Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் ரிம் மாற்றினின் பட்டினி போராட்டம் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தனியரசு அமைப்பது மூலமே சிறீலங்க அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியும் என்ற உறுதிப்பாட்டுடன் இன்றும்(24.05.09) பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் கோரிக்கை கோசங்களை பிரித்தானிய சமூகத்திற்கு முன்வைத்தனர்.

கடந்த 168 மணித்தியாலங்களாக தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரித்தானியரான ரிம் மாற்றின் அவர்கள் .....

உடனடியாக சர்வதேசத்தின் செயற்கை கோள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை பெற்று தரவேண்டும்.

சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் எதுவித தடையுமின்றி சிறீலங்காவில் பணி புரிய அனுமதிக்கவேண்டும்

அகதிகளாக்கப்பட்டு பாடசாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாழும் தமிழர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்து கொடுக்கவேண்டும்

சிறீலங்க அரசாங்கத்தின் ஆலோசகர் சதீஸ் நம்பியாரின் அண்ணனும் ஜ.நா செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான விஜய் நம்பியார் மீது பொது விசாரணை செய்யவேண்டும்

ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.

இன்று நாடாளுமன்ற சதுக்கத்தில் நடைபெற்ற தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க அங்கு சமூகமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் குயூச் அவர்கள் மக்கள் முன் உரையாற்றுகையில் “இனி தமிழீழத்திற்கான போராட்டம் இளையோர் கைகளில் உள்ளது ஆகவே உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் இளையோர் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் போராட்டத்தை வென்றெடுக்க வேண்டும். வருகின்ற வாரம் விடுமுறை ஆகினும் தமிழ் மக்கள் போராட்டத்தை தொடரவேண்டும். உங்கள் காணாமல் போன உறவுகளின் விபரங்களை தந்தால் எம்மால் ஆன உதவியை பெற்று தரமுடியும். அத்துடன் உங்களிடம் சிறீலங்காவில் இடம்பெறுவது இனப்படுகொலை தான் என்பதற்கான அத்தாட்சிகள் இருப்பின் அதை வைத்து வழக்கறிஞர்கள் மூலம் வாதாடலாம்” என்று கூறினார்.

நன்றி பதிவு

Edited by தமிழ் சிறி

நன்றிகள் கோடி .

எம் இனத்துக்காக இத்தனை நாட்களாய் உண்ணாவிரதமிருக்கும் மாற்றினத்து நண்பருக்கு யாழ் உறவுகள் அனைவரும், தமிழ் மக்கள் அனைவரும் தமது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்க வேண்டியது அவசியம். தயவுசெய்து.........

செய்வீர்களா உறவுகளே?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் இவ்வுலகில் மனிதாபிமானம் முழுதும் மடிந்துவிடவில்லை என்று சொல்லும் விதமாக உலகின் எங்கோ ஒரு மூலையில் நசுக்கப்படும் எம் இனத்துக்காக தன உடலை வருத்திக்கொண்டு உண்ணாநிலை போராட்டத்தில் இறங்கிய உங்களின் அன்புக்கு தலைவணங்குகிறேன்

நான்காம் நாள் டிம் மார்ட்டின் பேசிய உரை

http://www.youtube.com/watch?v=9TsxXqbmiOQ

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

நன்றிகள் கோடி .

எம் இனத்துக்காக இத்தனை நாட்களாய் உண்ணாவிரதமிருக்கும் மாற்றினத்து நண்பருக்கு யாழ் உறவுகள் அனைவரும், தமிழ் மக்கள் அனைவரும் தமது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்க வேண்டியது அவசியம். தயவுசெய்து.........

செய்வீர்களா உறவுகளே?????

பருதியன், நீங்கள் சொல்வது போல் கோடி நன்றிகள் சொல்ல கடமைப் பட்டுள்ளோம், உண்மைதான்...

நன்றி கூறுகிறேன்.

