Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இணையத்தளங்கள் மீதான தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவின் தமிழ் இனப்படுகொலைகளைச் சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு முன் கொண்டு வரும் தமிழ் இணையத்தளங்கள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது உர்ஜிதமாகியுள்ளது. தமிழ்மக்கள் மீதான அரச படைகளின் தாக்குதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்காமலும், யுத்த பிரதேசங்களுக்கு அப்பால் இருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியும், தமக்குச் சார்பான செய்திகளை மட்டுமே வெளிவரும் வகையில் ஏற்படுத்திக் கொண்டு, இனப்படுகொலைகளை மேற்கொண்ட சிறிலங்கா அரசின் செயற்பாடுகளுக்கு பெரிதும் இடையூறாக இருந்தவை இந்தத் தமிழ இணையத்தளங்கள்.

யுத்த பிரதேசத்தின் காட்சிளை நிழற்படங்களாகவும், கானொளிகளாகவும், உடனுக்குடன் இணையத்தில் வெளியிட்டுவந்த இணையத்தளங்களை முடக்குவதற்கு பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருவது உர்ஜிதமாகியுள்ளது.

கடந்த 13ந்திகதி 4tramilmedia.com இணையத் தளத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கு எத்தனித்த தருணத்தில், அது கண்டுபிடிக்கப்பட்டு, தொழில் நுட்பவியலாளர்கள் சுமார் 12 மணிநேரப் போராடி, அனைத்துத் தரவுகளையும் இழப்பின்றி மீட்டெடுத்திருந்ததை அறியத் தந்திரந்தோம். தற்போது 'சங்கதி' இணையத்தளம் மீது அத்தகைய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன என்ன பாதுகாப்புக்களை செய்யலாம் தெரிந்தால் கூறவும் நண்பரே

அருமையாக சட்டனடவடிக்கைகள் மேற்கொள்ளலாமே(பதிவுகள் வடிவாக செய்த இணையங்கள் என்றால்)

எமக்கு இதுவும் கூட இந்த தமிழினஅழிப்பை உறிதிப்படுத்த நல்லவாய்பாக உள்ளதே... :rolleyes:

Edited by Netfriend

30/04/2009, 16:01 [ஆசிரியர்]

தமிழ் தேசிய ஊடகங்களை குறிவைத்து அழிக்கும் கூட்டுச்சதி

தமிழ்த் தேசிய ஊடகங்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் கூட்டுச் சதி நடவடிக்கையில் தற்போது சங்கதி, தமிழ்க்கதிர் இணையத்தள ஊடகங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பு நடவடிக்கையை பல்வேறு ஆதாரங்களுடன் உடனுக்குடன் வெளியிட்டுவந்த இந்த ஊடகங்கள் சிறீலங்கா - இந்தியாவின் கூட்டுச் சதியில் சிதைக்கப்பட்டுள்ளதை நாங்கள் வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.

முன்னர் பதிவு இணையத்தளமும் இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் சிக்குண்டு மீண்டதையும் இந்தவேளையில் நாங்கள் உங்களுக்கு மீள ஞாபகப்படுத்த விளைகின்றோம். தமிழர் தாயகத்தின் இனப்படுகொலையை மறைப்பதற்கு இந்த சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடித்து, மக்கள் அவலத்தையும், இனப்படுகொலைகளின் ஆதாரங்களையும் மீண்டும் சங்கதி, தமிழ்க்கதிர் ஊடகங்கள் விரைவில் வாசகர்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.

அத்துடன், எமது இணையத்தள தரவுகளின் அடிப்படையில் உலகில் சங்கதியும், தமிழ்க்கதிரும் பார்வையிடுவோர் எண்ணிக்கையில் இலங்கை முதலிடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

- சங்கதி, தமிழ்க்கதிர்

http://www.pathivu.com/news/1595/54//d,view.aspx

Edited by Netfriend

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப்பிரச்சினையாலதான் CNN ஐ அமெரிக்கா காரனுக்கு வித்திட்டன்..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையாக சட்டனடவடிக்கைகள் மேற்கொள்ளலாமே(பதிவுகள் வடிவாக செய்த இணையங்கள் என்றால்)

எமக்கு இதுவும் கூட இந்த தமிழினஅழிப்பை உறிதிப்படுத்த நல்லவாய்பாக உள்ளதே..

