Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களை போல் முட்டாள்கள் உலகில் இருக்கவே முடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான உறவுகளே எமது மக்களின் உயிரின் மேல் ஆணையாக உங்களை போல தமிழீழ மண்ணின் மேல் ஆசை வைத்தவர்களில் நானும் ஒருவன். என்றாலும் எமது மக்களில் இழப்புகள் ஆதீதமானைவை. யாரும் கண்டு கொள்ளவில்லை. அனாதைகளாக எமது மக்கள் ஆக்கப்பட்டுளோம். வீதி வீதியாக நாடு நாடாக மொழி வாரியாக எமது புலம் பெயர்ந்த மக்களால் எடுக்கப்பட்ட போராட்டங்கள் எதுவும் ஏன் எடுபடவில்லை? மாறாக ஆயிரக்கணக்கான மக்கள் சான்றிலாமல் கொல்லப்பட்டது தான் மிச்சம். மீண்டும் ஏதாவது போராட்டங்கள் உலக அளவில் இனி மேல் எடுபடும் எனில் எங்களை போல் முட்டாள்கள் உலகில் இருக்கவே முடியாது.

உதாரணமாக வெள்ளை கொடியோடு சென்ற போராளிகளே உலகுக்கு தெரிந்தே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை நாம் செய்யத்தவறிய ஒரு முக்கியமான காரியம், இவ்வளவு தமிழர்கள் புலத்தில் இருந்தும் அரசாங்கத்திற்க்கு நம் பிரதிநிதிகளை அனுப்பாதது. இனிமேலாவது ஒற்றுமையாக ஒரு தமிழரை தத்தமது நாடுகளில் தேர்ந்தெடுத்து அனுப்புவது மிகவும் அவசியம்.

ஐநாவை நம்பி எந்தபயனும் இல்லை என்று ஐநாவே சொல்லிவிட்டது. அவர்கள் சொல்லுவதும் உங்கள் அரசாங்கத்தை பொய் கேளுங்கள் என்று தான். ச்விச்ஸ் இல ஐநா முன் நடந்த இந்த கவன ஈர்ப்பின் ஒரு பகுதியை கேளுங்கள் :

http://www.youtube.com/watch?v=tFkurey5y84

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான உறவுகளே எமது மக்களின் உயிரின் மேல் ஆணையாக உங்களை போல தமிழீழ மண்ணின் மேல் ஆசை வைத்தவர்களில் நானும் ஒருவன். என்றாலும் எமது மக்களில் இழப்புகள் ஆதீதமானைவை. யாரும் கண்டு கொள்ளவில்லை. அனாதைகளாக எமது மக்கள் ஆக்கப்பட்டுளோம். வீதி வீதியாக நாடு நாடாக மொழி வாரியாக எமது புலம் பெயர்ந்த மக்களால் எடுக்கப்பட்ட போராட்டங்கள் எதுவும் ஏன் எடுபடவில்லை? மாறாக ஆயிரக்கணக்கான மக்கள் சான்றிலாமல் கொல்லப்பட்டது தான் மிச்சம். மீண்டும் ஏதாவது போராட்டங்கள் உலக அளவில் இனி மேல் எடுபடும் எனில் எங்களை போல் முட்டாள்கள் உலகில் இருக்கவே முடியாது.

உதாரணமாக வெள்ளை கொடியோடு சென்ற போராளிகளே உலகுக்கு தெரிந்தே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

Edited by Valvai Mainthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது சக்திகள் ஒருங்கிணைக்க பட வேண்டும்.எமது மக்கள் இறக்கும்போது இந்த குருட்டு உலகம் கவலைப்படாத வரை நாமும் யாருக்காகவும் கவலை பட தேவை இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை மைந்தன், முன்னை நாள் லெபனிய போராளியும் நண்பரும் கூட என்னை இப்படி ஒரு கேள்வி கேட்டு சிந்திக்க வைத்தார் . சின்ன பிள்ளை போல் கலங்க கூடாதாம். புலிகள் போல வீரமானவர்களை இன்னும் தன் வாழ் நாளில் காணவில்லையாம். இவ்வளவு மக்கள் போராளிகளின் இழப்புக்கு பின் நாம் இந்த உலகத்தை நம்பி இருப்பது சுத்த முட்டாள் தனம்.சிலவற்றை நாம் மற்றவர்களிடம் தான் கற்க வேண்டும்.