கடந்த வெள்ளி பிற்பகல் எமது தேசிய கொடியினை எந்தியவர்களிடம் பறிமுதல் செய்யவந்த பொலிசாரிடம் மாணவர்கள் வாதாடி பின்பு சிறுவர்கள் தேசிய கொடியினை பிடிக்கலாம் என்று அனுமதித்தார்கள். அனால் டிம் மார்டினோ, பிடித்திருந்த எமது தேசிய கோடியை இறக்குமாறு வேண்டுகோள் விடுத்தாரே... அவர் விடுத்த வேண்டுகோளில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை, அவரை ஆதரித்து ஒரு மாணவி கூடி இருந்த மக்களிடம் கருத்துத்தெரிவித்தார், "எங்களுக்காக அவர் உண்ணாவிரதம் இருக்கிறார், அவர் சொல்வதை நாங்கள் கேட்கலாம் தானே" என்று.

கூடி இருந்த மக்கள் குழப்பமடைவதற்க்குள் உடனே தேசப் பற்றுள்ள மாணவன் ஒருவன் "யாரும் எம் தேசிய கொடியினை இறக்கவேண்டம்! அது எம் இனத்தின் அடையாளம்!! யாருக்காகவும் எமது அடையாளத்தை நாம் விடுக்கொடுகமாட்டோம்!!!" என்று உணர்வுப் பற்றோடு கூறியது எனக்கு மட்டுமல்ல அங்கு நின்றவர்களின் மனதிலும் ஓர் உணர்வு பூர்வமான உற்சாகத்தைக் கொடுத்து....

தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான போராட்டம் இது, அதை டிம் மார்ட்டின் நன்கு புரிந்து செயல்படவேண்டும் என்பது எனது தனிபட்ட தாழ்மையான கருத்து. தவறாக இருப்பின் மனிக்கவும்.

ரிம் மார்ட்டினைப் பொறுத்தவரையில் .... அவர் தமிழ் மக்களின் அவலங்களை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளார் போல தெரிகின்றது. அவருக்கு எமது ஆதங்கத்தினை எடுத்துரைத்தால் புரிந்துகொள்வார் என நம்புகின்றேன்.

புலிக்கொடி விடயத்தில் உங்களின் கருத்தே என் கருத்தும். எமது இனத்தின் , மானத்தின் அடையாளத்தினை எவருக்காகவும் எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்கக் கூடாது.

எக்கொடிய வலிகளிலும்- நம் புலிக்கொடியை

கீழுறக்க மாட்டோம்!

நம் தேசியக் கொடியின் நிழலின் கீழ் அணிதிரள்வோம்!

Edited by பருத்தியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் கோடி .

எம் இனத்துக்காக இத்தனை நாட்களாய் உண்ணாவிரதமிருக்கும் மாற்றினத்து நண்பருக்கு யாழ் உறவுகள் அனைவரும், தமிழ் மக்கள் அனைவரும் தமது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்க வேண்டியது அவசியம். தயவுசெய்து.........

செய்வீர்களா உறவுகளே?????

Tim Martin அவர்களுக்கு,

எமது இனத்திற்கு இளைக்க படும் அநீதி நிலையில் அக்கறை எடுத்ததற்கு நன்றி... அதை வெளிப்படுத்தியமைக்கும் நன்றி...போராட்டத்தில் பங்கு பற்றியமைக்கும் நன்றி....உடலை வருத்தி உண்ணா நிலை போராட்டம் எங்களுக்காக இருப்பமைக்கும் நன்றி....தங்கள் கோரிக்கைகள் கிட்ட வேண்டும் என்பது எனது வேண்டுதலும் கூட...

