Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழம்பித் தெளிந்த கூட்டமைப்பும் சம்பந்தரின் ஆளுமையும்--உதயன் நாளிதழ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் நானும் இருக்கும் நாட்டிலிருந்து அடுத்த கட்டத்துக்கு எப்பவும் ஏதும் செய்யலாம்தான்

ஆனால்

ஈழத்தில் மகிந்தவின் 8 வருட ஆட்சியில் (2+6 = 8)ஒரு தமிழனும் இருக்கமாட்டான்

அப்புறம் எதுக்கு யாருக்கு போராட்டம்....???

இதுதான் எனது கருத்தும், தயா! நீங்கள் எங்கள் கருத்தை தப்பாக புரிந்துகொள்கின்றீர்கள்.

  • Replies 84
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் நானும் இருக்கும் நாட்டிலிருந்து அடுத்த கட்டத்துக்கு எப்பவும் ஏதும் செய்யலாம்தான்

ஆனால்

ஈழத்தில் மகிந்தவின் 8 வருட ஆட்சியில் (2+6 = 8)ஒரு தமிழனும் இருக்கமாட்டான்

அப்புறம் எதுக்கு யாருக்கு போராட்டம்....???

தாயக மக்களைப் பற்றி என்ன கவலை எங்களுக்கு? எங்களுக்கு எங்கள் தமிழீழ கனவு தான் முக்கியம். சரத்துக்கு வாக்களிப்பது அந்தப் புனிதமான கனவை கொச்சைப் படுத்திவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத் வென்றால் எதுவித நன்மைகளும் வராவிட்டாலும் கடைசி ஒட்டுக்குழுக்களின் ஆதிக்கம் இல்லாமல் போகவாவது வாய்ப்புண்டு.

கூட்டமைப்பு தெளிவடைந்துள்ளதா!

தேவையற்ற தலையங்கம்.

தேர்தல் வரை காத்திருப்போம்.

இதுதான் எனது கருத்தும், தயா! நீங்கள் எங்கள் கருத்தை தப்பாக புரிந்துகொள்கின்றீர்கள்.

சரி நீங்கள் சொல்வதை ஒரு பேச்சுக்கு ஏற்று கொள்கிறேன் எண்றே வைத்துக்கொள்ளுங்கள்...

கூட்டமைப்பு கொடுக்கும் ஆதரவால் முழுமையான தமிழர்களும் வாக்களித்தும் தேர்தலில் சரத் பொன்சேகாவால் வெல்ல முடியவில்லை எண்றால்...??? மகிந்த இராஜபக்ஸேயே மீண்டும் ஜனாதிபதியாகி விட்டால்...?? அப்போது நீங்கள் சொல்வது கட்டாயமாக நடக்கும்...

இலங்கையில் இந்த தடவை கிட்டத்தட்ட 80 லட்ச்சம் சிங்களவர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்... தமிழர்கள் 5 லட்ச்சம் பேருக்கு கொஞ்சம் அதிகம்... குறிப்பாக 2004ம் ஆண்டின் நாடாளு மண்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வாக்களித்தவர்கள் 3லட்ச்சம் பேர்.... அது இப்போது 1 லட்ச்சத்துக்கும் கொஞ்சம் அதிகமாக மட்டுமே இருக்கிறது... அதாவது வாக்களிக்க போகும் தமிழர்களை விட சிங்களவர்கள் 16 மடங்கு அதிகம்... இதில் இஸ்லாமியரின் வாக்குக்கள் கணக்கில் இல்லை...

ஆக இப்போதும் சிங்களவர் தங்களின் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் இது...

இன்னும் ஒரு தகவலையும் இங்கே உங்களுக்கு சொல்ல வேண்டும்... இலங்கை சிறைகளில் 14 000 போராளிகள் சிறைப்பட்டு இருக்கிறார்கள்... அவர்களில் வயது வந்தவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் எண்று அரசு சொல்லி இருக்கிறது... அதோடு வரும் தேர்தலில் மகிந்த வெண்று வந்தால் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாகவும் உறுதி வழங்கி இருக்கிறது அரசு... இது எனது உறவினர்களின் பிள்ளைகள் அவர்களுக்கு சொன்னவை... ஆக போராளிகளின் குடும்பங்கள் கூட தழும்பலில் இருக்கிறது... அதாவது கிட்டத்தட்ட எத்தினை ஆயிரம் குடும்பங்கள் அவை...

Edited by தயா

சரத் வென்றால் எதுவித நன்மைகளும் வராவிட்டாலும் கடைசி ஒட்டுக்குழுக்களின் ஆதிக்கம் இல்லாமல் போகவாவது வாய்ப்புண்டு.

மூண்று மாதங்களுக்கு முன் வரைக்கும் கடந்த ஐந்து வருடங்களாக உந்த ஒட்டுக்குழுக்களையும் வைத்து இயக்கியவர் சரத்பொன்சேகா... அவர் ஆட்ச்சிக்கு வந்தால் அவர்களை வைத்து தொடர்ந்து இயக்க மாட்டாரா என்ன...??

தற்போது நேரப்பற்றாக்குறை காரணமாக உங்கள் நீண்ட பதிலில் இப்பகுதிக்கு மட்டும் எனது கருத்தை எழுதுகிறேன். மன்னிக்கவும்.

