Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தேசங்களில் புதிய கருணாக்கள்

Featured Replies

பிரபாகரன் அல்பிறட் துரையப்பாவை சுட இல்லை... சுட உத்தரவு கொடுக்கவும் இல்லை... சுட்டவர்களுக்கு பிரபாகரன் தலைவராக இருக்க கூட இல்லை...

சுட்டவர்களுடன் பிரபாகரனும் சம்பந்தப்பட்டே தோழமையோடோ இருந்தார் என்பதுதான் உண்மை... கற்பனையை தட்டி விடும் அண்ணாமார் வரலாறுகளை தூசு தட்டிப்பார்த்து அறிவை பெருக்குவது நல்லது...

இல்ல பந்தயம் பிடி நான் கற்பனையாய் புழுகத்தான் போறன் எண்டால் மற்றவன் கேவலமாக ஏச்சு வங்குவதை தடுக்க ஏலாது... ஏதோ அவர் அவர்கள் தங்கட மரியாதையை ( இருந்தால் ) காப்பாத்தி கொள்ளட்டும்...

புலிகள் ஏன் துரோகி அழிப்பை ஆரம்பிதார்கள் என்பதை காரணத்தோடு எங்களில் தலைவர் சொல்கிறார்... முடிந்தால் பொது அறிவை வழர்த்து கொள்ளுங்கள்...

இரண்டாவது வீடியோவில் சிறீசபாரத்தினம் பற்றியும் சொல்கிறார்...

Edited by தயா

  • Replies 60
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்புகளிலுள்ள சில விடயங்கள் நான் ஏற்கனவே அறிந்தவைதான். பல புதியவை.

மிக்க நன்றி தயா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் அல்பிறட் துரையப்பாவை சுட இல்லை... சுட உத்தரவு கொடுக்கவும் இல்லை... சுட்டவர்களுக்கு பிரபாகரன் தலைவராக இருக்க கூட இல்லை...

சுட்டவர்களுடன் பிரபாகரனும் சம்பந்தப்பட்டே தோழமையோடோ இருந்தார் என்பதுதான் உண்மை... கற்பனையை தட்டி விடும் அண்ணாமார் வரலாறுகளை தூசு தட்டிப்பார்த்து அறிவை பெருக்குவது நல்லது...

இல்ல பந்தயம் பிடி நான் கற்பனையாய் புழுகத்தான் போறன் எண்டால் மற்றவன் கேவலமாக ஏச்சு வங்குவதை தடுக்க ஏலாது... ஏதோ அவர் அவர்கள் தங்கட மரியாதையை ( இருந்தால் ) காப்பாத்தி கொள்ளட்டும்...

புலிகள் ஏன் துரோகி அழிப்பை ஆரம்பிதார்கள் என்பதை காரணத்தோடு எங்களில் தலைவர் சொல்கிறார்... முடிந்தால் பொது அறிவை வழர்த்து கொள்ளுங்கள்...

இரண்டாவது வீடியோவில் சிறீசபாரத்தினம் பற்றியும் சொல்கிறார்...

">

  • கருத்துக்கள உறவுகள்

தலைவன்,

முன்பு துரையப்பா கொலை செய்யப்பட்ட போது, அண்ணர் அமிர்தலிங்கத்தார் சொன்னார் "துரோகிகள் சுட்டுக் கொல்லப் பட வேண்டியவர்ளே" என்று. அதன் பின் அண்ணர் அமீருக்கும் அதுவே நடந்தது. அது போலத்தான் உந்த ரேடியோக் கலந்துரையாடலும். தங்களை உத்தமர்களாக்க, இவர்கள் யார் யாரையோ எல்லாம் துரோகி என்று பட்டம் கட்டி மகிழ்ந்தார்கள். இப்போ அதுவே திரும்ப அவர்களிடம் வந்து நிக்குது.

"நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே"

நானில்லை நெல்லையன் தான் சொல்கிறார். :wub:

"நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே"

நானில்லை நெல்லையன் தான் சொல்கிறார். :D

:rolleyes:" நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே " என்பது சிவபெருமானைப் பார்த்து நக்கீரன் சொன்னதாகத் தான் நான் அறிஞ்சனான். அப்படிப் பார்த்தாலும் துரையப்பா செய்த குற்றமென்ன என்பதை இதுவரை எவரும் சொன்னதாக நான் அறியவில்லை. ஒருவேளை யாழ் நகரை அழகுபடுத்தியது தான், அவர் செய்த குற்றமென்று சிலபேர் நினைக்கினமோ தெரியவில்லை. :rolleyes::unsure:

பிரபாகரனே தான் தான் துரையப்பாவைச் சுட்டதென்று வாக்குமுலம் கொடுத்த பின்னும் (இதனை Youtube பில் ஏற்கனவே நானும் பார்த்திருந்தேன். முடிந்தால் அதனை தேடி இணைக்கப் பார்க்கின்றேன்.) பிரபாகரனுக்கும் துரையப்பா கொலைக்கும் எந்தவித சம்மந்தமுமில்லையென்று தயா கதையளப்பதை என்ன சொல்ல ?? :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவன்,

முன்பு துரையப்பா கொலை செய்யப்பட்ட போது, அண்ணர் அமிர்தலிங்கத்தார் சொன்னார் "துரோகிகள் சுட்டுக் கொல்லப் பட வேண்டியவர்ளே" என்று. அதன் பின் அண்ணர் அமீருக்கும் அதுவே நடந்தது. அது போலத்தான் உந்த ரேடியோக் கலந்துரையாடலும். தங்களை உத்தமர்களாக்க, இவர்கள் யார் யாரையோ எல்லாம் துரோகி என்று பட்டம் கட்டி மகிழ்ந்தார்கள். இப்போ அதுவே திரும்ப அவர்களிடம் வந்து நிக்குது.

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பயன்படல் போல்,

சில புல்லர்களின் திருவாசகங்களும் தியாகிகள் திருவாசங்கள் போல் மதிப்பை வாங்கலாம், ஆனால் காலம் என்ற ஒன்று போலிகளை உரைக்கும் மருந்து. அப்படி உலகமே மிகத்தெளிந்த நிலையை அடைந்த பொதும் அந்தப் போலிகளின் வக்காளாத்துக்களை எதனால், எந்த நிலையுடன் பட்டை கிழம்ப அடிக்க வேண்டும்! இந்தப் புதிருக்கு விடை என்ன?

:rolleyes:அதைச் சொல்ல தங்களுக்கு என்ன அருகதை உண்டோ ?? அது மற்றையவர்களுக்கும் உண்டென்பதை முதலில் தாங்களும் புரிந்து கொள்வீர்களென நம்புகின்றேன். :rolleyes:

மகிந்தாவின் சிந்தனைகளுக்கு ஆட்பட்டோருக்கு இந்தக் களமே மொத்த முரண்பாடு என்பதை அறியாமைதானோ, இந்த அருகதை யாருக்கு உண்டு என்று கேட்க வைக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

....ஈழத்தமிழினத்தின் பல படித்த தலைமைகளை சிங்களவனும், எமக்காக போராட வந்த இயங்கங்களும் போட்டுத்தள்ளின!!!!!!!!! .... இப்போது ஏறக்குறைய ஒன்றும் மீதியில்லை!!!!!!!

... அல்பிரட் துரையப்பாவில் தொடங்கிய துரோகி அழிப்பு இன்னும் முடியவில்லை .....

அல்பிரட் துரையப்பா ஏன் கொல்லப்பட்டார்??? நிச்சயமாக தெரியாது??? யாரை காட்டிக்கொடுத்தார்???? தெரியாது!! என்ன தமிழர்களுக்கு செய்தார்?? அண்மையில் கேள்விப்பட்டேன் ......

