Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜீவ் - ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - சோனியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் - ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - சோனியா

ஞாயிற்றுக்கிழமை, மே 10, 2009, 10:23 [iST]

சென்னை: இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு, ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின்படி தீர்வு காண இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சென்னை வந்தார். மாலை 4 மணிக்கு சோனியா காந்தி தனி விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில், திமுக, காங்கிரஸ் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத் திடல் அருகே உள்ள கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் அடையார் ஹெலிபேட் தளத்திற்கு பின்னர் அவர் கிளம்பிச் சென்றார்.

தீவுத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரசாரப் பொதுக் கூட்டத்தில் சோனியா பங்கேற்றார், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதல்வர் கருணாநிதியும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தீவுத் திடல் பொதுக் கூட்டத்தில், குலாம் நபி ஆசாத், முதல்வர் கருணாநிதி, தங்கபாலு, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முதலில் திருமாவளவன் பேசினார். பின்னர் தங்கபாலு பேசினார். இதையடுத்து சோனியா காந்தி பேசினார்.

சோனியா காந்தி யின் பேச்சு..

இந்திரா காந்தி காலம் முதலே தமிழகமும், தமிழக மக்களும் எங்கள் குடும்பத்தின் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் அன்பும், மதி்ப்பும் வைத்திருக்கிறீர்கள்.

இலங்கையில் இன்று அப்பாவித் தமிழர்கள் படும் வேதனையும், துயரமும் கண்டு நான் மிகுந்த வேதனையை அடைந்துள்ளேன்.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பேரவதிக்குள்ளாகியுள்ளனர். இது எனக்கு வேதனையைத் தருகிறது. நான் கவலை அடைந்துள்ளேன்.

இலங்கையில் போர்ப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறேன். இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படுவது குறித்து இந்தியா உறுதிபட செயல்பட்டு வருவதாக ஏற்கனவே பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அந்நாட்டு சட்டத்திற்குட்பட்டு, சம உரிமை, சம அந்தஸ்துடன் வாழ, அமைதியுடன் வாழ, கெளரவத்துடன் வாழ ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படும்.

கடந்த தேர்தலில் தமிழக மக்கள் எங்களுக்கு 40க்கு 40 தொகுதிகளைக் கொடுத்தீர்கள். இந்த முறையும் அதேபோல 40 தொகுதிகளிலும் வெற்றியைக் கொடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருந்தீர்கள். அதேபோல நாங்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். தமிழக மக்களை ஐக்கிய முற்போக்கு அரசுகைவிடாது.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் தந்தது. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி நிதியைத் தந்ததும் எங்களது அரசுதான். சேது சதமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வ்ததும் எங்களது அரசுதான்.

தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், கார் தொழிற்சாலை என பல துறைகளில் பெருமளவிலான முதலீடுகளை தமிழகத்திற்குக் கொண்டு வந்ததும் எங்களது அரசுதான் என்றார் சோனியா காந்தி .

சோனியா வருகைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாலும், போராட்டங்களை அறிவித்துள்ளதாலும், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அந்நாட்டு சட்டத்திற்குட்பட்டுஇ சம உரிமைஇ சம அந்தஸ்துடன் வாழஇ அமைதியுடன் வாழஇ கெளரவத்துடன் வாழ ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படும்.

வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டபோது...

இந்த அம்மா எங்கே போயிருந்தா..???

ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தம்

அப்படி ஒன்று இருப்பதாக மகிந்தவுக்கு தெரியுமா?

அதை எப்போதாவது சோனியா அவருக்கு ஞாபகப்படுத்தியதுண்டா?

நானறிந்து இல்லை

ராஜீவ் - ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு

இது அன்றே ஏற்றுக்கொள்ள்ப்படாத தீர்வு. இன்று யாராலும் திரும்பிக்கூட பார்க்கமுடியாத தூரம் இதை எங்கு நடமுறைப்படுத்துவது? இந்தியாவிலா?

ராஜீவ் - ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - சோனியா

ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம் ஈழத்தமிழர்களின் காலைச்சுற்றிய பாம்பு!

இதை வைத்து ஈழத்தமிழர்களை சிங்களத்தின் நிரந்தர அடிமையாக்கும் சதிவேலையை காங்கிரஸ் கைவிடத் தயாரில்லை என்று தமிழக மக்களுக்கு தெரியப்படுத்திய உங்கள் அரசியல் முட்டாள் தனத்திற்கு நன்றி.

இதற்கு 13ம் திகதி இருக்கிறது அன்னையே ஆப்பு!

