Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள் குடியேற்றம் என்ற பெயரில் மகிந்த அரசு நடத்தும் கபட நாடகம்

Featured Replies

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா முகாம்களில் கம்பி வேலிக்குள் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அறிந்ததே. தற்போது இவர்களை வேறு வேறு முகாம்களுக்கு இடமாற்றும் செயற்பாட்டையும் சிங்கள அரசு மீள்குடியேற்றம் என்பதற்குள் சொல்லி சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது அதாவது, வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு வரும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்புகின்றோம் என்று கூறி அதற்கு பசில்ராஜபக்ச வவுனியா வருகை தந்து வீடியோ படம் எடுத்து திருவிழாவாக குறிப்பிட்ட ஒரு தொகுதி மக்களை இடமாற்றுவார்கள் பின்னர் அதில் குறிப்பிட்ட மக்களையே சொந்த இடம் அனுப்புவார்கள்.

முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் மாவட்டங்களுக்கு அனுப்புகின்றோம் என்று கூறிக்கொண்டு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறைக்கு அனுப்பப்பட்டவர்களில் குறிப்பிட்ட தொகையினர் இன்றுவரை அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை. அவர்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களுக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

2009.10.14 ம் திகதி வலயம் - 04 இல் குறிப்பிட்ட ஒரு தொகுதி மக்களின் பெயர்களை ஒலிபெருக்கியில் வாசித்து அவர்களை அவர்களது பிரதேசத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக, பெயர் வாசிக்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு உடனே தயாராகுமாறும் ஒலி பெருக்கியில் கூறப்பட்டது.

இவ்வாறாக பெயார்குறிப்பிட்ட மக்களின் பொருட்களை ஒரு லொறியில் ஏற்றிக்கொண்டு மக்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு சென்ற அரச படைகள் அவர்களைக் கொண்டு புதுக்குளம் மகா வித்யாலய முகாமிலும், கோமரசங்குளம் மகா வித்தியாலய முகாமிலும் விடப்பட்டனர். புதுக்குளத்திற்கு வந்த மேற்படி மக்கள் வீதியிலே இறங்கி முகாமுக்குள் செல்ல மறுத்ததுடன் தங்களது பொருட்களை லொறியிலிருந்து இறக்க விடாமலும் தடுத்தனர். அச்சமயம் அதிகளவு இராணுவத்தினர் அவ் விடத்திற்கு வரவழைக்கப்பட்டு மக்கள் பலவந்தமாக அடி உதைகளின் மத்தியில் புதுக்குளம் மகாவித்யாலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும், சிலர் வவுனியா நகரிலிருந்து தொலைவில் சிங்கள குடியேற்றங்கள் உள்ள தர்மபுரம், சுமதிபுரம், வீரபுரம் முகாம்களுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். மேற்படி முகாம்களில் தர்மபுரம் முகாமானது போக்குவரத்து வசதிகள் அற்ற காட்டுக்குப் பகுதியில் முஸ்லிம், சிங்கள ஊர்காவற்படைகளின் சுற்றுவளைப்புக்கு மத்தியில் 2009.10.16 ம் திகதி வவுனியா கச்சேரி கணக்கின் படி 1455 குடும்பங்கள் (4844 சனத்தொகை) தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சில பெண்களை ஊர்காவற்படையினர் அரச புலனாய்வு பிரிவு போன்று வந்து கடத்தி செல்வதாகவும் இதனை அறிந்து பொலிஸில் புகார் செய்தும் எதுவித விசாரணைகளும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளனர் மக்கள். தர்மபுரம் முகாமானது அனுராதபுர நிர்வாக அலகிற்கு உட்பட்டு இருப்பதனால் மக்களுக்கு பயனுள்ள சில பதிவுகளை செய்யமுடியாதுள்ளதாகவும் வவுனியா புனர்வாழ்வு புனரமைப்பு உத்தியோகத்தர்களால் கூறப்பட்டும் வருகின்றது.

அதேபோல், சென்றவாரம் 56 குடும்பங்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு கொண்டு செல்வதாக பேருந்தில் அழைத்து வந்து வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் நடு இரவில் விடப்பட்டனர் அப்போது எதுவித ஆதரவும் அற்ற நிலையில் தவித்த மக்களை, சிறுவர்களை முதியோர்களை பராமரித்து வரும் வவுனியா சிவன் கோவில் நிர்வாகம் பொறுப்பெடுத்தது.

அரசாங்கத்தினுடைய மேற்படி இந் நடவடிக்கையானது இரு விடயங்களை தணிப்பதற்கே ஆகும். ஒன்று, முகாமில் உள்ளவர்கள் ஏதோயொரு வகையில் தாங்கள் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றனார் எனவும் எதிர்வரும் நாட்களில் தங்களையும் விட்டு விடுவார்கள் என்ற மன ஆறுதலை அடைவார்கள் இதன் காரணமாக தம் மீதான எதிர்ப்புகள் குறைக்கப்படும் என்று அரசாங்கம் நம்புகின்றது.

முகாம்களில் உள்ளவர்கள் வெளி விடயங்களை அறிவதற்கான பத்திரிகைகள் போன்ற ஊடக வசதிகள் முகாம்களில் இல்லை. இதனால் முகாமிலிருந்து மீள்குடியேற்றம் என்று சொல்லி கொண்டுசெல்லப்படுபவர்கள் உண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றனர் என்றே மக்கள் நம்புகின்றனர்.