..... அல்பிரட் துரையப்பா, சாதி வெறி பிடித்த யாழ் நகரின், சுயேட்சையாக போட்டி இட்டு மேஜராக வந்த, அதே யாழ் வாசிகளினால் கூறப்படும் குறைந்த சாதிக்காரன்!!!!!!!! யாழ் மேஜராக வந்தவுடன், சிங்கள கட்சியான சிறிலங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்து விட்டாராம்!! ஆனால் ... யாழ்நகருக்கு முன் எந்த ஒரு அரசியல் வாதியும் செய்யாதவைகலை செய்தராம், .... யாழ் மத்திய சந்தை, வீரசிங்கம் மண்டபம், சுப்பிரமணிய பூங்கா, .............. தொடர்ந்தது!! .... இதை யாழ் உயர் சாதி அமிர்தலிங்க ஐயாவிற்கு புளியைக் கரைத்ததாம்!! "என்ன, இந்த குறைந்த சாதிக்காரன் வந்து எங்கள் பதவிக்கு வேட்டு வைக்கப் போகிறான்" ... முடிபு அண்ணன் அமிரின் சிந்தனைக்கு தம்பி பிரபா செயற்படுத்தினார்!!!!

..... அதே அண்ணன் அமிர், இன்று????????????????

தமிழர்களை, தமிழர்கள் வேட்டையாடியது ... சிங்களவனுக்கு வனது இலக்கிற்கு துணை புரிந்தது!!!!

போராட்டங்களில் வரலாற்றில் தன் இனங்களுக்குள்ளே ஆன களை எடுப்புத்தான் முதல் கட்ட போர், எதிரி இனம் என்ற அடிப்படையில் போர் மனிதர்களைக் கொல்வது எப்படி யதார்த்தம் இல்லையோ, அதேபோல் பகையை தன்னினம் என்று கொண்டாட முனைவதும் போரியல் யதார்த்தம் இல்லாதது.

வசதிஉடையவனுக்கு வக்காளத்துக்கள் மிகமலிவாய்க் கிடைப்பார்கள் என்பது எவளவு உண்மையோ, அதை விட உண்மை அவர்கள் உண்மை என்ற ஈரம் உலர்ந்த நெஞ்சங்களாய்த்தான் இருப்பார்கள்!

பிரபாகரனே தான் தான் துரையப்பாவைச் சுட்டதென்று வாக்குமுலம் கொடுத்த பின்னும் (இதனை Youtube பில் ஏற்கனவே நானும் பார்த்திருந்தேன். முடிந்தால் அதனை தேடி இணைக்கப் பார்க்கின்றேன்.) பிரபாகரனுக்கும் துரையப்பா கொலைக்கும் எந்தவித சம்மந்தமுமில்லையென்று தயா கதையளப்பதை என்ன சொல்ல ?? :rolleyes::rolleyes:

விடுதலை தீப்பொறியில் இருந்து அந்த வீடியோவை யூரியுப்பில் தரவேற்றியதும் நான் தான்... விடுதலை தீப்பொறி பேளையின் ஆரம்பம் முதல் முடிவு வரைக்கும் நண்றாகவே பார்த்தும் இருக்கிறேன்...

பிரபாகரன் அந்த முதல் வீடியோவில் ( எனது ஆதாரத்தில் ) தெளிவாகவே சொல்கிறார்.... துரையப்பா சம்பவத்துக்கு பிறகு நாங்கள் எல்லாம் தேடப்படும் நபர்களானோம்... அங்கே பஸ்தியாம்பிள்ளை எனும் பொலீஸ் அதிகாரி எங்களை பிடிப்பதுக்காக நியமிக்க பட்டு இருந்தார்... எண்று...

அவரால் அங்கு நான் துரைப்பாவை சுட்டு கொண்ற பின் எனும் பதம் பாவிக்க பட வில்லை... அதே விடியோவில் சிறீசபாரத்தினத்துடன் எனது வீட்டுக்கு முதல்நாள் போனேன் எண்று இரண்டாவது வீடியோவில் சொல்கிறார்... அதாவது அந்தக்காலம் பிரபாகரனும் சிறீசபாரத்தினமும் ஒண்றாக சுற்றி திரிந்த காலம்... (துரையப்பாவை சுட்டு கொண்றதின் பின்னரான காலம் கூட ) சிறீ சபாரத்தினம் எப்போதும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை... அவர்களுடன் இணைந்து வேலை செய்யவும் இல்லை...

