Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தின் எதிரி ஜெ - ஆதாரங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதா காங்கிரஸோடு கூட்டுசேரும் வாய்ப்பு நிறையவே இருக்கின்றது. ஆனால் அதே நேரத்தில் மூன்றாவது அணியிலோ அல்லது பாரதீய ஜனதாவிலோ இணையும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆனால் திமுகவை பொறுத்தவரையில் அது காங்கிரஸோடுதான். வேறு பேச்சுக்கே இடமில்லை. ஆகவே எமக்குள்ள ஒரே தெரிவு ஜெயலலிதாதான்.

எனவே வினவு அவர்களே, இரத்தினச்சுருக்கமாக சொன்னால், நட்டம் நிச்சயம் என்ற வியாபாரத்தில் முதலிடுவதிலும் பார்க்க சில வேளைகளில் இலாபம் கிடைக்கும் என்ற வியாபாரத்தில் முதலிடுவது சாலச்சிறந்தது.

மேலும் முக்கிய விடயம். ஜெயலலிதா வெறும் தேர்தல் ஆதாயத்துக்காகத்தான் தமிழீழம் என்று சொன்னார் என்று வைத்துக் கொண்டாலும், எம்மைப் பொறுத்தவரையில் அது ஒரு மிகப் பெரிய அங்கீகாரம். கருணாநிதி வாழ்நாளில் இவ்வாறு உறுதிபடக் கூறவில்லை.

ஒரு பேச்சுக்கு...ஜெயலலிதா ஜெயித்து காங்கிரஸோடே கூட்டணி வைக்கின்றார் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அவரை ஜெயிக்க வைத்த விடயம் என்பது தமிழக மக்களால் ஈழத் தமிழர் போராட்த்திற்கும் தமிழீழத்திற்கும் வழங்கப்பட்ட அங்கீகாரமாகக் கருதமுடியும். இந்திய மத்திய அரசுக்கும் தமிழகத்தின் குரலைச் சொனது போலிருக்கும். தோற்றால் ஈழத்தமிழர் ஆதரவு எல்லாம் பொய் என்று ஆகிவிடும்.

  • Replies 65
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவாதங்களை விவாதத்தால் வெல்லாமல் கட்சி சார் சாயம் பூசி வெல்லும் உபாயங்களைத் தேடாதீர்கள்!

வினவின் தனிப்பட்ட பார்வை, அதை அவர் முன்வைத்திருக்கின்றார் அவ்வளவே!

தமிழ்நாட்டு அரசியல் வாதிகளில் அனைவரும் ஒரே வகையே, இருந்தாலும் சிறப்பாக ஆராய வேண்டியது கலைஞ்ஞர், ஜெயா,.

இருவருக்குமே கொள்கை என்பது பதவி ஒன்றையே இலக்காகக் கொண்டது.

அந்தவகையில் புலி எதிர்ப்பு வெற்றிக்கு அநுகூலமாக இருந்தது ஜெயாவின் அரசியல் சூழ்நிலைக்கு,

ஆப்படியேதான் கலைஞ்ஞருக்கும் தெளிவில்ல புலிஆதரவு ஒரு அநுகூலமாக இருந்தது அவர் அரசியல் சூழ்நிலைக்கு,

தற்போது ஈழத்தவர்களுக்கு காலை வாரிய நிலை எப்படி அவர்கட்சி அரசியல் ஆதாய்த்துக்கு உபயோகமாகின்றதோ,

அப்படியே ஜெயாவிற்கும் ஈழத்தவர்மீதான ஆதரவுப் போக்கு அவர் அரசியலுக்கு அநுகூலமாகின்றது.

இருவருமே மக்கள் நலனில் உண்மையான அக்கறை இல்லாதவர்கள் என தொளிவாகின்ற போதும, ஒருவர் இன்னொருவரை விட பறவாயில்லை என்று சொல்லும் நிலை அவசியம் இல்லாதது.

எமக்கு சார்பாக இயங்கவைக்கின்ற சூழ்நிலை ஜெயாவை சூழ்திருக்கின்ற போது கொள்கைரீதியாக ஜெயாவிடம் வரவேண்டிய மாற்றம் இயல்பானதாகவே கொள்ள வேண்டி இருக்கின்றது. இதுதான் கலப்படம் இல்லா அரசியலின் பண்பு.

  • தொடங்கியவர்

நேற்று இடப்பட்ட ‘ஈழத்தின் எதிரி ஜெ - ஆதாரங்கள்!‘ கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களுக்கான பதில் இந்த இடுகை. ,புதிய வாசகர்கள் அந்தக் கட்டுரையையும் பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்

// காரணம் எங்களிடம் வேறு தெரிவு இல்லை //

// கருணாநிதியை நண்பன் என நம்பினோம். அவர் ஏமாற்றி விட்டார் //

// குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் எம்மவருக்கு சரித்திரங்கள் தேவையில்லை. யார் குத்தினாலும் அரிசியானால் போதும்.//

// எமக்கு இந்திய உள் அரசியல் தேவையில்லாத விடயம்.//

ஜெயல்லிதாவின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றிய விவரத் தொகுப்பு ஒரு நினைவூட்டல். அவ்வளவே. மற்றப்படி சிடி பார்த்து ஜெயல்லிதா அடைந்த்தாக கூறிக்கொள்ளும் மனமாற்றம் என்பது விளக்கம் ஏதும் தேவைப்படாத ஒரு மோசடி. அதை விளக்கும் நோக்கிலும் இந்தப் பதிவு இடப்படவில்லை என்பதை ஆர்.வி புரிந்து கொள்வார் எனக்கருதுகிறோம்.

“எம்மிடம் வேறு தெரிவு இல்லை. சரித்திரங்கள் தேவையல்லை. இந்திய உள் அரசியல் தேவையில்லை” என்ற கருத்துகள் எவ்வளவுதான் வேதனையிலும் விரக்தியிலும் எழுதப்பட்டிருந்தாலும் அவை மிகவும் தவறானவை.

காங்-பாஜக, திமுக-அதிமுக, ஐக்கிய தேசியக் கட்சி-சிறீலங்கா சுதந்திரக் கட்சி, குடியரசுக்கட்சி-ஜனநாயக கட்சி.. - இவற்றை விட்டால் வேறு தெரிவு இல்லை என்ற நிலையையும் கருத்தையும் ஆளும் வர்க்கங்கள் தோற்றுவித்து இருக்கின்றன. இந்த சட்டகத்தை உடைக்காமல் நாம் ஒரு அங்குலம் கூட முன்னேறமாட்டோம். அவ்வளவு ஏன், ஈழத் தமிழ் மக்கள் “வேறு தெரிவு இல்லை” என்ற வலைக்குள் சிக்கியிருந்தால் ஈழ விடுதலைப் போராட்டம் என்பதே துவங்கியிருக்குமா?

