Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணம் சுற்றுலா புரியாக மாற்றப்படவுள்ளது – பைசல் முஸ்தபா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணம் ஓர் சுற்றுலா புரியாக மாற்றப்பட உள்ளதாக சுற்றுலா மேம்மாட்டு அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவ கரையோரப் பகுதி சுற்றுலாத் தள அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் யுத்த களமாக அன்றி யாழ்ப்பாணத்தின் பல்வகைமையை பிரச்சாரம் செய்வதன் மூலம்

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கிலும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய அரசாங்கம் அதிக நாட்டம் காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர அதிக ஆர்வம் காட்டுவதாகவும்,

இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

GTN

பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர அதிக ஆர்வம் காட்டுவதாகவும்,

இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தமிழனை பற்றி நல்லாய்த்தான் அறிந்து வைத்துள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு 21ம் நூற்றாண்டுச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதையே புலிகளும் விரும்பினர். ஆனால் சிங்கள அரசாங்கம் தமிழர்களின் வருமானத்தை கொள்ளையடிக்க என்று செய்யும் திட்டங்கள் அபிவிருத்தி திட்டங்கள் என்று நோக்கப்படலாமா என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கிறது..!

தமிழனை பற்றி நல்லாய்த்தான் அறிந்து வைத்துள்ளார்கள்

இதென்ன.. புரிதல்.. இதைப் பாருங்கோ.. தமிழர்கள் எப்படிப்பட்ட ஜென்மங்கள் என்பதை அறிந்து திகைத்துப் போவீர்கள். இவர்களுக்கு ஏன் தமிழீழம்..??!

விலைபோகத் துடிப்பவன் தமிழன் என்று வரலாற்றில் எழுதுவிட்டுச் செல்லுங்கள்..!

Colombo remembers Alfred Duraiappa, setting hands of the clock backwards

[TamilNet, Thursday, 30 July 2009, 17:45 GMT]

Ruling Sri Lanka Freedom Party (SLFP) observed the 34th death anniversary of assassinated Alfred Duraippa, former Mayor of Jaffna, Thursday at his grave in Alfred Duraippa Stadium in Jaffna, sources in Jaffna said. Sri Lankan Minister of Vocational and Technical Training, Piyasena Gamage, and the former Chief Minister of Western Provincial Council, Reginald Cooray and other prominent members of SLFP laid flowers at the grave and garlanded the memorial monument, the sources added.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29894

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது போ!!!!!!!!!!!! முதலில் முகாமில் இருக்கிற மக்களுக்கு கக்கூசு கட்டக் காணயில்லை வெளிக்கிட்டிட்டினம்.

இனி என்ன club, சிவப்பு விடுதிகள் எல்லாம் வந்திடும். அங்கு உள்ளவார்கள் வெளி நாட்டு பணத்தில் ஒரே கும்மாளந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குறிப்பிட்டவற்றிலிந்து எமது மண்ணைக் காக்கவேண்டுமாகவிருந்தால் நாமே எமது பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும். அதற்கான காலம் இதுவே இப்போது எமது முதலீடுகளை மேற்கொள்ளாதுவிடின் சிறிய முதலீடுகளை எம்மால் மேற்கொள்ள முடியாது. பல்நாட்டு நிறுவனங்களும் சிங்களவரும் இந்தியர்களும் நாம் நித்திரையால் முளித்திருக்கும்போது எம்நிலத்தினை ஆக்கிரமித்திருப்பார்கள். ஆகவே தாங்கள் தனித்து முடியாது விடினும் ஒருவரோ அன்றேல் அதற்கு மேற்பட்டோரோ ஒன்றுசேர்ந்து வெளிநாடுகளில் நிறுவனங்களைத் தொடங்குங்கள். வரையறுக்கப்பட்ட கம்பனிகளாக தொடங்கி அம்முதலீடுகளின் மூலம் தாய்நிலத்தில் தொழில் தொடங்குங்கள் யாழ்கள உறவுகளே இதனைத் தொடங்கலாம் உதாரணமாக தூயா அவர்களும் ஏனைய அவரது யாழ்கள நண்பர்களும் சென்னைலில் புத்தக வெளியீடு செய்தார்களே அதுபோல்.