னுணாவிலான்,

பலம் இருக்கும்வரை தான் எங்களுகு மதுப்பும் மரியாதையும் இருக்கும் என்பதை நான் ஏற்றுகொள்கிறேன், அதே நேரத்தில் விட்ட தவறை திரும்பவும் விடேலாது. அதாவது நடந்து முடிந்த பல நொகழ்வுகளின் திரைமறைவு காரணகாரியங்களை நாம் அறியவேண்டும். அதற்கேதாற்போலவே காய் நகர்த்தவேண்டும்.

இலங்கையின் அணுகுமுறையால் விருத்தியடையும் சக்தியொன்றின் மூலமே எம்மால் மீண்டும் பலம்பெறமுடியும். இறுதி நேரத்தில் எமக்கா ஒரு நன்பரும் இருக்கவில்லை... இதே நிலை தொடரும் போது மீடும் அதே இடத்துக்கு போகவிடமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அணுகுமுறையால் விருத்தியடையும் சக்தியொன்றின் மூலமே எம்மால் மீண்டும் பலம்பெறமுடியும். இறுதி நேரத்தில் எமக்கா ஒரு நன்பரும் இருக்கவில்லை
... இதே நிலை தொடரும் போது மீடும் அதே இடத்துக்கு போகவிடமுடியாது.

ம்ம் யாரும் நண்பரில்லை 30வருட போராட்டத்தில். இனியும் யாரை எதிர்பார்க்கிறோம்.?

நீங்கள் சொன்naது போல் அதே இடத்துக்கு போயுள்ளோம்.

சிங்கள மக்கள் தான் போரை சந்தோசமாக பார்ப்பவர்கள். அவர்களுக்கே கொடுக்க வேண்டும் அடி அவர்களால் தான் அரசுக்கு அழுத்தம் வர வேண்டும். ஒரே வழி இது தான். நாங்கள் ஊர்வலத்தில் கண்ட உண்மை 100000 மக்களை இழந்தத் தான். இந்த உலகை நம்பி மிச்ச ஆட்களை நாம் இழக்க வேண்டுமா?

இதுவரை நாம் செய்யத்தவறிய ஒரு முக்கியமான காரியம், இவ்வளவு தமிழர்கள் புலத்தில் இருந்தும் அரசாங்கத்திற்கு நம் பிரதிநிதிகளை அனுப்பாதது. இனிமேலாவது ஒற்றுமையாக ஒரு தமிழரை தத்தமது நாடுகளில் தேர்ந்தெடுத்து அனுப்புவது மிகவும் அவசியம். ஐநாவை நம்பி எந்தபயனும் இல்லை என்று ஐநாவே சொல்லிவிட்டது. அவர்கள் சொல்லுவதும் உங்கள் அரசாங்கத்தை பொய் கேளுங்கள் என்று தான்.

எந்த அரசாங்கத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பச் சொல்கின்றீர்கள் என்று விளங்கவில்லை. சிறீ லங்கா பெளத்த தீவிரவாத பயங்கரவாத அரசாங்கத்திற்கு நம் பிரதிநிதிகளை அனுப்பமுடியாது. வெள்ளைக்கொடியுடன் செல்பவர்களையே சுட்டுக்கொல்லும் காடையர்களுடன் பேச்சுவார்த்தை செய்ய ஏலாது. மேலும் சிறீ லங்கா பெளத்த தீவிரவாத அரசாங்கம் தமிழ்மக்களுக்கான (எங்கள்) அரசாங்கம் இல்லை.

எங்கள் ஆயுதபோராட்டம் தோல்வியை நோக்கிச் சென்றமைக்கு நாங்கள் - உலகத்தமிழ் மக்கள்தான் காரணம். இப்போது அனைவரும் விழித்து எழுந்ததுபோல் ஐந்து வருடங்களுக்கு முன்பு செய்து இருந்தால் தற்போது தமிழீழ தனியரசை அமைத்து இருக்க முடியும்.

இனி நொந்து பயனில்லை. இனியாவது கடமைகளைச் சரியாக, தொடர்ச்சியாக, சோர்வின்றி செய்வோம். வெல்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அரசாங்கத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பச் சொல்கின்றீர்கள் என்று விளங்கவில்லை. சிறீ லங்கா பெளத்த தீவிரவாத பயங்கரவாத அரசாங்கத்திற்கு நம் பிரதிநிதிகளை அனுப்பமுடியாது. வெள்ளைக்கொடியுடன் செல்பவர்களையே சுட்டுக்கொல்லும் காடையர்களுடன் பேச்சுவார்த்தை செய்ய ஏலாது. மேலும் சிறீ லங்கா பெளத்த தீவிரவாத அரசாங்கம் தமிழ்மக்களுக்கான (எங்கள்) அரசாங்கம் இல்லை.

