Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.எஸ் பாலச்சந்திரனின் நாவல்! வடலி வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலச்சந்திரன் அண்ணாவின் புத்தகத்தை வெளியிட்ட வடலிக்கு வாழ்த்துக்கள்

ஜில்,

நன்றி

  • Replies 69
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நடித்து வெளிவந்த செம்மீன் திரைப்பட (பெயர் சரியென நினைக்கிறேன்) பாடலான வாடைக்காற்று வீசுகின்ற... என்ற பாடலை எங்கு தரவிறக்கம் செய்ய முடியுமென தெரிவிப்பீர்களா ? ? ?

நன்றியுடன்

தர்மராஜ்

தம்பி தர்மராஜ்,

நான் நடித்த திரைப்படத்தின் பெயர் வாடைக்காற்று. செங்கை ஆழியான எழுதிய நாவல் திரைப்படமாகியது. செம்மீன் ஒரு மலையானப்படம். அதுவும் தகழி சிவசங்கரம்பிள்ளை என்பவர் எழுதிய நாவல்தான் திரைப்படமாகியது. இரண்டுமே கடலோடிகளின் வாழ்வைககூறுவது எனவே உங்களுக்கு பெயர் மாறி வந்திருக்கலாம். இலங்கை வானொலியில அறிவிப்பாளராக இருந்த என் நண்பர் ஜோசப் இராசேந்திரன் குழுவினர் பாடிய " வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" பாடலை இங்கு இணைத்திருக்கிறேன். முடியுமானால் நீங்கள் நேரடியாகவே யாழ்களத்தில் இணைக்கலாம் நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

http://www.esnips.com/doc/dd8233aa-4a12-45...e7e/Vadai-Katru

Edited by கே.எஸ்.பாலச்சந்திரன்

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் அண்ணாவின் புத்தகத்தை வெளியிட்ட வடலிக்கு வாழ்த்துக்கள்..கானமயிலாடக்கண

்ட வான் கோழி போல அவருடைய பாதிப்புக்களால்..நானும் சில நாடகங்கள் எழுதியும்.தாயாரித்தும் இருக்கிறேன்..மற்றபடி ஒரு பேப்பரில் அவரும் எழுதுவதால் அவர் எழுதுகின்ற பத்திரிகையில் நானும் எழுதுகிறேன்.என்று பெருமைப்பட்டுக் கொண்ட நாட்களும் உண்டு..அவரது எழுத்துக்கள் தொடரவேண்டும்.. நன்றிகள்.

இவர்கள் இருவரும் எழுதும் யாழ்களத்தில் நானும் இருக்கிறேன் எண்டு பெருமைபட்டுக்கொள்றேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இருவரும் எழுதும் யாழ்களத்தில் நானும் இருக்கிறேன் எண்டு பெருமைபட்டுக்கொள்றேன் :)

அவர்கள் இருவருடனும் நீங்களும் சேர்ந்து எழுதும் யாழ்களத்தில் நானும் இருக்கிறன் என்று மகிழ்ச்சியடைகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது நகைச்சுவைகளை ரசித்தவனில் நானுமொருவன் ,ரூபவாகினியில் வந்த நாடகங்களில் ஒண்றின் வசனம் இன்னும் எனது மனதில் பதிந்துவிட்டது.

அவர்கள் ஏன் சண்டை பிடிக்கிரார்கள் என்று மகன் கேட்க.....அப்பா பதில் சொல்லுகிறார் அவர்களுக்கு ஈழம் வேனுமாம் என்று

அருமை அண்ணன்,

கே.எஸ்.பாலச்சந்திரனின் மீள் வரவும், வடலி பதிப்பகத்தின் புதிய வரவும்

எங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருப்பது மிகவும் மகிழ்வாகயிருக்கிறது.

நீண்ட நாட்களின் பின் யாழ்களத்தில் உங்களைப் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது. உங்களுடைய எத்தனையோ படைப்புகளுக்கு மத்தியில் இந்த இயந்திர உலகில் ஓர் இலக்கியப் படைப்பு - நாவல் வெளிவருவது நல்லது.

