Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உராய்வு

Featured Replies

உராய்வு கவிதைத்தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் தனித்தனியே அவற்றிற்கான சிறப்பியல்புகளை சொல்லி செல்கின்றன. இவ்வளவு ஆற்ற்ல்களையும் கொண்டுள்ள ஒரு படைப்பாளியின் கவிதை ஒவ்வொன்றினையும் படிக்கின்ற போது அழகிய எண்ணக்கருக்களை அழமாய் உள்வாங்கவைத்து, அடுத்த கவியினை வேகமாய் புரட்டிடும் ஆவலை தூண்டியது என்றால் மிகையல்ல. உண்மையில் இவ்வளவு திறமைகளை கொண்டுள்ள ஒரு படைப்பாளியை யாழ்களம் பெற்றதில் நாம் பெருமையும் பேர் உவகையும் கொள்கின்றோம்.

வீதியில் வாழும் மானிடர்க்கு -இங்கே

வீடுகள் இல்லையடா

வீதியில் கிடந்த கற்களுக்கு -இங்கே

கோவில்கள் ஏதுக்கடா?

நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்

சோறுமே இல்லையடா

நாள்தோறும் இந்த வெற்று சிலைக்கு

பூசைகள் ஏதுக்கடா

கூவும் குயிலும் கூடிவாழும் -காட்டில்

கடவுள் அவைக்கில்லை

தாவும் குரங்கும் வரங்கள் வேண்டிடக்

கோவில் செல்வதில்லை

ஆயிரம் ஆண்டவர் ஆயினும் குறைகள்

இன்னும் தீரவில்லை

ஊருக்கு ஊர் ஓர் கோவிலைக் கட்டியும்

வேதனை ஆறவில்லை.

:lol:

  • Replies 318
  • Views 42.7k
  • Created
  • Last Reply

உராய்வு கவிதைத் தொகுப்பில் இருந்த ஒரு கவிதையை இங்கு இணைத்தமைக்கு நன்றி மதுரன் அண்ணா....

வீதியில் வாழும் மானிடர்க்கு -இங்கே

வீடுகள் இல்லையடா

வீதியில் கிடந்த கற்களுக்கு -இங்கே

கோவில்கள் ஏதுக்கடா?

நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்

சோறுமே இல்லையடா

நாள்தோறும் இந்த வெற்று சிலைக்கு

பூசைகள் ஏதுக்கடா

கவி வரிகள் ரொம்ப நல்லாயிருக்கு ... நல்லா எழுதியிருக்குறீங்க இளைஞன் ... வாழ்த்துக்கள் :lol:

  • 2 weeks later...

உராய்வு கவிதைத்தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் தனித்தனியே அவற்றிற்கான சிறப்பியல்புகளை சொல்லி செல்கின்றன. இவ்வளவு ஆற்ற்ல்களையும் கொண்டுள்ள ஒரு படைப்பாளியின் கவிதை ஒவ்வொன்றினையும் படிக்கின்ற போது அழகிய எண்ணக்கருக்களை அழமாய் உள்வாங்கவைத்து, அடுத்த கவியினை வேகமாய் புரட்டிடும் ஆவலை தூண்டியது என்றால் மிகையல்ல. உண்மையில் இவ்வளவு திறமைகளை கொண்டுள்ள ஒரு படைப்பாளியை யாழ்களம் பெற்றதில் நாம் பெருமையும் பேர் உவகையும் கொள்கின்றோம்.  

வீதியில் வாழும் மானிடர்க்கு -இங்கே

வீடுகள் இல்லையடா

வீதியில் கிடந்த கற்களுக்கு -இங்கே

கோவில்கள் ஏதுக்கடா?

நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்  

சோறுமே இல்லையடா

நாள்தோறும் இந்த வெற்று சிலைக்கு

பூசைகள் ஏதுக்கடா

கூவும் குயிலும் கூடிவாழும் -காட்டில்

கடவுள் அவைக்கில்லை

தாவும் குரங்கும் வரங்கள் வேண்டிடக்

கோவில் செல்வதில்லை

ஆயிரம் ஆண்டவர் ஆயினும் குறைகள்

இன்னும் தீரவில்லை

ஊருக்கு ஊர் ஓர் கோவிலைக் கட்டியும்

வேதனை ஆறவில்லை.

