Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்வாணமாக கொலையுண்டவர்களின் பின்பக்கம் : தீபச்செல்வன்

Featured Replies

நிர்வாணமாக கொலையுண்டவர்களின் பின்பக்கம்

தேங்கிய நீரில் துடித்து மிதந்து கொண்டிருக்கின்றன

பிடரிகளும் கண்களும் கைகளும்.

நிருவாணம் எல்லோரது

உடைகளையும் களைந்து விடுகிறது.

மிகவும் அஞ்ச வைத்தபடி

கோணல் துவக்கு தலையின் பின்பக்கம்

துளையிடுகிறது.

நிலம் பரிதாபமான குருதியால் நனைகிறது.

யாருடைய முகமும் தெரியவில்லை.

எல்லோரிடமும் எங்கும் குருதி கொட்டிக்கொண்டிருக்கிறது.

பேரூந்திலும்

நகரத்தின் உள் தெருக்களிலும்

வீட்டிலும்

தொலைக்காட்சிப்பெட்டியிலிரு

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வனும் இக்களத்தில் இணைந்துள்ளார். தீபச்செல்வனை வரவேற்கிறோம் வாருங்கள்.

தீபச்செல்வனின் கவிதைகள் ஒவ்வொன்றும் போர்க்காலப் பதிவுகளாகவும் சம்பவங்களை அப்படியே படைத்துவிடும் திறனும் மிக்கவை. தொடர்ந்து உங்கள் படைப்புகளை பதிவிடுங்கள் தீபச்செல்வன்.

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வனின் இணையதள முகவரி:

http://deebam.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பின் நிழலி

எழுதுகிற கவிதைகளை தொடர்ந்து இங்கே பதிந்து வருகிறீர்கள். மிக்க நன்றி.

மனம் கனத்துப்போயிருக்கிறது. எல்லாம் துக்கத்தை மேலும் மேலும் தருவதாகவே வெளிப்படுகின்றன., நடக்கின்றன. எனது தலைக்குப் பின்னால் இன்னும் சுடப்படுவதைப்போலிருக்கிறது.

யாழ் இணைய வாசகர் மற்றும் நண்பர்களுடன் உரையாடத் தொடங்குவதில் ஆறுதல் கொள்ளுகிறேன்.

தீபச்செல்வன்

தீபச்செல்வன்,

நம்பிக்கையோடிருங்கள் என்பதைத்தான் இங்கு எங்களால் உங்களுக்குச் சொல்லக்கூடிய ஆறுதல். உங்கள் பாதுகாப்பிலும் கவனம் எடுங்கள். துப்பாக்கிகள் எங்கே உயிர்களென அலையும் இடத்தில் வாழ்கிறீர்கள்.

  • தொடங்கியவர்

அன்பின் நிழலி

எழுதுகிற கவிதைகளை தொடர்ந்து இங்கே பதிந்து வருகிறீர்கள். மிக்க நன்றி.

மனம் கனத்துப்போயிருக்கிறது. எல்லாம் துக்கத்தை மேலும் மேலும் தருவதாகவே வெளிப்படுகின்றன., நடக்கின்றன. எனது தலைக்குப் பின்னால் இன்னும் சுடப்படுவதைப்போலிருக்கிறது.

யாழ் இணைய வாசகர் மற்றும் நண்பர்களுடன் உரையாடத் தொடங்குவதில் ஆறுதல் கொள்ளுகிறேன்.

தீபச்செல்வன்

உங்களது கவிதைகளை முதன் முதலில் கிருபன் மூலம் யாழில் வாசிக்கத் தொடங்கி இருந்தேன். அன்றிலிருந்து உங்களின் கவிதைகளை வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. புலம்பெயர் சூழலில் நாமிருந்து இன்று எழுதும் கவிதைகள் ஏதோ ஒரு 'இரவல்' உணர்வை தரும் போது, அந்த சூழலுக்குள்ளேயே வாழ்ந்து வரும் உங்களின் கவிதைகள் யதார்த்த பூர்வமான உயிர்ப்பு கொண்ட உணர்வுகளைத் தருகின்றது. வீடியோவில் சுட்டு வீழ்த்தப்படும் இளைஞர்களை பார்த்து எமக்கு வரும் உணர்வுகளை விட, அந்த வீழ்த்தப் பட்ட மக்களின் கண்ணீர் வழியும் பிரதேசத்தில் இன்றும் வாழும் உங்களின் வார்த்தைகள் எமக்கு தரும் அதிர்சி மிக வலிமையான உணர்வுப் பகிர்தலைக் கொடுக்கின்றது.

பிள்ளைகளை காணாத தாய்மார்கள்

எல்லோரும் தங்கள் பிள்ளைகளென

கொலையுண்டவர்களின்

பின் பக்கங்களைக் கண்டு மாரதடித்தனர்.