1983 க்கு முந்தைய இலங்கைச் சரித்திரம்தான் தேர்தல் பாதையைக் கைவிட்டு ஆயுதப்போராட்டத்தை தெரிவு செய்ய வைத்தது. எத்தகைய துயரமான சூழலில் இருந்த போதும் “சரித்திரம் தேவையில்லை” என்று கூறிவிட இயலுமா? 1983 முதல் இன்று வரை இந்திய அரசை நண்பனாக கருதி ஈழப்போராட்டம் இழைத்த தவறுகளைக் கொஞ்சம் கூட பரிசீலிக்காமல் அதே பாதையில், இன்னும் ஆழமான படுகுழியில் கால்வைப்பது எந்த வகையில் அறிவுடைமை? உணர்ச்சிகள் மேலோங்கியிருந்தால் அறிவு விடைபெற்றுக் கொள்ளவேண்டும் என்பது விதியா என்ன? ஒரு வேளை, ஜெயலலிதா பிரதமராகி, அவர் கூறுவது போல ராணுவத்தை அனுப்பி, ஜெயா-ராஜபக்சா ஒப்பந்தம் ஒன்று போட்டு அமைதியை நிலைநாட்டினால், இன்னொரு அமைதிப்படை ஈழத்தில் இறங்காதா?

இந்தியாவின் உள் அரசியல் தேவையில்லை என்ற ஒற்றை வரியில், குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள், ஒரிசாவின் கிறித்தவர்கள், இந்து வெறியர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் தலித் மக்கள்.. போன்றோரின் துயரத்தை ஒதுக்கித் தள்ளிவிட முடியுமா என்ன? அல்லது பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் ஒருவேளை ஈழத்தமிழர்க்கு ஆசுவாசம் கிடைக்கலாம் என்பதற்காக, இந்திய மக்கள் உத்திரவாதமான பாசிசக் கொடுங்கோன்மைக்கு வாக்களிக்க வேண்டுமா? ஜெயா ஈழம் வாங்கித்தரட்டும். அதற்காக, குஜராத் படுகொலையை நடத்தி முடித்து, தேர்தலில் வெற்றி வாகை சூடிய மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ஜெயலலிதா போய்வந்ததையும், ஜெயாவின் பார்ப்பன பாசிச அடக்குமுறைகளையும் மறந்து விட முடியாதல்லவா?

இன்று துக்ளக் சோ எழுதியுள்ள தலையங்கத்தில் க”கருணாநிதிக்கு ஏன் ஓட்டுப் போடக்கூடாது” என்று விளக்கியிருக்கிறார். “மத்திய அரசில் செல்வாக்கு இருந்த்தால், தமிழகத்தில் புலிப் பிரச்சாரத்தைப் பெரிய அளவில் தாராளமாக நடத்தியது” என்பது கருணாநிதிக்கு எதிராக அவர் கூறும் காரணங்களில் ஒன்று. ஜெயல்லிதாவுக்கு வாக்களிக்குமாறு கோரியிருக்கும் சோ, அவரது “தமிழ் ஈ.ழம் அமைப்போம்” முழக்கத்தை ஒரு விசயமாகவே கண்டுகொள்ளவிலைல. “அது சும்மா தேர்தல் நாடகம்” ஏன்று ஏற்கெனவே கூறிவிட்டார். அதே நேரத்தில், அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பா.ஜ.க ஆட்சியமைக்கப் பயன்படும் என்பதை மட்டும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

ஜெயலலிதாவை எதிர்த்தால் அவர்கள் கருணாநிதியின் ஆட்கள் என்று பார்ப்பதும், கருணாநிதியை எதிர்த்தால் ஜெயாவின் ஆட்கள் என்று பார்ப்பதும் அரசியல் பாமரத்தனம். தெரிந்தே இதனைச் செய்வது கீழ்த்தரமான தந்திரம்.

பெரியார் திகவினர் இந்திய அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடுவது என்பது வேறு; அதிமுக ஆதரவு என்பது வேறு. குஜராத் இனப்படுகொலை நடந்தபோது திமுக பாஜகவின் அமைச்சரவையில் இருந்தது. வைகோ மோடிக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார். அதன் பின் பெரியார் திக எடுத்த தேர்தல் நிலைப்பாட்டுக்கு என்ன அளவுகோல்? பெரியார் திகவினர் ஆத்திரப்படாமல் சிந்திப்பது நல்லது.

காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது என்ற பேச்செல்லாம் நகைக்கத்தக்கவை. ஊழல், அடக்குமுறைகளுக்காக திமுக, காங், அதிமுக முதலான கட்சிகளுக்கு மக்கள் எத்தனை முறை “பாடம்” கற்பித்திருக்கிறார்கள்? இதனால் அவர்கள் அஞ்சிவிடுவார்கள், மாறிவிடுவார்கள் என்று நம்புவது அசட்டுத்தனம்.

அல்லது தமிழகத்தில் அதிமுக அணி வெற்றி பெற்றுவிட்டால் “அது இந்திய அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக தமிழகம் கூறிய தீர்ப்பு” என்று கருதி மகிழ்ந்து கொள்வதும் மிகையானது. ராஜீவ் பிணத்தைக் காட்டித்தான் 1991 இல் ஜெயா வெற்றி பெற்றார். “ராஜீவுக்காக மக்கள் எனக்கு ஓட்டுப் போடவில்லை” என்று அடுத்த சில மாதங்களிலேயே கூறி காங்கிரசின் முகத்தில் கரியைப் பூசினார். இன்று ஜெயாவுக்கு வாக்கு கேட்டு அலையும் தமிழ் உணர்வாளர்கள் ஒருவேளை இதையெல்லாம் மறந்திருக்கக்கூடும்.

வினவு தளத்திலிரந்து : http://www.vinavu.com/2009/05/jayalalitha-...e-hope-despair/

தொடர்புடைய இடுகைகள்

ஈழத்தின் எதிரி ஜெ - ஆதாரங்கள்!

ஜெயலலிதா: ஈழத்தின் வில்லி நாயகியா? கருத்துப்படம் !

ஈழம்: “அம்மாவும்” பக்தர்களும் ! கருத்துப்படம் !!

ஜெயலலிதா,கருணானிதியை நம்பித்தானா இத்தனை காலம் இந்த ஈழப்போராட்டம் நடைபெற்றது?

இல்லை ஒரு காலத்தில் இவர்கள் காலடியில் வீழ்ந்துதான் இதை சாதிக்க வேண்டும் என்று ஏதாவது தலையுழுத்திருக்கா ? ?