இணையச் சட்டங்களில் உள்ள ஒருங்கற்றதன்மையும், இத்தகைய செயல்களைச் செய்பவர்களைச் சரியாக இனங்காண முடியாதிருப்பதும், பதிவுகள் முறையாகச் செய்யப்பட்ட இணையத்தளங்களால் கூட இத்தகைய குற்றங்கள் மீது சட்டநடவடிக்கைகள் எடுக்க முடியாதவாறு செய்து விடுகின்றன.

என்ன என்ன பாதுகாப்புக்களை செய்யலாம் தெரிந்தால் கூறவும் நண்பரே

தேவைக்குத் தகுந்தவாறு இது வேறுபடும். ஒரு நோக்கில் செயற்படும் இணையத்தளங்கள் தமக்கிடையில் ஒரு தொடர்பினை வைத்திருப்பது இத்தகைய சந்தர்பங்களில் பரஸ்பர ஆலோசனைகளை, உதவிகளை வழங்க ஏதுவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

you are correct.

many data are missing in tamilnet.

unborn kid

damaged matha' statue

damaged dehiwella church

How can inform to tamilnet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தளங்களுக்கு அதிகளவு வேண்டுகோள்களை அனுப்பி அவற்றை கையாள முடியாததாலேயே தளங்கள் செயல் இழக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. Dos Attack எனப்படும் முறையில் இது செயல் படுத்தப்படும். அதாவது குறிப்பிட்ட சில மென்பொருட்கள் மூலம் ஓர் வேண்டுகோளை 20,000 வேண்டுகோளாகவோ அல்லது அதற்க்கு மெற்பட்டதாகவோ ஓர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தளத்திற்க்கு அனுப்பும் போது போதிய தாங்குசக்தி இல்லாமையால் செயலிழந்து போகின்றது. இதனால் தளத்தின் தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படமாட்டாது. தளம் தற்காலிகமாக செயல் இழக்கும்.

சங்கதி தளத்திற்கு மேற்கண்டவாறு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றார்கள். 4tamilmedia விற்கும் முதற் தடவை அப்படி வைத்திருந்தார்கள். அது கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்பட, தளத்தின் பகுதிகளைச் செயலிழக்கச் செய்ய முனைந்தார்கள். ஆக இந்த ஒப்பீட்டில் பார்க்கும் போது, இது குறிபிடப்பட்ட ஒரு தரப்பிலிருந்து செய்யப்படுவதாவே கருதமுடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேறு ஒரு இடத்தில் , இருந்து எழுதுகின்றேன் குறிப்பிட்ட தற்ஸ் போன்றவற்றில் பயங்கர வைரஸ் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசிய ஊடகங்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் கூட்டுச் சதி நடவடிக்கையில் தற்போது சங்கதி, தமிழ்க்கதிர் இணையத்தள ஊடகங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பு நடவடிக்கையை பல்வேறு ஆதாரங்களுடன் உடனுக்குடன் வெளியிட்டுவந்த இந்த ஊடகங்கள் சிறீலங்கா - இந்தியாவின் கூட்டுச் சதியில் சிதைக்கப்பட்டுள்ளதை நாங்கள் வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.

முன்னர் பதிவு இணையத்தளமும் இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் சிக்குண்டு மீண்டதையும் இந்தவேளையில் நாங்கள் உங்களுக்கு மீள ஞாபகப்படுத்த விளைகின்றோம். தமிழர் தாயகத்தின் இனப்படுகொலையை மறைப்பதற்கு இந்த சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடித்து, மக்கள் அவலத்தையும், இனப்படுகொலைகளின் ஆதாரங்களையும் மீண்டும் சங்கதி, தமிழ்க்கதிர் ஊடகங்கள் விரைவில் வாசகர்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.

