Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களுக்குதவ அமெரிக்க கடற்படை தயார் நிலையில்

Featured Replies

வெள்ளிக்கிழமை, 15 மே 2009, 11:46.25 AM GMT +05:30 ]

இலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டு மூன்று மாதங்களுக்கு தமது மதிப்பீட்டு குழு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அது தொடர்பான அறிக்கையை அமெரிக்க அரசாங்கத்திடம் வழங்கியிருப்பதாக அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தெரிவுகள் குறித்து இலங்கையில் உள்ள தமது தூதுவர் ஊடாக ராஜாங்க திணைக்களத்திற்கு அறிக்கையினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளும் நிலைப்பாட்டில் அமெரிக்க கடற்படையினர் உள்ளனர்.

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தாவின் அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கீட்டிங், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

இதன்போது அமெரிக்கக் கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையில் உள்ள நீண்டகால உறவுகள் மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. சீனா இந்து சமுத்திரத்தில் தனது துறைமுகங்களை அபிவிருத்தி செய்துள்ளதுடன் தனது கப்பல்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக அமெரிக்க அட்மிரல் குறிப்பிட்டுள்ளார்

http://www.tamilwin.com/view.php?2aSWnBe0d...d436QV3b02ZLu2e

இனி இவே போய் வன்னியில் அழிக்கப்பட்ட மக்களின் பிணங்களை எண்ணும் வேலையைத்தான் பார்க்க வேண்டும்.

எல்லாரும் சேர்ந்து தமிழ் இனத்தையே அழிக்கிறாங்கள். இதை கேட்க நிறுத்த ஒருத்தராலயும் முடியவில்லை.

எங்களக் காப்பாற்ற ஆயுதம் எடுத்தவர்களாலும் முடியவில்லை. இனி எமக்கு வரலாறு விட்ட வழி..........................

உதவிக்கு இல்லை உபத்திரத்திற்குத்தான் புலி ஓடிடும் என்ற பயம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//எங்களக் காப்பாற்ற ஆயுதம் எடுத்தவர்களாலும் முடியவில்லை//

இந்த மனப்பான்மைதானே.. இப்படி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ஆயுதப்போராட்டம் என முடிவெடுத்த பிறகு அதற்குரிய ஆளணி வளங்களை வாடகைக்கா பெற முடியும். நாங்கள்தானே கொடுக்க முடியும்..? கொடுத்தோமா..? இல்லையே..

35 லட்சம் மக்களில் ஒரு வீதமான 35 ஆயிரம் பேரளவிலேயே ஆயுதம் ஏந்தினார்கள். மற்றவர்கள்.. நான் நீங்கள் உட்பட்ட மற்றவர்கள்...?

நான் நினைத்தேன். புலிகள் தோற்றுவிட்டால் முதலில் தூற்றுவது நாமாகத்தான் இருப்போம் என.. சரியாகத்தான் இருக்கிறது. புலிகளைச் சொல்லவேண்டும். ஒரு இனத்தின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் நேரடிப்பங்களிப்புச் செய்ய அந்த இனத்திற்கே விருப்பமில்லையென்றபிறகு போங்கடா என்றுவிட்டுபோயிருக்க வேண்டும்.

தனது சுயநலத்தைப் பார்த்துக்கொண்டு - பிறகு.. நீ போராடு.. நீ காப்பாற்று.. நீ இவர்களோடு கூட்டணி வை.. நீ இவர்களுக்கு ஓட்டுப்போது எனச் சொல்கின்ற ஆதிக்க மனம் படைத்த கேவலமான இனம் பெரும்பான்மை ஈழத்தமிழ் இனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உதவிக்கு இல்லை உபத்திரத்திற்குத்தான் புலி ஓடிடும் என்ற பயம்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது இனத்துக்காக தமது உயிரை கொடுது போராடும் எமது மக்களை நாம் மறந்து இப்படி தளர்ந்து விடலாமா? எமது இனத்தின் விடுதலை தான் எமது முக்கியமான குறிக்கோள். அதை அடைவதற்கு எமக்கு முன்னால் பல கடமைகள் இருக்கின்றன. அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி இவே போய் வன்னியில் அழிக்கப்பட்ட மக்களின் பிணங்களை எண்ணும் வேலையைத்தான் பார்க்க வேண்டும்.

எல்லாரும் சேர்ந்து தமிழ் இனத்தையே அழிக்கிறாங்கள். இதை கேட்க நிறுத்த ஒருத்தராலயும் முடியவில்லை.