வினவு :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினவு நீங்கள் சொல்வது 100% சரியானது. ஆனால் இன்னும் இருப்பதோ சரியாக 6 நாட்கள். தமிழக மக்கள் இன்றுள்ள நிலையில் என்ன செய்யவேண்டும்? யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

வரலாற்றின் பதிவுகள் மாற்றப்பட முடியாதவை. அவை மீண்டும் திரும்பும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஜெயலலிதா அவர்கள் அ தி மு கவை வழிநடத்துகிறார் என்றால்.. அதன் தலைவியாக இருக்கிறார் என்றால்.. கடந்த காலத்தில் அவர் எம் ஜி ஆரின் பாதையிலின்றும் விலகி கட்சியை தவறாக வழிநடத்திய சந்தர்ப்பங்கள் மீள வகை செய்யாது.. எம் ஜி ஆரின் பாதையில் ஈழத்தமிழருக்காகவும் தமிழக மக்களுக்காகவும் பயணிக்க முன் வர வேண்டும்.

ஈழத்தமிழருக்கு தமிழீழமே ஒரே தீர்வு என்றதுடன் மாத்திரம் நிற்காமல் அதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்திரா காந்தி அம்மையாரோடு இணைந்தும் தனிப்படவும் எடுத்தவர் எம் ஜி ஆர். அவர் தமிழீழ விடுதலைப்புலிகளை நேரடியாக ஆதரித்ததுமன்றி அவர்களாலேயே தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்றும் திடமாக நம்பியவர். அதற்காக அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளையும் செய்து கொடுத்தவர்.

இன்றைய நிலையில் ஈழத்தமிழருக்கு எம் ஜி ஆர் வழியில் ஆனால் அவரை விட அதிகமாகச் செய்ய வேண்டி இருக்கிறது. அதனைச் செய்ய ஜெயலலிதா உண்மையில் அதிமுக வை அதன் தோற்றுனர் எம் ஜி ஆர் வழியில் வழிநடத்திச் செல்பவராக இருந்தால் மீண்டும் கடந்த கால தனது தவறுகளை ஈழத்தமிழர்கள் தொடர்பில் இழைக்காமல் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்யவில்லை என்றால் உண்மையில் அவர் எம் ஜி ஆர் உருவாக்கிய அதிமுக வை வழிநடத்துபவராகவோ.. அதன் தலைவராகவோ தமிழக மக்களின் பிரதிநிதியாகவோ இருக்கத் தகுதியற்றவர் என்பதுதான் யதார்த்தம். அதைக் கடந்து அவர் அரசியல் செய்ய விரும்பின் தாராளமாக அவரின் மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளட்டும். அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஈழத்தமிழ் மக்களாகிய எம்மிடம் இல்லை..! ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்களிடமே உள்ளது. :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினவு! எனக்கு அவ்வளவாக அரசியல் அறிவு கிடையாது. என்னுடைய கேள்வி: யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நன்மை இருக்கப் போவதில்லை என்பது உண்மை. ஒருவேளை நாம் தேர்தலை புறக்கணித்து காங்கிரசும், தி. மு. க வும் வெற்றி பெற்று விட்டால், நாம் அவர்கள் செய்கின்ற கொலைகளை அன்கீகரிப்பது போல் ஆகிவிடும் அல்லவா??.

அதிமுக, ஐக்கிய ஜ.தளத்துடன் கூட்டணி-ஷீலா தீட்சித்

அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறி வரும் காங்கிரஸ் தலைவர்கள் வரிசையில் லேட்டஸ்டாக ஷீலா தீட்சித் இணைந்துள்ளார்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்தைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் நிழல் போல கருதப்படும் ஷீலா தீட்சித்தும், தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறியிருப்பது திமுக வட்டாரத்துக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும் செய்தி அல்ல.

அதிமுக தவிர ஐக்கிய ஜனதாதளமும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தரும் என தீட்சித் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று வாக்களி்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீட்சித், நிதீஷ் குமார் (பீகார் முதல்வர், ஐக்கிய ஜனதாதளம்) மிகச் சிறப்பாக செயல்படுகிறார். எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள். அவர் மக்களுக்காக, மக்களின் வளர்ச்சிக்காக செயல்படக் கூடியவர்.

அதிமுகவுடன் கூட்டணி வருமா என்று கேட்டால், காங்கிரஸ் எத்தனை சீட்களைப் பெறுகிறது என்பதைப் பொறுத்தது அது. அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் வைத்துள்ளோம். மதவாத சக்திகளைத் தவிர அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் காங்கிரஸ் வரவேற்கும் என்றார் தீட்சித்.

அதிமுகவுடன் கூட்டணி சாத்தியமா என்று செய்தியாளர்கள் மீண்டும் குறிப்பிட்டுக் கேட்டபோது, ஆமாம் என்றார் தீட்சித்.

காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் அடுத்தடுத்து அதிமுக கூட்டணிக்கு வரும் என்று பேசி வருவதும், அதை ஜெயலலிதா ஆணித்தரமாக மறுக்காமல் இருப்பதும் திமுக வட்டாரத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியிருப்

திமுக வின் மீதான அதிர்ப்திக்களும் காங்கிரசின் கொடுமைகளை மக்கள் உணர்ந்தும் இருந்ததாலும் , அதிமுக ஒரு வலுவான கூட்டணியோடும் இருந்ததாலும் தமிழகத்தில் அதிமுக இலகுவாக வெண்று இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும்.... ஜெயாவுக்கு தமிழீழ கோரிக்கையை கொண்டுதான் தமிழக வாக்குக்கள் வாங்க வேண்டிய தேவை இருக்கிறது என்பது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல...

ஆனால் அதையும் தாண்டி ஜெயா அப்படி ஒரு பிரச்சாரத்தை செய்கிறார் எண்றால் மிக முக்கிய காரணம் இல்லாமல் இருக்க முடியாது...

( குறிப்பு:- ஜெயாவும், கலைஞரும் சுயநலவாதிகள் ஆனால் இந்திய இறையாண்மைக்கு மீறிய தேசவிரோதிகள் கிடையாது)

[இந்திய நலன்களுக்கு அப்பாற்பட்டு ஜெயா இப்படி ஒரு கோரிக்கையை முன் வைக்க இல்லை என்பதை காலம் விடையாக சொல்லும்]

தமிழக மக்களுக்கு நாங்கள் ஈழத்தமிழர் கேட்பது எல்லாம் தயவு செய்து விரும்பியோ விரும்பாமலோ எங்களின் மக்களை காக்க வேண்டிய தருணத்தில் நீங்கள் உள்ளீர்கள்... உங்களின் வாக்குக்களை ஈழம் அமைய வேண்டும் என்பதுக்காக போடுங்கள்... உங்களுக்கு பிடிக்காத ஒருவருக்கு நீங்கள் வாக்களிப்பதாக நினைக்காதீர்கள்... ஈழத்தமிழர்களின் சுய நிர்ணயத்தை நீங்கள் அங்கீகரிப்பதாக நினைத்து போடுங்கள்...