:lol:

கவிவரிகள் அருமை தொடர்ந்தும் எழுதுங்கள் :lol:

உராய்வு

கவிதை தொகுப்பு கிடைத்தும் பல நாட்களாகியும் நேரம் இல்லை என்றா காரணத்தால் முழுமையாக ரசித்து வாசிக்க முடியவில்லை. இன்று கிடைத்தது அரிய சந்தர்ப்பம்.

வெண்ணிலாவைப்போல் மாமரத்திற்க்கடியில் தென்றலோடு கதை பேசிக்கொண்டு வாசிக்க ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் பனிக்காலத்தில் தனது இலைகளை இழந்து வசந்த காலத்தின் அறிகுறியாக கொஞ்சம் கொஞ்சமாக துளிர் விட்டு கொண்டு இருக்கும் ஆப்பிள் மரம் தான் எனக்கு வசதியாக கிடைத்தது. இதமான இளம் தென்றலுக்கு பதிலாய் பலமான குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. குளிர்காற்றின் குளிர்மையை உணராமல் மெய்மறந்து கவிதைக்குள் மூழ்கினேன்

அன்புடன், உராய்வுடன், நன்றியுடன் என்று பக்கங்களில் கி.பி அரவிந்தன் அவர்களின் முகவுரையுடன் கவிதை தொகுப்பின் ஆசிரியார் சஞ்சீவ்காந்த் (இளைஞன்) அறிமுகமும் அதனைத்தொடர்ந்து நன்றியுரையும் தொடர்ந்தது. நான் வாசித்த தொகுப்புகளில் நன்றியுரை கடைசியில் தான் இடம்பெறும். ஆனால் இந்த தொகுப்பில் புதுமையாக நன்றியுரையை முதல் பக்கத்திலே போட்டிருந்தார்கள்.

"காலத்தின் கவிக்கூர் இவன்" என்ற ஏ.சி. தாசீயஸ் அவர்களின் அடை மொழிக்கு ஏற்ப ஒவ்வொரு கவி வரிகளும் மிகவும் உயிரோட்டமாகவும் திரும்பவும் வாசிக்க தூண்டும் தன்மையையும் கொண்டிருந்தது.

வருக 2004 என்ற தலைப்பின் கீழ்

" வருகவென வரவேற்று வாழ வைத்த ஆண்டுகளே வரலாற்றில் நீர் எங்கு போனீர்?"

என்ற கேள்வியுடன் முதல் கவி தொடர்கின்றது.

"விருந்துண்டு விடைபெற்று விரைந்தோடிய ஆண்டுகளே வரலாற்றில் நீர் என்ன செய்தீர்?"

என்று கவிவரிகள் தொடருகின்றன.

"வெள்ளை நிழலும் வேண்டாம் வெளிச்ச நிலவும் வேண்டாம்.

சூரிய நிலவும் வேண்டாம் . சூடாத வெயிலும் வேண்டாம்.

பூவாய் மழை பெய்யவும் வேண்டாம். நிலவில் நிலமொன்றும் வேண்டாம்.

புன்னகை தேசம் வேண்டும் புதுமை தேசியம் எமக்கிங்கு வேண்டும்."

நிலவில் ஒரு வீடு கட்டி தாருகின்றேன். மழை பூவாய் பொழிய வேண்டும் என்று சின்ன சின்ன ஆசைகளில்

கவிதை எழுதுபவர்களுக்கு ஒரு கடி அங்கை.

அன்புள்ள என்று தொடங்கும் கவி வரிகளில் கண்களை ஒடவிடுகின்றேன். அன்புள்ள என்ற வரிகளை பார்த்தவுடன்

அட இளைஞன் கவிதை தொகுப்பிலும் தன் காதலுக்கு தூது விடுகின்றாரா என்ற எண்ணத்துடன் பக்கங்களை புரட்டுகின்றேன்.

