Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய ஆவணநூல் சென்னையில் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் தமிழ் இனப் படுகொலைகள் பற்றிய விபரம் அடங்கிய ஆவணப் புத்தகத்தின் வெளியீடு இன்று (23-12-09) மாலை சென்னையில் வெளியிடப்பட்டது.

chennaibook01.JPG

1956 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறிலங்கா அரசால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளின் விபரங்கள் அடங்கிய ‘தமிழினப் படுகொலைகள் : 1956 - 2008’ என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார்.

chennaibook02.JPG

(ஓவியர் புகழேந்தி, சட்டவாளர் பால் கனகராஜ், புலவர் புதுமைப் பித்தன், ஊடகவியலாளர் கவிதா முரளிதரன், சட்டவாளர் சுதா ராமலிங்கம் ஆகியோர் புத்தக வெளியீட்டு நிகழ்வில் அமர்ந்திருக்கின்றனர்.)

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட இரு புத்தகங்களும் வெளிடப்பட்டன. சென்னையைச் சேர்ந்த 'மனிதம் அமைப்பு' புத்தகத்தை பதிப்பித்திருந்தது.

கிளிநொச்சியில் இருந்து செயற்பட்ட வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தினால் சேகரிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களே தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளன.

புத்தக வெளியீட்டு நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற சட்டவாளர் அமைப்பின் தலைவர் பால் கனகராஜ், பி.யூ.சி.எல். மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் சட்டவாளர் திருமதி சுதா ராமலிங்கம், ‘தி வீக்’ ஆங்கில வார ஏட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி கவிதா முரளிதரன், ஓவியர் புகழேந்தி, ஈழ ஆர்வலர்கள் ஜனார்த்தனன், கிருபானந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

chennaibook03.JPG

(தமிழினப் படுகொலைகள் புத்தகத்தை புலவர் புதுமைப்பித்தன் வெளியிட்டு வைக்க ஓவியர் புகழேந்தி, சட்டவாளர் பால் கனகராஜ், ஊடகவியலாளர் கவிதா முரளிதரன், சட்டவாளர் சுதா ராமலிங்கம் ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்.)

“இந்தப் புத்தகத்தில் 150 படுகொலைகள் பற்றிய விபரங்கள் இருக்கின்றன. அவற்றில் நான்கைந்தைப் படித்தாலேயே ஈழத்தில் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு கதைகளும் எமது இரத்தத்தைக் கொதிக்கச் செய்யும் ஆத்திரமுறச் செய்யும். அந்தளவிற்கு அங்கு அரச பயங்கரவாதம் நிகழ்ந்துள்ளது” எனத் தெரிவித்தார் ‘மனிதம்’ மனித உரிமைகள் அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம்.

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்றும் அவர் குறிப்பிட்டார்.

(வெளியிடப்பட்ட புத்தகத்துடன் புலவர் புதுமைப்பித்தன், சட்டவாளர் பால் கனகராஜ், ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்.)

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இந்த நூல் வெளியிடப்பட்டாலும் மொழிபெயர்ப்பாக அல்லாமல் ஒவ்வொன்றும் அந்தந்த மொழிகளில் தனித் தனியாக எழுதி வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்ப் புத்தகத்தில் அதிகளவான விபரங்கள் விரிவாக வழங்கப்பட்டுள்ளதாக அக்னி சுப்ரமணியம் தெரிவித்தார்.

விரைவில் ஜெர்மன், பிரெஞ், இத்தாலி, டச் ஆகிய மொழிகளில் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

செய்தி மூலம் புதினப்பலகை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த புத்தகத்தை வாங்கவோ ...., வேண்டாமோ...... என்று யோசனயாக உள்ளது.

