Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் உங்கள் நாடுகளில் இந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது ?

Featured Replies

இலங்கை பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் உங்கள் நாடுகளில் இந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது ? உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இலங்கை பொருட்களை வாங்குவதை நிறுத்தியதாக அறியமுடிகிறதா? பிரான்ஸ் தமிழ் கடைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை, இலங்கை பொருட்கள் நல்ல விற்பனை போவதாக தெரிகிறது, எங்கட லூசுகளுக்கு இலங்கை குடிபானம் குடிக்கவில்லையென்றால் கை நடுங்குகின்றதாம், இதுகளை திறுத்த ஏதாவது வழியுண்டா?

உலக நாடுகள் இலங்கைக்கு பொருளாதார தடை விதித்தாலும் எங்கட சனம் இலங்கை அரசின் பலத்தை விழவிட மாட்டினமாம் போல இருக்கிறது , இலங்கை பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய செய்வதற்காக எத்தனை கருப்புலிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருப்பார்கள், ஆனால் எங்களால் இந்த சின்ன தியாகத்தை கூட செய்யமுடியவில்லையென்றால் எம் இனத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான ரீதியான கணக்கெடுப்பு எதுவும் செய்யேல்ல. ஆனா நெருங்கி உறவாடும் வேற்றினத்தவர்களிடம் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இங்க அமெரிக்காவில் சிறி லங்கன் உடைகள் தான் பெருமளவில் இறக்குமதியாகும் பொருள். ஜெசி பென்னி, ஒல்ட் நேவி போன்ற கடைகளில் வாங்கும் போது சிறி லங்கன் உடைகளை வாங்க வேணாமெண்டு சொல்லி வருகிறோம். விளைவு தான் தெரியவில்லை. ஆனால் நானும் எனது தமிழ் உறவுகள் சிலரும் இந்தியப் பொருட்களின் புறக்கணிப்பையும் ஊக்குவித்தும் கடைப் பிடித்தும் வருகிறோம். இந்தியாவின் கைகளிலும் எங்கள் ரத்தம் நிறையவே இருப்பதால் இந்தியருக்கும் ஒரு சதம் கூட கொடுக்க எனக்கு இஷ்டமில்லை. பாகிஸ்தான் அரிசி (ஆம், பாகிஸ்தான் எங்கள் எதிரி தான், ஆனால் துரோக இந்தியாவை விட ஒரு படி மேல் தான்!), மத்திய கிழக்கு நாடுகளில் தயாராகும் ரொட்டி போன்றன இந்தியப் பொருட்களுக்கு மிகவும் நிகரானவையாக இங்கே கிடைக்கின்றன. மற்றைய அமெரிக்க உறவுகளும் இந்தியப் பொருள் புறக்கணிப்பை சிறி லங்காப் புறக்கணிப்போடு சேர்த்துக் கடைப்பிடிக்க வேணுமென வேண்டுகிறேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்களுக்கு நாங்கள் சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்கின்றோம் என்று சொல்லுமளவுக்கும் தெரியும் அளவுக்கும் சிறிலங்கா புறக்கணிப்பு நடைபெறுகின்றது.

கனடாவில் ஒருத்தனும் திருந்த மாட்டார்கள்.

'நாங்கள் இறக்குமதி செய்வோம் நாங்கள் மக்களை புறக்கணிக்க சொல்வோம்..." இது தான் இன்றைய நிலை!

திருந்துமா கனேடிய தமிழினத்தின் தலமைகள்? என்று ஏங்கும் இளையவர்களின் நானும் ஒருவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் சிங்கள பொருட்கள் என்ன விற்க்க படுகின்றன என்ற விபரம் எதுவும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் நிதர்சன், எங்கள் சனம் தாங்களாகத் திருந்துவது மிகக் குறைவு. யாராவது புறக்கணிப்பின் அவசியத்தை ஒரு ஒழுங்கமைக்கப் பட்ட விதத்தில் எங்கள் ஆட்களிடம் எடுத்துச் செல்ல ஒரு வழி சொல்லுங்கோவன். நான் நினைக்கிறேன் எங்கள் ஆட்கள் மத்தியில் எடுத்துச் செல்ல:

1. வீடு வீடாகச் சென்று ஒரு துண்டுப் பிரசுரமோ வாய் மூல விளக்கமோ கொடுக்கலாம்.