நடமாடும் சாட்சியங்களோ, கிருஷ்ணவேணியோ நவீனகால குற்றவிசாரணைகளில் முக்கியத்துவம் குறைந்தவை. வெறும் சாட்சிகளின் வாக்குமூலங்களால் கொலைவழக்குகளில் தவறான தண்டனை பெற்று சிறைகளில் அடைபட்டிருப்பவர்கள் பலர். மேற்குலக நாடுகள் சாட்சிகளை விடுத்து விஞ்ஞான முறைக்கு புலன்விசாரணைகளுக்கு முன்னேறி விட்டன. நான் இணைத்த காணொளியில், ஜெஃப்ரி ரொபெர்ட்சன் சொல்லவருவதும் அத்தகைய ஒரு விசாரணையைத்தான். ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு வாக்குமூலங்கள் உபயோகப்படலாமே தவிர, குற்றத்தை நிறுவ அவை பயன்பட மாட்டா.

இன அழிப்புக்கான தமிழர் அமைப்பும் நோட்ரி பப்ளிக்கின் முத்திரையுடன் கூடிய சில சாட்சிப் பத்திரங்களைக் கையளிப்பதாகக் கூறியிருக்கிறது. ஆனால் அதை ஆரம்பகட்டத்துக்கு வேண்டுமானால் உபயோகிப்பார்களேதவிர, குற்றத்தை நிறுவ அவை மட்டும் போதாது. தீர்ப்பில் ஒரு பாகமாக மட்டும் வேண்டுமென்றால் அவை இடம்பெறக்கூடும்.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமே சாட்சிகளின் வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு இன்னமும் தண்டனைகள் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மேற்குலக நாடுகளிலோ, ஐநா விசாரணைகளிலோ இவ்வாறு செய்யப்படுவதில்லை.

அப்படியானால் இதே ஐநா புலிகள் மக்களை அடைத்து வைத்து இருக்கிறார்கள் எண்றும் தப்பிவரும் மக்களை புலிகள் சுடுகிறார்கள் எண்றும் எந்த பகுப்பாய்வின் அடிப்படையில் கண்டனம் தெரிவித்தார்கள்....???

இப்படியான கண்டனங்களின் அடிப்படையில் தானே உலகமும் மேற்கு நாடுகள் புலிகளை தடையும் செய்தன... அங்கே எந்த விதமான விசாரணைகளை மேற்கொன்டு இருந்தார்கள்....??

இதேபோல புதுக்குடியிருப்பு வைத்திய சாலை மிது அரச வான் படைகள் குண்டு வீசின எண்று தெரிவித்த ஐநா அடுத்த நாள் அதனை மறுத்தே... இவை எல்லாம் எந்த பகுப்பியல் கூறுகொண்டது...???

இதே காலப்பகுதியில் காசாவில் நடந்த போரில் இஸ்ரேலிய படையினர் பொஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக ஐநா இஸ்ரேலை கண்டித்தது... அதனை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு சபையில் விவாதத்துக்கு எடுக்க படவிருந்த இஸ்ரேல் விவகாரத்தை வீட்டோவை பாவிப்போம் எண்று சொல்லி அமெரிக்கா அமத்தியதையும் நீங்கள் அறிந்து இல்லையா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் இதே ஐநா புலிகள் மக்களை அடைத்து வைத்து இருக்கிறார்கள் எண்றும் தப்பிவரும் மக்களை புலிகள் சுடுகிறார்கள் எண்றும் எந்த பகுப்பாய்வின் அடிப்படையில் கண்டனம் தெரிவித்தார்கள்....???

இதேபோல புதுக்குடியிருப்பு வைத்திய சாலை மிது அரச வான் படைகள் குண்டு வீசின எண்று தெரிவித்த ஐநா அடுத்த நாள் அதனை மறுத்தே... இவை எல்லாம் எந்த பகுப்பியல் கூறுகொண்டது...???

இதே காலப்பகுதியில் காசாவில் நடந்த போரில் இஸ்ரேலிய படையினர் பொஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக ஐநா இஸ்ரேலை கண்டித்தது... அதனை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு சபையில் விவாதத்துக்கு எடுக்க படவிருந்த இஸ்ரேல் விவகாரத்தை வீட்டோவை பாவிப்போம் எண்று சொல்லி அமெரிக்கா அமத்தியதையும் நீங்கள் அறிந்து இல்லையா...??

முதலில் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். எந்த நாடும், ஐநாவும் கூட யோக்கியவான் இல்லை. இதை முன்னமே எழுதியிருந்தேன். அவரவர் அவரவர் நலன்களுக்கு ஏற்றமாதிரி விடயங்களை எடுத்துச்செல்ல முயல்கிறார்கள். ஐநாவில் பான் கி மூன் வெளிப்படையாகவே சிறீலங்காவைக் காப்பாற்ற முயல்கிறார் என்பது உண்மை. சமீபத்தில் பிலிப் ஆல்ஸ்ரன் காணொளி சம்பந்தமாக தெரிவித்த கூற்றை அவரது சொந்தக் கருத்து என்று சொன்னது ஒரு உதாரணம்.

