Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புலிகள் தினம்..

Featured Replies

ஆடி 5 ம் திகதி கரும்புலிகள் தினம்...

ஒரு வாரம் மாவீரர் நாள் கடைப்பிடிப்பது போல குறைந்தது இந்த முறை எங்களுக்காகவே மடிந்து போன மாவீரர்களை அதிகமாகவே கௌரவிக்க , நினைவு கூர வேண்டிய தேவையில் இருக்கின்றோம்...

எங்களுக்கு போராடியவர்களை நாங்கள் எண்றும் நண்றியுடன் நினைவு கூருவோம் என்பதுக்கு இது ஒரு தேவையான காலமும் கூட...

தயவு செய்து கரும்புலிகள் யாரையாவது தெரிந்தவர்கள் பழகியவர்கள் அவர்கள் பற்றியும் ஒளிப்படங்கள் காணொளிகள் என்பனவற்றை எல்லாம் இணைப்பதோடு உங்களின் உள்ளத்து உணர்வுகளள வடித்து கவிகளும் கட்டுரைகளும் எழுதுமாறு தாள்மையுடன் கேட்டு கொள்கின்றேன்....

மோகன் அண்ணா விடம் ஒரு வேண்டுகோள்...

மாவீரர்கள் பற்றி எழுதுவதுக்கு எண்றே தனி ஒரு பகுதியை ஆரம்பித்து விடுமாறு கேட்டு கோள்கின்றேன்... அதுக்காக எதை வேண்டுமானாலும் மூடி விடுங்கள்...

மற்றவரது கருத்துக்களும் வரவேற்க்க படுகின்றன...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஒரு எதிர்கருத்துக்கும் இடமில்லாத கோரிக்கை...இதற்க்கு யாழ் சமூகம் அனைத்தும் ஆதாரவு தந்து எங்கள் தெய்வங்களை நினைவில் நிறுத்துவோம்....

எனது நண்பன் ஒருவன் எல்லாளன் நடவடிக்கையில் வித்தாகினான்...அவனை பற்றிய விடயங்களை கூடுமானவரி இணைத்துவிடுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் கடாபி அவர்களின் (அண்மையின் பிரிகேடியர் தீபன் அவர்களுடன் வீரச்சாவடைந்த) அனேகமாக முதல் தடவை காணொளியில்...

கேணல் விதுசா அவர்கள் பாலா அண்ணா பற்றி.......

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

பிரிகேடியர் தீபன் அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ் பற்றி.....

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

நூணாவிலான்

நீங்கள் காட்டுகின்ற தளபதிகள் கரும்புலிகள் அல்ல..

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்கள் காலத்தாலும் அழியாதவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டியது இந்த உலகம் உள்ள வரை தமிழரின் கடமை.

மில்லர் அண்ணா ஒரு பெரும் தியாகி. கரும்புலிகள் ஒப்பிட முடியாத தியாகிகள். அவர்களுக்கு என்று ஒரு புனிதமான பக்கத்தை திறந்து அஞ்சலி செய்வதென்ற தயாவின் வேண்டுகோள் வரவேற்கத்தக்க ஒன்றாகும். :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகள்

சாவின் நொடிகள் தெரிந்த தீரர்கள் - தாயக

மண்ணுக்காய் நெருப்பான வீரர்கள்

பகை மோதுண்டால் இவரொடு

மரணித்துப்போகும் மானம் ஒன்றே

தமிழர் வேதமென்றாகும்!

தியாகத்தின் சொல்லுக்கு பொருள்

என்று ஆனவர் சோதியாய் ஆகியே

இருட்டினைக்கிழித்தவர் என்றும்

எங்களில் இதய தீபமாய் ஆனவர்

ஆயிரம் தடவைகள் சொன்னாலும்

போதாது! எமக்கென ஆயுளைத்

தந்தவர் புகழுக்கு இம்மண்ணில்

வேறொன்றும் ஈடென ஆகாது!

கரங்கள் கூப்பி நிற்கின்றோம்

வீரர்காள்! காலம் கனியும்

நமக்கென்று ஓர் நாள் உங்களின்

தியாகம் உலகமும் அறியும் அன்றே

சூரியன் கிழக்கினில் உதிக்கும்!.