2. பொதுக்கடைகளில் பெரிய விளம்பரங்கள் வைக்கலாம் (ஆனால் முதல் அந்தக் கடைக்குள்ள சிறி லங்காப் பொருள் இருக்கக் கூடாது!)

3. நடக்கிற கவனயீர்ப்பு நிகழ்வுகளில ஒரு பதாகையாவது புறக்கணிப்பைப் பற்றி இருக்கச் செய்யலாம்.

4. எங்கள் மோட்டார் வாகனங்களில் "சிறி லங்காப் பொருட்களை வாங்காதீர்" என்று "பம்பர் ஸ்ரிக்கர்" ஒட்டலாம்.

இதெல்லாம் ஏற்கனவே கனடாவில நடக்குதோ எனக்குத் தெரியாது. நடந்தால் நல்லது. ஆனால் ஒன்றே ஒன்று தான் எல்லாவற்றையும் விட மிகவும் சிறந்த முறை: எங்களைக் கொல்பவனை பழி வாங்க அருமையான ஆயுதமாக பொருளாதாரம் எங்கள் கையில இருக்குது என்ற அறிவே அது. நாச்சுவையை தியாகம் செய்தால் அது பலமான ஆயுதம். நாச்சுவையை விட முடியவில்லையா? அப்ப வளவளா எண்டு தேசியம் பேசுறத விட்டுப் போட்டு எல்லா உடற் துவாரங்களையும் பொத்திக் கொண்டு கிடவுங்கோ!

கனடாக் கடைகளில் தாராளமாக சிறிலங்கா பொருட்கள் இருக்கின்றன. ஆனால் கடையின் முன் பகுதியில் சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்கச் சொல்லி ஒட்டியிருக்கு. முன்பு மீன் மட்டும் தான் வாங்கிறது அதுவும் இப்ப வாங்குவதில்லை.

  • 2 weeks later...

தமிழ்நாடு பொறுத்த வரையில் இலங்கை பொருட்கள் விற்க படலை. ஆனால் துணி மட்டும் கிடைக்கலாம், மேலும் மது பானம் கிடைக்கலாம்.

ஆறுதல் செய்தி என்னவென்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு தற்போது இலங்கை விடம் மிகுந்த கோபம் உண்டு.

தமிழகத்தில் சிங்கள பொருட்கள் என்ன விற்க்க படுகின்றன என்ற விபரம் எதுவும் இல்லை

இலங்கை பொறுத்த வரையில், உலக நாடுகளுக்கு சீனாவை விட மிக குறைந்த விலையில் ஏற்றுமதி செய்கிறது. இதை தான் பிரதான வருவாய் ஆக வெய்த்து கொண்டு இருக்கிறது. அதனால் நாம் நம்மால் முடிந்த வரையில் அவர்களது பொருட்கள் புரகனித்தால் போதும்.

ஒஸ்திரேலியாவிலும் இதே நிலை தான்..

என்ன செய்யலாம்??

  • தொடங்கியவர்

இவர்களுக்கு மனசாட்சியே இல்லையா? இந்த வருமானம் இலங்கை யுத்தத்தில் 1 விகிதமாவது பயன்பட்டிருக்காதா?? இன்னுமா இவர்களால் திருந்தமுடியவில்லை?

La Chapelle கடைகளில் மலிபன் பிஸ்கட் , யானை குடிபானங்கள் அமோக விற்பனையில்

a4o96o.jpg

இந்த மகத்தான பங்களிப்புக்கு இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு நன்றி சொன்னால் , என்ன செய்வீர்கள் ???

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொருட்கள் வாங்கும் தமிழ் கடையில் விசாரித்துப் பார்த்த போது , பெரிய மாற்றம் இல்லை என்று கடைக்காரர் தெரிவித்தார் .

என்ன செய்வது ...... சில ஆட்களுக்கு ஆனைக்கோட்டை நல்லெண்ணையில் கத்தரிக்காய் பொரிச்சு புட்டோடை குழைச்சு சாப்பிடாட்டி , இறங்குதில்லையாம்.

இவர்களுக்கு மனசாட்சியே இல்லையா? இந்த வருமானம் இலங்கை யுத்தத்தில் 1 விகிதமாவது பயன்பட்டிருக்காதா?? இன்னுமா இவர்களால் திருந்தமுடியவில்லை?