இவை இருக்க, இறைமையுள்ள ஒரு அரசுக்கும், ஒரு அமைப்புக்கும் வெவ்வேறு வகையான அணுகுமுறைகளே பின்பற்றப்படுகின்றன. போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் அறிக்கைகளில் யார் அதிகம் குற்றம்சாட்டப்பட்டார்கள் என்பதை கவனித்தாலே இது புரியும். ராஜதந்திர அழுத்தங்கள் எதையுமே பிரயோகிக்க முடியாத நிலையில் இருந்தவர்களே புலிகள். இந்த நிலையில் புலிகள் சுட்டார்கள் என்று சொல்ல ஐநாவுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. ஆனால் சிறீலங்கா மருத்துவமனைகள் மீது குண்டுகள் போட்டது என்று ஊடகங்கள் தெரிவித்தபோதும் சிறீலங்கா மறுத்தது. பாலித கொகோனவின் பேட்டிகளைப் பார்த்தால் எந்த அளவுக்கு இறையாண்மை என்கிற சொல்லைப் பயன்படுத்தி எல்லோரையும் அடக்குகிறார்கள் என்பது விளங்கும்.

இஸ்ரேலைப் பொறுத்தவரையில் அதன் தாக்குதல்களைக் கண்டுகளிக்க பன்னாட்டு அமைப்புகளும் பத்திரிகைக்காரர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் கூற்றுக்களை ஐநா உள்வாங்கிக்கொண்டது. ஒன்றைச் சிந்தித்துப் பாருங்கள். ஆனானப்பட்ட அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான இஸ்ரேலையே ஐநா கண்டிக்கிறது. ஆனால் சிறீலங்காவைக் கண்டிக்கவில்லை. அப்படியானால் இஸ்ரேலைவிட சிறீலங்கா மிகவும் முக்கியமாகப் போய்விட்டதா? அப்படியல்ல. சிறீலங்கா சாதுர்யமாக சாட்சிகளற்ற இன அழிப்பை மேற்கொண்டது. இஸ்ரேலுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை.

டங்கு.

அப்படியானால் சரத் வந்தாலும் போர் குற்றங்கள் இறையாண்மை எனும் பெயரால் அடிபட்டு போகும் என்கிறீர்கள்... இதைத்தானே நானும் சொல்கிறேன்... மேற்கு நாடுகள் தங்களின் ஆதரவாளரை இலங்கையில் ஜனாதிபதிகாக்க துடிப்பது போர் குற்றங்களை விசாரிக்க இல்லை எண்று...

போர் குற்றங்கள் மகிந்த ஆட்ச்சியில் இருக்கும் வரைக்கும் அவனை மிரட்டும் கருவிகள் மட்டும் தான்... அவன் போனது அந்த கருவிகளுக்கு மட்டும் என்ன தேவை வேண்டி கிடக்கிறது...??

அப்படி அல்ல.. உலகநாடுகளுக்குள் ஒரு நடத்தைக்குரிய வரைமுறைகள் என்று ஒன்று கடைப்பிடிக்கப்படுவது வழமை. உலகில் ஓரளவுக்காவது ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடிப்பதற்கு இந்த நெறிமுறை உதவுகிறது. தவறு நடந்தது என்று ஆதாரபூர்வமாகத் தெரிந்தும் கண்டும் காணாமலும் விட்டுவிடுவார்கள் என்பது நடைமுறை சாத்தியம் அற்றது.

அந்த அடிப்படையில், இளைஞர்கள் குறித்த காணொளி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை மூடிமறைக்க பான் கி மூன் தன்னாலான அனைத்தையும் செய்கிறார். ஆனால் அதே ஐநாவில் இருக்கும் பிலிப் ஆல்ஸ்ரன் தான் குற்றங்களை விசாரிப்பதில் உறுதியாக இருக்கிறார். காணொளி ஆதாரம் உண்மையானது என்று அறியப்பட்ட பிறகும் சிறீலங்காவை விட்டுவிடுவார்களாயின் அதுதான் தவறான முன்னுதாரணம். நாளை இன்னொரு நாடும் கொலைகளைச் செய்துவிட்டு, சிறீலங்காவை காட்டி தப்பித்துக்கொள்ள வழி பிறந்துவிடும்.

ஆகையால், மகிந்தவோ, சரத்தோ.. யார் வந்தாலும் சிங்களத்துக்கெதிரான அறுதியான ஆதாரங்களை வெளிக்கொணர்வதற்கு தமிழர்கள் உழைக்க வேண்டும். போர்க்குற்றங்களுக்காக ஓரிரு தலைகளாவது தண்டனை பெறவேண்டும். அதுவே தமிழர்களுக்கென்று தீர்க்கப்படவேண்டிய ஆழமான பிரச்சினை என்று ஒன்று சிறீலங்காவில் உண்டு என்றும், சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது என்றும் நிறுவ ஓரளவுக்காவது உதவும். அதற்கு மகிந்த குழுவைத் தண்டனைக்குள்ளாகச் செய்வதே சாத்தியம் மிகுந்தது.

