Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமண நட்சத்திர பொருத்தம் (வயசு வந்தவர்களுக்கு மட்டும்)

Featured Replies

வணக்கம்,

ஒரு தேவையின் நிமித்தம் இண்டைக்கு கூகிழில திருமண பொருத்தம் எண்டு அடிச்சுப்பார்த்தன். கீழுள்ள தகவல் கிடைச்சிது.

இன்னமும் கலியாணம் செய்யாத ஆட்கள் உங்கடை காதலர்களிண்ட அல்லது திருமணம் செய்யப்போகிறவரிண்ட நட்சத்திரம் பொருத்தமாய் வருகிதோ எண்டு பரிசோதனை செய்து பாருங்கோ. ஏற்கனவே கலியாணம் செய்த ஆக்கள் உங்கடை துணையிண்ட நட்சத்திரம் பொருத்தமாய் இருக்கிதோ எண்டு பரிசோதிச்சு பாருங்கோ. :lol:

நீங்கள் என்ன நட்சத்திரம் எண்டு தெரியாட்டிக்கு.. கீழுள்ள கணிப்பானில உங்கட பிறந்த திகதி, நேரம், இடம், Time Zone தகவல்களை வழங்கினால் என்ன நட்சத்திரம் எண்டு கணிச்சு சொல்லும்: http://www.chennaiiq.com/astrology/rasi_nakshatra_calculator.asp

14848274.png

72344839.png

99868471.png

பொருத்தம் பார்க்கற விளையாட்டுக்கள் எல்லாம் எவ்வளவு தூரம் உண்மை எண்டு எனக்கு தெரியாது. ஏதோ ஒரு தகவலுக்கு இணைச்சு இருக்கறன்.

தகவல் மூலம்: http://www.chennaiiq.com/astrology/marriage_match_by_star_tamil.asp ,நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை நட்சத்திரத்துக்கும் என்னுடன் வேலை செய்பவவின் நட்சத்திரத்துக்கும்

நல்லா பொருத்தமா இருக்கு. :lol::wub:

உங்கள் கருத்துக்கு நன்றி மாப்பிள்ளை அவர்களே. இருப்பினும் பொது இடங்களில் தமிழை எழுதும் போது சாதாரண எங்கள் கிராமிய பேச்சுவழக்கில் எழுதாமல் சரியான எழுத்து வழக்கில் எழுதினால் நன்றாய் இருக்கும் என்று நினைக்கின்றேன்! நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அல்லது பின் ஏதோ ஒரு படத்தில் கமலஹாசன் எம் யாழ்ப்பாணத்து தமிழ் பேசிய மாதிரி சிலர் எள்ளி நகையாடப்போகின்றனர்.

  • தொடங்கியவர்

ஏற்கனவே நல்ல மரியாதைதான் கிடைச்சுக்கொண்டு இருக்கிது. தமிழை ஒழுங்காய் எழுதி என்ன மாற்றம் வரப்போகிது? சரி கிராமியத்தமிழை விடுங்கோ.. உங்கடை நட்சத்திரமும் உங்கள் துணை / காதலியின் நட்சத்திரமும் பொருத்தமாய் இருக்கிதோ விடிவெள்ளி?

சஜீவன், உங்களுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையெண்டால் அவவை மடக்குவதற்கு முயற்சிசெய்து பார்க்கலாம். திருமணம் ஆகிவிட்டுது எண்டால் பெட்டிப்பாம்பாக நீங்கள் அடங்கிபோவது தவிர வேறு வழியில்லை. :D

நான் எங்கடை குடும்பத்தில எனக்கு தெரிஞ்ச நாலைஞ்சு தம்பதிகளிண்ட நட்சத்திரங்கள் பொருந்துதோ எண்டு அம்மாவின் உதவியுடன் பரிசோதிச்சு பார்த்தன். ஒரு சோடி தவிர மிச்சம் ஒண்டும் பொருந்த இல்லை. நட்சத்திரம் பொருந்தினால் சாதகத்தில இருக்கற மிச்ச பொருத்தங்கள் கொஞ்சம் இலகுவாய் பொருந்தும் எண்டு நினைக்கிறன். :)

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் கலியாணம் செய்யாத ஆட்கள் உங்கடை காதலர்களிண்ட அல்லது திருமணம் செய்யப்போகிறவரிண்ட நட்சத்திரம் பொருத்தமாய் வருகிதோ எண்டு பரிசோதனை செய்து பாருங்கோ.

இப்படி பொருத்தம் பார்த்து கலியாணம் கட்டினா பிரச்சனை வராதா?

ஏற்கனவே கலியாணம் செய்த ஆக்கள் உங்கடை துணையிண்ட நட்சத்திரம் பொருத்தமாய் இருக்கிதோ எண்டு பரிசோதிச்சு பாருங்கோ.