இதில் நானும் வருகின்றேன் தேரிழுக்க . தத்துவம் பேசிப் பயன் இல்லை நடைமுறைச் சாத்தியமானதையே கூறுகிறேன். உங்களில் எத்தனையேர் ஆற்றலுள்ளோருள்ளனர். அவர்கள் ஒன்றுபட்டு செயல்படுவதே சாலச்சிறந்தது. தமிழன் எதிர்காலத்தில் தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டே தூங்கவேண்டும். அன்றேல் அதோகதிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த பேராசிரியர் சொர்ணராஜா அவர்கள் எமது ஆலோசனைக்குழுவில் இருக்கின்றார். அவர் ஒரு வரைவை கடந்த வாரம் தயாரித்திருக்கிறார். அதாவது நாடு கடந்த அரசை முதலில் நாம் கிழக்கு இந்தியக் கம்பனி வடிவத்தில் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது, பொருளாதார ரீதியில் ஒரு பலம் மிக்க வடிவமாக கொண்டுவரவேண்டும் என்று அவர் கருதுகிறார்.

பிரித்தானியர் இலங்கைக்கு வருகை தந்து ஆதிக்கம் கொள்வதற்கு முன்பாக கிழக்கு இந்தியக் கம்பனி வடிவத்தில் அங்கு வந்து தமது ஆதிக்கத்தை செலுத்தினார்கள். எனவே நாங்களும் முதலில் பொருளாதார அடிப்படையில் நாடு கடந்த அரசை கொண்டுசென்று அதன் அடிப்படையில் நாங்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த பேராசிரியர் சொர்ணராஜா அவர்கள் எமது ஆலோசனைக்குழுவில் இருக்கின்றார். அவர் ஒரு வரைவை கடந்த வாரம் தயாரித்திருக்கிறார். அதாவது நாடு கடந்த அரசை முதலில் நாம் கிழக்கு இந்தியக் கம்பனி வடிவத்தில் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது, பொருளாதார ரீதியில் ஒரு பலம் மிக்க வடிவமாக கொண்டுவரவேண்டும் என்று அவர் கருதுகிறார்.

பிரித்தானியர் இலங்கைக்கு வருகை தந்து ஆதிக்கம் கொள்வதற்கு முன்பாக கிழக்கு இந்தியக் கம்பனி வடிவத்தில் அங்கு வந்து தமது ஆதிக்கத்தை செலுத்தினார்கள். எனவே நாங்களும் முதலில் பொருளாதார அடிப்படையில் நாடு கடந்த அரசை கொண்டுசென்று அதன் அடிப்படையில் நாங்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

நியாயமான கருத்து. ஆனால் எமது பிரதேசங்களை நாமே அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றால் அதற்கான அரசியல் அதிகாரம் சட்ட அதிகாரம் எமக்கு அவசியம். கொங்கொங்கை பிரிட்டன் அபிவிருத்தி செய்தது போன்று வடக்குக் கிழக்கை சிறீலங்கா அபிவிருத்தி செய்து எமக்குக் கையளிக்காது. ஆனால் எமது வளங்களை.. முதலீடுகளை.. வருவாய்களை சுரண்டவே சிறீலங்காச் சிங்கள அரசு முனையும். எமது முதலீடுகள் வடக்குக் கிழக்கினை அபிவிருத்தி செய்யும் அதேவேளை எமது வருவாய்கள் எமது தேசத்துக்குள்ளேயே பயன்படும் படியான அரசியல் அமைப்பும் அதிகாரங்களும் அங்கு எமது ம்தலீடுகளைச் செய்ய அவசியம். அரசியல் அதிகாரமற்ற நிலையில்.. அது சிங்கள தேசத்தின் கையில் குவிந்து கிடக்கும் நிலையில் எப்படி எமது முதலீடுகளை எமது தேசத்தில் செய்வது.. அதனை சிறீலங்கா பிடுங்கிக் கொள்ளாது பார்த்துக் கொள்ள முடியும்..???! இப்படியான தெளிவற்ற.. நிலைகள் இருக்கின்றனவே இங்கு..!