டங்கு

மகிந்த குழுவில் குற்றம் காணுவதுகூட சாத்தியம் அற்றது காரணம் மகிந்த குடும்பம் செய்த அனைத்திலும் சரத்தும் பங்காளி... இங்கு சரத்தை கவனித்தீர்களானால் தெரியும் கடந்த ஐந்து வருடங்களில் அவன் ஒரு தேர்ந்த அரசியல் வாதி நிர்வாகி என்பதையும் நிரூபித்து இருக்கிறான்... இண்ரு மகிந்தவின் ஆட்க்களாக கருத்தப்பட்ட அனைவருமே மூண்று மாதங்கள் முன் வரைக்கும் சரத்தின் நண்பர்கள், கீழ் வேலை செய்தவர்கள் வட்டம்... அவர்களை காட்டிக்கொடுக்கும் வேலையை சரத் செய்ய எந்த முகாந்திரமும் கிடையாது...

தவிரவும் மிகவும் இனவெறி பிடித்த JVP அதுக்கு உடன் படும் எண்று நம்ப முடியாது... அதோடு சரத்துக்கு ஆதரவாக இருக்கும் அரசியல் குள்ளநரி இரணில் கூட இலங்கைக்கு கெட்ட பெயர் வருவதுக்கு இடம் கொடுப்பார் எண்று நம்புவதும் கடினமாக இருக்கிறது...

தமிழர்கள் உழைக்கலாம்... ஆனால் மேற்குலகின் நேச நாடான இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கண்டு கொள்ளப்படாது... அதுக்கு உதாரணங்கலை இதுக்கும் மேல் உள்ள ஒரு கருத்தில் தெரிவித்து இருக்கிறேன்...

தயா,

சரத் பதவிக்கு வந்து எல்லாரையும் பிடிச்சுக் குடுப்பான் எண்டு நான் சொல்ல வரவில்லை. அதற்கான தேவையும் இல்லை. சரத் ஏற்கனவே கோதபாயவைக் காட்டிக்கொடுத்தது மட்டுமே போர்க்குற்ற விசாரணைக்கு உந்துதலாக இருக்கப் போதுமானது.

மகிந்த குழு மீண்டும் பதவிக்கு வந்தால், போர்க்குற்றம் தொடர்பான நிலைமைகளில் மந்தமான போக்கே (இப்போது உள்ளதுபோல) தொடரும். ஆனால் சரத் வரும்போது ராஜதந்திர ரீதியில் இயல்பாக ரீதியிலேயே அதிகார மட்டங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் சிறீலங்காவின் இறுக்கமான போக்கில் ஒரு மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இது இடம்பெற்றால் நிலைமை நமக்கு மேலும் சாதகமாகக்கூடும்.

சந்திக்கக்கூடாத அழிவுகளை எல்லாம் சந்தித்துவிட்டோம். அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. ஆனால் விசாரணைக்கு ஒரு அமைப்பு உள்ளே நுழைவதில்தான் தடை உள்ளது. மகிந்த இருக்கும் வரையில் அதற்கு வாய்ப்பே இல்லை. சரத் வந்தால் அதற்கான வாய்ப்பு உள்ளது என்று மட்டுமே சொல்கிறேன். அவன் மனம் திருந்தி விசாரணைக்கு விடுவான் என்று சொல்லவில்லை. கழுத்தில் கயிறு இறுகும்போது இயலாத கட்டத்தில் கை இளகுவதைப் போன்ற நிலைதான் அது.

Edited by இசைக்கலைஞன்

டங்கு

இங்கே குழம்பி கிடப்பது இரண்டு விடயங்கள்.. முக்கியமாக ஒரு நம்பிக்கை மீது கட்டப்பட கோட்டை எண்டும் இதை சொல்ல முடியும்...

அதை இயக்கி கொண்டு இருப்பவர்களும் மாயை ஒண்றை தோற்றி கொண்டு இருப்பவர்கள் தான் கடந்த இந்திய நாடாளுமண்ற தேர்தலில் காங்கிரஸ் கட்ச்சி தமிழகத்தில் படுதோல்வி அடையும் எண்று விதைத்தவர்கள்...

இதில் முக்கியமாக கட்டாயம் சரத் பொன்சேகா இலங்கையின் ஆட்சிக்கு வருவார் என்கிறது முதலாவது கூற்று... இரண்டாவது இலங்கையில் மகிந்த ஆட்ச்சி அகன்றால் போர் குற்றம் விசாரிக்க படும் என்பது அதில் மற்றொண்று... அப்படி போர் குற்றம் விசாரிக்க படும் எண்று எந்த சர்வதேச அமைப்போ நாடுகளோ இதுவரைக்கும் வெளிப்படையாக சொன்னதில்லை... அப்படி ஒண்று வெளிநாட்டு ஊடகங்களில் இடத்தை பிடிக்கவும் இல்லை... இப்படினான ஒண்றை நடைபெறும் எண்று வேற்று நாட்டவர் ஒருவர் அறிந்து இருக்கவும் இல்லை... இப்படி சொல்லி கொள்வது தமிழர்கள் மட்டுமே

இதில் எல்லாம் மிக முக்கியமாக சிங்களவாக்காளர்கள் 80 லட்ச்சம் பேருக்குமேல் வாக்களிக்க போகிறார்கள்... தமிழர்கள் போனதடவை கூட்டமைப்புக்கு விழுந்த வாக்குக்களிலும் விரிசல் இருக்கிறது... மற்றும் மக்கள் யாழ்ப்பாணத்தில் 3லட்ச்சம் பேர் 2005ல் வாக்களித்து இருந்தனர்.. இப்போது வாக்களர் பட்டியலில் இருக்கும் மக்களின் தொகையே வெறும் ஒரு லட்ச்சம் பேருக்கு கொஞ்சம் அதிகம்.. இதில் தமிழ் மக்கள் எல்லோரும் வாக்களிப்பில் கலந்து கொள்வார்கள் எண்று எப்படி நம்புகிறார்கள் எண்று தெரியவில்லை..