எங்களக் காப்பாற்ற ஆயுதம் எடுத்தவர்களாலும் முடியவில்லை. இனி எமக்கு வரலாறு விட்ட வழி.........................

அண்மைக்கால வரலாறு தெரியாமல் கனைக்கின்றது ஒரு ஜென்மம்.

காவடி அண்ணா நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.நாம் புலம்பெயர்ந்த காலப்பகுதி வேறு இன்றைய காலப்பகுதி வேறு.புலத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தன்னாலான உயர்ந்த பங்களிப்பை செய்து கொண்டுதான் இறுக்கிறான்.இன்று வன்னியில் நடப்பது வாழ்வா சாவா போராட்டம்.இந்த நிலமை நாங்கள் புலம்பெயரும் போது இருக்கவில்லை.இங்குள்ள நாங்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறோம்.இதைத்தான் எம்மால் இங்கிருந்து கொண்டு செய்ய முடியும்.பேரெழுச்சி கொண்டிருக்க வேண்டியவர்கள் இன்றைய வன்னி மக்கள்.விடுதலைப் போராட்டம் உலகை நம்பி தோற்றம் பெறவில்லை.ஒன்றுமட்டும் எங்கள் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிகிறது எங்கள் இனம் அழிகிறது.உலகு என்னத்தை செய்து கிழித்தது எம்மை பயஙகரவாதியென்றும் தீவிரவாதியென்றும் சொன்னார்களே ஒழிய எமக்காக வேறு என்ன செய்தார்கள்.இலங்கையில் சுனாமி ஏற்பட்ட போதே தெரிந்துவிட்டதே உலகத்தின் கபடத்தனம்.

விடுலைப் புலிகளின் பொறுமை எல்லை மீறியது.பொறுமையால் இன்று நாம் கண்டது என்ன? பயங்கரவாதியென்ற முத்திரயை எடுத்துவிட்டார்களா? இல்லையே இப்பவும் ஆயிரக்கணக்கில் தமிழன் செத்து மடியும் போதும் யாரும் தடுத்து நிறுத்தவில்லையே? இப்பவும் ஆயுதங்களை கீழே போடச் சொல்கிறார்களே ஓழிய வேறு என்ன செய்தார்கள்.??

//எங்களக் காப்பாற்ற ஆயுதம் எடுத்தவர்களாலும் முடியவில்லை//

இந்த மனப்பான்மைதானே.. இப்படி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ஆயுதப்போராட்டம் என முடிவெடுத்த பிறகு அதற்குரிய ஆளணி வளங்களை வாடகைக்கா பெற முடியும். நாங்கள்தானே கொடுக்க முடியும்..? கொடுத்தோமா..? இல்லையே..

35 லட்சம் மக்களில் ஒரு வீதமான 35 ஆயிரம் பேரளவிலேயே ஆயுதம் ஏந்தினார்கள். மற்றவர்கள்.. நான் நீங்கள் உட்பட்ட மற்றவர்கள்...?

நான் நினைத்தேன். புலிகள் தோற்றுவிட்டால் முதலில் தூற்றுவது நாமாகத்தான் இருப்போம் என.. சரியாகத்தான் இருக்கிறது. புலிகளைச் சொல்லவேண்டும். ஒரு இனத்தின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் நேரடிப்பங்களிப்புச் செய்ய அந்த இனத்திற்கே விருப்பமில்லையென்றபிறகு போங்கடா என்றுவிட்டுபோயிருக்க வேண்டும்.

தனது சுயநலத்தைப் பார்த்துக்கொண்டு - பிறகு.. நீ போராடு.. நீ காப்பாற்று.. நீ இவர்களோடு கூட்டணி வை.. நீ இவர்களுக்கு ஓட்டுப்போது எனச் சொல்கின்ற ஆதிக்க மனம் படைத்த கேவலமான இனம் பெரும்பான்மை ஈழத்தமிழ் இனம்.

எங்களையும் நம் மக்களையும் பொறுத்தவரையில் உங்கள் கருத்துக்கள் ஏற்கக்கூடியவைதான் நண்பரே.

நாங்கள் போராட வேண்டிய காலத்தினைத் தவறவிட்டுவிட்டோம்.

ஆனாலும், தற்போதைய நிலைமைகளை உற்றுநோக்கினால்...

நமது போராட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளதினை உணரமுடியும்.