பிரித்தானிய காலனித்துவக் கம்பனிகள்.. இராணுவ விரிவாக்கத்தின் அடுத்த நிலையாக பொருளாதார.. சமூக விரிவாக்கத்தை செய்யப் பயன்படுத்தப்பட்டன. பிரித்தானியப் படையெடுப்புக்கள் நிலங்களைக் கைப்பற்றி தக்க வைக்க.. கம்பனிகள்.. பொருளாதார சமூக விடயங்களில் கவனம் செலுத்தி தமது வருவாய்களைப் பெருக்கிக் கொண்டன. எதிர்ப்புக்களைச் சமாளிக்க.. உள்ளூர் மக்களுக்கும் சில சலுகைகளை.. சிவில் நிர்மானங்களை அமைப்புத்துக் கொடுத்தனர். அதன் தாக்கம் இன்றும் இருக்கிறது..! அவ்வாறு நாம் சிங்கள அரசியல் இராணுவ அதிகார மையத்தின் கீழ் செயற்பட முடியுமா..???! <_<:icon_idea:

Edited by nedukkalapoovan

அவ்வாறு நாம் சிங்கள அரசியல் இராணுவ அதிகார மையத்தின் கீழ் செயற்பட முடியுமா..???! <_<:icon_idea:

நிச்சமாக முடியாது,ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் நாம் இந்த எலும்புதுண்டை எடுக்க வேன்டிய நிலையில் உள்ளோம்,இல்லை என்றால் யாழ்ப்பாணம் யாப்பாபட்டுவாக வெகு விரைவில் மாறும்

சிங்கள அரசாங்கத்தை விடுங்கோ... அவைஅவைக்கு நல்ல லாபம் வரும் எண்டா.. வடக்குகிழக்கில் முதலீடுகளை செய்யலாம்.

ஆனால் இப்போதைக்கு சுத்தமாக சான்ஸ் இல்லை.. முக்கியமாக இலங்கையில் பிறந்த தமிழர்களின் வியாபாரங்களுக்கு ஒரு வெளினாட்டு காப்புறுதி நிறுவனமும் உத்தரவாதம் தரப்போவத்தில்லை. இலங்கை காப்புறுதிகளினால் கூட ஒருகுறிப்பிட்ட தாரத்துக்கு மேல் அங்கீகரிக்கமாட்டர்கள். அப்படியும் விடாப்புடியா மாற்றுகருத்தாளர்கள், தமிழர்கள் மீது பரிதாபம் உள்ளா சிங்களவர்கள் உதவியுடன் வியாபாரம் செய்தாலும்..... கொடுக்கவேண்டியா கிம்பளம் எடுக்கும் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும்..... பெரிய தமிழ்வியாபரிகளெல்லம் நாட்டைவிட்டு ஓடி விட்டர்கள்.. இலங்கை( வடக்கு கிழக்கு உட்பட... ) வியாபரத்தை மொனோபொலியாக மாற்றிவைத்திருக்கும் பாரிய முஸ்லீம், சிங்கள வியாபாரிகள், ஒருபோதும் இலங்கையில் லாபம்பார்க்க முனையும் வெளிநாட்டு முதலீடுகளை விரும்பபோவதில்லை.. சகல பொறிகள், சகுனி வேலைகள், தந்திரங்கள் எல்லம் பயன்படுத்தி விலக்கபார்ப்பார்கள்.. அதுவும் 'தமிழ்' முதலீடெண்டால் வெள்ளைவான் பயணம்தன்.........

இப்போதைக்கு... இன்னுமொரு 10, 15 வருசத்துக்கு எழும்பவிடமாட்டர்கள்.... இந்தியாவின் அனுமதி இருந்தால் மட்டுமே வாழலாம்...........

:icon_idea:

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

இனி என்ன club, சிவப்பு விடுதிகள் எல்லாம் வந்திடும். அங்கு உள்ளவார்கள் வெளி நாட்டு பணத்தில் ஒரே கும்மாளந்தான்.

அப்போ இனி

யாழ்ப்பாணத்தில் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லுங்கோ

சிங்கள அரசாங்கத்தை விடுங்கோ... அவைஅவைக்கு நல்ல லாபம் வரும் எண்டா.. வடக்குகிழக்கில் முதலீடுகளை செய்யலாம்.

இப்போதைக்கு... இன்னுமொரு 10, 15 வருசத்துக்கு எழும்பவிடமாட்டர்கள்.... இந்தியாவின் அனுமதி இருந்தால் மட்டுமே வாழலாம்...........

:icon_idea:

கிழக்கு மாகாணசபை 5% அப்படியான முயற்சியில் இடுபடுவது போல தெறியுது.அதாவது இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து

கேளிகை அரங்குகளும் சிவப்பு விடுதிகளும் இல்லாத இடம் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாகும்...

குறிப்பா அரபிக்காரரை பாருங்கோ... மரம் மட்டை கழுதை ஒட்டகம் எண்டு திரிகிறார்கள்... எங்கட பொறாமை மற்றும் மூடநம்பிக்கை எம்மை இதுக்குதான் வழிசெய்யும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.