"அன்புள்ள தாயகமே

ஆசை மகன் எழுதும் மடல்

நானிங்கு நலமம்மா

நீயங்கு நலம் தானா"

என கண்ணீருடன் எமது தாய் நிலத்தை நினைத்து உருகிய வரிகள் எமது கண்களையும் நனைக்கின்றன.

"எத்தனை நாள் ஆகியதோ

உன் மடியில் நானுறங்கி."

ஆம் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழ் மக்களின் ஏக்கங்களையும் அந்த வரிகள் வெளிப்படுத்துகின்றன.

"என் வீட்டு தோட்டத்தில் பூத்த கொடி நலம் தானா?"நான் வைத்த மல்லிகையே நலம் தானா? நான் வைத்த பல நிறமுடைய ரோஐாவே நலம் தானா? இலையே தெரியமால் புத்து குலுங்கும் நித்தியாகல்யாணியே நீ நலம் தானா? ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு நிறத்தை காட்டும் குரோட்டான்ஸ்களே நீங்களும் நலம் தானா என்று நம்மையும் கவி எழுத தூண்டும் வரிகள்.

நமது பாரம்பரிய பாட்டுக்களில் ஒன்றான தாலாட்டு பாடல்களை இப்போது நாம் கேட்பது மிகவும் அருமையாக இருக்கின்றது. பிள்ளைகளை தூக்க வைக்கும் போதும் சினிமா பாடல்களை முணுமுணுக்கும் எமது தலைமுறைக்கு விடுதலையின் பங்குதாரர் என்னும் தலைப்பில் எமக்காக உயிர் நீத்த மாவீரார்களின் புகழ் பாடி புதுமையாக "ஆராரோ ஆரோ ஆராரோ" வரிகளில் தந்து இருக்கின்றார்.

"சுட்டெரிக்கும் சூரிய வீரார்

எட்டிப் பகை வென்ற வீரர்"

ஆம் நமக்காக தம்முயிரை தியாகம் செய்த நம் மாவீரார்கள் புகழ் பாடுகின்றது அந்த தலாட்டு கவி வரிகள்.

கடவுள்:

"வீதியில் வாழும் மானிடர்க்கு

இங்கோ வீடுகள் இல்லையாடா

வீதியில் கிடந்த கற்களுக்கு இங்கே

கோயில்கள் ஏதுக்கடா?

நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்

சோறு இல்லையாடா

நாள்தோறும் இந்த வெற்றுச் சிலைக்கு

பூசைகள் ஏதுக்கடா?.

முக்கியமாக புலம் பெயர்ந்து கோயில்கள் அமைப்பதை வியாபாரமாக கொண்எருக்கும் அடியார்கள் உணர வேண்டிய உண்மை வரிகள்.

கவிதை வரிகளுடன் கூடிய அனைத்து காட்சிப் படங்களும் அருமை. ஒவியார் மூனாவின் திறமைக்கு இந்த இளைஞனின் உராய்வு தொகுப்பு சிறந்த சான்று. ஒரு சில கவிதை வரிகளில் சில ஆங்கில சொற்கள் உட்புகுந்தியிருந்தாலும் அதற்கான விளங்கங்கள் அந்த பக்கங்களின் முடிவில் தென்படுகின்றது.

"இவள் யாரோ" என்று காதல் வரிகளில் தொடங்கி இளவயதினள் இவள் யாரோ? என்று கேள்வியையும் கேட்டு விட்டு இவள் என் தோழி என்று சாதரணமாக

சொல்லி தப்பித்து கொள்கின்றார்.

வர்ணிக்க தோன்றுகின்றதே, சிற்பி, பிறந்த நாள் பரிசு, காதல் நோய், வெளிச்ச குப்பை என பல சிறு தலைப்புகளிட்டு அந்த தலைப்புகளுக்கு ஏற்றவாறு கவி

படைத்திருப்பது பாராட்டதக்கது.

"உண்ணா விரத்தின் பசிக்கு தன்னை உணவாக கொடுத்தவன்"

என்று தியாகி தீலிபன் அண்ணாவையும் வர்ணிக்க தவறவில்லை இந்த கவிஞர்.