தமிழக மக்களின் முக்கியமாக திமுக உடன் பிறப்புகளிடம் வேண்டுவதும் இதுதான்... உங்களுன் கட்சி தோற்று போனால் நீங்கள் வெறும் 5 வருடங்கள் கஸ்ரப்படக்கூடும்... ஆனால் இந்த முறை ஈழத்தமிழர்களின் தனிநாட்டு கோரிக்கை தோற்று போனால்.. அங்கு உள்ள மக்கள் வாழ்விளந்து போய் விடுவார்கள் என்பதனை மறந்து விடாதீர்கள்...

நீங்கள் ஈழ மக்களின் விடியலுக்கு எதிராக போடும் வாக்குக்கள் வெறும் ஜெயாவுக்கு எதிரானது அல்ல... ஈழத்தமிழரின் உயிர்களுக்கு எதிரானது... கொலைகளை அங்கீகரிப்பதுமானதாகும்....

தயவு செய்து வாக்களிக்க முன்னம் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்...

நண்றி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெ இன் கடந்தகாலம் ஈழத்தவர்களுக்கு விரோதமாக இருந்தது.

கலைஞ்ஞரின் நிகழ்காலம் ஈழத்தவர்களுக்கு பரமவிரோதமாக இருக்கின்றது.

இருவருமே பதவிக்காக என்ன விலையிலும் பாவம் செய்யத் துணிபவர்கள், எனவே கலைஞ்ஞர் ஜேயை விட பறவாயில்லை என்று சொல்ல எத்தனையோ விடயங்கள் இருக்கலாம் ஆனால் ஈழத்தவர்கள் விடயத்தில் மட்டும் கலைஞ்ஞரை விஞ்சிய துரோகத்தை எவராலுமே செய்ய முடியாத அளவினதான ஒன்றை கலைஞ்ஞர் நிகழ்த்தியிருக்கின்றார். மேலும் ஜெயாவின் ஈழத்துவேசத்தைக் காட்டி தனது வாக்குபையை நிறைக்க முயற்சிப்பதானது மோசடித்தனத்தின் உச்சம் என்று கூடச் சொல்லலாம்.

வினவால் ஒவ்வொரு கட்சிகள் மீது சுட்டிக் காட்டப் படும் குறை குற்றங்கள் பொய் என்று சொல்ல வரவில்லை மிகுதியான பாமரரே தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் தமிழ்நாட்டு ஜனனாயகம்தான் குற்றவாளியாக்கப்பட முடியும்.

இன்றைய நிலையில் இந்த அரசியலை எமக்கு உபயோகப்படுத்தத்தான் எம்மால் தற்சமயம் முயற்சிக்க முடியும்.

முதலில் நல்லதையோ, கெட்டதையே பிடித்து நாம் எழுவோம், பின்னால் நல்லவைகளே ஆக்கம் ஆகும் முயற்சிக்கு விதை தூவுவோம் எமைச் சூழ.

Edited by தேவன்

  • தொடங்கியவர்

:unsure: :unsure: :icon_idea::o :o

இன்று மூன்றாம் அணியுடன் கூட்டணி வைத்திருக்கும் ஜெயலலிதா தேர்தல் முடிந்ததும் காங்கிரசுடன் கூட்டணி வைப்பார் என்பதை அனைத்து ஊடகங்களும் மிகச்சாதாரணமாக செய்தி வெளியிடுகின்றன. இது குறித்து யாருக்கும் எந்தவிதமான அதிர்ச்சியும்ஏற்படப் போவதில்லை. அப்படி இருக்கும்போது நீங்கள் விரும்பும் சோனியா எதிர்ப்பு எப்படி சாத்தியமாகும்? மேலும் இந்தியாவின் அனைத்து தேசியக் கட்சிகளும் காங்கிரசு, பா.ஜ.க, கம்யூனிஸ்ட்டுகளை உள்ளடிக்கிய மூன்றாவதுஅணி எல்லோரும் இலங்களை தொடர்பாகவும் ஈழ்த்திற்கு எதிராகவும் ஒரே கொள்கை உடையவர்கள்தான். காங்கிரசுக்கு மாற்று பா.ஜ.க அல்லது மூன்றாவது அணி என்று நம்புவது பேதமை. எனவேதான் தேர்தலைப்புறக்கணிப்பதன் மூலம் நமத எதிர்ப்பை காட்ட வேண்டுமெனக் கோருகிறோம்.

வினவு

  • தொடங்கியவர்

நம்பி இருந்தவர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு சாகடிக்க பார்த்து கொண்டிருப்பவர் கருணாநிதி. ஆனால் யெயலலிதா புலிகள் தங்களை பலம் என்று காட்டிய போது அவர்களது பலம் அறிந்து கடுமையான விமர்சனங்களை வைத்தார் அது எங்களை ஒன்றும் பாதிக்கவில்லை ஆனால் இன்று இந்திய வல்லாதிக்க சதியால் பலவீனம் அடைந்த எங்களை பார்த்து ஆதரவான வார்த்தை களை கூறுவது மனத்திற்கு தெம்பாக இருக்கிறது.

சிறிலங்கன் கருநாவும் சரி தமிழக கருனாவும் சரி இருவரும் ஒரே காரியத்தை தான் செய்கிறார்கள்.

ஜெயலலிதா இதுவரை ஈழத்திற்கு எதிராக வெறும் விமரிசனங்களை வைத்ததாக மட்டும் பார்ப்பது அதிர்ச்சியைத்தருகிறது. கடந்த இருபதாண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை ஆயுள் தண்டனை கைதிகளாக மாற்றி அவர்களது முகாமை திறந்தவெளிச்சாலையாக மாற்றியது ஜெயலலிதா அரசுதான். நூற்றுக்கணக்கான ஈழ மற்றும் தமிழக மக்களை எந்தக் குற்றமும் செய்யாதவர்களை ஆண்டுக் கணக்கில் சிறையில் அடைத்த வாட்டி வதைத்தவர் ஜெ. ராஜபக்க்ஷே ஒரு பாசிஸ்ட் என்றால் ஜெயும் ஒரு பாசிஸ்ட்டுதான். ஈழத்த்தமிழருக்கும் மட்டுமல்ல தமிழகத்த்து தமிழருக்கும் அவர் செய்திருக்கும் அநீதிகள் பல. இதனால் கருணாநிதி யோக்கியமானவர் என்று பொருளல்ல. இருவரும் ஈழத்தை வைத்து தேர்தலுக்காக நாடகமாடுகிறார்கள் என்பதுதான் முக்கியம்.

வினவு

வினவு நீங்கள் ஜெயா பற்றி கூறியது அனைத்தும் உண்மை. மறு பக்கமாக கருணாநிதி பற்றி ஒரு அலசு அலசிவிட்டு ஒரு தராசில் போடுவோம். ஒரு பக்கம் நம்பிக்கை துரோகி. அடுத்த பக்கம் எதிரி. எமது மக்களை நாளும் பொழுதும் இழந்து கொண்டிருக்கும் நாம் துரோகியை விட்டு எதிரியை ஆதரிப்பது தான் ஒரே தெரிவாக இருக்கிறது.

