Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிய நேரத்தில்சரியான முடிவினை அறிவிப்போம் மக்கள் குழப்பம் அடைய வேண்டாம் - கூட்டமைப்பு

Featured Replies

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். அந்த முடிவு தமிழ் மக்களின் நலன் கருதியதாகவே இருக்கும். அதற்கு முரணாக இருக்காது. எனவே, இந்த விடயம் குறித்துத் தமிழ் மக்கள் வீணாகக் குழப்பமடையவோ, சஞ்சலப் படவோ தேவையில்லை.

இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் அறிவிப்பு விடுத்திருக்கின்றது.தமிழ்க் கூட் டமைப்பின் இந்த நிலைப்பாட்டை அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. நேற்று வெளியிட்டார். கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை காலை தமிழ்ப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விளக்கமளித்தபோதே இரா.சம்பந்தன் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக மிக விரைவில் கூட்டமைப்பு அறிவிக்கும். சிவாஜிலிங்கத்தின் முடிவு தன்னிச்சையானது

சிவாஜிலிங்கம் பொதுவேட்பாளராகப் போட்டியிட எடுத்த தீர்மானம் தன்னிச்சையானது. அது குறித்துக் கவலையடைகிறோம். ஆனாலும், அதற்காகத் தமிழ் மக்கள் குழப்பமடைய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. என்றும் அவர் கூறினார்.

இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் தொடர்பாகப் பேசிவருகின்றோம். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், துரைரெட்ணசிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இந்தச் சந்திப்புகளில் கலந்துகொண்டுள்ளனர் என்றும் தெரிவித்த இரா. சம்பந்தன், வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு மிகவும் முக்கியமானது எனத் தாங்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்றும் சொன்னார்.

இரண்டு வேட்பாளர்களையும் தாங்கள் சந்தித்தபோது, தமது தரப்பிலிருந்து தாங்கள் முன்வைத்த விடயங்கள் தொடர்பாக சம்பந்தன் பின்வருமாறு கூறினார்:

தமிழ் மக்களுடைய சகலவிதமான பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வு அவசியம். அதாவது, உடனடியாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வீட்டு வசதி, தொழில்வாய்ப்பு, சமூகக் கட்டமைப்பு போன்ற விடயங்கள் குறித்துக் கவனம் எடுக்கவேண்டும்.

வடக்கு கிழக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு அங்கு மக்கள் மீளக் குடியேற உடனடி ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும். யுத்தம் முடிவடைந்துவிட்ட நிலையில் அவ்வாறான உயர் பாதுகாப்பு வலயம் இனித் தேவையில்லை.இராணுவக் கட்டமைப்புகள் இராணுவ மயமாக்கல் உடன் விலக்கப்பட வேண்டும் யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் மற்றும் சோதனைச் சாவடிகள், இராணுவக் கட்டமைப்புகள், யுத்த முனைப்புகள் அனைத்தும் உடனடியாக விலக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள காணிகள், அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் யார் யாருக்கோ விநியோகம் செய்யப்படுமானால் அவ்விதமான ஒழுங்குகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அத்துடன் பெரும்பான்மை இனத்தவர்கள் வடக்கு, கிழக்கிலுள்ள அரச காணிகளில் குடியமர்த்தப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும். யுத்தத்தினால் வெளியேறிய தமிழர்களின் காணிகளில் பெரும்பான்மை இன மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களின் காணிகளின் உரிமைப் பத்திரங்களை ரத்துச் செய்து, நீக்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

தடுப்புக்காவலில் உள்ள தமிழ் இளைஞர்கள், யுவதிகளுக்கு எதிராகப் போதிய சாட்சியங்கள் இல்லையானால் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும். ஏனையவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கவேண்டும். யாரையாவது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமானால் அவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி விடுதலை செய்யவேண்டும். நிரந்தரமான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும்

தமிழ் மக்கள் தமது அரசியல், பொருளாதார, கலாசார விடயங்களை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு ஏற்றவகையில் நிரந்தரமான நீதியான நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் முன்வைக்க வேண்டும். இந்த முக்கியமான விடயங்கள்தான் கூட்டமைப்பினால் முன்நிலைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மேற்குறித்த இந்த விடயங்கள் தொடர்பாக இரண்டு பிரதான வேட்பாளர்களின் கருத்துகளையும் அறிந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்; ஆராய்கின்றனர்.

