Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவறவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ : தமிழருவி மணியன்

Featured Replies

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவவவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ என தமிழருவி மணியன் செப்ரம்பர் 24 மாலை லண்டன் ஈஸ்ற்ஹாமில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நிறைந்திருந்த அரங்கில் ‘இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்று தான் நம்பவில்லை’ எனத் தெரிவித்தார் தமிழருவி மணியன். ‘தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் தலைவரினதும் தியாகத்தை தான் மதிப்பதாகத் தெரிவித்த தமிழருவி மணியன் அவர் (வே பிரபாகரன்) ஆயுதங்களை மட்டும் நம்பியது மிகப்பெரிய தவறு என்றும் அது இவ்வளவு அழிவை ஏற்படுத்தி விட்டது’ என்றும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்தை எதிர்த்த போதும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது பெரும்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தமாறு வற்புறுத்தி வந்தவர் தமிழருவி மணியன். ஆளும் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால உறுப்பினரான அவர் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா வற்புறுத்தாததையிட்டு தனது கட்சிப் பதிவியையும் உறுப்புரிமையையும் துறந்தவர். சாத்வீகப் போராட்டமே இன்றைய காலத்திற்குப் பொருத்தமானது என்று நம்புபவர்.

‘தமிழக அரசியல் வாதிகள் உணர்ச்சி பொங்களிக்க மேடைகளில் பேசிவிட்டு போய்த் தூங்கிவிடுவார்கள். அவர்களை நம்பி அரசியல் மோசம் போய்விடாதீர்கள்’ என்று எச்சரித்த தமிழருவி மணியன் அவ்வாறு ‘என்னாலும் பேச முடியும்’ ஆனால் ‘என் தமிழினம் அழிக்கப்படுவதை என்னால் தாங்க முடியாது’ என்றார். நெடுமாறன், வைக்கோ, திருமாவளவன் போன்றவர்களின் வாக்கு வங்கிகள் ஒரு சில வீதமே எனச் சுட்டிக்காட்டிய தமிழருவி மணியன் ‘பரந்து பட்ட தமிழக மக்களின் ஆதரவைப் பெறாமல் இந்திய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது’ என்றார். ‘இவர்களது அரசியல் பேச்சுக்கள் உணர்ச்சிபூர்வமாய் இருக்கும் கைதட்டுவார்கள், விசிலடிச்சான் குஞ்சுகள் விசிலும் அடிப்பார்கள் அவ்வளவுதான் அதற்கு மேல் என்ன?’ என்று கேள்வியும் எழுப்பினார்.

தமிழருவி மணியத்தின் சிறிய பேச்சைத் தொடர்ந்து அரங்கில் இருந்தவர்கள் தமது கருத்துக்களை வழங்கவும் கேள்வி எழுப்பவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. புலி ஆதரவு அரங்கு ஒன்றில் மாறுபட்ட கருத்துடைய ஒருவர் பிரதான பேச்சாளராக வரவழைக்கப்பட்டது இதுவே முதற்தடவையாக இருந்தது. செல்வவிநாயகர் ஆலயத் தலைவர் செல்வராஜா ‘கலைஞர் கருணாநிதியைப் பலப்படுத்தி அவரைக் கொண்டு நீங்கள் எதையாவது சாதித்திருக்க முடியாதா?’ எனக் கேள்வி எழுப்பினார். ‘என்னதான் கூறினாலும் வைக்கோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள்’ என்றார் செல்வராஜா. ‘மகிந்த ராஜபக்ச நினைக்கின்ற மாதிரி அல்ல. தலைவர் பெரும் திட்டத்தோடு வருவார்’ என்றும் ‘போராட்டம் தொடரும்’ என்றும் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

‘ஆயுதப் போராட்டமே ஒரே வழி’ என்ற கூக்குரல் ஒலிக்கத் தவறவில்லை. அதற்கு ஒருபடி மேலேசென்று ‘சுறாவளி’ போல் சுழட்டி கருத்து வெளியிட்ட சிவபாதம் என்ற முன்னால் கூட்டணி (தமிழரசுக் கட்சி) உறுப்பினர் ‘நானும் எனது மகனும் புலி. இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறோம்’ என்றார். கூட்டத்தின் இடையிடையே இவரது ‘குளறி’ வித்தைகள் அரங்கைக் குழப்பியது. இன்னும் ஓரிருவரும் மதுபோதையில் நின்று குளறி வித்தை காட்டியதைத் தவிர கூட்டம் சுமூகமாகவே நடந்தது.

‘நான் இங்கு உங்களை மாற்றுவதற்காக ரோவினால் அனுப்பப்ட்டவன் அல்ல. என் இன மக்கள் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் யாதார்த்தமாக சில விடயங்களைப் பார்க்கும்படி சொல்கிறேன். இல்லை ஆயுதப் போராட்டம்தான் முடிவு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. ஆயுதம் எடுத்தால் அழிவு எதிரிக்கு மட்டுமல்ல எமக்கும் தான் என்பதனை மறந்தவிடக்கூடாது. நான் உங்களுக்கு ஏற்றமாதிரிப் பேசுவதற்காக இங்கு வரவில்லை. எனக்குச் சரியெனப்பட்டதை உங்களுக்கு சொல்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளுக்குச் செல்லாமல் நிதானமாகச் சிந்தியுங்கள்’ எனத் தமிழருவி மணியன் அங்கிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.

தன்னுடைய பேச்சுக்களில் இலங்கை அரசையும் அதன் இனவாதப் போக்கையும் மிகச் சரியாகவும் நேர்த்தியாவும் கண்டித்த தமிழருவி மணியன் அந்த இனவாதப் போக்கிற்கு எதிராக சாத்வீகமாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஒரு திலீபனுடன் சாத்வீகப் போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து இருந்திருந்தால் இந்தப் பேரவலத்திற்குச் செல்ல வேண்டி இருந்திராது என்பதையும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணியும் பல்வேறு அமைப்புகளின் தலைவருமான ப சிதம்பரப்பிள்ளை தனது கருத்தைத் தெரிவிக்கையில் ‘இந்தியா இலங்கையுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. தேசியத் தலைவர் இந்தியாவை நம்பியதே அவர் விட்ட மிகப்பெரிய தவறு’ எனத் தெரிவித்தார். இதே கருத்தினை இன்னும் பலரும் வெளியிட்டனர். தமிழருவி மணியன் தான் கட்சியின் பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் வெளியேறியவர் என்று கூறி இருந்தும் பலரும் மீண்டும் மீண்டும் அவரை ஒரு இந்தியப் பிரதிநிதியாக்கி கேள்விகளை தொடுத்தனர்.

