Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர்-புதுவைஇரத்தினதுரையைத் தேடுகிறேன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் கவிஞன் எங்கே?

------------------------------

கண்ணாலும் காணவில்லை

காதாலும் கேட்கவில்லை

உன்னை காணாமல் தேடுகிறேன்.

என் கவிஞ!

நீ எங்கே இருக்கிறாய்?

செந்தமிழின் சொல்லெடுத்து

உன் பேனா பெரும்

செல்லடிக்கும் போதும் எழுதியதே

கண்ணால் கண்டு

உன்னோடு கதைத்த பொழுதுகள்

இன்னும் என் நெஞ்சத்துள் உருகுகிறதே

வாழ்வு பெரும் சோகம்

வன்னி வாழ்வு பெரும் சோகம்

என் மண்ணில் கிடந்து

உழன்றெழுந்தாய் எழுதினாய்

உன் கவிதைகளை

என்கவிஞ!

உன் கவிதை கண்டு என்மனம்

எப்பொழுதும் ஆறுமடா!

ஈழத்து கவிஞன் என்று உன்னை

போற்றாதார் யாருண்டு?

எதிரவர்க்கு கூட உன்தமிழ் பிடிக்குமடா?

இனி அழக்கண்ணீரில்லை

என்பதற்கு பிறகு உன்னைக்காணவில்லை

எல்லா இடமும் தேடுகிறேன்

உன் உறவுகள் யாராவது

எங்காவது இருக்கிறார்களா?

எல்லாமே கேள்விகளாய் மட்டுமே

கிடக்கின்றன.

என்னை உணர்ந்தவன் நீ

என்னோடு அன்பாய் இருந்தவன் நீ

உன் கொள்கைளுக்கு அப்பால்

ஒரு கவிஞனாய் நேசித்தவன் நீ

உனது சஞ்சிகைகளில் எல்லாம்

என்னை அலங்கரிக்க செய்தவன் நீ

உன் இத்தனைக்கு பின்னும்

கவிதையை இப்பொழுதும்

எடுத்து பார்த்தேன்.

எங்காவது ஒரு முகாமில்

யாருக்கும் தெரியாமல்

இருந்து எனக்குமட்டும் ஒரு பதிலனுப்பு

அது போதும் எனக்கு

இரவு பகலாக உன்னை நினைத்திருக்கிறேன்.

உன் உயிர் உலகத்தில் இருக்கிறது

என்றொரு ஓலை மட்டும்

அனுப்பு அது போதும்

அனஸ்

Edited by ANAS

புலிகளின் முக்கியஸ்தர்களான எழிலன், புதுவை ரத்தினதுரை, கரிகாலன், ஞானம், இளம்பருதி, யோகி போன்ற புலிகளின் முக்கியஸ்தர்களும் படையினரிடம் சரணடைந்த நிலையில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.**** தகவலின் பிரகாரம் நிவாரண முகாம்களில் தேடுதல் மேற்கொண்ட படையினர் புலிகளின் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினி, பிரபாகரனின் பெற்றோர் ஆகியோரையும் மேலும் பல புலி உறுப்பினர்களையும் படையினர் கைது செய்துள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் வார்த்தை மன ஆறுதலை தருகிறது அப்படியே ஆகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் முக்கியஸ்தர்களான எழிலன், புதுவை ரத்தினதுரை, கரிகாலன், ஞானம், இளம்பருதி, யோகி போன்ற புலிகளின் முக்கியஸ்தர்களும் படையினரிடம் சரணடைந்த நிலையில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. **** தகவலின் பிரகாரம் நிவாரண முகாம்களில் தேடுதல் மேற்கொண்ட படையினர் புலிகளின் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினி, பிரபாகரனின் பெற்றோர் ஆகியோரையும் மேலும் பல புலி உறுப்பினர்களையும் படையினர் கைது செய்துள்ளனர்.

உங்களுக்கு மகிந்தா போன் பண்ணி சொன்னாரா பொட்டு தங்களிடம் இருப்பதாகா?

