Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரத்தின் வயது 4,768!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தின் வயது 4,768!

oldesttreeintheworld.jpg

இதுதாங்க உலகில் மிகவும் வயதான மரம். மெதுசேலா (மெதுசேலா என்ற கதாபாத்திரம் பைபிளில் வருகிறது. அவர் 969 வருடங்கள் வாழ்ந்ததாகவும் பைபிள் குறிப்பிடுகிறது. ஆகையால் அதிக வருடங்கள் வாழும் எதுவும், யாரும் மெதுசேலா பெயரில் அழைக்கப்படுவது வழக்கமாயிற்று) என்றழைக்கப்படும் இது பிரிஸ்ட்லீகோன் இனத்தைச் சேர்ந்த பைன் மரம். இதன் வயது 4,768 வருடங்கள் என கின்னஸ் சாதனை ஏடு கூறுகிறது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பழமையான காடாகக் கருதப்படும் தேசிய வனத்தில்தான் இவ்வகை பைன் மரங்கள் தனித்தனியாக வளர்ந்து நிற்கின்றன. வெள்ளை மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த பைன் மரக்காட்டில், கிட்டத்தட்ட 11 ஆயிரம் அடி உயரத்தில் மரங்கள் வளர்ந்துள்ளன. இவைதான் உலகில் வயதான மரங்கள் எனப்படுகிறது.

4 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட மரங்கள் என்றால் அந்தளவுக்கு வளர்ந்திருக்க வேண்டுமே என்ற சந்தேகம் வருவது இயல்புதான். இங்கு நிலவும் தட்பவெப்ப நிலை மற்றும் மண்ணின் தரம் ஆகியவை இம்மரங்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி வைத்துள்ளன. அதே மண்ணும், நிலவும் தட்பவெப்ப சூழ்நிலையும் தான் இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும் நின்றுகொண்டிருக்க காரணமானவை.

http://www.tamilvanan.com/content/2009/06/...ld-oldest-tree/

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

oldesttreeintheworld.jpg

இந்த மரத்தின்ரை கொப்புகள் எல்லாம் காய்ஞ்சு போய்க்கிடக்குது , கெதியிலை பட்டுடுமோ ..............

இல்லாட்டி , குளிருக்கு இலையை கொட்டிப்போட்டு நிக்குதோ ..........

தனிமரம் தோப்பாகாது என்று சொல்லிக் கேள்வி... இதே ஒரு தோப்பு மாத்திரி இருந்து இருக்கும் போல தெரிகிறதே...

  • 2 weeks later...

இந்த மரத்தின்ரை கொப்புகள் எல்லாம் காய்ஞ்சு போய்க்கிடக்குது , கெதியிலை பட்டுடுமோ ..............

இல்லாட்டி , குளிருக்கு இலையை கொட்டிப்போட்டு நிக்குதோ ..........

வணக்கம்

இப்படிப்பட்ட பூர்வீக மரங்களின் படக்கோப்பை இங்கே காணலாம்

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

இப்படிப்பட்ட பூர்வீக மரங்களின் படக்கோப்பை இங்கே காணலாம்

உங்கள் தகவலுக்கு நன்றி ஜெயக்குமார்.

நான் சிறிய வயதிலிருந்தே இயற்கையை ரசிக்கும் மனோபாவம் உள்ளவன் .

காலையில் கீச்சிடும் பறவைகள் , இலையில் படிந்திருக்கும் நீர்த்துளிகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம் .

Oldest Living Tree Found in Sweden

oldestlivingtree.jpg

The trunk of the above tree is less than 600 years old—but its roots date back to 9,550 years ago, making it the world's oldest known living tree, scientists say.

The Norway spruce, of a species commonly used as Christmas trees in Europe, was found in 2004 on a Swedish mountaintop.

Photograph courtesy of Leif Kullman at Umeå University's Department of Ecology and Environmental Science

http://news.nationalgeographic.com/news/bi...s/33944715.html

Worlds largest tree

Description:

A replica of the Mexican worlds largest tree.

http://photos.igougo.com/pictures-photos-p...rgest_tree.html

Climbing the World Tallest Tree

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes:

உந்த கொப்பில ஒண்டை முறிச்சு குழையடிச்சால் தான் சிறி அண்ணாக்கு இந்த சுருக்கு குடை நினைப்பு எல்லாம் பறக்கும்!!!

நான் சிறிய வயதிலிருந்தே இயற்கையை ரசிக்கும் மனோபாவம் உள்ளவன் .

காலையில் கீச்சிடும் பறவைகள் , இலையில் படிந்திருக்கும் நீர்த்துளிகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம் .

கதைக்கும் கதைகளையும், எழுத்துகளையும் பார்த்தால் இவற்றை மட்டும் அல்ல 'பல' விடயங்களை இரசிப்பவர் போலக் கிடக்கு. கீச்சுடும் பறவைகளை பார்க்க மட்டுமா காலையில் எழும்பி வெளியே போறனீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

-----

இது தமிழ் சிறி அண்ணாவுக்கு மட்டும், ஏதோ என்னால முடிஞ்சது

-----

நன்றி குட்டி , உலகத்தின் உயரமான படத்தின் இணைப்பிற்கு . மனிதனே அந்த மரத்தை ஆராய்ச்சி செய்து பாழ் படுத்தி விடுவான் போல் உள்ளது .

:rolleyes:

உந்த கொப்பில ஒண்டை முறிச்சு குழையடிச்சால் தான் சிறி அண்ணாக்கு இந்த சுருக்கு குடை நினைப்பு எல்லாம் பறக்கும்!!!

அந்த மரத்தின்ரை நீளத்தை பார்தவுடனேயே எனக்கு மயக்கம் வந்து விட்டது , இளையபிள்ளை .

இதுக்குள்ளை சுருக்கு குடை எம்மாத்திரம் தாக்குப்பிடிக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.