Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பார்வைகள் ....பலவிதம்.(திருத்திய பதிப்பு )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிரா எனும் நிரஞ்சலா அழுது வீங்கிய கண்களுடன். காணப் பட்டாள் . என்னம்மா நடந்தது என்று மாமியார் வினவ விம்மலும் விக்க்லுகுமிடையில் இதோ சொல்கிறாள் கேளுங்கள். கவலையிலாமல் துள்ளி திரிந்த பள்ளிப்பருவம் ,நிராவையும் சுகந்தனையும் காதலர்கள் ஆக்கியது . இளமை வேகம் , பயமறியாத பருவம். ஒருநாள் நிரா வீட்டை விட்டு சுகந்தனை நம்பி வந்து விடாள். அப்போது சுகந்தன் உயர்கல்வி வகுப்பு படித்து கொண்டிருந்தான் . பகுதி நேரமாக் ஒரு கடைத்தொகுதியில் சிறு வேலையும் செய்து கொண்டு இருந்தான்.அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்களின் உதவியுடன் பத்தொன்பது வயது நிராவும், இருபத்தியொரு வயது சுகந்தனும் பதிவு திருமணம் செய்து கனடா நாடில் ஒரு சிறு நிலக் கீழ் குடியிருப்பில் வாழ்க்கையை தொடங்கினர். சுகந்தன் இரு சகோதரிகளுக்கு அண்ணன். அவனது தாய் தந்தையரும் பெண் வீடாருக்கு பயந்து ஏற்றுக்கொள் வில்லை. கடைசியில் சுகந்தனின் தந்தையின் அனுமத்யுடன் , சுகந்தனின் தாய் அவர்களது வீடில் ஒரு அறையில் வசிக்க அனுமதித்தாள். மீளவும் வாழ்கை தொடங்கியது இருவரும் படிப்பை நிறுத்தி விட்டனர் .

. ஒரு நாள் நிரா அவனது தங்கையுடன் , ஒரு கலை விழா பார்க்க ஆசை பட்டாள் சுகந்தன் தனக்கு வேலை என்றும் தங்கையுடன்

னுப்பி வைத்தான். அங்கு சுகந்தனின் நண்பனொருவனை கண்டனர். அவன் இன்னும் சிலருடன் காண ப்பட்டான் அவன் வந்து

இவர்களுடன் உரையாடினான். அதில் ஒருவன் "குட்டி யாரடா .......வளைச்சு பார்க்கலாமா ? என்று கேட்க சுகந்தனின் நண்பன் ,

அவள் தன் நண்பனின் மனைவி என்று கூறினான்.சில் வேடிக்கை நிகழ்வுகளை பார்த்து விட்டு அத்தோடு விழ நிறைவுற்று அவர்கள் வீடு வந்தார்கள்.

சுகந்த்னின் நண்பன் நடந்தவற்ரை .சுகந்தனை கண்ட போது கூறி விடான். தொடங்கியது பிரளயம் ...நிராவுடன் வாக்கு வாதப பட்டான் , அன்று சற்று மதுவும் அருந்தி இருந்தான் . காரணம் அவள் கையிலாத சட்டை யும் ஜீன்சும் அணிந்து இருந்தாள். அந்த விழாவுக்கு. நீ ஏன் அவ்வாறு போனாய் ..

.......என்று அவன் கேட்க நீ என்னை பார்த்த அதே ஆடைகள் தான். நான் கவ ர்ச்சியாக எதுவும் புதிதாக வாங்கஇல்லை என்றும் வாதிட்டாள்.

சுகந்தன் கோவத்தின் உச்சத்தில் அவளை அறைந்து விடான். அதனால் தான் அவள் அழுது கொண்டு இருந்தாள்.