உங்களுக்கு மகிந்தா போன் பண்ணி சொன்னாரா பொட்டு தங்களிடம் இருப்பதாகா?

இல்லை. நானும் அவரோடு இருக்கிறன்.

இல்லை அவரையும் சாகடிக்கிற பிளானோ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சரி....

புதுவை உட்பட என் நண்பர்கள் பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி. தொழி தமிழினி கைது செய்தி பார்த்தேன். எழுத்தாளத் தோழ தோழியர்கள் மலைமகள் தமிழ்க்ாவி பற்றி எதும் தகவல் உள்ளதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எல்லாம், தெரிஞ்ச மாதிரி கதைக்க வரேல்லை..அவரிடம் இருந்து கடைச்யாக எப்போது ஆக்கங்கள் வந்தது எண்டு தெரியுமா??? சில விடயங்கள் எனக்கு தெரியவந்துள்ளது....அதனை உறுதி செய்யத்தான் இந்த கேள்வி.

அவர் முகாமில் உளார் என்பது.... 100% பொய்யான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ..... லோயர் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கோ ப்ளீஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அனஸ்,

உங்கள் கவிஞனும் அவர் போன்ற ஆயிரமாயிரம் பேரின் நிலமை புனர்வாழ்வு முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான மறுவாழ்வு இனியெந்த அரியணையால் தரப்படுமோ தெரியவில்லை. உங்கள் பாசத்துக்கினிய கவிஞன் 4ம் மாடியில் இருப்பதாகத் தெரியவருகிறது.

எங்கள் தோழரையும் தோழியரையும் இந்த நிலைக்கு ஆளாக்கிய அனைவரையும் இப்போது நோகத்தான் முடிகிறது. மற்றும்ப எந்தவித ஆறுதலையும் யாருக்கும் யாராலும் வழங்க முடியாதுள்ளது.

கடைசிக்கடிதங்கள் ,கடைசியாய்க் கேட்ட குரல்கள் எல்லாம் கனவுகளாகவே போகாதா ??????

உணர்வின் வரிகள் ஊர்முற்றக்கவிஞனின் நினைவுகளில் கரைக்கிறது அனஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவோ போங்க..

நினைத்தது எல்லாம் எழுதுறீங்க... பக்கத்தில இருந்து பார்த்த மாதிரி..

முடியலை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த 16ம்திகதிக்குப்பின் அங்கிருந்து செய்திகள் தர யாருமில்லை. தற்போதுள்ள நிலையில் தகவல் பரிமாற்றம் வெகு சிரமமாகவே உள்ளது. உள்ளது உள்ளபடி வராது.

ஸ்ரீலங்காவின் பொய்ப்பிரச்சாரங்களை நம்பி அதையே இங்கும் பரப்புரை செய்யாமல் ஆகவேண்டியதைப்பாருங்கள்.

இங்கு உங்கள் எண்ணப்போக்குகளுக்கு விருந்தாக விடயங்களை எழுதி எல்லோரையும் சங்கடத்துக்கு உள்ளாக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தை நெஞ்சிலே சுமப்பதுதானே

எங்கள் நேசத்திற்கான ஆட்சி.

நீண்ட பயணிப்பில் பாதிதானே கடந்துள்ளோம்

மீதிப் பயணம் கண்ணெதிரே விரிந்து கிடக்கிறது.

இவர்களெல்லாம் எங்கு இருக்கின்றார்கள் என்னும் விடயங்கள் யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை. சிங்களவனின் கோரத்தாண்டவத்தில் இவர்கள் உயிர்பிழைதார்களா என்பது இறைவனுக்கே

வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களெல்லாம் எங்கு இருக்கின்றார்கள் என்னும் விடயங்கள் யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை. சிங்களவனின் கோரத்தாண்டவத்தில் இவர்கள் உயிர்பிழைதார்களா என்பது இறைவனுக்கே

வெளிச்சம்.

