Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவரின் பிறந்ததினம் என்ற பெயரில் ரொறன்ரோவில் அரங்கேறிய கொண்டாட்டம்

Featured Replies

எவனெருவன் தங்கச்சரிகையிட்ட உடையணிந்தோ அன்றேல் கோமணத்தடனேயோ பங்கு கொள்வார்களாகவிருந்தால் அவைகளை ஏற்றுக்கொள்வதும் ஏற்காததும் எமது பிரச்சனை நீங்களும் விருப்பமெனில் இதில் கலந்துகொள்ளவும்.

:lol:மொத்தத்தில் எல்லோரையும் :lol: கோமணத்துடன் :) அலைய விடுவதென்பதில் உறுதியாகவே இருக்கின்றீர்கள் போல...... :D

Edited by Vasampu

  • Replies 113
  • Views 10.2k
  • Created
  • Last Reply

தாயகத்தில் மக்கள் அல்லல்படும் இந்தத்தருணத்தில் பளபள விழாக்கள் தேவையில்லைத்தான்.

ஆனால் தேசியதலைவரின் பிறந்ததினம் என்பது ஒரு தேசியநாள்.

அதில் பங்குபற்றுபவர்கள் இனிமேல்தன்னும் ஆடம்பரங்களை குறைத்து எழுச்சியை அதிகரித்து பங்குகொள்வதுதான் முறை.

அதுசரி...சுவிஸில் போராடாமல் செத்தவனுகளுக்கு PLOTE நடாத்திய வீர(?) மக்கள் தினம் ஒரு கேளிக்கைநாள்போலவே நடாத்தப்பட்டது.

அதைப்பற்றி எந்த ஒருவரும் எழுதாதது கொஞ்சம் இடிக்குது.

Edited by archunan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று நான் இங்கு கூறவில்லையே. தமிழினத்திற்கு விடிவு என்றொன்று இருக்குமானால், அது தலைவரால் மட்டுமே கிடைக்கும் என்பதில் எனக்கு எந்த ஆட்சேனையும் இல்லை. முதல்நாள் பட்டு சாறி கட்டினவை அடுத்தநாள் மஞ்சள், சிவப்பு சாறியோடு நின்றதை நானே கண்டேனே. இதுவே, அவர்கள் மகளிர் அமைப்பு என்பதற்கு அடையாளம். அதோடு, அனைத்துலகப் பொறுப்பாளரை அறிந்தவர்களுக்குத் தெரியும், மகளிரைப் பற்றி அவருடைய எண்ணம். இப்படியானவர்களால்தான், அவருக்கு மகளிர் என்றாலே அலர்ஜியாக இருந்தது என்பதை அங்கு சென்று வந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவர்களோடு எங்கள் குடும்பத்திற்கு 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பு இருக்கிறது. அங்கு இருப்பவர்களுள் எத்தனை பேர் 5 வருடங்களுக்க மேல் அந்த அமைப்பில் இருக்கிறார்கள். ஓருசிலபேர் மட்டுமே அப்படி இருக்கிறார்கள். இதிலிருந்தே அந்த அமைப்பைப் பற்றி தெரியவேண்டும். அதோடு, மக்கள் ஏழுச்சி நிகழ்வுக்காகத்தான் அங்கு வருகிறார்களே தவிரக் கொண்டாடுவதற்காக அல்ல. மக்களே சாதாரண உடையில் வரும்போது, அங்கு வேலை செய்பவர்கள் இப்படி இருந்தால் என்ன அர்த்தம்? இந்த வருடம் நடந்த அந்தக் கொடூரம் அவர்களைப் பாதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்? அவர்களுடைய பிள்ளைகளோ, சகோதரங்களோ, அதில் இறந்திருந்தால், இவர்களால் இப்படி உடையணிந்து வந்திருக்கமுடியுமா? அதோடு, இவர்களில் எத்தனைபேர் மாவீரர் குடும்பங்களைச் சோர்ந்தவர்கள்? அப்படி மாவீரர்களாக இருந்திருந்தால் இப்படி உடையணிந்து வந்திருக்க முடியுமா? பெரிதாகக் கொண்டாடுபவர்கள் கொண்டாடுங்கள். அதற்கா பொலிக்கண்ணீர் வடித்துக் கொணடாடதீர்கள். இவர்களின் உணர்வும், விசுவாசமும் இப்படிச் செயலாற்றுவதில் மட்டும்தான். அறிவிப்பு செய்தவர், தலைவரின் பின்னால் நநாங்கள் நிற்போம் என்று கூறினார். அவர் தன்னுடைய மகன்களில் ஒருவரையேனும் போராட்டத்திற்காகக் கொடுக்கத் தயாரா? உங்களால் முடிந்ததை மட்டுமே முழங்கவேண்டும். சும்மா பெயருக்கா முழங்கக் கூடாது. கருத்து வைப்பவர்களால், உங்களால் முடிந்தால் மட்டுமே கருத்து வையுங்கள். விவாததிற்காக வைப்பவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை.

மக்களே சாதாரண உடையில் வரும்போது, அங்கு வேலை செய்பவர்கள் இப்படி இருந்தால் என்ன அர்த்தம்? இந்த வருடம் நடந்த அந்தக் கொடூரம் அவர்களைப் பாதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்? அவர்களுடைய பிள்ளைகளோ, சகோதரங்களோ, அதில் இறந்திருந்தால், இவர்களால் இப்படி உடையணிந்து வந்திருக்கமுடியுமா? அதோடு, இவர்களில் எத்தனைபேர் மாவீரர் குடும்பங்களைச் சோர்ந்தவர்கள்? அப்படி மாவீரர்களாக இருந்திருந்தால் இப்படி உடையணிந்து வந்திருக்க முடியுமா? பெரிதாகக் கொண்டாடுபவர்கள் கொண்டாடுங்கள். அதற்கா பொலிக்கண்ணீர் வடித்துக் கொணடாடதீர்கள். இவர்களின் உணர்வும், விசுவாசமும் இப்படிச் செயலாற்றுவதில் மட்டும்தான். அறிவிப்பு செய்தவர், தலைவரின் பின்னால் நநாங்கள் நிற்போம் என்று கூறினார். அவர் தன்னுடைய மகன்களில் ஒருவரையேனும் போராட்டத்திற்காகக் கொடுக்கத் தயாரா?

