Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே ஈழப் போர் 3 - பாகம் III

Featured Replies

ஒன்று உண்மையாக தெரிகிறது, "21 ஆம் நூற்றாண்டின் வல்லரசுப் போட்டியில் - உலக உச்ச நாட்டுக்கான அளவு கோல் பொருளாதாரப் பலம்; போர்ப் பலம் அல்ல."

புதிய புதிய களங்களைத் திறந்து எல்லா முனைகளிலும் எதிரியைத் தோற்கடிக்க வேண்டிய ஒரு பெரும் பொறுப்பு எம்மிடமுள்ளது. இத்தகைய களங்களில் ஒன்றாகவே சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் மற்றும் சிறிலங்கா அரசுக்குப் பொருளாதாரப் பலம் சேர்க்கும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் எதிரான ஒரு பகிஸ்கரிப்புப் போராட்டம்.

http://www.boycottsrilanka.com/

1. சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்து வகையாக உணவுப் பொருட்களையும் புறக்கணிப்போம்.

2. சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் மூலப்பொருட்களைக் கொண்டு வேறு நாடுகளில் தயாராகும் உணவுப் பொருட்களைப் ( உதாரணம்: தேயிலை வகைகள்) புறக்கணிப்போம்.

3. சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் எவ்வகையான குளிர்பான, மதுபான வகைகளையும் வாங்கமாட்டோம்.

4. சிறிலங்காவில் தயாராகும் ஆடை வகைகளை அணிய மாட்டோம்.

5. சிறிலங்காவிற்கு எக்காரணம் கொண்டும் வங்கிகள் மூலம் பணம் அனுப்ப மாட்டோம்.

6. சிறிலங்காவில் எக்காரணம் கொண்டும் எவ்வகையான முதலீடுகளையும் செய்யமாட்டோம். ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளையும் வங்கி இருப்புக்களையும் மீளப் பெறுவோம்.

7. சிறிலங்கா விமான சேவை (Srilankan Airlines) மூலம் பயணம் செய்ய மாட்டோம்.

8. சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் பத்திரிகைகளைப் புறக்கணிப்போம்.

9. சிறிலங்கா பத்திரிகைகளில் எவ்வகையான விளம்பரங்களையும் வெளியிடமாட்டோம். சிறிலங்காப் பொருட்களுக்கான விளம்பரங்கள் வெளியிடுவதை நிறுத்தும்படி வெளிநாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களை வேண்டுவோம்.

10. இவ்வாறான புறக்கணிப்பை மேற்கொள்ளும்படி மற்றவர்களையும் தூண்டுவோம்.

Edited by akootha

இக்கட்டுரையை நான் முதலில் இணைத்தேன் பின்னர் நீக்கப்பட்டு இருந்தது.... ...

ஒரு செய்தியை இணைக்கும் போது அது ஏற்கனவே இணைக்கப்பட்டதா இல்லையா என்பதை முதலில் கவனிக்கவும். ஏறகனவே இணைக்கப்பட்ட செய்தியை மீண்டும் இணைத்தால் நிச்சயம் அது அகற்றப்படும். நீங்கள் இந்தச் செய்தியை இணைக்க முன்னரே இந்தத் திரி இணைக்கப்பட்டு விட்டது.

மேற்குக்கு எதிரான ஆட்சியாளர்களால், மேற்கு தமிழருக்குச் சார்பாகும் என்பது பொதுவான பெரும்பாலோர் கருத்து, இவரும் அதைத்தான் சொல்கிறார். கட்டுரையின் அடிப்படை இது.

இந்த எடுகோள் (Assumption) எவ்வளவு தூரம் உண்மை ?

முதலாவது, சிங்களத் தலைவர்கள் இயல்பில் மேற்குக்கு எதிரானவர்கள் தானா? உதாரணமாக, மகிந்த தன் இனவாத செயற்பாடுகளிற்கு மேற்கின் ஆதரவின்மையால் எதிரணியில் சாய்ந்தானே ஒளிய இயல்பில் மேற்கெதிர்ப்புக் கொள்கை கொண்டவனல்ல.