என்னுடைய 4 தசாப்த தோழன் புதுவை சிறைப் பட்டுள்ளதாகச் சேதிகள் சொல்கின்றது. என்னுடைய பல தோழர்கள் இன்று சிறைப் பட்டிருக்கிறார்கள். சிங்களத்தலைமை உண்மையிலேயே அரசியல் தெரிந்த தலைமையாகவும் நீண்டகால அடிப்படையில் சிந்திக்கும் தலைமையாகவும் இருந்தால் சிறைப்பட்ட எங்கள் போராளிகளோடு தீர்வு திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும். இன்று ரி என் ஏ முன்னுள்ள வரலாற்றுத் தெரிவுகளுள் இத்தகைய ஒரு பேச்சுவார்த்தையின் சாத்தியம் பற்றிய முயற்சிகளும் அடங்கும். இத்தகைய ஒரு கனவை நாம் காண்பது தவறல்ல.

பொயட் இந்த விடயத்தில் உங்களுடைய கருத்தை முழுமையாக ஏற்கிறேன். உண்மையிலேயே இலங்கை அரசில் ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் தமிழர்களுக்கு சரியான முறையில் அரசியல்தீர்வு காணும் நோக்கம் முழுமையாக மனதார இருக்குமாக இருந்தால் அவர்களுடைய சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் போராளிகளோடு மனிதாபிமான முறையில் அணுகுவார்கள்... ஆனால் இப்போதைய ஆட்சியாளர்களிடம் இதனை எதிர்பார்க்க முடியுமா?

நன்றி வல்வைசாகரா, ரிஎன் ஏ பாராளுமன்ற உறுப்பினர்களும் புலம்பெயர்ந்த நாடுகளில் முன்னணியில் இருந்து இயங்குபவர்கள் இந்தக் கோரிக்கையையும் முன்னிலைப் படுத்தவேணும் என்பதுதான் எனது வேன்டுகோள். புலம்பெயர்ந்த ஆர்வலர்கள் தோல்விக்கு வழிவகுத்த பழைய அணுகுமுறைகளை மீழாய்வு செய்யாமல் சாத்தியமான புதிய வழிமுறைகளைப் பற்றி பரந்துபட்ட கலந்துரையாடல்கள் இல்லாமல் தடை பண்ணப் பட்ட காலத்து பழைய வடிவங்களில் தொடர்ந்தும் போராடுவது பயனில்லை. எங்கள் பலத்தை நாம் எதிரிக்கு மட்டுமே காட்டவேண்டும். சர்வதேச சமூகத்தை அவர்கள் வருக என்னும் வகையிலான வடிவத்தில் அணுகி அவர்களில் எதவது ஒரு சாராரையென்றாலும் வென்றாக வேண்டும். நாம் செய்தது செய்வதெல்லாம் சரி. உலகம் முழுவதும் எமக்கு எதிர் என்கிற நம்மைத் தோல்விக்குத் தள்ளிய தற்கொலைச் சிந்தனையை கைவிடாமல் நாம் ஒருபோதும் முன்னே செல்லப் போவதில்லை. நாம் சரியான பாதையில் நின்று