வாங்கப்பா யாராவது இதுக்கு பதிலை சொல்லுங்கப்பா?

அதை விட்டு சும்மா காசினியையும் வசம்பைண்ணையும்

திட்டுறதிலே எந்தப்பிரயோசனமும் இல்லை.

காசினியின் கருத்து மிக மிக சரியானதே!!!!!

அதே போல் வசம்புவும் யதார்த்தமான பல உண்மைகளை எழுதியிருக்கிறார்!!!!!!

எங்களின் வாழ்க்கை முறையில் தான் மற்ரவர்கள் எங்களை எடை போட்டுக் கொள்வார்கள்!!!

எங்கள் இனம் என்பது சரியான சந்தாப்பவாதம் உடைய இனம்........

இப்படியான கொண்டாட்டங்களிற்கு அதிக ஆடம்பரமாக போவதை நாம் தவிர்த்துக் கொள்ளல்

மிக மிக நல்லது....................மற்ரவர்கள் என்ன உடுக்கிறார்கள் என்பதை பார்ப்பதாக குற்ரம் சொன்னார்கள்

இப்படியானவர்கள் வன்னியில் நடந்து முடிந்த போரில் தன் உடன் பிறப்பை இழந்தவராக இருந்தால்

எப்படி இவ்வளவு ஆடம்பரமாக உடுத்துக் கொண்டு போக முடியும்?????

வன்னியில் மக்கள் குலை

குலையாக செத்துக் கொண்டிருக்க புலத்திலும் தாயகத்தின் ஏனைய பகுதியிலும்

கொட்டாட்டங்களை செய்து மகிழவில்லையா????

முடிவாக நான் சொல்ல வருவது என்னவென்றால் ஒவ்வொரு தமிழனும் தனக்கு எது வசதியோ அதன் படி தன் வாழ்க்கையை

வாழுகிறான்.................உலகத்தில் இப்படி ஒரு இனமே இல்லை என்று தான் சொல்ல வேணும்!!!!!!

பாவப்பட்டதுகள் இன்னும் சிலுவையை தூக்கிய படிதான் இருக்கிறார்கள்.................

என் இனம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் போது நான் தெருவிலே தேங்காய் உடைக்கிறேன்!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று நான் இங்கு கூறவில்லையே. தமிழினத்திற்கு விடிவு என்றொன்று இருக்குமானால், அது தலைவரால் மட்டுமே கிடைக்கும் என்பதில் எனக்கு எந்த ஆட்சேனையும் இல்லை. முதல்நாள் பட்டு சாறி கட்டினவை அடுத்தநாள் மஞ்சள், சிவப்பு சாறியோடு நின்றதை நானே கண்டேனே. இதுவே, அவர்கள் மகளிர் அமைப்பு என்பதற்கு அடையாளம். அதோடு, அனைத்துலகப் பொறுப்பாளரை அறிந்தவர்களுக்குத் தெரியும், மகளிரைப் பற்றி அவருடைய எண்ணம். இப்படியானவர்களால்தான், அவருக்கு மகளிர் என்றாலே அலர்ஜியாக இருந்தது என்பதை அங்கு சென்று வந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவர்களோடு எங்கள் குடும்பத்திற்கு 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பு இருக்கிறது. அங்கு இருப்பவர்களுள் எத்தனை பேர் 5 வருடங்களுக்க மேல் அந்த அமைப்பில் இருக்கிறார்கள். ஓருசிலபேர் மட்டுமே அப்படி இருக்கிறார்கள். இதிலிருந்தே அந்த அமைப்பைப் பற்றி தெரியவேண்டும். அதோடு, மக்கள் ஏழுச்சி நிகழ்வுக்காகத்தான் அங்கு வருகிறார்களே தவிரக் கொண்டாடுவதற்காக அல்ல. மக்களே சாதாரண உடையில் வரும்போது, அங்கு வேலை செய்பவர்கள் இப்படி இருந்தால் என்ன அர்த்தம்? இந்த வருடம் நடந்த அந்தக் கொடூரம் அவர்களைப் பாதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்? அவர்களுடைய பிள்ளைகளோ, சகோதரங்களோ, அதில் இறந்திருந்தால், இவர்களால் இப்படி உடையணிந்து வந்திருக்கமுடியுமா? அதோடு, இவர்களில் எத்தனைபேர் மாவீரர் குடும்பங்களைச் சோர்ந்தவர்கள்? அப்படி மாவீரர்களாக இருந்திருந்தால் இப்படி உடையணிந்து வந்திருக்க முடியுமா? பெரிதாகக் கொண்டாடுபவர்கள் கொண்டாடுங்கள். அதற்கா பொலிக்கண்ணீர் வடித்துக் கொணடாடதீர்கள். இவர்களின் உணர்வும், விசுவாசமும் இப்படிச் செயலாற்றுவதில் மட்டும்தான். அறிவிப்பு செய்தவர், தலைவரின் பின்னால் நநாங்கள் நிற்போம் என்று கூறினார். அவர் தன்னுடைய மகன்களில் ஒருவரையேனும் போராட்டத்திற்காகக் கொடுக்கத் தயாரா? உங்களால் முடிந்ததை மட்டுமே முழங்கவேண்டும். சும்மா பெயருக்கா முழங்கக் கூடாது. கருத்து வைப்பவர்களால், உங்களால் முடிந்தால் மட்டுமே கருத்து வையுங்கள். விவாததிற்காக வைப்பவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை.

