Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ஒரு பிரபாகரன் வேண்டாம்; தமிழருக்குச் சுதந்திரம் கொடுங்கள் - ஜெனரல் பொன்சேகா

Featured Replies

இலங்கையில் இப்போது யுத்தம் முடிந்து விட்டது. இனி அமைதியான முறையில் தமிழ் மக்கள் வாழ்வதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.

மீண்டும் ஒரு பிரபாகரன் எமது நாட்டில் உருவாகிவிடக்கூடாது. இப்படித் தெரிவித்திருக்கின்றார் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா. தற்போது அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜெனரல் பொன்சேகா, வாஷிங்டனில் பௌத்த ஆலயமொன்றில் நடந்த நிகழ்வில் பேசிய போதே இதனைத்தெரிவித்தார்.

"இலங்கை அழிவுப் பாதையில் சென்றால் அதனைச் சரி செய்து மீட்பதற்கு நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வேன்'' என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வாஷிங்டனில் தெரிவித்துள்ளார் என "ஸ்ரீலங்கா கார்டியன்" இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.எனினும், இந்த நிகழ்வில் அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் ஜாலிய விக்கிரமசூர்யவோ அல்லது தூதரக அதிகாரிகளோ கலந்துகொள்ளவில்லை என "ஸ்ரீலங்கா கார்டியன்" குறிப்பிட்டுள்ளது.

அங்கு உரையாற்றுகையில் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளவையாவன:

எமது இராணுவ வெற்றி பற்றி அநேகமானவர்கள் தற்போது பேசுகின்றனர். யுத்தத்தின் இறுதி 10 நாள்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினரை விடுதலைப் புலிகளிடம் இழந்தோம். அவர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்யாவிட்டால் இந்த யுத்தம் முடிவிற்கு வந்திராது. யுத்த வீரர்களின் தியாகத்திற்கு முதலில் நாங்கள் தலை வணங்கவேண்டும். யுத்தம் தற்போது முடிவடைந்துவிட்டது. தமிழ் மக்களுக்கு வாழ்வதற்கான சுதந்திரம் வழங்கப்படவேண்டும். மற்றுமொரு பிரபாகரன் உருவாவதற்கான சூழ்நிலைகளை நாம் உருவாக்கக்கூடாது. நாடு பிழையான பாதையில் செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு நடைபெற்றால் அதனை சரிசெய்வதற்கு நான் முன்வருவேன் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக்களம் இறங்குவார் எனக் கருதப்படும் ஜெனரல் பொன்சேகா இந்தக் கருத்தைக் கூறியிருக்கின்றமை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

இணைய இணைப்பு http://www.uthayan.com/Welcome/full.php?id=1269&Uthayan1256725008

Edited by அன்புச்செல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் தற்போது முடிவடைந்துவிட்டது. தமிழ் மக்களுக்கு வாழ்வதற்கான சுதந்திரம் வழங்கப்படவேண்டும்.

தமிழ் மக்கள் வாழ்வதற்கான சுதந்திரம்?? அதாவது தமிழன் உயிரோட இருந்தாலே அது அவனுக்கு சுதந்திரம் கிடைச்சதுக்கு சமம் எண்டு சொல்லுறார் போல..! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில ஆதரிக்க சொல்லி சொல்லுறார்

கூட்டமைப்பு இவர் நிண்டா ஆதரிக்கமாட்டன் எண்டு அறிக்கை விட்டமாதிரி இங்க எங்கயோ வாசிச்சன்.

சிங்களவன்ட தேர்தல் யார் நிண்டா என்ன பகிஸ்கரிச்சுப்போட்டா நல்லது!

மகிந்தா திரும்ப வந்திடுவானே அதுக்கு என்ன செய்யிறது?

ஆக மொத்தம். ஒட்டு மொத்த தமிழர்களையும் சிங்களவன் ஒருவனை தலைவனாக தெரிவு செய்து சோலியை முடிப்பம் எண்டிறீர்... அவன் எவ்வளவு தமிழர் கொலைகளுக்கு காரணமாக இருந்தாலும் பறவாய் இல்லை... அப்பிடித்தானே...

அது சரி தமிழராலை தெரிவு செய்யப்படும் சிங்களவன் உங்கட ஏக தலைவனாக எந்த கோதாரியை தீர்வாக தந்தாலும் வாங்கி தலைமாட்டுக்கை வச்சு கொண்டு படுப்பீர்கள் தானே...??

