Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் தலைவனும் நானும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணை,

உங்கள் மன நிலை புரியாமல் இல்லை. எங்கள் மனநிலையும் உள்ளுணர்வும் எத்தனையோ கேள்விகளுக்குள் தான் நகர்கின்றது. 16 வயதில் இருந்து போராடிப்போராடி தன் சுகங்கள் எதையுமே அனுபவிக்காமல் தமிழீழத்தாகமே மூச்சென வாழ்கின்றவர் அல்லவா எங்களின் தலைவர்?

என் மன நிலையில் மாற்றம் இல்லை' தலைவர் எப்போதும் எங்களுடன் இருக்கின்றார், இருப்பார்".

அறிக்கைகள் வந்து சூறாவளியாய் நம்மை சுழற்றிப்போட்டு கலைக்கப் பார்த்தாலும். " ஒரு கணம் கண் மூடித் தலைவா!!

உன் நலமே எம் பலம்" என்று சொல்லிவிட்டு என் வேலையைத்தொடர்கின்றேன்.

குழப்பங்களை விட்டு விட்டு தெளிவு பெறுங்கள்.

உண்மைகள் உறங்கும் ஆனால் செத்துவிடாது.

சரியாகச் சொன்னீர்கள் தமிழ் தங்கை .

நண்பர் விசுகு , சில விடயயங்களில் அதிக கவனம் செலுத்தியதால் வந்த வேதனையை எம்மிடம் பகிர்ந்துள்ளார் .

அந்த ஈழ மகன் , கொஞ்ச காலத்துக்கு ஊர்ப்புதினம் பகுதியை வாசிக்காமல் இருப்பது நல்லது .

விசுகு சில மாதங்களிற்கு முன்பு ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதாக ஞாபகம் .

அவர் தனது குடும்பத்தினருக்காக ஆவது தனது உடல் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருக்க வேண்டும் என்றே மனம் இன்றைக்கும் இறைஞ்சுகின்றது. ஆனால், அதற்கான எந்த வலுவூட்டும் காரணிகளையும் எம்மிடம் இல்லை.

நாங்கள் வேண்டுமனாலால் தலைவர் குறித்து வருந்துகின்றோம். ஆனால் தலைவர் அவர்கள் தன்னை நம்பியிருந்த காயமடைந்த, சமராடும் போரளிகள், பொதுமக்களை விட்டு விட்டுத் தான் தனியே செல்கின்ற மனநிலையில் இருக்கவில்லை என்பதை மனவலியோடு ஏற்கத் தான் வேண்டியுள்ளது. உண்மையில் அதற்கான முழுப்பொறுப்பையும் நாங்களே ஏற்கவேண்டும். அவருடைய இலட்சியம், கனவை எக்காலப்பகுதியிலும் மீட்டெடுத்து, நிறைவேற்றுவதே அவருக்கு நாம் செய்யும் கடமையுமாகும்.

இன்றைக்கு இறுதி நேரத்தில் தலைவர் தப்பிக்க முயற்சித்தது போல எழுதுகின்றார்கள். உண்மையில் அது கூட அவர் செய்த தியாகத்தையும், கடைசி வரை மண்ணோடும், மக்களோடும் தான் இருந்தார் என்ற உயர்ந்த பண்பையும் மறைப்பது போல் உள்ளது. அவர் பாதுகாப்பாக செல்லும் எந்த எண்ணத்தையும் இறுதி வரை கொண்டிருக்கவில்லை என்றே தோன்றுகின்றது.

அந்தச் செய்தி வந்தபோது, தலைவர் எங்காவது நிம்மதியாக வாழட்டும், எமக்கு நாடே வேண்டாம் என்று அழுத பல உள்ளங்கள் உணர்வுகள் புரிந்து கொள்ளக் கூடியதே.

ஆனால் ஒரு விடயம். ஒரு தனிநாடு எப்படி இருக்க வேண்டும். அதற்கான கட்டுமானங்கள், செயற்பாடுகள், கொடி, அடையாளம் என்று எல்லாவற்றையுமே தலைவர் எமக்குக் காட்டியிருக்கின்றார். தலைமுறை, தலைமுறையாக அற்த அடையாளத்தைத் தவிர, வேறு எந்த அடையாளத்தையும் ஏற்றுக் கொள்ள இடம் கொடுக்காது இருப்போம். ஆனால் தன்னால் முடிந்தளவு அவர் நாட்டுக்காகப் போராடினார். அதை மட்டுமே அவரால் வெற்றி பெற முடியவில்லை.. நாமும் தோள் கொடுக்கவில்லை..