எல்லாமே இழந்து போனதாய் இருக்கும் எங்கட மக்களிற்கு படைப்புகள் மூலம் உற்சாகமூட்டி மீண்டும் எழ வைக்க வேண்டிய பாரிய பொறுப்பு நம் தமிழ் படைப்பாளிகளின் கையில் தான் தங்கியிருக்கிறது.

வெற்று மனதோடு விடியலின் வாசல் தேடி இதயங்கள் துடித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் உங்களுடைய நாவலினைப் படிப்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றோம்.

எங்கடை வடலிப் பொடியலுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.

உங்கள் உழைப்பின் வேகம் என்னைப் பிரமிக்க வைக்கிறது. வளரட்டும் வடலி. வாழ்த்துக்கள்.

Edited by Tamizhvaanam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பான புத்தன், தமிழ்வானம்,

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..

புத்தன், நீங்கள் குறிப்பிட்ட வசனம் எந்த தொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்றது?

தம்பி தர்மராஜ்,

நான் நடித்த திரைப்படத்தின் பெயர் வாடைக்காற்று. செங்கை ஆழியான எழுதிய நாவல் திரைப்படமாகியது. செம்மீன் ஒரு மலையானப்படம். அதுவும் தகழி சிவசங்கரம்பிள்ளை என்பவர் எழுதிய நாவல்தான் திரைப்படமாகியது. இரண்டுமே கடலோடிகளின் வாழ்வைககூறுவது எனவே உங்களுக்கு பெயர் மாறி வந்திருக்கலாம். இலங்கை வானொலியில அறிவிப்பாளராக இருந்த என் நண்பர் ஜோசப் இராசேந்திரன் குழுவினர் பாடிய " வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" பாடலை இங்கு இணைத்திருக்கிறேன். முடியுமானால் நீங்கள் நேரடியாகவே யாழ்களத்தில் இணைக்கலாம் நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

ஐயா பின்னூட்டத்திற்க்கு மீண்டும் நன்றி

ஐயா உண்மையைச் சொன்னப்போனால் அந்த இரண்டு படங்களையும் நான் பார்க்கவில்லை... எனக்கு இப்போ 22 வயது ஆகிறது.. ஆனாலும் வாடைக்காற்று பாடல் தொடர்பான ஆக்கமொன்றை முன்பு கானா பிரபா அண்ணாவின் பதிவொன்றில் வாசித்திருக்கிறேன். அந்த வகையில் அந்தப்பாடலை கன இடங்களில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை . .அது தான் ஐயாவிடம் கேட்டிருந்தேன்.

நீங்கள் நடித்த வாடைக்காற்று திரைப்படம் செங்கை ஆழியான் அவர்களுடைய நாவலில் இருந்து உருவாகியது என்பதை அவரது நாவல் யாழ் உதயன் பத்திரிகையில் 2003ம் ஆண்டு காலப்பகுதியில் தொடராக வந்திருந்த போது படித்திருந்தேன். அப்போது தான் படத்தில் வரும் சில நிழற்படங்களையும் அவர்கள் இணைத்திருந்தார்கள். வாசிக்கும் போது மிக மிக லயித்துப்போனேன். அவ் நாவல் வெளிவந்துகொண்டிருந்த போதே நான் நண்பர்களுடன் நெடுத்தீவுக்கு சுற்றுலாபோனேன். செங்கை ஆழியானின் வர்ணனையும் நேரில் கண்டவையும் என்னுள் பிரமிப்பை ஏற்படுத்தின அவ்வளவு அருமை......

அத்திரைப்படத்தை இப்போ எங்காவது பார்க்கமுடியுமா ? ? ?