ஹாசினி உங்களை நினைத்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. நீங்கள் தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்து அடிப்பதும் நன்றாக விளங்குகிறது. உங்களால் முடியாத விடயங்களை.... நீங்களே நிரவிக் கொள்ளுங்கள். குற்றஞ் சொல்லிச் சொல்லியே பலரின் அதிருப்திக்கு ஆளாகி கவனத்தில் எடுக்கப்படாத ஆளாக இருக்கும் நீங்கள் இங்கு முன் வைக்கும் கருத்தின் மூலம் எதையோ சாதிப்பதாக நினைக்கிறீர்கள். இன்றுகூட நீங்கள் குற்றஞ் சாட்டும் அவர்கள் ஏதோ ஒரு சந்தியில் வதை முகாம்களைத் திறந்துவிடக்கோரி கவனயீர்ப்பைச் செய்கிறார்கள் முடிந்தால் அவ்விடத்தில் சென்றால் நீங்கள் குறிப்பிடும் அவர்கள் நிற்பார்கள் நேரடியாகப் பேசுங்கள். உங்கள் கருத்தை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அவர்களோடு கை கொடுத்து இனிவரும் நாட்களில் அவர்கள் எப்படி நடக்கவேண்டும் என்று ஆலோசனை வழங்குங்கள். கட்டாயம் உங்கள் கருத்துகளுக்கு அவர்களிடம் விளக்கம் இருக்கும். ஒரு வேளை தவறாக இருந்தால் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களுடைய கவனயீர்ப்பில் போய் பேசுங்கள் இன்று மாலை ஸ்காபுரோப் பகுதியில் இடம்பெறுகிறது. உங்களுடைய அக்கறை உண்மையானதாக இருந்தால் நேரே போய்ப் பேசுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கப்பா யாராவது இதுக்கு பதிலை சொல்லுங்கப்பா?

அதை விட்டு சும்மா காசினியையும் வசம்பைண்ணையும்

திட்டுறதிலே எந்தப்பிரயோசனமும் இல்லை.

காசினியும் வசம்பண்ணையும் வம்புக்கு இழுக்கிறதிலையே குறியாக நிற்க இதற்க்கு என்ன பதில் எழுத முடியும்?

தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தான் காசினிக்கு பிரச்சினை என்று நினைத்து தான் பதில் எழுதினோம். மாறாக நிகழ்ச்சி ஏற்பாட்டாள்களுக்கும் அவருக்கும் பிரச்சினை இருக்கிறது என்பது இப்போது தான் தெரிகின்றது. தலைவரின் பிறந்த நாளை கொண்டாட்டமாக கொண்டாடியது தவறில்லை என்பது காசினியில் வாதமாகவும், ஆனால் மகளீர் அமைப்பினரின் உடை தான் காசினியை குழைந்து கொண்டிருக்கும் பிரச்சினை என்பது இப்போது தெளிவாகின்றது.

அடுத்து, மற்றவர்களை பற்றிய கேள்விகளை விடுத்து, உங்கள் வீட்டிலிருக்கும் முகக்கண்ணாடிக்கு முன்னிருந்து விரல்களை உங்கள் முன்நீட்டி நீங்கள் இது வரை என்ன செய்தீர்கள் என்று கேட்பது நல்லது. உங்களைப்பற்றி தெளிவு மற்றவர்களை கேள்வி கேட்க முன் உங்களுக்கு அவசியம் என்பது எனது கருத்து.

யாரின் பிள்ளைகள் எங்கு போராட வேண்டும் என்று நீங்களோ நானோ முடிவு செய்ய முடியாது. அது அவரவர் சொந்த விருப்பம். அதே நேரம் நிகழ்வுகளை ஒழுங்கு படுத்த நீங்கள் தயார்ட எனில் மற்றவர்களுக்கு பதில் நீங்கள் ஒழுங்கமைக்கலாமே!?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை நீங்கள் குற்றஞ் சாட்டியிருக்கும் அவர்களுடன் பேசிவிட்டு பதிவிடுங்கள். அதுவே சிறந்த தாயக நேசிப்பிற்கு அடையாளம். அவர்களுடன் உரையாடிய பின்னரான உங்கள் பதிவை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் இங்கு கட்டியிருக்கும் கோமணத்தைக்கூட தமது மானத்துடன் சிங்ளவனுக்கு அடகு வைத்துச் சோரம் போனதை மறந்துவிட்டு மற்றவர்களது கோமணத்தைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள்.

காசினியும் வசம்பண்ணையும் வம்புக்கு இழுக்கிறதிலையே குறியாக நிற்க இதற்க்கு என்ன பதில் எழுத முடியும்?

அதே நேரம் நிகழ்வுகளை ஒழுங்கு படுத்த நீங்கள் தயார்ட எனில் மற்றவர்களுக்கு பதில் நீங்கள் ஒழுங்கமைக்கலாமே!?

நாங்கள் யதார்த்தத்தில் நடப்பதை எழுதினால் அது உங்களுக்கு வம்பிற்கிழுப்பதாகத் தெரிகின்றதோ?? நான் எழுதியதில் என்ன தவறை உங்களால் சுட்டிக் காட்ட முடியும். முடிந்தால் அதைச் சுட்டிக் காட்டலாமே?? நான் பதில் தரக் காத்திருக்கின்றேன். இங்கே சிலருக்கு கற்பனையில் கதை விட்டால் மட்டுமே பிடிக்கும். அதை வந்து ஆகோ ஓகோ என்று புகழ்ந்து விட்டுச் செல்வார்கள். ஆனால் நடைமுறையில் எது சாத்தியமோ அதைச் சொன்னால் பிடிக்காது.