அத்துடன், எமது இணையத்தள தரவுகளின் அடிப்படையில் உலகில் சங்கதியும், தமிழ்க்கதிரும் பார்வையிடுவோர் எண்ணிக்கையில் இலங்கை முதலிடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

- சங்கதி, தமிழ்க்கதிர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது இணையத்தளமும் இத் தாக்குதலுக்கு உள்ளானது.

சிறிலங்கா விமாணப்படையின் அட்டூழியங்களை காட்டும் காணெளியை நாங்கள் வெளியிட்டிருந்தோம். அது உலகத்தில் உள்ள பிரபல்யமான ஊடகங்கள் எல்லாவற்றிலும் வந்தது. அதை வைத்து அல்யசிரா இலங்கை அரசை கேள்வி கூட கேட்டது.

சிறிது நாட்களுக்கு முன் வக்தா இணையதளம் பார்க்க முயன்றேன் முடியாமல் இருந்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பொழுது எல்லாம் சரி செய்து விட்டோம். இது எங்கள் தளத்திற்கு 5 தடவை. அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் மீழ் வருவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது எல்லாம் சரி செய்து விட்டோம். இது எங்கள் தளத்திற்கு 5 தடவை. அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் மீழ் வருவோம்.

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இனைத்தளமும் முன்எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது நிர்வாகம் கருத்தில் எடுக்கவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் இணையத்தளங்கள் கவனமாக இருப்பது நல்லது. இன்று காலையிலும் இத் தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டிருப்பதாகச

---

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

ஈழச்செய்திகளை வெளியிடும் தமிழ் இணையதளங்களை சிதைக்க இந்தியா-இலங்கை சதி

Published in : செய்திகள், இந்தியா

பெங்களூர்: கிளிநொச்சி சிறைச்சாலை செய்தி கசிவு தமிழ் இணையதளங்கள் அனைத்தும் சிதைக்க இந்திய ஐ டி துறையுடன் சேர்ந்து சிங்கள அரசு சதிஆலோசனை. கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிளிநொச்சியில் இருக்கும் சிறைச்சாலைகள் பற்றி தமிழ் இணையதளங்கள் போட்டோவுடன் ஆதாரங்கள் வெளியிட்டன. குவாண்டமா சிறைச்சாலைகளை விட கொடுமையான ஒரு குற்றமும் செய்யாத தமிழ் இளைஞர்கள், இளைஞிகளை நிர்வாணமாக்கி கைகால்களை பிணைந்து சிறிய அறைக்குள் பூட்டி வைத்திருக்கின்றனர்.

இதில் பலர் மனநோயாளாக மாறிவிடும் அபாயம் உள்ளது. சிங்கள அரசின் இந்த கொடூர நடவடிக்கை சில சிங்கள ராணுவ சமையற்காரர்களால் வெளிவந்தது. இந்த செய்திகளை உலகம் எங்கும் உள்ள தமிழ் இணையதளங்கள் வெளியிட்டன. உலக நாடுகள் இலங்கைக்கு போர் நிறுத்த நடவடிக்கை அழுத்தம் கொடுத்துவரும் போது இது போன்ற செய்திகள் மேலும் கெட்ட பெயரை உண்டாக்கிவிடும் என்ற நோக்கத்தில் இந்த செய்திகள் வெளியிடும் இணையதளங்களை இந்திய ஐ.டி நிபுணர்களின் உதவியால் முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக சங்கதி தமிழ்கதிர் போன்ற இணையதளங்கள் , சிதைக்கபட்டு விட்டது.