நம் மான்புமிகு தலைவரின் காலத்திலேயே, தமிழீழம் கிடைக்கும். கவலை வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேரெழுச்சி கொண்டிருக்க வேண்டியவர்கள் இன்றைய வன்னி மக்கள்.//

ஓ.. அப்படியா.. ஒருவேளை உங்களைப்போலவே.. இன்றைய அவலநிலை வரமுன்னர் வன்னியின் அத்தனை மக்களும் புலம்பெயர்ந்து பிரான்ஸ் கனடா நாடுகளுக்கு வந்துவிட்டிருந்தால்....

அங்கே பேரெழுச்சி கொள்ள மக்களே இல்லாத நிலையிருந்திருந்தால்....

ஏன்.. சுனாமிக்கு பிறகு புரிந்துகொண்டால் பாதை திறந்துதானே இருந்தது..?

வெள்ளிக்கிழமை, 15 மே 2009, 11:46.25 AM GMT +05:30 ]

இலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டு மூன்று மாதங்களுக்கு தமது மதிப்பீட்டு குழு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அது தொடர்பான அறிக்கையை அமெரிக்க அரசாங்கத்திடம் வழங்கியிருப்பதாக அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தெரிவுகள் குறித்து இலங்கையில் உள்ள தமது தூதுவர் ஊடாக ராஜாங்க திணைக்களத்திற்கு அறிக்கையினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளும் நிலைப்பாட்டில் அமெரிக்க கடற்படையினர் உள்ளனர்.

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தாவின் அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கீட்டிங், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

இதன்போது அமெரிக்கக் கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையில் உள்ள நீண்டகால உறவுகள் மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. சீனா இந்து சமுத்திரத்தில் தனது துறைமுகங்களை அபிவிருத்தி செய்துள்ளதுடன் தனது கப்பல்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக அமெரிக்க அட்மிரல் குறிப்பிட்டுள்ளார்

http://www.tamilwin.com/view.php?2aSWnBe0d...d436QV3b02ZLu2e

வணங்காமண் வந்தால் அழிப்பினமாம்...!!!

அமெரிக்கா வந்தால் வழிவினமாம்...!!!

தமிழனுக்கு தூண்டில் அமெரிக்காவிலிருந்து.

என்னதான் நடந்தாலும்... துடிப்பது தமிழன்தான்.

கொடுமை.......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முயற்சி தமிழர்களுக்கு மேலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தப்படவுள்ளன, இவங்க அங்கே செல்லாதபடி ஏதாவது பண்ணவேண்டும்.

இவங்க மக்களை காப்பதிற்காக அங்கே செல்லவில்லை, விடுதலைப்புலிகள் பாதுகாப்புடன் நகர்ந்துவிட்டார்கள் என்று உறுதியானவுடன் ஸ்ரீலங்கா அரசுக்கு உதவத்தான் ஆயத்தாமாகின்றாங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயார் நிலையில தான் நிக்கிறது :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய காலப்பகுதி வேறு.புலத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தன்னாலான உயர்ந்த பங்களிப்பை செய்து கொண்டுதான் இறுக்கிறான்.

கையறு நிலை வந்தபின் ரோட்டில் நிற்பது ஒன்றும் எழுச்சி இல்லை..

இன்று பத்து இலட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் மேலை தேசங்களில் வாழ்கின்றனர். ஏன் எங்களுக்கென்று அரசியல் ரீதியாக குரல் கொடுக்கக்கூடிய நாடுகளையோ, ஊடங்களையோ நாம் கொண்டிருக்கவில்லை. இது எம் பாரிய தவறு. சரி வேண்டாம் குறைந்தது ஸ்ரீலங்கன் பொருட்களுக்கு மாற்று வழி கண்டு, ஸ்ரீலங்காவுக்கான ஒட்டுமொத்தப் புறக்கணிப்பை மேற்கொண்டோமா... இல்லையே.. இந்த அவலத்திலும் அது நடக்கவில்லையே..

சரி பெரும் தவறுகள் விட்டாகிவிட்டது. இனி ஆரையும் குறை குற்றம் சொல்வதனாலோ அல்லது நடந்தவைகளை போஸ்ட் மோர்ட்டம் செய்வதனாலோ ஆவது எதுவுமில்லை. இனியாவது சுயநலத்தை கொஞ்சம் குறைத்து நம்பிக்கையை கைவிடாமல் இயன்றவரை எம்மாலனதைச் செய்வோம்.