இது எங்கையோ கொண்டு போய் விடப்போகுது போல இருக்கு.

  • தொடங்கியவர்

பொருத்தம் பார்த்து கலியாணம் கட்டினாலும் பிரச்சனைகள் வரும்தான். ஆனாலும் இதற்குபிறகு பொருத்தம் பார்க்காமல் கட்டினபடியாலதான் பிரச்சனைகள் வருகிது, வந்தது எண்டு ஒரு சாட்டு சொல்லமாட்டீனம்தானே கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை ஒருத்தருக்கு கலியாண ஆசை வந்துட்டுது போலை கிடக்கு. :D

அதுதான் மனுசனை இப்புடி போட்டு சிப்பிலியாட்டுது :D

  • தொடங்கியவர்

ஊர்ப்புதினத்திலை ஒரு செய்தி வந்தால் 500 பார்வைகள் வருகிறதே பெரிய பாடாய் இருக்கிது. ஆனால் இந்ததிரி 1,300 தடவைகளுக்கு மேல பார்வையிடப்பட்டு இருக்கிது. யார் யாரை சிப்பிலி ஆட்டிது எண்டு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்
:D:D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D:D

:D

இஞ்சை ஒருத்தருக்கு கலியாண ஆசை வந்துட்டுது போலை கிடக்கு. :D

அதுதான் மனுசனை இப்புடி போட்டு சிப்பிலியாட்டுது :D

:D எல்லாம் மாப்பி அண்னோவோட தூரநோக்குத்தான் காரணமாம் :D

ஊர்ப்புதினத்திலை ஒரு செய்தி வந்தால் 500 பார்வைகள் வருகிறதே பெரிய பாடாய் இருக்கிது. ஆனால் இந்ததிரி 1,300 தடவைகளுக்கு மேல பார்வையிடப்பட்டு இருக்கிது. யார் யாரை சிப்பிலி ஆட்டிது எண்டு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. :D

:lol: ஊர்புதினத்தில இப்ப மயிர்கூச்சேரியும் செய்திகள் வாரதில்லைதானே பிறகு ஏன் அதை வாசிப்பான்,இப்படியான் செய்திகளில் ஒரு கிலு கிலுப்பு இருக்கு :lol:

  • தொடங்கியவர்

ஊர்ப்புதினத்தில மயிர்கூச்செரியும் செய்திகளுக்காகத்தான் எல்லாரும் ஏங்கிறீனம் எண்டுறது உண்மைதான். இவையளிண்ட தூய சிந்தனை, தூரநோக்கு எல்லாம் மற்றவன் சாகிறதையும், சனங்களிண்ட அவயவங்கள் துண்டாடப்படுகிறதையும் வேடிக்கை பார்க்கிறதுதான். :(

முன்பு அநுராதபுரத்தில் கரும்புலிகளின் எல்லாளன் தாக்குதல் நடைபெற்றபோது நான் மனச்சாட்சி பேசுது என்கின்ற தலைப்பில ஓர் திரியை ஆரம்பிச்சு இருந்தன். அடியடா பிடியடா எண்டு எனக்கு கல்லெறி விழுந்திச்சிது. காரணம்? ஊரில நடைபெறுகிற மயிர்குச்செரியும் சம்பவங்களை நம்மவர்கள் நியாயப்படுத்தும் அழகு இருக்கிதே.. அப்பப்பா.. :wub: ஊரில யாரும் சாகணும். இஞ்ச தூரநோக்கோடையும், தெளிவான சிந்தனையோடையும் நாம இருந்து அதை ஊக்குவிச்சு நாம ரசிக்கனும். :D

  • தொடங்கியவர்

பழைய திரியை கூகிழில தேடிக்கண்டிபிடிச்சன். அன்று நான் எழுதிய கருத்து தூரநோக்கும், தெளிவான சிந்தனைகளும் உள்ளவர்களூக்காக மீண்டும்: :wub:

வணக்கம்,

எனது மனச்சாட்சியைப் பார்த்து சில கேள்விகள் கேட்டேன்.

இந்தக் கருத்தாடலின் நோக்கம் எனது மனச்சாட்சிய உங்களுடன் பகிர்ந்துகொள்வதே ஒழிய உங்கள் மனதைப் புண்படுத்துவதோ அல்லது கவலைப்படுத்துவதோ அல்ல.

நேற்று அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான வெற்றிகரமான தாக்குதலின்போது 21 கரும்புலிகள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்தார்கள்.