உங்கள் வாதப்படியே கருணாநிதியை துரோகியென்றும், ஜெயலலிதாவை எதிரி என்றும் வைத்துக் கொண்டால, இருவரையும் எதிர்ப்பதுதான் நமது தெரிவாக இருக்க வேண்டும். எதிரியையும், துரோகியையும் நமது சொந்த பலத்தில் எதிர்க்கவேண்டுமேயன்றி, துரோகியை எதிர்க்க எதிரியுடனும், எதிரியை எதிர்க்க துரோகியுடனும் கூட்டுச்சேர்ந்தால் அழிவு நமக்குத்தான் அவர்களுக்கல்ல. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சொல்லாடல் பச்சையான சந்தர்ப்பவாதத்தை குறிக்கிறதேயன்றி அது ராஜதந்திரமல்ல.

  • தொடங்கியவர்

உங்கள் கூற்று முற்றிலும் உண்மை நுணாவிலான் ,

கடந்த இருவருடங்களுக்கு மேலாக நெடுமாறன் , வைக்கோ , சீமான் போன்றவர்கள் பயங்கரவாத ஸ்ரீலங்கா அரச இராணுவத்துக்கு போர்ப்பயிற்சியும் , இராணுவ தளபாடங்களும் கொடுக்கின்றது என்று ஆதாரங்களுடன் கூறியும் , அதனை ஒரு பொருட்டாக எடுக்காமல் இன்று லட்சக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த கருணாநிதியைப்பற்றியும் வினவு ஒரு அலசல் அலசி இருந்தால் நல்லது .

பலமுறை எழுதிவிட்டோம், ஈழத்தில் சிங்கள இனவெறி அரசு நடத்தும் படுகொலைப்போர் ,இந்திய அரசின் அதாவது இந்திய முதலாளிகளின் நலனுக்காக இந்திய ஆளும் வர்க்கங்களின் உதவியுடன் நடைபெறுகிறது என்பதை ஈழ ஆதரவாளர்கள் புரிந்து கொள்வதில்லை. இதை சோனியா, கருணாநிதி போன்ற தனிநபர்கள் நடத்துவதாக எண்ணுவது அறியாமை. சோனியா இடத்தில் அத்வானி இருந்தாலும் கருணாநிதி இடத்தில் ஜெயா இருந்தாலும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு அளிக்கும் உதவி மாறப்போவதில்லை.

  • தொடங்கியவர்

ஜெ பதவிக்கு வந்தவுடன் எப்படி நடந்து கொள்வார் என்பதிலும் அவரின் இன்றைய கோசம் வெறும் தேர்தல் கோசமே என்பதிலும் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் இரு கூட்டணிகளிற்கிடையேயான தேர்தல் வாக்குறுதிகளில் இருக்கும் முக்கிய வேறுபாடாக ஈழ ஆதரவே காணப் படுகின்றது. ஜெ வெற்றி பெற்றால் தமிழக மக்களின் ஈழ ஆதரவிற்கான ஒரு முக்கிய சான்றாகவே கொள்ளப் படும். ஏனெனில் கருணாநிதியின் வெற்றி காங்கிரஸின் ஈழ மக்கள் அழிப்புக்கான தமிழக மக்களின் ஆதரவையே புலப் படுத்தி நிற்கும்.

இலங்கையில் சிங்கள மக்கள் மகிந்தவின் கட்சிக்கு பெரும்பான்மையாக வாக்களித்தமையை தமிழ் மக்களின் அழித்தொழிப்பிற்கு அவர்கள் கொடுக்கும் அங்கீகாரமாக எந்தளவிற்கு பார்க்கப் படுகின்றதோ அதே போன்றுதான் தமிழக மக்கள் தி.மு,க + காங்கிரஸ் கூட்டணியிற்கு வெற்றி வாய்ப்பை வழங்கினால் ஈழ மக்களின் அழிவிற்கு இந்தியாவின் பங்களிப்பை அங்கீகரித்தமையாக பார்க்கப்படும்.

தமிழகம் நீங்கலாக மற்ற அனேக இடங்களில் காங்கிரஸ் தேர்தலில் வெல்லக்கூடிய நிலை இருக்கும் இன்றைய நிலையில் தமிழக மக்கள் ஜெயலலிதாவிற்கு கொடுக்கும் ஆதரவு அவர்கள் ஈழ மக்களின் மீதான அன்பையும் மத்திய அரசின் இனவழிப்பின் மீதான தம் கோபத்தினையும் வெளிப்படுத்தி நிற்கும்

ஈழ ஆதரவினை கொண்டிருக்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு பா.ஜ.க வினருடனோ அல்லது ஜெயலலிதா அற்ற மூன்றாவது அணியினருடனோ கரம் கோர்த்திருந்தார்களாயின் ஈழ மக்களின் மேலதிக நம்பிக்கையினைப் பெற்றிருப்பார்கள். அல்லது தி.மு.க கட்சியானது காங்கிரசை கைவிட்டு ஈழ ஆதரவு அணியினருடன் ஒன்று சேர்ந்து இருந்திருதார்களாயினும் இன்னும் அதிகளவு நம்பிக்கையினை பெற்றிருப்பார்கள். ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லையே...ஈழ மக்கள் ஜெயாவை நம்புவது அவவின் ஆளுமையாலோ அல்லது அவவின் இன்றைய ஈழ கோசத்தினை நம்பியதாலோ அல்ல.. காங்கிரஸ் கூட்டணி இந்தியாவில் மீண்டும் வெற்றியடைந்து இலங்கையரசுடன் கைகோர்த்துக் கொண்டு மீண்டும் பேரழிவிற்கான யுத்ததினை முன்னெடுக்க கூடாது என்ற எதிர்பார்ப்பினால் ஆகும்

முதலில் மூன்றாவது அணி ஈழத்தை ஆதரிக்கவில்லை. சான்றாக இன்று சி.பி.ஐ கட்சியின் பொதுச்செயலாளர் பரதன், ஜெயலலிதாவின் தனி ஈழத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என தெளிவாக கூறியிருக்கிறார். மார்க்கசிஸ்ட் கட்சியின் நிலையும் இதுதான். இதுபோக மற்ற மாநிலங்களில் இருக்கும் கட்சிகளுக்கு ஈழப்பிரச்சினை என்னவென்றே தெரியாத அளவுக்கு இருப்பதால் அவர்கள் இதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை. மேலும் இலங்கை அரசுக்கு ஆதரவு தரும் இந்திய அரசின் அணுகுமுறை கட்சிகளின் மாற்றத்தால் மாறப்போவதில்லை. வேண்டுமானால் பா.ஜ.க பதவிக்கு வந்தால் இந்த ஆதரவு பரம ரகசியமாக ராஜபக்சேவுக்கு போய்ச்சேரும். ஆங்கில மற்றும் இந்தி உடகங்கள் இந்திய அரசின் மேலாதிக்க நலனை ஏற்றுக் கொண்டே செய்திகளை இலங்கை அரசுக்கு ஆதரதவாக வெளியிடுகின்றன என்பது ஏன் எனப் பரிசீலிக்க வேண்டும்.

