! பெட்டையோட வாறது காதல் என்பதிலும்.. தற்கு கருமாரி என்று வைச்சுக் கொள்ளுதல் சிறப்பு..! :(:D

குருவே அருமையான விளக்கம் :( .உவர் தன்னை காதலிக்கவில்லை குருவே அது தானே பிரச்சனை ........(எனக்கு பிரச்சனையில்லை குருவே நான் உங்களைபோல முற்றும் துறந்தவன்) அதுவும் குருவே இப்போதைய குமரிகளுக்கு தங்கத்தில் ஆபரணங்கள் ஆகாதாம் வைர ஆபரணங்கள் தான் வேணுமாம்,பெற்ற பிள்ளைகளுக்கு கூட கைகளால் உணவு ஊட்ட மாட்டார்களாம் கரண்டி வேணுமாம்,கையில நகம் புலி நகம் போல் இருக்கு ,கழுத்துல போடுற மாலை எங்கட ஊர் நாம்பன் மாடுகளுக்கு போடுற செயின் மாதிரி இருக்கு ,நெற்றியில வைக்கிற பொட்டுல கழுகு,பாம்பு போன்ற பயங்கர மிருகங்கள் இருக்கு குருவே,அவர்களின் கூந்தல் கம்பி போல் குத்துகிறது,காதில் பல அடுக்கு மாடிகள் தொங்குகின்றது,அவர்களின் முகத்தில் பல படை வாசனை திரவியங்கள் வாசம் செய்கின்றன ,உதட்டில் பல காலம் மங்கிப்போகாத வன்னப்பூச்சுக்கள் காணப்படுகின்றன குருவே இப்படி இருக்கும் போது ஒரு பெண்ணை எப்படி காதல் செய்யமுடியும் :D ?ஏன் எமது ஆண் வர்க்கம் இப்படி தவறான பாதையில் செல்கிறது குருவே :o ? குருவே உந்த கூடுவிட்டு கூடு பாயும் குமாரிகளை திருத்த அல்லது மாற்ற ஏதும் வழி இருக்கா ?

குருவே அப்ப நாங்கள் “Love makes life karumaari” என்று மாற்றுவோம் என்ன குருவே :(

  • கருத்துக்கள உறவுகள்

குருவே அருமையான விளக்கம் :( .உவர் தன்னை காதலிக்கவில்லை குருவே அது தானே பிரச்சனை ........(எனக்கு பிரச்சனையில்லை குருவே நான் உங்களைபோல முற்றும் துறந்தவன்) அதுவும் குருவே இப்போதைய குமரிகளுக்கு தங்கத்தில் ஆபரணங்கள் ஆகாதாம் வைர ஆபரணங்கள் தான் வேணுமாம்,பெற்ற பிள்ளைகளுக்கு கூட கைகளால் உணவு ஊட்ட மாட்டார்களாம் கரண்டி வேணுமாம்,கையில நகம் புலி நகம் போல் இருக்கு ,கழுத்துல போடுற மாலை எங்கட ஊர் நாம்பன் மாடுகளுக்கு போடுற செயின் மாதிரி இருக்கு ,நெற்றியில வைக்கிற பொட்டுல கழுகு,பாம்பு போன்ற பயங்கர மிருகங்கள் இருக்கு குருவே,அவர்களின் கூந்தல் கம்பி போல் குத்துகிறது,காதில் பல அடுக்கு மாடிகள் தொங்குகின்றது,அவர்களின் முகத்தில் பல படை வாசனை திரவியங்கள் வாசம் செய்கின்றன ,உதட்டில் பல காலம் மங்கிப்போகாத வன்னப்பூச்சுக்கள் காணப்படுகின்றன குருவே இப்படி இருக்கும் போது ஒரு பெண்ணை எப்படி காதல் செய்யமுடியும் :( ?ஏன் எமது ஆண் வர்க்கம் இப்படி தவறான பாதையில் செல்கிறது குருவே :o ? குருவே உந்த கூடுவிட்டு கூடு பாயும் குமாரிகளை திருத்த அல்லது மாற்ற ஏதும் வழி இருக்கா ?

ஆண்கள் தான் அவங்களை இப்படி பாழாக்கிறாங்க. நான் அன்று ஒரு பெண்ணின் செயலை அவதானித்தேன். வேலை முடிந்து ரெயிலில் பயணித்த அவர்.. வேலைக் களைப்பால் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். ஒரு நாலு ஸ்ரேசன் போயிருக்கும்.. கைப் பையை திறந்தார்.. கிடு கிடு என்று கண்ணாடியில் முகத்தைப் பார்த்தார்.. உடனே வண்ண வண்ண திரவியங்களை எடுத்தார் முகமெல்லாம் அப்பினார்.. ஒரு குட்டி தூரிகை அதனால் கண் இமை மயிர்களுக்கு கூட கலர் தீட்டினார்.. களைஞ்சுப் போயிருந்தவர்.. சோடனையால் பளிச்சென்று ஆனார்.

கைத்தொலைபேசியை கையில் எடுத்தார்.. விரல்களால் ரச் பண்ணினார். யாரோடோ கதைத்தார். நான் இறங்கும் போது அதே ஸ்ரேசனில் இறங்கினார். அவருக்காக ஒருவர் வெயிட்டிங். போனார்.. இவரைக் கண்டதும்.. அவர் ஆங்கிலத்தில்.. யூ ஆர் லுக்கிங் நைஸ் என்றார்.. கையைப் பிடித்தார். இருவரும் நடையைக் கட்டிச்சினம். இவை நடக்கிற பாதை ஒரு ஒடுங்கிய பாதை. அவ்வளவு சனமும் அதாலதான் நடக்கனும். எத்தனை அவசரம் மற்றவர்களுக்கு. ஒரு வயதான தாத்தா கூட.. நகர முடியாத படிக்கு கை கோர்ப்பு விடுபடல்ல.

இப்படி ஆண்கள் இருக்கேக்க.. பெண்கள்.. என்னதான் போலி வேசம் போடமாட்டாங்க. எத்தனை பெண்கள்... பூச்சுக்களையும் பூசிக் கொண்டு.. கைப்பைகளையும் காவிக் கொண்டு.. இரவு 9:00 என்றவுடன்.. புகையிரத நிலையங்களில் காவல் நிக்கினம். காசு பார்க்க..! யாரால்... ஆண்களால் தானே. ஆண்கள் திருந்திக்கனும். ஆனால் இந்த உலகம் திருந்தாது. அதை எதிர்பார்த்து நாம் நம்ம நேரத்தை வீணடிக்கிறதிலும்.. நாம நம்மால இயன்ற அளவு திருந்தி வாழ்ந்து காட்டிடுவம் என்பதே சிறப்பானது. இப்படி ஒவ்வொருத்தனும் நினைச்சிட்டா.. திருத்த இன்னொருவன் வரணும் என்ற அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

ஒரு பெண் தான் களைச்சுப் போயிருப்பதைக் கூட செயற்கைத் தனத்தால் மறைக்க விரும்பிறாள் என்றால்.. உண்மையில் அவளிடம்.. உண்மை எந்தளவு இருக்கும்..???! எப்பவும் நிஜயத்தை காதலிக்கனும் அப்பதான் வாழ்க்கையின் பரிமானங்கள் புரியும். போலியைக் காதலிச்சா வாழ்க்கையும் போலியாவே இருக்கும். அதில் அமைதி இருக்காது. அன்பு இருக்காது. காதல் என்பது சாதாரணமானதா இருக்கனும். திட்டமிட்டதா இருக்கக் கூடாது. :(

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.