காசினி ஏதோ இங்கு தனது தனிப்பட்ட பிரைச்சினையைக் கொண்டு வந்து எழுதவில்லை. பொதுவான ஒரு விடயத்தை கருதத்துக்களத்தில் எழுதுவதே ஏனையோரும் அது பற்றிய தமது கருத்துகளை தெரிவிப்பதற்காக. இன்று மாலை ஸ்காபுரோப் பகுதியில் நிற்பார்கள் அவர்களிடம் நேரில் சென்று கேளுங்கள் காசினி என்பது வெறும் விதண்டாவாதம். சம்மந்தப்பட்டவர்களும் இந்த இணையத்தளத்தை நிச்சயம் பார்ப்பார்கள் அவர்கள் உண்மையில் விரும்பினால் இதற்கு பதலளிக்கலாம். அல்லது விரும்புவோர் அவர்களின் பதிலைப் பெற்று இங்கு பதியலாம்.

காசினி தன் கருத்தைப் பதிந்ததற்கு இங்கு மகளிரணிக்காக வக்காலத்து வாங்குவோரே இந்தக் குதி குதிக்கும் போது அவர்களிடம் நேரில் இதைக் கேட்டால் எந்தளவு துள்ளுவார்கள்?? என்பது எமக்கும் தெரியும். சுவிசில் முன்பு பல காலங்கமாக பொறுப்பாளராக இருந்தவரே தவறுகளைச் சுட்டிக் காட்டியதற்காக, புரட்டாதி இறுதியில் சேட் கிளிக்கப்பட்டு துவட்டி எடுக்கப்பட்டார். பொறுப்பாளராகவிருந்தவருக்கே இந்தக் கதி என்றால் சாதாரணமானவர்களுக்கு?? இந்த நிலையில் காசினி போன்றவர்கள் போய் நிகழ்ச்சிப் பொறுப்பை ஏற்று நடாத்தத் தயார் என்று கேட்டால், அடுத்த வருடம் காசினிக்கு புறிம்பாக அஞ்சலி செய்ய வேண்டி வரும். :)

Edited by Vasampu

"யாரின் பிள்ளைகள் எங்கு போராடவேண்டும் என்பது நீங்களோ நாங்களோ முடிவுசெய்வதில்லை அது அவரவர் விருப்பம்"

வீட்டிற்கு ஒருவர் என்று பின் இரண்டு,மூன்றையும் பிடித்து விட்டு இங்கிருந்து கொண்டு உங்களை நியாயப்படுத்துவதற்காக அது அவரவர் விருப்பம் என்கின்றீர்களே? உங்களுக்கு மனசாட்சி என்று இருக்கின்றதா?

நாங்களும் இங்கு எங்களால் இயலுமானதை செய்கின்றோம் என்று சொல்லுங்கோ ஒப்புக்கொள்கின்றோம்,அதைவிட்டு நாட்டில் இருப்பவர்களுடன் உங்களை துளியும் ஒப்பிடாதீர்கள்.மிகப் பெரிய பாவம்.இரண்டிற்கும் பென்னாம் பெரிய இடவெளி.வெளிநாட்டில் இருந்து போராட்டதுற்கு போனவன் அனுபவத்தில் சொல்கின்றேன்

சிலர் இங்கு கட்டியிருக்கும் கோமணத்தைக்கூட தமது மானத்துடன் சிங்ளவனுக்கு அடகு வைத்துச் சோரம் போனதை மறந்துவிட்டு மற்றவர்களது கோமணத்தைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள்.

அட நிசம் தானுங்க. உங்க கூட்டத்திலிருந்து 500 பேருக்கு மேல் இம்மாத ஆரம்பத்தில் கொழும்பு சென்று, மகிந்தவிடம் கோமணத்தை அடகு வைச்சு பாவமன்னிப்பு கேட்டதை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன் நீங்க கவனிக்கலையோ?? இப்ப வெறும் கோமணமே கெதியென்று வாழும் மக்களிடமே, அந்தக் கோமணத்தை உங்க கூட்டம் உருவ நினைப்பது தவறில்லைங்களா?? இதை நான் சொன்னால் ஏனுங்க உங்களுக்கு மூக்கின் மேல் கோமணம் சா... சா.... கோபம் வருகின்றது?? :lol::)

Edited by Vasampu

:)அட போனவை உங்களுக்குச் சொல்லிப் போட்டு போகவில்லைப் போல. அதாலை உங்களுக்கும் போயிட்டு வந்தவை யாரெண்டு தெரியலை. :lol: புலத்தில் புலிகளையும் மக்களையும் சாட்டி தங்கடை வயிறு வளர்த்தவையை நான் குறிப்பிட, நீங்கள் அவையை முன்னாள் போராளிகளாக்கி, உண்மையான போராளிகளையும் கேவலப் படுத்துகின்றீர்கள். :(

உங்களை பொறுத்த வரைக்கு பிரபாகரனையும் அவரின் செயற்பாடுகளையும் நன்கு அறிந்தவர் இராகவன் எண்ட உவர் எண்டு முதல் ஒருக்கா சொல்லினீர்கள் அதுதான் கேட்டன்...

உங்களை பொறுத்த வரைக்கு பிரபாகரனையும் அவரின் செயற்பாடுகளையும் நன்கு அறிந்தவர் இராகவன் எண்ட உவர் எண்டு முதல் ஒருக்கா சொல்லினீர்கள் அதுதான் கேட்டன்...