அரசாங்கத்தின் அடுத்த நோக்கம் மக்களை தாங்கள் விடுவிப்பதாக சர்வதேசத்திற்கு காட்டிக்கொள்வதாகும். இதன்போது சர்வதேச அழுத்தங்கள் குறையும் என எதிர்பார்க்கின்றது.

அத்துடன், முகாம்களில் உள்ளவர்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பெடுக்கும் பட்சத்தில் அவர்களை அக்குடும்பத்திடம் கையளிப்பதாக கச்சரி ஊடாக சில நடவடிக்கைகளை கையாளுகின்றது. உண்மையில் கச்சேரியால் வெளியிடப்படும் அப் படிவத்தில் உள்ள உடன்படிக்கைகளை வாசித்தவர்கள் மேற்படி குடும்பங்களை நிச்சயமாக பொறுப்பெடுக்க முன்வரமாட்டார்கள் காரணம் இவர்களை பொறுப்பெடுக்கும் குடும்பங்களுக்கு சமூர்த்தி உணவு முத்திரைகள் உள்ளடங்கலுடன் எதுவித அரச உதவிகளும் கிடைக்கப்பட மாட்டது என்பதற்கு சம்மதித்து கையொப்பம் இட்டால் மாத்திரமே முகாமில் உள்ள குடும்பங்களை பெறுப்பெடுக்க முடியும் என்ற வகையில் உள்ளது அந்தப்படிவம்.

தற்போது, முகாம்களில் உள்ள குழந்தைகள் சிறுவர்கள் சிறுமிகள் அதிகளவில் அரச வைத்தியர்களால் போசாக்கு தொடர்பாக வழங்கப்படும் றொஸ் அட்டையை பெற்று வருகின்றனர். போசாக்கின்மையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கே மேற்படி றோஸ் அட்டை வழங்கப்படுகின்றது. இதன்படி அட்டைகள் வழங்கப்பட்ட பிள்ளைகளிற்கு அது மட்டும் தான் ஆனால் அட்டைகான உணவுகள் கிடைப்பதில்லை இதனால் அதிகளவில் போசாக்கின்மை நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், முகாம்களில் உள்ள மக்களில் சிலர் வயிற்றுப்பசிக்காக சிங்கள அரச புலனாய்வுத்துறையினரின் பணத்திற்கு சோரம் போய், முகாம்களில் படம் பிடிக்கும் அரச சார்பற்ற உத்தியோகத்தர்களையும், மக்களுடன் அதிகளவில் உறவாடுபவர்களையும் காட்டிக்கொடுத்தும் வருகின்றனர்.

முகாம்களில் உள்ளவர்களை சிங்கள புலனாய்வுத்துறைக்கு விலைக்கும் வாங்கி கொடுக்கும் தரகர் வேலைகளை சித்தார்த்தனின் புளோட் உறுப்பினர்களும், டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் இராணுவத்தின் சொல்லே தாரக மந்திரமாக கொண்டு இக் கீழ்த்தரமான இழிய செயலை செய்து வருகின்றனர்.

மேலும், முகாம்களில் உள்ளவர்கள் இடவசதிக்கு, நீருக்கு, உணவுக்கு, உடைக்கு, வைத்தியத்திற்கு, மற்றும் ஏனைய வசதிகளுக்காக ஏங்கித் தவிப்பதையும், எதிர்வரும் மாதங்களில் ஏற்படும்; மழை காரணமாக அவர்கள் எதிர்நோக்கப்போகும் அசௌகரியங்களையும் சொற்களின் எழுதமுடியாது.

இவ்வாறாக சிங்கள அரசாங்கமானது மக்களை விடுவிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் கருத்தில் கொள்ளாது கபட நாடகத்தை நடாத்துகின்றது. அத்துடன் எதிர்கால தமிழ்ச் சந்ததிகளில் பிரிவினைகளை உருவாக்கி உடல் ஆரோக்கியமற்ற நலிவுற்ற, கல்வியற்ற, பொருளாதார வசதியற்ற சமூகமாக உருவாக்கும் வகையில் திட்டமிட்டு செயற்படுகின்றது எனலாம்.

எனவே, வெளிநாட்டு அரசாங்கங்கள், தேசிய அரசசார்பற்ற நிறுவனங்கள், உள்ளுர் அரசசார்பற்ற அமைப்புக்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வன்னி மக்களின் நிவாரணத்திற்காகவும் அம்மக்களை வைத்து சிங்கள அரசாங்கம் சுற்றியுள்ள முட்கம்பி வேலிகளை நீக்குவதற்கு சிங்கள அரசாங்கத்திற்கு ஏதோவொரு முறையில் அழுத்தம் கொடுக்கவேண்டும் என கேட்டு கொள்கின்றோம்.

நன்றி வவுனியா முகாம் சிறப்பு நிருபர் - தீசன் http://www.eelanatham.net/news/important

மீள் குடியேற்றம் துரிதமாக இடம்பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதேநேரம் மக்கள் புதிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்காத வகையில் மீள்குடியேற்றம் இடம்பெற வேண்டியதும் அவசியம். உண்மையை உள்ளபடி எழுதுங்கள்! திரித்து கூறுவது உங்களுக்கு ஆனந்தம் ஆனால் பொய் பலநாட்கள் நிலைப்பதில்லை. அரசு சரியாக நடக்கிறது என்பதற்கு நான் இங்கு இதை ஒட்டவில்லை. பேரினவாத அரசு தமிழ் மக்களை இரண்டாம் தரமாக நடத்துவதில் மாற்று கருத்து கிடையாது ஆனால் நாம் அதை ஊதிப்பெருப்பிப்பது பொய்யர்களாக மாறினால் நமது நியாயமான போரட்டமும் பொய்யாகி விடும்!

முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் மாவட்டங்களுக்கு அனுப்புகின்றோம் என்று கூறிக்கொண்டு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறைக்கு அனுப்பப்பட்டவர்களில் குறிப்பிட்ட தொகையினர் இன்றுவரை அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை. அவர்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களுக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

வவுனியா இடைத் தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களில் இறுதித் தொகுதியினர் நேற்று அதிகாலை மட்டக்களப்பை வந்து சேர்ந்தனர். 298 குடும்பங்களைச் சேர்ந்த 785 பேர் இறுதித் தொகுதியினாராக மீள் குடியேற்றத்தின் நிமித்தம் இராணுவத்தினரால் அழைத்து வரப்பட்டு சிங்கள மகாவித்தியாலயத்திற்கு நேரடியாக அழைத்து வரப்பட்ட இக்குடும்பங்களின் விபரங்கள் பொலிஸ், இராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளினால் பதிவு செய்யப்பட்ட பின்னர் நேரடியாக அவர்களது இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

http://farm3.static.flickr.com/2563/4031964855_16bf9957c4.jpg

http://farm3.static.flickr.com/2707/4032718404_bcdf2f1e60.jpg

இவ்வாறாக பெயார்குறிப்பிட்ட மக்களின் பொருட்களை ஒரு லொறியில் ஏற்றிக்கொண்டு மக்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு சென்ற அரச படைகள் அவர்களைக் கொண்டு புதுக்குளம் மகா வித்யாலய முகாமிலும், கோமரசங்குளம் மகா வித்தியாலய முகாமிலும் விடப்பட்டனர். புதுக்குளத்திற்கு வந்த மேற்படி மக்கள் வீதியிலே இறங்கி முகாமுக்குள் செல்ல மறுத்ததுடன் தங்களது பொருட்களை லொறியிலிருந்து இறக்க விடாமலும் தடுத்தனர். அச்சமயம் அதிகளவு இராணுவத்தினர் அவ் விடத்திற்கு வரவழைக்கப்பட்டு மக்கள் பலவந்தமாக அடி உதைகளின் மத்தியில் புதுக்குளம் மகாவித்யாலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டனர்.

http://www.sundaytimes.lk/front_image/01.jpg

http://www.dailymirror.lk/DM_BLOG/ArticleImages/g3glruq5dhygtwqik1i5z555_Mannar%205-600-5.jpg

தற்போது, முகாம்களில் உள்ள குழந்தைகள் சிறுவர்கள் சிறுமிகள் அதிகளவில் அரச வைத்தியர்களால் போசாக்கு தொடர்பாக வழங்கப்படும் றொஸ் அட்டையை பெற்று வருகின்றனர். போசாக்கின்மையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கே மேற்படி றோஸ் அட்டை வழங்கப்படுகின்றது. இதன்படி அட்டைகள் வழங்கப்பட்ட பிள்ளைகளிற்கு அது மட்டும் தான் ஆனால் அட்டைகான உணவுகள் கிடைப்பதில்லை இதனால் அதிகளவில் போசாக்கின்மை நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

http://www.csmonitor.com/2009/0225/csmimg/ORETURN_P1.jpg

http://www.engaltheaasam.com/Ru10.jpg

மேலும், முகாம்களில் உள்ளவர்கள் இடவசதிக்கு, நீருக்கு, உணவுக்கு, உடைக்கு, வைத்தியத்திற்கு, மற்றும் ஏனைய வசதிகளுக்காக ஏங்கித் தவிப்பதையும், எதிர்வரும் மாதங்களில் ஏற்படும்; மழை காரணமாக அவர்கள் எதிர்நோக்கப்போகும் அசௌகரியங்களையும் சொற்களின் எழுதமுடியாது.

http://www.engaltheaasam.com/page.p32.jpg

இவ்வாறாக சிங்கள அரசாங்கமானது மக்களை விடுவிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் கருத்தில் கொள்ளாது கபட நாடகத்தை நடாத்துகின்றது. அத்துடன் எதிர்கால தமிழ்ச் சந்ததிகளில் பிரிவினைகளை உருவாக்கி உடல் ஆரோக்கியமற்ற நலிவுற்ற, கல்வியற்ற, பொருளாதார வசதியற்ற சமூகமாக உருவாக்கும் வகையில் திட்டமிட்டு செயற்படுகின்றது எனலாம்.

http://www.sundaytimes.lk/public_html/viewImage.php?type=glimage&name=270a5455aaaf13df6c67b16f40c88016.jpg

தயவு செய்து உள்ளதை உள்ளபடி எழுதுங்கள்! மக்கள் படும் துயரங்கள் அளப்பரியன அனால் அதற்கு இப்படி திருத்து எழுதி உள்ளதையும் பெய்யாக்க முனைய வேண்டாம்!

ஓக்ரோபர் 6ல் மூன்று நாட்கள் வெளியே வந்து தங்கும் அனுமதியுடன் வந்தவருடன் தொலைபேசி மூலம் உரையாடும்போது அவர் தன்னைப் பற்றிய அறிமுகத்துடன் தொடர்ந்தார்.