இவற்றுக்கு பதிலளித்த தமிழருவி மணியன், ‘பிரபாகரன் ஒன்றும் இந்தியாவை நம்பி இருக்கவில்லை. அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும் என்று நம்பித்தான் கடைசிவரை இருந்தார். இந்தியா மட்டுமல்ல புரட்சியை வென்றெடுத்த நாடுகளே ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கி இருந்தன. இந்தியா இந்தியா என்று சொல்லிச் சொல்லியே நீங்கள் இந்திய மக்களை எதிரிகளாக்கி உள்ளீர்கள். இந்தியா வேறு இந்திய மக்கள் வேறு. எந்தவொரு சாதாரண இந்தியப் பிரஜையாவது எமது நாட்டு பிரதமரைக் கொலை செய்திருக்கலாம் என்று குற்றம்சாட்டும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ‘அமெரிக்காவில் டலஸ் பகுதியில் தமிழ் சங்கத்தில் காலை ஒரு சந்திப்பு மாலை ஒரு சந்திப்பு. ஒன்று இந்தியத் தமிழர்கள் சந்திப்பு மற்றையது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சந்திப்பு. பாரிஸில் புதுச்சேரித் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் சேர்ந்து எதுவும் செய்வதில்லை’ இவ்வாறு தமிழருவி சொல்லிக் கொண்டிருக்கையில் ‘லண்டனிலும் அப்படித்தான். இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என்று தனித்துத்தான் செயற்படுகிறார்கள்’ என்று ஒரு குரல் வந்தது. ‘ஏன் நாம் ஒற்றுமையாகப் போராட முடியாதவர்களாக இருக்கிறோம்’ என்றும் தமிழருவி மணியன் கேள்வி எழுப்பினார்.

‘புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு எப்போதும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் ஒரு பிரச்சினை உள்ளது.’ என்று தனது கருத்தை வெளியிட்ட தேசம்நெற் த ஜெயபாலன் ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் நிஜத்திற்கு வரவில்லை. வரவும் விரும்பவில்லை. இன்னமும் கனவுலகத்திலேயே உள்ளனர். நீங்கள் இன்று வெளியிட்ட இதே கருத்துக்களை நான்கு மாதங்களுக்கு முன் வெளியிட்டு இருந்தால் உங்களை ரோ உளவாளி என்றும், தேசியத் துரோகி என்றும் அழைத்திருப்பார்கள்’ எனத் தெரிவித்தார். கூட்டத்தின் முடிவுப் பகுதியில் வெளியிட்ட இக்கருத்து மீண்டும் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழருவி மணியன் ‘புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் என்னால் பிளவுபட்டுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இன்று மூன்று லட்சம் மக்கள் முகாம்களில் பேரவலத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். அவர்களை விடுவிக்க வழிசெய்ய வேண்டும். நீங்கள் ஏதோ ஒரு வகையில் கல்வி வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இங்குவந்து ஓரளவு வளமாக வாழ்கிறீர்கள். அப்படி வாழ்ந்துகொண்டு ஆயுதப் போராட்டம் என்றெல்லாம் பேச முடியும். ஆனால் அந்த முகாம்களில் வாழும் மக்களின் நிலையென்ன. இதுவரை ஆயுதப் போராட்டத்தில் ஒரு 10 வீதம் உரிமைகளைப் பெற்றிருந்தால் இவ்வளவு மக்களை இழந்து இந்த உரிமைகளைப் பெற்றிருக்கின்றோம் என்று சொல்லலாம். அப்படிச் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழருவி மணியன் ‘எமக்கு முன் உள்ள உதாரணம் தீபெத். எந்த நாடு அதனை அங்கிகரித்தது? அயர்லாந்துக்கு என்ன நடந்தது?’ என்று கேள்வி எழுப்பியதுடன் ‘தமிழ் நாட்டுக்கு இந்திய அரசமைப்பில் உள்ள உரிமைகள் போன்ற உரிமைகளைக் கோரி அதனை நோக்கிச் செல்வதே தற்போதுள்ள யதார்த்தம்’ எனத் தெரிவித்தார்.

இறுதியாக கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது போராட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது. அதனால் போராட்டம் முடிவுக்கு வந்தள்ளது. அதனை போஸ்மோட்டம் செய்து அதன் சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களைக் கேட்டு அதன் சரி பிழைகளை ஆராய்கின்ற பக்குவம் வரவேண்டும். எத்தனையோ ஆயிரம் மக்களை இழந்திருக்கிறோம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் துரோகிகள் என்று சொல்லியவர்களுடனெல்லாம் ஒரே மேசையில் உட்கார்ந்திருந்து கதைக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் தோற்றுவிட்டது. ஆயுதப் போராட்டமும் தோற்றுவிட்டது. இப்போது தமிழருவி மணியன் சொல்கின்ற அறிவு வழி சிந்திக்க வேண்டும். அவர் துரோகி. இவர் துரோகி. இந்தியா துரோகம் செய்துவிட்டது என்பதை விட்டுவிட்டு யதார்த்தமாகச் செயற்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

மூன்று மணிநேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெரும்பான்மையானவர்கள் யதார்தத்தை நோக்கித் தள்ளப்படுவதைக் காணக் கூடியதாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு இவ்வாறான கருத்துக்கள் புலி ஆதரவு அரங்கு ஒன்றில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அடுத்த இரு தினங்களில் செப்ரம்பர் 26ல் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் தொல் திருமாவளவனையும் தமிழருவி மணியனையும் பிரதம பேச்சாளர்களாக அழைத்துள்ளது. புலி ஆதரவுத் தளத்தில் தற்போது ஒரு கருத்தியல் மாற்றத்தின் அவிசியத்திற்கான தேவை உருவாகி உள்ளதையே இது வெளிப்படுத்துகின்றது.

  • Replies 127
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மேளச்சமா ஆரம்பமாகப் போகுது நெல்லையன் .

  • கருத்துக்கள உறவுகள்

iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii :icon_idea:

  • தொடங்கியவர்

இக்கட்டுரையை எழுதியவர் ஜெயபாலன் என்ற நபர். இவரும் இவரது நண்பர் கொன்ஸன்ரைன் என்பவரும் தம்மை நடுநிலையான ஊடகவியலாளர்கள் என கூறிக்கொண்டு இதுவரை காலமும் மாற்றுக்கருத்துகள் பத்திரிகை ஒன்றை நடத்தினார்கள்.

உண்மை புலிகள் விட்ட பல அரசியல் தவறுகளினால் நாம் சிங்களத்தினால் யாரும் கேட்பார் இல்லாமல் அழிக்கப்பட்டோம்.படுகிறோம்!

ஆனால் இன்று புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். இவர்களது மாற்றுக்கருத்துகளும் தற்போது ஆட்டம் காணத்தொடங்கி விட்டன.