சுகந்தன் சற்று வெளியே போயிருந்தவன் . கையில் ஒரு சிறு ,பொதியுடன் வீடினுள் நுழைந்தான் . இரவு சாப் பாட்டுக்காக் தாயார் அழைத்தார் . நிரா எதுவுமே பேசவில்லை மேசையில் சாப்பாடு பகிரப்பட்டு அனைவரும் உண்டபின்னர் , சமையலறையில் மாமிக்கு உதவியாக , பாத்திரங்களை கழுவுவதில் நிரா ஈடுபடிருந்தாள். .சகோதரிகள் தமது படிக்கும் அறைக்கு சென்று விட்டனர். சுகந்தனின் தந்தை அன்றைய தினசரியில் ஈடுபடிருந்தார் . சுகந்தன் நிராவை தன் அறைக்கு அழைத்தான் , தான் சற்று அவசரப்பட்டு விட்டதாக மன்னிப்பு கேடான். நிரா நான் உனக்கு மனைவி எனும் உயர் தானத்தை தந்திருக்கிறேன். நீ இன்னும் சிறு பிள்ளையல்ல ,சூழலுக்கு ஏற்ற படி உடுத்தி போ , கையில் அவளுகாக் வாங்கிய சுடிதாரை கொடுத்தான்.

படுக்கைக்கு நேரமாகவே எல்லோரும் படுக்கைக்கு சென்று விட்டனர் .மறு நாட காலை சுகந்தன் புறப்படுமுன்பே முன்பே அவனு டைய மதிய சாப்பாட்டுக்கான பொதியுடன் சந்தோஷமாக அனுப்பி வைத்தாள் நேற்றிய சம்பவத்தை மறந்து .

பக்குவமடையாத மனம் , இளம் வயது , சகிப்பு தன்மையற்ற குணம் இந்த இளம் தம்பதிகளை வேதனையில் ஆழ்த்தி விட்டது.

அறியாத வயது புரியாத உலகம்

வாழ்க்கை இலகுவானதல்ல. எதிர் நீச்சல் போட்டு வாழவேண்டும். அது ஆயிரங்காலத்து பயிர். ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி

நின்று நிலைத்து நீண்ட காலம் வாழவேண்டும்.

பள்ளி வயதிலே பருவ வெறியிலே துள்ளி வருவது துன்பம் தருவது காதல். .

மனமும் உடலும் பக்குவ பட்டு திருமணத்தில் முடிய வேண்டும் காதல்.காலமெல்லாம் காதல் வாழ்க .

கதை உண்மை .......பெயர்கள் கற்பனை. நண்பி சொல்ல கேட்டு இனியும் இப்படி நடக்க கூடாது எனும் நல் நோக்கத்துக்காக கதையாக

உங்களுடன் பகிர்ந்தவர் நிலாமதி

Edited by நிலாமதி

நிலாமதி அக்கா இது உங்கட எழுத்து நடை மாதிரி தெரியவில்லையே... ஏதாவது குழப்பத்தில் இருந்து எழுதினிர்களா? எழுத்து பிழைகள் இருக்கின்றன.... நீங்கள்தான் பொதுவாக நமக்கு சொல்லுகிறனிர்கள்... என்னமோ வேலை அவசரத்தில் எழுதி உள்ளிர்களா தெரியவில்லை சரி பாருங்கோ.... தப்பாக இருந்தால் மன்னிக்கவும் அக்கா... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதியக்கா உங்களுடைய எழுத்தாற்றல் படிப்படியாக வளர்ச்சியுற்று வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. பார்வைகள் பலவிதம் என்றே தலைப்பைப் போட்டுள்ளதனால் விமர்சிக்க முடியாது. ஒரு தகவலை நீங்கள் அறிந்த விதத்தில் தந்துள்ளீர்கள். தீர்வின்றி கதை தொக்கி நிற்கிறது. உங்கள் பார்வையில் உள்ள கதைக்கு உங்கள் பார்வையைக் கனமாகப் பதிந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்கள் பார்வையை ஆளுமையாகப் பதிக்கும்போது நீங்க சொல்ல வரும் விடயம் பூரணப்படும். இது குறை கூறல் அல்ல நன்றாக இருக்கிறது என்று ஒப்புக்குக் கூறுதல் வளரும் படைப்பாளிகளுக்கு எந்தவித வளர்ச்சியையும் அளிக்காது. மாறாக படைப்பாளிகளில் எவ்வித மாற்றங்களையும் உருவாக்காமல் நின்ற இடத்திலேயே நிற்க வைத்துக் கொண்டிருக்கும். உங்களிடம் திறமை உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அவற்றை வெளிக் கொணரும் வழிகளே உங்களுக்கப் புரியாது இருக்கிறது. அடுத்த தடவை நீங்கள் எழுதும் படைப்பில் உங்கள் பார்வையின் ஆளுமையை எதிர்பார்க்கிறேன். சளைக்காமல் தொடர்க.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சினைக்கு கொமன் லோ பார்ட்னராக (common-law partner) வாழ்ந்துபார்த்துவிட்டு சரிவந்தால் கட்டியிருக்கலாம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் அறியத்தருவது என்ன வெண்டால்......

