Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வருவேன்..தெரியலை..வரமாட்டேன்..வருவேன்: சிவத்தம்பி 'உறுதி'

Featured Replies

:D:(வருவேன்..தெரியலை..வரமாட்டேன்..வருவேன்: சிவத்தம்பி 'உறுதி' :lol::D

திங்கள்கிழமை, நவம்பர் 9, 2009.

சென்னை: வருவாரா, மாட்டாரா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில் கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தான் பங்கேற்கவிருப்பதாக இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக மாணவர் தேவானந்த் என்பவருக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு சிவத்தம்பிக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால் இதில் சிவத்தம்பி கலந்து கொள்ளக் கூடாது என்று பல்வேறு ஈழத் தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. சிவத்தம்பியும், ஆரம்பத்தில் இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை. அந்த சூழ்நிலை தற்போது இல்லை என்று கூறியிருந்தார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் முதல்வர் கருணாநிதி விடுத்த அறிக்கையில், சிவத்தம்பி மாநாட்டில் பங்கேற்பதாக தெரிவித்தார். மேலும், மாநாட்டில் இடம் பெற வேண்டிய சில முக்கிய அம்சங்களை சிவத்தம்பியே ஆலோசனையாக கூறியுள்ளதாகவும் விளக்கியிருந்தார்.

இதனால் சிவத்தம்பி வருகை குறித்து பெரும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் சிவத்தம்பி பிபிசிக்கு அளித்த பேட்டியில், மாநாட்டுக்கு இன்னும் நாள் உள்ளது. எனவே இதுகுறித்து முடிவெடுக்க கால அவகாசம் உள்ளது என்று கூறியிருந்தார். இதனால் குழப்பம் கூடியது.

இந்த நிலையில் தான் மாநாட்டில் பங்கேற்கவிருப்பதாக சிவத்தம்பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவத்தம்பி தனது பேட்டியில் கூறுகையில், இதை பல்டி என்று கூட நீங்கள் கூறிக் கொள்ளுங்கள். ஆனால், நான் எனது மனதை மாற்றிக் கொண்டுள்ளேன். மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன்.

நான் ஒரு தமிழறிஞர். தமிழக அரசு தமிழுக்காகவும், இந்த மாநாட்டுக்காகவும் பல கோடி ரூபாய்களை செலவழித்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்த மாநாட்டில் பங்கேற்க தீர்மானித்துள்ளேன். இதற்கு என்ன மாதிரியான அரசியல் நோக்கம் கற்பிக்கப்பட்டாலும் நான் கவலைப்படவில்லை.

இந்த மாநாடு குறித்து முதல்வர் கருணாநிதி அறிவித்தபோது நான் இலங்கைத் தமிழர் துயரம் குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும் என அவருக்கு நான் கோரிக்கை விடுத்தேன்.

உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்று முதல்வர் கருணாநிதி பெயர் மாற்றி அறிவித்தபோது இலங்கைத் தமிழர் துயரம் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்ற எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைத்து விடப் போவதில்லை.

முதல்வர் கருணாநிதியை அரசியல் ரீதியாக எதிர்ப்பதன் மூலம் இந்த மாநாடு தடம் புரண்டு போய் விடக் கூடாது என்று நான் விரும்புகிறேன். செம்மொழி அந்தஸ்தை தமிழ் திரும்பப் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

ஆரம்பத்தில் எனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை எடுத்தேன். தற்போது அதை மாற்றிக் கொண்டு விட்டேன். இதை பல்டி என்றும் சிலர் வர்ணிக்கலாம். ஆனால் இதுதான் எனது நிலை.

சிவத்தம்பி இரட்டை நாக்குடன் பேசுவதாக பலரும் நினைக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் குழப்பம் ஏற்படக் காரணம், எனது மனதில் ஏற்பட்ட இரண்டு விதமான அறிவுப்பூர்வமான விவாதங்கள்தான். இதனால் மட்டும் நான் உறுதியான நிலைப்பாட்டை எதிலும் கொண்டிருக்கவில்லை என்று கூறி விடக் கூடாது என்றார் சிவத்தம்பி.