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வவுனியாவிலும் முத்தையன் கட்டிலும் வியாபாரியாக இருந்தவர். தனது இரண்டு வயது குழந்தையுடன் தான் தப்பி வந்து இடையில் ஏதும் நடந்தாலுமென்று, அங்கேயே நின்று பின்னர் புலிகளினால் ஒட்டுமொத்தமாக எடுத்துச் செல்லப்பட்ட மக்களுடன் முள்ளிவாய்க்கால்வரை சென்றார். பின்னர் மே மாதம் பத்தாம் திகதியளவில் பெருந்தொகையாக இடம்பெயர்ந்தவர்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்தவர். தனது முகாம் வாழ்க்கை பற்றி இவ்வாறு சொன்னார்.

”நான் செட்டிக்குளம் ராமநாதன் காம்பில் இருக்கின்றேன். செட்டிக்குளம் டிஸ்றிக்கில் ஆனந்தகுமாரசாமி முகாம், ராமநாதன் முகாம், அருணாசலம் முகாம், Zone 4, வீரபுரம், கதிர்காமர் முகாம், Zone 5 என காம்ப்புகள் இருக்குது. ராமநாதன் காம்பில் 65 000 பேர் இருக்கிறோம். அங்கு பெரும்பாலான கட்டுப்பாடு பொலிஸ்தான். ஆமியும் வந்து போவார்கள்.

சாப்பாடு, தண்ணி, ரொய்லெட் வசதி வந்த புதிதில் மிகமோசம். இப்ப பிரச்சினை இல்லை. முந்தி நாங்கள் கொஞ்ச கொஞ்சப் பேராகச் சேர்ந்து ரேன் வைத்து மாறி மாறி எல்லாருக்குமாய் சமைப்போம். இப்ப எல்லாரும் தனித்தனிய குடும்பமாய்த்தான் சமைக்கிறோம். ஓவ்வொரு வியாழனும் World food சமையல் சாமான்கள் தருவார்கள். தண்ணீர் பைப் வசதி இருக்குது. ரியூப் வெல் அடிச்சு வைத்திருக்கிறார்கள். குடி தண்ணீர் கிடைக்கிறது. மரங்களை வெட்டி மண்றோட்டுகள் போட்டிருக்கிறாங்கள். கறண்ட் இருக்குது. பிள்ளைகள் படிக்கப் போகினம். ரென்ட்டுகளை வீடுகளாய் கட்டிவிட்டால் மாதிரிக் கிராமம்தான். ரென்ட் சரியான வெக்கையாய் இருக்கும். நாங்கள் பெரியஆட்கள் சமாளிப்பம். குழந்தைகள்பாடு சரியான கஸ்டம். மழை வந்தால் பெரிய சிக்கல் இந்த ரென்டுகள் தாங்காது. அதுதான் தொல்லை. வெய்யில் நேரங்களில் ரென்ட்டுக்குள் இருக்கேலாது அவ்வளவு வெக்கை.

மெனிக்பார்ம் பிரச்சினைகள்பற்றி கேட்டபோது ”நீங்கள் சொல்லுமாப்போல பெரிய பிரச்சனையாக நான் கேள்விப்படவில்லை. வன்னிக்குள் நடந்ததை விடபெரிசாய் என்ன நடக்கப் போகுது. காம்புக்குள்ளே சின்னச் சின்னதாய் பிரச்சினைகள நடக்கும்தானே. சாப்பிட்டுவிட்டு சும்மா இருக்கிற சனத்துக்கு வேற வேலை இல்லைத்தானே. என்ன செய்வதென்று தெரியாமல் சண்டை வரும்தானே. நீ புலி. அவன் புலி எண்டும் சண்டை வரும். சனங்கள் உங்கை சும்மா சும்மா கதைக்கினம்போல.

ஆமிக்காரன் ஆட்களை பிடிக்கிறது ஏத்திக்கொண்டு போறாங்களாமே எனக் கேட்டபோது ”எனக்குத் தெரிய நான் அப்படி எங்கட காம்பில் கேள்விப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விசயங்கள் நடந்திருக்கும்.

புலிகள் பற்றி ஒருத்தரும் கதைப்பாரில்லை. இலக்க்ஷன் பற்றி ஒருத்தருக்கும் அக்கறையில்லை. நான் நினைக்கிறேன் ரணில்தான் வருவாரெண்டு. காம்புக்கு டக்ளஸ்தான் ரெண்டு மூண்டுதரம் வந்தார். உதவிகள் கேட்டால் செய்வார். அந்த ஆள் யாழ்ப்பாணத்துக்கு நிறையச் செய்கிறார். எங்களுக்கு தேவை அபிவிருத்தி. அதை அவர் செய்கிறார் அது எங்களுக்கு நல்லது தானே.”