எதுவந்தாலும், ஒன்று தமிழீத்தை மீட்டெடுப்போம், இல்லாவிடின், தமிழீழம் இல்லை என்றால் சிங்கள தேசமும் இல்லாது போக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் தப்பிச் செத்தது உண்மை. அதை நம்புவதும் நம்பாததும் தனிப்பட்டவர் விருப்பம், இல்லை தூங்குவதும்,தூங்காததும் உங்க இஸ்டம் ஆனால் இதுக்கெல்லாம் மற்றவர்களின் கருத்தை கேட்டு.....இல்லை இது இப்ப ரொம்ப அவசியமா?

தலைவர் இப்ப எதுக்காக வேணும்?

அவர் இருந்தால் எல்லாத்தையும் அவற்றையும்,அங்கை இருக்கிற போராளிகள்,பொடியள்,மக்கள் தலையிலை பாரத்தை போட்டிட்டு இஞ்சை இருந்து கொண்டு 20கு20 கிரிக்கட் மச் பார்த்துக்கொண்டு வெட்டிப்பேச்சு பேசி வம்பளக்கவா?: பாவம் அந்தாள் இந்த ஈனப்பிறவிகளுக்காக இவ்வளவுகாலமும் பட்டது போதும்.

நீங்கள் என்ன எழுதி இருக்குறீங்கள்?

தலைவர் தப்பிச்சது உண்மை என்றா அல்லது தலைவர் தப்பி பிறகு செத்தாரா? புரியும் படி எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்

தமிழ்தங்கை தமிழ்ஸ்ரீ மற்றும் தூயவன்

அதேநேரம்

நான் ஏன் இந்தக்கேள்விகளை இங்கே முன்வைத்தேன் என்றால் எனக்காக அல்ல.

நாம் சேர்ந்து இயங்கவேண்டியவேளை இது.

எனவே எமக்குள் முக்கியவிடயங்களில் தெளிவுதேவை

அத்திவாரமே இல்லாமல்

அல்லது

அத்திவாரம் இருக்கா இல்லையா என்றே தெரியாமல் எப்படி மீதியைக்கட்டுவது......?

இனிவரும் நிகழ்ச்சிகள் அல்லது போராட்டங்கள் அல்லது ஊர்வலங்களை எந்த அடிப்படையில் செய்துமுடிக்கப்போகின்றோம்...?உதாரணமாக:- மாவீரர் நாள்

அன்று எப்படி கவிதை படிக்கப்போகின்றோம்

பேச்சுக்கள் எப்படி இடம்பெறப்போகின்றன

பாடல்கள் நாடகங்கள் எந்த அடிப்படையில்.........

அல்லது ஒவ்வொரு பேச்சுக்களின்போதும்.....

ஒவ்வொரு கவிதையின்போதும்......

கருத்துக்களை கேட்டு விட்டு வேறுவேறு குழுக்களாக நின்று மல்லுக்கட்டப்போகின்றோமா.......???

நான் மக்களோடு பழகுபவன் என்னால் இருக்கு இல்லை என்றெல்லாம் இரட்டைவேடமெல்லாம் போடமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில்

இங்கு ஒரு ஊர்வலத்தின்போது முக்கியமான அதேநேரம் என்னால் கொண்டுவரப்பட்ட நண்பர் ஒருவருடன் கதைக்கும் வாய்ப்புக்கிடைத்தது

அவர் அங்கு நின்றவர்களுக்கெல்லாம் தலைவர் இருக்கின்றார் என்பது பற்றி பல நல்ல விளக்கங்களை சொல்லிக்கொண்டிருந்தார்

உதாரணமாக

வீட்டுக்குள் பிள்ளையை ஒழித்துவைத்துவிட்டு பெற்றோர் பிள்ளைவீட்டில் இல்லை என்று சொல்வது நமதூரில் வழக்கம்தானே. அதேபோல் தலைவரும் ஒழித்துவைக்கப்பட்டிருக்கின

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள்இங்கே ஒருத்தர் எழுதுகின்றார்

தலைவர் தப்பிச்....... என்று.

