Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழப் புற நிலை அரசு

Featured Replies

  • தொடங்கியவர்

கலைவாணி,

உங்களுக்கு புறநிலை அரசு பற்றித் தெரியவில்லை என்பது தெரிகின்றது. நீங்கள் பேசாமல் மனித உரிமைக்கான போராட்டங்களில் கவனம் செலுத்துங்கள். மகிந்தவையும் தூக்கில் போடுங்கள்

அப்படியே இன்று ஐநா சபையின் மனித உரிமை கவுன்ஸிலின் தீர்மானங்களையும் ஒருமுறை முழுமையாக படித்துப் பாருங்கள்.

சிலருக்கு தாம் தகுதி அற்ற முறையில் இதுவரை செய்து வந்த அதிகாரங்கள் பறி போய் விடுமோ என்று அச்சம். முளைத்திருந்த கொம்புகள் முறிந்து போய் விடுமோ என்று கவலை. அதனால் புதிய வடிவில் போராட்டங்களை செய்வது பற்றி சிந்திக்கின்ற பொழுது அதைக் கொச்சைப் படுத்த முனைகிறார்கள்.

  • Replies 102
  • Views 11.1k
  • Created
  • Last Reply

வணக்கம்,

கனடாவைப் பொறுத்தமட்டில் சுமார் 25இற்கும் மேற்பட்ட யாழ்கள உறவுகள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து இருக்கின்றோம். மேலும், யாழ் இணையம் மூலம்தான் இப்படியான விடயங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று இல்லை. தவிர, உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் யாழ் கள உறவுகளுடன் தொலைபேசி மற்றும் இதரவழிகளில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இருக்கின்றது. அதாவது யாழ் உறவுகள் கணணி முன்னால் இருந்து இன்னொரு கணணியுடன் கதைத்துவிட்டு போகவில்லை என்பதை அறியாதவர்கள் அறிந்துகொள்ளுங்கள்.

புதிய சிந்தனைகள், செயற்பாடுகள் எப்போதும் வரவேற்கத்தக்கவை. திரும்பத் திரும்ப ஒரே மாவை அரைத்துக்கொண்டும் இருக்க முடியாது. நடைமுறைச் சாத்தியங்கள், பிரயோகங்கள் என்பது வேறு. ஆனால்.. சிந்தனைகள் உருவாக்கப்படுவதில், பகிரப்படுவதில், திறந்தவாதம் செய்யப்படுவதில் தவறு இல்லை. கருத்துப்பரிமாற்றம் செய்பவர்கள் குறிப்பிட்ட சிந்தனையை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் இல்லை. பல்வேறு மட்டங்களில் இருந்து சேவைகள் செய்பவர்கள், பொறுப்பில் இருப்பவர்களிற்கு இப்படியான சிந்தனைகள் போய்ச்சேர்ந்தால்.. அவர்கள் ஆக்கபூர்வமான தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டால் அதுவே பெரியதோர் விடயம்.

மேலும், ஒரே நேரத்தில் ஒரே நடவடிக்கை அல்லது சிந்தனையில்தான் எல்லோரும் கவனத்தை செலுத்தவேண்டும் என்று இல்லை. பல படிமுறைகளாக பலப்பல விடயங்களில் பலர் கவனம் செலுத்தவேண்டும். இந்தவகையில் சபேசன் அவர்களின் இந்த விவாதத்தை நான் வரவேற்கின்றேன். இதுசம்மந்தமாக எனது கருத்துக்களையும், சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்வேன்.

நன்றி!

  • தொடங்கியவர்

கூக்கு சொன்ன கருத்து ஒரு சரியான கருத்து. இதை அம்பலப்படுத்தாமல் எமக்குள் பேசி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று சொன்னதில் இருந்து அவர் புறநிலை அரசின் வீரிய தன்மையை உணர்ந்திருக்கிறார் என்று புரிகிறது.

புறநிலை அரசு பற்றி சிலர் ஏற்கனவே பேசி வருகிறார்கள். நான் கடந்த ஒரு வாரமாக இதைப் பற்றி பலருடன் விவாதித்து வருகின்றேன்.

புறநிலை அரசு என்னும் திட்டத்தை பெரும்பாலானவர்கள் வரவேற்கிறார்கள். மக்களிடம் இதைப் பற்றி தெளிவு படுத்தி விட்டு மெதுவாகச் செய்யலாம் என்று சிலர் சொல்கிறார்கள். உடனடியாக பாரிய எடுப்பில் செய்யலாம் என்று பலர் சொல்கிறார்கள்.

ஆனால் ஒரு சிலர் இந்தத் திட்டத்தை எதிர்க்க முற்பட்டார்கள். அவர்களால் போராட்டத்தை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தம்மிடம் உள்ள அதிகாரத்தை இழக்காமல், இதுவதை அடித்த அதே கூத்துக்களை அடிப்பதே அவர்களுடைய நோக்கம்.

