Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு வைகோ, நெடுமாறன் விரும்பவில்லை: பத்மநாதன்

Featured Replies

”பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் தயாராகவில்லை” என இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘டெக்கான் குரோனிக்கல்’ நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார்.

பிரபாகரன் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாக வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொடர்ந்தும் தெரிவித்துவருவது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டச் சமரின் போது எமது தலைவரும் மற்றும் போராளிகளும் வீரச்சாவு அடைந்தார்கள்” எனவும் செல்வராஜா பத்மநாதன் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உடலைப் பெற்றுக்கொள்வதற்குத் தான் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், இருந்தபோதிலும் அவரின் உறவினர்கள் எவரும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளும் ஈழத் தமிழர்களின் துன்பங்களையிட்டு தமது கரிசனையை வெளிப்படுத்திவருவதாகவும் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார்.

“தற்போது நாம் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்தக் குழு நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக எமது மக்களின் கனவாக இருந்துவரும் தமிழீழத்தை அடைவதற்கான செயற்திட்டம் ஒன்றை இந்தக் குழு தயாரித்து வருகின்றது” எனவும் அவர் தமது தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக விபரிக்கையில் தெரிவித்தார்.

“ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. உலகம் முழுவதில் உள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள்” எனத் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், “இந்தியா எம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

http://www.paranthan.com/

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாக வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொடர்ந்தும் தெரிவித்துவருவது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உடலைப் பெற்றுக்கொள்வதற்குத் தான் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், இருந்தபோதிலும் அவரின் உறவினர்கள் எவரும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை எனவும் தெரிவித்தார்

சிறிலங்கா அரசு கொடுத்து அதை உறவினர்கள் போய் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என்ற பொருளில் இவரின் கூற்று அமைந்திருக்கிறதே - ஒரு அரசியல்வாதியைப் போன்ற தோரணையில் பேசுவதோ அல்லது இந்திய அரசியல்வாதிகளைப் பற்றி கருத்துச்சொல்வதோ பத்மநாதனுக்கு இப்போது அவசியந்தானா என்பது புரியவில்லை.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பகரமான பேட்டியாக இருக்கிறது????????????????????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையரசு தமிழர் பிரச்சனையைத் தீர்க்க முப்பது நாற்பது வருசமாக ஆரய்ஞ்சு கொண்டு இருக்கிறமாதிரி நாடுகடந்த தமிழீழ அரசையும் அமைக்கிறதப் பற்றி ஆராய்ஞ்சி முடிவெடுக்கிறதுக்கு நீண்ட காலம் எடுக்கும்போல கிடக்குது. இதை அமைக்கிறதுக்கான சாத்தியக் கூறுகளைப்பற்றி ஆராய்ஞ்சி போட்டு சூழ்நிலையும் ஆதரவும் சரியாயிருக்குமெண்டால் அதை மக்களிட்டத் தெரிவி;ச்சு ஆதரவைத்திரட்டிறதும் அமைக்கிறதும்தானே சரியானமுறை. சும்மா ஒண்டுமில்லாமல் கதைச்சுக்கதைச்சுச் சிங்களவரைப்போல காலத்தை ஓட்டிறதுலதானே நாங்களும் மினக்கெடுறம்.

  • கருத்துக்கள உறவுகள்

=---=

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசு கொடுத்து அதை உறவினர்கள் போய் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என்ற பொருளில் இவரின் கூற்று அமைந்திருக்கிறதே - ஒரு அரசியல்வாதியைப் போன்ற தோரணையில் பேசுவதோ அல்லது இந்திய அரசியல்வாதிகளைப் பற்றி கருத்துச்சொல்வதோ பத்மநாதனுக்கு இப்போது அவசியந்தானா என்பது புரியவில்லை.

எந்த ஒரு விடயத்தை புரிந்துகொள்வதற்கும் எம்மிடம் சதாரணமாக எழ கூடிய கேள்விகள்.

ஏன்? ஏப்போது? எங்கே? எப்படி?

இதில் எப்படி என்பதை நீங்கள் புரிந்துவிட்டீர்கள். ஏன் என்பதை புரிந்துகொள்ளவில்லை அல்லது அதற்கு முயற்சி செய்யவில்லை. இந்த உலகத்தில் ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு கரையில் சேர்ப்பதற்கு ஒரே வழிதான் இப்போது இருக்கிறது..... அல்லது எல்லோரும் ஒன்றாக தற்கொலை செய்ய வேண்டியதுதான் அதை ஒரு சிலர் முடிவெடுக்க முடிவெடுக்க முடியாது. ஆகவே இனி எல்லாமே கொஞ்சம் குழப்பகரமானதாகத்தான் இருக்கும்... ஏனெனில் அதுதானே ஒரே வழி. தலைவர் உயிரோடு இருந்தால் கூட..... இனி இறந்தே இருப்பார் என்பதுதான் உண்மை. அது காலத்தின் தேவையாகிவிட்டது. சாக்கடைக்குள் சாம்பிராணி குச்சிற்கு வேலை என்ன இருக்கிறது? ஆகாவே முடிந்தஅளவில் அவர்கள் முயற்சி செய்கிறார்கள்..... விமர்சனங்களை மட்டுமே அள்ளிவைக்க தெரிந்தவர்களுக்கு இது பொற்காலம். ஆனால் அதையெல்லாம் சகித்து கொண்டு மக்களை கரைசேர்ப்பதே அவர்களின் உறுதியாக இருக்கும். எம்மால் முடிந்தளவு நாம் துணைநிற்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.