உங்களின் ஆதாரங்களை முன் வைத்து எழுத முயலுங்கள்... கயிறுதிரிக்கும் வேலையை வேறை இடங்களிலை வேறு நபர்களுடன் பார்த்து கொள்ளலாம்...

நாகரீகம் பற்றி பேசுபவர் இங்கு எந்த நாகரீகத்தை கடைப்பிடித்தீர் எண்றுதான் தெரியவில்லை... கதை அளப்பது பற்றி சொல்லும் நீங்கள் நான் சொல்வது பொய் என்பதுக்கு ஆதாரம் எதையாவது சமர்ப்பித்தீரா...??? அதை முதலில் முயண்று பாரும்...

இங்கு அனைவருக்கும் தெரியும் ஆதாரம் இல்லாது பேசுவது வசம்பின் குணம் எண்று...

Edited by தயா

பிரபாகரன் அந்த முதல் வீடியோவில் ( எனது ஆதாரத்தில் ) தெளிவாகவே சொல்கிறார்.... துரையப்பா சம்பவத்துக்கு பிறகு நாங்கள் எல்லாம் தேடப்படும் நபர்களானோம்... அங்கே பஸ்தியாம்பிள்ளை எனும் பொலீஸ் அதிகாரி எங்களை பிடிப்பதுக்காக நியமிக்க பட்டு இருந்தார்... எண்று...

அவரால் அங்கு நான் துரைப்பாவை சுட்டு கொண்ற பின் எனும் பதம் பாவிக்க பட வில்லை... அதே விடியோவில் சிறீசபாரத்தினத்துடன் எனது வீட்டுக்கு முதல்நாள் போனேன் எண்று இரண்டாவது வீடியோவில் சொல்கிறார்... அதாவது அந்தக்காலம் பிரபாகரனும் சிறீசபாரத்தினமும் ஒண்றாக சுற்றி திரிந்த காலம்... (துரையப்பாவை சுட்டு கொண்றதின் பின்னரான காலம் கூட ) சிறீ சபாரத்தினம் எப்போதும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை... அவர்களுடன் இணைந்து வேலை செய்யவும் இல்லை...

துரையப்பா சம்பவத்துக்கு பிறகு என்று பிரபாகரன் சொன்னால், பிரபாகரன் துரையப்பாவைக் கொல்லவில்லையென்று எந்த அர்த்தத்தில் சொல்கின்றீர்கள். துரையப்பாவைக் கொன்றது பிரபாகரன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். உண்மை இப்படியிருக்க அதை மாற்றி உங்கள் விருப்பத்திற்கு சொன்னதைத் தான் கதையளக்கின்றீர்கள் என்று சொன்னேன். அது சாதாரண ஒரு வார்த்தைப் பிரயோகம். அதற்கே உந்தக் குதி குதிக்கின்றீர்.

பிரபாகரனோடு ஆரம்ப காலத்திலிருந்து இருந்த ராகவன் தற்போது பிரித்தானியாவில் தானிருக்கிறார். அவரிடமே கேட்டால் விபரம் சொல்வார். குமுதத்தில் ராகவன் பிரபாகரன் பற்றிய ஒரு தொடரும் சில மாதங்களின் முன்பு எழுதியவர். அதில் பிரபாகரன் துரையப்பாவை கொன்றது பற்றி அவர் எழுதியதை அப்படியே இங்கு இணைக்கின்றேன்.

" 1954 நவம்பர் 26ம் தேதி பிறந்த பிரபாகரன், ஆல்ஃப்ரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டுக் கொன்றபோது வயது 21. அவரது நண்பர்களுக்கும் கிட்டத்தட்ட அதே வயதுதான். அவர்களுக்கெல்லாம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. செய்து முடிக்கும் வல்லமை பிரபாகரனுக்கு இருந்தது.

திட்டத்தில் அவர் எந்த மாறுதலையும் ஒப்புக்கொள்ளவில்லை. அதே வட்டுக்கோட்டை தொகுதி. பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில் வாசல். வெள்ளிக்கிழமை தோறும் துரையப்பா அங்கே வருவார். மாலை வேளை பூஜைகளில் தவறாமல் கலந்துகொள்வார்.