புலிகள் அழிக்கப்பட்ட பின்னும் தமிழ், சிங்கள ஆளும் வர்க்கத்தினால் மக்கள் படும் இன்னல்களை வெளிக்கொணர மறுக்கிறார்கள். இதுவரை காலமும் இவர்கள் கூறிவந்த மாற்றுக்கருத்துகள் என்பது தமிழின எதிர்ப்பு கருத்துகளே என்பது இன்று தெட்டத்தெளிவாகிறது.

இவ்விரு பத்திரிகையாளர்கள் என தம்மைக் கூறுபவர்களைப் பற்றி ஒருவரியில் கூறுவதானால் ..... "சுய விளம்பரங்களுக்காக அம்மணமாக பெருந்தெருக்களிலும் ஓடக்கூடியவர்கள்" ......

ஆனால் .... இக்கட்டுரை தமிழருவி மணியன், ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் குறித்துகூறியதை வெளிக்கொணர்ந்து இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இன்று புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். இவர்களது மாற்றுக்கருத்துகளும் தற்போது ஆட்டம் காணத்தொடங்கி விட்டன.

புலிகள் அழிக்கப்பட்ட பின்னும் தமிழ் சிங்கள ஆளும் வர்க்கத்தினால் மக்கள் படும் இன்னல்களை வெளிக்கொணர மறுக்கிறார்கள். இதுவரை காலமும் இவர்கள் கூறிவந்த மாற்றுக்கருத்துகள் என்பது தமிழின எதிர்ப்பு கருத்துகளே என்பது இன்று தெட்டத்தெளிவாகிறது.

இதைக்கேட்டால் புலிச்சாயம் பூசப்படுகிறதே.....

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் மற்றும் அவரது தளம் எத்தகைய நேர்மைக்கருத்தை கொண்டிருக்கிறது என்பதை அறிவோம் நெல்லையன். நீங்கள் கொண்டு வந்து இதனை இங்கிட்டது நல்ல நோக்கம்.

நீங்கள் கனவுகலக குமாரர்களை நிச உலகுக்கு கொண்டுவர வேண்டி இத்தைகய விடயங்களை உங்கள் நேரத்தை மினக்கெடுத்தி கொண்டு வந்து போடுகிறீர்கள். இதையே உங்கள் மீதான காழ்ப்பாக்கி கருத்தோடு ஓடிவரும் விலைபோகாத தங்கங்கள் உங்கள் மீது பாடும் பாட்டுக்குத்தான் மேளச்சமாவென்றேன் :icon_idea:

மேளச்சமா ஆரம்பமாகப் போகுது நெல்லையன் .

எல்லா இனங்களும் தன் இனத்தின் விடிவுக்காக குரல் கொடுத்து ஒருங்கிணைந்து குரல் கொடுத்து போராடிய போது எங்களின் தலைமையை தனியே போராட விட்டு நாங்கள் காசு கொடுத்தோம் எண்று அளக்கும் ஒரு இனத்தின் தலைமையை ஏற்றவர் என்ன செய்ய முடியுமோ அதை அனைத்தையும் அவர் செய்தார்...

வேணும் எண்றால் கேட்டு பாருங்கள்... தமிழ் மக்களின் விடிவுக்காக அரசியல் ரீதியில் நடந்த போராட்டங்களுக்கு எல்லாம் நீங்களோ இல்லை இந்த செய்தியை பிரதானமாக இணைத்த நெல்லையோனோ போய் இருப்பீர்களா...??? கேட்டால் குடும்ப பிரச்சினை என்பீர்கள்...

நெல்லையனை கேக்கிறேன்.... லண்டனில் அரசியல் ரீதியில் நடந்த போராட்டங்களில் குறைந்தது எல்லாவற்றிலும் ஒரு மணிநேரமாவது கலந்து இருப்பீரா...??

அப்படியானால் செஞ்சிலுவை சங்கத்துக்கு முன்னால் நான்கு தடவை நடந்த போராட்டம் நிகழ்ந்த இடம் எது....???? சொல்லும்

பிறகு பிரபாகரனை விமர்ச்சிக்கலாம்...

Edited by தயா

தலைவர் அரசியலும் செய்து இருந்தால் இன்னும் ஒரு மூன்றுநாள் அதிகமாக முள்ளிவாய்க்காலில் நிற்கவிட்டிருப்பார்களா??

அல்லது அடிக்கிற செல்லின் வெடிப்புத் திறனை குறைத்து ஏவி இருப்பார்களா???

தமிழருவி மணியன் 30 வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் நடைபெறும் தலித்துகளுக்கு எதிரான அல்லது பெண்களுக்கு எதிரான

கொடுமைகளுக்காக காங்கிரசைவிட்டு வெளியேறாதவர் தேர்தல் நேரத்திலை வெளியேறினது 'சீட்டு' கிடைக்காதபடியாலைதான்!

வி.பி. சிங் என்ற நேர்மையான பிரதமர் பின்தங்கிய சாதியினருக்கு பல்கலைக் கழகத்தில் இடமளிக்கும் சட்டம் கொண்டு வந்தபோது

தமிழ்நாட்டில் அதை தீவிரமாக எதிர்த்த ஒப்பில்லாத மாணிக்கம்தான் இந்த மணியன்.

அது சரி..மணியன் அந்தக் கூட்டத்தில் 'இந்தியாவுக்கு சுதந்திரம்' யாரால் கிடைத்தது என்று சொன்னார்???

காந்தியால் என்றுதான் இன்னும் மணியன் சொல்லி வருகிறார். அப்படியானவர் எப்படி.....???

வேணும் எண்றால் கேட்டு பாருங்கள்... தமிழ் மக்களின் விடிவுக்காக அரசியல் ரீதியில் நடந்த போராட்டங்களுக்கு எல்லாம் நீங்களோ இல்லை இந்த செய்தியை பிரதானமாக இணைத்த நெல்லையோனோ போய் இருப்பீர்களா...???

பிறகு பிரபாகரனை விமர்ச்சிக்கலாம்...

இங்கு நடந்த போராட்டங்களுக்கு கணிசமானளவு போயிருக்கிறோம் தயா. ஆனால் நீங்கள் பார்க்கும் அளவுக்கு முகம் காட்டவில்லை. மற்றும் நாங்கள் வாழும் நகரத்தில் இக்கட்டான நேரத்தில் வீடுவரை வந்த சிங்களவனின் தொல்லைவரையும் தாங்கி கவனஈர்ப்பு முதல் யாவும் செய்தோம். இதுவரை செய்து கொண்டுதானிருக்கிறோம். என்ன ஒன்று இதில் கொடிபிடித்து வீ வோன்ற் சொல்லும் குரல்களை விட்டு அமைதியாக பல விடயங்கள் செய்யப்படுகிறது.

இன்றும் முட்கம்பிக்குள் இருப்போருக்கான ஆதரவுக்குரல்களை இந்த நாட்டவர்களின் ஆதரவை திரட்டுதல் மூலம் எங்கள் சக்திக்கு உட்பட்ட யாவையும் செய்கிறோம். தனித்து பட்டியலிட்டு சொல்லெல்லயெண்டு கேப்பீங்கள் அல்லது உதெல்லாம் நம்பவோ பதில் தருவீங்கள்.