இதை அடுத்தே நான் புறநிலை அரசு பற்றி வெளிப்படையாக எழுதுவதற்கு முடிவு செய்தேன். இங்கே பலர் இதை ஆதரிப்பது ஒரு நல்ல விடயம். இதை ஒரு ஊக்கமாக எடுத்துக் கொண்டு இதற்கான அடுத்த வேலைத் திட்டங்களில் ஈடுபடுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்ரேல் எனும் நாடு உருவாகிய வரலாறு தெரிந்தவர்களுக்கு புறநிலைஅரசு பற்றி விளக்கம் தேவையில்லை.

மற்றவர்களுக்கு எமது பிரச்சனையை விளக்குவதற்கு நாம் எடுத்த பிரம்புதான் பிழையாகி விட்டது போல் தெரிகின்றது.

இனிமேல் புதிய வழிமுறைகளுடன் புதிய பாதையில் தமிழீழத்திற்கான பாதையை ஒரு குடையின் கீழ் எல்லோரையும் அரவணைத்து மாற்றுகருத்துக்கள் இல்லாமல் முன்னெடுத்து செல்வோம்.

வெற்றி நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ மனித உரிமையை வலி உறுத்தி போராடுவோம் அதில் சிஙகளவன் சிக்குவான். அடுத்து அரசியல் உரிமைக்கு போராடுவோம். கொஞ்சம் காத்திருங்கள்........

கன பேருக்கு கதிரை மேசை, மகானாடு, மேடைப்பேச்சு, விழாக்கள் அஞ்சலி நிகழ்வு, குத்துவிளக்கு ஏற்றல் என அமர்க்களம் பண்ணுவதற்கு களம் தேவைப்படுபோல கிடக்கு.

கொஞ்ச நாளைக்கு இளையவர் எமக்கு துணையாக வாருங்கள்.

நீங்கள் சொல்வதும் சரியே.

மாவிலாறில சண்டை தொடங்கேக்க.. குறட்டை விட்டுக் கொண்டிருந்தவை.. கிளிநொச்சி பிடிபடும் வரை இறுதி யுத்தக்கனவில இருந்து கொண்டிருந்தவை.. ஓயாத அலைகள் 3 இன் தாக்கத்தின் பகற் கனவில கிடந்தவை.. அதன் பிறகு தானே வீதிக்கு இறங்கினவை.

இப்ப புறநிலை அரசு அமைச்சு தமிழீழம் பெறப் போகினமாம்.. பொறுத்திருந்து பாருங்கோவன்.. கூத்துகளை. ஆளுக்காள் அடிப்படுங்கள்.. புற நிலை அரசில் நான் தான் தலைவன்.. நீதான் மந்திரி.. என்று கொண்டு.. பிடுங்குப்படத்தான் இந்த ஆயத்தம். உவைக்கு எனிச் சிறீலங்கா போய் தாயகம் கேட்டுப் போராடப் பயம்.. அல்லது சொகுசு பறிபோகிடும் என்ற பீதி. அதுவும் வேணும்.. இதுவும் வேணும் என்றால்.. எனி புறநிலை.. அக நிலை என்று சொல்லிக் கொண்டு திரிய வேண்டியதுதான்.

எல்லாரும் அக நிலை அரசு ஒன்று அமையுங்கோ. ஆளாளுக்கு உங்க உங்க மனசுக்க தமிழீழம் அமைச்சீங்கள் என்றால் உலகம் அதை அப்படியே அங்கீகரிக்கும்.. பாருங்கோ..!

35 வருட காலத்தில புலிகள் செய்ய நினைக்காததை இவை செய்யப் போயினமாம். சொந்தத் தலைவனை மக்களை பாதுகாக்க முடியாதா கையாலாகததுகள்.. வந்திட்டுதுகள் புறநிலை அலகு அமைச்சு ஈழம் அமைக்கப் போகினமாம்.

எமது இறுதி மணி நேரங்கள் ஏதாவது செய்யுங்கள் என்ற அறிவிப்பு வந்தும் கூட கைலாயாலாகதவர்களா இருந்து தலைமையைப் பறிகொடுத்து தேசத்தைத் தாரைவார்த்திட்டு.. எனித்தானாம்.. புற நிலை அரசு அமைச்சு.. தமிழீழ இலட்சியம் காவப் போகினம்.. அடுத்தது சந்ததிக்கு...!!