நன்றி தட்ஸ்தமிழ்

:lol:நீங்க வாற வருடம தான் இப்படி ஒரு அறிக்கை விடுவீங்கள் என்று எதிர் பார்த்தேன். இப்படி முந்தியடித்து அறிக்கை விட்டு என்னை ஏமாற்றி விட்டீர்களே. எனி அவசர அவசரமாக உங்களை துரோகிப் பட்டியலில் இணைக்கப் போகினம். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.....இந்த அய்யா கூட குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகள் சில இருக்கின்றன தெரியும் தானே..பூவா,தலையா..டக்.டிக் டோஸ் அப்படித் தான் செய்யிறார்.. ஒரு நேரம் மகாநாட்டுக்கு போகவில்லை...பின்னர் இல்லை போறன்.பின்னர் இல்லை இன்னமும் காலம் இருக்கிறது தானே தீர்மானிக்கவில்லை.இவருக்கும் பதவி மோகமோ என்னமோ பிடித்து ஆட்டுது போலும்.நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருவேன்..தெரியலை..வரமாட்டேன்..வருவேன்: சிவத்தம்பி 'உறுதி' :lol::lol:

:Dநீங்க வாற வருடம தான் இப்படி ஒரு அறிக்கை விடுவீங்கள் என்று எதிர் பார்த்தேன். இப்படி முந்தியடித்து அறிக்கை விட்டு என்னை ஏமாற்றி விட்டீர்களே. எனி அவசர அவசரமாக உங்களை துரோகிப் பட்டியலில் இணைக்கப் போகினம். :lol::(

ம்ம்ம்.....இந்த அய்யா கூட குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகள் சில இருக்கின்றன தெரியும் தானே..பூவா,தலையா..டக்.டிக் டோஸ் அப்படித் தான் செய்யிறார்.. ஒரு நேரம் மகாநாட்டுக்கு போகவில்லை...பின்னர் இல்லை போறன்.பின்னர் இல்லை இன்னமும் காலம் இருக்கிறது தானே தீர்மானிக்கவில்லை.இவருக்கும் பதவி மோகமோ என்னமோ பிடித்து ஆட்டுது போலும்.நன்றி.

வசம்பு மாமா சொல்லுறமாதிரி துரொகிப்பட்டத்துக்கு பயப்பிடுறார். முன்னமும் எதிராச்சொல்லி ரெண்டு மூண்டுதரம் வாங்கியிருக்கிறார், பிறகு ஆதரவாச்சொல்லி தப்பிப் பிழைச்சிருக்கிறார். பேராசியர் எண்டு பெரிய படிப்பு படிச்சதால தன்ர கருத்த சொல்லியிருக்கலாம் அதுக்காக பட்டமும் வாங்கியிருக்கலாம். இப்பவும் அதே நிலைதான். :lol:

***

Edited by இளைஞன்
மூலக்கருத்து நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைத்து விடப் போவதில்லை.

செம்மொழி மாநாட்டில் பேராசிரியர் கா.சிவத்தம்பி பங்கு பற்றுவது

கலந்து கொள்ள வேண்டும் 86 (17.95%)

கலந்து கொள்ள வேண்டாம் 379 (79.12%)

தெரியாது 13 (2.71%)

Total votes: 479

http://www.globaltamilnews.net/

செம்மொழி மகாநாட்டை நடாத்தியும் தமிழுக்கும் ஒன்றும் கிடைக்க போவதில்லை. தமிழில் படத்துக்கு பெயர் வைக்க கூட வரி விதிப்பு என்றவுடன் தான் தமிழிலிலேயே பெயர் வைக்கிறார்கள். இந்த லட்சணத்தில் மாநாட்டை வைத்து உழைக்கிறவர்கள் உழைக்கட்டும். பேராசிரியர் சிவதம்பி அவர்களின் "பறியில்" யாரது கை போடுவது? :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைத்து விடப் போவதில்லை.//

நேர்மையாக மற்ற வரியையும் சொல்லி இருந்தால்..............இதில் பங்கு பற்றுவதால் எனக்கு நன்மை கிடைக்கு என்று சொல்லி இருந்தால்....... இது ஒரு மேட்டரே இல்லை. :D யாரிடமும் நேர்மை இல்லை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்இ உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம்இ இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைத்து விடப் போவதில்லை.