அரசியல் ரீதியான முன்னெடுப்புகளை எங்கள் தமிழால் தமிழருக்கு நிலைப்பாட்டை மாற்றி உங்கள் ஏற்பாட்டாளர்களை வரச்சொல்லுங்கள் வெளிநாட்டு அரசியல் பரப்பில் இவர்கள் 10ஆயிரம் தமிழர்களைக் கூப்பிட்டு வைத்துச் சொல்லவதை ஒரு பத்துப்பேரால் செய்யக்கூடிய நன்மைகளை செய்யலாம். அதில்லை நாங்கள் பாராளுமன்றில் சனமில்லாமல் ஆட்சி கலைந்த நாளில் அதுவும் ஞாயிற்றுக்கிழமை பேளினில் ஆர்ப்பாட்டம் செய்வோம் திரண்டு வாங்கோ என்று கூப்பிடும் கூட்டத்தில் போய் ஒரு எழுச்சியையும் செய்ய முடியாது. போற வாகனத்தில் நல்ல கும்மாளம் பாட்டு சாப்பாடு இதோடை உணர்வு பொங்கீடும் என்றால் சரி.

இதை எழுதுகிற நீங்கள் ஒரு முன்னாள் போராளியாக இருந்து புலம்பெயர்ந்து ஊர்வலத்தில் நிற்பது மட்டும் பெருமை தயா மற்றதெல்லாம் விமர்சனம். நல்லது உங்கள் பரந்தபாங்கு. ஆக உங்கள் எழுத்திலிருந்து ஒன்று புரிகிறது. புலத்த அரசியல் எழுச்சி ஏற்பாட்டாளர்களுடன் அல்லது அந்தக குழுக்களில் உங்கள் நிறைந்த பங்கு இருக்கிறது. உங்கள் குரலுக்கு பதில் இருக்கும். அதனால் நீங்கள் ஓர் முன்னோடியாக ஏன் செயலில் இறங்கக்கூடாது ?

நெருப்பு சுடும் அதற்காக நீங்கள் சாம்பலால் மறைத்து வைத்து சமரசம் செய்து கொள்கிறீர்கள். அதை வெளியில் பரவவிடுகிறீர்கள் இல்லையென்பதை உங்கள் கருத்து படமிடுகிறது. இதுவும் புலனாய்ந்து சொல்றீங்களெண்டா எதுவும் செய்ய முடியாது.

அது சரி..மணியன் அந்தக் கூட்டத்தில் 'இந்தியாவுக்கு சுதந்திரம்' யாரால் கிடைத்தது என்று சொன்னார்???

காந்தியால் என்றுதான் இன்னும் மணியன் சொல்லி வருகிறார். அப்படியானவர் எப்படி.....???

நேதாஜியை மறைத்து காந்தியை கதையில் காட்டி பெற்ற சுதந்திரம். மணியன் திருமா எல்லாம் ஒரே மட்டையும் குட்டையும் தான்.

புலிகள் அரசியலே செய்ய முனையவில்லை எண்று சொல்பவர்கள் எல்லாம் எதை உண்மையாக குறிப்பிடுகிறார்கள் எண்றால் தங்களுக்காக எல்லாவற்றையும் புலிகள் செய்து இருக்க வேண்டும் என்பதைத்தான்...

வன்னியில் இருந்த புலிகள் புலம்பெயர்ந்த மக்கள் தங்களின் வரலாற்று கடமையை செய்ய முன் வர வேண்டும் எண்று பல வருடங்களாக கத்தியது அவர்களுக்கு அரசியலாகவும், எதிர்க்காலம் எப்படி இருக்கும் எனும் விளிப்புணர்ச்சியாகவும் தெரிவதில்லை... அதுக்கு எல்லாம் காரணம் காசு கொடுத்தால் புலிகள் எல்லாத்தையும் செய்வார்கள் எனும் நம்பிக்கை..

சரி இப்படியானவர்கள் காசையாவது உண்மையில் கொடுத்தார்களா எண்றால் அதுவும் உண்மை இல்லை... புள்ளி விபரங்கள் அப்படித்தான் சொல்கிறது... புலம்பெயர்ந்த இங்கிலாந்து தமிழர்கள் மட்டும் 300 000 பேர்... அவர்கள் வருடத்துக்கு ஒருவர் 365 பவுன்ஸ் கொடுத்து இருந்தால் கிட்டத்தட்ட 10 பில்லியன் பவுன்ஸ் புலிகளுக்கு போய் இருக்க வேன்டும்..

தமிழர் புலிகள் கேட்டும் செய்யாமல் விட்ட தவறுகள் பல ஆனால் பழியை மட்டும் புலிகள் மீது போட திரியினம்...

  • கருத்துக்கள உறவுகள்

நேதாஜியை மறைத்து காந்தியை கதையில் காட்டி பெற்ற சுதந்திரம். மணியன் திருமா எல்லாம் ஒரே மட்டையும் குட்டையும் தான்.

:icon_idea:

தலைவர் அரசியலும் செய்து இருந்தால் இன்னும் ஒரு மூன்றுநாள் அதிகமாக முள்ளிவாய்க்காலில் நிற்கவிட்டிருப்பார்களா??

அல்லது அடிக்கிற செல்லின் வெடிப்புத் திறனை குறைத்து ஏவி இருப்பார்களா???

தமிழருவி மணியன் 30 வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் நடைபெறும் தலித்துகளுக்கு எதிரான அல்லது பெண்களுக்கு எதிரான

கொடுமைகளுக்காக காங்கிரசைவிட்டு வெளியேறாதவர் தேர்தல் நேரத்திலை வெளியேறினது 'சீட்டு' கிடைக்காதபடியாலைதான்!

வி.பி. சிங் என்ற நேர்மையான பிரதமர் பின்தங்கிய சாதியினருக்கு பல்கலைக் கழகத்தில் இடமளிக்கும் சட்டம் கொண்டு வந்தபோது

தமிழ்நாட்டில் அதை தீவிரமாக எதிர்த்த ஒப்பில்லாத மாணிக்கம்தான் இந்த மணியன்.

அது சரி..மணியன் அந்தக் கூட்டத்தில் 'இந்தியாவுக்கு சுதந்திரம்' யாரால் கிடைத்தது என்று சொன்னார்???

காந்தியால் என்றுதான் இன்னும் மணியன் சொல்லி வருகிறார். அப்படியானவர் எப்படி.....???

எல்லா உண்மைகளையும் எடுத்து சொல்லுங்கோ..

என்ன மாரி சின்ன பெடியங்களுக்கு தெரியாத்தது நிறைய இருக்கு . உங்கள மாரி அண்ணா மாரிட்ட தெரிஞ்சுக்க..

