Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிக் கவிஞர் தாமரையின் நெருப்பு வரிகள்!

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

தமிழ் சினிமாவில் நல்ல தமிழில் பாட்டெழுத முடியாது என்கிற எழுதப்படாத விதியை உடைத்தெறிந்தவர், கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை. ‘கண்கள் இரண்டால்’ என்று காதல் பேசி இவரது பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஆனால் அவர் எழுதிய இந்தக் கவிதையை பிரசுரிக்க பலரும் தயங்கி நின்றார்கள். இந்த வாரம் குமுதம் வார இதழில் இந்தக் கவிதையின் ஒரு பகுதி பிரசுரமாகியிருக்கிறது. இப்படியொரு அறம் பாடும் தைரியம் கவிஞருக்கு இருந்த போதும் அதை வெளியிடும் தைரியம் நம் பத்திரிகைகளுக்கு இல்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டிருக்கிறது. குமுதம் டாட் காமிலும் கவிஞர் தாமரை இந்தக் கவிதையை வாசிக்கும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. விரையில் அந்த வீடியோவையும் இதில் இணைக்கிறேன்.

இந்தியத் தேர்தல் நேரத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதை அப்போதே பிரசுரமாயிருக்க வேண்டியது. ஆனால் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. பாப்புலர் மீடியாக்களில் வெளிவரட்டும் என்றுதான் நானும் இதை பதிவிடாமல் காத்திருந்தேன். தமிழினத்திற்கு நேர்ந்த கொடுமை கண்டு கொதிக்கும¢ ஒவ்வொவரின் இதயமும் பேசுவதாகவே இந்தக் கவிதையை நான் பார்க்கிறேன். அறம் பாடினால் பாடப்பெற்றவர்கள் என்ன ஆவார்கள் என்பதை நாடறியும். நானும் அறிவேன்.

‘உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்க மாட்டேன்’ என்று வசனம் பேசிவிட்டு தமிழன் தலையில் குண்டுவிழுவதை கண்டும் காணாமல் இருக்கும் திரைப்படத் துறையினருக்கு மத்தியில் இப்படியொருவர் இருக்கிறார் என்பதை உண்மையான தமிழர்கள் என்றென்றைக்கும் நினைத்துப்பார்க்க வேண்டியது அவசியம். சரி பீடிகை போதும் கவிதையை வாசியுங்கள்.

தாமரை

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்

செய்துவிட்டாய்

எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனை

வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்

காலில் விழுந்தும் கதறியும்

கொளுத்திக் கொண்டு செத்தும்

தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு

இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...

பட்டினியால் சுருண்டு மடிந்த

பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து

அழுது வீங்கிய கண்களோடும்

அரற்றிய துக்கத்தோடும்

களைந்த கூந்தலோடும்

வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து

ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து

அறநெறியில் வாழ்ந்தவள்

அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்

பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்

இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!

ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி

குண்டுகளைக் குறிபார்த்துத்

தலையில் போடவைத்த உன்தலை

சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த

எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய

இனி ஒரு நூற்றாண்டுக்கு

உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு

மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்

இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்

அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்

உங்கள் மலைகள் எல்லாம்

எரிமலைக் குழம்புகளைக்

கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...

உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!

எதிரிகள் சூழ்ந்து

உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து

சிதறிய உடல்களோடு

சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று

கூசாமல் பொய் சொன்ன வாய்களில்

புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!

எங்கள் எலும்புக் கூடுகள் மீது

ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்

தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...

உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து

ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி

சித்திரவதையில் சாகடித்தீர்களே...

உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த

சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...

உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்

படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...

உங்கள் நாடி நரம்பெல்லாம்

நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு

புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...

ஆழிப்பேரலை

பொங்கியெழுந்து

அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!

நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!

..........

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!

குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே...

அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்

உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

"தாயே என்றழைத்த வாயால்

பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்

இனி நீ வேறுஇ நான் வேறு!