அதோடு ஒரு விடயத்தை கொஞ்சம் ஆள்ந்து நோக்குங்கள்சரத் பொன்சேகா தமிழர்களுக்கு எண்று எதையும் தருவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலோ அல்லது மேடைகளிலோ சொன்னது கிடையாது... அதுக்கு சொல்லப்படும் காரணம் சிங்கள மக்கள் வாக்களிக்கமல் மகிந்தவுக்கு தங்களின் வாக்குக்களை போட்டு விடுவார்கள் எண்று எங்களவர்களால் காரணமாக சொல்லப்படுகிறது.. ஆக மொத்தம் சிங்களவர்கள் இன்னும் இனவாதிகளாக இருக்கிறார்கள் என்பதை எங்களவர்கள் இன்னும் புரிந்து வைத்து இருக்கிறார்கள் தமிழர்களுக்கு எதையாவது கொடுக்கும் ஒருவருக்கு வாக்களிக்க கூட மாட்டார்கள் என்பதையும் அறிந்தே செய்கிறார்கள் என்பது தெளிவு...

ஆக சிங்களவர்கள் இனிமேலும் அதாவது தமிழர்களை போல 15 மடங்கு அதிகமான சிங்களவர் தெரிவு செய்யும் ஒருவரே இலங்கையில் ஜனாதிபதியாக முடியும்... தமிழர்கள் வாக்குக்கள் என்பது தொட்டுக்கொள்ள ஊறுகாய் போண்றதே... இதையே ஒருதடவை சரத் பொன்சேகா சிங்களவரின் நாடு இலங்கை எண்று கூறுகிறார்...

அதோடு ஒட்டு மொத்த தமிழரும் சரத்துக்கு போடப்போக சிங்களவர் மகிந்தவை தெரிவு செய்தார்கள் எண்று வைத்து கொள்ளுங்கள்... அதுக்கு பிறகு நான் சொல்ல என்ன கிடக்கு...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் மகிந்தவின் 8 வருட ஆட்சியில் (2+6 = 8)ஒரு தமிழனும் இருக்கமாட்டான்

அப்புறம் எதுக்கு யாருக்கு போராட்டம்....???

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் போராட்டம் "அன்று" தொட்டு நடந்துவருகின்றது. எனினும் தமிழர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். மகிந்தவின் 8 - 10 வருட ஆட்சி தமிழர்களை அழித்துவிடாது. மகிந்தவே, தமிழைக் கற்று தமிழில் பேசுவதில் இருந்து இதைப் புரிந்துகொள்ளலாம். எனவே பூச்சாண்டி வேண்டாம்.

வரலாற்றுக் காலத்தில் தமிழர்கள் (சோழர்கள்) முழு இலங்கையையும் ஆண்டபோது தமிழைக் கட்டாயம் ஆக்கியிருந்தால், முதிர்ச்சியடையாமல் இருந்த சிங்களமொழி அழிந்து தீவு முழுவதும் தமிழராக இருந்திருப்போம். அந்தக்காலத்தில் தீர்க்கதரிசனமில்லாமல் இருந்துவிட்டார்கள்!

அண்ணே தலைவற்ர சரித்திரம் 1973 ம் ஆண்டு தமிழாராச்சி மகாநாடோடதான் துடங்கினதா தகவல்கள் சொல்லுது. அதிலயிருந்துதான் போராட்டமே களைகட்டினதா இங்க எங்கயோ வாசிச்சன். தலைவர் எல்லாளளை காட்டினார்..அது ஒண்டுதான் இப்ப நினைவில இருக்கு. அதுகூட இப்ப சம்பவமாத்தான் தெரியிது. எங்களுக்கும் சிங்களவனுக்கும் என்னண்ணை பிரச்சனை, நீங்கள் சொல்லுறத பாத்தால் சிங்களவன் தமிழ் படிக்கிறதுபோலகிக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் சிங்களவனுக்கும் என்னண்ணை பிரச்சனை,

உங்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து திரிக்கு சம்பந்தமில்லாமல் எழுதிக்கொண்டிருந்தீர்களானால் நிர்வாகம் உங்களை தடை செய்ய வேண்டி வரும்: நிழலி

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு

இங்கே குழம்பி கிடப்பது இரண்டு விடயங்கள்.. முக்கியமாக ஒரு நம்பிக்கை மீது கட்டப்பட கோட்டை எண்டும் இதை சொல்ல முடியும்...

அதை இயக்கி கொண்டு இருப்பவர்களும் மாயை ஒண்றை தோற்றி கொண்டு இருப்பவர்கள் தான் கடந்த இந்திய நாடாளுமண்ற தேர்தலில் காங்கிரஸ் கட்ச்சி தமிழகத்தில் படுதோல்வி அடையும் எண்று விதைத்தவர்கள்...