"அகிம்சை தன்னை கூவி ஏலம் விட்ட

தற்போதை பாரத்தின் அன்றை தீலிபன்."

மகாத்மா காந்தி அவர்களை நமது திலீபன் அண்ணாவோடு ஒப்பிட்டு இருப்பது சிறிது முரண்பாடாக தான் எனக்கு தெரிகின்றது. காந்தியின் நிலை வேறு. தீலிபன் அண்ணாவின் நிலை வேறு. காந்தியின் சாவின் அடக்கு முறையாளன் சம்மதப்படவில்லை. ஓரு ஆயுதம் தாங்கிய போராளி தன்னை அகிம்சைவாதியாக மாற்றுவது கடினம் என எங்கோ வாசித்த ஞாபகம். ஆனால் தீலிபன் அண்ணா அதை சாதித்து காட்டினார். இதில் ஆசிரியாரின் கூற முனைந்தது என்ன என்பதை அறிய ஆவல்.

"மரித்து விட்ட மனிதம்

மறந்து விட்ட மனித மனம்"

என்று இந்த கலியுக காலத்து மனித மனங்களை பற்றி கவி வடித்து அனைவரையையும் சிந்திக்க வைத்து இருக்கின்றார்.

ஒளி வழி விழி என்ற தலைப்பின் கீழ்

"நிழலின் நிசத்தை நீ உணர மறுக்கிறாய் என்னென்றால் கடலின் கண்ணாடியில் உன் முகத்தை பார்க்கின்றாய்."

சில விடயங்கள் நடக்காது என்று நன்கு தெரிந்திருந்தும் ஏனோ சிறு குருட்டு நம்பிக்கையை உருவாக்கி வாழ பழகிக் கொண்டு விட்டோம்.

"நன்மதியில் உன் விதியை உணர மறுக்கிறாய்" அழகான கருத்து நிறைந்த வரிகள்.

அடுத்த தலைப்புகளான கூடல், ஊடல், காதல் அனைத்து தலைப்புகளிலும் வரைந்த கவிகள் அற்புதம்.

புலம்(பல்) இலக்கியம்

"கூட்டிலே பூட்டிய குரங்குளாக

வெளிநாட்டிலே மாட்டிய நம்மினம் ஐயனே"

அருமையான கற்பனை வளத்துடன் கூடிய வரிகள். புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் எம்மை குரங்குகளாக வர்ணித்து இருப்பது வருத்தத்தை தந்தாலும் அந்த வரிகள் மறுக்கப்படதா உண்மை வரிகள். கறுப்பினத்தவர்களை பார்த்து உடுப்பு, வெள்ளையார்களை பார்த்து நடை, சீனார்களை பார்த்து சாப்பாடு என்று எல்லா இனத்தையும் பார்த்து மாறி மாறி தாவிக் கொண்டிருக்கும் நம்மை குரங்குக்கு ஒப்பிட்டதே மேல் என்று படுகின்றது.

புகைக்காதீர், மரபணு, கணணி, ஒசோன் தலைப்பில் கீழ் வந்த கவிகள் வியப்பில் ஆழ்த்துகின்றது.

இணையம் பகுதியில்

"வலைக்குள் ஒர் உலகம்

வலைப்பின்னலினால் பின்னப்பட் நாடுகள்"

இந்த கவிதையை வாசிக்கும்போது யாழ் இணையத்தை பற்றி தனது சொந்த அனுபவத்தில் எழுதியிருக்கின்றார் என்று தான் தோன்றுகின்றது.

"முகமூடிகள் கூட அங்கு முகமூடி அணிகின்றன. அதையும் அடிக்கடி மாற்றல்"

பாடசாலையில் படிக்கும்போது மனிதனின் அடிப்படை தேவைகள் மூன்று என்றே படித்திருந்தோம். இங்கே கவிஞர் நான்கவதாக கணணியையும் சேர்த்திருப்பது நிஐமானதாக இருக்கின்றது. "உடை, உணவு, உறையுள் நான்காவது அத்தியாவசியம் கணணி" என்கின்றார் இந்த இளைஞன். .