தவறுகளும் விட்டிருக்கிறோம் ஆனால் எதிரியின் பாதையும் பார்வையும் செயல்களும் தவறானவை. துன்பம் என்னவென்றால் எம் தவறுகள் தோல்விக்கு இட்டுச் செல்ல எதிரி இமாலயத் தவறுகளுடன் வெற்றி பெற்றிருக்கிறான். இதற்க்கு எதிரி தன்னை தனிமைப் படுத்தாமல் தங்கள் தரப்பில் அரசியல் இராணுவ இராஜதந்திர அறிஞர்களும் நிபுணர்களும் சொல்வதைச் செவிமடுத்தது அவர்களது ஆலோசனையுடன் செயல்பட்டதுதான் அடிப்படையாக இருந்தது. எதிரி தனது அதிகாரத்தை நிபுணத்துவமுள்ள தனது அணியினருடன் பகிர்ந்து கொண்டான். இதனால் சர்வதேச அமைப்புக்கு எதிரியின் அணியினருடன் பேசுவது இலகுவாக இருந்தது. சர்வதேச சமூகத்தவர்கள் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களை மட்டுமே அதுவும் பேச்சுவார்த்தையின் முற்பாதிக் காலக்கட்டத்தில் மட்டுமே ஓரளவு அதிகாரத்துடன் செயல்படுகிறவராகக் கணித்தது. இந்த நிலமை இலங்கை அரசின் அணிக்கு இருக்கவில்லை. எங்கள் தரப்பில் இத்தகைய அணுகுமுறை ஒருபோதும் இருக்கவில்லை. இவற்றையெல்லாம் நான் வன்னியிலேயே உரத்துச் சொல்லி இருக்கிறேன். இன்னும்கூட நாம் அத்தகைய அணுகுமுறையை வளர்த்தெடுக்கவில்லை. நாம் ஏகப் பிரதிநிதிகள் என்கிற கருத்து உள்ளார்ந்த எல்லா விவாதங்களையும் ஆய்வுகளையும் நிராகரித்துவிட்டது. சர்வதேச சமூகமுகத்தின் ஜனநாயக அகராதியில் முன்னணி அல்லது முதன்மை அமைப்பு என்ற சொல்மட்டுமே இருக்கிறது. மேற்க்கு நாடுகளில் ஏகப் பிரதிநிதிகள் என்ற சொல்லை பாசிஸ்ட்டுகளின் பதம் என்றே அடையாலம் காணுகிறார்கள் என்பதை வன்னியில் பலதடவை தெரிவிதிருக்கிறேன். இதுபற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேன்டும். எங்கலை எதிரியும் நாமும் மூடி வைத்திருக்கிறோம். இந்த குண்டுச் சட்டியை உடைத்துக்கொண்டு வெளியில் வரவேன்டுமென்றால் சர்வதேச அணி ஒன்றை வென்றெடுக்க வேணுமென்றால் அவர்களது அரசியல் அகராதியை அவர்களது அரசியல் மொழியை புரிந்து கொள்வது மிக முக்கியமாகும். அதற்கான ஆழுமையை வெளியில் உள்ள ஆளுமைகளை capacity இணைத்தும் பயிற்ச்சிகள் மூலமும் நாம் வளர்த்துக் கொள்ள முடியும். நாம் எப்படியும் வென்றாக வேன்டும் வல்வைசாகரா.