தயா,

நான் இங்கே எழுதிக்கொண்டிருக்கும் கருத்துக்களுக்கு மூலமாக அமைந்தது திரு வித்யாதரன் அவர்களின் ஒரு செவ்வியே. அவர் இத்தகைய தீய விதைப்புக்களை செய்து கொண்டிருக்கிறார் என நான் நம்பவில்லை. அத்துடன் அவரது கருத்துக்கள் நியாய பூர்வமாகவே இருந்தன.

இங்கே உங்களது பார்வைக்கும் எனது பார்வைக்கும் பெருமளவில் வித்தியசமில்லை.

1) நாங்கள் இருவருமே மகிந்த, சரத் உட்பட எந்த ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தாலும் தமிழருக்கு எந்தத் தீர்வையும் தந்துவிடப்போவதில்லை என்பதை தீர்க்கமாக நம்புகிறோம்.

2) எந்த சிங்கள அரசுமே தமிழருக்கு எந்தவித நன்மைகளையுமே செய்துவிடப்போவதில்லை என நம்புகிறோம்.

இனி, நாம் இருவரும் வேறுபடும் விடயங்கள்.

1) இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் வாக்கு இனவாதிகளுக்கு விழுந்தால், அது தமிழர்களின் நிலைப்பாட்டைக் கேள்விக்குரியதாக ஆக்கிவிடும் எனச் சொல்ல விளைகிறீர்கள்.

தாயக அரசியலில் இப்படி ஒரு நிலை இல்லை என்பதே என் கருத்து. தேர்தலில் சந்திரிகாவுக்குப் போட்டாலும், மகிந்தவைப் புறக்கணித்தாலும் தமிழரின் அரசியல் நிலைப்பாடு என்பது வெளியுலகைப் பொறுத்தவரையில் மாறாதது. நாங்கள்தான் சிங்களவனுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். சர்வதேச நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில், இலங்கைத்தீவில் சிங்களவரும், தமிழரும் இணைந்து வாழ முடியும் என்பதே இன்றுவரையுள்ள நிலைப்பாடு. அதனால் இந்தத் தேர்தலில் தமிழர்கள் யாருக்கு வாக்களித்தாலும் சர்வதேச ரீதியில் எமக்கு எந்தப் பிரச்சினையும் தர்க்கரீதியில் இருக்கப் போவதில்லை.

2) இந்தத் தேர்தலில் தமிழர் வாக்குகள் சரத்துக்கு விழுந்தபிறகும் மகிந்த வெற்றிபெற்றால் பிரச்சினை என்பதுபோல் எழுதியிருக்கிறீர்கள்.

என்னைப் பொறுத்தவரையில், தமிழர்கள் யாருக்குப் போட்டாலும் அதற்காக அதிகமாக வருந்த வேண்டி வராது. மகிந்த காலத்தில் நடந்த அட்டூழியங்களைத் தாண்டிவிடாது.

3) சிங்களவரால் தேர்வுசெய்யப்படும் ஒருவரே ஜனாதிபதியாக வரமுடியும் என எழுதியிருக்கிறீர்கள்.

இது உண்மைதான். ஆனால் மகிந்தவுக்கும், சரத்துக்கும் இடையே சிங்கள வாக்குகள் சரிபாதியாகப் பிரியுமானால் சிறுபான்மையினருன் வாக்குகள் முக்கியத்துவம் பெற்றுவிடும். அதனால் தமிழர், முஸ்லிம் வாக்குகள் மிக முக்கியமானவையே.

4) இறுதியானதும், மிக முக்கியமானதும்.. எந்தச் சிங்களவன் வந்தாலும் சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது எனத் தீர்க்கமாகச் சொல்கிறீர்கள்.

இதைத்தான் நான் முழுவதுமாக மறுதலிக்கிறேன். வெளிவந்துவிட்ட சில ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டே தீரவேண்டும். அதற்குக் உலகநாடுகளின் நடத்தை நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டியிருந்தேன். தவறான முன்னுதாரணத்தை (wrong precedence) ஏற்படுத்த விட்டுவிட மாட்டார்கள். ஆனால் எப்போது என்பதுதான் கேள்வி. மகிந்த இருக்கும்வரையில் சுணக்கம் இருந்துகொண்டே இருக்கும். சரத் வந்தால் ஆட்சிமாற்றத்தின் காரணமாக (சரத் தானாகச் செய்துவிடப்போவதில்லை) சில மாற்றங்கள் வரலாம் என்றே சொல்ல வருகிறேன். மேற்குலகமோ, சரத் பொன்சேகாவோ நிகழ்ந்துவிட்ட போர்க்குற்றங்களை ஆழத் தோண்டிப் புதைத்துவிட முடியாது.

(அப்பா.. களைச்சுப் போய்ட்டன்.. என்னை விட்டிடுங்களேன்..! :) )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து திரிக்கு சம்பந்தமில்லாமல் எழுதிக்கொண்டிருந்தீர்களானால் நிர்வாகம் உங்களை தடை செய்ய வேண்டி வரும்: நிழலி

அண்ணே திரிக்கு சம்பந்தமில்லாத பதில்கள் வருமானால் அதற்கு பதிலளிக்கவேண்டிய கடமை எனக்கிருக்கிறது என்பதனை தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன். :)

(அப்பா.. களைச்சுப் போய்ட்டன்.. என்னை விட்டிடுங்களேன்..! :lol: )

:):D:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயன் பேப்பரில 14 ம் பக்கதில நம்பி நம்பி கெட்டோம் எண்டு ஒரு தலப்பின்கீழ பகிஷ்கரிப்போர் எண்டு ஒரு பந்தி இருக்கு..... விருப்பமானவர்கள் வாசிக்கலாம்.....