அதே போல் இம் மகாநாட்டில் பங்கு பற்றுவதன் மூலம் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எந்தவித நன்மையம் கிடைத்து விடப் போவதில்லை. நன்மை கருணாநிதிக்கு தீமை பேராசியருக்கு.உலகத் தமிழர்கள் பேராசிரியரின் மேல் வைத்த மதிப்பு ஒரேயடியாக சரிந்து விழப்போகிறது. இவ்வளவு வயது வரைக்கும் கட்டிக்காத்த நல்ல பெயரை வீணாகக் கெடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற கவலையே எமக்கு.

  • தொடங்கியவர்

நீங்கள் இணைத்திருப்பது கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன் வந்ததை. இதற்குப் பின்னும் பிபிசியில் இதே பாணியில் பேட்டி கொடுத்திருந்தார். பின்பு 3 தினங்கள் கழித்து திரும்பவும் பிபிசியில் தனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் தான் ஒரு போதும் கலந்து கொளள்ள மாட்டேனென்று கூறவில்லையென்றும் கூறி, தான் கலந்து கொள்வது பற்றி இன்னமும் தீர்மானிக்கவில்லையென்றே கூறியதாகவும் கூறினார். :( இதைப் பல்டியடிப்பதாக் கூறக் கூடாதாம் என்று இன்றைய அறிக்கையில் விளக்கியுள்ளார். :lol:

:D இறுதியாக இன்று கலந்து கொள்வேனென்று உறுதியாகக் கூறுவதாக திரும்பவும் பேட்டி கொடுத்துள்ளார். :lol::lol:

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தின் கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி பங்குபெற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளார். ஈழத் தமிழர்கள் துயரநிலையொன்றுக்குத் தள்ளப்பட்டிருக்கையில், ஈழத் தமிழரான போராசிரியர் சிவத்தம்பி இம் மகநாட்டில் கலந்து கொள்வது ஏற்புடையதல்ல எனும் கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

சிவதம்பியும் இது குறித்து மழுப்பலான பதில்களையே இதுவரை சொல்லி வந்திருந்தார். இந்நிலையில், கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், பேரா. சிவத்தம்பி கலந்து கொள்வதை தற்போது உறுதி செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. சென்னை பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் செவ்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் உறுதிபடத் தெரிவித்திருப்பதாக மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாநாட்டில் கலந்து கொள்ளும் எனது முடிவு தவறானது என விமர்சிக்கப்படலாம், அதற்காக நான் வருந்தப்போவதில்லை எனத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என நான் முன்பு கூறிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் செம்மொழி மாநாட்டை நான் புறக்கணிப்பதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு நன்மையேதும் கிடைத்துவிடப் போவதில்லை. ஆதலால் தமிழுக்கான மாநாடு எனது எதிர்பபால் தடம்புரண்டு போய்விடக் கூடாது என்பதற்காக இம் மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளேன் எனக் கூறியதாக எனத் தெரியவருகிறது

இது குறித்த விரிவான கட்டுரையைப் பார்க்க அழுத்துங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழறிஞர் கார்திகேசு சிவத்தம்பி அவர்கள், தமிழர்கள் எல்லோராலும் மதிக்கப்படும் உயரத்தில் இருப்பவர். தேவையில்லாது அவரை விமர்சித்து (அந்த விமர்சனம் அவருக்குச் சார்பானதாகவிருக்கலாம் அன்றேல் எதிர்ப்பானதாகவிருக்கலாம்) தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள். அவர் தனக்கு எதுசரியெனப்படுகின்றதோ அதைச்செய்கின்றார். நாம் யார் அவரை விமர்சிக்க. அந்த வயதுமுதிர்ந்த பொரியவரை விமர்சனம் செய்வது நல்லதல்ல. தேவையேற்படின் அவரடன் நேரடியாகத்தொடர்புகொண்டு உங்களது கருத்துக்களை முன்வைக்கவும்.தொடர்புகொள்ளும் தூரத்திற்கு அப்பால் அவர் இன்னமும் சென்றுவிடவில்லை. கொழும்பில்தான் வாழகின்றார். மேலும் அவர் தவறு செய்தாராகவிருந்தால் "காலம் அவரைக் கணித்துநிற்கும்"