சிறைப் பட்ட போராளிகளுக்கும் அரசுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தையை உருவாக்குவது சாத்தியாமா என்பதை வெளிநாட்டில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சமூகத்துடனும் தொடர்புள்ள சிங்கள ஆர்வலர்களூடாகவும் முயன்று பார்ப்பது அவசியமானது என்றே கருதுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வல்வைசாகரா, ரிஎன் ஏ பாராளுமன்ற உறுப்பினர்களும் புலம்பெயர்ந்த நாடுகளில் முன்னணியில் இருந்து இயங்குபவர்கள் இந்தக் கோரிக்கையையும் முன்னிலைப் படுத்தவேணும் என்பதுதான் எனது வேன்டுகோள். புலம்பெயர்ந்த ஆர்வலர்கள் தோல்விக்கு வழிவகுத்த பழைய அணுகுமுறைகளை மீழாய்வு செய்யாமல் சாத்தியமான புதிய வழிமுறைகளைப் பற்றி பரந்துபட்ட கலந்துரையாடல்கள் இல்லாமல் தடை பண்ணப் பட்ட காலத்து பழைய வடிவங்களில் தொடர்ந்தும் போராடுவது பயனில்லை. எங்கள் பலத்தை நாம் எதிரிக்கு மட்டுமே காட்டவேண்டும். சர்வதேச சமூகத்தை அவர்கள் வருக என்னும் வகையிலான வடிவத்தில் அணுகி அவர்களில் எதவது ஒரு சாராரையென்றாலும் வென்றாக வேண்டும். நாம் செய்தது செய்வதெல்லாம் சரி. உலகம் முழுவதும் எமக்கு எதிர் என்கிற நம்மைத் தோல்விக்குத் தள்ளிய தற்கொலைச் சிந்தனையை கைவிடாமல் நாம் ஒருபோதும் முன்னே செல்லப் போவதில்லை. நாம் சரியான பாதையில் நின்று தவறுகளும் விட்டிருக்கிறோம் ஆனால் எதிரியின் பாதையும் பார்வையும் செயல்களும் தவறானவை. துன்பம் என்னவென்றால் எம் தவறுகள் தோல்விக்கு இட்டுச் செல்ல எதிரி இமாலயத் தவறுகளுடன் வெற்றி பெற்றிருக்கிறான். இதற்க்கு எதிரி தன்னை தனிமைப் படுத்தாமல் தங்கள் தரப்பில் அரசியல் இராணுவ இராஜதந்திர அறிஞர்களும் நிபுணர்களும் சொல்வதைச் செவிமடுத்தது அவர்களது ஆலோசனையுடன் செயல்பட்டதுதான் அடிப்படையாக இருந்தது. எதிரி தனது அதிகாரத்தை நிபுணத்துவமுள்ள தனது அணியினருடன் பகிர்ந்து கொண்டான். இதனால் சர்வதேச அமைப்புக்கு எதிரியின் அணியினருடன் பேசுவது இலகுவாக இருந்தது. சர்வதேச சமூகத்தவர்கள் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களை மட்டுமே அதுவும் பேச்சுவார்த்தையின் முற்பாதிக் காலக்கட்டத்தில் மட்டுமே ஓரளவு அதிகாரத்துடன் செயல்படுகிறவராகக் கணித்தது. இந்த நிலமை இலங்கை அரசின் அணிக்கு இருக்கவில்லை. எங்கள் தரப்பில் இத்தகைய அணுகுமுறை ஒருபோதும் இருக்கவில்லை. இவற்றையெல்லாம் நான் வன்னியிலேயே உரத்துச் சொல்லி இருக்கிறேன். இன்னும்கூட நாம் அத்தகைய அணுகுமுறையை வளர்த்தெடுக்கவில்லை. நாம் ஏகப் பிரதிநிதிகள் என்கிற கருத்து உள்ளார்ந்த எல்லா விவாதங்களையும் ஆய்வுகளையும் நிராகரித்துவிட்டது. சர்வதேச சமூகமுகத்தின் ஜனநாயக அகராதியில் முன்னணி அல்லது முதன்மை அமைப்பு என்ற சொல்மட்டுமே இருக்கிறது. மேற்க்கு நாடுகளில் ஏகப் பிரதிநிதிகள் என்ற சொல்லை பாசிஸ்ட்டுகளின் பதம் என்றே அடையாலம் காணுகிறார்கள் என்பதை வன்னியில் பலதடவை தெரிவிதிருக்கிறேன். இதுபற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேன்டும். எங்கலை எதிரியும் நாமும் மூடி வைத்திருக்கிறோம். இந்த குண்டுச் சட்டியை உடைத்துக்கொண்டு வெளியில் வரவேன்டுமென்றால் சர்வதேச அணி ஒன்றை வென்றெடுக்க வேணுமென்றால் அவர்களது அரசியல் அகராதியை அவர்களது அரசியல் மொழியை புரிந்து கொள்வது மிக முக்கியமாகும். அதற்கான ஆழுமையை வெளியில் உள்ள ஆளுமைகளை capacity இணைத்தும் பயிற்ச்சிகள் மூலமும் நாம் வளர்த்துக் கொள்ள முடியும். நாம் எப்படியும் வென்றாக வேன்டும் வல்வைசாகரா.

