Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் துயரம் பாதித்ததால் விழாக்களைத் தவிர்த்தேன்: ஏ.ஆர். ரஹ்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் துயரம் பாதித்ததால் விழாக்களைத் தவிர்த்தேன்: ஏ.ஆர். ரஹ்மான்

First Published : 02 Aug 2009 12:14:00 AM IST

Last Updated : 02 Aug 2009 01:09:52 AM IST

சென்னை, ஆக. 1: இலங்கையில் நடந்த துயர சம்பவங்கள், எனது மனதை மிகவும் பாதித்ததால் கடந்த 2 மாதங்களாக எந்த விழாக்களிலும் பங்கேற்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு, கெüரவ டாக்டர் பட்டத்தை ஆளுநர் பர்னாலா வழங்கினார். பட்டத்தை பெற்ற பின் அவர் வழங்கிய ஏற்புரை:

இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்கள் எனது மனதை மிகவும் பாதித்தன. திரையுலகின் மிகப் பெரிய ஆஸ்கார் விருது பெற்ற பின்னரும், கடந்த 2 மாதங்களாக எந்த விழாவிலும் நான் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தேன்.

அமெரிக்காவுக்குச் சென்று இசையமைப்புப் பணிகளில் ஈடுபட்டு திரும்பிய எனக்கு கெüரவ டாக்டர் பட்டத்தை அளித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்ததைக் கேட்டபோது என் மீது முத்து மழை பொழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என்றார் ரஹ்மான்.

அவரது தாய் மற்றும் உறவினர்கள் விழாவில் பங்கேற்றனர்.

மயில்சாமி அண்ணாதுரை: இஸ்ரோவின் சந்திரயான் 1- திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை, கெüரவ டாக்டர் பட்டம் பெற்ற பின் பேசியதாவது:

எனக்கு வழங்கப்பட்ட இப்பெருமையை எனது பெற்றோருக்கு சம்ர்ப்பிக்கிறேன். உலகின் சிறந்த செயற்கைக்கோளுக்கான 2 சர்வதேச விருதுகளை சந்திரயான் பெற்றுத் தந்ததன் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்க்க முடிந்துள்ளது.

இப்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பட்டம் எனது சாதனைகளுக்குக் கிடைத்த இளைய சமுதாயத்தின் அங்கீகாரம். ஆனாலும், சாதிப்பவர்களை மட்டுமே இளைஞர்களாக சமுதாயம் இப்போது கருதுகிறது என்றார் மயில்சாமி அண்ணாத்துரை.

முன்னாள் துணைவேந்தர்

எம். அனந்த கிருஷ்ணன்:

அண்ணா பல்கலைக்கழகம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தாலும் நிர்வாகவியல் துறை படிப்புகளையும் நடத்துகிறது. அதனால், நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கு கெüரவ டாக்டர் பட்டத்தை இப் பல்கலைக்கழகம் வழங்குவது பொருத்தமானது. என்றார்

மு. அனந்த கிருஷ்ணன்.

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையாகவே ஏ.ஆர். ரகுமாn; அவர்கள் பொதுநிகழ்சிகளைத் தவிர்ப்பவர். மாறாக தமிழ்நாட்டில் நடக்கின்ற நிகழ்சிகளைக் கூடியகவனமெடுத்துத் தவிர்ப்பதைக் கொள்கையாகவே கொண்டவர். சிலவருடங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் நடைபெற்ற ஓர்இசைநிகள்சியில் கூடியஅளவில் கிந்திப்பாடல்களையே பாடவைத்து தமிழ்இசை ரசிகர்களது வயிற்றெரிச்சலைக் கட்டிக்கொண்டவர். இவர் தற்போது பக்கா அரசியல்வாதியாக மாறி தான் செய்த தவறிற்கு ஈழத்தமிழர்களைச் சாட்டுக்கூறுகிறார். இவர்கூட ஒரு கீழ்தரமான அரசியல்வாதி ரேஞ்சுக்கு பொது மேடைகளில் பேசமுனைவது முதிர்ந்த அரசியல்வாதிகளைக் கலங்கடிக்கும் என்பது உண்மை. இவர்களெல்லாம் ஐந்துநட்சத்திர விடுதிகளில் றூம்போட்டு யோசிப்பார்களோ?

இவரது அடிப்பொடிகள் யாழ் களத்திலும் இருக்கிறார்கள் இதற்கு ஏதாவது கூறவருவார்கள்.பார்ப்போம்..........