முதலில் எண்ணத்தில் உள்ள புற நிலை அரசையாவது காக்க முடியுமோ என்று பரிசீலியுங்கோ. இல்ல 35 வருடம் போராடின தலைவனைக் கைவிட்டது போலத்தான் உதுகளையும் விட்டிட்டு.. சாமத்திய வீடும்.. கலியாண வீடும் என்று அலைவியள்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான் என்ன விரக்தியில கதைக்கிறது மாதிரி இருக்கிது. எதிர்மறையாக சிந்திக்காமல்.. நல்லது நடக்கும் என்று நினைத்து சிந்திக்கலாமே. நான் அறிந்தவரை வெளிநாடுகளில் வாழும் தமிழ்மக்கள் சும்மா குந்திக்கொண்டு இருக்கவில்லை. முழு உலகமுமே திரண்டு நின்று எங்களுக்கு எதிராக நின்றபோது இதைவிட வேறு எவ்வாறான முடிவை எதிர்பார்த்து இருக்க முடியும்?

இறுதியில் கை குடுக்காதவர்கள் யார். எந்த நம்பிகையில் இறுதிவரை காத்திருந்தார்கள் என்ன நடந்தது, என்ன நடக்கும் என்று எதிர்பார்தார்கள். யார் நம்பிக்கை துரோகம் செய்தது.

இப்ப அறிக்கை விடுபவர்கள் கிழி நெச்சிக்கு முன் எல்லோரையும் தெருவுக்கு இறங்கும் படி அறிக்கை விட்டு இருக்கலாமே.

பெருசுகளின் கதையை கேட்காமல் என்னைப்போல் தெருவுக்கு இறங்காவிட்டால்?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் என்ன விரக்தியில கதைக்கிறது மாதிரி இருக்கிது. எதிர்மறையாக சிந்திக்காமல்.. நல்லது நடக்கும் என்று நினைத்து சிந்திக்கலாமே. நான் அறிந்தவரை வெளிநாடுகளில் வாழும் தமிழ்மக்கள் சும்மா குந்திக்கொண்டு இருக்கவில்லை. முழு உலகமுமே திரண்டு நின்று எங்களுக்கு எதிராக நின்றபோது இதைவிட வேறு எவ்வாறான முடிவை எதிர்பார்த்து இருக்க முடியும்?

குந்தி இருக்கும் மட்டும் இருந்திட்டுத்தான்.. Too Late இறங்கினவை. அதை மறக்கவோ மறைக்கவோ கூடாது. அதுவும் தான்.. எதிரி போருக்கு தன்னை ஆசுவாசமா தயார்படுத்த உதவியது..! :rolleyes:

புறநிலை அரசு என்ற சிந்தனைக்கு சாதகம் மற்றும் பாதகம் பற்றி பேசுவதே சிறந்தது!

இது யாருடையவழியையும் மறித்துக் கொண்டும் நிற்கவில்லை!

அதைவிடுத்து ஆற்றமையில் அரற்றுவது தேவையற்ற விடையம்!

தங்கள் நையாண்டிகளை தாங்களே கண்ணாடியின் முன்னின்று செய்வது சாலச்சிறந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

புறநிலை அரசு என்ற சிந்தனைக்கு சாதகம் மற்றும் பாதகம் பற்றி பேசுவதே சிறந்தது!

இது யாருடையவழியையும் மறித்துக் கொண்டும் நிற்கவில்லை!

அதைவிடுத்து ஆற்றமையில் அரற்றுவது தேவையற்ற விடையம்!

தங்கள் நையாண்டிகளை தாங்களே கண்ணாடியின் முன்னின்று செய்வது சாலச்சிறந்தது!

புற நிலை அரசு.. அமைச்சு.. அதற்கு டக்கிளஸ் தேவானந்தாவை தலைவராகவும்.. சங்கரி அம்மானை செயலாலராகவும்.. கருணாவை பொருளாராளராகவும்.. யாழில் உள்ளவங்களை உறுப்பினராகவும் அமைத்தால்.. இந்தப் பூமி உள்ளவரை தமிழீழம் கனவில் உருவாகிக் கொண்டே அடுத்ததடுத்த சந்ததிகளுக்கு காவுப்பட்டுக் கொண்டிருக்கும்.

இதுதான் சாதகமான நிலை. ஆனால் சிறீலங்கா சுத்த சிங்கள பெளத்த தேசமாக உருவாகி.. மிளிர்ந்து கொண்டிருக்கும்..!

அதற்குப் பிறகு அவரவர் முகத்தை கண்ணாடியில் பார்க்கத் தேவையில்ல சிங்களவன் அனுப்பிற எஸ் எம் எஸ்ஸில பார்த்தால் தெரியும்..! :rolleyes:

  • தொடங்கியவர்

35 ஆண்டுகளாக புறநிலை அரசை விடுதலைப் புலிகள் அமைக்காததன் காரணத்தை ஏற்கனவே விளங்கப்படுத்தியுள்ளேன்.

ஒரு நாட்டின் அரசு அந்நியர்களால் விரட்டி அடிக்கப்படுகின்ற பொழுது, அந்த நாடு புறநிலையில் (வெளிநாட்டில்) ஒரு அரசை உருவாக்கும்.