இருப்பினும் ஒரு சிறு தாழ்மையான வேண்டுகோள் - சில தினம் முன்பு தேசிய கொடியை எமது இளையோரிடம் இருந்து அகற்றுவதற்கு காவல் துறையினர் முற்பட்ட போது - எம்மை எமது தேசிய கொடியை இறக்குமாறு தாங்களும் கேட்டு கொண்டீர்கள். தேசிய கொடி என்பது எமது அடையாளம், கெளரவம் என்பதை அறிந்தும்.... இந்த இக்கட்டான நிலைமையிலும் நாங்கள் அதை ஏந்தி இருப்பது பெரிய குற்றம் என்று சிந்திக்கும் காவல் துறையினருடன் (சரி அது அவர்கள் கடமை, அவர்களுக்கு பிறபிக்க பட்ட கட்டளை) சேர்ந்து நீங்களும் அந்த கருத்தை பலர் மத்தியில் முன்வைத்தது சரியாக படவில்லை எனக்கு...

சர்ச்சைகளை தவிர்க்க நீங்கள் அவ்வாறு சொல்லி இருக்கலாம்....இருந்தாலும், இந்த சூழ்நிலையில் ஒன்றுமே சொல்லாமல் விட்டு இருந்தால் கூட சிறப்பாக இருந்து இருக்கும்!

யார்ளில் அதுவும் தமிழில் அன்னார் வந்து வாசித்து அறிய போவது இல்லை....ஆனால் இதை இங்கு குறிபிட்டமைக்கு காரணம் :

- தயவு செய்து இவருடன் பேச கிடைக்கும் யாரும் கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள்

- அன்னார் தமது பங்களிப்பின் நிமித்தம் எமது உணர்வுகளை, கருத்துக்களை முடக்கி விடாமல் பார்த்து கொள்ளல் வேண்டும்....(தயவு செய்து யாரும் தாறு மாறாய் என்னை கிழிக்க வேண்டாம்...யாரையும் நூறு வீதம் நம்பும் நிலையில் நான் இல்லை) :)

---தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்----

பருதியன், நீங்கள் சொல்வது போல் கோடி நன்றிகள் சொல்ல கடமைப் பட்டுள்ளோம், உண்மைதான்...

நன்றி கூறுகிறேன்.

கடந்த வெள்ளி பிற்பகல் எமது தேசிய கொடியினை எந்தியவர்களிடம் பறிமுதல் செய்யவந்த பொலிசாரிடம் மாணவர்கள் வாதாடி பின்பு சிறுவர்கள் தேசிய கொடியினை பிடிக்கலாம் என்று அனுமதித்தார்கள். அனால் டிம் மார்டினோ, பிடித்திருந்த எமது தேசிய கோடியை இறக்குமாறு வேண்டுகோள் விடுத்தாரே... அவர் விடுத்த வேண்டுகோளில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை, அவரை ஆதரித்து ஒரு மாணவி கூடி இருந்த மக்களிடம் கருத்துத்தெரிவித்தார், "எங்களுக்காக அவர் உண்ணாவிரதம் இருக்கிறார், அவர் சொல்வதை நாங்கள் கேட்கலாம் தானே" என்று.

கூடி இருந்த மக்கள் குழப்பமடைவதற்க்குள் உடனே தேசப் பற்றுள்ள மாணவன் ஒருவன் "யாரும் எம் தேசிய கொடியினை இறக்கவேண்டம்! அது எம் இனத்தின் அடையாளம்!! யாருக்காகவும் எமது அடையாளத்தை நாம் விடுக்கொடுகமாட்டோம்!!!" என்று உணர்வுப் பற்றோடு கூறியது எனக்கு மட்டுமல்ல அங்கு நின்றவர்களின் மனதிலும் ஓர் உணர்வு பூர்வமான உற்சாகத்தைக் கொடுத்து....

தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான போராட்டம் இது, அதை டிம் மார்ட்டின் நன்கு புரிந்து செயல்படவேண்டும் என்பது எனது தனிபட்ட தாழ்மையான கருத்து. தவறாக இருப்பின் மனிக்கவும்.

:rolleyes:

ஆ...ஆ...!!! நீங்களுமா?!