ஏ இந்தியாவே!

ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி

குண்டுகளைக் குறிபார்த்துத்

தலையில் போடவைத்த உன்தலை

சுக்குநூறாய் சிதறட்டும்!"

அம்மா நீங்கள் போட்ட சாபத்தில் குறைந்தது ஐந்து வீதம் நிறைவேறினாலும் எம் மக்களின் ஆத்மா சாந்தியடையும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரார்த்திக்கிறேன்!

நன்றியம்மா.

இது உங்களது மாத்திரமல்ல. தமிழுணர்வுள்ள அத்தனை மக்களதும் சாபம். நடக்கக் கடவது.

Edited by Senthamilalan

  • கருத்துக்கள உறவுகள்

என் குழந்தையினால் இந்தியதேசம் சுக்குநூறாக்கப்படும்!!

"தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்"

சாபம் ,அநியாயம் ஆட்சி செய்யும் உலகில் சாபம் எடுபடாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரட்சிக் கவிஞர் தாமரையின் நெருப்பு வரிகள்!

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

................................................................................

..

என்னதான் இருந்தாலும் கவிஞர் தாமரை ஒரு தாய். சாபம் கொடுத்துதான் ஆரம்பித்தாலும் கவிதை முடியும்போது தாயுள்ளம் விழித்துக்கொண்டது.

உண்மையில் சாபம் பலிக்குமா? புராணங்கள் தவிரவேறு நடைமுறை உதாரணம் உண்டா?

ரமண மஹரிஷிக்கு நனகு பரிச்சயமான கணபதி முனிவர் என்ற தேவி உபாஸகர் வட நாட்டு யாத்திரைக்கு சென்றுவிட்டு வரும் வழியில் சூரத் நகரில் அவரை சிலர் கேலி செய்தார்கள் என்றும் கோபம் கொண்ட அவர் விட்ட சாபம்தான் சூரத் நகரில் பிளேக் நோயாக வெடித்து மக்களை பலி கொண்டது என்றும் படித்திருக்கிறேன்.

உண்மையில் சாபம் பலிக்குமா? புராணங்கள் தவிரவேறு நடைமுறை உதாரணம் உண்டா?

.

கண்ணகியின் சாபம் தான் தமிழனுக்கு ஒரு நாடு இல்லை என்று என்கன்ட பழசுகள் சொல்லுறதுகள்.சாபம் எல்லாம் புராணக்கதைக்கு சரிவரும்.எமது மக்கள் எவ்வளவு சாபம் போட்டுஇருக்கும் சிங்கள இராணுவத்துக்கு எதிராக 30வருடமாக சாபம் போட்டு இருக்கும் ஒன்றும் பலிக்கவில்லை

ஜில் அவர்களே!

சாபம் என்பது ஒருமுகப்படுத்தப்பட்ட எண்ணத்தின் மூலம் வெளிப்படும் அளவில்லா சக்தியின் வெளிப்பாடு (அணுகுண்டைப்போல). ஒரு உதாரணம் சொல்கிறேன்.

உங்களை மிகவும் கோபப்படுத்திய சம்பவம் ஒன்றை நினைவுக்கு கொண்டுவாருங்கள் அல்லது நீங்கள் இப்போது கோபப்படுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். இப்போது, உங்களுக்கு உங்கள் பெயர், ஊர் எதுவும் நினைவுக்கு வராது. உங்கள் மனம் ஒருமைப்பட்டு, எண்ணங்கள் ஒரே நோக்கில் உங்கள் மனதிலிருந்து வெளிப்படும்.

இப்போது உங்கள் முன் நிற்பவர் அல்லது நீங்கள் மனத்தால் நினைப்பவர், நீங்கள் எண்ணும் தண்டனையை அடைய வேண்டும். ஆனால் அடையவில்லை. ஏன்? என்ன காரணம்?

நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று உங்கள் தாய், தகப்பன், உற்றார், உறவினர் நினைப்பது போன்று உங்கள் எதிரியும் நன்றாக இருக்கவேண்டும் என்று அவர் சம்பந்தப்பட்டவர்களும் நினைப்பார்கள். உங்களை சார்ந்தவர் எண்ணம் உங்களை சுற்றி நின்று காப்பது போன்று உங்கள் எதிரியை சார்ந்தவர்களின் எண்ணமும் அவரை சுற்றி நின்று காக்கும், அரண் போல. நீங்கள் அவரை தண்டிக்க நினைக்கும் எண்ணத்தின் வலிமையானது, அவரை காக்கும் எண்ணங்களை சமன் செய்து அவருக்கு நீங்கள் விரும்பும் பாதிப்பை உண்டாக்க வேண்டும் என்றால், அது மிகவும் வலிமையானதாக இருக்கவேண்டும்.

மனதை வெறுமையாக வைத்துக்கொள்ள முடிந்தவர்கள் திடீரென நினைக்கும் எண்ணங்கள், மிக மிக வலிமை பொருந்தியதாக இருக்கும். அவைகள் நினைத்ததை சாதிக்கும். நாம் அவ்வாறு இல்லை. முப்பது வருடமாக நம் இன மக்கள் விட்ட சாபம் பலிக்கும் நேரத்தில், புலிகள் அழிய வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் எண்ணம் ( நியாயமானதோ இல்லையோ ) நம் எண்ணங்களை அமிழ்த்தியதோடு, நாம் விரும்பாத விளைவுகளையும் உண்டாக்கி விட்டன .

எண்ணங்களின் மூலம் முதலில் நீங்களே உங்களை கட்டுப்படுத்த முடியும். பிறகு மற்றவர்களின் மீது கூட, உங்கள் எண்ணத்தின் வலிமையைப்பொருத்து, ஆதிக்கம் செலுத்த முடியும்.

இவைகளை நான் ஏதோ புத்தகத்தில் இருந்து அப்படியே ஒப்பிப்பதாக எண்ண வேண்டாம். நான் பரீட்சித்துப்பார்த்து உண்மை என்று கண்டு கொண்ட பிறகே உங்களுக்கும் சொல்கிறேன்.

சுவாமி விவேகானதரின் புத்தகங்களிலும் ('எழுமின் விழுமின்' என்று நினைக்கிறேன்), சுவாமி சிவானந்தரின் புத்தகங்களிலும், ('வாழ்விலும் ஆத்மானுபூதியிலும் வெற்றிக்கு நிச்சயமான வழிகள்', 'மனமும் அதன் ரகசிய்னகளும், அதை அடக்கி ஆளும் வழிமுறைகளும்') இதற்கான ஏராளமான சான்றுகளை பார்க்கலாம்.

நம்புங்கள்! இது அறிவியல் பூர்வமான உண்மை.

முற்றிலும் உண்மை..! எண்ணங்களின் வலிமை அசாதாரணமானது. எனது அனுபவத்திலும் கண்டிருக்கிறேன். :D

திரு சீனிவாசன் சொன்னது போல, எங்களை மிகவும் உணர்வுரீதியில் துன்புறுத்துபவர்களுக்கு என்ன நடந்தது என்று பார்த்தால் உண்மை விளங்கும். என்னைப் பொறுத்தவரையில், இதுவரையில் மூன்றுபேர் மண்டையைப் போட்டுவிட்டார்கள்..! அதுவும் ஓரிரு வருடங்களுக்குள்..! :D (நான் சத்தியமாக் கொலை செய்யலை ஆமா..! அதுமாதிரி கருத்துக்களத்தில என்கிட்ட யாரும் மோத வேண்டாம்.. இப்பவே சொல்லிட்டன் ஆமா..! :D )

அனுபவத்தை உணரத்தான் முடியும். விளக்க முடியாது. வார்த்தைகள் ஓரளவுக்குதான் கை கொடுக்கும்.

"தாய் தன் மணாளனோடு கூடிய சுகத்தை மகளுக்கு சொல்லில் புரிய வைக்க முடியாது"

என்னும் கருத்தை உள்ளடக்கிய பாடல் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.