விடுதலைப் புலிகள் தமது நாட்டை மீட்டெடுத்தார்கள். அங்கே ஒரு நடைமுறை அரசை உருவாக்கினார்கள். அந்த நடைமுறை அரசுக்கான உலக அங்கீகாரத்தை கோரி போராடினார்கள்.

ஆகவே தாயகத்தில் ஒரு அரசை நடத்திக் கொண்டு புறநிலையில் இன்னொரு அரசை உருவாக்க முடியாது. அப்படிச் செய்வது விடுதலைப் புலிகள் தாயகத்தில் கொண்டிருந்த நடைமுறை அரசை நிராகிரிக்கும் ஒரு செயலாகும்.

இதனாலேயே தாயகத்தில் ஒரு அரசைக் கொண்டிருந்த புலிகள் புறநிலை அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.

இன்றைக்கு தாயகத்தில் இருந்த அரசு எதிரிகளால் இல்லாமல் செய்யப்பட்டு விட்டது. எமது அரசு தாயகத்தில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புறநிலையில் அரசை நடத்துவது பற்றிய விவாதங்கள் எழுகின்றன.

புறநிலை அரசில் ஆயிரம் பிரச்சனைகள் வரட்டும். பதவிப் போட்டிகளும் நடக்கட்டும். மற்றைய அரசுகளில் இவைகள் இல்லையா? அதற்காக அவர்கள் அரசு வேண்டாம் என்றா சொல்கிறார்கள்.

தமிழர்கள் ஒரு பாராளுமன்றத்தை நடத்துவதற்கு கூட அருகதை அற்றவர்கள் என்றால், எதற்காக தமிழீழத்திற்கு ஆசைப்படுகிறார்கள்?

தமிழர்களால் ஒரு அரசை, பாராளுமன்றத்தை நடத்த முடியும் என்பதை உலகுக்கு எமது புறநிலை அரசு உணர்த்த வேண்டும். எமது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் எங்கிருந்தாலும் தமது தாய்நாடு தமிழீழம் என்று சொல்ல வேண்டும்.

தமிழீழம் அகநிலையில் இருப்பதற்கும் புறநிலை அரசு உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே தாயகத்தில் ஒரு அரசை நடத்திக் கொண்டு புறநிலையில் இன்னொரு அரசை உருவாக்க முடியாது. அப்படிச் செய்வது விடுதலைப் புலிகள் தாயகத்தில் கொண்டிருந்த நடைமுறை அரசை நிராகிரிக்கும் ஒரு செயலாகும்.

இதனாலேயே தாயகத்தில் ஒரு அரசைக் கொண்டிருந்த புலிகள் புறநிலை அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.

தமிழீழம் அகநிலையில் இருப்பதற்கும் புறநிலை அரசு உதவும்.

1986 இல் இருந்து யாழ் குடாநாடு உட்பட பல தமிழீழ பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. 1987 இல் இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் தமிழீழம் முழுவதையும் ஆக்கிரமித்து நின்ற போது கூட தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியப் படைகளிடம் சரணடையவில்லை. மாறாக தமிழீழக் குக்கிராமங்களில் இருந்து தமது போராட்டத்தளத்தை நிர்ணயித்துக் கொண்டார்கள்.

அப்போது கூட விடுதலைப்புலிகள் தமிழீழ அரசை தமிழீழ எல்லைகளுக்கு அப்பால் போலியாக உருவாக்க நினைக்கவில்லை. தமிழீழப் பிரகடனத்தைக் கூட செய்ய பல வாய்ப்புக்கள் இருந்த போதும் தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேச அங்கீகாரமற்ற நிலையில் அவ்வாறான ஒன்றைச் செய்ய முன்வரவில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டில் தமிழ் மக்கள் மட்டில் உருவாகி இருந்த சில நிர்வாகக் கட்டமைப்புக்களின் அடிப்படையில் தமிழீழ அரசு இயங்கியது என்பது உண்மையல்ல. தமிழீழ அரசுக்குரிய சில கட்டமைப்புக்கள் இருந்தன. ஆனால் சிறீலங்காவின் அரச அதிபர்களே அனைத்து மாவட்டங்களையும் சிவில் அலகுகளையும் நிர்வகித்தனர். இடைவெளி ஏற்பட்டிருந்த நீதி காவல்துறை அலகுகளே தமிழீழ விடுதலைப்புலிகளால் நிரப்பீடு செய்யப்பட்டன.

தமிழீழ மக்களின் பங்களிப்போடு ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழீழ அரசு ஒன்றை விடுதலைப்புலிகள் இயக்கி இருப்பின் நிச்சயம் அதனைப் பிரகடனம் செய்திருப்பர். வெட்டிக்கு காத்துக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தமிழீழ அரசு என்பதற்கான சர்வதேச அங்கீகாரம் என்பதே முதன்மை காரணியாக இருந்தது.

