Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்க் கள உறவுகளிடம் ஒரு பணிவான வேண்டுகோள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க் கள உறவுகளிடம் ஒரு பணிவான வேண்டுகோள்.

யாழ்க் கள உறவுகளிடம் ஒரு பணிவான வேண்டுகோள். பரபரப்பான செய்திகளுக்கப்பால் ஒரு பக்குவம் தேவைப்படுகிறது.பரபரப்பான விடயமுமல்ல.பாரதூரமான விடயமாகும்.எனவே சற்று நிதானியுங்கள் உறவுகளே.

தற்போது வந்த செய்தியைப் பார்த்த சிலருக்கு மாரடைப்புக் கூட ஏற்பட்டுள்ளது. உளவியல் ரீதியிலான அதிர்வுகள் ஏற்பட்டு நகரமுடியாமல் இருக்கிறது. எம்வாழ்வோடு கலந்த எம்தேசிய ஒளி என்றுமே மறையாதது. ஆனால் தயவுசெய்து இத்தோடு விட்டுவிடுங்கள். தமிழினம் ஒரு நம்பிக்கையோடு நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் நிதானமான செயற்பாடுகள் தேவை.

  • Replies 52
  • Views 13k
  • Created
  • Last Reply

ஏன் இவ்வாறு யாழ் களஉறுப்பினர்கள் நடந்து கொள்;கின்றார்கள் புலிகள் மறுப்பறிக்கை 2 தடவை விட்டிருக்கின்றார்கள் இன்னும் இவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய அறிக்கை வந்துள்ளதே என்ன செய்வது???? நான் அதன் ஒலிப்பதிவை கேட்டேன். தெளிவாக கூறுகிறார். இன்னும் நாங்களே எங்களை ஏமாற்றுவதா???

உறவுகளே!

பெரும் வலியும் துன்பமும் தரக் கூடிய உண்மையை துணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். உண்மையை தொடர்ந்தும் மறுத்துக் கொண்டிருப்பது மேலும் எம்மை பின்னோக்கியே தள்ளும்.

தலைவரின் கனவினை நனவாக்குவதற்காக பாடுபடுவோம்

அய்யா!

நீங்கள் என்னதான் சொல்ல வாறிங்கள்?... நீங்கள் எங்கிருக்கிறீர்கள்?

யாரிடம் இருந்து மறுப்பு அறிவித்தல் வந்ததோ அவரே உலக தொலைகாட்சில் தெரிவித்த பின்னரும் இப்படியா?

நீங்கள் நிச்சயாமாய் ஒரு ..........?

தயவு செய்து நீங்களே உறுதிப்படுத்தி தொலைக்காட்சி செய்தி பொய் என்று நிருபிக்கவும்!

தயவுசெய்து உங்கள் முகமூடியை இனியாவது கழற்றி வைத்து விட்டு நிஜத்துக்கு வாருங்கள்.

இன்னும் யாரை ஏமாற்ற இத்தனை மறைப்புக்கள்? நான் இங்கு உறவாடிய காலத்தில் எனக்கு

ஆதரௌ தெரிவிட்த்த உறவுகளுக்கு நன்றி.

விடை பெறுவது

சூறாவளி

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அறிக்கை வந்துள்ளதே என்ன செய்வது???? நான் அதன் ஒலிப்பதிவை கேட்டேன். தெளிவாக கூறுகிறார். இன்னும் நாங்களே எங்களை ஏமாற்றுவதா???

தொடர்பை இணைத்து விடலாமே. என்ன செய்தி அது?

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை அர்த்தத்தில் கருத்துக்களை ஏன் பதிகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே!

பெரும் வலியும் துன்பமும் தரக் கூடிய உண்மையை துணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். உண்மையை தொடர்ந்தும் மறுத்துக் கொண்டிருப்பது மேலும் எம்மை பின்னோக்கியே தள்ளும்.

தலைவரின் கனவினை நனவாக்குவதற்காக பாடுபடுவோம்

LTTE leadership safe: Tiger intelligence official

[TamilNet, Friday, 22 May 2009, 09:49 GMT]

Head of International Secretariat of the Intelligence wing of the LTTE, Mr. Arivazhakan, who contacted TamilNet Friday categorically denied the reports that the LTTE leader Mr. Velupillai Pirapaharan has been killed. Mr. Arivazhakan urged the global Tamil community not to trust the "engineered rumours," being spread by the Government of Sri Lanka and its military establishment.

"Our beloved leader is alive," he said and added that the LTTE leadership will make contact with its people at a suitable time in future.

"These rumours have been set afloat to confuse the global Tamil community which has been voicing support for the liberation of Tamil Eelam," he further said.

Mr. Arivazhakan, who verified his identity through a senior reporter in Sri Lanka, did not reveal his location due to security reasons.

புதிய அறிக்கை வந்துள்ளதே என்ன செய்வது???? நான் அதன் ஒலிப்பதிவை கேட்டேன். தெளிவாக கூறுகிறார். இன்னும் நாங்களே எங்களை ஏமாற்றுவதா???

GTV இல் கண்ணிர் அஞ்சலி ஒளிபரப்புகிறார்கள் பத்மநாபன் உத்தியோகபூர்வமாக செய்தி வெளியீட்டுள்ளார்கள் செய்தி தெளிவாகவுள்ளது

னுணாவிலான்,

தலைவர் இறந்து விட்டதாக TVTl பத்மநாதன் இன்று அறிவித்துள்ளார்...