எங்களில் பலருக்கு இந்தத் தாக்குதலை பற்றிக் கேள்விப்பட்டதும் நல்ல சந்தோசம். புளுகம். நேற்று, இன்று எல்லாம் யாழில் எத்தனை விருந்தினர்கள் வந்தார்கள், குறிப்பிட்ட செய்தித் தலைப்பில் எத்தனை பதில் கருத்துக்கள் வந்தன என்பன இவற்றுக்கு சாட்சி.

ஆனால், நாங்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த வீரர்களின் தனிப்பட்ட வாழ்வை நினைத்துப் பார்க்கின்றோமா? அவர்களின் தனிப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு பேரதிர்ச்சியில், கவலையில் இப்போது இருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கின்றோமா?

கன காலமாக சண்டை இல்லை, புலி பதுங்கி இருக்கிது பாயப்போகிது எண்டு சிலர் ஒருபக்கத்தால கொம்ண்ட அடிக்க, இன்னொரு சிலர் அவங்களால இனி ஒண்டும் ஏலாது அதான் பேசாமல் இருக்கிறாங்கள் எண்டு இன்னொரு பக்கத்தால கொமண்ட் அடிக்க இப்படி நிலமை இருந்தது.

நேற்று மீண்டும் போர், தாக்குதல். இந்தமுறை வெற்றி. ஆனால், இப்படி ஒவ்வொரு தடவையும் வெற்றி வரும் என்று இல்லை. மீண்டும் வெற்றி வரலாம் அல்லது தோல்வியிலும் முடியலாம்.

ஆனால், நாங்கள் இந்தப் போரினால் வரும் அழிவுகளை, துயரங்களை தாங்கிக்கொள்ள தயாராக இருக்கின்றோமா? பெரிய அளவில் உயிர் இழப்புக்கள் வரும்போது உங்களில் எத்தனை பேரால் வெற்றியைப் பார்த்து சந்தோசப் படமுடியும்?

போர் மூலமே தீர்வு என்று விரும்புபவர்கள், போரின் போது வரும் அழிவுகளை, துன்பங்களை தாங்குவதற்கு தயாராக இருக்கின்றீர்களா?

எனது மனச்சாட்சியைப் பொறுத்த அளவில் இப்படி இந்த இளம் வயதில் அவர்கள் கரும்புலிகளாக இருக்கட்டும், சாதாரண போராளிகளாக இருக்கட்டும் தமது வாழ்வை போரிற்கு ஆகுதி ஆக்கிக்கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இன்னொருவன் தனது குருதியை சிந்தி உருவாக்கும் வெற்றி மூலம் நான் எப்படி வெளிநாட்டில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு கொண்டாடி மகிழ முடியும் என்று எனக்கு தெரியவில்லை.

நேற்று பத்து விமானங்கள் அழிந்து போனால், நாளைக்கு இருபது விமானங்களை சிறீ லங்கா அரசாங்கம் கடனுக்கு வாங்கி தமது பலத்தை மீண்டும் இரட்டிப்பு செய்யப் போகின்றார்கள். சிறீ லங்கா அரசுக்கு இப்போது ஏற்பட்டு இருப்பது ஒரு தற்காலிக மந்தநிலையே.

போரை நான் விரும்புபவனாக இருந்தால் அல்லது ஆதரிப்பவனாக இருந்தால் போரில் எனது தனிப்பட்ட வாழ்வை அல்லது சுகத்தை நான் இழக்க தயாராக இருக்கின்றேனா? இல்லை என்றால், எப்படி நான் என்னைப் போன்ற இன்னொருவர் தனது வாழ்வை போரில் தியாகம் செய்வதை ஏற்றுக்கொள்ள அல்லது ஆதரிக்க முடியும்? எனக்கு மட்டும் ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயமா?

எனக்குள் ஆயிரம் கேள்விகள்... பதில் தெரியவில்லை. எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். எனது மனச்சாட்சியைப் பார்த்து சில கேள்விகள் கேட்டேன். அவ்வளவுதான். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி!

  • 2 months later...

வணக்கம்,

...

இன்னமும் கலியாணம் செய்யாத ஆட்கள் உங்கடை காதலர்களிண்ட அல்லது திருமணம் செய்யப்போகிறவரிண்ட நட்சத்திரம் பொருத்தமாய் வருகிதோ எண்டு பரிசோதனை செய்து பாருங்கோ. ஏற்கனவே கலியாணம் செய்த ஆக்கள் உங்கடை துணையிண்ட நட்சத்திரம் பொருத்தமாய் இருக்கிதோ எண்டு பரிசோதிச்சு பாருங்கோ. :D

தகவல் மூலம்: http://www.chennaiiq.com/astrology/marriage_match_by_star_tamil.asp ,நன்றி!

விஷப் பரீட்சை என்பது இது தானோ? :unsure::D:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.