”எப்படி நீங்கள் வெளியே வந்தீங்கள்” என கேட்டபோது: ”அரசாங்கத்தின் லெட்டரோடை காம்புக்கு வெளியே வந்து மூன்று நாள் தங்கலாம். பிறகு திரும்ப வேணும். நான் அப்படி ரெண்டு மூண்டு தரம் வந்தனான். அடிக்கடி வந்தால் சந்தேகப்படலாம் என்பதால் ஏதும் தேவைக்காக வந்துபோவேன். அப்படி எல்லாரும் வரலாமோ இல்லையோ எனக்குத் தெரியாது. எனக்கு வந்து தங்க இடமிருக்குது சொந்தக்காரர் இருக்கினம் வாறேன். எல்லாருக்கும் அப்படி யாரையும் தெரிந்திராதுதானே. வந்தும் என்ன செய்வது. நான் வெளியே வந்து எனது குடும்பம் தங்க இடம் வேலை ஒன்று கடையில் எடுக்க அலுவல் பார்க்கிறேன். காம்பை விட்டு வெளியே போக கச்சேரியில் போர்ம் கொடுத்திருக்கிறேன். ஆமி கொமாண்டர் சைன்பண்ணி வந்ததும் போகலாம். சனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருக்கினம். எனக்குத் தெரிந்த சொந்தக்காரர் போனகிழமை போய்விட்டார். நான் இரண்டு வயதுப் பிள்ளையுடன் இருக்கிறேன். இந்த மாதக் கடைசிக்குள் நானும் போய்விடுவேன். ஊரில் தங்க இடம் இருக்கு. அங்கும் விதானையார் கையெழுத்துப் போட்டால் எங்களை விடுவினம் இப்படி பலர் போய்விட்டார்கள்.

குழந்தைகளோடை இருக்கிறவை முதல் ஊனமுற்றோர் இரண்டாவது கர்ப்பிணியாட்கள் மூன்றாவது என படிப்படியாய் ஒவ்வொரு காம்பிலும் இருந்து வெளியேபோக விடுகிறார்கள். அவர்களை வேறை காம்பில கொண்டு போய் வைத்திருப்பதாக நான் அறியவில்லை. எல்லாரையும் ஒரேயடியாக வெளியே விட ஏலாதுதானே. ஆட்களை விசாரிச்சு விசாரிச்சுத்தான் விடுவாங்கள்.

வெளியில் உதவிக்கு ஆட்கள் இருக்கிறவை போவினம். இல்லாதவை வெளியே வந்து என்ன செய்வது. எப்படிச் சீவிப்பது. வெளியில வாடகைவீடு 10 000, 15 000 என்று கேட்பார்கள். சாப்பாட்டுச் செலவு வேலை என்று எல்லாத்துக்கும் எங்கை போவது. இவ்வளவு காசு கொடுக்க இயலாத, அப்படியான ஆட்கள்தான் பெரும்பாலான ஆட்கள். அவர்கள் போனால் வன்னிக்குத்தான் போவம் இல்லாவிட்டால் எங்கும் போகமாட்டம் என்று பின்னடிக்கினம்.

என்னிடம் கைத்தொலைபேசி இல்லை. வைத்திருக்க விடமாட்டாங்கள். வைத்திருப்பவையும் ஒழித்து வைத்துத்தான் கதைப்பது. நான் உங்களுக்கு மற்றைய காம்பில் உள்ளவர்களின் தொலைபேசி இலக்கங்கள் எடுத்துத்தாறன் கதையுங்கோ” என்றார்.

”ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்குப் போவதில் தடையில்லை. சில பிள்ளைகள் ஒரு முகாமில் இருந்து மற்றமுகாமுக்குப் போய்ப் படிக்கிறார்கள்” என்றார்.

(இந்த தொலைபேசி அழைப்பில் எம்முடன் பேசியவர் ஒக்ரோபர் 12ம்திகதி முகாமிலிருந்து வெளியேறி தற்போது யாழ் கோவில்ப்பற்று பகுதியில் தனது பிறந்து வளர்ந்த வீட்டில் தனது உறவினர்களுடன் இணைந்துள்ளார்)

WWW.THESAMNET.CO.UK

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு அதிகமாக விபரம் தெரியாது. அதனால் நான் ராணுவம் மக்களை அருமையாக வைத்திருக்கிறதாம் என்று பொய் சொல்ல மாட்டேன்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினர் ஒருவருடன் நேற்று இரவு கதைத்த போது, அவர் பல பேர் மீள் குடியேற்றம் என்று வந்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்தார்.

எனவே இது முற்றிலும் பொய் இல்லை. அதே வேளை, எத்தனை பேரை உண்மையில் விடுதலை செய்தார்கள் என்பது சரியாக தெரியாது.

யார் பேச்சையும் நம்ப முடியவில்லை. :)

உறுதியாகத் தெரியாத வேளையில் அரசாங்கத்தை முழுவதுமாக ஆதரித்து கதைப்பதும் எமக்கு ஆபத்தில் தான் முடியும். அதே வேளை மிகைப் படுத்துவதன் விளைவும் நன்றாக இருக்காது. உண்மையை உண்மையாக பேசுவோம்.

  • தொடங்கியவர்

எனக்கு அதிகமாக விபரம் தெரியாது. அதனால் நான் ராணுவம் மக்களை அருமையாக வைத்திருக்கிறதாம் என்று பொய் சொல்ல மாட்டேன்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினர் ஒருவருடன் நேற்று இரவு கதைத்த போது, அவர் பல பேர் மீள் குடியேற்றம் என்று வந்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்தார்.

எனவே இது முற்றிலும் பொய் இல்லை. அதே வேளை, எத்தனை பேரை உண்மையில் விடுதலை செய்தார்கள் என்பது சரியாக தெரியாது.