இவ்வாறான முறையில் தீர்வுகள் ஏற்படுவதற்கு இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் உதவிகளும் தேவை. அது தொடர்பாக அவர்களுடனும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி வருகின்றனர். நல்ல சந்தர்ப்பம் நிதனமாக நடக்க வேண்டும் முன்னர் நாம் குறிப்பிட்ட விடயங்களை உறுதிப்படுத்தக்கூடிய வேட்பாளருக்குத்தான் நாம் ஆதரவை வழங்கமுடியும். எவ்வாறாயினும் ,இந்த விடயங்கள் தொடர்பாகத் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றமையினால் தமிழ் மக்களை இன்னமும் சிறிது காலத்திற்குப் பொறுமையுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு நல்ல சந்தர்ப்பம். எனவே, மக்கள் நிதானமாக செயற்பட வேண்டும். மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். இது அவர்களுடைய புனிதக் கடமை என்றுதான் கருதுகின்றோம். மக்கள் எந்தவிதமான குழப்பங்களும் அடையவேண்டிய அவசியம் இல்லை. என்றார். http://www.eelanatham.net

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும்.

தமிழ் மக்கள் தமது அரசியல், பொருளாதார, கலாசார விடயங்களை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு ஏற்றவகையில் நிரந்தரமான நீதியான நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் முன்வைக்க வேண்டும். இந்த முக்கியமான விடயங்கள்தான் கூட்டமைப்பினால் முன்நிலைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மேற்குறித்த இந்த விடயங்கள் தொடர்பாக இரண்டு பிரதான வேட்பாளர்களின் கருத்துகளையும் அறிந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்; ஆராய்கின்றனர்.

இவ்வாறான முறையில் தீர்வுகள் ஏற்படுவதற்கு சர்வதேச நாடுகளின் உதவிகளும் தேவை. அது தொடர்பாக அவர்களுடனும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி வருகின்றனர். மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். மக்கள் எந்தவிதமான குழப்பங்களும் அடையவேண்டிய அவசியம் இல்லை. என்றார். http://www.eelanatham.net

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் எனபதைக் காட்டிவிட்டார்கள் யாழ்-வவுனியா நகரசபைக்கான வாக்களிப்பில்.....!

ஆனால் நீங்கள்...?

உங்களால் இந்த இருவரில் ஒருவருடமாவது எழுத்துமூல ஒப்புதலைப் பெறமுடியுமா? இவர்களிடம் அந்த எண்ணம் தோன்றுமா? ஏன் தமிழர் தரப்பிலான ஒருவரை தமிழ்த் தேசியம் சார்பாக நிறுத்த முன்வரவில்லை. உங்களை எதற்காக நாடளுமன்றத்திற்கு ஒன்றினைத்துத் தமிழினம் அனுப்பியது. முகாமிலிருந்த மக்களையோ தினதந்தோறும் பலியாகும் இளைஞர்களுகாகவோ எந்தவகையிலே ஆதார பூர்வமாக அனைத்துலகிடம் கொடுத்துள்ளீர்கள்.

300,000 சாட்சிகளாத் தமிழினம் இருக்கிறது. இவர்களிடம், இவர்கள் கண்டவற்றைப் பதிவு செய்து சான்றாதாரமாக உருவாக்க உருப்படியான நகர்வுகளையாவது அனைத்துலக நீதிக்கான அமைப்புகளிடம் முன்வைத்தீர்களா? தமிழினம் என்றால் தமக்குக் கீழ் ஒரு உல்லாசப் பிரயாணியாக இருந்துவிட்டுப் போகலாம் என்ற சரத்தா? இங்கே சிறுபான்மையோ வேறு இனங்களோ கிடையாதென்ற மகிந்தவா? அல்லது இந்தியவினது ஆட்டத்திற்காக ஆடும் பபூன்காளாகவா இருக்கப் போகிறீர்கள்?................... மக்கள் தேசத்தக்கான புனிதக்கடமையை அப்பளுக்கற்று அரப்பணிப்போடு செய்தமையின் விளைவே அனைத்துலக அரங்கிலே தமிழரது நியாயப்பாடுகள் சற்று எடுபடத் தொடங்கியுள்ளது. இதனை இன்னும் வீச்சாக்கும் வகையில் தமிழரது பிரதிநிகளென்று நாடளுமன்றிலுள்ளோர் தங்களது ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து இரண்டு பேய்களில் எந்தப் பேயோடு கூடுவது என்ற சிந்தனையிலேயே நேரத்தை வீணடிப்பது பொருத்தமானதா? இந்தியா இந்தியா... விசவாயுத் தாக்குதலின் காரணர்களான.... இவர்கள் செய்தததைத்தான் இப்போது ராயபக்சயாக்கள் சொல்லுகிறார்களே பிறகென்ன? ஏன் நீங்கள மேற்குலகோடு சரிய முறையில் தொடர்புகளைப்பேணி உடனுக்குடன் விடயங்களை வெளிக்கொணர முனவராதிருக்கிறீர்கள். சென்றால் சென்றுவிடுவது. வந்தால் நின்றுவிடுவது என்ற நிலை மாறி எமக்கான நீதியைக்கான தம்மை அர்பணித்தோரினது ஈகங்களை விலைபேசாதீர்கள் என்பதே தமிழனத்தினது எதிர்பார்ப்பாகும்.