இதுதானே உங்கட எதிர்ப்பார்ப்பு.. ??

Edited by தயா

என்னண்ணை ஆத்திரப்படுறியள்! போனமுறையும் போட்டிருப்பம் ஆனா *** மகிந்தாவை கொண்டுவந்தநாங்கள். நரியன் வேண்டாம் நரியனை விட சுழியன் திறமெண்டு அலெக்சான்ரா பலசில அன்டன் மாமா சென்னதை மறந்துபோட்டியளோ? :wub:

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுளது. - இணையவன்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில ஆதரிக்க சொல்லி சொல்லுறார்

என்னண்ணை ஆத்திரப்படுறியள்! போனமுறையும் போட்டிருப்பம் ஆனா *** மகிந்தாவை கொண்டுவந்தநாங்கள். நரியன் வேண்டாம் நரியனை விட சுழியன் திறமெண்டு அலெக்சான்ரா பலசில அன்டன் மாமா சென்னதை மறந்துபோட்டியளோ? :wub:

இரணிலை நரியன் எண்டுதான் அவர் சொன்னவர்.. மகிந்தவை நல்லவன் எண்று சொல்ல இல்லை.. சிரைச்சா மொட்டை வளர்த்தால் குடும்பி இல்லை...

நரியனோ சொரியனோ எல்லாம் சிங்கள இனவெறியன் தான் இதிலை எவன் வந்தாலும் பிரச்சினை.. அதிலை நரியன் தமிழன் ஆதரவோடை ஜனாதிபதியாக வந்து தான் செய்த கொலைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற வேண்டும் எண்டதுதானே உங்களமாதிரி சிங்களவனோடை நிண்டு தமிழருக்காக பாடு பட்டவையின் ஆசையா கிடந்தது...

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து மாற்றப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரணிலை நரியன் எண்டுதான் அவர் சொன்னவர்.. மகிந்தவை நல்லவன் எண்று சொல்ல இல்லை.. சிரைச்சா மொட்டை வளர்த்தால் குடும்பி இல்லை...

நரியனோ சொரியனோ எல்லாம் சிங்கள இனவெறியன் தான் இதிலை எவன் வந்தாலும் பிரச்சினை.. அதிலை நரியன் தமிழன் ஆதரவோடை ஜனாதிபதியாக வந்து தான் செய்த கொலைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற வேண்டும் எண்டதுதானே உங்களமாதிரி சிங்களவனோடை நிண்டு தமிழருக்காக பாடு பட்டவையின் ஆசையா கிடந்தது...

அடடடடடடட இப்ப விளங்கிது. எங்களமாதிரி ஆக்கள் சிங்களவனோட நிண்டு தமிழருக்காக பாடுபட்டதாலதான் ரணில் ஜனாதிபதியா வந்து தான்செய்த கொலையளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற முடியேல. :wub:

அப்ப ஜனாதிபதியா வரவச்சு கொலையள் செய்யவிட்டு சர்வதேச அங்கீகாரமும் வாங்கிக்குடுத்தது யாரண்ணே? :(

UN, EU , US எல்லாம் நடந்த கொலைக்கு எப்பிடி அங்கீகாரம் கொடுத்து நிக்கிறது எண்டதை ஒருக்க விளங்கப்படுத்துமண்னை...

அவர்கள் செய்யுறதைதான் உங்க ஊர் அங்கீகாரம் எண்டுறதோ...??

பிரித்தானியா (EU) மார்ழிக்கு பிறகு முகாம்கள் நிர்வாகிக்க காசு தரமாட்டம் எண்டதும் மனிதாபினாம் வந்து மக்களை மீளக்குடியேற்றுததை ஒரு வேலை அங்கீகாரம் எண்டிறீயளோ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

UN, EU , US எல்லாம் நடந்த கொலைக்கு எப்பிடி அங்கீகாரம் கொடுத்து நிக்கிறது எண்டதை ஒருக்க விளங்கப்படுத்துமண்னை...

அவர்கள் செய்யுறதைதான் உங்க ஊர் அங்கீகாரம் எண்டுறதோ...??

பிரித்தானியா (EU) மார்ழிக்கு பிறகு முகாம்கள் நிர்வாகிக்க காசு தரமாட்டம் எண்டதும் மனிதாபினாம் வந்து மக்களை மீளக்குடியேற்றுததை ஒரு வேலை அங்கீகாரம் எண்டிறீயளோ...??