அக்றோபற் றீடர் அவசியம்.....

http://uthayan.com/myuthayan/1.1/index.html

:)

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

4) இறுதியானதும், மிக முக்கியமானதும்.. எந்தச் சிங்களவன் வந்தாலும் சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது எனத் தீர்க்கமாகச் சொல்கிறீர்கள்.

இதைத்தான் நான் முழுவதுமாக மறுதலிக்கிறேன். வெளிவந்துவிட்ட சில ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டே தீரவேண்டும். அதற்குக் உலகநாடுகளின் நடத்தை நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டியிருந்தேன். தவறான முன்னுதாரணத்தை (wrong precedence) ஏற்படுத்த விட்டுவிட மாட்டார்கள். ஆனால் எப்போது என்பதுதான் கேள்வி. மகிந்த இருக்கும்வரையில் சுணக்கம் இருந்துகொண்டே இருக்கும். சரத் வந்தால் ஆட்சிமாற்றத்தின் காரணமாக (சரத் தானாகச் செய்துவிடப்போவதில்லை) சில மாற்றங்கள் வரலாம் என்றே சொல்ல வருகிறேன். மேற்குலகமோ, சரத் பொன்சேகாவோ நிகழ்ந்துவிட்ட போர்க்குற்றங்களை ஆழத் தோண்டிப் புதைத்துவிட முடியாது.

(அப்பா.. களைச்சுப் போய்ட்டன்.. என்னை விட்டிடுங்களேன்..! :) )

இசைக்கலைஞன் சரத் வந்தால் போர் குற்ற விசாரனை நடக்கும் என எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் ...மகிந்தா ஆசியா நாடுகளையே கூட நம்புறவர் ஆனால் ரணில் மேற்குலகம் சார்ந்தவர் பொன்சேகராவை ஆட்சியில் அமர்த்துவதன் மூலம் மேற்குலகம் தங்கட நலனுக்கு ஏற்ப இலங்கையை ஆக்கிரமிக்க பார்ப்பார்களே வழிய யார் வந்தாலும் போர் குற்ற விசாரனை நடக்காது சில வேளை புலம் பெயர் மக்கள் திரும்பவும் போராட்டம் செய்து விசாரிக்க சொன்னால் சில நேரம் ஒப்பு சப்புக்கு ஏதாவது மக்களை ஏமாற்ற ஏதாவது செய்வார்கள்.மேற்குலகம் கடைசி வரைக்கும் பொன்செகராவை பதவியில் அமர்த்த பாடுபடும் அது முடியாவிடின் மகிந்தாவிற்கு சலாம் போட்டு அதன் காலில் விழுந்து கிடக்கும்.

தயா,

நான் இங்கே எழுதிக்கொண்டிருக்கும் கருத்துக்களுக்கு மூலமாக அமைந்தது திரு வித்யாதரன் அவர்களின் ஒரு செவ்வியே. அவர் இத்தகைய தீய விதைப்புக்களை செய்து கொண்டிருக்கிறார் என நான் நம்பவில்லை. அத்துடன் அவரது கருத்துக்கள் நியாய பூர்வமாகவே இருந்தன.

இங்கே உங்களது பார்வைக்கும் எனது பார்வைக்கும் பெருமளவில் வித்தியசமில்லை.

1) நாங்கள் இருவருமே மகிந்த, சரத் உட்பட எந்த ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தாலும் தமிழருக்கு எந்தத் தீர்வையும் தந்துவிடப்போவதில்லை என்பதை தீர்க்கமாக நம்புகிறோம்.

2) எந்த சிங்கள அரசுமே தமிழருக்கு எந்தவித நன்மைகளையுமே செய்துவிடப்போவதில்லை என நம்புகிறோம்.

இனி, நாம் இருவரும் வேறுபடும் விடயங்கள்.

1) இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் வாக்கு இனவாதிகளுக்கு விழுந்தால், அது தமிழர்களின் நிலைப்பாட்டைக் கேள்விக்குரியதாக ஆக்கிவிடும் எனச் சொல்ல விளைகிறீர்கள்.

தாயக அரசியலில் இப்படி ஒரு நிலை இல்லை என்பதே என் கருத்து. தேர்தலில் சந்திரிகாவுக்குப் போட்டாலும், மகிந்தவைப் புறக்கணித்தாலும் தமிழரின் அரசியல் நிலைப்பாடு என்பது வெளியுலகைப் பொறுத்தவரையில் மாறாதது. நாங்கள்தான் சிங்களவனுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். சர்வதேச நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில், இலங்கைத்தீவில் சிங்களவரும், தமிழரும் இணைந்து வாழ முடியும் என்பதே இன்றுவரையுள்ள நிலைப்பாடு. அதனால் இந்தத் தேர்தலில் தமிழர்கள் யாருக்கு வாக்களித்தாலும் சர்வதேச ரீதியில் எமக்கு எந்தப் பிரச்சினையும் தர்க்கரீதியில் இருக்கப் போவதில்லை.

