Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்ல படமொண்டு பாத்தன்

Featured Replies

நீண்டநாட்களின் பின்னர் நேற்று ஒரு தமிழ் திரைப்படம் முற்றாகப் பார்த்து முடிக்க முடிந்தது. அதிக எதிர்பார்ப்பு எதுவுமின்றி இன்றைக்கு ஒரு தமிழ் படம் பார்த்தே தீருவது என்ற அடம்பிடித்த மனநிலையில் உட்கார்ந்து பார்க்கத் தொடங்கினேன்.

மிகவும் சாதாரணமான, அனைவரிற்கும் பழகிப்போன, ஒரு கடுகளவு கதை மூலம் கடலளவு சங்கதிகளை இயக்குனர் பேசியுள்ளார். அதற்கும் மேலால், பிரசங்கம் செய்யாது, கருத்தாடியுள்ளார். அதுவும் சம்பளத்திற்காய் சிந்திக்கும் மட்டத்தினரிற்காக அல்லாது சாதாரண மக்களிற்காக, நாளாந்த மனிதர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்காக பல ஆழமான விடயங்களை அலட்டல் இன்றி, அரிதாரம் இன்றி சாதாரண பாசையில் இயக்குனர் பேசியுள்ளார். மொத்தத்தில், தமிழ் படம் தானே என்ற ஒரு ஏனோ தானோ போக்கில் இப்படத்தைப் பார்க்கத் தொடங்கியமைக்காய் இயக்குனர் என்னைத் தன்னிடம் மன்னிப்பும் கேட்க வைத்தார்.

முதலில் படம் பற்றிச் சுருக்கமாக சில விடயங்கள். படத்தின் பெயர் ‘நாடோடிகள்’. மேலோட்டமாய் சொல்வதானால் இதுவும் அரைத்தமாவான காதலைத் தான் மீண்டும் அரைத்துள்ளது. ஆனால் இப்படம் பத்தோடு பதினொன்று அல்ல. பல படங்களில் நாம் பார்த்துச் சலித்துப்போன காட்சிகளைக்கூடச் சலிப்பேற்றாத வகையில், “இந்தக் காட்சி ‘காட்டினால் மட்டுமே காண்கின்ற’ பார்வையாளரிற்கு நாம் சொல்லவருவதைச் சொல்வதற்குத் தேவைப்படுகின்றது, சற்றுப் பொறுதுக்கொள்ளுங்கள் வேகமாய் அலுப்பின்றி ஓட்டிவிடுகின்றோம்” என்ற பாணியில் கையாண்டிருப்பது வரவேற்கத்தக்கது. திரைப்பட மொழிக்கு அப்பால், உண்மையில் இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றி என்னவெனில், அனைவரிற்கும் நன்கு பரிட்சயமான ஒரு சாதாரண கதை கொண்டு ஆழமான கருத்துக்களை நாசூக்காக அணுகி இருப்பதே. குறிப்பாக, உலகில் மனிதர்களிற்கிடையேயான எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் நிகழும் செயற்பாடுகளின் தார்பரியம், சமூகமும் பொருளாதரமும், பொருளாதார உயர்விற்குப் பாதகமாகவும் சாதகமாகவும் அமையும் தனிப்பட்ட மற்றும் சமூகப் பெறுமதிகள், உறவுகள் என்றால் பிரத்தியேக வெளிகள் செல்லாது என்று கருதும் ஒரு மனநிலை உள்ள எமது சமூகத்தில் பிரத்தியேக வெளிகள் பற்றிய சிந்தனையைத் தூண்டல், உதவுபவன் உதவிபெறுபவன் என்ற இரு ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட ஆனால் முற்றிலும் வேறுபட்ட பார்வைகள், சமூகப் பெறுமதிகளால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும

வணக்கம் இன்னுமொருவன், விரிவாக உங்கள் விமர்சனத்தை செய்து இருக்கிறீங்கள் போல இருக்கிது. நான் இன்னமும் நாடோடிகள் பார்க்க இல்லை. இதனால் உங்கள் விமர்சனத்தை இன்னமும் வாசிக்க இல்லை. நீங்கள் விரிவாக கதையை எழுதி இருக்கிறீங்கள் போல இருக்கிது. பார்த்துவிட்டு நானும் பகிர்ந்துகொள்கின்றேன்.