குருதியில் அந்த தலைகள்

விழுந்து கொண்டிருக்க

இல்லாத பிள்ளைகளின் மரணம் பெருகுகிறது.

இந்த காட்சிப் படுத்தலும், அதில் உறைந்து போயிருக்கும் காட்சி படிமங்களும் நெஞ்சில் ஏற்படுத்தும் அதிர்வலைகள் மிக வலிதாக இருக்கின்றன. ஓடிப் போய் அந்த அழுகின்ற அம்மாக்களை பார்த்து கட்டிப் பிடித்து கதற வேண்டும் போல இருக்கின்றது

குருதி நிலத்தை நனைக்கும்படி

கொட்டிக்கொண்டிருந்தது.

முகங்களை பார்க்க முடியாதபடியிருந்தன

என்னுடைய பிள்ளையைப்போலவும்

உன்னைய பிள்ளையைப்போலவும்

இவர்களுடைய பிள்ளையைப்போலவும்

அவர்கள் இருந்தனர்

தாய்மார்களின் முகங்களில் விழுந்துகொண்டிருக்கிறது

அந்த குருதி நனைந்த மண்துண்டுகள்

எல்லைகளையும், தேசங்களையும் நீக்கி விட்டால், வல்லாதிக்கத்தின் கரங்களால் காணாமல் போய்விட்ட தம் பிள்ளைகளை உலகம் முழுதும் தேடிக் கொண்டிருக்கும் அம்மாமார்களின் கண்ணீர் கதைகளும் இப்படித்தானிருக்கும்...

  • 1 month later...
  • தொடங்கியவர்

இந்த வார விகடனில் வந்த ஒரு சிறு குறிப்பு இந்தக் கவிதையை தொட்டுச் சென்றது

''உறையவைத்த கவிதை வரிகள்?''

''இலங்கை ராணுவத்தால் நிர்வாணமாக்கப் பட்டு, தமிழர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் பட்ட வீடியோ வெளியானபோது, இலங்கையைச் சேர்ந்த தீபச் செல்வன் என்ற கவிஞர் எழுதிய வரிகள்

'நிர்வாணம் எல்லோரது

உடைகளையும் களைந்துவிடுகிறது

மிகவும் அஞ்சவைத்தபடி கோணல் துவக்கு

தலையின் பின்பக்கம் துளையிடுகிறது

நிலம் பரிதாபமான குருதியால் நனைகிறது

யாருடைய முகமும் தெரியவில்லை

எல்லோரிடமும் எங்கும் குருதி

கொட்டிக்கொண்டிருக்கிறது

பேருந்திலும் நகரத்தின் உள் தெருக்களிலும்

வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து

குருதி பரவிச் செல்கிறது

பிள்ளைகளைத் தேடிக்கொண்டிருந்த

தாய்மார்கள்

அலைவரிசைகளைத்

தேடிக்கொண்டிருக்கிறார்கள்

பிள்ளைகளைக் காணாத தாய்மார்கள்

எல்லோரும் தங்கள் பிள்ளைகளென

கொலையுண்டவர்களின்

பின் பக்கங்களைக் கண்டு

மாரடித்து அழுதனர்

குருதியில் அந்தத் தலைகள்

விழுந்துகொண்டிருக்க

இல்லாத பிள்ளைகளின்

மரணம் பெருகுகிறது

குருதி வடிகிற

பிடரிகளால் நிறைந்திருக்கின்றன

கொலையாளிகளது சீருடைகள்

அவர்கள் மனிதர்கள் என்பதைத் தவிர

எதுவும் தெரியாதிருக்க

எல்லோரது தலையின் பின்னாலும் குருதி

ஊற்றியபடியிருக்கிறது

அந்த வெளியில் கனவு சிதறி

ஒழுகிய குருதி

உறைந்திருந்தது!'''

-ம.புவனா, ஊத்தங்கரை

உலகப் பந்தின் ஏதோ ஒரு மூலையில் இருப்பவரை தீபத்தின் கவிதை வரி எம்முடன் இணைக்கின்றது

எனக்கு எப்போதுமே கத்திக்குழறி கண்ணீர் விடுபவர்கள் .கண்டபடி கவிதை எழுதுபவர்களை கண்டாலே பிடிக்காது

ஒப்பாரி தான் அவர்களது முதலீடு. ஏதாவது செய்வோம் வாருந்கோ என்றால் துண்டைக்காணோம் துணியைக் காணோமென்று

ஓடி விடுவார்கர்கள்

  • தொடங்கியவர்

ஒப்பாரி தான் அவர்களது முதலீடு. ஏதாவது செய்வோம் வாருந்கோ என்றால் துண்டைக்காணோம் துணியைக் காணோமென்று