Edited by kuddipaiyan26

கருத்துக்கு நன்றி சாந்திஅக்கா! மணியன்சார் சொல்லிருக்கிறார்,திலீபனின் போராட்டம் தொடர்ந்து இருக்கவேணும் என்று.நல்லது

மணியன்சார் திலீபன்என்றொரு இளைஞன் தண்ணியும் குடிக்காமல் நல்லூரில் கிடந்து செத்தபோதும் இந்த காங்கிரசை தானே

நீங்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றீர்கள்.தேனாம்பேட்டை மைதானத்தில் 1987 அக்டோபர் நாளில் நடந்த கூட்டத்தில்

இதே மணியன் 'திலீபன் உண்ணாவிரதம் இருந்து செத்திருக்காவிட்டாலும் இறந்திருப்பான் ஏனென்றால் அவனுக்கு குடலில்

புற்றுநோய்' என்று கூசாமல் பொய் சொல்லி காங்கிரசுக்கு கூசா தூக்கினவர்தான் மணியன்சார்.

அந்தக் கூட்டத்தில் என்னவென்று இந்த மணியன் பேசத்தொடங்கினார் தெரியுமா.@'பத்மநாபா,வரதராஜப்பெருமாள் போன்ற பெரும்

தகைகள் இருக்கும் திசைநோக்கி வணங்கி என் பேச்சை ஆரம்பிக்கிறேன்' என்று....

நெல்லையனை கேக்கிறேன்.... லண்டனில் அரசியல் ரீதியில் நடந்த போராட்டங்களில் குறைந்தது எல்லாவற்றிலும் ஒரு மணிநேரமாவது கலந்து இருப்பீரா...??

கத்துக்குட்டி தனமாக எழுதுவதை முதலில் நிறுத்துங்கள். இல்லாவிடின் நீங்கள் முழு முட்டாள் என்பதை நீங்களே உலகுக்க காட்டும் வேலையை செய்வீர்கள்!

நல்லையன் எனக்கு தற்போது யார் என்று தெரியும். அவர் லண்டனில் நடைபெற்ற அனைத்து நிகழ்விலும் பங்கு பற்றியவர். குறிப்பாக வீதி மறிப்பு போராட்டங்கள் அனைத்திலும் பங்கு பற்றியவர். அவர் தனது மன வேதனையில் இன்று பேசும் விடயங்கைள கேள்வி கேட்க உங்களுக்க என்ன தகுதியென்று நான் கேட்கப்போவதில்லை. காரணம் அதற்கு அவசியம் கிடையாது. தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய விடுதலைப் பற்றி கேள்வி கேட்கும் உரித்துடையவர்கள். காரணம் அனைவரும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அடிப்படை கூட தெரியாது கத்துக்குட்டி தனமாக கருத்தெழுதுவதை நிறுத்தவும்!

Edited by Bond007

நெருப்பு சுடும் அதற்காக நீங்கள் சாம்பலால் மறைத்து வைத்து சமரசம் செய்து கொள்கிறீர்கள். அதை வெளியில் பரவவிடுகிறீர்கள் இல்லையென்பதை உங்கள் கருத்து படமிடுகிறது. இதுவும் புலனாய்ந்து சொல்றீங்களெண்டா எதுவும் செய்ய முடியாது.

என்னாலை போராட முடியவில்லை ஏழாவது தடவையாக காயம் பட்டு நடக்க மாட்டாமல் கொஞ்சக்காலம் இருந்தாச்சு சரி ஏதாவது வேலை செய்வம் எண்டு இராணுவ நிலையில் இருந்து தூர நிண்ட மர ஒண்றில் ஏறி வரை படம் கீற ஏறினால் தடக்கு பட்டு கிழ விழுந்து இடுப்பையும் உடைத்து கொண்டேன்.. அதன் பிறகு என்னை கவனிக்க ஒரு போராளியை விட்டு இருந்தார்கள்...

அப்ப தான் உணர்ந்தேன் நான் போராட்டத்துக்கு உதவியாக இல்லை உபத்திரவமாக இருக்கிறேன் எண்று... அண்று வீடு போவம் எண்று முடிவு எடுத்து விட்டேன்...

இதை ஏன் சொல்கிறேன் எண்றால் நான் ஊனம் ஆனதால் புலிகள் ஒரு போராளியை என்னை கவனிக்க விட்டார்கள்... ஆனால் இங்கை புலம்பெயர்ந்தவை ஊனம் இல்லாமலே அவர்களை புலிகள் கவனித்து இருக்க வேண்டும் எண்று எண்ணுகிறார்கள்...

  • தொடங்கியவர்

எல்லா இனங்களும் தன் இனத்தின் விடிவுக்காக குரல் கொடுத்து ஒருங்கிணைந்து குரல் கொடுத்து போராடிய போது எங்களின் தலைமையை தனியே போராட விட்டு நாங்கள் காசு கொடுத்தோம் எண்று அளக்கும் ஒரு இனத்தின் தலைமையை ஏற்றவர் என்ன செய்ய முடியுமோ அதை அனைத்தையும் அவர் செய்தார்...

வேணும் எண்றால் கேட்டு பாருங்கள்... தமிழ் மக்களின் விடிவுக்காக அரசியல் ரீதியில் நடந்த போராட்டங்களுக்கு எல்லாம் நீங்களோ இல்லை இந்த செய்தியை பிரதானமாக இணைத்த நெல்லையோனோ போய் இருப்பீர்களா...??? கேட்டால் குடும்ப பிரச்சினை என்பீர்கள்...

நெல்லையனை கேக்கிறேன்.... லண்டனில் அரசியல் ரீதியில் நடந்த போராட்டங்களில் குறைந்தது எல்லாவற்றிலும் ஒரு மணிநேரமாவது கலந்து இருப்பீரா...??

அப்படியானால் செஞ்சிலுவை சங்கத்துக்கு முன்னால் நான்கு தடவை நடந்த போராட்டம் நிகழ்ந்த இடம் எது....???? சொல்லும்

பிறகு பிரபாகரனை விமர்ச்சிக்கலாம்...

தயா, நான் போராட்டங்களில் பங்கு பற்றினேனோ, பங்கு பற்றவில்லையோ, இதுவரை என்னத்தை செய்தேன், .... என்பவைகள் அல்ல இன்றைய பிரட்சனை! நாம் புலத்தில் கற்பனை உலகில் இருக்க, தாயகத்தில் கேட்பாரற்று எம்முறவுகள் அழிக்கப்படுகிறார்கள்! அவற்றை தடுப்போம், முதலில்!