தலைவர் இருப்பது உறுதி

தயவு செய்து நிஜத்தோடு தொடர்பு கொண்டு எங்களுக்கும் ஒரு நற்செய்தியை சொல்லுங்கள்.

தலைவர் இருப்பது உறுதி

யாருடையா கற்பனையும் இனி நம்பப்படுவதாய் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

என்னையும் நம்ப வேண்டாம்.... மற்வர்களையும் நம்பவேண்டாம்.... கார்த்திகை 27 வரும் வரை காத்திருங்கள்

இணைப்புக்கு நன்றி நுனாவிலான்,

உங்கள் நம்பிக்கைக்காகவேனும் இயற்கைதலைவரை ஒருநாள் மீட்டுவராதா?

Edited by Sooravali

தலைவர் என்றும் எம்முடன் இருப்பார். அவருடைய சிந்தனைகள் எம்மை வழிநடத்தும். அவர் உருவாக்கியுள்ள விடுதலைத் தீ என்றும் அணையாது.

ஆனால் அவர் இன்று உயிருடன் இல்லை. மனம் ஏற்காது விட்டாலும் இதுதான் உண்மை. இதை மறுத்து எம்மை நாமே ஏமாற்றி, பெரும் குழப்பத்தில் சிக்கி, எதிரிக்கு சாதகமான நிலையை நாம் உருவாக்க வேண்டாம்.

இப்படியான ஒரு நிலையை தலைவர் விரும்ப மாட்டார்.

தலைவர் பற்றிய சந்தேகங்கள் எமது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு பெரும் தடங்கலாக இருக்கின்றது. ஆகவே உண்மையை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை தொடர்வோம்.

இப்பொழுது வர வேண்டியது கண்ணீர் அல்ல. பெரும் கோபம். எரிமலை போன்ற ஒரு கோபம். சிங்களத்தை சுட்டெரிக்கின்ற கோபம்.

நுனா நீங்கள் இணைத்ததில் என்ன இருக்கின்றது எனக்கு பார்க்க முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

:unsure::D:lol: தயவுசெய்து அனைவரும் அமைதி காக்கவும் சில விடையங்கள் எப்போதோ நடந்து முடிந்து விட்டது, பற்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் அனைவருக்கும் வேண்டும்

இப்போதைக்கு இதைவிட கூறக்கூடியது எதுவம் இல்லை.

காலம் வரும்போது இதுபற்றிய விபரங்கள் வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளே

GTV வேலை செய்யவில்லை... யாருடைய வேலை இது?

எம்மை நாமே ஏமாற்றவில்லை..... சிங்கள பேரினவாதம் தான் செய்கிறான்..... எம் ஒற்றுமையை உடைக்க பார்க்கிறான

;என்னையும் நம்ப வேண்டாம்.... மற்வர்களையும் நம்பவேண்டாம்.... கார்த்திகை 27 வரும் வரை காத்திருங்கள்

இதுவும் வதந்தியாக இருக்க வேண்டும் கடவுளே

  • கருத்துக்கள உறவுகள்

நுனா நீங்கள் இணைத்ததில் என்ன இருக்கின்றது எனக்கு பார்க்க முடியவில்லை

GTV வேலை செய்யவில்லை... யாருடைய வேலை இது?

15 நிமிடமாக GTV வேலை செய்யவில்லை ஏனென்று தெரியவில்லை

அன்புகளே

தயவு செய்து இந்த ஆராச்சி போதும்.இதன் பின் புலத்தில் றோ இயங்குகிறது என்பது தெட்ட தெளிவான உண்மை,இப்போ அவர்களே பத்மனாதன் அல்ல யாரையும் கொண்டு சொல்ல வைக்கலாம்.யதார்த்தமாக இப்போ பாரிய விளைவுகளை ஏற்படுத்திகொண்டிருக்கும் புலம்பெயர் நாடுகளின் மக்கள் புரட்சியை முடிவுக்கு கொண்டுவரவே எல்லாரும் வழி சமைப்பதாக தெரிகிறது.தலைவரின் ஆசையே மக்கள்புரட்சி வெடிக்க வேண்டும் அதன் மூலம் ஆயுத போராட்டம் முடிவுறும் என்பதுதான்.அது இப்போ பாரிய அளவில் விஸ்வரூபமெடுத்துள்ளது.அதை யாருமே குழப்பவேண்டாம் .இப்படியான செய்திகள் மக்கள் மனதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.கனடாவில் நாலு பிள்ளைகளின் தந்தையொருவர் தற்கொலை செய்ய வெளிக்கிட்டு தற்போது போலிஸ் பாதுகாப்பில் உள்ளார்.இப்படீன்னும் தெரியாமல் எவ்வளவோ இருக்கலாம்.அதைவிட அமெரிக்கா முன்னெடுக்கும் சுயனிர்ணய தமிழரின் உரிமைக்கான செயற்பாட்டுக்கு ஆதரவு வழங்குவோம்.ஆராச்சி செய்யவேண்டுமானால் போனமாதம் கொழும்பில் கைதான பிரபாகரனை ஒத்த உருவமுள்ள சுதுமாத்தையா எங்கே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.