Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் பல்லாயிரம் தமிழ்மக்கள் கலந்துகொண்ட பிரமாண்டமான இசைநிகழ்ச்சி?

Featured Replies

யாழ்ப்பாணத்தில் பல்லாயிரம் தமிழ்மக்கள் - தொலைக்காட்சி தகவலின்படி சுமார் ஒரு இலட்சம்பேர் - முக்கியமாக இளைஞர்கள் கலந்துகொண்ட தென் இந்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சி யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது எனவும், அதை டன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பினார்கள் என்றும் உறவினர் ஒருவர் கூறினார். விரைவில் டன் தொலைக்காட்சியின் சேவையை இலவசமாக வட அமெரிக்காவிற்கும் விரிவுபடுத்தினால்.. யாழ்குடாநாட்டு தகவல்களை நாங்களும் அறியக்கூடியதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன? விடுதலையாவது, இனமாவது.

இந்த லட்சணத்திலை ஏதோ ஏதோ எழுதிறவை இதையும் கொஞ்சம் யோசிக்க வேணும். நிண்டு நிதானமா? ம். யாழ்க்குடாநாட்டுத் தகவல். வேறையென்ன தமிழினத்தினது வாழ்வு, அதாவது யாழ்க்குடாவில பாலோடு தேன்பாய நடக்குதாம். சிங்களவன் வந்து எல்லாத்தையும் ஒரு பக்கம் சுரண்ட, இந்தியனும் சுரண்ட, இங்க புலத்து சனநாயகவாதிகள் ச்சா! இதுவல்லவோ சனநாயகமெண்டு புகழ தமிழினமே ஈழத்தில இல்லாமல் அழிய இதைத்தானே சிங்களமும் இந்தியமும் ஆவலோடு எதிர்பார்த்தது.

Edited by nochchi

ஆகா... கண்கொள்ளா காட்சி அது. எவ்வளவு இளைஞர்கள். ஆயுத முனையில் பட்டிக்குள் அடைக்கப்பட்ட மந்தைக் கூட்டமாக எவ்வளவு சந்தோசமாக இசையில் மயங்கியிருந்தார்கள்.

நாம் இரவிராவாக தென்னிந்திய பாட்டுக் கோஷ்டி பார்த்து எவ்வளவு காலம். எவ்வளவு காலம் போராடி பெற்ற இன்பம்.

  • தொடங்கியவர்

கனடா, ஐரோப்பா, அவுஸ்திரேலியாவில சொகுசாக வாழ்ந்து நீங்கள் பார்த்து அனுபவிக்காததையா நாங்கள் யாழ்ப்பாணத்தில அனுபவிக்கிறம் என்று அவங்கள் கேட்பாங்கள். நாளைக்கு யாழ்குடாநாட்டில இருக்கிற தமிழருக்கு ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியாவுக்கு திறந்த வீசா குடுக்கிறம், பிரயாணச்செலவும் இலவசம் என்று சர்வதேச நாடுகள் சொன்னால்.. தற்போது யாழ் குடாநாட்டில இருக்கிற சில இலட்சம் பேரில எத்தனை நூறுபேர் மிஞ்சுவீனம் என்று சொல்லிறது கடினமானது இல்லை. இங்கு இருக்கும் எங்களுக்கு அங்கு இருப்பவர்கள் எப்படி வாழவேணும் என்று சொல்லிறத்துக்கு தகமை இருக்கிதா என்று சொல்லத்தெரிய இல்லை.

அவர்களை நிரந்தரமாக பார்க்க வேண்டாம் என்று கூறவில்லை இன்றய சூழ்நிலையில் தேவையா?

  • தொடங்கியவர்

இன்றைய சூழலில யாழ்ப்பாணத்தில இருக்கிற சனத்தால என்ன செய்யமுடியும் என்று ஒருக்கால் சொல்லுங்கோ. ஏதாவது வாயைத்திறந்தால் ஆள் அரோகரா. இஞ்ச இருந்து நாங்கள் என்னவும் சொல்லலாம், கதைக்கலாம், செய்யலாம். இஞ்ச வெள்ளை வான், கொலை, கடத்தல் இல்லை. ஆனால் அங்க இருந்து என்ன செய்ய முடியும்?

அங்க இருக்கிற இளம்பெடிகள்... அலைவரும்போதே தலை முழுகி இருக்கிறாங்கள் போல.

மாப்பு நீங்கள் எழுதிய கொடுமைகள் எதுவுமின்றி வெள்ளைக்காரனுக்கே விரலை காட்டுற எங்களுக்கு உணர்வு கூட அங்க காணவில்லை.