அது சரி! ராஜிவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் ஆணிவேரான வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தை இரண்டாக துண்டுபோட்டு அந்த ஒப்பந்தத்தை அப்படியே சிங்கள அரசு குப்பை தொட்டியில் போட்ட போது நீங்கள் என்ன இத்தாலிய வைனா பருகி கொண்டிருந்தீர்கள்? தேர்தல் தோல்வி பயத்தில் இன்று தான் அந்த போதை தெளிந்ததா?

யாரோ எழுதிக் கொடுத்ததை பேசிவிட்டு போகும் உங்களிடம் எல்லாம் ஒரு இந்திராவை எதிர்பார்க்கும் இந்திய மக்கள் பாவம்! பரிதாபத்துக்குரியவர்கள்

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் தந்தது.

என்ன?!

தமிழுக்கு செம்மொழி பட்டம் உன் ஐக்கிய முன்னணி அரசு கொடுத்ததா?

3000 ஆண்டின் முன்பே தொல்காப்பிய இலக்கணம் கண்ட தமிழ்மொழி 5000ம் ஆண்டுகளாகவே செம்மொழி தானடி!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோனி உன்ர தீர்வையெல்லாம் உன்னோட வைத்துக்கொள்

  • கருத்துக்கள உறவுகள்

நாகரிகமான முறையில் கருத்தை முன்வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால்..... வாயில் வருவதை அப்படியே எழுத முடியாது. தவிர விபச்சாரிகளுக்கு வேறு பாசையும் புரியாது. இப்போது இலங்கை உள்ளநாட்டு பிரச்சனையில் எப்படி கலைஞரின் தேவடியாள் தலையிட போகிறாள்?

பிரிக்கப்பட்ட வட கிழக்கை முடிந்தால் ஒட்ட வைக்கவும் பிறகு கொலைகாரர்கள் ராஜீவ் ஜே ஆர் ஒப்பந்தம் பற்றி பேசலாம்

சோனியாவுக்கு வாக்கினை அளிக்கும் இந்திய சகோதரர்கள் தமது நாட்டினையும் நாட்டின் பாதுகாப்பினையும் இத்தாலிக்கு அடகு வைகின்றார்கள் என எப்ப உணர போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலைப்பதிவில் கண்ட துணுக்கொன்றினை இணைக்கிறேன்

1 இதுதாண்டா தீர்வு!

புதிய இதிகாசம்: சோனியாயணம்

தயாரிப்பு- வடிவமைப்பு- செயலாக்கம்- நெறியாழ்கை: இதிகாச மூலவர்கள் வாரிசுகள்

நடைபெறும் இடம்: ஈழம்

பாத்திரங்கள் தம் உயிரை வழங்கி கதையுடன் வாழ்கிறார்கள்.

என்னடா ராஜசேகர் சினிமாத் தலைப்பு மாதிரி இருக்கிறதே என எண்ணலாம். இது இந்தியச் சினிமாக்களில் வரும் காட்சிகள்போலத்தான் நடைபெறுவதாலும், தேவர்களாகச் சித்தரிக்கப்படும் மானுடர்(அரக்கர்)களாக இல்லாது மேலோகத்தில் வாழுவோரது கதைக்கருவாக இருப்பதாலும் இப்படியாகத் தலைப்பிடுவதே பொருத்தம்.

இலங்கைத் தமிழருக்கான தீர்வாகக் கருதப்படும் சகல காலரோக ராசீவு நிவாரணியைச் செலுத்துவதற்கு தயாராகி வருவதாகச் செய்திகள் கசியத் தொடங்கிய நிலையில், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் இது அலசப்படுவது வழக்கமாகிவிட்டது. இலங்கையில் தோன்றியுள்ள பயங்கரவாத நோயைத் தடுப்பதற்கான ஒரேயொரு தடுப்பு மருந்தாகிய இந்த ராசீவு நிவாரணியை மீண்டுமொருமுறை கட்டிவைத்துச் செலுத்தப்போகிறார்களாம். இதில் நோய் குணமாகாதுவிட்டாலும் ஆள் தப்பாது என்பதால் சிங்களம் மீண்டுமொரு முறை நமட்டுச்சிரிப்புடன் வேடிக்கை பார்க்க ஆரம்பமாகிக் கொண்டிருக்கிறது.

இன்றைய உலகின் -தேசிய அரசு இறையாண்மை- என்ற கோட்பாடுகளால் எது நடந்தாலும் இலாபமடைவது இந்த சிறிலங்கா சிங்கள பௌத்த அதிகார பீடந்தானே! இதற்கு சுனாமியால் கடும் பாதிப்புக்குள்ளாகிய போது மகிழ்வுடன் காட்சி தந்த அரசுத் தலைவர் சந்திரிகா சிறந்ததொரு உதாரணம்! ஈழத்தமிழருக்குத் தீர்வு கிட்டுதோ இல்லையோ தமது நலனுக்கு ஏற்றதாக இலங்கை இருந்தால் போதும் என்பதுதானே இந்த ராசீவு நிவாரணத்தின் சாரம்.

