Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் {nakkheeran}

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தனிப்பட சாவதைவிட வாழ்வது மேல் என்கிறேன். அது அடிமைத்தன்மையாத்தான் இருக்கிறது.

இங்கை அடிமையா வாழ்வதை விட சாவது மேல் என சங்கெடுத்து ஊதின ஆட்கள்தான் சாவதைப்பற்றி யோசிக்கவேண்டும்.

ஒருவேளை அடிமையாக வாழ்வதை விட சாவது மேல் என்று நீங்கள் வன்னிமக்களை மட்டும் பாத்து சொல்லியிருந்தால்.. Ohhh sorry.. நான் நினைச்சன் உங்களையுமாக்கும் என்று ஐ மீன் எங்களையுமாக்குமென்று..

போராட்ட காலத்தில் வீறு கொண்டிருந்த எம்மினத்தின் அறிவை அடகு வக்கும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டது.

நீங்கள் என்றைக்கும் அடிமைகள் தான். போங்கோ போய் எள்ளெண்ணை எரிச்சு நன்மைகளைப்பெறுங்கோ.

நீங்கள் கும்புடும்போது இனிமேலாவது அறிவைத்தரவேண்டி கும்புடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

211747022_cff9cf5caa.jpg

ஒவ்வொரு சனிக்கிழமையும் , மறக்காம எரிப்பதற்கு எள்ளெண்ணை சுட்டி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தழிழ் சிறி எனக்கும் ஒரு சுட்டி தர்றியளா ஏழரை பிடிக்குது போல இருக்கு

Edited by jhansirany

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவேளை அடிமையாக வாழ்வதை விட சாவது மேல் என்று நீங்கள் வன்னிமக்களை மட்டும் பாத்து சொல்லியிருந்தால்.. ழுhhh ளழசசல.. நான் நினைச்சன் உங்களையுமாக்கும் என்று ஐ மீன் எங்களையுமாக்குமென்று

காவடி நீங்க ஏன் வன்னி மக்களை இதற்குள் இழுக்கிறியள்

நான் இந்த வசனத்தை எழுதியது ஏன் என்றால்{ அடிமையாக வாழ்வதை விட சாவது மேல் }இங்கு சில பேர் சிங்களவர்களுக்கு சார்பா எழுதினம் அதனால் தான்

சுறாவளி

சிங்களவனுக்கு காக்கா பிடிப்பதை விட சனீஸ்வரனுக்கு எண்ணை எரிக்கலாம்

போராட்ட காலத்தில் வீறு கொண்டிருந்த எம்மினத்தின் அறிவை அடகு வக்கும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டது.

நீங்கள் என்றைக்கும் அடிமைகள் தான். போங்கோ போய் எள்ளெண்ணை எரிச்சு நன்மைகளைப்பெறுங்கோ.

நீங்கள் கும்புடும்போது இனிமேலாவது அறிவைத்தரவேண்டி கும்புடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

தழிழ் சிறி எனக்கும் ஒரு சுட்டி தர்றியளா ஏழரை பிடிக்குது போல இருக்கு

இந்தாங்கோ ஜான்சிராணி உங்களுக்கு ஒரு சுட்டி விளக்கு . இதை நவக்கிரகத்துக்கு கொழுத்தினால் .......ஏழரை ஒண்டும் செய்யாது.

oil_lamp_open_lit.jpg

Shani%20dev.jpgNAVAGRAGA%20MURTHI.jpg275px-Shani.jpg

stockphotopro_47320TCK_butter_lamp_burni.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சைஒருத்தர் ஆட்டாமா வித்து முடிஞ்சுது! இப்ப எண்ணைச்சட்டி விக்க வெளிக்கிட்டுட்டார் இனி அடுத்தது என்ன பனங்கொட்டையே?

இண்டைக்குதான்...... என்ன திரி நீளமாய் இருக்கே எண்டுவாசிக்க வெளிக்கிட்டு.. இப்போது பீதியில் இருக்கிறேன்........ :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சைஒருத்தர் ஆட்டாமா வித்து முடிஞ்சுது! இப்ப எண்ணைச்சட்டி விக்க வெளிக்கிட்டுட்டார் இனி அடுத்தது என்ன பனங்கொட்டையே?

அண்ணோய் ...... பனங்கொட்டை பெரிய தட்டுப்பாடாய் கிடக்கே .........

இண்டைக்குதான்...... என்ன திரி நீளமாய் இருக்கே எண்டுவாசிக்க வெளிக்கிட்டு.. இப்போது பீதியில் இருக்கிறேன்........ :lol:

இடுப்பிலை ஒரு தாயத்து கட்டினால் பயம் தெளிஞ்சு போகும். அதுகும் நரிக்கொம்பு வைத்துக்கட்டினால் ஒரு காத்து , கருப்பும் அண்டாது.

oil_lamp_open_lit.jpg
  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் சொன்னது போல சோதிடங்களை நம்புபவர்கள் செம்மறிக்கூட்டங்கள் தான்.