:)என்னங்க ரொம்பத் தான் குளம்புறீங்க... இப்ப ராகவன் உங்களைப் பொறுத்தவரை முன்னாள் போராளியா?? அல்லது புலிகளையும் மக்களையும் சாட்டி புலத்தில் பிழைப்பு நடத்தும் ஒருவரா?? :lol::(

:)என்னங்க ரொம்பத் தான் குளம்புறீங்க... இப்ப ராகவன் உங்களைப் பொறுத்தவரை முன்னாள் போராளியா?? அல்லது புலிகளையும் மக்களையும் சாட்டி புலத்தில் பிழைப்பு நடத்தும் ஒருவரா?? :lol::(

பிரபாகரனை நன்கு அறிந்தவர் நான் எண்டு எங்கையோ பேட்டி குடுத்ததாகவும் நான் அவரிடம் போய் கேக்க வேணும் எண்டு தாங்கள் தான் சொன்னீர்கள் ஐயனே... மறதி அதிகமோ...??

பிரபாகரனை நன்கு அறிந்தவர் நான் எண்டு எங்கையோ பேட்டி குடுத்ததாகவும் நான் அவரிடம் போய் கேக்க வேணும் எண்டு தாங்கள் தான் சொன்னீர்கள் ஐயனே... மறதி அதிகமோ...??

எனக்கு ஞாபக சக்தி போதுமானளவு உண்டுங்க. ஆனால் நான் புலத்திலை புலிகளையும் மக்களையும் சாட்டி பிழைப்பு நடாத்திய கூட்டமொன்று, மகிந்தவிடம் சென்று பாவமன்னிப்பு கேட்டார்கள் என்று எழுதியதற்கு, நீங்கள் சம்மந்தமில்லாமல் அதற்குள் ராகவனையும் நிர்மலாவையும் புகுத்தினீர்கள. இப்ப எனது ஞாபக சக்தியில் பழி போடப் பார்க்கின்றீர்கள். :):lol:

காசு சேர்த்தவை எல்லாம் எப்பவிலை போராளியாகி விலத்தினவை...??? எனக்கு தெரிய புலிகளிலை பயிற்ச்சி எடுத்தவை எண்டும் யாரையுமே சத்தியமா காசு சேத்தவையிலை எனக்கு தெரியாது...

காசு அடிச்ச ஜெயதேவனோடை கடைசி வரைக்கும் தோளிலை கைபோட்டு நிண்டவை தான் கடைசி வரைக்கும் காசு காசு எண்டு திரிஞ்சவை எண்டது எனக்கு நல்லாவே தெரியும்...

புலிகளின் நிதித்துறைய சேர்ந்த ஒரு அண்ணையை கேட்ட போது சொன்னார்.. எங்களுக்கு தெரியும்.. ஆனால் ஜெயதேவன் மாதிரி பிரச்சினையை சிக்கல் ஆக்க இந்த காலகட்டதில் முடியவில்லை... நாங்கள் ஒரு நாட்டை வைத்து கொண்டு அதுக்கு அங்கீகாரத்துக்காக போராடுகிறோம்... எங்களால் இப்ப வேறு எதுவும் முடியாது... இதுதான் அவர்கள் எனக்கு சொன்ன பதில்...

நீங்கள் சொல்வது போல செயற்பட்டவை யாரும் புலிகளின் உறுப்பினர்கள் கிடையவே கிடையாது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யதார்த்தத்தில் நடப்பதை எழுதினால் அது உங்களுக்கு வம்பிற்கிழுப்பதாகத் தெரிகின்றதோ?? நான் எழுதியதில் என்ன தவறை உங்களால் சுட்டிக் காட்ட முடியும். முடிந்தால் அதைச் சுட்டிக் காட்டலாமே?? நான் பதில் தரக் காத்திருக்கின்றேன். இங்கே சிலருக்கு கற்பனையில் கதை விட்டால் மட்டுமே பிடிக்கும். அதை வந்து ஆகோ ஓகோ என்று புகழ்ந்து விட்டுச் செல்வார்கள். ஆனால் நடைமுறையில் எது சாத்தியமோ அதைச் சொன்னால் பிடிக்காது.

காசினி ஏதோ இங்கு தனது தனிப்பட்ட பிரைச்சினையைக் கொண்டு வந்து எழுதவில்லை. பொதுவான ஒரு விடயத்தை கருதத்துக்களத்தில் எழுதுவதே ஏனையோரும் அது பற்றிய தமது கருத்துகளை தெரிவிப்பதற்காக. இன்று மாலை ஸ்காபுரோப் பகுதியில் நிற்பார்கள் அவர்களிடம் நேரில் சென்று கேளுங்கள் காசினி என்பது வெறும் விதண்டாவாதம். சம்மந்தப்பட்டவர்களும் இந்த இணையத்தளத்தை நிச்சயம் பார்ப்பார்கள் அவர்கள் உண்மையில் விரும்பினால் இதற்கு பதலளிக்கலாம். அல்லது விரும்புவோர் அவர்களின் பதிலைப் பெற்று இங்கு பதியலாம்.

காசினி தன் கருத்தைப் பதிந்ததற்கு இங்கு மகளிரணிக்காக வக்காலத்து வாங்குவோரே இந்தக் குதி குதிக்கும் போது அவர்களிடம் நேரில் இதைக் கேட்டால் எந்தளவு துள்ளுவார்கள்?? என்பது எமக்கும் தெரியும். சுவிசில் முன்பு பல காலங்கமாக பொறுப்பாளராக இருந்தவரே தவறுகளைச் சுட்டிக் காட்டியதற்காக, புரட்டாதி இறுதியில் சேட் கிளிக்கப்பட்டு துவட்டி எடுக்கப்பட்டார். பொறுப்பாளராகவிருந்தவருக்கே இந்தக் கதி என்றால் சாதாரணமானவர்களுக்கு?? இந்த நிலையில் காசினி போன்றவர்கள் போய் நிகழ்ச்சிப் பொறுப்பை ஏற்று நடாத்தத் தயார் என்று கேட்டால், அடுத்த வருடம் காசினிக்கு புறிம்பாக அஞ்சலி செய்ய வேண்டி வரும். :)