யார் பேச்சையும் நம்ப முடியவில்லை. :D

உறுதியாகத் தெரியாத வேளையில் அரசாங்கத்தை முழுவதுமாக ஆதரித்து கதைப்பதும் எமக்கு ஆபத்தில் தான் முடியும். அதே வேளை மிகைப் படுத்துவதன் விளைவும் நன்றாக இருக்காது. உண்மையை உண்மையாக பேசுவோம்.

  • தொடங்கியவர்

திரு.பொண்ட் அவர்களே உங்கள் கருத்திற்கு நன்றி உங்களைப்போல் நிறைய பத்திரிகை உதாரணங்களை இங்கு காட்ட முடியும். ஆனால் இந்த கட்டுரையினை எழுதியவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர், ஒரு ஊடகவியலாளர் மட்டுமன்றி அடிக்கடி முகாம்களுக்கு சென்று சமூக சேவைகளையும் வழங்குபவர். ஒவ்வொரு நாளும் மக்களுடன் சென்று கலந்துரையாடுபவர். அவர் அரச உத்தியோகத்தரின் புள்ளிவிபரங்களையும் ஆதாரமாக தந்திருக்கின்றார். ஆகவே பொய்கள் எழுதப்படுகின்றன என நீங்கள் கூறுவது அழகல்ல. மக்கள் விடப்படுகின்றார்கள் என்பது உண்மை ஆனால் அரசாங்கம் சொல்வது போல் பத்திரிகைகளில் கூறுவது போல் நடப்பதில்லை என்பதே உண்மை. இந்த ஊடகவியலாளர் தான் முகாம்களுக்கு சென்றது மக்களை சந்தித்தது அனைத்தையும் புகைப்படங்கள் மூலமும் உறுதி செய்து அனுப்பியுள்ளார். அரசாங்கம் தான் மக்களை விடுவித்துள்ளதாக கூறும் எண்ணிக்கையும் அதே நேரம் அரசாங்க அதிபர் கிராம சேவகர்களது புள்ளிவிபரமும் இந்த மாதம் 10 ம் திகதி கணக்கெடுப்பின் படி ஒத்துவரவில்லை அந்த விபரங்களையும் அவர் தந்துள்ளார். இவ்வாறு ஈழ நாதம் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொகுதி மக்கள் மல்லாவி மகாவித்தியாலத்திற்கும், முள்ளியவளை வித்தியானந்தா மகாவித்தியாலத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனராம். அவர்கள் பகலில் தமது வீடுகளைத் துப்பரவு செய்ய அனுமதிக்கப்பட்டு, இரவு வேளைகளில் மீண்டும் பாடசாலையில் தங்கவைக்கப்படுவதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. ஆனால் "தேசிய" ஊடகங்களில் வந்ததாகத் தெரியவில்லை. :D

ஒரு தொகுதி மக்கள் மல்லாவி மகாவித்தியாலத்திற்கும், முள்ளியவளை வித்தியானந்தா மகாவித்தியாலத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனராம். அவர்கள் பகலில் தமது வீடுகளைத் துப்பரவு செய்ய அனுமதிக்கப்பட்டு, இரவு வேளைகளில் மீண்டும் பாடசாலையில் தங்கவைக்கப்படுவதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. ஆனால் "தேசிய" ஊடகங்களில் வந்ததாகத் தெரியவில்லை. :D

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொகுதி தொகுதியாக அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மல்லாவி மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் தமது வீடுகளுக்குச் சென்று துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட அனுமதிக் கப்படுகின்றனர். முல்லைத்தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்களில் மற்றும் ஒருசாரார் இன்று அழைத்துச் செல்லப்பட்டு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் பகல் நேரத்தில் தமது வீடுகளுக்கு சென்று துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவில் பாடசாலைகளிலே தங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அவர்கள் தமது வீடுகளை புனரமைக்கவும், தேவையான பொருள்களை கொள்வனவு செய்யவும் வசதியாக 25,000 ரூபா ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படுகின்றது. அந்தப் பிரதேச அரச அதிகாரிகள் அந்த மக்களின் தேவைகளை மதிப்பீடு செய்து உதவிகளை வழங்கி வருவதாக அறிவிக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
undayr.png

விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக விளங்கி வந்த கிளிநொச்சியில் விரைவில் மீண்டும் தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு அதிகாரி எமல்டா சுகுமார் தெரிவித்தார்.

இலங்கை வட பகுதியில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த கடும் போரை அடுத்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்கள் கடும் துயரப்படுவதாக இலங்கை அரசுக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இலங்கை சென்ற திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவிடம் விரைவில் தமிழர்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று அதிபர் ராஜபட்ச உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து அடுத்த சில தினங்களிலேயே குடியமர்த்தும் பணிகள் தொடங்கியது. விரைவில் கிளிநொச்சியிலும் குடியமர்வு நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான சண்டைக்குப் பின்னரும் கிளிநொச்சி நகரத்தில் பல இடங்களில் கட்டடங்கள் சேதமடையாமல் அப்படியே இருப்பதைப் பார்க்க முடிகிறது. வீடுகள் பல சேதமடையாமல் நல்ல நிலையில் இருப்பதை நாங்கள் பார்த்தோம் என்று கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதி அரசு நிர்வாகியான எமல்டா சுகுமார் தெரிவித்தார்.

அரசு முகாம்களிலிருந்து அழைத்து வரப்படும் தமிழர்களை முதலில் தாற்காலிகமாக குடியமர்த்துவதற்காக இரண்டு கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளோம். மாலவி மத்திய கல்லூரி, யோகபுரம் மத்தியக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் முதல் கட்டமாக குடியமர்த்தப்படுவார்கள்.