அடுத்து தமிழகத்தில் இன்னமும் ஈழப்பிரச்சினைதான் தேர்தலைத் தீர்மானிக்கிறது என்பதில் உண்மையில்லை. தமிழகத்தின் பெரும்பாலான மக்களுக்கு இலங்கையில் அப்பாவி தமிழர்கள் போரினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

  • தொடங்கியவர்

வினவு.. நீங்களும் கருணாநிதி போல ஆகிவிட்டீங்களே.. அவர்தான் ஜெயலலிதாவுக்கு பதிலளிக்க முடியாமல் திணறும்போது 'ஜெயலலிதா முன்பு அப்படி சொன்னார்... இப்படி சொன்னார் என்று பழைய துணி கிழிவது போல மேடையில் பேசுவார்... இப்போ அந்த வேலையை வினவு எடுத்திட்டீங்களா?

ஜெயலலிதா சொன்னதை செய்யிறாவோ இல்லையோ அது வேறு விடயம். கருணாநிதி தோற்கவேண்டும் அதுதான் இப்போதைய தேவை.

ஈழப்பிரச்சினை குறித்து வைகோவும், ராமதாசும் சொல்லாத விசயத்தை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் எனும் ஒரு பார்ப்பனச் சாமியார் ஏதோ ஒரு சி.டியைப் போட்டுக் காண்பித்ததும் அம்மாவுக்கு தனி ஈழம்தான் தீர்வு என தோன்றியதாம். உடனே தமிழக மக்களிடம் நாற்பது சீட்டுகளையும் வெற்றி பெற வையுங்கள் முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் ஈழத்தை தூக்கித் தருகிறேன் என அம்மா டீல் பேசினாராம். நல்லா இருக்கு கதை......

  • தொடங்கியவர்

ஜெயலலிதா காங்கிரஸோடு கூட்டுசேரும் வாய்ப்பு நிறையவே இருக்கின்றது. ஆனால் அதே நேரத்தில் மூன்றாவது அணியிலோ அல்லது பாரதீய ஜனதாவிலோ இணையும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆனால் திமுகவை பொறுத்தவரையில் அது காங்கிரஸோடுதான். வேறு பேச்சுக்கே இடமில்லை. ஆகவே எமக்குள்ள ஒரே தெரிவு ஜெயலலிதாதான்.

எனவே வினவு அவர்களே, இரத்தினச்சுருக்கமாக சொன்னால், நட்டம் நிச்சயம் என்ற வியாபாரத்தில் முதலிடுவதிலும் பார்க்க சில வேளைகளில் இலாபம் கிடைக்கும் என்ற வியாபாரத்தில் முதலிடுவது சாலச்சிறந்தது.

மேலும் முக்கிய விடயம். ஜெயலலிதா வெறும் தேர்தல் ஆதாயத்துக்காகத்தான் தமிழீழம் என்று சொன்னார் என்று வைத்துக் கொண்டாலும், எம்மைப் பொறுத்தவரையில் அது ஒரு மிகப் பெரிய அங்கீகாரம். கருணாநிதி வாழ்நாளில் இவ்வாறு உறுதிபடக் கூறவில்லை.

ஒரு பேச்சுக்கு...ஜெயலலிதா ஜெயித்து காங்கிரஸோடே கூட்டணி வைக்கின்றார் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அவரை ஜெயிக்க வைத்த விடயம் என்பது தமிழக மக்களால் ஈழத் தமிழர் போராட்த்திற்கும் தமிழீழத்திற்கும் வழங்கப்பட்ட அங்கீகாரமாகக் கருதமுடியும். இந்திய மத்திய அரசுக்கும் தமிழகத்தின் குரலைச் சொனது போலிருக்கும். தோற்றால் ஈழத்தமிழர் ஆதரவு எல்லாம் பொய் என்று ஆகிவிடும்.

தமிழகத்தில் இரண்டு கழகங்களுக்கும் நடக்கும் தேர்தலை ஏதோ ஈழப்பிரச்சினை என்ற மாபெரும் கொள்கைக்காக நடக்கும் யுத்தமென நீங்கள் கருதிக் கொள்வது யதார்த்தத்தில் உண்மையல்ல. ஜெயலலிதா தேர்தலுக்காக மக்களுக்கு அதைச் செய்வேன், இதைச்செய்வேன் என அள்ளிவழங்கும் நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளில் ஈழமும் ஒன்று, அவ்வளவுதான். அதற்கு மேல் அவர் ஈழம் குறித்து அலட்டிக் கொள்வதில்லை. அவர் மற்ற மக்கள் பிரச்சினைகள், கருணாநிதியின் குடும்ப அரசியல், போன்றவற்றைத்தான் அதிகம் பேசுகிறார். அதே போல தி.மு.கவும் ஈழம் பற்றித்தான் அதிகம் பேசுகிறது என்பதும் தவறு. அவர்கள் மக்களுக்கு வழங்கிய இலவசங்களை பட்டியல் போட்டுத்தான் வாக்கு கேட்கிறார்கள். முக்கியமாக சில பல எம் பிக்கள் கையில் இருந்தால் அடுத்து வரும் ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக பதவி பெற்று முடிந்த அளவு கொள்ளையடிக்கலாம் என்பதுதான் இந்த தேர்தலின் இயங்கு விதியே அன்றி ஈழமல்ல. மக்களும் ஈழத்திற்கு அப்பாற்பட்டு தமது வாழ்க்கைப் பிரச்சினைகளை வைத்துத்தானத் இந்த தேர்தலைப் பார்க்கிறார்களேயன்றி ஈழத்தை வைத்தல்ல. சொல்லப்போனால் ஈழத்தின் உண்மையான நிலவரம், அரசியல் அவர்களுக்கு தெரியாது. நகர்ப்புறத்தில் வெகு சில அரசியல் முன்னணியாளர்களிடம் மட்டும்தான் ஈழம் குறித்த கவலை இருக்கிறது. ஆனால் இவர்கள் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு எண்ணிக்கை கொண்டவர்கள் இல்லை. இதற்கு மேல் இரண்டு கழகங்களும் ஒரு ஓட்டுக்கு எத்தனை நூறூ ரூபாய் கொடுக்கப் போகிறார்கள் என்பதை வைத்தும் மக்கள் வாக்களிக்கலாம். மதுரையில் மு.க.அழகிரி வெற்றி பெற்றால் அதன் பொருள் மதுரை மக்கள் ஈழ்த்திற்கு எதிரானவர்கள் என்பதல்ல, நோட்டு நிறைய வாங்கியிருக்கிறார்கள் என்பதுதான். ஏற்கனவே ஆட்சியில் இருந்திருப்பதால் தி.மு.க இந்த தேர்தலுக்கு சிலநூறு கோடிகள் செலவழிக்கிறது. அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் அம்மா கட்சி திணறுகிறது. இப்படி வெளிப்படையான பணநாயகத்திற்காக நடக்கும் இந்த தேர்தலை இணையத்தில் இருப்பவர்கள் மட்டும் ஈழத்திற்காக நடக்கும் தேர்தலென்று எண்ணிக்கொள்வதில் உண்மையில்லை.