இன்று தமிழீழ அலகு என்ற ஒன்றே உலகில் அடையாளமிடப்பட முடியாத நிலையில்.. சிறீலங்கா ஐக்கியப்பட்டுள்ளதாக முழு உலகமும் நம்பும் வேளையில்.. புறநிலையில்.. ஒரு தமிழீழ அரசு அர்த்த புஸ்டியாக அமையுமா.. அதற்கான சட்ட வலு இருக்கிறதா... அதுவும் தமிழ் மக்களை ஏமாற்ற அமையும் ஒரு மாயையா.. போன்ற வினாங்களுக்கு அர்த்த புஸ்டியான பதில்கள் இருக்கின்றனவா.. என்றால் அதுவும் இல்லை..!

எந்த ஒரு போராட்டமும் அதன் நிலப்பரப்புக்கு அப்பால் போராடி வெல்லப்பட்டதாக வரலாறில்லை..! :rolleyes:

Edited by nedukkalapoovan

சரி புற நிலை அரசு தேவை இல்லை

புலம்பேர் மாந்தைகள் வீதில் இறங்கி போராடியது காணாது

நிலப்பரப்புக்கு வெளியால வெல்லப்பட்டதாக வரலாறில்லை (அப்போது புலத்தில் போராட்டங்கள் எதுக்கு)

த.தே.கூ மைப்பையும் தொண்டு நிறுவனங்களையும் வைத்து தமிழருக்கு நீதி கிடைக்க வழி செய்வதோடு

காசு சேர்த்து உங்கட மிச்ச உறவுக்கு சிங்கள ரியூசன் எடுத்து திருத்தி விட்டா பிரச்ச்னை முடிஞ்சுது.

இன்னும் 2 வருடத்தில தே.கூ மைப்பு வேணுமெண்டா இருக்கும் ஆனா .த.தே.கூ இருக்காது.

இனி நாங்கள் இங்க வந்து ஏன் நாறுவான்?

தமிழீழம் அகநிலையில் இருப்பதற்கும் புறநிலை அரசு உதவும்.

இந்த களம் புறநிலை அரசொன்றினை அமைப்பதில் / நடாத்துவதில் உள்ள சாதக பாதகங்களையும், புலம்பெயர் சமூகத்துள் இதற்கு கிடைக்ககூடிய வரவேற்பு/ அங்கீகரமெத்தகையதாக இருக்கும் என்பதுபற்றியதான விவாத மேடையக மட்டுமன்றி,இதுவரை தேச விடுதலைக்காக பாடுபட்டுக்கொண்டிருப்பவர்க

�ின் பட்டறிவினையும் ஆதரவினையும் இணைத்துக்கொள்ளும் வழிகளையும் ஆராயவேண்டும்.

Edited by mekan

  • தொடங்கியவர்

தாம் ஒரு நிழல் அரசை (de facto State) நடத்துகின்றோம் என விடுதலைப் புலிகளே பல முறை குறிப்பிட்டுள்ளனர். ஆகவே அதைப் பற்றி அதிகம் விவாதிக்கத் தேவையில்லை. ஒரு நாட்டுக்கு இரண்டு நிழல் அரசுகள் இருக்க முடியாது என்பதனாலேயே அன்றைக்கு புறநிலை அரசு பற்றிய பேச்சு எழவில்லை.

இன்றைக்கு உலக மயமாக்கல் என்னும் காலத்தில் வாழ்கின்றோம். தகவற் தொழில் நுட்பம் வேறு பெரும் புரட்சி செய்தபடி இருக்கின்றது. எங்கோ நடக்கின்ற நிகழ்வுகள் வேறு எங்கோ தாக்கத்தை உருவாக்குவதைப் பார்க்கின்றோம்.

இன்றைய நிலையில் புறநிலை அரசு தமிழீழ தாயகத்தில் ஒரு அழுத்தமான தாக்கத்தை உருவாக்கும்.

எம்மை யூதர்களுக்கு நாம் ஒப்பிட்டிருக்கின்றோம். இன்றைக்கு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டவுடன் அவற்றை மறந்து விடலாமா?

தமது தாயகத்தின் ஒரு பிடி மண் கூட அவர்களிடம் இருக்கவில்லை. ஒரு யூதன் கூட அங்கே வாழவில்லை. ஆனால் அவனிடம் தாயகம் குறித்த கனவு இருந்தது. இஸ்ரேல் என்னும் தேசம் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து உருவானது.

இன்றைக்கு தோற்று விட்டோம் என்பதற்காக நாம் எமது தமிழீழக் கனவை கைவிடத் தேவையில்லை. தமிழீழத்தை அடுத்த தலைமுறைகளுக்கும் கொடுப்போம். ஒரு நாள் எமது பேரன்களும் பேத்திகளும் தமிழீழம் மண்ணில் தமது கால் தடத்தை பதிப்பார்கள்.