முன்னெப்போதும் செய்யாத அளவுக்கு அவர்களை நினைவுகூர்வோம்

எம் பிள்ளைகளுக்கு, வரும்கால சந்ததிகளுக்கு உயிர் பிச்சை அளித்து தம் உயிரை கொடையாக்கிய வீர புதல்வர்கள் பற்றி எடுத்துரைப்போம்

அவர்களின் நினைவுகள் ஒவ்வொன்றையும் உலக தரம் வாய்ந்த கலை வடிவமாக, இலக்கிய வடிவமாக மாற்றி வரலாற்றிற்கு புகட்டுவோம்

அவர்கள் இல்லை என்றால், இன்று மிச்சம் இருக்கும் எம் உயிர்கள் கூட என்றோ அழிந்து போயிருக்கும் என்ற உண்மையை ஒவ்வொரு கணமும் உணர்வோம்

தன்னையே ஆகுதியாக்கிய தன்னிகரில்லா கரும்புலிகளுக்கு என்றென்றும் நன்றி செலுத்துவோம்

  • தொடங்கியவர்

தயவு செய்து இதுக்கை இணைக்காமல் தனியாக ஒரு பகுதியை திறந்து இணைத்து விடுங்கள்...

மாவீரர்களுக்கு எண்று மோகன் அண்ணா தனிப்பகுதியை திறந்து தருவார் எண்று நினைக்கிறன் அதுக்குள் இணைத்து விடுங்கள்.... நீண்ட காலத்துக்கு எம்மவர்கள் கண்களுக்கு படும் வண்ணம் அப்படி ஒரு பகுதி இருக்க வேண்டும் என்பது எனது ஆசை...

நாங்கள் விட்ட தவறுகளை சுட்டிக்காட்ட மாவீரர்களின் வரலாறுகள் பயன் படும் எண்றுதான் நான் நினைக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு என்று தனிப்பகுதியை ஆரம்பிப்பது பற்றி தயா கூறிய யோசனை வரவேற்கத்தக்கது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகளின் உள்ள கிடைக்கைகளை வெளிக்கொணரும் ஒரு பாடல்....சிறுவயதில் பாட்டு புத்தகம் வைத்து பாடமாக்கிய பாடல்...

http://www.imeem.com/hirusy/music/XgpktwHh/emmai-ninaiththu/

Edited by லோயர்

தயா, இதற்கென தனியான ஒரு பகுதி ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட நாட்களுக்கு முன்னரே தீர்மானித்து விட்டோம். பலரும் பங்கு பற்றி மாவீரர் பற்றிய தகவல்களை ஒருங்கிணைப்பது தன் திட்டத்தின் நோக்கம். சில பரீட்சார்த்த முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விரைவில் அது பற்றி அறியத் தருகின்றோம்.

ஆடி 5 ம் திகதி கரும்புலிகள் தினம்...

ஒரு வாரம் மாவீரர் நாள் கடைப்பிடிப்பது போல குறைந்தது இந்த முறை எங்களுக்காகவே மடிந்து போன மாவீரர்களை அதிகமாகவே கௌரவிக்க , நினைவு கூர வேண்டிய தேவையில் இருக்கின்றோம்...

எங்களுக்கு போராடியவர்களை நாங்கள் எண்றும் நண்றியுடன் நினைவு கூருவோம் என்பதுக்கு இது ஒரு தேவையான காலமும் கூட...

தயவு செய்து கரும்புலிகள் யாரையாவது தெரிந்தவர்கள் பழகியவர்கள் அவர்கள் பற்றியும் ஒளிப்படங்கள் காணொளிகள் என்பனவற்றை எல்லாம் இணைப்பதோடு உங்களின் உள்ளத்து உணர்வுகளள வடித்து கவிகளும் கட்டுரைகளும் எழுதுமாறு தாள்மையுடன் கேட்டு கொள்கின்றேன்....

மோகன் அண்ணா விடம் ஒரு வேண்டுகோள்...

மாவீரர்கள் பற்றி எழுதுவதுக்கு எண்றே தனி ஒரு பகுதியை ஆரம்பித்து விடுமாறு கேட்டு கோள்கின்றேன்... அதுக்காக எதை வேண்டுமானாலும் மூடி விடுங்கள்...

மற்றவரது கருத்துக்களும் வரவேற்க்க படுகின்றன...