மக்களை குடியமர்த்துவதற்கு முன்பாக அனைத்து வீடுகளும் பள்ளிக் கட்டடங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். நல்ல நிலையில் உள்ள கட்டடங்களில் மட்டுமே குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.

கிளிநொச்சிப் பகுதியில் உள்ள ஜெயபுரம், பூநகரி, முலங்காவில், நஞ்சிக்குடா ஆகிய இடங்களில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள். இங்கு மட்டும் மொத்தம் 25 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவார்கள் என்று எமல்டா சுகுமார் கூறினார்.

:D :D :Dஇந்தப் பகுதிகளில் அமைக்கப்படும் தாற்காலிக முகாம்களில் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் 100 குடும்பங்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்றார் அவர்.

மறு குடியமர்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக ராணுவ அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

இந்த மக்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. அதனால்தான் தாமதமாகிறது என்று அவர் கூறினார்.

இந்தப் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், நீர் நிலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், பாலங்கள் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு உரிய நிதி ஒதுக்கி உள்ளது என்றார் அவர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் புதுமத்தளன் ஆகிய இடங்களைப் பார்வையிட்டோம். அங்கு கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. இது தொடர்பாக அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார். புதுக்குடியிருப்பு மற்றும் புதுமத்தளன் ஆகிய பகுதிகள் ஆபத்தான பகுதிகள் என்று ராணுவம் அறிவித்துள்ளது.

வவுனியா நலன்புரி கிராமங்களிலிருந்து இன்றைய தினம் மேலும் 1490பேர் கோப்பாய் வருகை. 30/10/2009

http://www.engaltheaasam.com/IMG4007.jpg

http://www.engaltheaasam.com/IMG4031.jpg

வவுனியா நலன்புரி கிராமங்களிலிருந்து 500 குடும்பங்களைச் சேர்ந்த 1490 பேர் இன்றைய தினம் கோப்பாய் அத்தியார் இந்துக் கல்லூரியை வந்தடைந்தனர்.

இம்மக்களை சென்று சந்தித்து கலந்துரையாடிய சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த கால நிகழ்வுகள் எம்மக்களை கையேந்தும் நிலைக்கு ஆளாக்கி நடுத்தெருவில் விட்டுள்ளதாகத் தெரிவித்ததுடன் எமது சமூகம் தொடர்ந்தும் கையேந்தி வாழும் நிலையில் இருக்கக் கூடாது என்றும் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய ஒரு சமூகமாக எமது சமூகம் மாற வேண்டும் என்றும் அதற்கு தேவையான அனைத்து வழிகளிலும் அர்ப்பணிப்புடன் உழைக்க தான் தயார் என்றும் தெரிவித்தார்.

யாழ்.கைதடி நலன்புரி நிலையத்திலிருந்து 665பேர் சொந்த இருப்பிடங்களுக்குச் சென்றனர்!29/10/2009

http://www.engaltheaasam.com

/IMG_3709.jpg

http://www.engaltheaasam.com/IMG_3730.jpg

http://www.engaltheaasam.com/IMG_3735.jpg

Edited by Bond007

  • தொடங்கியவர்

Tamils return home blocked by encroachers

By Rukshana Rizwie

More than 1,486 Tamil families are unable to peacefully resettle in their homes in Trincomalee, Vavuniya and Batticaloa due to unlawful and widespread occupation of state land by members of the majority community, according to Tamil politicians.

“There are more than 500 families of the majority community who have set up houses and are cultivating paddy in areas that were previously occupied by Tamils before the war intensified,” said Packiyaselvam Ariyanethiran, a member of Ilankai Thamil Arasu Kadchi (ITAK). “I wrote to the President over this issue on September 16 requesting a probe and a peaceful solution.”

In response to Ariyanethiran’s letter, the President had written back to the Government Agents (GAs) in Vavuniya, Trincomalee and Batticaloa requesting information pertaining to the complaint, as well as plausible solutions.

“The President in response to my letter had written to the GAs on October 26 asking for a thorough report on the situation. I believe the GAs are yet to make their official statement on the matter. However, once the holidays are over, I wish to meet them and inquire of what they plan to do,” he added.

Ariyanethiran cited that even those people, who were displaced in Puttalam, also are unable to return to their original residences due to such unlawful occupation. He added that the encroachment began swiftly, but has reached a point where there is a sizeable population who were not there before.

In a motion tabled in Parliament during the last week of October, TNA Leader R. Sambandan, also highlighted that, “Such unlawful occupation of state land by members of the majority community acting with total impunity has been a continuous process with no action taken by the government.”

The motion goes on to state that, “Strenuous effort is being made by the members of the majority community to evict members of the minority community from lands unlawfully occupied by them.”

“That members of the minority Tamil community comprising of 1,486 families lawfully owning residential property and plantation land within the Grama Sevaka Divisions of Sampur East, Sampur West, Koonutheevu, Navaratnepuram, Soodaikuda, Kakathkaraichanan and Sampurkali have been unable to return because the said places have been declared High Security Zones. All temples and schools that existed in the areas have been demolished as well,” Sampanthan added.

He alleged that such unlawful occupation has spread to parts of the Eastern Province as well and that appropriate action was necessary to resettle these people who were already displaced by the war.