சிறைப் பட்ட போராளிகளுக்கும் அரசுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தையை உருவாக்குவது சாத்தியாமா என்பதை வெளிநாட்டில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சமூகத்துடனும் தொடர்புள்ள சிங்கள ஆர்வலர்களூடாகவும் முயன்று பார்ப்பது அவசியமானது என்றே கருதுகிறேன். இத்தகைய ஒரு முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களது ஆதரவையும் பெறமுடியும்.

http://www.yarl.com/forum3/index.php?showforum=144

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கி.பி அரவிந்தன் எனக்கு கோல் பண்ணி சொன்னார் புதுவையும் வவுனியா முகாம் ஒன்றில் இருப்பதாக அவர் மிகவும் உறுதியாக சொன்னார் எனவே மன ஆறுதலாகக இருக்கிறது ஜெயபாலன்

  • கருத்துக்கள உறவுகள்

கி.பி அரவிந்தன் எனக்கு கோல் பண்ணி சொன்னார் புதுவையும் வவுனியா முகாம் ஒன்றில் இருப்பதாக அவர் மிகவும் உறுதியாக சொன்னார் எனவே மன ஆறுதலாகக இருக்கிறது ஜெயபாலன்

தோழமைமிக்க போராளிகள் புதுவை, பாலகுமாரன், தமிழினி போன்ற பலர் சிறைப்பட்டிருப்பதை அறிந்தபின்னர்தான் அரசு சிறையில் இருக்கும் போராளிகளுடன் பேசவேன்டுமென்று எழுதினேன். வரலாற்றில் இத்தகைய திருப்புமுனைகள் புதிதல்ல என்றாலும் நம்மைப் பொறுத்து அது ஒரு கனவுதான். ஆனாலும் எங்கள் நிலையில் கனவுகள் அவசியம்.

வதந்திகளை நம்பி உங்களை ஏமாற்றியதைப்போன்று மற்றவர்களையும் ஏமாற்றாதீர்கள்.

இதுவரை யாரும் கைதுசெய்யததாக அறிவித்ததே தவிர புகைப்படம் போடவில்லை.

தயா மாஸ்டர் ஜோர்ஜ் படங்கள் போட்ட அரசால் ஏன் இவர்களின் படங்களை வெளியிட முடியவில்லை. எல்லாமே எம்மவரை கழுவும் வேலைதான். அதற்கு இங்குள்ள சில கைக்கூலிகள் தாங்கள் கழுவியதோடு மற்றவர்களையும் கழுவுகின்றன

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச சமூகமுகத்தின் ஜனநாயக அகராதியில் முன்னணி அல்லது முதன்மை அமைப்பு என்ற சொல்மட்டுமே இருக்கிறது. என்று நீ சொன்னது உண்மை

இந்த விடயத்தை இப்பொழுது சர்வதேச தமிழர்களுக்கு விளங்கப்படுத்தி அங்குள்ள தமிழ் மக்களை காப்பாற்றும் திட்டம் ஒன்றில் பிரிவுகளை மறந்து விட்டு எல்லோரும் ஒன்று பட வேண்டும் தோழா ஆனால் ஒவ்வொண்டும் ஒவ்வொரு கன்னையாக நிற்குதுகள்

கன்னை பிரிச்சுக் கிளிக்கோடு ஆடத்தான் பலவழியால் புதுப்புது அவதாரங்கள். 3லட்சம் உயிரும் எப்படி வேண்டுமானாலும் போகட்டும். இன்னும் கனவுகளோடு பயணித்தலே பலருக்குப் பிரியமாகவுள்ளது.

முன்னணி அல்லது முதன்மை பற்றியெல்லாம் யோசிக்க வைத்தால் பிழைப்புவாதம் கெட்டு உழைக்க வேண்டிவந்துவிடும் என்பதால் இன்னும் மாயையில் புலத்தைப் பூட்டி வைத்துவிடத் துடிக்கிறது புலம்.

3லட்சத்துள்ளும் எத்தனையோ ஆயிரங்கள் எங்களுக்காக இறுதிவரை எல்லாவற்றையும் துறந்தவர்கள். அவர்களுக்காக அவர்களை நம்பியவர்களுக்காக என்றாலும் கன்னைகள் ஒன்றாகலாம். பார்ப்போம் கிளித்தட்டு விளையாட்டோ அல்லது உயிர்காப்போ ????