ஓடி விடுவார்கர்கள்

உண்மைதான்

நீங்கள் கனடாவுக்கு ஓடி வந்தபின் ஈழத்திற்காக என்னசெய்தீர்கள் என்று சொன்னால் நல்லது (நான் ஒன்றும் புடுங்கவில்லை...நேர்மையாக எழுதும் கவிஞனையும் திட்டவில்லை)

தீபச் செல்வன் யாழ்ப்பாணத்தில் இருந்து உயிரை உருக்கும் கவிதை தருகின்றார். நீங்கள் கனடாவில் இருந்து கொண்டு விசைப்பலகில் வீரம் காட்டுகின்றீர்கள்... அது தான் நீங்கள் சொல்லும் இந்த ஒப்பாரிக் கவிஞனுக்கும் உங்களுக்குமான வித்தியாசம்

எனக்கு எப்போதுமே கத்திக்குழறி கண்ணீர் விடுபவர்கள் .கண்டபடி கவிதை எழுதுபவர்களை கண்டாலே பிடிக்காது

மற்றது.... உங்களுக்கு யாரை பிடிக்காது யாரை பிடிக்கும் என்ற விடயம் பற்றி நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? நீங்கள் ஒருவேளை எம் சமூகத்திற்காக பாடுபட்டவர் அல்லது போராளி என்றால் நாம் அக்கறை பட தேவை இருக்கும்.. எம்மைப் போன்று ஓடி வந்து விண்ணாளம் கதைக்கும் உங்களின் விருப்பு வெறுப்பு பற்றி அறிவதன் தேவை எமக்கேன் ?

Edited by நிழலி

Nice poem theepachelvan. keep on writing.

Nilali u dont have any right to criticize arjun's point of view.

That is his opinion. he pointed out that ur OPPARI does not make any change for our poeple in the camps.

I appreciate theepachelvan's poem. But Nilali i dont understand why always u r making big OPPARI in yarl?

do u think only u r the one affected by this recent issues of our people. every one has their own views.

Do u think u r an intellectual after u read many tamil novels in kurunagal library during ur childhood and others in the yarl are dummies?

Do u think u can make sun to rise in the west by ur knowledge that u gained from ur reading of tamil novels from kurunagal library?

Medico kamalini can be ur relative. u can not be the official reperesentative for LTTE only because of that.

No body knows what happened to thalaivar and his commanders in this battle. only time will answer for this question.

If thalaivar and his cadres are really destroyed and killed we have to go to sl and wash sinhalese butt forever.

Nilali do u honestly think that If LTTE is completely destroyed other people in abroad can make any change in our freedom struggle?

Nilali u r criticising others in yarl like u r an authority. U wrote ur comments in a rude way.

first of all u hv to learn how to argue with ideas in a polite way. u criticise others like uncivilized person.

if you have any split personality disorder please consult a psychiatrist/psychologist. They will help you to solve ur own problem.

Please dont reflect ur mental depression to others and dont spoil others good mood. I read all ur comments and feel that u r emotionaly unstable.

Nilali honestly what did u do for our freedom fight during ur days in Jaffna? then u can criticise arjun.

dont think others are dummies and joking in yarl and only u r the messiah for our people.

Edited by seeman

அற்புதமான, மெய் சிலிர்க்க வைக்கும், உண்மைகளை அப்படியே நெற்றிப் பொட்டில் அறையும், தீர்க்க தரிசனம் மிக்க, வரிகள்

எனக்கு எப்போதுமே கத்திக்குழறி கண்ணீர் விடுபவர்கள் .கண்டபடி கவிதை எழுதுபவர்களை கண்டாலே பிடிக்காது

ஒப்பாரி தான் அவர்களது முதலீடு. ஏதாவது செய்வோம் வாருந்கோ என்றால் துண்டைக்காணோம் துணியைக் காணோமென்று

ஓடி விடுவார்கர்கள்

அர்ஜ{ன், உங்களைப் போலத்தான் நானும் இருந்தேன். ஆனால், ஒப்பாரியின் மகிமையை நான் நாலைந்து மாதங்களுக்கு முன்னர்தான் அறிந்து கொண்டேன். ஊரில், சின்னவயதில் ஒப்பாரி வைத்து அழுகிறவர்களைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருந்தது. புலம்பெயர்ந்தபின்பு, நடிப்பாகத் தெரிந்தது. ஆனால், வலிவேமல் வலி வந்தபின்புதான் ஒப்பாரியின் மகிமை புரிந்தது. இதனை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. இந்த வலியும் வேதனையும் எத்தனை ஜென்மத்திற்கும் மறக்காது.

அற்புதமான, மெய் சிலிர்க்க வைக்கும், உண்மைகளை அப்படியே நெற்றிப் பொட்டில் அறையும், தீர்க்க தரிசனம் மிக்க, வரிகள்

புரியவில்லை.