Edited by Valukkiyaru

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உரிய நேரத்தில்சரியான முடிவினை அறிவிப்போம் மக்கள் குழப்பம் அடைய வேண்டாம் - கூட்டமைப்பு
ம்.... 4 ம் திகதிமட்டும் கறிச்சட்டி அடுப்பில இருக்கப்போகிது. முந்தநாள் சுவைச்ச கறியின்ட கருவேப்பில வாசம் தணியமுன்னமே அறுத்த கறி உலையில ஏத்தியாச்சு. :):D

50 வருசமாக சமபந்தி போட்டு சிங்களவனுடன் உறவாடிய சம்பந்தன் தமிழ்தேசியத்திற்கு ஆதரவாக ஏதாவது சிங்கள கட்சிகளை எதிர்த்து செய்வார் என்ற்று எதிர்பார்ப்பது மடமை.

2005 ம் ஆண்டு நாங்கள் செய்தது பிழை என்று சொல்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் போராட்டம் முவுக்கு வந்ததே நல்லது என்று சொல்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

2004 ஆம் ஆண்டு நாங்க(தமிழ்மக்கள்) செய்ததுதான் பிழை சம்பந்தன் ஐயா! நீங்க எங்கையாவது வெளிநாட்டுக்குப் போயிற்று வந்து 26.1.2010 பின்நேரம் உங்கட முடிவைச் சொன்னா நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி 15000 இளைஞர்களை (சிறையில் வாடும்) காப்பாற்றினார் என்றால் அதுவும் இல்லை.எவ்வளவோ வெளிநாட்டு மனிதநேய நிறுவனங்களுக்கு நடைபெறும், நடைபெற்ற இனப்படுகொலைகளை சொல்லலாம்.ஒரு அக்கா மட்டும் இனப்படுகொலைகள் பற்றி சொல்லி உள்ளார். அது போதாது. எந்த மக்கள் வாக்களித்தார்களோ அவர்களுக்கு கூட்டணியினர் தமது கடமையை செய்ய தவறுகிறார்கள். தவறை சுட்டி காட்டிய ரவிராஜ் அண்ணா போன்றோர் கொலை செய்யப்பட்டு விட்டார் இலங்கை அரச படைகளால்.சம்பந்தன் ஐயா 50 வருடமாக எப்படி தான் சிங்கள் அரசுடன் காலம் தள்ளினாரோ? பலத்த சந்தேகம் தான் இவரில் உள்ளது. நல்ல முடிவை இவர் எப்போதுமே அறிவிக்க மாட்டார். :lol::lol:

ம்.... 4 ம் திகதிமட்டும் கறிச்சட்டி அடுப்பில இருக்கப்போகிது. முந்தநாள் சுவைச்ச கறியின்ட கருவேப்பில வாசம் தணியமுன்னமே அறுத்த கறி உலையில ஏத்தியாச்சு. :):D

ஏன் அண்ணா உங்கள் நேரத்தை யாழில் வீணடிக்கிறீர்கள்?? உங்களை பல அண்ணாக்கள் செருப்பால் அடிக்கும் அளவுக்கு செய்துள்ளார்கள். உங்களுக்கு பல எதிரிகளின் களங்கள் உள்ளது தானே. அங்கு போய் உங்கள் சேறை கொட்டுங்கள்.சகோதரியாக கேட்கிறேன்.