நன்றிகளுடன் தர்மராஜ்

உங்கள் ஆர்வம் எனக்கு பதில்தரும் அவசியத்தை உணர்த்துகிறது. 83 கலவரத்தின்போது; தமிழருக்கு சொந்தமான விஜயா ஸ்டூடியோ தீக்கிரையானபொழுது அங்கிருந்த திரைப்பட நெகட்டிவ்களெல்லாம் எரிக்கப்பட்டுவிட்டன.. கலவரம்முடிந்தபின், குவித்து வைத்திருந்த கும்பலுக்குள்ளே நான் சிலருடன் சென்று தேடி, படத்தின் ஒரு பிரதியை எடுத்தேன். நான் கனடாவந்ததின்பின்னர், அதன் அருமைதெரியாதவர்கள் எறிந்துவிட்டார்கள். என்னிடம் யுமற்றிக் வகையிலான பிரதி ஒன்று இஇருக்கிறது. அதை சுத்தம் பண்ணி திரையிட இருக்கிறேன். நாவல் 2003ல் உதயனின் தொடராக வந்தது எனக்கு தெரியாது. செங்கை ஆழியான கனடாவந்தபோது, என்னிடம் புகைப்படங்களை வாங்கிச்சென்றார். அவற்றையே பாவித்திருப்பார்கள். படம் சுத்தம்செய்யப்பட்டபின் அறிவிப்பேன். நீங்களும் பார்க்க சந்தர்ப்பம் வரும்.

அன்புடன்

கே.எஸ்.பாலச்சந்திரன்

பின்னூட்டங்களுக்கு நன்றி ஐயா !

திரைப்படம் சுத்தம் செய்யப்பட்டு விரைவிலே திரையிட இச்சிறியோனின் வாழ்த்துக்கள் ஐயா

இலங்கையில்இதுவரை 25 திரைப்படங்களுக்கு மேல் தயாரிக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன் . . . அவற்றில் கிட்டத்தட்ட எல்லாம் அழிந்து விட்டனவா ? ? ?

  • கருத்துக்கள உறவுகள்

வாடைக்காற்று பாடலைக் கனகாலமா தேடிக்கொண்டிருந்தன்..! இணைப்பைத் தந்த பாலச்சந்திரன் அண்ணைக்கு நன்றிகள்..! சிறு வயதில் சவோய் (?) திரையரங்கில் பார்த்திருக்க வேண்டும்..! படக்காட்சிகள் மறந்துவிட்டன. ஆனால் இப்பாடலை மட்டும் என்றும் மறந்ததில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாடைக்காற்று பாடலைக் கனகாலமா தேடிக்கொண்டிருந்தன்..! இணைப்பைத் தந்த பாலச்சந்திரன் அண்ணைக்கு நன்றிகள்..! சிறு வயதில் சவோய் (?) திரையரங்கில் பார்த்திருக்க வேண்டும்..! படக்காட்சிகள் மறந்துவிட்டன. ஆனால் இப்பாடலை மட்டும் என்றும் மறந்ததில்லை.

அன்புக்குரிய டங்குவார், தர்மராஜ் இருவருக்கும்

இலங்கையில் தயாரான தமிழ்ப்படங்களில் வாடைக்காற்று, கோமாளிகள், குத்துவிளக்கு போன்றவை தப்பிபிழைத்து(நல்ல கொப்பி இல்லாவிட்டாலும்) இருக்கின்றன. மற்றவையெல்லாம் அழிந்துவிட்டன. யாரும் அவற்றை பாதுகாக்க அக்கறை எடுக்கவில்லை.

வாடைக்காற்று தயாரிப்பு பற்றிய எனது கட்டுரை இணைத்திருக்கிறேன். பாருங்கள்.

http://ksbalachandran44.blogspot.com/2008/...og-post_09.html

  • கருத்துக்கள உறவுகள்

கானா பிரபா அவர்களால் எழுதப்பட்ட "வாடைகாற்று" விமர்சனம் படங்களுடன் மிக அருமையாய உள்ளது வாசித்து பாருங்கள்.

http://kanapraba.blogspot.com/2006/07/blog-post.html

பாலா அண்ணா உங்கள் பட விமர்சனத்துக்கு நன்றி. பல விடயங்கள் அறிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான புத்தன், தமிழ்வானம்,

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..