Edited by உமை

முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய்க்கும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முழங்காவிலுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டார்.

துணுக்காய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார். முழங்காவில் 651 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் வைத்து மனிதாபிமான நடவடிக்கைக்குப் பங்களித்த முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட படை வீரர்களை சந்தித்த ஜனாதிபதி முழங்காவில் ஆஸ்பத்திரிக்கும் விஜயம் செய்தார்.

துணுக்காய் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டு வரும் பெருந்திரளான மக்களை துணுக்காய் 65 ஆவது படைப் பிரிவு தலைமையத்தில் வைத்து ஜனாதிபதி சந்தித்தார். மேடைக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு கட்டளையிடும் தளபதிகள், முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மீள்குடியேற்றப்படும் மக்கள் மத்தியில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி தனது உரை முடிவடைந்த பின்னர் அவர்களின் அருகில் சென்று மக்களுடன் சுமுகமாக உரையாடினார். மக்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்தத் தேசத்தை மீண்டும் ஒரே தேசிய கொடியின் கீழ் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். ‘நான் உங்களின் தோழன்; சொந்தக்காரன்; நீங்கள் என்னை நம்பலாம்; உங்களுக்கு சகல வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் எனவும் ஜனாதிபதி கூறினார். மேலும் உரையாற்றிய ஜனாதிபதி :-

உங்களை மீளக் குடியமர்த்துவது போல ஏனைய மக்களையும் விரைவில் குடியமர்த்த உள்ளோம். அதற்காக முதலில் மிதிவெடிகளை அகற்ற வேண்டும். அந்தப்பணியை துரிதமாக பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீங்கள் நீண்டகாலமாக அனுபவித்த கஷ்டங்களை நான் நன்கு அறிவேன். பயங்கரவாதிகள் உங்களை தவறான பாதையில் இட்டுச் சென்றனர். அதனால் நீங்கள் அங்கும் இங்குமாக கஷ்டப்பட நேரிட்டது. எமது மக்களுக்கு சொந்த நாட்டிற்குள் அகதிகளாக இடம்பெயர நேரிட்டது.

இது எமது நாடு. இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒரே தாயின் பிள்ளைகளாக வாழ வேண்டும். இங்கு இன, மத, குல, பிரதேச வேறுபாடு இருக்க முடியாது. எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம். இந்த நாட்டின் மீது அன்பு காட்டும் அனைவரும் இலங்கை மக்களே. நீங்கள் பணயக் கைதிகளாக்கப்பட்ட அந்த கஷ்ட காலம் இனி கிடையாது. புதிய வாழ்க்கை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்த நாட்டில் வாழும் சகல மக்களையும் பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பாகும்.

அதனை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன். சகல மக்களும் பயம், சந்தேகம் இன்றி வாழவேண்டும். நீங்கள் சம உரிமையுடன் வாழும் சூழல் உருவாக்கப்படும். துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தலைதூக்க இனியும் இடமளியோம். வடக்கு வசந்தம் திட்டத்தினூடாக இதற்கு முன்பு காணாத அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இடம்பெயர்ந்த சகல மக்களுக்கும் நிச்சய மாக வீட்டு வசதி வழங்கப்படும். சகலருக்கும் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உருவாகும். ங்கள் பிள்ளைகள் தான் உங்கள் சொத்து. அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும். அதனூடாக அவர்கள் நாட்டில் முக்கிய பதவிகளை பெற வேண்டும்.

நீங்கள் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்றார்.

அடுத்து முழங்காவில் 651 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்குச் சென்ற ஜனாதிபதி படைவீரர்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார். சுமார் 4 ஆயிரம் படை வீரர்கள் இங்கு குழுமியிருந்தனர். அதனைத் தொடர்ந்து முழங்காவில் ஆஸ்பத்திரிக்கும் ஜனாதிபதி விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.

Thanks : Thesamnet.co.uk

இப்ப கூட்டமைப்பு சார்பாக சிறிகாந்தாவும், மீள்குடியேற்றம் சம்மந்தமாக பசிலுக்கும், ரிச்சார்ட் பதியுதினுக்கும் மனமார வாழ்த்துகளை பாராளமன்றறத்திலேயே தெரிவித்துள்ளாராம். :wub::wub:

:blink: அப்ப எனி அடுத்த தலையங்கம் "சிறிகாந்தாவின் கபட நாடகம்" ரெடி. :blink:

இப்ப கூட்டமைப்பு சார்பாக சிறிகாந்தாவும், மீள்குடியேற்றம் சம்மந்தமாக பசிலுக்கும், ரிச்சார்ட் பதியுதினுக்கும் மனமார வாழ்த்துகளை பாராளமன்றறத்திலேயே தெரிவித்துள்ளாராம். :wub::wub:

:blink: அப்ப எனி அடுத்த தலையங்கம் "சிறிகாந்தாவின் கபட நாடகம்" ரெடி. :blink:

:wub::lol::D :D

ஏ-9 வீதியூடாக யாழ். நகர் சென்று வருவதற்கு பயணிகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இலங்கைப் பிரஜையாகவுள்ள அனைவரும் ஏ-9 வீதியூடாக சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகள், மற்றும் விசேட பஸ் வண்டிகளூடாக சென்று வரலாம். பயணிகள் அனைவரும், தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றில் ஒன்றை காண்பித்து செல்லமுடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.