எனக்கு கவிதை நன்கு பிடிக்கும். ஆனால் ஒரு விடயத்தை பட்டென்று சொல்லாமல் இல்லாத பீடிகை போடும் கவிதைகளை பிடிக்காது

பல கவியர்கள் மிகைப்படுத்தலேயே கவிதை என்று நினைக்கின்றார்கள். எமது பிரச்சனையில் கூட பொய்யான ,தேவை இல்லாத,

உண்மைக்கு புறம்பான விடயங்களைச் சொல்லி உலகத்தை திசை திருப்பலாம் என்று புலம் பெயர் தமிழர்கள் நினைத்தார்கள்.

திரும்ப திரும்ப எத்தனையொ தரம் சொன்னோம் முழுத் தமிழனையும் மீளாப்பொறிக்குள் தள்ளிவிடப்போகிறீர்கள் என்று. ஒரு குறிப்பிட்ட தமிழ் சனத்தை கவருவதற்காக இல்லாததை சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றார்களே ஒழிய, இவர்கள் உண்மை சொல்கின்றார்கள் இல்லை என்றதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கின்றத

  • தொடங்கியவர்

நிழலிக்கு வருகின்றேன் . நான் யார் ?. போராட்டத்திற்கு என்ன செய்தீர்கள்.அப்படி ஏதும் செய்திருந்தால் தான் இதில் வந்து கனக்க கதைக்கலாம் அல்லது எங்களை மாதிரி வந்தமா சமா வைத்தோமா கம்மென்று படுத்தோமா என்று என்று உங்களை ஏன் தாழ்த்திக்கொள்கின்றீர்கள். செய்ய வேண்டியது நிறைய இருக்கு. 30 வருட ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்து விட்டது, இனி எடுத்தோமா கவிழ்த்தோமா என்று எதையும் செய்யாது நின்று நிதானித்து ஒரு சரியானமுடிவுக்கு வர வேண்டியது முழு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமை. இணையத்தால் உலகம் முழுவதும் இணைந்து நாட்டில் உள்ள மக்கள் என்ன கேட்கின்றார்களோ

அவர்கள் பின் நிற்போம் .புலம் பெயர் கோமாளிகள் பின் அல்ல.

அர்ஜுன்,

தீபச்செல்வனின் கவிதைக்கான கருத்தினை வைக்க வேண்டிய இடத்தில் அதனை வைக்காது, அவரின் ஆளுமையை பற்றிய கருத்தினை வைத்திருந்தீர்கள். அவர் எழுதுவது ஒப்பாரி என்றும் ஏதாவது செய்வோம் என்றால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடும் ஆட்களைப் போன்றவர் என்றும் கருத்துப்பட எழுதியிருந்தீர்கள். அவரின் கவிதைக்கான பொருளையோ அல்லது கவிதை மொழியையோ அல்லது அக் கவிதை பேசும் அரசியலையோ பற்றி எதுவும் சொல்லாமல் அவரின் தனிமனித ஆளுமை (Personality) பற்றி எழுதியிருந்தீர்கள். ஒரு கவிஞர் அல்லது கவிதை எழுதுபவர் தன் உணர்வுகளும் அனுபவங்களும் சார்ந்தே எழுதுவர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு எழுதுவது என்பதே உயிரச்சம் நிறைந்த சூழலில், தீபச்செல்வன் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளுடன் கவிதை எழுதுகின்றார். அவரின் மொழி அங்குள்ள மக்களின் துயர வாழ்வின் மொழி. பிள்ளைகளைப் பறி கொடுத்த தாய்மார்களின் கண்ணிர் மொழி. காணாமல் போக்கடிக்கப்பட்ட மக்களின் மொழி. அந்த மொழி தான் உங்களுக்கு ஒப்பாரி ஆகிவிட்டது. கனடாவில் இருந்து கொண்டு அந்த மக்களின்,தாய்மார்களின் கண்ணீரை வெறும் ஒப்பாரி என்று சொல்லும் அளவிற்கு மரத்துப்போன புலம் பெயர் சமூகமாக நாம் வந்துவிட்டோமா என அச்சமாக இருக்கின்றது

எனக்கான உங்களின் பதிலிலும் சரி, தீபச்செல்வனின் கவிதைக்கான பதிலிலும் சரி கவிதையுடன் எந்த தொடர்பும் இல்லாத பொதுப்படையான அரசியலைத்தான் சொல்கின்றீர்கள். ஒருவரின் கருத்தினை /கவிதையினை வாசித்து அதற்கு பதில் எழுதாமல், அதனை எழுதியவர் பற்றி, தனிநபர் விமர்சனமாகவே உங்கள் கருத்து இருக்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.