வணக்கம் வசம்பண்ணா,

ஹாசினியின் அடிப்படைக் குற்றச்சாட்டே குழப்பம் நிறைந்தது. ஐரோப்பிய நாடொன்றில் இருக்கும் நீங்கள் ஹாசினியின் கருத்தை அப்படியே உண்மை என்கிற அளவுக்கு பேச வந்திருப்பது வேடிக்கையாக இருப்பதோடு அவசரத்தனமாக உங்கள் கருத்தை திணிக்க வாய்த்த களமாகவும் பயன்படுத்துவதையும் அவதானிக்க முடிகிறது. வசம்பண்ணா உங்களுடைய பல கருத்துகளை நான் நியாயமாகக் கண்டிருக்கிறேன் உள்வாங்கியிருக்கிறேன், இருப்பினும் இந்தத் திரியில் முற்றிலும் வெளிப்பார்வையாளராக, ஹாசினி எழுதிய கருத்தை வைத்துப் பேச வந்த நீங்கள் ஹாசினியின் குற்றச்சாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு நீங்களும் நேரிலே நின்று மகளிரின் இடுப்புகளில் கட்டிய சேலைகளை பட்டு பீதாம்பரம் என்று கணக்கெடுத்திருப்பது கவலைக்குரிய விடயமாக இருக்கிறது. ஹாசினியின் குற்றச்சாட்டு வேண்டுமென்றே சிலர் மீது நடாத்தப்படும் தனிப்பட்ட தாக்குதலாக என்னால் அவதானிக்க முடிந்ததனால்தான் அவரை சம்பந்தப்பட்டவர்களுடன் நேரில் பேசும்படி கூறினேன். குற்றஞ்சாட்டிய ஹாசினி நேரில் பேசுவதால் ஹாசினி ஒன்றும் குறைந்து போய்விட மாட்டார் ஏனென்றால் அவரே எழுதி இருக்கிறார் 20 வருட காலமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் தனது குடும்பத்திற்குத் தொடர்பு இருப்பதாக. அப்படி இருக்கும் போது அவர் நன்கு அறியப்பட்ட ஒருவராகவே இருக்கவேண்டும். அத்தகையவர் மற்றவர்களை 5 வருடத்திற்குக் குறைந்தவர்கள் என்று கணக்கெடுத்தும், மாவீரர் குடும்பமா? என்று பரிகசித்தும் இருப்பது கண்டிக்கத்தக்கது. அவருடைய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க என்னாலும் இயலும், இருப்பினும் தெளிவற்ற அவரின் கருத்தில் தெளிவேற்படவேண்டும். அதை அவர் மூலமாகவே அவருக்கு உணர்த்த வேண்டும். ஆகையால் அவர் சம்பந்தப்பட்டவர்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டை அவருக்குப் பரிச்சயமான அவர்களிடம் கேட்கவேண்டும். நீங்கள் சும்மா குதி குதிக்கிறார்கள் என்றும் இதைப்பற்றி ஹாசினி கதைத்தால் அடுத்த வருடம் அவருக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்று சீண்டுவது உங்களினுள் இருக்கும் சில வக்கிரத்தனங்களைக் காட்டுகிறது.

வணக்கம் வசம்பண்ணா,

நீங்கள் சும்மா குதி குதிக்கிறார்கள் என்றும் இதைப்பற்றி ஹாசினி கதைத்தால் அடுத்த வருடம் அவருக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்று சீண்டுவது உங்களினுள் இருக்கும் சில வக்கிரத்தனங்களைக் காட்டுகிறது.

நன்றி உங்கள் கருத்திற்கு. நான் காசினியின் கருத்திற்கு வக்காலத்து வாங்குவதற்காக எழுதவில்லை.ஆனால் காசினி சுட்டிக் காட்டிய அதே விடயங்கள் இங்கு ஐரோப்பாவிலும் பரவலாக நடக்கின்றன. அத்துடன் கனடாவிலுள்ள எனது உறவுகள் மூலம் நானும் பல விடயஙங்களை அறிந்துமுள்ளேன். சுவிசில் பொறுப்பாளருக்கு நடந்த வன்முறையை நான் உதாரணம் காட்டியும், எனது கருத்து தங்களுக்கு வக்கிரத்தன்மையாகத் தெரிந்தால் அடியேன் ஒன்றும் செய்ய முடியாது. நல்லவேளை சுவிசிலுள்ள பொறுப்பாளரை நான் தான் ஆள் வைத்து வக்கிரமாகத் தாக்கினேன் என்று எழுதாத வரை நன்றியுங்கோ....... :):lol:

காசு சேர்த்தவை எல்லாம் எப்பவிலை போராளியாகி விலத்தினவை...??? எனக்கு தெரிய புலிகளிலை பயிற்ச்சி எடுத்தவை எண்டும் யாரையுமே சத்தியமா காசு சேத்தவையிலை எனக்கு தெரியாது...

காசு அடிச்ச ஜெயதேவனோடை கடைசி வரைக்கும் தோளிலை கைபோட்டு நிண்டவை தான் கடைசி வரைக்கும் காசு காசு எண்டு திரிஞ்சவை எண்டது எனக்கு நல்லாவே தெரியும்...

புலிகளின் நிதித்துறைய சேர்ந்த ஒரு அண்ணையை கேட்ட போது சொன்னார்.. எங்களுக்கு தெரியும்.. ஆனால் ஜெயதேவன் மாதிரி பிரச்சினையை சிக்கல் ஆக்க இந்த காலகட்டதில் முடியவில்லை... நாங்கள் ஒரு நாட்டை வைத்து கொண்டு அதுக்கு அங்கீகாரத்துக்காக போராடுகிறோம்... எங்களால் இப்ப வேறு எதுவும் முடியாது... இதுதான் அவர்கள் எனக்கு சொன்ன பதில்...

நீங்கள் சொல்வது போல செயற்பட்டவை யாரும் புலிகளின் உறுப்பினர்கள் கிடையவே கிடையாது...