எனக்கு அப்படி எழுதமே மனம் நோகிறது

அந்த நண்பரும் தேசபக்தரே.

ஆனால் நாம் முரண்படும்போது தேவையற்ற வார்த்தைகள் வந்து விழுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு யாரையும் குற்றம் சொல்லவில்லை

நான் கூடச்செய்தேன்

நீங்கள் குறைவாகச்செய்தீர்கள் என்பதுபோன்ற தேசவிரோத எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது

அவரவர் அவரவருக்கு ஏற்றதைச்செய்தோம்

அதேபோல் செய்யாதும் விட்டோம்

எல்லோரும் செய்திருந்தால் இன்றைய நிலையை தவிர்த்திருக்கலாம்

எனக்கு ஒன்று மட்டும் தெரியவேணும்

நாம் ஒன்றாக ஒழுக்கமாக உண்மையானவர்களாக வேலைசெய்யவேண்டுமென்றால்......

எனக்குத்தெரிந்தது - உனக்கு தெரிந்திருக்கவேண்டும்

உனக்கு தெரிந்தது- எனக்கு தெரிந்திருக்கவேண்டும்

இல்லையெனில் நான் சந்திக்கும் மக்களும்

நீங்கள் சந்திக்கும் மக்களும்

ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது

உனது எனது நன்மதிப்பு பாதிக்கப்படும்

அப்படியாயின் அதன்பின்

உன்னுடையதோ

என்னுடையதோ சொல்லுக்கு........................???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எதுவந்தாலும், ஒன்று தமிழீத்தை மீட்டெடுப்போம், இல்லாவிடின், தமிழீழம் இல்லை என்றால் சிங்கள தேசமும் இல்லாது போக வேண்டும்.

இதை ஒவ்வொரு தமிழனும் மனதில் ஆழமாக பதித்து செயற்பட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை ஒவ்வொரு தமிழனும் மனதில் ஆழமாக பதித்து செயற்பட வேண்டும்.

எதுவந்தாலும் ஒன்று தமிழீத்தை மீட்டெடுப்போம் இல்லாவிடின் தமிழீழம் இல்லை என்றால் சிங்கள தேசமும் இல்லாது போக வேண்டும்.

எந்தப்பலத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை.

இத்தனை படைகளுடன் இருந்தபோதே உலகத்தால் அழிக்கப்பட்டோம்

வெறும் வாயை மெல்லுவதை இனியாவது நிறுத்த முயலலாமே.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒருமுறை

பூனகரி பிடிபட்டவுடன் இங்கு நான் எழுதினேன்

எல்லாம் முடிவடைந்து விட்டதாக..

ஆனால் பலர் என்மீது வசைபாடினார்கள்

அப்படியாயின் எனக்கு தெரியக்கூடிய இந்த களநிலை எமது தளபதிகளுக்கு தெரியாமல் இருந்திருக்குமா?

அவர்கள் தான் செய்திருக்காவிட்டாலும்

இந்த புலனாய்வுத்துறைக்கு தெரிந்திருக்காதா?

எப்படி பூனகரி போனபின்பும் தலைவரை அங்கு வைத்திருந்தனர்.

முன்னால போனவர்களுக்கு ...... பின்னால போறதென்பதெல்லாம் ஏற்கக்கூடியதல்ல.................

தலைவர் தப்பிச் செத்தது உண்மை. அதை நம்புவதும் நம்பாததும் தனிப்பட்டவர் விருப்பம், இல்லை தூங்குவதும்,தூங்காததும் உங்க இஸ்டம் ஆனால் இதுக்கெல்லாம் மற்றவர்களின் கருத்தை கேட்டு.....இல்லை இது இப்ப ரொம்ப அவசியமா?

தலைவர் இப்ப எதுக்காக வேணும்?

அவர் இருந்தால் எல்லாத்தையும் அவற்றையும்,அங்கை இருக்கிற போராளிகள்,பொடியள்,மக்கள் தலையிலை பாரத்தை போட்டிட்டு இஞ்சை இருந்து கொண்டு 20கு20 கிரிக்கட் மச் பார்த்துக்கொண்டு வெட்டிப்பேச்சு பேசி வம்பளக்கவா?: பாவம் அந்தாள் இந்த ஈனப்பிறவிகளுக்காக இவ்வளவுகாலமும் பட்டது போதும்.