Edited by சபேசன்

1986 இல் இருந்து யாழ் குடாநாடு உட்பட பல தமிழீழ பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு.........................

இன்று தமிழீழ அலகு என்ற ஒன்றே உலகில் அடையாளமிடப்பட முடியாத நிலையில்.. சிறீலங்கா ஐக்கியப்பட்டுள்ளதாக முழு உலகமும் நம்பும் வேளையில்.. புறநிலையில்.. ஒரு தமிழீழ அரசு அர்த்த புஸ்டியாக அமையுமா.. அதற்கான சட்ட வலு இருக்கிறதா... அதுவும் தமிழ் மக்களை ஏமாற்ற அமையும் ஒரு மாயையா.. போன்ற வினாங்களுக்கு அர்த்த புஸ்டியான பதில்கள் இருக்கின்றனவா.. என்றால் அதுவும் இல்லை..!

Actions of governments in exile

International law recognizes that governments in exile may undertake many types of actions in the conduct of their daily affairs. These actions include:

becoming a party to a bilateral or international treaty

amending or revising its own constitution

maintaining military forces

retaining (or "newly obtaining") diplomatic recognition by sovereign states

issuing identity cards

allowing the formation of new political parties

instituting democratic reforms

holding elections

allowing for direct (or more broadly-based) elections of its government officers, etc.

However, none of these actions can serve to legitimatize a government in exile to become the internationally recognized legal government of its current locality. By definition, a government in exile is spoken of in terms of its native country, hence it must return to its native country and regain power there in order to obtain legitimacy as the legal government of that geographic area.

Details from: http://en.wikipedia.org/wiki/Government_in_exile

Edited by mekan

  • தொடங்கியவர்

நாம் அமைக்கக் கூடிய ஒரு புறநிலை அரசில் தமிழீழ இராணுவத்தை கட்டியெழுப்புவது போன்றவை தற்போதைய நிலையில் சாத்தியப்படப் போவது இல்லை.

சட்டரீதியாக இதை புறநிலை அரசாக ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு கூட குறிப்பிட்ட காலம் எடுக்கலாம்.

ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி அதை வெளிநாட்டு ஊடகங்கள் தமிழீழத்தின் புறநிலை அரசு என்று அழைப்பதற்கான நிலையை லொபி நிறுவனங்கள் மூலம் முதலில் உருவாக்க வேண்டும்.

சட்டரீதியாக இல்லையென்றாலும் தார்மீகரீதியாக இந்தக் கட்டமைப்பை உலக நாடுகள் தமிழீழப் புறநிலை அரசாக அங்கீகரிக்கச் செய்ய வேண்டும்.

பொருhளாதார வளத்தினை பயன்படுத்தி இவற்றை மிக இலகுவாக செய்ய முடியும்.

அதன் பின்பு தேவைப்பட்டால் இராணுவத்தை கட்டியெழுப்பவது பற்றி பேசலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி புற நிலை அரசு தேவை இல்லை

புலம்பேர் மாந்தைகள் வீதில் இறங்கி போராடியது காணாது

நிலப்பரப்புக்கு வெளியால வெல்லப்பட்டதாக வரலாறில்லை (அப்போது புலத்தில் போராட்டங்கள் எதுக்கு)

த.தே.கூ மைப்பையும் தொண்டு நிறுவனங்களையும் வைத்து தமிழருக்கு நீதி கிடைக்க வழி செய்வதோடு

காசு சேர்த்து உங்கட மிச்ச உறவுக்கு சிங்கள ரியூசன் எடுத்து திருத்தி விட்டா பிரச்ச்னை முடிஞ்சுது.

இன்னும் 2 வருடத்தில தே.கூ மைப்பு வேணுமெண்டா இருக்கும் ஆனா .த.தே.கூ இருக்காது.

இனி நாங்கள் இங்க வந்து ஏன் நாறுவான்?

தமிழீழப் புற நிலை அரசுக்குள்ளால் தான் புலம்பெயர்ந்தவர்கள் போராடனும் என்றில்லை. தமிழீழ ஒருங்கிணைப்பை அவர்கள் எப்போதும் மேற்கொள்ளலாம். தமிழீழத்துக்கான அங்கீகாரத்தை தமிழீழத்துக்கான நியாயப்பாட்டை புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்து உலகிற்குச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயம்.