ஆக மொத்ததில நீண்டகாலத்துக்கு அப்புறம் இப்ப எல்லாரும் தமிழ்ப்படம் பார்க்க துவங்கி இருக்கிறம். வேதனைகளில இருந்து மீள்வதற்கு வழி தெரியாவிட்டாலும்... வேதனைகளை ஓரளவுக்காவது குறைப்பதற்கு அல்லது மறப்பதற்கு தமிழ்ப்படமும் ஒரு மருந்து என்று நினைக்கிறன்.

ஆக மொத்ததில நீண்டகாலத்துக்கு அப்புறம் இப்ப எல்லாரும் தமிழ்ப்படம் பார்க்க துவங்கி இருக்கிறம். வேதனைகளில இருந்து மீள்வதற்கு வழி தெரியாவிட்டாலும்... வேதனைகளை ஓரளவுக்காவது குறைப்பதற்கு அல்லது மறப்பதற்கு தமிழ்ப்படமும் ஒரு மருந்து என்று நினைக்கிறன்.

சுலபமாகக் கிடைக்கும் இலவச மருந்து!!

நானும் இந்தப்படத்தை பாத்தனான்தான், ஆனா இப்பிடி இன்னொருவன் மாதிரி படத்துக்குள்ள, மேல, கீழ, பக்கவாட்டிலை எல்லாம் பாக்கேலை!

வழமையா காதல் படங்கள் எல்லாம் காதலனும் காதலியும் கட்டிப்பிடிக்கிறதோடை அல்லது திருமண பந்தலில தாலிகட்டுறதோடை முடியிறது. அப்ப நான் நினைக்கிறனான் இதுக்குப் பிறகு எல்லோ வாழ்க்கையில பரபரப்பான சண்டை கட்டம், சோக கட்டம் எல்லாம் வருது, அட அதை காட்டாம விட்டிட்டாங்களே என்று.

இந்தப்படத்திலையும் ஒரு நாயகன் இருந்தார், நண்பன் ஒரு தொழிலதிபரின் மகளை காதலித்துப்போட்டு சேர்த்து வைக்கச் சொல்லி நாயகனிட்ட வருவார். பிறகு வழமை போல வாடகை வான் ஒன்றிலை வெளியூருக்கு போய் உளவு பாத்து, விறுவிறுப்பான கட்டத்தில நாயகியை கடத்திக் கொண்டு வந்து இருவரையும் வேறை ஊருக்கு அனுப்பி சேர்த்து வைக்கிறதோட கதை முடியுதாகும் என்று நம்பி எழும்பிறதுக்கிடையில, திருப்பி பின்னாலை போய் வழமையான படங்களில விடுபடுகிற காட்சிகளை எல்லாம் காட்டி... உதாரணமா இறுதி சண்டைக்காட்சியிலை வில்லன் அடிக்கிற அடிகளை எல்லாம் காதலுக்காக அல்லது நட்பிற்காக தாங்கிக் கொண்டு வெற்றிகரமாக தப்பி வந்து, பிறகு சின்னதா ஒரு காயக்கட்டுடோடை இல்லாட்டி கொஞ்சம் நொண்டிக் கொண்டு வர உடன "சுபம்" வந்து விழும். ஆனா எங்க போய் அவர் காயத்திற்கு மருந்து போட்டவர், எப்படிப்பட்ட காயம் எல்லாம் காட்டமாட்டாங்கள். (ஓம் இது ரொம்ப முக்கியம் என்றுதான் நீங்கள் கேப்பீங்கள்) ஆனா இங்க அதையும் காட்டி "சுப்புரமணியபுரம்" போலத்தான் முடிக்கப் போறாங்களோ எண்டு நினைச்சு நெஞ்சை கல்லாக்கிக் கொண்டு இருக்க, பிறகு அப்பிடி முடிச்சா படம் ஓடாது என்ற படியால பழையபடி இருவரையும் சேர்த்து வைக்கிறதோடை முடியுது.