திரும்பத் திரும்ப நான் ஒன்று எழுத, நீங்கள் ஏதேதோ எழுதுகின்றீர்கள். புலத்தில் புலிகளுக்காக இயங்கியவர்கள் எல்லோரும், நேரடியாக போராளியாகவிருந்து வந்தவர்கள் என்று யார் சொனன்து?? அது போல் போராளிகளாகவிருந்து புலத்தில் பொறுப்பாளராக வந்தவர்கள் எவரும் காசு சுத்தவில்லையென்று என்னிடம் கதையளக்க வேண்டாம். சுவிசில் முன்பு பொறுப்பாகவிருந்து தற்போது கனடாவில் வாழும் முரளி தொடக்கம் பலர் அதில் அடக்கம். தற்போது அந்தப் பட்டியல் இன்னும் அதிகரித்து வருகின்றது.

பிரித்தானியப்புலிகள் ஜெயதேவனை துரோகியாக்கிய பின்னும், போராட்டத்தை சாட்டி முள்ளிவாய்க்கால் வரை அவசரகால நிதியென்று சேகரித்தவர்கள் ஜெயதேவனுடன் நின்றவர்கள் தான் என யாருக்கு கதையளக்கின்றீர்கள்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"யாரின் பிள்ளைகள் எங்கு போராடவேண்டும் என்பது நீங்களோ நாங்களோ முடிவுசெய்வதில்லை அது அவரவர் விருப்பம்"

வீட்டிற்கு ஒருவர் என்று பின் இரண்டு,மூன்றையும் பிடித்து விட்டு இங்கிருந்து கொண்டு உங்களை நியாயப்படுத்துவதற்காக அது அவரவர் விருப்பம் என்கின்றீர்களே? உங்களுக்கு மனசாட்சி என்று இருக்கின்றதா?

நாங்களும் இங்கு எங்களால் இயலுமானதை செய்கின்றோம் என்று சொல்லுங்கோ ஒப்புக்கொள்கின்றோம்,அதைவிட்டு நாட்டில் இருப்பவர்களுடன் உங்களை துளியும் ஒப்பிடாதீர்கள்.மிகப் பெரிய பாவம்.இரண்டிற்கும் பென்னாம் பெரிய இடவெளி.வெளிநாட்டில் இருந்து போராட்டதுற்கு போனவன் அனுபவத்தில் சொல்கின்றேன்

மனசாட்சியுடன் தான் நம் கருத்து தெரிவித்திருக்கின்றோம் நண்பரே!

ஆனால் நீங்கள் கருத்தின் தன்மையை புரிந்து பதில் கருத்து வழங்வது நன்று. அதை விடுத்து நானும் நானும் என்று எழுதுவதில் அர்த்தமில்லை. உங்கள் கருத்துக்கள் அடிபட்டு போகவே வழி செய்யும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் யதார்த்தத்தில் நடப்பதை எழுதினால் அது உங்களுக்கு வம்பிற்கிழுப்பதாகத் தெரிகின்றதோ?? நான் எழுதியதில் என்ன தவறை உங்களால் சுட்டிக் காட்ட முடியும். முடிந்தால் அதைச் சுட்டிக் காட்டலாமே?? நான் பதில் தரக் காத்திருக்கின்றேன். இங்கே சிலருக்கு கற்பனையில் கதை விட்டால் மட்டுமே பிடிக்கும். அதை வந்து ஆகோ ஓகோ என்று புகழ்ந்து விட்டுச் செல்வார்கள். ஆனால் நடைமுறையில் எது சாத்தியமோ அதைச் சொன்னால் பிடிக்காது.

காசினி ஏதோ இங்கு தனது தனிப்பட்ட பிரைச்சினையைக் கொண்டு வந்து எழுதவில்லை. பொதுவான ஒரு விடயத்தை கருதத்துக்களத்தில் எழுதுவதே ஏனையோரும் அது பற்றிய தமது கருத்துகளை தெரிவிப்பதற்காக. இன்று மாலை ஸ்காபுரோப் பகுதியில் நிற்பார்கள் அவர்களிடம் நேரில் சென்று கேளுங்கள் காசினி என்பது வெறும் விதண்டாவாதம். சம்மந்தப்பட்டவர்களும் இந்த இணையத்தளத்தை நிச்சயம் பார்ப்பார்கள் அவர்கள் உண்மையில் விரும்பினால் இதற்கு பதலளிக்கலாம். அல்லது விரும்புவோர் அவர்களின் பதிலைப் பெற்று இங்கு பதியலாம்.

காசினி தன் கருத்தைப் பதிந்ததற்கு இங்கு மகளிரணிக்காக வக்காலத்து வாங்குவோரே இந்தக் குதி குதிக்கும் போது அவர்களிடம் நேரில் இதைக் கேட்டால் எந்தளவு துள்ளுவார்கள்?? என்பது எமக்கும் தெரியும். சுவிசில் முன்பு பல காலங்கமாக பொறுப்பாளராக இருந்தவரே தவறுகளைச் சுட்டிக் காட்டியதற்காக, புரட்டாதி இறுதியில் சேட் கிளிக்கப்பட்டு துவட்டி எடுக்கப்பட்டார். பொறுப்பாளராகவிருந்தவருக்கே இந்தக் கதி என்றால் சாதாரணமானவர்களுக்கு?? இந்த நிலையில் காசினி போன்றவர்கள் போய் நிகழ்ச்சிப் பொறுப்பை ஏற்று நடாத்தத் தயார் என்று கேட்டால், அடுத்த வருடம் காசினிக்கு புறிம்பாக அஞ்சலி செய்ய வேண்டி வரும். :)

முதலில் காசினி இங்கு பதிந்திருக்கும் கருத்து முற்று முழுதாக தனிப்பட்ட பிரச்சினையே! தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் யார் என்ன உடை அணிந்திருக்கின்றனர் என்று பார்த்தது முதல் அதுகொண்டாட்டமா என்பது வரை அது தனிப்பட்ட பிரச்சினையே! பல்லாயிரம் தமிழர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் காசினி ஒன்ற தனி மனிதருக்கு நிகழ்வு பிடிக்கவி்லலை என்றால் அது தனிப்பட்ட பிரச்சினையே!