வேணும் என்றால் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் தமிழீழம் எண்ணக் கோட்பாடு சிதைவுறாதிருக்க.. கட்டமைப்பு ஒன்றை உருவாக்கலாம். உலகெங்கும் வாழும் தமிழர்களை அதன் கீழ் ஒருங்கிணைக்கலாம். தமிழீழப் புறநிலை அரசு என்ற ஒரு நிலை தமிழீழத்துக்கு வெளியில் அவசியமில்லை. தமிழீழத்துக்கு வெளியில் அமையும் தமிழீழ ஒருங்கிணைப்பு அமைப்பு தமிழீழத்துக்குள் வாழும் மக்களை போராளிகளை ஒருங்கிணைத்து தமிழீழத்துக்குள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

நாம் யூதர்களின் நிலையில் அல்ல இருக்கிறோம். எமக்கென்றான நிலம் இருக்கிறது. அங்கு எமது மக்கள் வாழ்கின்றனர். யூதர்களின் நிலை அப்படியன்று. அவர்களுக்கு என்றோரு நிலமே இருக்கவில்லை. எமது நிலத்தை விட்டு நாம் அதற்குப் புறம்பான மாயை அரசை தோற்றுவிக்க வேண்டிய அவசியமில்லை. எமது போராளிகள் சொந்த மண்ணில் போராடத் தயாராக நிற்கின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து உலகத்தமிழினத்தின் ஒட்டுமொத்த ஆதரவுடன் அவர்களை வழிநடத்தி சொந்த மண்ணில் அந்தப் போராளிகள் தமக்குரிய வடிவங்களில் எல்லாம் போராட நாம் அவர்களுக்கு உந்து சக்தியாகவும்.. உலக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பவர்களாகவும் இருந்து செயற்படலாம்.

புலம்பெயர்ந்தவர்களின் பணி.. வெறும் புறநிலை அரசை அமைத்துவிட்டு.. பேரன் பேத்தி காலம் வரை காத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. எமது போராட்டத்தில் தொய்வுகள்.. தோல்விகள்.. இழப்புக்கள் இருக்கலாம். ஆனால் போராட போராளிகளாக மக்கள் இருக்கிறார்கள். அதுவும் சொந்த மண்ணில் இருக்கிறார்கள். அவர்களை அவர்களின் எண்ணக் கோட்பாடுகளை அவர்களை விட்டு நாம் நகர்த்தி தொலைவில் வைக்க வேண்டிய தேவையில்லை. அப்படிச் செய்யின் அதுவே சிங்கள தேசத்தின் தமிழீழ அடையாள அழிப்புக்கு நாமே மறைமுகமாக உதவியதாகிவிடும்.

தமிழீழ ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்கி.. தமிழீழத்துக்கான அங்கீகாரத்துக்குப் பாடுபடலாம். தமிழீழத்தில் தேவையான அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள அங்குள்ள போராளிகளுக்கு வழிகாட்டலாம். வழிமுறைகளை வகுத்துக் கொடுக்கலாம். இப்படிப் பல பணிகளை செய்யலாம். அதைவிடுத்து.. வெறும் தமிழீழப் புறநிலை அரசை அமைத்துவிட்டு இலவு காத்துக் கொண்டிருப்பின்.. நிச்சயம் இந்தப் பூமிப்பந்தில் தமிழீழம் அமையாது..! அது வெறும் கனவாகவே இருந்துவிட்டுப் போகும்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

இராணுவத்தை கட்டி எழுப்பவே தேவை இல்லை

குறைஞ்சது சனந்தையும் காப்பாற்றி ஒரளவுக்கெண்டாலும் உரிமை கிடைச்சா சரிதான்.

  • தொடங்கியவர்

தாயகத்தில் உள்ள மக்கள் தற்போதைய நிலையில் போராடுவதற்கு தயாராக இல்லை. கசப்பாக இருந்தாலும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

மக்கள் அங்கே போராட, நாம் இங்கேயிருந்து ஆர்ப்பாட்டங்களை செய்வோம் என்னும் சிந்தனை இன்றைய நிலையில் மிகவும் போலியானது.

அறிக்கைகளில் வருகின்ற "யாழ் செல்லும் படையணி" போன்றவற்றை நம்பி எமது அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கக் கூடாது.

தலைமை இழந்து, படை பலம் அழிக்கப்பட்டு, நிழல் அரசு நிர்மூலமாக்கப்பட்டு, மக்களின் போரிடும் மனோபலம் சிதைக்கப்பட்ட நிலையில் தாயகம் இருக்கின்றது.

தமிழீழத்திற்கு என்று ஒரு அரசு, பாராளுமன்றம் போன்றவை புறநிலையில் இயங்குவது தாயக மக்களுக்கும் ஒரு நம்பிக்கைய கொடுக்கும். தாயக மக்கள் போரின் வடுக்களில் இருந்து மீளும் வரை அரசியல்ரீதியான போராட்டங்களை நாம்தான் நடத்த வேண்டும்.

புற நிலை அரசு சம்பந்தமான கருத்தாடால் தடம் மாறிப்போகிறது.