என்னண்ணை உலகநாடுகளின்ட அங்கீகாரத்தோடதான் எல்லாம் நடந்ததெண்டு கட்டுரை கட்டுரையா எழுதித்தள்ளிப்போட்டு இப்ப அவங்கள் சொல்லுறதவச்சு மாறி எழுதிறியளோ தெரியேல.

அதுசரி உந்த பொன்சேகா எங்கை நிண்டண்ணை உந்த அறிக்கை விடுறார்? யாழ்ப்பாணத்தில இருந்தோ?

அண்ணே.....அவன் போர் முடிஞ்சது தொடக்கம் 6 மாதத்தில 80% மான மக்கள மீள குடியமர்த்திறதா வாக்க குடுத்தவன் அதை செய்யிறானோ தெரியேல்லை!!

இப்ப 1 லச்சம் இருக்குமெண்டு செல்லியிருக்கிறான். அதுதான் நான் சொன்ன வெளியால எடுக்கவேண்டிய 1 லச்சம். :wub:

உலகம் என்னென்று இந்தக்கொலைகளை அங்கீகரித்தது என்று கேட்டிருக்கின்றீர்கள்" தயா.

புலிகளின் பல செயற்பாடுகளை ஒரு நாடும் அங்கீகரிக்கவில்லை,அதைவிட தொடர்ந்தும் நீங்கள் இதே நிலைப்பாட்டில் இருந்தால் நீங்கள் அழிக்கப்பட்டுவிடுவீர்கள் என்ற எச்சரிக்கைகள் கூட உலக நாடுகளால் விடப்பட்டிருந்த‌து.இவைகளையெல்லாம் புலிகள் ஊதாசீனம் செய்தார்கள்.உலகம் ராஜ‌பக்சாவை ஆதரித்தது என்பதை விட புலிகளை அழிப்பதில் அக்கறை கொண்ணிருந்தது என்பது தான் உண்மை. 30 வருடங்கள் புலிகளை நம்பி இருந்தனாங்கள் இப்ப ஏன் சுடுகுது மடியைப்பிடி அந்தரப்படுகின்றீர்கள்.மக்கள் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள் என்பது உண்மை ஆனால் கடந்த 30 வருடங்களும் நிம்மதியாக இருந்தார்களா என்றால் அதுவும் இல்லைத்தானே. குறிப்பாக கிழக்கு மக்கள்.கொஞ்சம் பொறுமையாக இருந்து பாருங்கள் உலகம் என்னசெய்யப்போகின்றது' என்று.

அதைவிட‌ முக்கிய‌மான‌து "இன‌ம் தெரியாத நபர்' என்ற ‌பெய‌ரில் கொலைக‌ள் இப்போது இல்லை.வெள்ளை வான் கடத்தல் மிகவும் குறைந்துவிட்டது.முகாம்களால் வெளியே வரும் மக்கள் சொல்வதை ஒரு முறை கேளுங்கள்.நல்லதுநடக்கும் என்ற நம்பிக்கையில் இருங்கள் அதைவிட்டு எல்லாவற்றிலும் குற்றம் பிடித்து ஒரு பலனுமில்லை, தமிழனுக்கு த‌மிழன் செய்யாத அநியாயமா?

  • தொடங்கியவர்

மேலதிக செய்திகள்

இராணுவத்தினரின் அர்ப்பணிப்பின் மூலம் கிடைத்த வெற்றியையும் நாட்டையும் பாதுகாக்க சீருடையைக் கழற்றிவிட்டு சேவையாற்ற வேண்டுமாயின் தான் அதற்குப் பின்நிற்கப் போவதில்லை என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் பௌத்த விகாரையில் இடம்பெற்ற வைபவத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து எமது அடுத்த சந்ததியினர் அச்சமின்றி வாழும் வகையில் நாட்டை உருவாக்கித் தருவேன் என்று உறுதியளித்திருந்தேன். அதன்படி நான் இப்போது செய்துள்ளேன்.

