Jump to content

சயனைட்டைச் சாப்பிட்டிட்டான்.

Recommended Posts

பதியப்பட்டது

சயனைட்டைச் சாப்பிட்டிட்டான்.

Visit My Website

இரவு விழுங்கிய அமைதியில் எல்லா ஜீவனும் உறங்கிக் கிடக்க எங்கோ தொலைவாய் நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. இடக்கையைப் பிடரிக்கும் , வலக்கையை நெற்றியுலுமாய் வைத்துக் கொண்டு படுத்திருந்தான்.

இரவின் கருமைக்குள் உறங்கிப் போகாது அந்த அறையின் இருளைத்தன் ஒளிக்கைகளால் துடைத்தபடியிருந்த சிமினி விளக்கினைப் பூச்சிக் கூட்டமொன்று சுற்றிக் கொண்டிருந்தது. அவற்றில் சில பூச்சிகள் சிமினியின் கண்ணாடியில் மோதி எரிந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த ஒளி விளக்கின் மீதான தன்பார்வையைத் திருப்பி நேரெதிரே பார்த்தான். அகிலன் எந்த அரவமுமின்றிக் கிடந்தான். அவனுக்குப் பக்கத்தில் அவனது அம்மா முளித்தபடிதானிருந்தாள்.

என்ன தம்பி நித்திரை வரேல்லயா ? கேட்டாள். இல்லையம்மா…அவங்கள் வருவாங்கள் போல கிடக்கம்மா….பின்கதவுப்பக்கத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இழப்பின் வலியை அனுபவித்தவர்களால்தான் அதை ஓரளவுக்கேனும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியும். நான் வேறு வலிகளுக்குப் பழக்கப்பட்டிருந்தாலும், இந்த வலி புதிது. தொடருங்கள் நண்பரே.

Posted

வேண்டாம் இவ் வலி இனி எம்மவர்க்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நித்தியமாய் உறங்க போகும் அவன் இதய வலிகள் ........சொன்ன விதம் அழகு .

நேரில் பார்த்து போல இருந்தது பதிவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இது கதையல்ல நிஜம்.... உண்மை...

வன்னியில் இருந்து தப்பி நண்பன் வீரமரணம் அடைந்த செய்தி கேட்டு வெளிநாடு ஒன்றில் சில தினங்களுக்கு முன் என் நண்பன் தற்கொலை செய்து கொண்டான்

Posted

3 மாதங்களுக்கு முன்பு சக கள உறுப்பினர் சயந்தனின் வடலி பதிப்பகத்தில் இருந்து அகிலனின் 'மரணத்தின் வாசனை' யை வாங்கி படிக்கத் தொடங்கி இருந்தன். 'ஒருத்தீ' யையும் வாசித்து விட்டு அதன் பின் மிச்சம் இருக்கின்ற சிறுகதைகளை மிக துயரமாக இருக்கு என்றதால் இப்போதைக்கு வாசிக்க கூடாது என்று முடிவெடுத்து புத்தகத்தினை மூடி வைத்து விட்டேன்.

ஒவ்வொரு நாளும் தெரிந்தவர்களின், உறவினர்களின், பழகியவர்களின் சாவு செய்தி வந்து கொண்டும் மக்கள் தொகை தொகையாக அழிக்கப் பட்டும் கொண்டிருக்கும் ஒரு சூழலில், மனம் மரத்து போய், மனவழுத்தம் அதிகரித்து இருந்த நேரத்தில் அந்த சிறுகதைக்களும் மேலும் மேலும் கடும் துயரத்தினை தந்தன என்பதால் அதனை இன்னும் 2 வருடங்களின் பின் வாசிப்பம் என்று வைத்து விட்டேன்

இப்போது சாந்தி அக்காவின் இந்த சிறுகதையை தெரியாத்தனமாக வாசித்து விட்டேன். மீண்டும் மனம் இறுகி, துயரம் மழையாக உள்ளே பெய்கின்றது. பெயர்களையும் ஊர்களையும் மாற்றி எமக்கு தெரிந்தவர்களை நிரப்பி பார்க்கும் போது இது எல்லாருக்குமான கதையாக உணரப்படுகின்றது.