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா எத்தகைய மனிதகாருண்யத்திற்கும் இடம்கொடாத மிலேச்சப்போக்கில் ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறது. 3 லட்சம் தமிழ் உயிர்களை தன் ராணுவப்பிடியில் வதைமுகாம்களுக்குள் வைத்துக் கொண்டு வீராப்புப் பேசிக் கொண்டிருக்கிறது. தமிழராய் நாம் புலம்பெயர்ந்த தேசங்களில் ஒற்றுமைப்பட்டு அடுத்த கட்டத்திற்கு நகரக்கூடாது என்பதைத்தான் சிங்கள அரசு எதிர்பார்க்கிறது. நீண்ட காலத்திற்கு எங்கள் இனத்தை பணயக்கைதிகளாக வதைமுகாம்களுக்குள் அடைத்துவைத்து தமிழரின் நியாயமான வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தை கூர்மையிழக்கச் செய்வதே சிறீலங்கா அரசின் குறிக்கோள். இது காலம் தந்த பரீட்சை தவிர்க்கவே முடியாதது.

ஓ..மனிதமே!

இது ஈழத் தமிழினத்தின் இக்காலக்கதை

கண்ணெதிரே இனவாதம் கடித்துக் குதறும்

ஓரினத்தின் குருதி தோய்த்தெழுதும்

எழுதுகோல் கொந்தளிக்கும் உண்மைக்கதை

உலக வல்லாதிக்கத்தின்,

அவலம் உணராக் கோட்பாடுகளும்,

ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக

எம்மீது எழுதப்பட்டுள்ளன

தொடரும் சித்ரவதைகளும்,

கந்தகத்தோடு உழலும் வாழ்வியலும்

பொருத்தமில்லாச் சமன்பாடுகளும்

எம்மை நோக்கித் திணிக்கப்படுகின்றன.

எங்கள் சுயமும், எமக்கான வாழ்வும்

மறுக்கப்படுகின்றன.

குரல்கள் ஒடுக்கப்படுகின்றன

ஒரு இனவாதத்தின் படர்கை

எம் வரலாறுகளை தீய்த்து மறைக்கிறது.

விடுதலையை எம்வாசல் நோக்கி அள்ளிவரும்

காற்றுக்காய் எம் காத்திருப்புகள் தொடர்கின்றன.

வெறுமையும் விரக்தியும் வைரம் பாய

மரணத்தை மீறி எழுமா எம்வாழ்வு?

முற்றுப் பெறாத கால நீட்சியில்

எம்மினத்தின் வாழ்வு ஏளனத்திற்குள்ளாகிறது.

வெற்றிக் களிப்பில் கூத்தாடும் எதிரியின் ஆட்டம்

உசுப்பி எம்மை உக்கிரப்படுத்துகிறது.

அற்றதொரு பொருளுக்குள் புதைக்கப்படும் சுயத்தின்

அடங்காச் சினத்திற்கு அவதாரம் கேட்கிறது.

ஒடுக்குதற்கெதிரான நிமிர்வின் வியாபித்தலில்....