மேலும் உலகத்தின் பார்வையில் இது தெரியாமல் இருக்க பிரபலமில்லாத சில சிங்கள இணையதளங்களை முடக்கிவிட்டு புலிஆதரவாளர்களின் மீது பழியை போடும் பணியும் நடந்து வருகிறது. வரும் நாட்களில் தமிழ் ஈழ செய்திகள் வெளியிடும் அனைத்து இணையதளங்களையும் சிதைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் கிளிநொச்சி சிறைச்சாலை செய்திகளை வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மறைமுகமான முறையில் தமிழ் நடுநிலை செய்தி பத்திரிகைகளுக்கு தமிழக அரசும், இந்திய அரசாங்கமும் எச்சரிக்கை விட்டுள்ளதாக தெரியவருகிறது.

http://www.adhikaalai.com/index.php?option...6&Itemid=52

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் முனைகளில் புலிகள் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பாவித்தார்கள் எனப் பரப்புரை செய்து விட்டு, சிறிலங்கா இராணுவம் தமிழ்மக்கள் மேல் அத்தகைய ஆயதங்களைப் பாவிக்கும் அதே உத்தியை அரசு இணையத்தளங்கள் மீதான தாக்குதலுக்கும் பாவிக்கின்றது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. இது குறித்த செய்திகள் உடனடியாக வெளிக்கொணர வேண்டியது அவசியமாகிறது.

முக்கிய இணயங்களில் வரும் ஒலி. ஒளி. போட்டோகளையும் நாமும் தரவு இறக்கி வைத்து அங்காங்கே தேவைப்படும் போது சிறு மாற்றங்கள் செய்து

நாமும் தரவேற்றம் செய்யலாம் அப்படி செய்த போது You Tubeல் முதல் பார்பவர்களும் அதற்கு பின்னுட்டல் கூடாமல் கொடுப்பதும் சிங்களவர்களே....

எம்மவர் பார்திற்று போயிடுறார்கள் மற்றும் எனது கணணியிலும் சில பிரச்சனைகளை காணமுடிந்தது :unsure: :unsure:

இத்தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனும் சந்தேக ஐ.பி க்கள் சீனா அல்லது லித்துவேனியா பகுதியைக் காட்டுகின்றன. எமது தளம் ரஷ்யாவிளுருந்தும் சீனாவிலிருந்தும் தாக்கப்பட்டது. நாம் அதை கண்டுபிடித்து செயலிழக்க செய்து விட்டோம். இப்பொழுது முழுமையா இயங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப்பிரச்சினையாலதான் CNN ஐ அமெரிக்கா காரனுக்கு வித்திட்டன்..! :unsure:

தகவலுக்கு நன்றி டங்கு. :unsure:

பிரித்தானிய அல்லது பிரெஞ்சு வெளிநாட்டு அமைச்சர்(ஞாபகம் இல்லை) தமிழ்நெற் இணையதளத்தில் இருத்து பெற்ற தகவல்களை இலங்கை அரசுடன் பேசும் போது தெரிவித்தது மேலும் மேலும் ஊடக தாக்குதல்கள் நடைபெற சாத்திய கூறுகள் நிறையவே உண்டு என்பதை தான் சொல்லி நிற்கிறது.

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழ் இணையத்தளங்கள் கவனமாக இருப்பது நல்லது. இன்று காலையிலும் இத் தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டிருப்பதாகச
  • கருத்துக்கள உறவுகள்

சில தமிழ் இணையத்தளங்களிலும் ஊடுருவல் நடந்திருப்பதுபோல் தெரிகிறது. இன்று தமிழ் தேசிய தொலைக்காட்சியின் (www.tamilntt.com) தளத்துக்குச் சென்றபோது, வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. :(

alertt.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில தமிழ் இணையத்தளங்களிலும் ஊடுருவல் நடந்திருப்பதுபோல் தெரிகிறது. இன்று தமிழ் தேசிய தொலைக்காட்சியின் (www.tamilntt.com) தளத்துக்குச் சென்றபோது, வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. :(

alertt.jpg

தகவலுக்கு நன்றி இத்தளம் விரைவில் சரி செய்யப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.