நீங்கள் இப்படி எழுதினால்தான் இன்னமும் மிடுக்கு ஏறும்.

இது ஒரு மன நோய்! இதை நல்ல சைகோலாஜிஸ்ட்ளிடம் காட்டி சிகிச்சை செய்தால் தவிர இலகுவாக மாற்ற முடியாது.

இதுகும் போராட்ட பாதிப்புகளால் வந்த தாக்கங்கள்தான். ஆதலால் நாம் சகித்து கொண்டு தாங்கத்தன் வேண்டும். அவதூறுகளை அள்ளி கொட்டினால் அவர்களது மூளையின் ஒரு பகுதியில் ஸ்ரொட்டின் என்ற இரசாயனம் சுரக்கின்றது அது தற்காலிகமாக அவர்களுக்கு ஒரு இன்பத்தை கொடுக்கின்றது. ஆகவே என்ன எழுதுகிறோம் என்பதில் அவர்களுக்கு அக்கறையில்லை "அது அவதூறாக இருக்க வேண்டும்" அதுவே தற்காலிக ( ) இன்பத்தை கொடுக்கின்றது.

ஒரு சிலரின் கருத்துகளை நீங்கள் தொடாந்து வாசித்து வந்தால் அது தெரியும்.

பாவங்கள் சிலருக்கு அது பிற்பிலேயே மூளை வளர்ச்சி குறiறாவக இருப்பதால் வருகின்றது. சிலருக்கு இடையில் வரும் பாதிப்புகளால் வருகின்றது. அதற்கு காரணம் நீயோரான்களின் செயலிழப்பு. இது மற்றைய நியுரோன்ளுடன் தொடர்புகளை துண்டிக்கின்றது. ஆகவே ஒரு விடயத்தை தெளிவாக அவர்களால் புரிய முடியாது. குறைபாட்டு புரிதல்கள் நிறையவே இருக்கும். அதுகளை கருத்துகளின் மூலம் நீங்கள் வாசித்தறியலாம்.

ஆனால் மதிவதனங் என்பவர் அப்படியானவர் அல்ல...... அவர் ஒரு சிறந்த தத்துவஞானி ( இப்போது நீங்கள் குழம்பிவிடாதீர்கள்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசி 15000 இளைஞர்களை (சிறையில் வாடும்) காப்பாற்றினார் என்றால் அதுவும் இல்லை.எவ்வளவோ வெளிநாட்டு மனிதநேய நிறுவனங்களுக்கு நடைபெறும், நடைபெற்ற இனப்படுகொலைகளை சொல்லலாம்.ஒரு அக்கா மட்டும் இனப்படுகொலைகள் பற்றி சொல்லி உள்ளார். அது போதாது. எந்த மக்கள் வாக்களித்தார்களோ அவர்களுக்கு கூட்டணியினர் தமது கடமையை செய்ய தவறுகிறார்கள். தவறை சுட்டி காட்டிய ரவிராஜ் அண்ணா போன்றோர் கொலை செய்யப்பட்டு விட்டார் இலங்கை அரச படைகளால்.சம்பந்தன் ஐயா 50 வருடமாக எப்படி தான் சிங்கள் அரசுடன் காலம் தள்ளினாரோ? பலத்த சந்தேகம் தான் இவரில் உள்ளது. நல்ல முடிவை இவர் எப்போதுமே அறிவிக்க மாட்டார். :D:D

ஏன் அண்ணா உங்கள் நேரத்தை யாழில் வீணடிக்கிறீர்கள்?? உங்களை பல அண்ணாக்கள் செருப்பால் அடிக்கும் அளவுக்கு செய்துள்ளார்கள். உங்களுக்கு பல எதிரிகளின் களங்கள் உள்ளது தானே. அங்கு போய் உங்கள் சேறை கொட்டுங்கள்.சகோதரியாக கேட்கிறேன்.

நீங்கள் இப்படி எழுதினால்தான் இன்னமும் மிடுக்கு ஏறும்.

இது ஒரு மன நோய்! இதை நல்ல சைகோலாஜிஸ்ட்ளிடம் காட்டி சிகிச்சை செய்தால் தவிர இலகுவாக மாற்ற முடியாது.