முதலில் தலைவரின் பிறந்த நாளையோ, மாவீரர்நாளையோ மகளீர் அமைப்பினர் அனுஸ்டிக்கவில்லை. தலைவரின் பிறந்த தினத்தை ஈழமுரசு பத்திரிகை "குழு" வும், மாவீரர் தினத்தை கனேடிய தமிழர் சமூகமும் இணைந்து நடாத்தியது. அப்படியிருக்க இந்நிகழ்வுக்குள் காசினி மகளீர் அமைப்பை இழுத்தது மகளீர் அமைப்புக்கும் காசினிக்கும் இடையே உள்ள தனிப்பட்ட முறுகல்நிலை என்று எண்ணத்தோன்றுகின்றது.

அதை அடிப்படையாக கொண்டு நீங்கள் (வசம்பு) எழுதிய கருத்துக்கள் ஆக்க பூர்வமானதாக இருந்திருக்கவில்லை. மாறாக குழம்பிய குட்டையில் எதையோ பிடிக்கவே நீங்கள் விளைகின்றீர்கள்.

அல்லது நடைபெற்று முடிந்த சில விடயங்களை பாரிய தவறுகளாக்க முற்ப்படுகின்றீர்கள். காசினிக்கு கருத்து தெரிவிக்க வேண்டும் எனில் நேரடியாக நிகழ்வுக்குழுவுடன் பேசியிருக்க முடியும். அதையே நான் செய்வேன். மாவீர் தின ஏற்பாட்டில் இருந்த சில முரண்பாடுகள் பற்றி அதையே சொன்னேன். அதற்காய் கூட்டம் போட்டு நான் கத்த போவதில்லை. கருத்துக்களை ஏற்றுக்கொள்ள கூடிய கட்டமைப்புக்கள் எமக்குள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்த தெரியாத காரணத்தால் தான் இன்று தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடைவெளி ஒன்று இருப்பதாக உங்களை போன்ற சிலர் கதையளந்து திரிய காசினி போன்றவர்கள் சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர்.

Edited by Nitharsan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லது நடைபெற்று முடிந்த சில விடயங்களை பாரிய தவறுகளாக்க முற்ப்படுகின்றீர்கள். காசினிக்கு கருத்து தெரிவிக்க வேண்டும் எனில் நேரடியாக நிகழ்வுக்குழுவுடன் பேசியிருக்க முடியும். அதையே நான் செய்வேன். மாவீர் தின ஏற்பாட்டில் இருந்த சில முரண்பாடுகள் பற்றி அதையே சொன்னேன். அதற்காய் கூட்டம் போட்டு நான் கத்த போவதில்லை. கருத்துக்களை ஏற்றுக்கொள்ள கூடிய கட்டமைப்புக்கள் எமக்குள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்த தெரியாத காரணத்தால் தான் தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடைவெளி ஒன்று இருப்பதாக உங்களை போன்ற சிலர் கதையளந்து திரிய சந்தர்ப்பங்களை காசினி போன்றவர்கள் சந்தர்ப்பங்கள் வழங்கியுள்ளனர்.

அப்பிடியா???????????????? நீங்கள் இந்த அமைப்பிற்குள்ள எத்தினை வருசமா வேலை செய்யீறீங்கள்?

Edited by ஹாசினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடியா???????????????? நீங்கள் இந்த அமைப்பிற்குள்ள எத்தினை வருசமா வேலை செய்யீறீங்கள்?

கருத்துக்களை சொல்வதற்க்கு அமைப்பில் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவையில்லை. அதே போல அவர்களின் நிகழ்வுகள் தொடர்பான உங்கள் கருத்துக்கு பதில் அளிப்பதற்க்கும் குறைந்த பட்சம் தாயக விடுதலை தொடர்பான செயற்பாடுகள் பற்றி அறிவு போதும்! இதற்காய் அமைப்புக்குள் இணைந்து தான் அவர்கள் சார்பாக நாம் கருத்து எழுத வேண்டிய அவசியம் இல்லை.

நானே நானே என்று தான் எழுதினேன் எனேனில் உங்கள் போல் வெளிநாட்டில் இருந்து அனைத்து சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு எங்கேயோ ஒரு நாள் கொடியை தூக்கிகொண்டு றோட்டில் நிற்கும் நீங்கள் உங்களையும் போராளிகள் என்ற நினைப்பில் இணயத்தில் எழுதும் போது அப்படித்தான் தோன்றுகின்றது.என் மனதில் எப்பவும் எழுவது யோகியின் எண்ணமே.பொன்னம்மானின் அண்ணராக லண்டணில் இருந்து இயக்கத்திற்கு போய் பின் பெரிய பொறுப்புகள் எல்லாம் வகித்து பின் மாத்தயாவின் பிரச்சனையில் படாத சித்திரவதையெல்லாம் பட்டு திருமப வெளிவந்து புத்தியிர்ப்பு பெற்று இப்ப மீண்டும் சிங்களவனின் முகாமில். அதைவிட்டு கொடிபிடித்த நான், பிறந்தநாளுக்கு பட்டுப்புடவை,அடுத்தநாள் மஞ்சள் புடவை கட்டிய நான் எல்லாம் போராளி கணக்கில் கதைக்க பொறுக்கமுடியாமல் இருக்கின்றது.ஒரு அற்ப சந்தோசம் அதைக் கெடுப்பானேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.