அவர் நாங்கள் நாங்கள் இருக்கும் நாடுகளைத்தான் சொல்லுறார் (புலம் பெயரந்த நாடுகள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றே ஒன்று சொல்கிறேன். வி.புலிகளின் முன்னை நாள் போராளிகள் புலேந்திரன், குமரப்பா போன்றோர் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது உடனடியாக அனுராதபுரத்தில் ஒரு தாக்குதல் சிங்கள் மக்கள் மீது தொடுக்கப்பட்டது. சில பேர் அத்தாக்குதலை நாம் சிங்கள மக்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல எமது போராட்டம் என்று விட்டு இன்று அரச கட்டிலில் சுகபோகம் அநுபவிக்கிறார்கள். மாறாக பிரபாகரன் எனும் மக்கள் போராளி எல்லாவற்றையும் இழந்து கடைசியில் அவரின் பால் அன்பால் கட்டையணைக்கப்பட்ட இன்னுயிர்கள் அழிக்கப்பட்டார்கள். ஒரு சிங்களவன் கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை. மாறாக பைலா போட்டார்கள். இற்றை வரை பிரபாகரனோ நாமோ திட்டமிட்டு பயங்கரவாதிகளால் பயங்கரவாதியாக்கப்பட்டோம். இனிமேல் இனி என்ன பெய ர் எடுக்க போகிறோம் ? கிட்டத்தட்ட எமது இளையோரை திட்டமிட்டு அழித்தே விட்டான் என்று சொல்லலாம்.

வெள்ளை கொடி பிடித்தவனுக்கே இந்த நிலை எனில்?...........................................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த அரசாங்கத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பச் சொல்கின்றீர்கள் என்று விளங்கவில்லை. சிறீ லங்கா பெளத்த தீவிரவாத பயங்கரவாத அரசாங்கத்திற்கு நம் பிரதிநிதிகளை அனுப்பமுடியாது. வெள்ளைக்கொடியுடன் செல்பவர்களையே சுட்டுக்கொல்லும் காடையர்களுடன் பேச்சுவார்த்தை செய்ய ஏலாது. மேலும் சிறீ லங்கா பெளத்த தீவிரவாத அரசாங்கம் தமிழ்மக்களுக்கான (எங்கள்) அரசாங்கம் இல்லை.

எங்கள் ஆயுதபோராட்டம் தோல்வியை நோக்கிச் சென்றமைக்கு நாங்கள் - உலகத்தமிழ் மக்கள்தான் காரணம். இப்போது அனைவரும் விழித்து எழுந்ததுபோல் ஐந்து வருடங்களுக்கு முன்பு செய்து இருந்தால் தற்போது தமிழீழ தனியரசை அமைத்து இருக்க முடியும்.

இனி நொந்து பயனில்லை. இனியாவது கடமைகளைச் சரியாக, தொடர்ச்சியாக, சோர்வின்றி செய்வோம். வெல்வோம்.

ஆம். நான் சொல்லுவது புலம்பெயர்ந்த நாடுகளில் இவ்வளவு பேர் இருந்தும் நாடாளுமன்றங்களின் வெளியே தான் நிற்க்கமுடிகிறது. இந்த நிலை மாறவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் , உங்கள் கருத்து மிகுந்த வேதனையுடன் சிந்திக்கவும் வைக்கின்றது .

எமது 30 வருட போராட்டத்தில் உலகத்திலேயே தனக்கென்று விமானப்படை , நீர்மூழ்கி கப்பல் போன்றவற்றை வைத்திருந்து சாதனை படைத்த நாம் ,

எமக்கென்று அரசியல் ஆதரவு தர ஒரு சர்வதேச நாட்டையும் பெறத் தவறிவிட்டோம்.

வெறுமனே ..... தொப்பிள் கொடி உறவென்றும் ( சில தமிழக தமிழர்கள் மன்னிக்க ) , தந்தையர் நாடு என்றும் ஆதரவுக்கரம் நீட்டியும் ........,

கடைசியில் அவனே எம்மை அழிக்க சிங்களத்திற்கு துணை நின்றான் .