இதேபோல் மண்ணோடு மண்ணாகிபோன மக்களிற்காகவும் - அவர்களையும் நினைவுகூறவும் - அவர்கள் பற்றிய தகவல்களை பெறவும் ஓர் நிரந்தரமான பகுதியை ஆரம்பித்துவிடுங்கள் மோகன். உண்மையில் 1983ற்குப்பின் எத்தனை ஆயிரம் லட்சம் தமிழ்மக்களின் உயிர் காவுகொள்ளப்பட்டது என்று ஒருவருக்குமே தெரியாது. சரியான முறையில் ஒர் கோப்பை உருவாக்கி அதில் இவர்களது விபரங்களை பதிய ஆரம்பித்தால் இன்னமும் சுமார் இரண்டு மூன்று வருடங்களில் இதற்குரிய பதிலை ஏறக்குறைய கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்கும். என்னிடம் பலர் இந்த யோசனையை சொல்லி இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் மாப்பிள்ளை. சில காலம் செல்ல ஒரு தரவுகளும் இல்லாமல் போகக்கூடும். இலங்கையில் பத்திரிகைகள் (தமிழர்களுக்கு சார்பானவை) இன்னும் சில மாதங்களில் அறவே இல்லாமல் போகும் நிலையில் உள்ளது. எனவே புலம் பெயர்ந்த நாம் இப்படியான தகவல்களை (பலரின் பங்களிப்புடன்) ஒரு முற்றான இன அழிப்பு பற்றிய தகவல்களை சேகரிக்கலாம். நான் சில இணையங்கள் இத்தகவல்களை சேகரிக்க தொடங்கியுள்ளன. என்றாலும் யாழில் பல தரப்பட்ட உறுப்பினர்கள் உள்ளதால் இலகுவில் ஒரு முழுமையான விபர கோப்பை ஒரு மொழியில் உருவாக்கி பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து உலகின் பார்வைக்கு கொண்டு வரவேண்டும். இன்று சில வேற்றின மக்களுடன் பேசும் போது சிறிலங்கா பிரச்சனை எல்லாம் முடிந்து விட்டது என்ற தொனியில் பேசுகிறார்கள். இனப்படுகொலைகள் இன்றே இம்மக்களுக்கு தெரியவில்லை என்றால் எமது பணி இவர்களுக்கு இன படுகொலை பற்றிய தகவல்களை தொடர்ந்து பத்திரிகை மூலமும் இணைய தளங்கள் மூலமும் தெரியப்படுத்த வேண்டும். மாப்பிள்ளை உங்கள் கருத்துடன் 100% உடன்படுகிறேன். மோகன் அண்ணா தான் திரியை தொடங்க வேண்டும் என்றில்லாமல் மாப்பிள்ளையே தொடங்கி விடுங்களேன். மோகன் அண்ணா இல்லை என்றா சொல்ல போகிறார்.

வெறும் திரியைத் துவங்கி எழுதுவதன் மூலம் இதைச் செய்ய ஏலாது நுணாவிலான்.

முதலில் சரியான முறையில் tablesஐ defineபண்ணி databaseசெய்ய வேணும். பிறகு அதை வலைத்தளத்தில் ஏற்றவேண்டும்.

சனங்களை விண்ணப்பம் நிரப்புவது மாதிரி தகவல்களை கொடுக்கச்சொல்லி தரவுகளை சேர்க்கலாம். பிறகு தரவை தருபவரின் தொலைபேசி இலக்கம், முகவரி, இறந்தவருடனான உறவுமுறை இவற்றையும் அதில் எடுத்தபிறகு... குறிப்பிட்ட தரவு உண்மை என்பதை ஆகக்குறைஞ்சது குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்த வேண்டும்.

அதன்பிறகு... குறிப்பிட்ட ஓர் இறப்பை மற்றைய உறுதிப்படுத்தப்பட்ட இழப்புக்களிற்கான கோப்பில இணைக்கலாம்.

நிறைய செத்துப்போன ஆட்களுக்கு அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று தகவலை இங்கு சொல்லிறதுக்கு கூட ஆட்கள் இல்லாமல் போகலாம். இதனால ஒவ்வொருத்தரும் தாங்கள் நேரில உறுதிப்படுத்தின உறவினர்கள், அயலவர்கள், நண்பர்களின் இழப்புக்களை இதில பதியலாம்.

ஒரே பெயரில, ஒரே ஊரில ஒருவரின் இழப்பு ஒரு தரத்திற்குமேல வரும்போது அதை நாங்கள் ஏற்கனவே முறையாக databaseஐ நிறுவி இருந்தால் இலகுவாக கண்டுபிடித்து திருத்தம் செய்யலாம்.

இது ஓர் நீண்டகால செயன்முறை. நீண்டபடிமுறைகளை கொண்டது. பல்வேறு குழுக்கள், பிரிவுகள், ஊடகங்கள் என்று பிரிந்து இருக்கும் சகலதரப்பினருடைய ஒத்துழைப்புக்களும் கிடைத்தால்தான் இதை சரியான முறையில் வெளிக்கொணர்ந்து மண்ணுடன் மண்ணாகிப்போன மக்களை - அவர்கள் தொகையை துல்லியமாக இனம்காண முடியும்.

யாராவது முடியுமானவர்கள் தனிப்பட்டவர்கள் அல்லது குழுவாக செயலில இறங்குங்கோ. நமக்கு ஐடியா சொல்வது தவிர தனிப்பட இதில் ஈடுபடமுடியவில்லை.