  • கருத்துக்கள உறவுகள்

காலம் தசமப்புள்ளிகளில் மீண்டும் மீண்டும் வட்டங்களை வரைகிறதா? இலக்குகளை நோக்கிப் பயணிக்கும்போது 1, 2, 3, 4, கட்டங்களாக தமிழீழப்போர் வெவ்வேறு வடிவங்களில் நடந்தேறியுள்ளன. இப்போதும் இலக்கு என்ற புள்ளியில் இருந்து வழுவாது மீண்டெழுந்த சக்தியாக புலம்பெயர்ந்த மக்களிடம் சட்டபூர்வமான தொடர் போராட்டங்களாக வடிவெடுத்திருக்கிறது. தமிழீழத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த உரிமைப்போராட்டம் ஆயுதங்களின் மெளனிப்பில் இன்னொரு முகம் கொண்டு சர்வதேச பரிணாமம் கொண்டுள்ளது. தமிழினம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் உலகெங்கும் பரவி இருக்கும் தமிழ்மக்கள் சிங்கள அரசால் ஓரணியில் இணைக்கப்பட்டுள்ளனர். எல்லோரும் தமிழினத்தின் வாழ்விற்காகத்தான் நல்லவை, கெட்டவை என்று பலதரப்பட்ட குற்றம் குறைகளை போராட்டத்தில் முழுமையாக அர்ப்பணித்து நின்ற உறவுகளை காய்ந்தார்கள். இப்போது எல்லோருக்குமான பாதை தெளிவானதாக உள்ளது. தமிழ் மக்களின் மேல் ஆழ்ந்த நேசிப்பை வைத்திருப்பதாகவும் ஆதலாலேயே சில பல மாற்றுக் கருத்துகள் தம்மால் உரைக்கப்படுவதாகவும் கூறியவர்களை இப்போது ஆயுதங்கள் மெளனித்த கணங்களில் காணவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தேடவேண்டிய கட்டத்தில் அவர்களால் ஆழமாக நேசிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழினத்தின் நிலை உள்ளது.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளின் முன் எழுதப்பட்டது. புலம்பெயர்ந்த மக்கள் உரிய இயக்கம் பெறாதுபோயின் எதிர்வரும் காலங்கள் இப்படியும் அமையக்கூடும் என்று அன்றைய நாட்களில் ஏற்பட்ட மன உந்துதலினால் எழுதியது. இன்று கண்முன்னே....

சீறும் தமிழ்வீரம் செயலில் இறங்காதோ?

---------------

------------------------

------------------------------

-------------------------------------

சிங்களர் ஆட்சியில் வெங்களத்தமிழன்னை பங்கத்திற்காளாவதோ? - எனப்

பொங்கிய கோபத்தில் புறப்பட்ட தமிழரிற்கு சிறைக்கூடம் முடிவாவதோ?

ஐயகோ....

தமிழ் மைந்தர் உடலங்கள் சிதறி சிறு சிறு துணிக்கை காண - இன்று

தாங்கொணாத் துயரத்தில் தனித்துவம் இழந்து

அன்னை தேம்பிடும் குரல் கேட்குது.

ஆமாம் நாளையங்கு,

வீடுகள் இருந்த இடத்தில் மணல் மேடுகள் தோன்றியிருக்கும்.

பச்சைப் புல்வெளியும் பாலை வனமாயிருக்கும்.

பார்க்கும் இடந்தோறும் பிணங்கள் எரிக்கப்பட்டு

சாம்பல் மேடுகள் பல சங்கதிகள் சொல்லும்.

கழுகுகள் குடியிருக்கும்.

காண்டாவனம் சுட்டெரிக்கும்.

விதையிலேயே விழுதுகள் வண்டரித்துப் போயிருக்கும்.

காக்கை குருவிகூட காலனுக்கு இரையாகும்.

வித்துக்கள் மதியிலே பித்தம் தலை தூக்கும்.

தத்தைகளும் அங்கு தன்மதியற்றிருப்பர்.

யத்த ராட்சதனின் கோரப்பிடிக்குள்

சிதைந்து எம்தேசம் சீரழிந்து போயிருக்கும்.

எந்நிலை வந்தாலும்,

எம்தேசம் காக்க உலகத் தமிழினமே!

எம்மவர்க்கு வலிமையைக் கொடுப்பாயோ?

வஞ்சனையைச் செய்வாயோ?

------------------------

--------------------------

-------------------------------

------------------------

--

( நெருப்புக்குயில்கள் - 1998 )

வல்லரசுகளால் நசுக்கப்படும் இனமாக எங்கள் இனம் பாவப்பட்டு நிற்கிறது. தமிழினத்தின் வாழ்வு, எதிர்காலம் என்பது நீண்ட போராட்டங்களூடாகவே சாத்தியப்படும். அதற்காக எம்மை ஒருநிலைப்படுத்துவதே இன்றைய தேவையாக இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.