நான் இழந்த இழப்பை மீண்டும் மீட்டிப்பார்க்க எனக்கு தைரியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி... இதை தமிழர் படிப்பதிலும் பார்க்க பிற நாட்டவர் படிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா இதன் ஆங்கில வடிவத்தை எப்படி பெற்றுக்கொள்ளலாம்.? ISBN இலக்கம் உள்ளதா? நேரடியாக இந்தியாவுக்கு தான் தொடர்பு கொள்ள வேண்டுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா இதன் ஆங்கில வடிவத்தை எப்படி பெற்றுக்கொள்ளலாம்.? ISBN இலக்கம் உள்ளதா? நேரடியாக இந்தியாவுக்கு தான் தொடர்பு கொள்ள வேண்டுமா?

இப்புத்தகம் வெளிநாடுகளுக்கு விரைவில் வரவுள்ளது. ஐரோப்பாவிற்கு விநியோகஸ்தர்கள் ஏற்பாடுகள் சரி. இதர நாடுகளுக்கு சாத்திரி தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறார். மற்றும் இணையத்தில் வாங்கும் வசதியும் வரவுள்ளது. வெளிநாடுகளில் வெளியீடு பற்றிய விபரங்கள் உங்களுக்கு அனுப்பிவிடுவோம் நுணாவிலான்.

மற்றும் இன்னும் 4மொழியில் இப்புத்தகம் வரவுள்ளது. ஜனவரியில் அடுத்த சில மொழிகளில் புத்தகம் வெளிவரவுள்ளது.

தகவலுக்கு நன்றி... இதை தமிழர் படிப்பதிலும் பார்க்க பிற நாட்டவர் படிக்க வேண்டும்

தமிழ் தவிர்ந்த 5மொழிகளில் வெளிவரவுள்ளது. டொச் , பிரெஞ்ச் மொழிகளுக்கான சகல ஏற்பாடுகளும் முடியும் தறுவாயில் உள்ளது. ஜனவரிக்கு இவ்விரு மொழிகளிலும் புத்தகத்தை எதிர்பார்க்கலாம் றதி.

எனக்கு இந்த புத்தகத்தை வாங்கவோ ...., வேண்டாமோ...... என்று யோசனயாக உள்ளது.

நான் இழந்த இழப்பை மீண்டும் மீட்டிப்பார்க்க எனக்கு தைரியம் இல்லை.

சிறி,

டொச்சில் வரும் இந்நூலில் ஒன்றை உங்களுக்குத் தெரிந்த அல்லது உங்கள் யேர்மனிய நண்பருக்குக் கொடுக்கலாம். அந்த ஒருவர் மூலம் பலரை இந்த விடயம் போய்ச்சேரும் வாய்ப்பு உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TN MPs lost golden opportunity to save one lakh Lankan Tamils: Poet Pulamaipithan

Chennai, December 24:

Had all the Tamil Nadu Members of Parliament stood firm on their resignations in October 2008, they as well as we would have saved more than a lakh innocent Tamils from death in Sri Lanka, pro-Tamil poet Pulamaipithan has said.

Addressing a gathering of people during the release of a book on massacres in Lankan Tamil areas from 1956 to 2008 here, Pulamaipithan said, “If those resignations by state MPs were not withdrawn in the last moment, the central government would have lost its chance to stay in power till May, thus not much help been sent to Sri Lanka to carry out its Tamils’ elimination mission.”

Not only the MPs were responsible for the death of more than a lakh innocent Tamils from October-2008 to May this year, we the seven crore Tamils living in the state were also equally responsible for the bloody massacre, he observed.

“If we think Lankan president Mahinda Rajapakse is alone the culprit for the mass extermination of innocent Tamils in the final days of Eelam War, we are wrong since we the Tamils in the state are also responsible for aiding it by silently let him to complete the task,” Pulamaipithan said.

Published in Tamil and English simultaneously on Thursday, the book comprehensively recounts 160 gory massacres including Veeramunai Massacre-1990, Saththrukkondan Massacre-1990, Vantharumoolai Massacre (Eastern University camp)-1990, Chemmani Massgraves-1996, Krishanthi-Rape and Murder-1996 and Bindunuwewa Rehabilitation Centre Carnage in 2000.

Manitham, a city-based human rights organisation, has published the book based on details compiled by a local NGO, North East Secretariat on Human Rights (NESoHR), operated from Kilinochchi.

- New Indian Express - Saravanan, Chennai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.