அதனை நாங்கள் இலகுவாகப் பெற்று விடவில்லை. பலத்த சிரமங்களின் மத்தியிலேயே அந்த இலக்கை அடைந்தோம். இலங்கையிலுள்ள மக்களுக்குத் தெரியும் நாங்கள் இந்த வெற்றிக்காக எவ்வளவு சிரமப்பட்டோம் என்று. இந்த வெற்றிக்காக முப்படையினரும் கடுமையாக உழைத்தனர். குறிப்பாக இராணுவத்தினர் பல தியாகங்களை மேற்கொண்டுள்ளனர். 5200 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 28000 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். உண்மையிலேயே நாங்கள் இராணுவத்தில் உள்ளவர்களிடம் கடமைப்பட்டுள்ளோம். அவர்களுடைய இந்த அர்ப்பணிப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. இல்லையேல் வவுனியாவுக்கு அப்பால் சென்றிருக்கவே முடியாது. பொது மக்கள் வழங்கிய ஆசீர்வாதம் ஆதரவு என்பன தான் எமக்கு இந்த வெற்றியைப் பெற்றுத்தந்தது.

இதனை நாங்கள் மறப்போமாயின் இந்த பரம்பரையினர் அல்லாதுவிடினும் அடுத்த பரம்பரையினர் புதிய பிரபாகரன்களை எதிர்கொள்ள வேண்டி நேரிடும்.

கொழும்பில் உள்ள சிலருக்கு இராணுவத்தினரின் அர்ப்பணிப்பு மறந்து விடுகிறது. இராணுவம் பெற்ற வெற்றியானது சுவீப் விழுந்ததைப் போன்றது என்று நினைப்பவர்களும் கதைப்பவர்களும் அங்கிருக்கிறார்கள். அவர்கள் தான் நாட்டை இப்போது ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இந்த வெற்றியைப் பெறுவதற்கு படையினர் எவ்வளவு கஸ்டப்பட்டார்கள் என்பதனை அவர்கள் உணர்ந்தால் தான் பெற்ற வெற்றியை ஸ்திரப்படுத்த முடியும்.

நாட்டின் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்ந்து விட்டது என நான் நினைக்கவில்லை. யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டதோடு நாடு முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கூற முடியாது. இடம்பெயர்ந்தமக்கள் மீளக் குடியேற்றப்பட்டு அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அவர்களிடையேயுள்ள பயங்கரவாதிகள் இனங்காணப்பட்டு அவர்கள் அழித்தொழிக்கப்பட்டு அல்லது சிறையிலடைத்து அங்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டால் தான் பெற்ற வெற்றி உறுதிப்படுத்தப்படும்.

அந்த இலக்கை அடைவதற்கு என்னைப் போன்ற சிலர் சீருடையைக் கழற்ற வேண்டிய நிலைகூட ஏற்படலாம். இதனைத் தொடர்ந்து அணிந்து கொண்டிருக்க முடியாது. நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவ்வாறான ஒரு நடவடிக்கையை எடுப்பதற்கு நான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை.

நாட்டை ஆட்சி செய்பவர்கள் நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்கிறார்களா? நாடு சரியாகப் பாதுகாக்கப்படுகிறதா? என்பவற்றை தொடர்ந்து அவதானித்து தேவையான நேரத்தில் தேவையான முடிவுகளை எடுத்து செயற்படுவென் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தொடர்பாக உங்களிடம் உள்ள ஈடுபாடும் பிடிப்பும் எனக்கு தைரியமளிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

காணொளி காண http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16538&cat=1#

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில ஆதரிக்க சொல்லி சொல்லுறார்

கூட்டமைப்பு இவர் நிண்டா ஆதரிக்கமாட்டன் எண்டு அறிக்கை விட்டமாதிரி இங்க எங்கயோ வாசிச்சன்.

சிங்களவன்ட தேர்தல் யார் நிண்டா என்ன பகிஸ்கரிச்சுப்போட்டா நல்லது!

மகிந்தா திரும்ப வந்திடுவானே அதுக்கு என்ன செய்யிறது?

ஏற்கனவே இலங்கை அரசியல் யாப்பு சட்டத்தில் பெளத்தரை தவிர யாரும் ஜனாதிபதியாக முடியாது. இது ஆளான ஆளு ,தமிழருக்கு அதிகாரங்கள் கொடுக்க கூடாது என பாதயாத்திரை நடந்தவர், கிறிஸ்தவராக இருந்து பெளத்தராகி தான் தனது பதவியை ஏற்றவர். இது க்கும் பொருந்தும்.

கால் செருப்புக்கும் லாயக்கிலாத கருணா, டக்ளஸ் போன்றவர்கள் தலையால் நடந்தாலும் எந்த பதவியையும் அடைய முடியாது. மாறாக நக்குவதை தவிர.