  • தொடங்கியவர்

உண்மையில் ஜெயலலிதா அவர்கள் அ தி மு கவை வழிநடத்துகிறார் என்றால்.. அதன் தலைவியாக இருக்கிறார் என்றால்.. கடந்த காலத்தில் அவர் எம் ஜி ஆரின் பாதையிலின்றும் விலகி கட்சியை தவறாக வழிநடத்திய சந்தர்ப்பங்கள் மீள வகை செய்யாது.. எம் ஜி ஆரின் பாதையில் ஈழத்தமிழருக்காகவும் தமிழக மக்களுக்காகவும் பயணிக்க முன் வர வேண்டும்.

ஈழத்தமிழருக்கு தமிழீழமே ஒரே தீர்வு என்றதுடன் மாத்திரம் நிற்காமல் அதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்திரா காந்தி அம்மையாரோடு இணைந்தும் தனிப்படவும் எடுத்தவர் எம் ஜி ஆர். அவர் தமிழீழ விடுதலைப்புலிகளை நேரடியாக ஆதரித்ததுமன்றி அவர்களாலேயே தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்றும் திடமாக நம்பியவர். அதற்காக அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளையும் செய்து கொடுத்தவர்.

இன்றைய நிலையில் ஈழத்தமிழருக்கு எம் ஜி ஆர் வழியில் ஆனால் அவரை விட அதிகமாகச் செய்ய வேண்டி இருக்கிறது. அதனைச் செய்ய ஜெயலலிதா உண்மையில் அதிமுக வை அதன் தோற்றுனர் எம் ஜி ஆர் வழியில் வழிநடத்திச் செல்பவராக இருந்தால் மீண்டும் கடந்த கால தனது தவறுகளை ஈழத்தமிழர்கள் தொடர்பில் இழைக்காமல் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்யவில்லை என்றால் உண்மையில் அவர் எம் ஜி ஆர் உருவாக்கிய அதிமுக வை வழிநடத்துபவராகவோ.. அதன் தலைவராகவோ தமிழக மக்களின் பிரதிநிதியாகவோ இருக்கத் தகுதியற்றவர் என்பதுதான் யதார்த்தம். அதைக் கடந்து அவர் அரசியல் செய்ய விரும்பின் தாராளமாக அவரின் மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளட்டும். அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஈழத்தமிழ் மக்களாகிய எம்மிடம் இல்லை..! ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்களிடமே உள்ளது. :unsure:

எம்.ஜி.ஆரும், இந்திராவும் தனி ஈழத்திற்கு ஆதரவாக இருந்தார்கள் என்பது வரலாற்றை தவறாகப் புரிந்து கொண்டதின் விளைவு. இந்திரா காலத்தில் இந்தியா ரசியா ஆதரவாகவும், இலங்கை அமெரிக்க ஆதரவாகவும் இருந்த்து. சிங்கள ஆளும் வர்க்கத்தை மிரட்டுவதற்கே ஈழப் போராளிகளுக்கு ஆதரவு எனும் துருப்புச் சீட்டை இந்திரா பயன்படுத்திக் கொண்டார். அப்போதும் சரி, இப்போது ஈழத்திற்கு எதிராக இருக்கும் இந்தியாவின் அணுகுமுறையிலும் சரி, இருக்கும் ஒரே விசயம் தெற்காசியாவில் இந்தியா ஒரு வல்லரசைப் போல நாட்டாமை செய்யவேண்டுமென்பதுதான். இந்த நாட்டாமையின் நலன் தெற்காசிய சந்தையைக் கைப்பற்றும் இந்திய தரகு முதலாளிகளின் விருப்பத்திற்காக செய்யப்படுகிறது. இதை இந்திரா, எம்.ஜி.ஆர் என்ற தனிப்பட்ட நபர்களின் விசயமாக பார்ப்பது சரியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

வினவு அவர்களே....நீங்கள் யெஜா மற்றும் கருனாநிதி,சோ,போன்றவர்களைப்பற

்றி எழுதும் பொழுது பாசிசவாதிகள்,பூர்ஷ்வாக்கள்,அ

திகாரவர்க்கம்,ஆளும்வர்க்கம்,

  • கருத்துக்கள உறவுகள்

வினவு அவர்களுக்கு...

இந்தத் தேர்தலின்போது திமுக அதிமுக தவிர்ந்த வேறு ஏதாவது தேர்வு மக்களுக்கு இருக்கிறதா என்றால் இல்லை. இதையே நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்கள் எனக் கருதுகிறேன். இதற்கு மாற்று, தேர்தலைப் புறக்கணிக்கும்படியான உங்களது வாதம். உங்கள் தேர்தல் புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ளக்கூடியவர் யார்? தமிழினத்தின்பால் அக்கறை கொண்டுள்ளோர் மட்டுமே. தமிழகத்தில் 100% வாக்காளர்களும் தமிழின ஆர்வலர்களா? இல்லையே..! பிறகு உங்கள் தேர்தல் புறக்கணிப்பு எதில் போய் முடியும்?

ஒரு சந்தர்ப்பத்தில் ஜேயும் தமிழின எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருந்தால் நீங்கள் கேட்பது ஓரளவுக்கு நியாயம். அவர் போலியாகவேனும் ஈழ ஆதரவு நிலை எடுக்கும்போது அதை ஆதரித்து, தனி ஈழத்துக்குத்தான் தமிழக மக்கள் ஆதரவு என்னும் ஒரு கருத்தியலை உருவாக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம் அல்லவா? 1976 வட்டுக்கோட்டை பிரகடனமும் அதைத் தொடர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அமோக வெற்றியும் இன்று வரையில் நமது போராட்டத்துக்கு வலிமை சேர்ப்பதாகத்தானே உள்ளது? அதுபோல 2004 ஆம் ஆண்டின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி புலிகளே தமிழரின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை உலகுக்குப் பறைசாற்றவில்லையா?

அதுபோல தமிழகமும் தனி ஈழத்துக்கே ஆதரவு என்பதைப் பறை சாற்றும் ஒரு தேர்தலாக அமைய வேண்டும் என்பதே எங்களைப்போன்ற சாதாரண மக்களின் அவா. தேர்தலின் பின் ஜே காங்கிரஸ் கூட்டணிக்குத் தாவினால் திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்கிற நிபந்தனையின் பேரில்தான் செல்வார். அப்போது திமுக ஈழ ஆதரவு நிலை எடுத்து அடுத்த சட்டசபைத் தேர்தலில் ஜேயுக்கு ஒரு இக்கட்டான நிலையைத் தோற்றுவிக்கவே சாத்தியம் உண்டு. அதனால் ஜேயும் தன் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் எல்லாம் நடந்துகொள்ள முடியாது.