அன்றைக்கும் வந்தார். பிரபாகரன் காத்திருந்தார். உடன் சில நண்பர்கள். கிருபாகரன், கலாபதி, பற்குணம்.

துளி பதற்றமில்லை. பயமில்லை. கரங்கள் உதறவில்லை. நான் இதைச் செய்யப்போகிறேன். ஒரே சாட்சி, பொன்னாலை வரதராஜப் பெருமாள். அவ்வளவுதான். காரிலிருந்து இறங்கிய துரையப்பா, பிரபாகரனால் சுடப்பட்டார்.

இறந்து விழுந்தவரை இழுத்துப் போட்டார்கள். அருகே கிடந்த துண்டு அட்டை ஒன்றை எடுத்து பிரபாகரன் வேகமாக ஏதோ கிறுக்கினார். அதைத் தூக்கி துரையப்பாவின்மீது போட்டார். அதில் TNT என்றிருந்தது. அவர் வந்த காரிலேயே ஏறிக்கொண்டார்கள். பற்குணம் வண்டியை ஓட்டினார் ".

பிரபாகரன் புதிய தமிழ்ப்புலிகள் தொடங்கி பின் இடையில் அதைவிட்டு ரெலோவிலும் இணைந்திருந்தது தங்களுக்குத் தெரியவில்லை என்பது நன்கு தெரிகின்றது. நீர்வேலி வங்கிக் கொள்ளை நடந்த போது பிரபாகரன் ரெலோவில் தான் இருந்தார். இது பலருக்குத் தெரிந்த விடயம். நம்பாவிட்டால் ராகவனைக் கேளுங்கள் அவர் புரிய வைப்பார். தங்களைப் பொறுத்தவரை தங்களுக்குத் தெரியாத விடயங்களை யாராவது சொன்னால், அதை ஏற்க மறுத்து விடுகின்றீர்கள். அதில் உண்மை உள்ளதா இல்லையா என்பதைக் கூட சிந்திக்க மறுக்கின்றீர்கள். அதனால் அடுத்தவனை ஆதாரமில்லாமல் கதைப்பதாகச் சொல்லி சமாளிக்கப் பார்க்கின்றீர்கள்.

Edited by Vasampu

துரையப்பா சம்பவத்துக்கு பிறகு என்று பிரபாகரன் சொன்னால், பிரபாகரன் துரையப்பாவைக் கொல்லவில்லையென்று எந்த அர்த்தத்தில் சொல்கின்றீர்கள். துரையப்பாவைக் கொன்றது பிரபாகரன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். உண்மை இப்படியிருக்க அதை மாற்றி உங்கள் விருப்பத்திற்கு சொன்னதைத் தான் கதையளக்கின்றீர்கள் என்று சொன்னேன். அது சாதாரண ஒரு வார்த்தைப் பிரயோகம். அதற்கே உந்தக் குதி குதிக்கின்றீர்.

பிரபாகரன் புதிய தமிழ்ப்புலிகள் தொடங்கி பின் இடையில் அதைவிட்டு ரெலோவிலும் இணைந்திருந்தது தங்களுக்குத் தெரியவில்லை என்பது நன்கு தெரிகின்றது. நீர்வேலி வங்கிக் கொள்ளை நடந்த போது பிரபாகரன் ரெலோவில் தான் இருந்தார். இது பலருக்குத் தெரிந்த விடயம். நம்பாவிட்டால் ராகவனைக் கேளுங்கள் அவர் புரிய வைப்பார். தங்களைப் பொறுத்தவரை தங்களுக்குத் தெரியாத விடயங்களை யாராவது சொன்னால், அதை ஏற்க மறுத்து விடுகின்றீர்கள். அதில் உண்மை உள்ளதா இல்லையா என்பதைக் கூட சிந்திக்க மறுக்கின்றீர்கள். அதனால் அடுத்தவனை ஆதாரமில்லாமல் கதைப்பதாகச் சொல்லி சமாளிக்கப் பார்க்கின்றீர்கள்...

சரி சாதாரண வார்த்தை பிரயோகங்களை உமக்கு சொல்லும் போது நீரும் குத்திமுறியாமல் ஏற்றுக்கொள்ளும்...