சிங்களம் ஒருபோதும் சிறிய தீர்வைத்தானும் வழங்காது என்பது இந்தச் சிங்களக் கொள்கை வகுப்பாளருடன் நெருங்கிப் பழகிய பலராலும் கற்றிருந்த பட்டறிவு. இதை ஓங்கிச் சொல்லி உயிரைவிட்டவர் தராக்கி. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடாததியும் துரும்புதானும் கிடைக்காது நொந்துபோய் ‘தமிழரைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ எனக்கூறி தனி ஈழம்தான் தீர்வென மக்களாணையைப் பெற்றவர் தந்தை செல்வா. இன்னும் ஏன் மூன்றாம் சாட்சியாக ஐரோப்பிய நாடொன்றை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட 2002 சர்வதேச ஒப்பந்தத்திற்கே என்ன நடந்தது? சிறிலங்காவின் இன ஒடுக்குதலுக்கு வாழ்வாதாரச் சாட்சியமாக உலகெங்கும் பரவி வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட இந்தத் தமிழ் உறவுகளே நிகழ்காலச் சாட்சியமாகக் கட்டியம் கூறுகையிலும் உலகம் கண்ணை மூடியவாறு மௌனித்து இருக்கும் அவலம் 21ம் நூற்றாண்டு மானுடவியல் பெருந்துயர்தான்.

இந்தச் சூழலில் நம்மவர் வீடுகளில் அடிக்கொரு தடவை பேசப்படும் விடையமாகிவிட்டது. பொதுப் பார்வையில் புலம்பெயர்ந்த வாழ்வின் எதிர்காலம் பொங்கிப் பிரவாகமடிப்பதாகத்தான் தோன்றும். ஆனால் மூலத்திற்கான நாடொன்றில்லாத சந்ததியினரை விட்டுச் செல்லும் வரலாற்றுப் பழியை நம்மால் சுமக்க முடியுமா? இக்கேள்வி புலம் பெயர்ந்த மூத்த தலைமுறையினரை வாட்டிவதைக்கிறது. சென்ற நூற்றாண்டில் நாடொன்றில்லாது செல்வச் செழிப்புடன் பரவலாக வாழ்ந்து கொண்டிருந்த யூத இனத்திற்கு ஐரோப்பாவிலேயே என்ன நடந்தது? எதிகாலத்தில் எமது சந்ததி ஜித்தானாவதா??

புலிகளுக்கு எதிரானவர்களை இனம் காணுவதும் அவர்களிடம் ஆட்சியைக் கொடுப்பதுமான 87 அரங்கம் இன்னுமொரு தடவை 2009இல் அரங்கேற்றபடபோகிறது. தகவல் தொழில்நுட்ப விரிவாக்க உலகின் இன்றைய சூழலை மறந்தவர்களாகிச் செயற்படும் தயாரிப்பாளரும் நெறியாளரும் படாதபாடுபடுகிறார்கள். இந்த நிகழ்அரங்கிற்கான பாத்திரங்களுக்குத் தோதானவர்களை வலைவீசித் தேடுகிறார்கள். இவர்களின் தெரிவுக்குள்ளாவோரை நினைத்தால் சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. ஆக முழுக்க நகைச்சுவை அரங்காகத்தான் இருக்கப்போகிறது. இதைப்பற்றி உரையாடும்போது என் துணைவி கேட்டார்

“இந்தத் தெரிவுக்குள்ளானவர்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாது தன்னந்தனியாக இவர்களால் நடாத்தப்படும் அகதி முகாங்களுக்குள்ளாகச் சென்று வரட்டும் பார்க்கலாம்?”

வினவல் மிகுந்த தாக்கத்துடனானதென்பது அனைவராலும் உணரக்கூடியதுதானே!

மக்கள் மத்தியில் சாதாரணமாக நடமாட முடியாதவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கி என்னதைச் சாதிக்கப்போகிறார்கள்? . எமக்கான அண்டை நாட்டாரை நினைக்க வேதனையாகத்தான் இருக்கு! வன்னியில்கிளம்பியுள்ள பிண வாடை பெருமணமாகி காற்றில் கலந்து உலகின் முகச் சுழிப்புள்ளாகியுள்ளதானது சும்மா விடுமா?

- நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - இது சின்னப்பிள்ளையாக இருந்தபோது மண்டையில் ஏற்றப்பட்ட முதுமொழி.

- மகேந்திரா 08. 05. 2009கனடா -

http://thoaranam.blogspot.com/2009/05/4.html

0000000

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.