  • தொடங்கியவர்

நான் தொலைக்காட்சியில் குறித்த நிகழ்ச்சியை நேரடியாக பார்க்கவில்லை. இதனால் அங்குள்ள இளைஞர்களின் முகத்தில் தோன்றிய, காணப்பட்ட உணர்வலைகள்பற்றி சொல்லமுடியவில்லை. ஆனால்.. குறித்த நிகழ்ச்சியை பார்த்த எனது உறவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். அவரால் அதை நம்பமுடியவில்லை. இதற்கு எல்லாம் காரணம் இங்குள்ள ஊடகங்கள் செய்த, செய்கின்ற பல தவறுகளே. உள்ளதை உள்ளபடி முன்பு சொல்லாவிட்டாலும் இனியாவது சொல்லலாம், காட்டலாம். இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு எனது குறிப்பிட்ட உறவினர் அடுத்தவருசம் தான் ஊருக்குபோய் வரப்போவதாய் சொல்லி இருக்கிறார்.

தேர்தல் முடிந்த கையோடு பல நூறு யாழ் இளைஞர்களை போட்டுத்தள்ள மகிந்த டக்ள்ஸ் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஆரம்ப கட்டமே இதுவாம்

ஆகா... கண்கொள்ளா காட்சி அது. எவ்வளவு இளைஞர்கள். ஆயுத முனையில் பட்டிக்குள் அடைக்கப்பட்ட மந்தைக் கூட்டமாக எவ்வளவு சந்தோசமாக இசையில் மயங்கியிருந்தார்கள்.

இதற்கெல்லாம் யார் காரணம் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓம் எல்லாரும் எல்லாத்தையும் எழுதுங்க அங்க சனம் வேண்டா வெறுப்பா கதைக்குது. தேர்தல் பற்றிய அக்கறை மகக்ளிட்ட இல்லை என்று அங்க இருக்கிற பெரும்பான்மையான ஆக்கள் சொல்லினம். ஆனால் அரசாங்கம் தான் மக்கள் மகிழ்வோடு இருக்கினம் எனபதை காட்ட பல பிரயத்தனங்களை செய்யுது.

யாழ்ப்பாண இளைஞர்கள் மீது கோபமில்லை. ஏன் என்றால் குறிப்பிட்ட காலப்பகுதியில் கொல்லப்பட்ட யாழ் இளைஞர்களின் அளவு இதுவரை தெரியாது. யாழ்ப்பாணத்தில் இளைஞர்களே இல்லை என்ற நிலையில் இருந்து யாழ்ப்பாணம் மீண்டதுக்கு காரணம் "இராணுவத்துடனான அனுசரிப்பு" அல்லது ஈ.பி.டி.பி அங்கத்துவம் அப்பிடியிருக்கையில் அவர்கள் தங்கள் உயிர்களை காக்க ஒத்துழைப்பைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்!?

நாங்கள் இன்டைக்கு புலம்பெயர் நாடுகளில களைச்சு போய் போராட்டங்களை கைவிட்டு போட்டு யார் தலைவர், யார் பொருளானர் என்று அடிபட்டுக்கொண்டிருக்கிறம். இன்டைக்கும் நேற்றும் கனடாவில "துளிர்கால வர்த்தக விழா" ஒரு அப்பாவியின்ர பெயரில ஊடகங்களின் கொண்டாட்டம். பூங்காக்களுக்கு போனால் ஒன்றுகூடல்கள்.... கடற்கரைகளுக்கு போனால் தமிழ் முகங்கள்... (என்னையும் சேர்த்து தான்) இப்பிடி நிலமை இருக்கையில் நீங்கள் மற்றவர்களை எப்பிடி குறை சொல்ல முடியும்?

இது ஒரு சிங்களவனின் ஆதங்கம்(கருத்து பகுதியில் வந்தது)

We, Sri Lankans, should be very careful about this eelam election. Exactly the same thing that Palastinianse (PLO) did and they were successful. We all know that entire tamil diaspora in more than 12 countries ( 15 million tamils) will vote for separate eelam. If that happens, they will win in their eelam war through diplomatic means. We better watch out this.

ஆனால் நாம் எம்மை எப்படி காட்டி கொடுக்கலாம் என்று உள்ளோம்

அங்கே பக்கத்தில் 3,00000 பேர்கள் சிங்களவனி்ன் கொடூஞ் சிறையில் ஊண் உடையின்றி அவதிப்பட அட கொழும்புத தெருக்களில் பட்டுடுத்தி நகைபூண்டு 3,000 காரிகைகள் பால் குடம் ஏந்திவர மறு நாள் 10,000 அதிகமானோர் திரண்டு பஞ்சரத பவணி நடத்த, (சிங்களவன் பார் கொழம்ப தெமழு என்ன சந்தோஷமாக இங்கே இருக்கிறார்கள் என்று புலம்ப, ஐயோ என்ட 10 பவுண் தாலிகொடியை பறிச்சுக் கொண்டு ஓடுறான் என்ற அலறல ஒருபக்கம் கேட்க) நல்லூரில் கந்த,கந்த கந்தசாமி தங்கத் தேரினில் மனைவியருடன் பவணிவர, யாழில் களியாட்டங்களுடன் இசைநிகழ்ச்சி நடக்க, அட சுதந்திர போராட்டமாவது மண்ணாகட்டியாவது? உம் சுகங்களைத் துறந்து ஈனத தமிழருக்காய் உயிர் கொடுத்த உத்தமரே உம் தியாகங்கள் இனத்தின் சுயநலத்திற்காய் வீணாகிக் கொணடிருக்கின்றதா? இதற்காகவா உம் இன்னுயிரை நீர் இழந்தீர்....?