தலைவர் தான் TELOவில் இருந்த போது தங்கத்துரை அண்ணைக்கு மெய்ப்பாதுகாவலராக சுற்றி திரிந்தது வரைக்கும் சொல்லி இருக்கிறார்... அப்பையா அண்ணையின் உதவியாளராக நவிண்டிலில் வெடி பொருள் தயாரிக்கும் தொழில் சாலையில் வேலைசெய்த ஒரு கடை நிலை போராளியாகவே TELOவில் இயங்கியதாகவும் சொன்னார்...

தன்னை விட செயற்பாடில் பிந்தங்கி நிண்றவர்கள் செயற்பட வேண்டிய வேளைகளில் எல்லாம் தயங்கி நிண்றவர்கள் எல்லாம் தலைமை பொறுப்பின் கீழ் வேலை செய்வதை தலைவர் விரும்பவில்லை... அகவேதான் பிரிந்து நிண்று TNT அமைப்பை தோற்றுவிக்கிறார்... அதன் பின்னர் அவர் திரும்பவும் TELOவுக்கு போக வில்லை... PLOT அமைப்பினர் பிரிந்து போனதும் பிரபாகரன் TELOவில் இனைந்து கொண்டார் எண்று PLOT அமைப்பின சொல்வது உண்மையாக இருக்குமா என்பதை உங்களின் அறிவுக்கே விட்டு விடுகிறேன்...

TNT அமைப்பினூடு அவர் நடத்திய முதலாவது தாக்குதல் பெற்றோல் சைட் நடேசன் எனும் சுதந்திர கட்ச்சி உறுப்பினர் தான்... நீங்கள் சொல்பவர்கள் உட்பட PLOT யினராக பிரிந்து செண்ற போது விரக்தியுற்ற தலைவர் செயற்பாடுகளில் இருந்து விலகி நிக்கிறார்... அப்போது புதிதாக இணைந்து இருந்த சாள்ஸ் அன்ரனி எனப்படும் சீலன் அண்ணாவினால் மனம் அமைதியாக்க பட்ட பின்னர் மீண்டும் செயற்பாடுகளுக்குள் வருகிறார்...

தலைவருடன் இணைந்து நிண்ற எண்று சொல்லிக் கொள்ளும் PLOT காறர் பின்னர் தங்களுக்குள் அடிபட்டு அழிந்து போயினர்... இண்டைக்கு தாங்கள் சொல்வதுதான் உண்மை எண்று அவர்களில் எஞ்சி இருப்பவர்களால் சாதிக்கவும் முடியும்... காரணம் அண்று இருந்தவர்கள் இண்று இல்லை தானே...

வசம்பு.. ! சொல்பவன் ஏன் சொல்கிறான்... சொல்பவனின் நம்பகத்தன்மை என்ன என்பதை முதலில் கண்டறிய முயலுங்கள்... அதுக்குதான் உங்களுக்கு எல்லாம் பகுத்தறிவு எண்டது இருக்கிறது...

பிரபாகரன் தான் செய்யாதவைகளை தான் செய்ததாக சொன்னது கிடையாது... தான் செய்தவைகளுக்கு தனது தரப்பின் நியாயங்களை சொல்லாமலும் கிடையாது...

கீழே சீலன் அண்ணா பற்றி தலைவரும் தனது நண்பர்கள் பலர் பிரிந்து செண்ற போது ஏற்பட்ட மன உழைச்சல் பற்றியும் குறிப்பிடுகிறார்... அவர் PLOT அமைப்பினர் எண்று சொல்வதை தவிர்த்து இருக்கிறார்... (இன்னும் ஒரு நண்பரின் பதிவு இது)

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் புலிகள் இல்லையே மக்களுக்கச் சேவை செய்ய சரியான சந்தர்ப்பம் மாற்றுக் கருத்தாளர்களுக்கு வாய்த்திருக்கிறது. செய்ய வேண்டியதுதானே? இன்னும் புலிகளைப் பற்றி குறை சொல்லி என்ன பயன்?. புலிகள் இல்லாவிட்டால் உங்களுக்கு அரசியலே இல்லை என்பதே உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.