புத்தன், நீங்கள் குறிப்பிட்ட வசனம் எந்த தொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்றது?

சரியாக ஞாபகம் வரவில்லை" கிடுகு வேலி"' என்று நினைக்கிறன்......இது பிழையாகவும் இருக்கக்கூடும்....கஸ்டப்பட்டு மருத்துவத்துறைக்கு படிக்கும் ஒரு யாழ்ப்பாணத்து பெண்ணைப்பற்றிய கதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கானா பிரபா அவர்களால் எழுதப்பட்ட "வாடைகாற்று" விமர்சனம் படங்களுடன் மிக அருமையாய உள்ளது வாசித்து பாருங்கள்.

http://kanapraba.blogspot.com/2006/07/blog-post.html

பாலா அண்ணா உங்கள் பட விமர்சனத்துக்கு நன்றி. பல விடயங்கள் அறிந்து கொண்டேன்.

வணக்கம் நுணாவிலான்,

கருத்துக்கு நன்றி.

கானபிரபா என்மீதும் என்னைப்போன்ற நம்நாட்டு கலைஞர்கள், படைப்பாளிகள் மீதெல்லாம் ; அபிமானம் கொண்டவர்.. என்நாவல் பிரசுரமாகியபொழுதுகூட அவரது உதவிகள் எனக்கு கிடைத்தன. அவருக்குநன்றி.

எனது நாவலான "கரையைத் தேடும் கடடுமரங்கள்" என்பதின கரு என்மனதில் வந்ததே வாடைக்காற்று திரைப்படமாகியபொழுது,தான். நான் அந்தப்படத்தில் நடித்து, உதவி இயக்குனராக பணியாற்றியபொழுதுதான். நாவல் எழுதும் எண்ணம் எனக்கு வந்தது. எனவே எனது நாவல் பற்றி தலைப்பில் வாடைக்காற்று பற்றி, டங்குவார், தர்மராஜ், நுணாவிலான் ஆகிய நீங்கள் பேசுவது பொருத்தமுடையதுதான்.

படத்தயாரிப்பின்போது கள்ளங்கமடமற்ற அந்த பேசாலை கிராமமக்களோடு வாழ்ந்து அனுபவித்த அனுபவந்தான் எனது நாவலுக்கான கருவாக மலர்ந்தது. இதை நாவலுக்கான என்னுரையிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

அன்புடன்

கே.எஸ்.பாலச்சந்திரன்

Edited by கே.எஸ்.பாலச்சந்திரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாக ஞாபகம் வரவில்லை" கிடுகு வேலி"' என்று நினைக்கிறன்......இது பிழையாகவும் இருக்கக்கூடும்....கஸ்டப்பட்டு மருத்துவத்துறைக்கு படிக்கும் ஒரு யாழ்ப்பாணத்து பெண்ணைப்பற்றிய கதை

புத்தன்,

கிடுகுவேலி என்ற நாடகத்தை நான் பார்க்கவில்லை. 1995க்குபிறகு நான் அஞ்ஞாதவாசம் செய்யப் புறப்பட்டுவிட்டேன். கனடாவுக்கு வந்ததைச்சொன்னேன். "கிடுகுவேலி" என்றதொரு நாவலை செங்கை ஆழியான எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

யாழ்ப்பாணத்துக்கு அடையாளமாக கிடுகுவேலியை சொல்வதை அறிந்திருக்கிறேன். யாழ்மாவட்டத்தில்; வாழ்ந்த டிங்கிரி - சிவகுரு இரட்டையர்கள் ஒரு நகைச்சுவை சொல்வார்கள்.

வேலி உயர சைக்கிளசீற் உயரும் என்று. எனக்கு மிகவும் பிடித்த ஒரு துணுக்கு.

நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கே. எஸ் பாலச்சந்திரன் அண்ணா வடலி பதிகப்பகத்தினூடக வெளிவந்திருக்கும் கரை தேடும் கட்டுமரங்களுக்கும் உங்கள் கலைத்திறனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் படைப்பை உங்களைச் சந்திக்கும்வேளையில் பெற்றுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கே. எஸ் பாலச்சந்திரன் அண்ணா வடலி பதிகப்பகத்தினூடக வெளிவந்திருக்கும் கரை தேடும் கட்டுமரங்களுக்கும் உங்கள் கலைத்திறனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் படைப்பை உங்களைச் சந்திக்கும்வேளையில் பெற்றுக் கொள்கிறேன்.

அன்பான வல்வைசாகரா

'தமிழ்ஸ்ரார்' என்ற வானொலியில் சென்ற ஆண்டு சிலகாலம் நிகழ்ச்சி செய்தபொழுது உங்கiளோடு பேசியிருப்பேனா? உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

இன்றுதான் எனது புத்தகங்களின் தொகுப்பு கனடாவுக்கு வந்திருக்கிறது. வெகுவிரைவில வெளியீட்டுவிழாவொன்றை கனடாவிலும், தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் நடத்த இருக்கிறேன். உங்களையும் விழாவுக்கு அழைப்பேன். கூடவே யாழ்களத்தின் மற்ற உறவுகளையும் விழாவுக்கு அழைப்பேன். நேரில் சந்தித்து உரையாடுவோம். நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

Edited by கே.எஸ்.பாலச்சந்திரன்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த நாலைந்து வருடங்களுக்குள் பல நிகழ்வுகளில் உங்களைக் கண்ணுற்றுள்ளேன். எப்போதுமே பெரியவர்களுடன் பிரபலமானவர்களுடனும் இருப்பீர்கள். அந்தப் பிரபலங்களுக்குள் தெரியும் மிகவும் எளிமையான உங்களை தூர இருந்தே அடையாளம் கண்டுள்ளேன்.

பொதுவாக வானலைகளில் பேசுவது அரிது. நிச்சயமாக என்னுடைய வானலை அறிமுகங்கள் பேச்சுகள் எல்லாம் 2001 இற்கு முற்பட்ட காலமாக இருக்கும்.

கே. எஸ் பாலசந்திரன் அண்ணா உங்களின் நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து உங்கள் படைப்பை உங்கள் கைகளால் பெற்றுக் கொள்கிறேன். நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே. எஸ் பாலசந்திரன் அண்ணா உங்களின் நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து உங்கள் படைப்பை உங்கள் கைகளால் பெற்றுக் கொள்கிறேன். நன்றி.

நன்றி சாகரா,

அன்புடன் கே.எஸ்.பாலச்சந்திரன்

Edited by கே.எஸ்.பாலச்சந்திரன்

வணக்கம் பாலா அண்ணன்.

சிறு வயதில் உங்கள் நாடகங்களை கேட்டு ரசிதிருக்கிறேன். 70களில் கல்முனையில் (அம்பாறை) உங்களின் கலை நிகழ்ச்சி பார்த்தேன். உங்களுடன் டிங்கிரி சிவகுரு, பொப் பாடகர் ராமச்சந்திரன் அவர்களும் வந்ததாக நினைவு. எனது உறவினர் வீட்டில்தான் தங்கினீர்கள். ஈழத்து படங்களை விரும்பிப்பார்ப்பேன். ஈழத்து படப்பிரதிகளின் அழிவு மிக வேதனையான விடயம். வாடைகாற்று மிகவும் ரசித்த படம். நீண்டகாலமாக வாடைகாற்று பாடலை தேடிக்கொண்டிருந்தேன். மற்றைய ஈழத்து படப்பாடல்களை எங்கு எடுக்கலாம்?