பெண்ணியப் பேச்சுப் பகுதியில் இருந்து "அடக்கம் என்றார் அதில் அர்த்தம் அடங்கி கிடக்கும் என்றார். அவளை முடங்கச் செய்தார்." பெண் விடுதலை பற்றி பேசிப் பேசியே பெண்களை முடங்க வைக்கும் மூடவர்களை பார்த்து கோபத்துடன் தனது கேள்விக் கணைகளை வீசுகின்றார்.

நான் மட்டும் பகுதியில் இருந்து

"வெளிச்சம் தேடி இருட்டுக்குள் பயணிக்கின்றேன்." யாருமில்லமால் வாழ்கின்றேன். எதிரே எனக்கு ஆறுதல் சொல்லி அரவணைக்கவும் இல்லை. அதே நேரம் எனக்கு எதிரியாகவும் ஒருவரும் இல்லை என்று தனது தனிமையை நினைத்து புலம்புவார்களுக்காக அந்த வரிகளை படைத்திருக்கின்றார் இந்த கவிஞர்.

வாழ்க்கை

"பிறப்புக்கும்

இறப்புக்கும்

தோன்றிய முரண்பாடு"

உண்மை"

உண்மை உணர்வுகளை உன்னுள் உணராதவன்

உண்மை உணர்வுகளை உன்னுள் துளிர்க்காதவன்

உணரும் உர்வுகளை உன்னுள் நினைக்கதவன்

உன்னையே உணரா நீ உண்மையா அறிவாயா?

இன்னும் இங்கு குறிப்பிடதா தலைப்புக்களில் ஏராளமான கவித்துளிகள். வாசிக்க இன்பம் தரும் அதே சமயம் சிந்திக்கவும் வைக்கின்றது. உண்மையான வாழ்க்கை நடைமுறையினை தனது எழுத்துக்களால் நம்முன் கொண்டு வந்து இருக்கின்றார் இந்த இளைஞன்.

தொகுப்பில் பல அறிவியல் துறை சார்ந்த கவிதைகள் காணப்படுவது சிறந்த முயற்சி.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளைய தலைமுறைக்கு நல்லா எடுத்துக்காட்டாக இளைஞன் திகழ்கின்றார். உராய்வு தொகுப்பில் தனது பணியைத் தொடங்கிய இளைஞன் இன்னும் பல தொகுப்புக்களை வெளிவிட கடவுள் கிருபை புரியவேண்டும் என்று வேண்டுகின்றேன்.

வாவ்.....பிரமாதம்.....அற்புதமான விமர்சனம்.... இன்னொமொரு படைப்பாளியை அடையாளம் கண்டு கொள்கிறது யாழ் களம்....

எனது பார்வையில் உராய்வு

யாழ் களத்தில் எல்லோரினது விமர்சனத்தை பார்த்த பின்பு எனக்கும் அந்தப்புத்தகத்தை எப்படியாவது வாசிக்க வேண்டும் என்று ஆவல் என்னுள் கொளுந்துவிட்டு எரிந்தது. எனது நீண்ட நாள் ஆவல் இன்றே பூர்த்தியடந்தது. வெண்ணிலா ரமா போல எனக்கு ஆற அமர இருந்து வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கவிதைப்புத்தகம் கையில் கிடைத்தவுடன் அதை வாசித்து முடிக்க வேண்டும் என்ற ஒரு வேகமே என்னுள் ஏற்பட்டது.

தொடர்ந்து வாசிக்க...

http://rasikai.blogspot.com/2006/05/blog-post_27.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

"அகிம்சை தன்னை கூவி ஏலம் விட்ட

தற்போதை பாரத்தின் அன்றை தீலிபன்."