நான் யாழ் களத்தில் ஏறக்குறைய ஆரம்ப காலம் முதல் இருக்கிறேன். யாழை நடத்தும் மோகனை, நான் எங்கு முதலில் சந்தித்தேன் என்று கேட்டாலே, உமது இக்கேள்விகளுக்கு விடை கிடைக்கும்!! இங்கு நடந்த எத்தனை போராட்டங்களுக்கு யாழ் களம் அமைத்தது என்பதை தேடும், பல விடைகள் கிடைக்கும்!!

ஒரு வேளை 20 வருட புலம்பெயர் வாழ்வில் எத்தனை போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லையென்றால், என்னால் பதில் கூற கூடியதாக இருக்கும்!!

Edited by Nellaiyan

நல்லையன் எனக்கு தற்போது யார் என்று தெரியும். அவர் லண்டனில் நடைபெற்ற அனைத்து நிகழ்விலும் பங்கு பற்றியவர். குறிப்பாக வீதி மறிப்பு போராட்டங்கள் அனைத்திலும் பங்கு பற்றியவர். அவர் தனது மன வேதனையில் இன்று பேசும் விடயங்கைள கேள்வி கேட்க உங்களுக்க என்ன தகுதியென்று நான் கேட்கப்போவதில்லை. காரணம் அதற்கு அவசியம் கிடையாது. தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய விடுதலைப் பற்றி கேள்வி கேட்கும் உரித்துடையவர்கள். காரணம் அனைவரும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அடிப்படை கூட தெரியாது கத்துக்குட்டி தனமாக கருத்தெழுதுவதை நிறுத்தவும்!

யார் கத்து குட்டி...??? வீதி மறிப்பும்... தொலைக்காட்ச்சிகளில் காட்டும் நிகழ்வுகள் மட்டும் அல்ல போராட்டம் எண்டது... படம் காட்டுற நிகழ்வுகளுக்கு நீங்கள் எல்லாம் படை எடுத்து போய் நிண்டு போட்டு பெருமை பேசுவீர்கள் என்பது தெரியும்...

சரி இவ்வளவு சொல்லும் நீரே சொல்லுமன்... செஞ்சிலுவைக்கு முன்னால் எங்கு போய் போராடினீர்கள் எண்று....

கத்துக்குட்டி தனமாக எழுதுவதை முதலில் நிறுத்துங்கள். இல்லாவிடின் நீங்கள் முழு முட்டாள் என்பதை நீங்களே உலகுக்க காட்டும் வேலையை செய்வீர்கள்!

நல்லையன் எனக்கு தற்போது யார் என்று தெரியும். அவர் லண்டனில் நடைபெற்ற அனைத்து நிகழ்விலும் பங்கு பற்றியவர். குறிப்பாக வீதி மறிப்பு போராட்டங்கள் அனைத்திலும் பங்கு பற்றியவர். அவர் தனது மன வேதனையில் இன்று பேசும் விடயங்கைள கேள்வி கேட்க உங்களுக்க என்ன தகுதியென்று நான் கேட்கப்போவதில்லை. காரணம் அதற்கு அவசியம் கிடையாது. தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய விடுதலைப் பற்றி கேள்வி கேட்கும் உரித்துடையவர்கள். காரணம் அனைவரும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அடிப்படை கூட தெரியாது கத்துக்குட்டி தனமாக கருத்தெழுதுவதை நிறுத்தவும்!

நான் முந்தி கொஞ்ச காலமாய் நல்ல படம் பாத்த நான்.. அந்த படத்திலை வந்த கட்டம் தான் இது..நீங்கள் எழுதினது :wub:

போ வாயிலை ஏதோ கெட்ட வாத்தை வருது

சரி இவ்வளவு சொல்லும் நீரே சொல்லுமன்... செஞ்சிலுவைக்கு முன்னால் எங்கு போய் போராடினீர்கள் எண்று....

அவங்கள் போன தானே தாயா அண்ணா சொல்லுவாங்கள் அந்த இடம்..

போக்காட்டி அவங்களுக்கு எப்படித் தெரிய போக்குது

களம் அமைத்தது என்பதை தேடும், பல விடைகள் கிடைக்கும்!!

ஒரு வேளை 20 வருட புலம்பெயர் வாழ்வில் எத்தனை போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லையென்றால், என்னால் பதில் கூற கூடியதாக இருக்கும்!!

எனக்கு களம் அமைக்க வேன்டிய தேவை இல்லை... எனக்கு விடை அனேகமாக தெரிந்தே இருக்கிறது...

ஆன்ம உறுதியும் தன் இனமானமும் கொண்ட சிங்களவன் வெண்றதில் கூட பிழை இல்லை... அது சரியானதும் கூட

தன் இன மானம் எண்டதை அறியாத , தங்களின் பணிகளை வேறுயாராவது செய்ய வேண்டும் எண்று இருந்து கொண்டு, இது எதுவுமே இல்லாது மற்றவரில் குறைகளை தேடி அலையும் , தனது குறைகள், பிழைகளை மறைக்க முயலும் தமிழர் கூட்டத்துக்கு என்ன நடக்க வேணுமோ அது சரியாகவே நடந்து இருக்கிறது...

எனக்கு உங்கடை போராட்டம் புடலங்காய் பற்றி அக்கறையில்லை! நான் மக்களின் விடுதலைக்காக போராடுபவர்களை என்றும் மதிப்பவன். ஆனால் மக்கள் போராட்டம் 1986இல் மாற்று இயக்க படுகொலைகள் ஆரம்பித்ததும் இயக்கங்களை காப்பாற்றும் போராட்டமாக மாறியதை கண் கூடே கண்டவன். சரி அது போகட்டும் இங்த தலைப்பின் விவதாப் பொருள் நான் போராடினேன் நி போராடினாயா என்பது அல்ல! மக்களிற்காக ஆரம்பிக்கப்ட்ட இநத போராட்டம் மக்களின் விருப்பை கேட்டதா?

1987 இந்திய இராணுவம் வந்த போது அதை நாம் சரி வர நமது அரசியல் நலனுக்கு ஏற்ப பாவித்திருந்தால் இன்று நமக்கென ஒரு தேசம் சிலவேளை உருவாகியிருக்கும்? இது என் மனதில் கொழுந்து விட்டெரியும் முதலாவது கேழ்வி! இந்திய இராணுவம் எல்லா இயக்ஙகளுக்கும் ஆதரவு கொடுக்கிறது என்ன ஒரு நோக்கில் தானே புலிகள் மோதினார்கள்? இந்திய இராணுவம் புலிகளுடன் மோத முன் நட்புறவாக தானே இருந்தார்கள்?

தமது இயக்கத்தை முன்னிலைப்படுத்த தவறியதால் அன்று சிங்கள் இராணுவத்துடன் சேர்ந்து இந்திய இராணுவத்தை புலிகள் விரட்டினார்கள். இன்று தம் உளநாட்டு அரசியலில் (ராஜீவ் கொலை) புலிகள் மிக அதிகம் தலையிடுகிறார்கள் என்று இந்திய சிறீ லங்கத அரசுடன் இணைந்து புலிகளை அழித்துள்ளார்கள்.