Edited by thappili

தம்பி

நீங்கள் என்னால மறக்கமுடியாத ஒரு பயணத்தை ஞாபகப்படுத்திவிட்டீர்கள். கல்முனைக்கு பாத்திமா மகளிர் கல்லூரியில் {?} நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தோம்.

நான், வரணியூரான் கணேசபிள்ளை, நித்தி கனகரத்தினம், டிங்கிரி கனகரத்தினம்- சிவகுரு, இராசேஸ்வரி சண்முகம் என்று பலர் வந்தோம்..

எங்களை கல்முனை மக்கள் விருந்தோம்பிய பண்பை பல இடங்களில் சொல்லியும் எழுதியுமிருக்கிறேன்.

கனடாவில் வெளியாகும் "தமிழ் ரைம்" என்ற இதழில் சென்ற ஆண்டு எனது கட்டுரையில் இடையிலே இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

"கிழக்குமாகாண மக்கள் விருந்தோம்பலுக்கு உதாரணமானவர்கள். உங்களை தங்கள் வீட்டுக்கு வரும்படி அழைக்கும்போதே தங்கள் அன்பான வார்த்தைகளால் கட்டிப்போடுவார்கள். வளம் கொழித்த பூமி. தங்கள் வயல்களில் விளைந்த நெல்லின், அரிசியில் சோறு சமைத்து, தயிருடன் தந்து உபசரிக்கும் பாங்கே தனி. கடற்கனிகள் (மீன்களைச் சொன்னேன்) சுவைக்கவிரும்பினால் அதற்கும்; குறைவில்லை. அந்த கள்ளங்கபடற்ற மக்கள் ...,. மன்னியுங்கள்.. உணர்ச்சி வசப்பட்டு. கதையை விட்டு விட்டேன்.:

தயவுசெய்து அந்த உறவினர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அறியத்தாருங்கள்

அன்படன்

கே.எஸ்.பாலச்சந்திரன்

Edited by கே.எஸ்.பாலச்சந்திரன்

பதிலிற்கு நன்றி அண்ணன்,

இப்பொழுது நன்றாக நினைவு வருகிறது. ஓவ்வொரு நிகழ்சியும் நினைவில் உள்ளன. கார்மெல் பாத்திமா மகளிர் கல்லூரியில்தான் அந்த கலை நிகழ்சி நடந்தது. நீங்கள் குறிப்பிடவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். மிக இனிமையான நாட்கள்.

பல வருடங்களின் பின்பும் எல்லாவற்றையும் நினைவு வைத்துள்ளீர்கள். வியப்பாக உள்ளது. உங்கள் கட்டுரையின் இணைப்பை எனக்கு அனுப்ப முடியுமா?

உறவினர்களில், பெற்றோர்கள் இறந்து விட்டனர். பிள்ளைகளுக்கும் பெரிய பிள்ளைகள் உள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிலிற்கு நன்றி அண்ணன்,

இப்பொழுது நன்றாக நினைவு வருகிறது. ஓவ்வொரு நிகழ்சியும் நினைவில் உள்ளன. கார்மெல் பாத்திமா மகளிர் கல்லூரியில்தான் அந்த கலை நிகழ்சி நடந்தது. நீங்கள் குறிப்பிடவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். மிக இனிமையான நாட்கள்.

பல வருடங்களின் பின்பும் எல்லாவற்றையும் நினைவு வைத்துள்ளீர்கள். வியப்பாக உள்ளது. உங்கள் கட்டுரையின் இணைப்பை எனக்கு அனுப்ப முடியுமா?

தம்பி,

அதுதான்; மறக்கமுடியாத பயணம் என்று சொன்னேனே.. எப்படி மறக்கமுடியும். நிச்சயமாக அந்த இதழையே அனுப்பி வைக்கிறேன். எனது நாவலும் உங்களைப்போன்ற யாழ்களஅன்பர்களின் வரவேற்பை பெறவேண்டும் என்பதுதான் என் விருப்பமும்.

கே.எஸ்.பாலச்சந்திரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.