தலைவர் தொடர்பாக எழுதும்போது நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

தப்பிச்செத்தது , அந்தாள் போன்ற வார்த்தைகள் எம்மை பாதிக்கின்றன.

உங்களுக்கு தலைவர் வெறும் ஆளாகவிருக்கலாம். ஆனால் அவர் என்றும் உலகத்தமிழினத்தின் தலைவர் வழிகாட்டி

எம் தெய்வத்திற்கு சமமாகவே அவரை மதிக்கின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்டரீதியில் எனக்கு பலரும் - (அவர்களது பெயர்களை தெரிவிப்பது சரியல்ல அவர்கள் தனிமடல் அனுப்பியதால்)

பாடல்கள்

கவிதைகள்

அறிவுரைகள்

நன்சொற்கள்......என பலதும் அனுப்பியிருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் நன்றிகள்

சிவர் நான் குழம்பிவிட்டதாக எழுதியிருந்தனர்

அது தவறு

உண்மையை அறியவிரும்புவது

குழம்புவதாக ஆகிவிடாது

எந்தக்காலத்திலும்

எந்த நேரத்திலும் தமிழ்மக்களுக்கான எனது குரல் மாறாது

தலைவருக்கு இருந்த ஒரே ஒரு தெளிவு சிங்களவன் எதுவுமே தமிழனுக்கு தரமாட்டான் என்பதுதான்

அதை புரிந்தவன் யான்.

எனவே குழப்பங்களுக்கு இடமில்லை.

சிவகுமாரன் நீங்கள் எழுதியது உங்களுக்கே முரண்பாடாக தெரியவில்லையா ?

நீங்களே கலைஞர் நடாத்தியது நாடகம் என்கிறீர்கள் . நாடகம் நடத்துபவரை தூற்றவா , போற்றவா முடியும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள் .

வைக்கோ எமக்கு ஒரு சகோதரம் மாதிரி , அவர் பிழை விட்டால் ....... அவரை தட்டிக்கேட்கும் உரிமை ஈழத்தமிழனுக்கு உண்டு என்பதை , வைக்கோ அண்ணன் நன்கு அறிவார் .

சுபாஸ் சந்திர போசுக்கு , இந்தியர்கள் சார்பில் அஞ்சலி செலுத்த விருப்பம் என்றால் ....... தாராளமாக செலுத்துங்கள் . உங்களை யாரும் தடுக்கவில்லை .

ஜானார்த்தனன் என்ற உறவு, கலைஞர் நடாத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் வை.கோ கலந்து கொள்ளவில்லை என்றதற்காக தூற்று தூற்று என்று வை.கோ வை த்தூற்றினார். அப்பொழுது நான் வை.கோ எமக்காக எவ்வளவொ குரல் கொடுத்திருக்கிறார் என்று வாதாடி இருந்தேன். கலைஞரி நாடகத்தை அப்பொழுது அறியாத ஜானார்த்தனன் பிறகு 2,3 மாதங்களுக்கு பின்பு கலைஞரைப் பற்றி அறிந்து தூற்றினார்.

நான் சுபாஸ் சந்திரபோசைப் பற்றிச் சொல்ல வந்தது என்ன வென்றால், சுபாஸ் சந்திரபோஸ் இறந்தபோது அவர் உயிருடன் இருக்கிறார் என்று பலர் நம்பி, சுபாஸ் சந்திரபோசுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்தவர்களைத் துரோகியாக்கிதைச் சொன்னேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜானார்த்தனன் என்ற உறவு, கலைஞர் நடாத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் வை.கோ கலந்து கொள்ளவில்லை என்றதற்காக தூற்று தூற்று என்று வை.கோ வை த்தூற்றினார். அப்பொழுது நான் வை.கோ எமக்காக எவ்வளவொ குரல் கொடுத்திருக்கிறார் என்று வாதாடி இருந்தேன். கலைஞரி நாடகத்தை அப்பொழுது அறியாத ஜானார்த்தனன் பிறகு 2,3 மாதங்களுக்கு பின்பு கலைஞரைப் பற்றி அறிந்து தூற்றினார்.