.

இவரது அடிப்பொடிகள் யாழ் களத்திலும் இருக்கிறார்கள் இதற்கு ஏதாவது கூறவருவார்கள்.பார்ப்போம்..........

.

:rolleyes:

இப்படி கேட்பினம் '" புலப்பெயர் புண்ணாக்குக்களாகிய் நீங்கள் என்ன செய்தனீங்கள் என்று சொல்லுங்கோ தமிழருக்கு பிறகு வந்திட்டினம் தமிழக உறகளை கொச்சைப்படுத்த"" என்று :rolleyes:

நீர்...செய்தனீர்....சொல்லும்...என

  • கருத்துக்கள உறவுகள்

------

இவர் தற்போது பக்கா அரசியல்வாதியாக மாறி தான் செய்த தவறிற்கு ஈழத்தமிழர்களைச் சாட்டுக்கூறுகிறார். இவர்கூட ஒரு கீழ்தரமான அரசியல்வாதி ரேஞ்சுக்கு பொது மேடைகளில் பேசமுனைவது முதிர்ந்த அரசியல்வாதிகளைக் கலங்கடிக்கும் என்பது உண்மை. இவர்களெல்லாம் ஐந்துநட்சத்திர விடுதிகளில் றூம்போட்டு யோசிப்பார்களோ?

----

ரஹ்மான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு இந்த அளவிற்காவது சொல்லியதை வரவேற்பதை விட்டு விட்டு .......

அவர் அரசியல் வாதியாக மாறித்தான் வயிறு வளர்க்க வேண்டும் என்று அவருக்கு ஒரு நிர்ப்பந்தமும் இல்லை .

இப்படி கேட்பினம் '" புலப்பெயர் புண்ணாக்குக்களாகிய் நீங்கள் என்ன செய்தனீங்கள் என்று சொல்லுங்கோ தமிழருக்கு பிறகு வந்திட்டினம் தமிழக உறகளை கொச்சைப்படுத்த"" என்று :rolleyes:

நீர்...செய்தனீர்....சொல்லும்...என

நாம் பிறந்து வளர்ந்த மண் சுடுகாடாகியிருக்கும் இந்த நிலையிலும் நாம் அகதிகளாகித் தவித்த காலத்தில் எம்மை அரவணைத்து எமக்குச் சோறூட்டிய வன்னி மக்கள் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள இந்த நிலையிலும் ஈழத்தமிழினத்தின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறதோ என்ற நிச்சயமற்ற நிலை நிலவுகிற இந்த சந்தர்ப்பத்திலும் புலம்பெயர் தேசங்களில் வாழுகின்ற எம்உறவுகள் பிறந்த நாள் கொண்டாட்டம் என்றும் பார்பகியு பார்ட்டி என்றும் அமர்க்களப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால் நாம் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்கிறோம் என்றும் கேளிக்கை விழாக்களைத் தவிர்க்கிறோம் என்றும் அவர்கள் வார்த்தையளவிலாவது சொல்கிறார்களே. நாம் அது கூட இல்லையே......

  • கருத்துக்கள உறவுகள்

***

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப்போடு குட்டிப்பையா

நாம் மிகவும் அவசரப்படுகிறோம்

மேலும் எதிரிகளையே சமைப்போம்

இது தமிழனின் தலைவிதி

ரகுமானை விமர்சிக்க எமக்கு எவருக்காவது உரிமயுண்டா....???

நெஞ்சைத்தொட்டு.....பதில்சொல்லவ

ேண்டிய கேள்வி......???

இங்கு பிரான்சில் அடுத்த வருட இறுதிவரை அனைத்து மண்டபங்களும் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுவிட்டன.......???????

Edited by விசுகு

மிக மிக செரிந்து பதுங்கிய பத்தாயிரகணாக்கான தமிழ் மக்கள்மீது நடத்தப்பட்ட பல்குழல் ஏவுகணை பொறிப்பு (அல்லது மழை நிண்ட பின் தொடர்ந்த தூவானம்)மூலம் கொல்லப்பட்ட எம் மக்கள்...

geno-1.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருடைய கூற்று வரவேற்கப்படவேண்டியதே தவிர விமர்சனம் செய்யக்கூடாது இப்படி விமர்சிப்பவர்கள் முதலில் தங்களைப்பற்றி யோசித்துப்பார்க்கவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.