அமெரிக்கக் கப்பல் ஒன்றும் தமிழர்களைக் காப்பதற்கு வரவில்லை, இதுவும் சிறிலங்கா அரசிற்குக் கொடுக்கப்படும் காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசு ஒரு கண்டனமும் தெரிவிக்காத நிலையில் தவிச்ச முயல் அடிக்க தான் வந்துள்ளார்கள் என்று சந்தேக பட வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு தமிழ் மக்கள் மீதான அக்கறையோ அல்லது மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதன் மீதான கரிசணையோ அல்ல.

தனது இந்து சமுத்திர நலன் தொடர்பான நகர்வே இது. இந்து சமுத்திரத்தில் தனக்கான முதல் எதிரியான சீனா விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு உதவி செய்கிறேன் என்ற போர்வையில் சிறீலங்காவை தனது பிடிக்குள் எடுத்துவிடுமோ என்ற அச்சத்தின் பிரதிபலிப்பே இதுவாகும். அதுமட்டுமன்றி சிறீலங்காவை ரஷ்சியாவும் தனக்குள் எடுத்துவிடுமோ என்ற அச்சத்தின் பிரதிபலிப்புக்களே இவை.

இந்த அறிவிப்பின் மூலம்.. சிறீலங்காவை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதும் சீனாவை ரஷ்சியாவை மறைமுகமாக எச்சரிப்பதுமே நடத்தப்படுகிறது.

சிறீலங்காவுக்கான கடனை தள்ளி வைத்ததும் ஒன்றும் தமிழ் மக்கள் மீதான அக்கறையில் அல்ல. சிறீலங்கா இன்னும் தம்மை விட்டு விலகிப் போய் விடக் கூடாது என்ற வகைக்கு அதனை கையாளவே...!

அமெரிக்காவினது தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாற்றங்கள் சீனா ரஷ்சியா ஈரான் போன்றவை நோக்கி சிறீலங்கா அதிக நாட்டம் கொண்டதன் விளைவைக் கட்டுப்படுத்தவே அன்றி வேறிற்கில்லை..!

எமது பலத்தை சரியான வழிக்கு கட்டி அமைக்காமல் எதிரியின் பலத்தை குறைவாக மதிப்பிட்டதன் விளைவையே நாம் இன்று எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். எப்போ இறுதி யுத்தம் என்று பகிரங்கமாக இராணுவ வீராப்புக் காட்டத் தொடங்கினமோ அப்பவே சிங்களவன் இராணுவ ரீதியில் உசாராகிட்டான். சர்வதேசமும் உசாராகிட்டு. உசாராக்கின நாங்கள்.. உசாரின்றிப் போனதே இன்றைய இப்பேரழிவுகளுக்குக் காரணம்..! இப்போ எமக்குள்ள ஒரே வழி உலகெங்கும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து எமது இலட்சியத்தை அடைவதே அன்றி வேறில்லை..! ஆயுத ரீதியில் எனி மீண்டும் பலம்பெற்று தமிழீழம் அமைக்க முடியும் என்பது அத்துணை இலகுவான காரியமன்று..! :icon_idea::o:(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அத்தனையையும் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். நான் நினைக்கின்றேன் எங்களால் மேற்கொள்ளப்பட்ட அறவழிப்போராட்டங்களும் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படவில்லை என்றும் தோன்றுகின்றது.

எங்களால் பாவிக்கப்பட்ட பதாதைகளும், கோசங்களும் உறுதியான முறையில் கையாளவில்லை. இதையே சர்வதேசநாடுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தப்போகின்றார்கள், அதாவது மக்களை காப்பாற்றுங்கள் என்றோம் எல்லாம் முடியும்வரை காத்திருந்துவிட்டு இப்போது எங்களது கோரிக்கையை செவிசாய்த்தமாதிரி பாசாங்கு காட்டுகின்றார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள் என்பதையும், தமிழீழ விடுதலைப்புலிகள் தான் எங்களது ஏக பிரதிநிதிகள் என்பதையும் உறுதியுடனும், இடைவிடாதும் குரல் எழுப்பி வந்திருக்கவேண்டும் ஆனால் நாங்கள் ராஜதந்திர நகர்வு என்று சில சமயங்களில் தேசியக்கொடியையே கீழே இறக்கியிருந்தோம்.

ஆகவே தான் நான் நினைக்கின்றேன் எங்களது கவனயீர்ப்பு போராட்டங்கள் யாவும் சரியான முறையில் ஒருங்கமைக்கப்படவில்லை , இடத்திற்கு இடம் வேறுபட்டவையாகவே தோன்றுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.