நான் சுபாஸ் சந்திரபோசைப் பற்றிச் சொல்ல வந்தது என்ன வென்றால், சுபாஸ் சந்திரபோஸ் இறந்தபோது அவர் உயிருடன் இருக்கிறார் என்று பலர் நம்பி, சுபாஸ் சந்திரபோசுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்தவர்களைத் துரோகியாக்கிதைச் சொன்னேன்.

ஏன் இதற்குள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச்சொன்னால்

நான் இங்கு கருத்து எழுதுவதை இயலுமானவரை தவிர்த்து வருகின்றேன்

ஏனெனில்

மிகவும் இக்கட்டான நிலையிலும் என்ன என்று தெரியாத அல்லது ஏன் என்று தெரியாத ஒருவித படபடப்பான நிலையில் நான் உள்ளேன்

இவ்வேளையில் நான் எழுதும் கருத்துக்கள்

அல்லது நான் திருப்பி எழுதும் பதில்கள் நிதானமையாக இருக்குமா? என்ற வினா என்னுள் கேள்வி எழுப்பியபடியே

உள்ளது.

அதனால் முடியுமானவரை தவிர்க்கின்றேன்

ஏனெனில் நான் எழுதும் கருத்துக்களோ பதில்களோ

எந்த விதத்திலும்

என் இனத்துக்கோ

என் தலைவனுக்கோ

எங்கள் இலட்சியத்துக்கோ

இடையூறானதாக

அல்லது

எதிரிக்கு துணைபோவதாக இருந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றேன்

இருப்பேன்

இருப்போம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தை இறந்தால் வேதனைதாளாமல் மகன் அழுவது இயற்கைதான்.

ஆனால் அழுதுகொண்டே இருப்பதுதான் தவறு.

கவலைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு தனயன் தன்

தங்கை கல்யாணம்

தம்பியின் கல்வி

அம்மாவின் சுகவீனம்

இப்படியாக அப்பா தலைமேல் சுமந்த கடமைகளை

தங்கள் தோள்மேல் போட்டுக்கொண்டு மீண்டும் துளிர்விடுவதுதானே இயற்கை.

கவலையை விட்டு தலைவர் சுமந்ததில் சுமக்கவேண்டியதைச் சுந்துகொண்டு புறப்படுங்கோ புது உலகம் படைக்க!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது உண்மைதான்

தகப்பன் மட்டுமே அழிந்திருந்தால் மீண்டிருப்பேன்

ஆனால்......

இன்று கூட பத்மனாதனின் அறிக்கையில் எல்லோரும் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று மீண்டும் ..... .....தாக்கப்பட்டிருக்கின்றோம்

நன்றி தங்கள் கருத்துக்கு

மீழுவோம்

மீண்டே ஆகவேண்டும் நாம்.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னால் முடிந்ததை நான் செய்தேன் என்று திருப்திப்படமுடியவில்லை

30 வருடமாக என்ன செய்தோமோ

அது இன்று பூச்சியமாக உள்ள நிலையில்......

30 வருடமாக நான் எதுவும் செய்யவில்லை என்றுதானே இன்றைய யதார்த்தநிலை காட்டுகிறது

ஆனால் 30 வருடங்கள் என் வாழ்நாளில்கழித்துவிட்டேன் என்பதும் யதார்த்தமானது

எனவே மீண்டும் அதே உத்வேகம் என்னிடமில்லை

ஆனால் நான் தேடியது கிடைக்கவில்லை

நான் ஆசைப்பட்டது வாய் வரைக்கும் வந்துவிட்டு திரும்பிச்சென்றுவிட்டது

என்னோடு இருந்தவர்கள் எவருமில்லை

அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை

திரும்பிவருவார்களா இல்லையா அதுவும் நிச்சயமில்லை

இதே ஆராய்சியில் ஒருமாதத்தில் 10கிலோ குறைந்துள்ளேன்

மனம் சாய்ந்து போனால்.......

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குட்டிப்பையா

கனகாலத்திற்கு பின்....

முக்கிய நேரத்தில் என்னோடு எழுதிய தங்களைப்போன்ற பலரைக்காணவில்லை

மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.