ஊருவிட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணிடாதீங்க......அப்புறமா வம்பு தும்பு பண்ணிடாதீங்க. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பார்வையுடன் என்னால் ஒத்துப் போக முடியல. ஆனாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பார்ப்பதால் ஓகே... :lol:

நன்றாக இருக்கிறது என்று ஒப்புக்குக் கூறுதல் வளரும் படைப்பாளிகளுக்கு எந்தவித வளர்ச்சியையும் அளிக்காது. மாறாக படைப்பாளிகளில் எவ்வித மாற்றங்களையும் உருவாக்காமல் நின்ற இடத்திலேயே நிற்க வைத்துக் கொண்டிருக்கும். உங்களிடம் திறமை உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அவற்றை வெளிக் கொணரும் வழிகளே உங்களுக்கப் புரியாது இருக்கிறது. அடுத்த தடவை நீங்கள் எழுதும் படைப்பில் உங்கள் பார்வையின் ஆளுமையை எதிர்பார்க்கிறேன். சளைக்காமல் தொடர்க.

நான் நிலாமதியக்காவுக்கு ஒவ்வொரு தடவையும் கூற முற்பட்டு பின் நிலாமதியக்கா மனசு காயப்பட்டு விடும் என்பதனால் சொல்லாமல் விட்டதை சாகரா அருமையாக கூறியிருக்கின்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இது குறை கூறல் அல்ல நன்றாக இருக்கிறது என்று ஒப்புக்குக் கூறுதல் வளரும் படைப்பாளிகளுக்கு எந்தவித வளர்ச்சியையும் அளிக்காது."

வணக்கம் சகாரா ........உங்களுடைய இந்த வரிகள் என் வளர்ச்சியில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தை காட்டு கிறது

ஏற்று கொள்கிறேன். பதிவுக்கு நன்றி .

சுஜி .........யாயினி .......... ...........உங்கள் கருத்துக்கு நன்றி . திருத்த முயற்சிக்கிறேன். உண்மைதான் இது ஒரு அவசர பதிவு.

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சமுதாயத்தில் நடந்த பிரச்சினை . இளசுகள் தாங்கள் தான் சரி என்பார்கள். பலதுக்கும் , பலனடைமுறைகளுக்கும் வாய்ப்பான சூழல்.

அனுபவமும் பாடங்களும் தான் நெறிப்படுத்த வேண்டும்.

இது ஒரு சமுதாயத்தில் நடந்த பிரச்சினை . இளசுகள் தாங்கள் தான் சரி என்பார்கள். பலதுக்கும் , பலனடைமுறைகளுக்கும் வாய்ப்பான சூழல்.

அனுபவமும் பாடங்களும் தான் நெறிப்படுத்த வேண்டும்.

இந்தப் பிரச்சனை எல்லாக் காலத்திலும் இருக்கு அக்கா, எப்பவுமே இளம்தலைமுறையின் செய்கைகளில் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்து பிழை பிடிப்பவர்கள் அதிகம்.30 வருடத்திற்கு முன் வந்த யாழ்ப்பாண எழுத்தாளர்கள் எழுதின கதைகளையும் வாசித்துப் பாருங்கள்.