நாம் நமக்கு வந்த அனைத்து சந்தர்பங்களையும் தூக்கியெறிந்து விட்டு அடுத்தவனை குறைசொல்வதை முதலில் நிறுத்த வேண்டும். புலிகள் சிறீ லங்கா இராணுவத்துடன் இணைந்து இந்திய இராணுவத்தை துரத்துகையில் இந்திய தமிழ் தேசிய இராணுவத்தை கட்டயமைத்தது ஞாபகம் இருக்கலாம். பிள்ளைபிடி என்று அதை நாம் கூறிய போதும் இன்று அதை மாறி சிந்திக்கையில் புலிகள் இந்தியாவுடன் ஒத்துளைந்திருந்தால் சில வேளை உண்மையிலேயே தமிழ் தேசிய இராணுவமாக மாறியிருக்கலாம் தானே?

முழுப்பிழையும் நம் வசம் வைத்தபடி அடுத்தவனை திட்டி செஞ்சிலுவை சங்கம் முதல் சீன தூதுவரகம் வரை போய் வாய் கிழிய கத்தி இன்று அனைவரினதும் கோபத்தக்குள்ளாகி அரசியல் அனாதைகளாக பிச்சை காரர்களாக நடுத்தெருவில் நிற்கிறோம். இதற்கு முழுக் காரணம் போராட்டத்தை மிகவும் சுயநலமான நோக்கோடு நடாத்தியவர்களே ஒளிய போராட மறுக்கப்பட்டவர்கள் அல்ல!

மாற்று இயக்கங்கள் அனைத்தையும் அழித்தது ஏன்?

மாற்று கருத்து கொண்டவர்களை கொன்றது ஏன்?

தனி நபரை கொன்றால் பிரச்சனை தீர்ந்து விடுமா? ஒருவன் போனால் இன்னொருவன்! பிரேமதாசாவை நாம் அன்று கொன்றோம். இன்று அவனை விட மோசமான மகிந்த!

மனித நோயம் கொண்டவர்கள் தான் சிறந்த போராளிகளாக மாற முடியும், மண்டையில் போடுபவர்கள் போராளிகளாக மாற முடியாது என்பதை சரித்திரம் நிரூபித்து விட்டு போயிருக்கிறது!

ஒரு போராளிக்கு தேவையான முதல் அம்சம் பொறுமை, எளிமை, நிதானம். இதை நாம் ஹோசிமிடம் கண்டோம். சே இடம் கண்டேம்! ஆனால்.....

Edited by Bond007

  • தொடங்கியவர்

......... , தனது குறைகள், பிழைகளை மறைக்க முயலும் தமிழர் கூட்டத்துக்கு என்ன நடக்க வேணுமோ அது சரியாகவே நடந்து இருக்கிறது...

இறுதியாக கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது போராட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது. அதனால் போராட்டம் முடிவுக்கு வந்தள்ளது. அதனை போஸ்மோட்டம் செய்து அதன் சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களைக் கேட்டு அதன் சரி பிழைகளை ஆராய்கின்ற பக்குவம் வரவேண்டும். எத்தனையோ ஆயிரம் மக்களை இழந்திருக்கிறோம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் துரோகிகள் என்று சொல்லியவர்களுடனெல்லாம் ஒரே மேசையில் உட்கார்ந்திருந்து கதைக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் தோற்றுவிட்டது. ஆயுதப் போராட்டமும் தோற்றுவிட்டது. இப்போது தமிழருவி மணியன் சொல்கின்ற அறிவு வழி சிந்திக்க வேண்டும். அவர் துரோகி. இவர் துரோகி. இந்தியா துரோகம் செய்துவிட்டது என்பதை விட்டுவிட்டு யதார்த்தமாகச் செயற்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்ம உறுதியும் தன் இனமானமும் கொண்ட சிங்களவன் வெண்றதில் கூட பிழை இல்லை... அது சரியானதும் கூட

தன் இன மானம் எண்டதை அறியாத , தங்களின் பணிகளை வேறுயாராவது செய்ய வேண்டும் எண்று இருந்து கொண்டு, இது எதுவுமே இல்லாது மற்றவரில் குறைகளை தேடி அலையும் , தனது குறைகள், பிழைகளை மறைக்க முயலும் தமிழர் கூட்டத்துக்கு என்ன நடக்க வேணுமோ அது சரியாகவே நடந்து இருக்கிறது...

உண்மைதான்

ஆனால் இது அழிவுப்பாதை

இதிலிருந்து நாம் மீளவேண்டும்

எனவே முதலில் யாழ் களத்திலாவது ஒன்றாவோம்

பாண்டு..

இந்த நிலையை புலிகள் நீண்ட காலம் முன்னமே புரிந்து வைத்து இருந்தனர்... அதை நான் பல தளபதிகள்வளி கேட்டும் இருக்கிறேன்..

இந்த மக்கள் சிங்களவனுக்கு அடிமையாக இருக்க போகின்றோம் எண்று விரும்பி இருந்தால்... போன நாடாளு மண்ற தேர்தலில் டக்கிளசுக்கும் மற்றய குழுக்களுக்கும் தாராளமாக வாக்களித்து இருப்பார்கள்...

ஆனால் புலிகளை ஆதரித்த தேசிய கூட்டமைப்பை வடக்கு கிழக்கு முழுவதுமாக அனுப்பி வைத்தார்கள்... மக்களின் ஆதரவு இல்லை எண்றால் புலிகள் அமைப்பு இவ்வளவுக்கு வளர்ந்து இருக்க கூடியது அல்ல....

புலிகளை அந்த மக்கள் எதிர்த்தார்கள் எண்று உங்களால் எத்தினை சதவீத மக்களை உங்களால் காட்ட முடியும்...???

சும்மா முட்டாள் தனமாக உளறாதீர்...

புலிகளுக்கு எதிராக அமைந்தது முக்கியமாக சுனாமி... பின்னர் அதை ஒட்டி சர்வதேச நாடுகள்... இந்த சர்வதேச எதிர்ப்புக்கு காரணம் வேறை யாரும் இல்லை... புலம்பெயர்ந்த, கொழும்புவாழ் தமிழ் மக்களே... அவர்களே சிங்களவனின் பிரச்சாரத்துக்கு வலுச்சேர்த்தனர்...

புதுக்குடியிருப்பில் புலிகளின் தளபதிகள் விசவாயும் தாக்கு வீரச்சாவு எனும் போது வீதிக்கு இறங்கின நீங்கள், புலிகளை இங்கிலாந்தில் தடை, இல்லை ஐரோப்பாவில் தடை எனும் போதாவது இறங்கி வலுச்சேர்த்து இருக்க வேண்டும்... அட அப்போதுதான் வேண்டாம் குறைந்தது மாவிலாற்று பிரச்சினையின் போது...