ஜானா

யாரையாவது குறைகூறி எழுதும்பொழுது எல்லோரும் ஒரேமாதிரித்தான் இருக்கின்றீர்கள்

குறை சொல்லப்படுபவரின் இடத்திலிருந்து சிந்தித்து எழுதுங்கள் உறவுகளே

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் சமாதான நாடகக் காலத்திலும் இவ்வாறான இசை நிகழ்ச்சிகள் அங்கே நடைபெற்றன. அப்போது கூட்டம் அலைமோதியது. ஆனால், இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளின் நேரம்தான் சரியாக இல்லை. ஆனால், அங்குள்ளவர்கள், "இன்னும் எத்தினை நாளுக்குத்தான் அழுது வடிகிறது?" என்று கேட்டால் என்ன சொல்லப் போகிறோம்?

யாழப்பாணத்தின் இளைய சமுதாயம் படும் பாட்டினை 2001, 2002 இல் அங்கு சென்றபோது நேரடியாகக் கண்டு கொண்டேன். பின்னேரங்களில் பேரூந்துகளில் ஏறும் இளைஞர்கள் முழுபோதையில் அங்கிருக்கும் இளம் பெண்கள் மேல் விட்ட காம சேட்டைகளைப் பார்க்கும் போது அருவருப்பாக இருந்தது. ஓரிருமுறை சிலருடன் கைகலப்பிற்கும் போகவேண்டியிருந்தது. அப்பவே தெரிந்தது நாம் போகும் திசை. 20 மைல் முகமாலைக்கு அப்பால் வாழும் அந்தச் சமூகம் எங்கே, கெட்டுச் சீரழியும் இந்த யாழ்ப்பாணம் எங்கே என்று எனக்குள் வருத்தப்பட்டேன்.

15 வருடம், போராட்டத்தின் தேவையும், உணர்வுமற்ற ஒரு சமுதாயம் அங்கே வளர்ந்து வருகிறது. யாராலும் அதை ஒன்றும் செய்ய முடியாது. எதிரி திட்டமிட்டே இதைச் செய்கிறான். தட்டிக்கேட்க யாருமில்லை.

யாழ்ப்பானத்தின் இன்றைய நிலை பற்றி எழுதினால் இங்கு உடனேயே "நீங்கள் வெளிநாட்டில் ஆட்டம் போடலாம், அவங்கள் அங்க செய்தால்த்தான் தவறோ" என்று கேட்க ஒரு அதிமேதாவிக் கூட்டம் வந்துவிடுகிறது. எல்லா வசதிகளிருந்தும், எத்தனை இசை நிகழ்ச்சிகளை நாம் நிராகரித்தோம், எத்தனை விழாக்களை நாம் நிறுத்தினோம், எத்தனை முறை தெருக்களில் இறங்கி கத்திக் கதறினோம்? இதுபற்றி யாருக்கும் சொல்ல விருப்பமில்லை. நீங்கள் நினைப்பது போல புலம்பெயர் தமிழச் சமூகம் இங்கு கெட்டுக் குட்டிச்சுவராகவில்லை. எம்மாலானதைச் செய்துகொண்டு, இன்றும் உணர்வுடந்தான் இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் யாழ்ப்பாணத்து இளைய சமுதாயத்தை விட புலம்பெயர் இளையோர்தான் மிகுந்த உணர்வுடன் இருக்கிறார்கள். பாரீசிலும், லண்டனிலும் தெருக்களில் கத்திக்கதறி, "30 வருஷப் போராட்டத்தை இப்படி அழிச்சுப்போட்டாங்களே மச்சான், இனி என்ன செய்யப் போறோம்" என்று தேம்பித் தேம்பி அழுத அந்த இளைஞனை நினைத்துப்பாருங்கள்.இரவு பகல் பாராது பிரதமர்களின் இல்லங்களுக்கு முன்னாலும், பாராளுமன்றங்களுக்கு முன்னாலும் உணவின்றித் தவமிருந்த அந்த இளையோர்களை நினைத்துப் பாருங்கள்.

இன்று புல்ம்பெயர் நாடுகளில் எமது போராட்டம் இளையோர் கைகளில்த்தான் இருக்கிறதென்றால் உங்களால் மறுக்க முடியுமா?

உண்மையை ஒத்துக்கொள்ளுவோம். யாழ்ப்பாணம் இன்று கை நழுவிப் போய்விட்டது. எமது தார்மீகப் போராட்டம் அங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்று இனியும் கனவு காண வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.