சரி ஒரு ஊதராணத்துக்குப் பார்த்தால், டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது கொல்லப்பட்டவர்கள் எல்லோரும் ஒரே பலனா?. 27 நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களில் 27 நட்சத்திரங்களை உடையவர்களும், 12 இராசிக்குட்பட்டவர்களும் அடங்குவார்கள். யூலைக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவருக்கும் ஒரே பலனா?.

சனி வழிபாடு 500 வருடங்களுக்கு முன்பு இருக்கவில்லை. பிறகு தான் வந்தது. புதுப்புதுக்கடவுள்களை யாராவது உருவாக்கினாலும் உடனே எங்கட சனம் கும்பிடும். சனி பிடித்ததினால் சிவனை வழிபட்டு சனிப்பிடியில் இருந்து தப்பியதாகவே 500 வருடங்களுக்கு முன்பு வந்த புராணக் கதைகளில் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் இருந்து தான் பல மூட நம்பிக்கைகள் எங்கட சனத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. கிளிச் சாத்திரம், எலிச் சாத்திரம், பல்லி சொல்லும் பலன் என்று புதுபுது சாத்திரங்கள் வருகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனி பிடித்ததினால் சிவனை வழிபட்டு சனிப்பிடியில் இருந்து தப்பியதாகவே 500 வருடங்களுக்கு முன்பு வந்த புராணக் கதைகளில் சொல்லப்படுகிறது.

கந்தப்பு சரியா சொன்னியள்

Edited by jhansirany

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு சரியா சொன்னியள்

ஜான்சிராணி , நீங்கள் என்ன சேம் சைட் (G)கோல் போடுறீங்கள் ..... !!!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தழிழ் சிறி! கந்தப்பு சனி இருக்கிறது என்று ஒப்பு கொண்டு விட்டார் .ஏனென்றால் அவருனைய ஐந்து பரம்பரை மூதாதையர்கள் வாழ்ந்து இருப்பார்கள்.

சனி பிடித்ததினால் சிவனை வழிபட்டு சனிப்பிடியில் இருந்து தப்பியதாகவே 500 வருடங்களுக்கு முன்பு வந்த புராணக் கதைகளில் சொல்லப்படுகிறது

Edited by jhansirany

  • கருத்துக்கள உறவுகள்

தழிழ் சிறி! கந்தப்பு சனி இருக்கிறது என்று ஒப்பு கொண்டு விட்டார் .ஏனென்றால் அவருனைய ஐந்து பரம்பரை மூதாதையர்கள் வாழ்ந்து இருப்பார்கள்.

நான் தான் விளக்கமாக எழுதவில்லை. நான் எழுதியது 2 கேள்விகளுக்கு

1) சனிப் பெயர்ச்சிப்பலனை நம்புபவர்களுக்கு

2) சனிஸ்வரனைக் கும்பிடுபவர்களுக்கு

1) சனிப் பெயர்ச்சிப்பலனை நம்புபவர்களுக்கு - முள்ளிவாய்க்கால், சுனாமி ,கறுப்பு யூலை நிகழ்வுகளில் ,சனிபெயர்ச்சி, வியாழ மாற்றப் பலன்களின் படி ஒரு குறிப்பிட்ட இராசிக்காரர்கள் தான் கொல்லப்பட்டிருக்கவேண்டும். ஆனால் கொல்லப்பட்டவர்களில் எல்லா இராசிக்காரர்களும் அடங்குகிறார்கள். ஏன்?

2) சனிஸ்வரனைக் கும்பிடுபவர்களுக்கு - 500 வருடங்களுக்கு முன்பு சனிஸ்வரனைக் கும்பிடுகிற பழக்கங்கள் இல்லை. அக்காலத்தில் சனிஸ்வரன் பிடித்ததினால் அதை நீக்க சிவனை வழிபட்டார்கள் என்று புராணக்கதைகள் சொல்கின்றன. இதுவும் அக்காலங்களில் கோவில் நடாத்துபவர்கள் வருமானத்துக்காக சொல்லப்பட்ட கதைகளில் ஒன்று. ஈழத்தில் 30 வருடங்களுக்கு முன்பு ஐயப்பன். அனுமார் வழிபாடுகள் இருக்கவில்லை. கோவில்களும் இல்லை. இப்பொழுது பல கோவில்கள் வந்து விட்டது. அதேபோல கடந்த சில வருடங்களில் தான் புலம் பெயர்ந்த நாடுகளில் இக்கடவுள்களுக்கு கோவில்கள் வந்து விட்டன. கருப்பணாசுவாமி என்ற கடவுளை எத்தனை பேருக்குத் தெரியும்?. இப்பொழுது சிட்னியில் கட்டப்பட்டுவரும் ஐயப்பன் கோவிலில் கருப்பாணசுவாமிக்கு விக்கிரம் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் சில வருடங்களில் புலம் பெயர்ந்த நாடுகளில் கருப்பாணசுவாமிக்கு தனிக் கோவில்கள் கட்டப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதாவது புதிது புதிதாக வழிபாடுகள் ஈழத்தமிழர்களினால் பின்பற்றப்படுகின்றன.