இதுகும் போராட்ட பாதிப்புகளால் வந்த தாக்கங்கள்தான். ஆதலால் நாம் சகித்து கொண்டு தாங்கத்தன் வேண்டும். அவதூறுகளை அள்ளி கொட்டினால் அவர்களது மூளையின் ஒரு பகுதியில் ஸ்ரொட்டின் என்ற இரசாயனம் சுரக்கின்றது அது தற்காலிகமாக அவர்களுக்கு ஒரு இன்பத்தை கொடுக்கின்றது. ஆகவே என்ன எழுதுகிறோம் என்பதில் அவர்களுக்கு அக்கறையில்லை "அது அவதூறாக இருக்க வேண்டும்" அதுவே தற்காலிக ( ) இன்பத்தை கொடுக்கின்றது.

ஒரு சிலரின் கருத்துகளை நீங்கள் தொடாந்து வாசித்து வந்தால் அது தெரியும்.

பாவங்கள் சிலருக்கு அது பிற்பிலேயே மூளை வளர்ச்சி குறiறாவக இருப்பதால் வருகின்றது. சிலருக்கு இடையில் வரும் பாதிப்புகளால் வருகின்றது. அதற்கு காரணம் நீயோரான்களின் செயலிழப்பு. இது மற்றைய நியுரோன்ளுடன் தொடர்புகளை துண்டிக்கின்றது. ஆகவே ஒரு விடயத்தை தெளிவாக அவர்களால் புரிய முடியாது. குறைபாட்டு புரிதல்கள் நிறையவே இருக்கும். அதுகளை கருத்துகளின் மூலம் நீங்கள் வாசித்தறியலாம்.

ஆனால் மதிவதனங் என்பவர் அப்படியானவர் அல்ல...... அவர் ஒரு சிறந்த தத்துவஞானி ( இப்போது நீங்கள் குழம்பிவிடாதீர்கள்)

அக்காமார் நிறைய ஆராச்சி செய்யுறீங்கள், வாழ்த்துக்கள். கலைவாணி அக்காக்கு கருவேப்பிலை வாசம் தெரியாதோ அல்லது தெரியாதமாதிரி நடிக்கிறாவோ? நியூரோன் தாக்கம் போராடினவர்களைவிட உசுப்பேத்தியவர்களுக்கு அதிகம். அதனால்த்தான் அன்றுதொட்டு இன்றுவரை இருக்கிறார் கும்பல் ஒருபுறம் இல்லை கும்பல் இன்னுமொருபுறம் நாடுகடந்த அரசர்கள் இன்னுமெருபுறம் வட்டுக்கோட்டையர்கள் இன்னுமொருபுறம் கூட்டமைப்பார் இன்னுமெருபுறமாக நியூரோன் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். 2005 மாவீரர்தின உரையை படித்து பாலாமாமா அருளிய சிந்தனையையும் கேட்டால்போதும் எங்களது இயக்கம் எப்படி இயங்கியது என்று துலாம்பரமாக பகுத்தறிய. நீங்கள் பாதிப்பு என்று சொல்லாம் அன்று அலெக்சான்றா பலசில் கேட்டதிலிருந்து, நாம் எங்களை மாற்றாவிட்டதல் முடிவு நிச்சயம் என்று தோன்றியது. நினைத்ததுபோல எல்லாமே நடந்து முடிந்துவிட்டது, 2005 தேர்தலை புறக்கணித்ததற்க கூறிய காரணங்கள்பற்றி சம்பந்தர் ஐயா இன்று சொல்லியிருக்கும் விசயங்கள் இவர் எடுக்கப்போகும் முடிவு முன்பு செய்ததுபோல அச்சுறுத்தலுக்கு மத்தியில எடுக்கப்படுமானால் தமிழரின் அடுத்தகட்ட அழிவுக்கே இட்டுச்செல்லும். ஆயுதத்தால் வெல்லமுடியாததை அறிவால் வென்றான் ஒரு மண்டெலா.... யதார்த்தத்திற்கு வாருங்கள். ஜெகன் அண்ணா தேசிய ஊடகத்தில் ஒருநேயருக்கு கூறிய பதில் அவர் சொன்ன விதம் இன்றைய தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு எல்லாம் எங்கள் போராட்டம் எந்தத்திசையில் எப்படி ஏன் கொண்டுசெல்லப்பட்டது என்பதை விளக்குகின்றது. சிந்தியுங்கள்..... நியுரோன் தாக்கம் யாருக்கு என்பதை ......... :):D:lol::lol:

Edited by Mathivathanang

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.