Posted

உண்மை கதை தான். நன்றி சாந்தி அக்கா. எஞ்சி இருக்கும் போராளிகளுக்கு , ஆயிரம் கனவுகளுடன் சென்றவர்களுக்கு இது தான் விதியா.?

Posted

இழப்பின் வலியை அனுபவித்தவர்களால்தான் அதை ஓரளவுக்கேனும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியும். நான் வேறு வலிகளுக்குப் பழக்கப்பட்டிருந்தாலும், இந்த வலி புதிது. தொடருங்கள் நண்பரே.

கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் நண்பரே.

வேண்டாம் இவ் வலி இனி எம்மவர்க்கு

வேண்டாம் என்றுதான் விரும்புகிறோம். ஆயினும் தொடர்கிறதே இத்தகைய நிகழ்வுகள்

நித்தியமாய் உறங்க போகும் அவன் இதய வலிகள் ........சொன்ன விதம் அழகு .

நேரில் பார்த்து போல இருந்தது பதிவுக்கு நன்றி.

நித்தியமாய் அவன் உறங்கிவிட்டான். அவனது அன்புக்குரிய சின்னக்காவும் உறவுகளும் அவன் நினைவில் சாகாத பிணங்களாக.... :huh:

இது கதையல்ல நிஜம்.... உண்மை...

வன்னியில் இருந்து தப்பி நண்பன் வீரமரணம் அடைந்த செய்தி கேட்டு வெளிநாடு ஒன்றில் சில தினங்களுக்கு முன் என் நண்பன் தற்கொலை செய்து கொண்டான்

ஏன் எங்களுக்கு இப்படியொரு துயரம் வந்து தொலைந்தது என அழத்தான் முடிகிறது.

3 மாதங்களுக்கு முன்பு சக கள உறுப்பினர் சயந்தனின் வடலி பதிப்பகத்தில் இருந்து அகிலனின் 'மரணத்தின் வாசனை' யை வாங்கி படிக்கத் தொடங்கி இருந்தன். 'ஒருத்தீ' யையும் வாசித்து விட்டு அதன் பின் மிச்சம் இருக்கின்ற சிறுகதைகளை மிக துயரமாக இருக்கு என்றதால் இப்போதைக்கு வாசிக்க கூடாது என்று முடிவெடுத்து புத்தகத்தினை மூடி வைத்து விட்டேன்.

ஒவ்வொரு நாளும் தெரிந்தவர்களின், உறவினர்களின், பழகியவர்களின் சாவு செய்தி வந்து கொண்டும் மக்கள் தொகை தொகையாக அழிக்கப் பட்டும் கொண்டிருக்கும் ஒரு சூழலில், மனம் மரத்து போய், மனவழுத்தம் அதிகரித்து இருந்த நேரத்தில் அந்த சிறுகதைக்களும் மேலும் மேலும் கடும் துயரத்தினை தந்தன என்பதால் அதனை இன்னும் 2 வருடங்களின் பின் வாசிப்பம் என்று வைத்து விட்டேன்

இப்போது சாந்தி அக்காவின் இந்த சிறுகதையை தெரியாத்தனமாக வாசித்து விட்டேன். மீண்டும் மனம் இறுகி, துயரம் மழையாக உள்ளே பெய்கின்றது. பெயர்களையும் ஊர்களையும் மாற்றி எமக்கு தெரிந்தவர்களை நிரப்பி பார்க்கும் போது இது எல்லாருக்குமான கதையாக உணரப்படுகின்றது.

இத்தகைய துயர்களைப் பதிவிட்டு வைப்போம். எங்கள் சந்ததி எதிர்காலத்தில் இதைத்தான் எங்களுக்கான எழுச்சியாகக் கொண்டு எழட்டும்.

Posted

உண்மை கதை தான். நன்றி சாந்தி அக்கா. எஞ்சி இருக்கும் போராளிகளுக்கு , ஆயிரம் கனவுகளுடன் சென்றவர்களுக்கு இது தான் விதியா.?

நுணாவிலான்,

எஞ்சியவர்கள் இன்னும் எதிரியின் கையில் உள்ளவர்கள் யாவரின் நிலையையும் காலம் தான் நிர்ணயிக்க வேண்டும். :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.