மகாத்மா காந்தி அவர்களை நமது திலீபன் அண்ணாவோடு ஒப்பிட்டு இருப்பது சிறிது முரண்பாடாக தான் எனக்கு தெரிகின்றது. காந்தியின் நிலை வேறு. தீலிபன் அண்ணாவின் நிலை வேறு. காந்தியின் சாவின் அடக்கு முறையாளன் சம்மதப்படவில்லை. ஓரு ஆயுதம் தாங்கிய போராளி தன்னை அகிம்சைவாதியாக மாற்றுவது கடினம் என எங்கோ வாசித்த ஞாபகம். ஆனால் தீலிபன் அண்ணா அதை சாதித்து காட்டினார். இதில் ஆசிரியாரின் கூற முனைந்தது என்ன என்பதை அறிய ஆவல்.

போராட்ட வழிமுறை மட்டுமே ஒப்பீட்டுக்கு அடித்தளமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதாவது அகிம்சை வழிப் போராட்டம். கவிதையில் கூறப்படும் ஒப்பீடுகள் சரியாக அனைத்தும் பொருந்த வேண்டும் என்பதல்ல. உதாரணமாக பிரபாகரனை "முருகனுக்கு நிகரானவன்" என்று பாடல் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றது எனது இந்தக் கவிதையில் ஒரு மறைமுகமான விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்படையாகப் பார்த்தால் காந்தியைப் பற்றிய கவிதை. ஆழநோக்கினால் இக்கவிதையின் நோக்கம் வேறு...

நன்றி ரமா. கவிதைகள் அனைத்தையும் வாசித்து உங்கள் கருத்துக்கைள பொறுமையாக எழுதியமைக்கு.

நன்றி ரசிகை. எனது எழுத்துக்களை இரசித்தமைக்கு. இரசித்ததோடு நில்லாமல் உங்கள் வெளிப்படையான கருத்துக்களை எழுத்துவடிவில் தெரிவித்தமைக்கு எனது நன்றி.

2 வருசம் முன்பு - இதே தலைப்பில் நடந்த புடுங்கலை பார்த்து -(வேட்டி ஏன் கட்டல - பொட்டு ஏன் வைக்கல )

வாசிக்காமலே - தவிர்த்தன் -!

இப்போதானே கவனிச்சன் -முந்தி போல இல்ல -எவ்ளோ விசயம் !

நானும் - இங்க வாறன் - யாரும் வேணாம் - என்று சொன்னாலும்! :roll: 8)

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ 2 வருஷத்துக்கு முதலே நீங்கள் யாழ் வாசகராஃ?

  • கருத்துக்கள உறவுகள்

ரமாக்கா...ரசிகை பெரியம்மா......விமர்சனங்கள் அருமையாக இருக்கின்றன...நீங்கள் எல்லாம் இப்பிடி எழுதுவிங்களானு நினைக்க தோணுது...

  • கருத்துக்கள உறவுகள்

அவங்க எழுதவில்லை சுண்டல் தம்பி அவங்க Type பண்ணிதான் இருக்கிறாங்க.........

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொண்ணா கரக்கடா தான் இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பற்றி சரியா புரிந்து வைத்திருக்காய் பிள்ள u have a very bright future sundhal......

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலா இருந்து..கடலையா புரமோஷன் வாங்க போறனா?

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலாக இருந்து கரம் (கார சுண்டல்) சுண்டலாக புரமோஷன் நான் தாறன்...............

ரமாக்கா...ரசிகை பெரியம்மா......விமர்சனங்கள் அருமையாக இருக்கின்றன...நீங்கள் எல்லாம் இப்பிடி எழுதுவிங்களானு நினைக்க தோணுது...

பெரியம்மாவா? :roll: எப்பேல இருந்து? :shock: சொல்லவே இல்லை. :lol:

மேற்கோள்:

அப்போ 2 வருஷத்துக்கு முதலே நீங்கள் யாழ் வாசகராஃ?

ஆமா சுண்டல் - இணைந்ததுதான் - பிந்தி! 8)

  • 6 months later...

http://manaosai.blogspot.com/2006/12/blog-post_21.html

வலைபதிவர் சந்திரவதனாவின்... உராய்வு பற்றிய விமர்சனம்... மேலை உள்ள இணைப்பில்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மதராசி சார் இணைப்புக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.