2002 பேச்சுவார்த்தையில் ரனிலின் கபட நாடகம் தமிழருக்கு எதனையும் பெற்று தராது என தெரிந்து மகிந்த எனும் தேர்வை கட்டாயமாக எடுக்க வேண்டி இருந்தது. ஏதோ ரனிலை தெரிவு செய்தால் ஒன்றும் தமிழருக்கு நடந்த்திருக்காது என்பது பகல் கனவு. கருணாவை பிரிப்பதில் முக்கிய பங்கெடுத்தவர்கள் இந்த ரனில் குழுவினரே.ஆக புலிகல் மீது குற்றம் சுமத்த பலர் முனையும் போதும் குற்றம் சாட்ட முடியாமல் முக்குழிப்பது அவர்களில் அரசியல் அறிவை பறைசாற்றும்.சரத் பொன்சாகாவுக்கே தெரியும் இன்னொரு பிரபாகரன் உருவாக கூடாது என்பது.சிங்கள அரசியல் வாதிகளின் பம்மாத்தை அறிந்தவர் பிரபாகரன் ஒருவர் அதுக்கு என்ன செய்யிறது?

தான். கருணாநிதியின் பம்மாத்தை முதன் முதலில் அறிந்தவரும் இவரே.ஏதோ பல நாடுகளின் உறுதுணையுடன் தமிம் மக்களின் உரிமையை பறித்தவர்கள் நெடுங்காலம் வாழமுடியாது. Because history repeats.

அதுக்கு என்ன செய்யிறது?

இல்லாட்டி வடிவா பேதி குடிக்க வேணும். :wub::(

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லாட்டி வடிவா பேதி குடிக்க வேணும். :wub::(

ம்......அனுபவம் பேசுது :D:D

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாட்டி பேச வைப்போம். :wub::(

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலில் ரணிலை ஜனாதிபதியாக்காத காரணத்தின் முடிவில் தவறேதும் இருப்பதாகப் படவில்லை.ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தால் தமிழரையும் அழிச்சு ஜீபிஎஸ் சலுகையையும் பெற்றிருப்பான்.அவன்ர காலத்திலை பேச்சு வார்த்தைக் குழுவுக்கு தலைமை வகித்த பீரிஸின் பேட்டிகளே இதற்கு நல்ல உதாரணம்.வருகிற ஜனாதிபதித் தேர்தலையும் தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள்.கடந்த மாநகரசபைத் தேர்தலையும் 80 வீதமான மக்கள் புறக்கணித்தார்களே புலிகள் ஆயுத முனையில் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு சொன்னார்கள் என்று இப்போதும் சொல்ல முடியுமா? மகிந்தவின் தெரிவுக்கு காலம் பதில் சொல்லும்.90 ஆம் ஆண்டு இனப்படுகொலை செய்தவர் இப்பொழுதுதான் சர்வதேச நீதி மன்றத்தில் விசாரிக்கப் படுகிறார்.

பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை. உண்மை ஒரு போதும் தூங்குவதும் இல்லை.

என்னண்ணை உலகநாடுகளின்ட அங்கீகாரத்தோடதான் எல்லாம் நடந்ததெண்டு கட்டுரை கட்டுரையா எழுதித்தள்ளிப்போட்டு இப்ப அவங்கள் சொல்லுறதவச்சு மாறி எழுதிறியளோ தெரியேல.

அதுசரி உந்த பொன்சேகா எங்கை நிண்டண்ணை உந்த அறிக்கை விடுறார்? யாழ்ப்பாணத்தில இருந்தோ?

அண்ணே.....அவன் போர் முடிஞ்சது தொடக்கம் 6 மாதத்தில 80% மான மக்கள மீள குடியமர்த்திறதா வாக்க குடுத்தவன் அதை செய்யிறானோ தெரியேல்லை!!

இப்ப 1 லச்சம் இருக்குமெண்டு செல்லியிருக்கிறான். அதுதான் நான் சொன்ன வெளியால எடுக்கவேண்டிய 1 லச்சம். :wub:

அதுதான் குடுத்த அழைப்பிதலை திருப்பி வாங்கினவங்கள்... நல்ல மரியாதை..

http://www.tamilnet.com/img/publish/2009/10/US_State_Department_Report_-_2009.pdf

தமிழனுக்கு உரிமை கொடுக்காவிடில் ,சிறீலங்கா சிங்கள இளைஞர்களை இழக்க வேண்டியிருக்கும் என்று இராணுவத் தளபதிக்குத்தான் நல்லா விளங்கி இருக்கு போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.