Edited by மாப்பிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகளின் தியாகம் மற்றவர்களைக் காட்டினும்.. இன்னும் அதிகமானது. அதனால் தான் தேசிய தலைவர் அவர்களுக்கு என்று தனியாக மில்லரண்ணாவின் நினைவு நாளை கரும்புலிகள் தினமாக்கி அர்ப்பணித்தார்.

கரும்புலிகள் தமிழினத்தின் தடை நீக்கிகளாக காற்றுப் புகா இடத்திற்கும் பரவிப் போனவர்கள்.

அனைத்து மாவீரர்களையும் நினைவு கூறும் தினம் மாவீரர் தினமாகிறது.

விடுதலைப் போராட்டத்தில் வித்தான மக்களை நினைவுகூற யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் இந்திய இராணுவம் செய்த படுகொலை.. முள்ளிவாய்க்கால் சிங்கள இராணுவப் படுகொலை நாட்களை தமிழீழ தேசிய நினைவு நாட்களாக பதிவு செய்தல் அவசியமாகும். அந்த வகையில் மாப்பிள்ளை/கலைஞன்/முரளியின் கருத்தும் உள்வாங்கப்பட வேண்டிய ஒன்றே ஆகும்..!

தேசிய தலைவர் ஒரு புகழ் விரும்பியோ அல்லது பதவி ஆசை பிடித்த மனிதனோ அல்ல. அவர் எப்போதும் கொண்ட இலட்சியத்தையே உயிரினும் மேலாக மதித்தவர். அவரை கெளரவப்படுத்தி தமிழர்கள் மத்தியில் இந்த உலகில் ஒரு அதி உன்னத இலட்சியப்பற்று மிக்க மனிதன் வாழ்ந்தான் அல்லது வாழ்கிறான் என்பதை ஒரு நாளில் நினைவு கூறுவதும் அவசியம்.

இவ்வாறான நாட்கள் நிச்சயம்.. இந்தத் தியாகிகளை தியாகங்களை மக்கள் சந்ததி சந்ததிக்கும் மறக்காமல் நினைவு கூற வழி செய்யும்..! இவை வெறும் நினைவு நாட்களாக அன்றி மக்கள் குழந்தைகள் பயன்பெறக் கூடிய திட்டங்களையும் கொண்டியங்கின் இன்னும் இன்னும் வலுவான நாட்களாக ஒவ்வொரு மனிதனிடத்திலும் இடம்பிடிக்கச் செய்யலாம்.

அதுமட்டுமன்றி தமிழீழ தேச சர்வதேசக் கண்காட்சியகம் ஒன்றை உலக அரங்கில் ஒரு நாட்டை தேர்வு செய்து அமைத்து அங்கு மாவீரர்கள் மற்றும் மக்களின் தியாகங்கள் பதியப்பட வேண்டும். அவை உலகில் எமது மக்களின் போராளிகளின் தியாகங்கள் நினைவு கூறப்பட வழி செய்யப்பட வேண்டும்..!

இந்த உலகமெல்லாம் அகதியாகி கோவில் கட்டி வாழும் தமிழர்கள்.. ஆயிரம் கோவில்களை கட்டி இருப்பார்கள். தமிழீழ நினைவு ஸ்தானம் ஒன்றை அமைத்திருக்கிறார்களா. உலகமே பதிவு செய்துள்ளது இலங்கையில் உள்நாட்டுப் போரில் 85,000 மக்கள் (முள்ளிவாய்க்கால் மிகப் பெரும் படுகொலைக்கு முன்னராக) மரணித்துள்ளனர் என்று. இவர்களுக்கு ஒரு நினைவிடம் அமைக்க.. இந்த நாடுகள் வேண்டாம் என்றா சொன்னன. அனுமதியே கேட்டிருக்கமாட்டார்கள். ஆனால் தமிழீழ ஆதரவு என்று போலியா முழங்கிடுவார்கள். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

கரும்புலியாக வீரச்சாவைந்த ஒருவர் எனது நண்பர்... அவர் பற்றி எழுதுவதுக்கும் இன்னும் சில வீரர்கள் பற்றியும் எழுத நானும் முயற்சிக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நல்ல முயற்சி.பிரிட்டன் தமிழ் போரம் 1958 ம் ஆண்டுக்கு பிறகு யுத்தத்தில் இறந்தவர்கள் காணமல் போனவர்களின் விபரங்களை சேகரித்துக் கொண்டு இருக்குறார்கள் அவர்களை தொடர்பு கொண்டால் அந்த விபரங்களைப் பெறலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.