இப்பிடி நாலு வரியிலை எழுதுறதைப் போய்....

நான் நினைக்கிறன் இன்னொருவன் உண்மையிலேயே ஒரு ஏபி ஆகத்தான் இருக்க வேணும்? :lol:

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்

வணக்கம் கலைஞன்,

படக்கதையைப் பதிவு அதிகம் கூறிவிட்டது போல் தான் தெரிகிறது. படம் பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு வாசிப்பது நல்லது தான்.

மேலும் மனதைப் பிழியும் விடயங்கள் வாழ்வில் தோன்றுகையில் கவலையே உருவாய் சோகப்பாட்டு; மட்டும் கேட்டுத் தாடி வளர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பதைக் காட்டிலும் அத்தகைய தொடர்ந்த சோகத்தைத் தக்கவைக்கும் பலம் இல்லை என்பதே உண்மை. அதனால் தை முதல் நடந்தேறிய கடந்த ஆறுமாதங்களிலும் கூட உண்மையில் நான் தவநிலையில் வாழ்ந்துவிடவில்லை. எம்மால் இயன்றதைச் செய்தபடி எமக்கும் சற்று நேரத்தை ஒதுக்கியபடியே வாழ்ந்தாவது தவிர்க்கமுடியாததாகிப் போகின்றது. ஆனால் தமிழ் படம் பார்த்துத் தான் அதிக நாட்கள் (படங்களி;ன் தன்மை காரணமாய்).

சாணக்கியன்,

கருத்திற்கும் நக்கல் நகைச்சுவைக்கும் நன்றி :lol:

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாறிய என்ரை வாழ்க்கையிலை உந்தளவுக்கு நீளமான திரைவிமர்சனத்தை இன்னும் நான் வாசிக்கேல்லை :icon_mrgreen:

வணக்கம் இன்னுமொருவன்,

நேற்று நான் இதை பார்க்கிறதுக்கு முன்னர் பசங்க பார்த்து இருந்தேன். இரண்டையும் ஒப்பிடும்போது 'பசங்க' படம் உண்மையில மிகச்சிறப்பாகவும், இந்த நாடோடிகள் சும்மா ஓர் படம் போலவுமே எனக்கு இருக்கின்றது. நாடோடிகளில பத்தோடு பதினொன்று என்று இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக ஏதோ சொல்லப்பட்டு இருக்கிது என்கின்ற உங்கள் அந்தக்கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். அது என்ன தெரியுமோ..? நட்பை சினிமாத்தனமாக காட்டி தங்கள் வழமையான சினிமாபுத்தியை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

படத்தில் வருகின்ற பல விடயங்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. அவைபற்றி விபரிக்கப்போனால்.. நீங்கள் மேலே எழுதியதைவிட பெரியதொரு விமர்சனத்தை எழுதவேண்டிவரும்.

சும்மா பொழுதுபோக்குக்கு இந்தப்படத்தையும் பத்தோட பதினொன்றாக பார்த்துப்போட்டு போகலாம். அதற்கு மேலால சொல்வதற்கு என்ன இருக்கிது? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இன்னுமொருவன்.

பொதுவாக நான் தமிழ் சினிமா பார்ப்பது குறைவு. சமீப காலத்தில் சில மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்காக சில படங்களை நீண்ட காலத்திற்குப் பின்னர் பார்த்திருந்தேன். இப்போது "நாடோடிகள்" பற்றிய உங்களுடைய பார்வை அப்படத்தைப் பார்க்கவேண்டும் என்று தூண்டுகிறது. இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை ஏற்கனவே வேறு சில இடங்களிலும் வாசித்துள்ளேன். வழமையில் இருந்து மாறுபட்டதாக உள்ளது என்றே விமர்சகர்கள் பதிவிட்டுள்ளார்கள். அத்தோடு கலைஞன் கூறியதுபோல் 'பசங்க" படத்தைப்பற்றியும் ஒரு சிலர் தரமானதாகச் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். இன்று இந்தப் பதிவைப் பார்த்ததன் மூலம் இவ்விரு படங்களையும் பார்த்துவிட்டு என்னுடைய அபிப்பிராயத்தையும் எழுதுகிறேன். படத்தைப் பார்த்துவிட்டு தொடர்கிறேன்.