நல்லா பருவமடைந்து 28 வயதுக்கும் மேலாகி, அம்மா, அப்பா, ஆச்சி,அப்பம்மா, சித்தப்பன், ஒன்று விட்ட பெரியப்பாவின் சின்ன வீடு என பெரும் படையின் filtration எல்லாம் முடிந்து பார்த்து செய்யப்படும் கல்யாணங்கள் கூட தோல்வியை சந்திக்கின்றன தானே. உண்மையில் பழைய காலத்தில் மனைவிமார் கன்னத்தில், முதுகில், தோளில் வாங்கும் அடிகளை விட இந்தக்காலத்தில் அடிவாங்குவது குறைவு (திருப்பி அடித்தலும் நடப்பதால்)... கடந்த தலைமுறைகள் ஆண் பெண் உறவை புரிந்து வைத்திருப்பதை விட (ஏதோ புனிதம், தெய்வீகம் என பம்முவதை விட) இந்த தலைமுறை நன்கு புரிந்து வைத்திருக்கின்றது.

சுகந்தன் சற்று வெளியே போயிருந்தவன் . கையில் ஒரு சிறு ,பொதியுடன் வீடினுள் நுழைந்தான் . இரவு சாப் பாட்டுக்காக் தாயார் அழைத்தார் . நிரா எதுவுமே பேசவில்லை மேசையில் சாப்பாடு பகிரப்பட்டு அனைவரும் உண்டபின்னர் , சமையலறையில் மாமிக்கு உதவியாக , பாத்திரங்களை கழுவுவதில் நிரா ஈடுபடிருந்தாள். .சகோதரிகள் தமது படிக்கும் அறைக்கு சென்று விட்டனர். சுகந்தனின் தந்தை அன்றைய தினசரியில் ஈடுபடிருந்தார் . சுகந்தன் நிராவை தன் அறைக்கு அழைத்தான் , தான் சற்று அவசரப்பட்டு விட்டதாக மன்னிப்பு கேடான். நிரா நான் உனக்கு மனைவி எனும் உயர் தானத்தை தந்திருக்கிறேன். நீ இன்னும் சிறு பிள்ளையல்ல ,சூழலுக்கு ஏற்ற படி உடுத்தி போ , கையில் அவளுகாக் வாங்கிய சுடிதாரை கொடுத்தான்.

படுக்கைக்கு நேரமாகவே எல்லோரும் படுக்கைக்கு சென்று விட்டனர் .மறு நாட காலை சுகந்தன் புறப்படுமுன்பே முன்பே அவனு டைய மதிய சாப்பாட்டுக்கான பொதியுடன் சந்தோஷமாக அனுப்பி வைத்தாள் நேற்றிய சம்பவத்தை மறந்து .

ஆக நீங்களும் / அடி வாங்கின பெண் / சமையல் செய்யும் பெண் /கணவன் வேலைக்கு போக, அவனின் சகோதரிகள் படிக்கும் போது பாத்திரம் கழுவும் வேலைக்காரி பெண்/ சக மனுசியை அடிக்கும் மிருகத்தனத்தை சுடிதார் மூலம் ஈடு செய்ய முனையும் கோழையை / தான் உருவகப் படுத்தி இருக்கின்றியள். உலகம் இதனை விட எங்கோ போகுது அக்கா. உங்களின் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பத்தாம் பசலித்தனமான அடிமைத்தன பிம்பங்களை உடைத்து விடுங்கள். இந்தத் தலைமுறையாவது எம்மில் திருந்தட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் .......இந்த சம்பவம் என் நண்பி சொன்னது என்னை சிந்திக்க தூண்டியதால் எழுதி னேன். தாராளமாக் சொல்ல நினைப்பதை சொலுங்கள்.

மனசு காயப்படும் என எண்ண வேணாம். நான் ஓன்றும கதாசிரியை அல்ல வளரும் ஒரு கிறுக்கி .........என் எண்ணம கிறுக்கலாக. சிலது கோலமாகும் சில அலங்கோலமாகி விடும். என் மீது உங்கள் அக கரிசனையை வரவேற்கிறேன். நான் பெரிது படுத்தி சண்டைக்கு வருபவள் அல்ல .இன்னும் செதுக்க படவேண்டிய சித்திரம். உங்கள் பதிவுக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.