La Chapelle கடைகளில் மலிபன் பிஸ்கட் , யானை குடிபானங்கள் அமோக விற்பனையில்

a4o96o.jpg

இந்த மகத்தான பங்களிப்புக்கு இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு நன்றி சொன்னால் , என்ன செய்வீர்கள் ???

ஹரி...

இந்த படத்தில் இருக்கும் காட்சிதான் இங்கு கனடாவில் இருக்கும் 99.99999% தமிழ் கடைகளில் காணப்படுகின்றது. உலகமயமாதல் எனும் மாயைக்குள் சிக்கி சிதறிக்கப்பட்டுவிட்டது எம் தழிழ் தேசிய உணர்வுகள்.

கடைக்கு முன் வன்னித் துயருக்காக கறுப்புக் கொடி, உள்ளே வாசலில் மாவீரர் படங்களுக்கு மாலை போட்டு அஞ்சலி, இன்னும் உள்ளே நுழைந்தால், இலங்கை பொருட்களின் அணிவகுப்பு

Edited by நிழலி

  • தொடங்கியவர்

இதற்க்கு இன்னும் ஒரு வழி உண்டு.

புலம்பெயர்ந்த தமிழரிடம் இன உணர்வு எடுபடாவிட்டால் அடுத்த ஒரே வழி... கௌரவக் (Prestige) கோட்பாடுதான்.

அப்படி என்றால் என்ன என்பதற்கு உதாரணம் உயர்தர (Classic) கடனட்டைக்கும், தங்க (Gold) கடனட்டைக்கும் உள்ள வித்தியாசம் தான். இந்த மனிதப்பலவீனத்தையே நவீன வணிகத்துறை நன்கு பயன்படுத்தி அதிக லாபமீட்டுகிறது.

இந்த வழியில் சிந்தித்தால்....

1) பிரபலமானவர்களை (உதாரணம்: மியா) உபயோகித்து தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்குவது. ஏனைய இனத்தவரையும் கவரக் கூடிய வகையில் வெள்ளைஇன நட்சத்திரங்களையும் உபயோகிப்பது சாலச்சிறந்தது.

2) கலால் (حلال,Halaal- முஸ்லீம் உணவு) போன்று SL Free - போன்ற ஒட்டக்கூடிய இலட்சினைகளை பொருட்களில் ஒட்டி அவற்றை ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது.

உண்டியல் மூலம் உலகம் முழுவதும் இருந்து 17 லட்சம் தமிழர்களால் வருடத்துக்கு இலங்கைக்கு அனுப்ப படும் பணம் அண்ணளவாக 1 பில்லியன் டொலர் வரும் என்கிறார்கள் பணம் மாற்றீடு செய்பவர்களில் சிலர்...

கிட்ட தட்ட இலங்கை IMF இடம் இலங்கை கேட்ட தொகையில் பாதி...

  • 2 weeks later...

இப்ப எத்தனை பேர் சிரிலாங்கன் விமான ரிக்கட் விடுமுறைக்கு இந்தியாவுக்கு பதிவு செய்து போட்டு இருக்கினம், இடம் இல்லாமல் இந்தியன் kingfish விமானத்தில இடம் பதிவு செய்ய வேண்டிய நிலைக்கு போயிருக்கிறது

ஒருவரையும் மனம் உறுத்தவில்லை? மானப்பட வைக்கவில்லை? கோபப்படவைக்கவில்லை?

  • தொடங்கியவர்

இப்ப எத்தனை பேர் சிரிலாங்கன் விமான ரிக்கட் விடுமுறைக்கு இந்தியாவுக்கு பதிவு செய்து போட்டு இருக்கினம், இடம் இல்லாமல் இந்தியன் kingfish விமானத்தில இடம் பதிவு செய்ய வேண்டிய நிலைக்கு போயிருக்கிறது

ஒருவரையும் மனம் உறுத்தவில்லை? மானப்பட வைக்கவில்லை? கோபப்படவைக்கவில்லை?

உண்மை நேசன் !

தமிழ் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது, இந்த பேரழிவையும், பின்னடைவையும் நகைச்சுவையாக எம்மவர்கள் பேசுவதை அவதானிக்கமுடிகின்றது, வேதனையாக இருக்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.