  • தொடங்கியவர்

கொஞ்சம் நேரம் செலவளித்திருந்தால் பதிவை அரைவாசியாக்கியிருக்கலாம் என்றுதான் படுகிறது. அப்பிடியே பட்டதப் பட்டதாய் எழுதினதால் நீண்டுவிட்டமை உண்மைதான்.

கருத்துக்களிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாவை சினிமாவாகவே பார்க்கப் பழகியவன் நான் (ரெம்பவும் பீத்திக்கிறன் என நினைக்கவேண்டாம்) நீங்கள் கூறிய மன அழுத்தம் எனக்கும் வந்ததுதான் அது இப்போதுகூட என்னை நிழலாகத் தொடர்கிறது. உங்களைப்போல் நானும் சில படங்களின் பக்கம் எனது நேரத்தைச் செலவு செய்தேன் . அப்போது நான் பார்த்தவை அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம் (பெயர் சரியோ தெரியவில்லை எனக்கு ஞாபக மறதிஅதிகம்) பசங்க இவை தான் நாடோடியை நான் முழுமையாகப் பார்க்கவில்லை. காரணம் கூறமுடியாத ஆனால் நல்ல சினிமாம் படங்கள். மற்றும்படி விமர்சனம் செய்யுமளவிற்கு என்ன இருக்கிறது என எனது சிற்றறிவுக்குத் தெரியாது. அத்தோடு விஜய்ஜின் கபடியும் பார்த்தேன் சும்மா திருஸ்டிபட்டுவிடக் கூடாது என்பதற்காக கூறுகிறேன் என நினைக்க வேண்டாம் உண்மையிலேயே....

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பட விமர்சனத்துக்கு நன்றி இன்னுமொருவன். மன நின்மதிக்கு "அன்பே சிவம்" மீண்டும் பார்த்தேன். நிச்சயமாக மன நின்மதியை தந்த படம்.

நாடோடிகள் பார்த்தேன். சலிக்காமல் பார்க்கக் கூடியதாக இருந்தது. தூக்கக் கலக்கத்தோடு இரவு 12 மணிக்கு படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். சற்று நேரத்திலேயே தூக்கக் கலக்கம் காணாமல் போய் விட்டது. படத்தை முடியும் வரை பார்த்தேன். சில படங்களை பகலில் பார்க்கின்றே போதே தூங்கி வழிவது உண்டு. அந்த வகையில் நாடோடிகள் படமாக்கப்பட்ட விதம் என்னை கவர்ந்தது என்று சொல்லலாம்.

மற்றையபடி ஆகா, ஓகோ என்று பாராட்டுகின்ற அளவிற்கு படம் இல்லை. நுணாவிலான் குறிப்பிட்ட அன்பே சிவத்தோடு ஒப்பிடுகின்ற பொழுது நாடோடிகள் எதுவுமே இல்லை.

நாடோடிகள் கடைசி பதினைந்து நிமிடங்கள் நாடகத்தனமாக இருந்தது. படத்தை விடுவோம். சில கேள்விகள் இருக்கின்றன.

காதலுக்கு உதவி செய்தோம் என்பதற்காகவே பொருந்தாத இருவரை ஒன்றாக வாழச் சொல்லி கட்டாயப்படுத்துகின்ற உரிமை நண்பர்களுக்கு இருக்கின்றதா?

நண்பனின் காதலுக்கு உதவுவது போன்று, விவாகரத்தில் வந்து நிற்கும் நண்பனுக்கு துணையாக நிற்பது நண்பர்களின் கடமை இல்லையா?

காதல் கசந்து விவாகரத்தில் முடிகின்ற அடிப்படைக் காரணிகளை புறந்தள்ளி விட்டு நண்பர்கள் எனப்படுபவர்கள் "கலாச்சாரக் காவலர்களாக" மாறுவது சரியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.