இங்கு பலர் அவரது பெயரில் அவருக்கு ஆதரவாகவோ அன்றேல் எதிர்ப்பாகவோ கருத்துக்களைப் பதிவுசெய்து தமிழ்ச்சமூகத்தின்மீதுள்ள தனிப்பட்ட தமது தனிப்பட்ட காழ்ப்புணர்சிகளை வெளிப்படுத்த முயல்கின்றார்கள்.

இயையத்தள ஒருங்கமைப்பாளர் எனது வேண்டுகோளைப் பரிசீலித்து இப்படியான கருத்துக்களைத் தணிக்கைசெய்வார் என நினைக்கிறேன்.

திருமாவளவனுக்கு ஒரு நாட்டு ஜனதிபதியோட நின்று போஸ் கொடுக்க வேண்டும் என்று ஆசை வந்த மாதிரி.

சிவத்தம்பிக்கும் ஒரு ஆசை வந்திருக்கும்

ஆசை யாரைவிட்டுது

''உலகதமிழ் காவலன் நான்

ஈழத்தமிழ் காவலன் நீ''

என்று கவிதை மழை வடிக்கப்போகிறார் நம்ம கலைஞர்

//உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைத்து விடப் போவதில்லை.//

நேர்மையாக மற்ற வரியையும் சொல்லி இருந்தால்..............இதில் பங்கு பற்றுவதால் எனக்கு நன்மை கிடைக்கு என்று சொல்லி இருந்தால்....... இது ஒரு மேட்டரே இல்லை. :o யாரிடமும் நேர்மை இல்லை.. :o

ஆனால்இ உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம்இ இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைத்து விடப் போவதில்லை.

அதே போல் இம் மகாநாட்டில் பங்கு பற்றுவதன் மூலம் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எந்தவித நன்மையம் கிடைத்து விடப் போவதில்லை. நன்மை கருணாநிதிக்கு தீமை பேராசியருக்கு.உலகத் தமிழர்கள் பேராசிரியரின் மேல் வைத்த மதிப்பு ஒரேயடியாக சரிந்து விழப்போகிறது. இவ்வளவு வயது வரைக்கும் கட்டிக்காத்த நல்ல பெயரை வீணாகக் கெடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற கவலையே எமக்கு.

தமிழகத்தின் கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி பங்குபெற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளார். ஈழத் தமிழர்கள் துயரநிலையொன்றுக்குத் தள்ளப்பட்டிருக்கையில், ஈழத் தமிழரான போராசிரியர் சிவத்தம்பி இம் மகநாட்டில் கலந்து கொள்வது ஏற்புடையதல்ல எனும் கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

சிவதம்பியும் இது குறித்து மழுப்பலான பதில்களையே இதுவரை சொல்லி வந்திருந்தார். இந்நிலையில், கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், பேரா. சிவத்தம்பி கலந்து கொள்வதை தற்போது உறுதி செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. சென்னை பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் செவ்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் உறுதிபடத் தெரிவித்திருப்பதாக மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாநாட்டில் கலந்து கொள்ளும் எனது முடிவு தவறானது என விமர்சிக்கப்படலாம், அதற்காக நான் வருந்தப்போவதில்லை எனத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என நான் முன்பு கூறிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் செம்மொழி மாநாட்டை நான் புறக்கணிப்பதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு நன்மையேதும் கிடைத்துவிடப் போவதில்லை. ஆதலால் தமிழுக்கான மாநாடு எனது எதிர்பபால் தடம்புரண்டு போய்விடக் கூடாது என்பதற்காக இம் மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளேன் எனக் கூறியதாக எனத் தெரியவருகிறது

இது குறித்த விரிவான கட்டுரையைப் பார்க்க அழுத்துங்கள்

091109%20001.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.