இறுதியாக, நீங்கள் சொல்ல வந்ததான் நியாயங்கள் புரிகின்றன. ஆனால் அவற்றுக்கான களம் இந்தத் தேர்தல் அல்ல என்பது எனது வாதம். நன்றி.

  • தொடங்கியவர்

வினவு அவர்களே....நீங்கள் யெஜா மற்றும் கருனாநிதி,சோ,போன்றவர்களைப்பற

்றி எழுதும் பொழுது பாசிசவாதிகள்,பூர்ஷ்வாக்கள்,அ

திகாரவர்க்கம்,ஆளும்வர்க்கம்,

��ப்படி சில சொற்களை உபயோகபடுத்தியுள்ளிர்கள்.இதே சொற்களை 1979,80களில் ,ஈழவிடுதலை போராட்ட ஆரம்ப காலகட்டத்தில் சில இளைஞர்கள் பேசினார்கள்.புரட்சி என்றார்கள்..சினா,ரஸ்யா ,சார்பு கொள்கை என்றார்கள் ..........பலர் நம்பினார்கள்....ஆனால் இன்று இதே சினாவும் ரஸ்யாவும் தான் ஒரு தேசிய இனத்தின் மனிதாபிமான பிரச்சனையை கூட ஜக்கியநாடுகள் சபையில் விவாதிக்க விடாமல் விட்டோ அதிகாரத்தை பாவித்தவர்கள்....

ஜனநாயகத்தின் நாயகர்களும் சரி......மாவோவின் செந்தோழர்களும் சரி......காந்தியின் கதர் ஜிப்பாக்களும் சரி........ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.......

வினவு என்ன வார்த்தை பயன்படுத்தியது என்பதை ஆராய்வதை விட என்ன சொல்ல வருகிறோம் என்பதைப் பேசினால் பயனிருக்கும். இன்றைய ரசியாவும், தோற்றத்தில் கம்யூனிசத்தை கொண்டிருக்கும் இன்றைய சீனாவும் உண்மையில் முதலாளித்துவ நாடுகள்தான். அவைகளின் தவறுகளுக்கு கம்யூனிசத்தை பழிப்பதால் பயனில்லை. ஈழவிடுதலைப் போராட்ட ஆரம்ப காலத்தில் சில இளைஞர்கள் புரட்சி பேசினார்கள் என்பதன் மூலம் நீங்கள் எதைக் கூறவிரும்புகிறீர்கள். அவர்கள் இல்லாததால்தான் ஈழப் போராட்டம் முன்னுக்கு வந்தது என்கிறீர்களா? வினவு குட்டையா, மட்டையா என்பது பிரச்சினையல்ல, ஈழத்திற்கு எதிராக இருக்கும் தமிழகத்தின் இரு கழகங்களில் ஓன்று நல்லது மற்றொன்று கெட்டது என்று வாதாடுவது எதை அளிக்கப் போகிறது என்பதுதான் இங்கே நடக்கும் விவாதம்.

  • தொடங்கியவர்

வினவு அவர்களுக்கு...

இந்தத் தேர்தலின்போது திமுக அதிமுக தவிர்ந்த வேறு ஏதாவது தேர்வு மக்களுக்கு இருக்கிறதா என்றால் இல்லை. இதையே நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்கள் எனக் கருதுகிறேன். இதற்கு மாற்று, தேர்தலைப் புறக்கணிக்கும்படியான உங்களது வாதம். உங்கள் தேர்தல் புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ளக்கூடியவர் யார்? தமிழினத்தின்பால் அக்கறை கொண்டுள்ளோர் மட்டுமே. தமிழகத்தில் 100% வாக்காளர்களும் தமிழின ஆர்வலர்களா? இல்லையே..! பிறகு உங்கள் தேர்தல் புறக்கணிப்பு எதில் போய் முடியும்?

ஒரு சந்தர்ப்பத்தில் ஜேயும் தமிழின எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருந்தால் நீங்கள் கேட்பது ஓரளவுக்கு நியாயம். அவர் போலியாகவேனும் ஈழ ஆதரவு நிலை எடுக்கும்போது அதை ஆதரித்து, தனி ஈழத்துக்குத்தான் தமிழக மக்கள் ஆதரவு என்னும் ஒரு கருத்தியலை உருவாக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம் அல்லவா? 1976 வட்டுக்கோட்டை பிரகடனமும் அதைத் தொடர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அமோக வெற்றியும் இன்று வரையில் நமது போராட்டத்துக்கு வலிமை சேர்ப்பதாகத்தானே உள்ளது? அதுபோல 2004 ஆம் ஆண்டின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி புலிகளே தமிழரின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை உலகுக்குப் பறைசாற்றவில்லையா?

அதுபோல தமிழகமும் தனி ஈழத்துக்கே ஆதரவு என்பதைப் பறை சாற்றும் ஒரு தேர்தலாக அமைய வேண்டும் என்பதே எங்களைப்போன்ற சாதாரண மக்களின் அவா. தேர்தலின் பின் ஜே காங்கிரஸ் கூட்டணிக்குத் தாவினால் திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்கிற நிபந்தனையின் பேரில்தான் செல்வார். அப்போது திமுக ஈழ ஆதரவு நிலை எடுத்து அடுத்த சட்டசபைத் தேர்தலில் ஜேயுக்கு ஒரு இக்கட்டான நிலையைத் தோற்றுவிக்கவே சாத்தியம் உண்டு. அதனால் ஜேயும் தன் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் எல்லாம் நடந்துகொள்ள முடியாது.

இறுதியாக, நீங்கள் சொல்ல வந்ததான் நியாயங்கள் புரிகின்றன. ஆனால் அவற்றுக்கான களம் இந்தத் தேர்தல் அல்ல என்பது எனது வாதம். நன்றி.

இதே தேர்தலில் இந்தியாவின் ராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டித்து காஷ்மீர் மக்கள் தேர்தலைப் புறக்கணித்து அதை வெற்றியுமாக்கியிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
இதே தேர்தலில் இந்தியாவின் ராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டித்து காஷ்மீர் மக்கள் தேர்தலைப் புறக்கணித்து அதை வெற்றியுமாக்கியிருக்கிறார்
  • கருத்துக்கள உறவுகள்
இதே தேர்தலில் இந்தியாவின் ராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டித்து காஷ்மீர் மக்கள் தேர்தலைப் புறக்கணித்து அதை வெற்றியுமாக்கியிருக்கிறார்
  • கருத்துக்கள உறவுகள்

49 - o பற்றி வினவு என்ன நினைக்கிறீர்கள்?. புதிதாக உள்ளது .

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.