:)

எமக்காக ஒரு வேற்று இனத்தவர் போராடும்போது நாம் பெரும் எண்ணிக்கையில் திரண்டுவந்து எமது ஆதரவை தர வேண்டாமா? உறவுகளே சிந்தியுங்கள்.

அவருக்கு உதவி செய்வதற்கு கூட இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் போராட்டத்தினை நடத்தும் மாணவர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை.

ஆம் இன்று வழமைக்கு மாறாக குறைந்த அளவு மக்களே ஆர்பாட்டம் நடக்கும் இடத்திக்கு (கோஷம் போடுமிடத்தில்) வருகை தந்திருந்தார்கள். பாடசாலைகள் ஒரு வார விடுமுறை.... அப்படி இருந்தும் இன்று அதிக அளவு மக்கள் பங்குபற்றாதது கவலையே...

சுவரில் ஏறி இருப்பவர்களும், பின்னல் நிற்பவர்களும் அப்படி என்ன தான் கதைபார்களோ.... மாணவர்கள் போய் அழைத்தாலும் ஒரு அங்குலம் கூட அசைய மாட்டார்கள்... (ஆண், பெண், சிறுவர்கள், சில மாணவர்களும் கூட)

கடமை என்று நினைத்து வருகிறார்கள்... கோஷம் போட தவறுகிறார்கள் என்பது கவலைக்குரிய விடையம்.

அப்போ யார்தான் இரவு வேளைகளில் நிற்கிறார்கள்? இந்த நேரத்தில் தானே பெரும்பாலான 'குடி' மக்கள் வருவார்கள், ஏற்பாட்டாளர்கள் கட்டாயமாக நிக்கவேண்டிய நேரம் அது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் 12 நாளாக ரிம் மாற்றினின் இனம் கடந்த பட்டினி போராட்டம்

தமிழினத்தின் நாட்டை அங்கீகரிக்க ஒரு நாடு இல்லை என்ற போதிலும் பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான மக்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழீழத் தேசியக் கொடி பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தை அலங்கரித்துள்ளது.

தமிழினம் படும் துன்பங்களை நேரில் கண்ட ரிம் மாற்றின் அவர்கள் 4 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இன்றுடன் 12 ஆவது நாளாக உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை பாதிப்படையும் போதிலும் தமிழர்களுக்காக முன்னெடுக்கும் இந்த உன்னத தியாக போராட்டத்தை தளராத மன உறுதியுடன் தொடர்கின்றார்.

இதேவேளை நாளை (30.05.09) காலை பிரித்தானியாவின் பிரதம ஊடகங்கள் ஆன sunday observer மற்றும் times ஆகியன சிறீலங்க அரசாங்கத்தின் இனப்படுகொலையின் போது காணாமல் போனவர்கள், இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை நாடாளுமன்ற சதுக்கத்தில் நேரடியாக வந்து சேகரிக்க இருப்பதால் பாதிக்கப்பட்ட உங்கள் உறவினர்களின் புகைப்படங்களை எடுத்து வந்து இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்தும் படி தாழ்மையாக கேட்டுகொள்கின்றனர் பிரித்தானிய தமிழ் இளையோர்கள். THE TIMES பத்திரிகையின் இன்றைய பிரதியில் சிறீலங்க அரசாங்கத்தின் தமிழ் இனப்படுகொலை தொடர்பான செய்திகள் வெளியானது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஊடகங்களின் வருகையை முன்னிட்டு தமிழ் இளையோரால் கவனயீர்ப்பு தெரு நாடகம் ஒன்று நாளை (30-05-09) நாடாளுமன்ற சதுக்கத்தில் நிகழ்த்தப்படவுள்ளது. தமிழ் மக்களின் அவலத்தை ஊடகங்கள் மூலம் வெளிக்காட்டுவதற்கு அனைத்து தமிழ் மக்களையும் நாளை நாடாளுமன்ற சதுக்கத்தை நிறைக்கும் படி வேண்டுகின்றனர் இளையோர்கள்

நன்றி பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.