இறுதியில் வேதனையாக ......... உலகத்தில் மிகப்பெரிய அகதிமுகாமாகிய மனிக் பார்ம் இல் இரண்டு லட்சம் பேருடன் கின்னஸ் சாதனை படைக்க எம் உறவுகளால் தான் முடிந்தது .

இந்த 30 வருட போராடத்தில் நல்லவன் யார் ? கெட்டவன் யார் என்று அறியவே முடியாமல் ஆயுதத்தின் சத்தத்தை நிறுத்த வேண்டி வந்தது வேதனையிலும் வேதனை .

இனிமேல் முதல் படியாக சர்வதேசத்தின் அரசியல் ஆதரவை பெற காய்நகர்த்த வேண்டிய பாரிய பொறுப்பு எம்மீது உள்ளது .

நண்பர்களே நான்காம் கட்ட ஈழப்போரில் புலிகள் ஏமாந்து போயுள்ளார்களா? என்ற கேள்வி என் உள்ளே அடிக்கடி வந்துபோகின்றது.

மாவிலாறில் ஆரம்பித்த போர் இப்போது வன்னியில் முடிவடைந்துள்ளது(?) மாவிலாறு கைப்பற்றப்பட்டு கிழக்கின் மீது படையெடுப்பு நடந்துபோது (இந்த பிரதேசங்கள் புலிகள் நின்று தாக்குதல் செய்ய முடியாத பிரதேசங்கள்) இவை இராணுவத்துக்கு சாதகமான பிரதேசங்கள் என்பதால் கடைசிவரை நின்று பிடிக்காமல் தந்திரமாக பின் வாங்கியிருக்கவேண்டும். அத்துடன் இராணுவம் கிழக்கில் முழுமூச்சாக போர்புரிந்தபோது புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முயன்றிருக்க வேண்டும். ஆனால் புலிகள் அந்த நேரத்திலும் எந்த ஒரு இடத்திலும் வலிந்த தாக்குதல்களை செய்யவில்லை. இது அநேகமாக புலிகளுக்கு ஒரு பாதகமான செயற்பாடாக அமைந்திருக்கலாம். புலிகளுடைய கட்டுப்பாட்டு பகுதி நடுவில் இருந்தமையால் புலிகள் வன்னித்தாக்குதல் ஆரம்பித்தபோது நாற்புறமும் இராணுவத்தை தடுத்து வைத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளுப்பட்டனர். அந்த நேரத்தில் புலிகளால் வேறொரு பிரதேசத்தை கைப்பற்றுவதற்கான தாக்குதலை செய்யமுடியாது. புலிகள் ஒப்பந்தம் போர்நிறுத்தம் இதனால் வெளிநாடுகளை இதில் அழைக்க முயன்றிருக்கலாம் ஒப்பந்த்தை இலங்கை மீறியதானால் தங்கள் சார்பாக நிலைப்பாடு எடுக்கும் என்று நினைத்திருக்கலாம்.

ஆனால் வெளிநாடுகள் (ஐரோப்பிய) ஆயுதப்போராட்டத்தினால் எந்த ஒரு அமைப்புக்களும் வெற்றிபெறுவதை விரும்பாத ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றமையால் போர் முடியும் வரை மெளனமாக இருப்பது என்ற முடிவில் இருந்துவிட்டார்கள். இனிமேல் நிச்சயமாக அவர்கள் ஒரு தீர்வை கொண்டுவர முயற்சிப்பார்கள். இதனால்தான் இப்போர் போர்க்குற்றம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்துள்ளனர். இந்த போரில் புலிகளின் வெளிநாடுகளை எதிர்பார்த்த தன்மைதான் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

புலிகளின் முன்னே பல சந்தர்ப்பங்கள் இருந்தும் அவர்கள் தற்காப்பு போர்முறையில் இருந்ததிற்கு காரணமாக இந்திய தலையீடுதான் காரணமாக இருந்திருக்கும். இந்தியாவின் நிலைப்பாட்டினால்தான் புலிகள் சர்வதேச தலையீட்டை புலிகள் எதிர் பார்த்தனர். தற்சமயம் மறைமுகமாக எல்லா உதவிகளையும் செய்தனர். புலிகளின் கை ஓங்கியிருந்தால் நேரடியாக தலையீடு செய்திருப்பார்கள்.