இன்றைய நிலையில் தமிழர்களின் போராட்டத்தை முன் எடுத்துச் செல்ல ஒரு அரசியற் சக்தி அவசியமாக இருக்கிறது.ஈழத்தில் எந்த ஒரு சக்தியும் உருவாக முடியாதா மிகக் கொடூரமான ஒரு இராணுவ அடக்குமுறைக்குள் தமிழ் இனம் சிக்குப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சர்வதேச ரீதியக உருவாகி வரும் பூகோள நலன் சார் முரண்பாடுகளை நாம் எவ்வாறு பயன் படுத்தலாம் என்னும் அடிப்படையிலையே இந்த புற நிலை அரசு என்னும் கோட்பாடு நோக்கப் பட வேண்டும்.

எந்த புற நிலை அரசும் சர்வதேச ரீதியாக இன்னொரு நாட்டின் தயவிலையே உருவாக்கபடக் கூடியது.அவ்வாறு தான் வரலாற்றில் அவை உருவாக்கப்பட்டன.இன்றைய நிலையில் தெளிவாகவே மேற்குலகின் நலங்களுக்கும், இந்தியா சீன ரசியா என்னும் பிராந்தியக் கூட்டின் நலங்களும் ஒரு முரண்படு புள்ளியை சிறிலங்காவில் சந்தித்து உள்ளன.இந்து சமுத்திரத்தை மையமாக வைத்து நடக்கும் இந்த நலன் சார் முரண்பாட்டில் தமிழர்களின் துரும்பாக இந்த புற நிலை அரசு மேற்குலகம் சார்ந்து இயங்குவதன் மூலம், வருங் கால தமிழ் ஈழத் தேசிய இராணுவத்திற்கான் அடிதளத்தை இட முடியுமா என்று பார்க்க வேண்டும்.இசுரேலின் உருவாக்கமும் மத்திய கிழக்கில் மேற்குலகின் நலன் சார்ந்தே உருவானது.அதனை நிகழ்தியவர்கள் புலம் பெயர்ந்து இருந்த யூத மக்களே.

எந்த முயற்சியும் செயற்படாது விட்டால் அது சாத்தியமா இல்லையா என்று தெரியாது.அத்துடன் இன்று எமக்கு வேறு தெரிவுகள் எதுவும் இல்லை.இன்று எமக்கு இருக்கும் ஒரே நட்பு சக்தியாக மேற்குலகமே இருக்கிறது.இதனை நாம் எமக்குச் சாதகமாக எவ்வாறு பயன் படுதப்ப் போகிறோம்.? நாம் தனித்து நின்று இந்த உலகத்தி போராடி வெல்ல முடியாது என்பது நிரூபிக்கப்படுள்ளது.

சிங்களவன் இலங்கையில் தமிழரை நின்மதியாக வாழவிடப்போவது இல்லை. மீண்டும் உணர்வுள்ள தமிழன் போரடத்தான் செய்வான். ஆடு, மாடுபோல் மனிதன் நீண்ட நாளைக்கு வாழமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் பாருங்கோ....,

இப்பிடி சும்மா வெட்டியா கதைச்சுக்கொண்டிருக்காம...., புறநிலை அரசெண்டா என்ன எண்டு ஒரு விளக்கத்தை புலத்திர இருக்கிற எல்லாருக்கும் குடுத்து..., அவேட்டையே கேக்கலாமே..., இதுக்கு உங்கட ஆதரவு எப்பிடி எண்டு.....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தகைய புறநிலை அரசு அமைந்தால் மற்ற நாடுகளின் ஆதரவை திரட்ட எதுவாக இருக்கும். மேலும் தமிழ் ஈழம் என்ற ஒரு நாட்டின் பெயரை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கவும் பயன்படும். இவ்வளவு கொடும் போர் நடந்து முடிந்தும் கூட இன்னும் தமிழ் ஈழம் என்றால் ஒரு நாடு என்று பலருக்கும் தெரிவதில்லை.

ஏன் பாருங்கோ....,

இப்பிடி சும்மா வெட்டியா கதைச்சுக்கொண்டிருக்காம...., புறநிலை அரசெண்டா என்ன எண்டு ஒரு விளக்கத்தை புலத்திர இருக்கிற எல்லாருக்கும் குடுத்து..., அவேட்டையே கேக்கலாமே..., இதுக்கு உங்கட ஆதரவு எப்பிடி எண்டு.....?

தமிழருக்கு எதாவது செய்யவேணுமெண்டு நினைச்சா

மத்தவங்களை எதிர் பாராம ஒவ்வொருத்தரும் புறநிலை

அரசெண்டா என்னெண்டு தேடுங்கோ. இது எங்களுக்கான தேடல்

ஆரும் வருவான் தருவான் எண்ட நினைப்பு கூடாது

ஆரும் உங்களை இதைபற்றி கேட்டா அவர்களுக்கு இதை விளங்கப்படுத்துங்க.

இங்க இணையத்துக்கு வரக்த்தெரிந்தா முதலாம் பதிவிலேருந்து வாசிங்க.

அப்பிடியும் புரியாட்டா இது எங்களுக்கு இது தேவையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.