தனது தரப்பு நியாயங்களை சொல்லாது பதுங்கி இருந்து விட்டு இப்போது அவர்கள் முடிவெடுத்து சட்டமாக்கிய பின் சர்வதேச நாடுகளை உங்களின் முடிவை மாற்று எண்று அலறினால் உடனடியாக மாற்றுவார்களா...??

எங்களுக்கு விடுதலையும் வேண்டும் அதை யாராவது வாங்கியும் தர வேன்டும் எண்று நினைக்கும் ஒரு இனம் தமிழன் மட்டும்தான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று இயக்கங்கள் அனைத்தையும் அழித்தது ஏன்?

மாற்று கருத்து கொண்டவர்களை கொன்றது ஏன்?

நீங்கள் அப்ப அங்க இருந்தனீங்களோ எண்டதே சந்தேகமா இருக்கு..! அப்போதைய மாற்று இயக்கம் ஒன்று ட்ரக்குகளில புலிகளை தேடித்திரிஞ்சதும் புலிகள் ஒளிச்சுத் திரிஞ்சதும் தெரியாதோ? புலிகள் தரப்பில் லிங்கம் என்பவரை பேச்சுக்கு அழைத்துக் கொன்றது தெரியுமோ..?! அதுக்கு முன் ஆறு புலிகளை இன்னொரு மாற்று இயக்கம் வெட்டிப் புதைச்சதும் தெரியும்தானே..! இது எல்லாத்துக்கும் பின்னாலதான் மாற்று இயக்கங்கள் மேலே அனுப்பப்பட்டது..!

இறுதியாக கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது போராட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது. அதனால் போராட்டம் முடிவுக்கு வந்தள்ளது. அதனை போஸ்மோட்டம் செய்து அதன் சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களைக் கேட்டு அதன் சரி பிழைகளை ஆராய்கின்ற பக்குவம் வரவேண்டும். எத்தனையோ ஆயிரம் மக்களை இழந்திருக்கிறோம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் துரோகிகள் என்று சொல்லியவர்களுடனெல்லாம் ஒரே மேசையில் உட்கார்ந்திருந்து கதைக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் தோற்றுவிட்டது. ஆயுதப் போராட்டமும் தோற்றுவிட்டது. இப்போது தமிழருவி மணியன் சொல்கின்ற அறிவு வழி சிந்திக்க வேண்டும். அவர் துரோகி. இவர் துரோகி. இந்தியா துரோகம் செய்துவிட்டது என்பதை விட்டுவிட்டு யதார்த்தமாகச் செயற்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இதில் புலிகள் எப்போதும் தெளிவாகவே இருந்தனர்... புலிகள் யாரையாவது துரோகி எண்று சொல்லி கேட்டு இருக்கிறீர்களா...???

இலங்கை படைகளுடன் தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கி நிண்றவர்களை கூட ஒட்டு குழுக்கள் எண்றுதான் சொன்னனர்...

அதேபோல தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இண்று இருக்கும் பலர் புலிகளில் இருந்து மாற்று கருத்து கொண்டவர்கள்தான்... அவர்களை அடிக்கடி அழைத்து அவர்களுடனும் பேசியவர்கள்தான் புலிகள்...

வரலாற்றை ஒரு முறை திரும்பி பாருங்கள்...

நீங்கள் அப்ப அங்க இருந்தனீங்களோ எண்டதே சந்தேகமா இருக்கு..! அப்போதைய மாற்று இயக்கம் ஒன்று ட்ரக்குகளில புலிகளை தேடித்திரிஞ்சதும் புலிகள் ஒளிச்சுத் திரிஞ்சதும் தெரியாதோ? புலிகள் தரப்பில் லிங்கம் என்பவரை பேச்சுக்கு அழைத்துக் கொன்றது தெரியுமோ..?! அதுக்கு முன் ஆறு புலிகளை இன்னொரு மாற்று இயக்கம் வெட்டிப் புதைச்சதும் தெரியும்தானே..! இது எல்லாத்துக்கும் பின்னாலதான் மாற்று இயக்கங்கள் மேலே அனுப்பப்பட்டது..!

அப்போது புலிகள் நடத்திய பண்ணைகளை எல்லாம் சூறையாடினார்கள்... புலிகள் நடத்திய பல்பொருள் அங்காடிகளை எல்லாம் அடித்து நொருக்கினார்கள்... புலிகள் நடமாடிய வாகனங்களையும் பறித்து எடுத்தார்கள்... இதில் தென்மராட்ச்சி தளபதியாக இருந்த கேடில்ஸ் அண்ணையின் வாகனமும் அடக்கம்...

தன்னை நம்பி பின்னால் வந்த போராளிகளை காக்க வேண்டியது அதன் தலைவரின் கடமை... இல்லையா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி பொண்டு நோட் நோட் செவிண் போராட்டம் புடலங்காய் இவற்றில் அக்கறையில்லை என்றால் எதுக்குக் கருத்தெழுதுகிறீர் தூரத்த்கில் இருந்து வேடிக்கை பார்க்கவேண்டியதுதானே. மாற்றியக்கமும் மயிரும் இவர்கள் தம்மை களத்தில் இருந்து கலைத்து விட்டார்கள் என இறுதிவரை துரோகத்தை மாத்திரமே ஆயுதமாகக் கையிலெடுத்து காட்டிக்கொடுப்புகளில் ஈடுபட்டு இப்போதும் யார் முதலில் சிங்களவன் காலை நன்றாக நக்குவது எனப் போட்டிபோட்டு தமிழின அழிப்பினில் முன்ணணியில் நிற்கிறார்கள். அவர்களுக்குப் போய் வக்காளத்துவாங்கிக்கொண்டு இங்க கனபேர் வந்திட்டினம். இப்பொ புலி அழிந்துபோய்விட்டது களம் காலியாக இருக்கு போங்கோவன், போய் போராட்டத்தைத் தொடங்குங்கோவன் அரசியல் செய்யுங்கோவன் எதுக்கு மைச் செலவும் பேபர்ச் செலவும் இல்லாமல் இணையங்களில் எழுதி தமிழர் உரிமைகளைத் திரும்பிப்பெற நினைக்கிறியள். இனிமேல் உங்களிக்கு அங்கு ஆபத்தில்லை போங்கோவன். இங்க கருத்தெழுதுபவர்கள் ஒன்றை மட்டும் விளங்கி கொள்ளவும் தற்போது போராட்ட களம் காலியாகக் கிடக்குது நீங்கள் நினைக்கும் போராட்ட வடிவத்தினை புலத்தினில் போய் முயற்சி செய்யுங்கோ.உங்களது போராட்ட முயற்சியினை புறந்தள்ளிய பிரபாகரன் இப்போது இவ்வுலகில் இல்லை பயப்பிடாமல் போங்கோ போய் ஒரு முடிவு காணுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.