கனடாவில் நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பில் 50000 மக்கள் கலந்து கொண்டதாக கனடாவில் இருந்து வெளிவரும் the Star பத்திரிகை தெரிவித்திருக்கிறது

http://www.thestar.com/article/692189

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1

) சனிப் பெயர்ச்சிப்பலனை நம்புபவர்களுக்கு - முள்ளிவாய்க்கால்இ சுனாமி இகறுப்பு யூலை நிகழ்வுகளில் இசனிபெயர்ச்சிஇ வியாழ மாற்றப் பலன்களின் படி ஒரு குறிப்பிட்ட இராசிக்காரர்கள் தான் கொல்லப்பட்டிருக்கவேண்டும். ஆனால் கொல்லப்பட்டவர்களில் எல்லா இராசிக்காரர்களும் அடங்குகிறார்கள். ஏன்?
கந்தப்பு இதில் அகப்பட்ட எல்லோரும் இறக்கவில்லையே ஏன்???????????????????
  • கருத்துக்கள உறவுகள்

1கந்தப்பு இதில் அகப்பட்ட எல்லோரும் இறக்கவில்லையே ஏன்???????????????????

இறக்காதவர்கள் குறிப்பிட்ட இராசிகளை மட்டும் கொண்டவர்களாகவா இருக்கிறார்கள்?. எல்லா இராசியைச் சேர்ந்தவர்களும் உயிர்தப்பி இருக்கிறார்களே?. அதுசரி வன்னி அவலம் நடக்கும் போது யாழ்ப்பாணம், கிழக்கு தமிழீழம், தமிழ் நாட்டுத் தமிழர்கள், புலம் பெயர் வாழ் தமிழர்களுக்கு உயிராபத்து நடக்கவில்லை ஏன்?.

வன்னி அவலத்தின் போது வன்னியில் இருந்த எல்லா இராசிக்கு உட்பட்டவர்களும் உயிரிழந்தோ, காயப்பட்டோ அல்லது உறவுகளை இழந்தோ , இராணுவத்தின் சித்திரவாதையினலோ பாதிக்கப்பட்டார்கள். அப்படியானால் இவர்களுக்கு மட்டும் தனியாக சனிப்பெயர்ச்சிப் பலன் ஏற்பட்டதா?. வன்னியில் இருந்ததினால் தான் இவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.

பிறந்தநாள் : 26-11-1954.

பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.

ஜென்ம லக்னம் : கும்பம்.

ஜென்ம ராசி: விருச்சிகம்.

ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.

திதி: பிரதமை திதி.

ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.

பாதசார விவரம்

அனுஷம் 3-ல் சூரியன்.

கேட்டை 1-ல் சந்திரன்.

அவிட்டம் 3-ல் செவ்வாய்.

விசாகம் 2-ல் புதன்.

பூசம் 2-ல் குரு (வக்ரம்).

விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).

விசாகம் 1-ல் சனி.

பூராடம் 1-ல் ராகு.

திருவாதிரை 3-ல் கேது.

மூலம் 3-ல் மாந்தி.

அவிட்டம் 3-ல் லக்னம்.

ஜனன கால மகாதசை - புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.

இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.

தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.

இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.

சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.

கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.

சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.

சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.

07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.

சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-

08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.

17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!

கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.

பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற - மிகவும் விசேஷமான ஜாதகம்!

பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் "தனித் தமிழீழம்' என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.

பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.

07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்.

ஜயோ சாமிங்களா உங்கள் எல்லாருக்கும் ஏன் இந்தளவு கொலை வெறி?

இங்கை இதுக்கு கருத்து எழுதிய ஆக்களை நினைக்க பரிதாபமாக இருக்கிறது...

இந்த சாத்திர கணிப்பு என்று முள்ளிவாய்க்கால் இறுதி சமர் முடிந்த பின் மேலுள்ள விடயத்தை யாழ் கள உறவு ரகசியா சுகி என்பவரது hi5 தளத்தில்*(ஈழத்துக்காதலுடன் ரகசியா சுகி)

பார்த்தேன் (இணைப்பை இணைக்கலாம் என்று பார்த்தேன் virus scan பண்ணுது page open ஆகவில்லை நீங்கள் பாருங்கள்).

இது எப்பவோ வந்திட்டுது. சனி மாற்றம்,வியாழமாற்றம் என்று அவனவன் ஏமாத்திறான் நாங்களும் நம்புவம்.

தலைவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரினது ஆசை அதுக்காக சாத்திர காரன் சொல்லிட்டான் என்று சந்தோசப்படுவது ரொம்ப ஓவர்ப்பா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.