2) இந்தத் தேர்தலில் தமிழர் வாக்குகள் சரத்துக்கு விழுந்தபிறகும் மகிந்த வெற்றிபெற்றால் பிரச்சினை என்பதுபோல் எழுதியிருக்கிறீர்கள்.

என்னைப் பொறுத்தவரையில், தமிழர்கள் யாருக்குப் போட்டாலும் அதற்காக அதிகமாக வருந்த வேண்டி வராது. மகிந்த காலத்தில் நடந்த அட்டூழியங்களைத் தாண்டிவிடாது.

3) சிங்களவரால் தேர்வுசெய்யப்படும் ஒருவரே ஜனாதிபதியாக வரமுடியும் என எழுதியிருக்கிறீர்கள்.

இது உண்மைதான். ஆனால் மகிந்தவுக்கும், சரத்துக்கும் இடையே சிங்கள வாக்குகள் சரிபாதியாகப் பிரியுமானால் சிறுபான்மையினருன் வாக்குகள் முக்கியத்துவம் பெற்றுவிடும். அதனால் தமிழர், முஸ்லிம் வாக்குகள் மிக முக்கியமானவையே.

4) இறுதியானதும், மிக முக்கியமானதும்.. எந்தச் சிங்களவன் வந்தாலும் சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது எனத் தீர்க்கமாகச் சொல்கிறீர்கள்.

இதைத்தான் நான் முழுவதுமாக மறுதலிக்கிறேன். வெளிவந்துவிட்ட சில ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டே தீரவேண்டும். அதற்குக் உலகநாடுகளின் நடத்தை நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டியிருந்தேன். தவறான முன்னுதாரணத்தை (wrong precedence) ஏற்படுத்த விட்டுவிட மாட்டார்கள். ஆனால் எப்போது என்பதுதான் கேள்வி. மகிந்த இருக்கும்வரையில் சுணக்கம் இருந்துகொண்டே இருக்கும். சரத் வந்தால் ஆட்சிமாற்றத்தின் காரணமாக (சரத் தானாகச் செய்துவிடப்போவதில்லை) சில மாற்றங்கள் வரலாம் என்றே சொல்ல வருகிறேன். மேற்குலகமோ, சரத் பொன்சேகாவோ நிகழ்ந்துவிட்ட போர்க்குற்றங்களை ஆழத் தோண்டிப் புதைத்துவிட முடியாது.

(அப்பா.. களைச்சுப் போய்ட்டன்.. என்னை விட்டிடுங்களேன்..! :) )

நீங்கள் சொல்வது போல அப்படியே நடந்து விடும் எண்று ஏற்றுக்கொள்கிறேன் எண்றே வைத்துக்கொள்ளுங்கள்....

அப்படியானாலும் தமிழர்களின் வாக்குகளான (500000) ஐந்து லட்ச்சம் என்பது முழுமையாக விழுதாலும் சிங்கள மக்களின் எண்பது லட்ச்சங்கள் வாக்குகளில் பெரும்பகுதியை சரத் பொன்சேகா தனக்காக்குவார் என்பதில் இன்னும் சந்தேகமே இருக்கிறது... இன்னும் ஜனாதிபதியை தேர்ந்து எடுக்கும் திறண் சிங்கள மக்களிடமே இருக்கிறது... அதில் தமிழர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளரான சரத்தை இனவாதிகள் ஆதரிப்பார்கள் என்பதும் வாக்குக்கள் சரிபாதியாக பிரியும் என்பதும் சந்தேகமே... !

எனிவே நண்றி...

  • கருத்துக்கள உறவுகள்

தயா!

இன்றைய செய்தியை பார்த்தால்,எந்நேரமும் எதுவும் நடக்கலாம், தமிழ் அரசியல்வாதிகள் சிங்களவனின் அரசியல் பிரச்சாரத்திற்காக சொந்த மனைவியையே விபச்சாரத்திற்கு விட தயாராகிவிட்டாங்கள்.

இவங்கள், எல்லாமே முடிந்துவிட்டது, தங்களை தட்டிக்கேட்கவே ஆளில்லை என்ற துணிவு வந்துவிட்டது.

உண்மையாகவே...! நாங்கள் நினைப்பது வேறு அங்கே நடப்பது வேறு... தமிழர்கள் சரத் பொன்சேகாவை ஆதரிக்க போக மகிந்த ஆட்ச்சிக்கு வரும் நிலை வருமானால் தமிழர்களின் பக்கசார்பு நிலையே இன்னும் இன்னல்களுக்குள் தமிழர்களை தள்ளும்...

மிக முக்கியமாக ஒரு செய்தியை சொல்கிறார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் சிலர்( வேண்டும் எ்ண்றே) தமிழினம் தன்னாட்ச்சி தனிநாடு எண்று மேடைகளில் பேசுவதை தேர்தல் நெருங்கும் சில நாட்களில் சிங்கள ஊடகங்களில் வெளியிட்டு சரத் பொன்சேகாவுக்கு எதிராக இனவாதிகளை தூண்டி விடுமாறு செய்ய திட்டம் இருக்கிறதாக நேற்றய தினம் எனது வீட்டின் அருகில் இருக்கும் சிங்கள இனத்தவர் கடை ஒண்றில் சந்தித்தேன்... அவர் ( கொஞ்சம் தமிழர்களுக்கு ஆதரவு போல காட்டி கொள்ள முயல்வார்) பேசும் போது சொன்னார்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.