இந்தியா தலையீட்டால்தான் தமிழ்மக்கள் இந்த அவலத்துக்கு தள்ளப்படஇடனர்.

பிரணாப் முகர்ஜி அண்மையில் சொல்லியிருந்தான் இலங்கை போரில் இந்தியாவின் பங்கு இருப்பதாக இந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு இலங்கைக்கான போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கும்போது இவர்களையும் அந்த விசாரணைக்கு கொண்டுவர வேண்டும் முடிந்தவர்கள் ஆதாரங்களை சேர்த்தக்கொள்ளுங்கள்

சோனியா மன்மோகன் சிங் போன்றவர்களும் தண்டிக்கப் படவேண்டியவர்களே

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஆயுதபோராட்டம் தோல்வியை நோக்கிச் சென்றமைக்கு நாங்கள் - உலகத்தமிழ் மக்கள்தான் காரணம். இப்போது அனைவரும் விழித்து எழுந்ததுபோல் ஐந்து வருடங்களுக்கு முன்பு செய்து இருந்தால் தற்போது தமிழீழ தனியரசை அமைத்து இருக்க முடியும்.

இனி நொந்து பயனில்லை. இனியாவது கடமைகளைச் சரியாக, தொடர்ச்சியாக, சோர்வின்றி செய்வோம். வெல்வோம்.

உங்கள் அனைவரது கருத்துக்களையும் படித்தபோது அனைத்திலும் இளையோடியுள்ள,துயரமும், வலியும், வேதனையும்,ஒரு பிரசவலிக்கே உரித்தான தாய்மைக்குரியதாவே காணமுடிந்தது. அந்தத் தாய்மைக்கே உரிய குணத்தோடு ஒற்றைத் தமிழினமாக ஒன்றிணைவோம் சகோதரர்களே. அந்தத் தாய் எப்படிப் ஒரு மகவைப் பிரசவிக்கும்போது, வலியையும் வேதனையையும் தாங்கிப் பெற்றெடுக்கிறாளோ அதேபோல் இந்த வலிகளையும் வேதனைகளையும் எமது பலமாக மாற்றுவோம்.எங்கள் தலைவன் ஒவ்வொரு ஆண்டும் சுடரேற்றும் போதும் அவர்முகத்திலே தெரிகின்ற உறுதி, இலட்சிய உறுதி ! அந்த உறுதி எமக்குள் வரவேண்டும். அப்போதுதான் எம்மால் எமது இலட்சியத்தை அடைய முடியும். கடந்தைவைகளை ஒரு பாடமாகக் கொண்டு எம்மை நாம் நம்புவோம். எமது கைகள் ஒன்றிணைந்தால் உலகம் எமதாகும்.

கடந்த 33வருடகால ஆயுதப்போராட்டமானது, இன்று தமிழினத்தினது உரிமைகளைப் புறந்தள்ள முடியாத ஒரு நிலையை சர்வதே அரங்கிலே தோற்றுவித்தள்ளது. இந்த நிலையை நாம் இன்னும் மேல் நோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய பெரும் முயற்சியானது எமது கைகளிலே விடப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டிலே புலம்பெயர்நாடுகளுக்கு வருகைதந்திருத்த "தாயகக் கவி" புதுவையண்ணா அவர்கள் ஒரு விடயத்தைக் கூறியிருந்தார். அதனை இன்றைய காலகட்டத்திலே, ஒரு அறைகூவலாகவே பார்க்க வேண்டியுள்ளது. அதாவது " தமிழீழ உறவுகளே எமது போராட்டத்தை உங்களின் தோளிலே சுமக்கத்தயாராகுங்கள்" அப்போது அவர் சொன்னது இன்று நிதர்சனமாகவும் , அன்றைய நாளிலே ஆழமானதொரு(நாம் கணிக்காத) செய்தியாகவும் இருந்திருக்கிறது என்பதை இன்று உணர்ந்து நிற்கிறோம். இன்றாவது நாம் சரியாக உணர்ந்து கொண்டு ஒன்றினைந்து போராடாவிடின் தமிழினம் ஈழத்தில் வாழ்ந்ததற்கான தடயங்களே இல்லாது போய்விடும். " அவலத்தைத் தந்தவர்க்கு அவலத்தைக் கொடுப்போம்" என்பது எம் தலைவனின் ஆணை. தமிழினத்திலும் உதயசிங்குகள் இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.