இரண்டாவது, இப்படியான கடும்போக்காளர்கள் ஆட்சிக்கு வரும்போது மேற்கானது தமது இனவாத எதிர்ப்புக் கொள்கைகளில் விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு, ஆட்சியாளர்களுடன் நட்புறவை பேண முயலுமே அன்றி, மனித உரிமைகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு பகை வளர்க்க முயலா.

இது வரலாற்றில் நாம் கண்ட உண்மை.

கடும்போக்கு ஆட்சியாளர்களால் ஒரு புறம் எமக்கு அழிவும் மறுபுறம் ஆதரவு கொடுப்பார் இல்லா நிலையும் ஏற்படுகின்றது. இரட்டிப்புப் பாதிப்பு.

இவர் சொல்வது போல் மேற்கெதிர்ப்பு ஆட்சியாளரைச் "சமாளிக்க" மேற்கு தமிழருக்கு ஆதரவு கொடுக்க... சிங்களம் இன்னும் சீனாவின் பக்கம் சாய .. சீனா இன்னும் நன்றாக ஆழமாக தன் அத்திவாரத்தை இலங்கையில் போட.... இப்படியாக மேற்கின் கொள்கை வகுப்பாளர்கள் முட்டாள் தனமாக‌ நடக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது சற்றுப் பேராசை தான்.

சரி, ஒரு அதீத நிலமை (Extreme situation) ஒன்றை கற்பனை செய்து பார்ப்போம். என்ன நடந்தாலும் பரவாயில்லை, தமிழினத்தை அழிப்பது தான் தன் வேலை என்றவாறு ஒரு சிங்களத்தலைவன் பதவிக்கு வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம்.சீனாவின் ஆதரவோடு இன அழிப்பை மேற்கொள்கின்றான். இந்தக் கட்டத்திலாவது மேற்கு நாட்டைப் பிரிக்க முன் வருமா ? நாட்டைப் பிரித்தால் சீன ஆதரவுச் சமன் பாட்டில் மாற்றம் வருமா? இல்லை. ஆகவே நாட்டைப் பிரிப்பதற்கான முயற்சி அக்கட்டத்திலும் நடக்கப் போவதில்லை.

ஆகவே கடும் போக்காளர்களால் எந்த நன்மையும் இல்லை என்பது தெளிவு.

மாறாக மேற்காதரவு ஆட்சியாளர்கள் மேற்கின் சொல் கேட்பவர்கள். மேற்கிற்கு நாம் சொல்ல‌ நினைக்கின்ற விசயங்கள் அவர்களிற்குரிய பாணியில் சொல்லப்பட வேண்டும். இதன் மூலம் மேற்கின் அழுத்தங்களை தோற்று விக்கலாம். இந்த மேற்கின் அழுத்தங்கள் வேலை செய்ய வேண்டும் என்றால் அதைக் கேட்கின்ற ஆட்சியாளர் இலங்கையில் இருக்க வேண்டும்.

மேற்கைக் கொண்டு வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்குரிய அரசியற் களம் இலங்கையில் இல்லை, மேற்கில் தான் இருக்கின்றது ! புலத்தில் தேர்தல், நாடு கடந்த அரசு என்பன இதற்குரிய வேலைத்திட்டங்கள். இது சம்பந்தமாக வழுதி தன் சிந்தனைகளை ஆழப் படுத்துதல் நன்று !!

ஊடகங்களிd; கருத்துத்திணிப்பு முற்றுகைக்குள்தான் நாம் வாழ்கின்றோம்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களிd; கருத்துத்திணிப்பு முற்றுகைக்குள்தான் நாம் வாழ்கின்றோம்.

" பக்கத்திலிருக்கின்ற இந்தியாவைத் தான் நாம் கருத்தில் எடுக்க வேண்டும்; தீமையோ நல்லதோ எதுவாய் இருந்தாலும் அங்கிருந்து தான் இனி வர வேண்டும்.

இப்போது இந்தியா தான் உலகம். சீனப் பூதத்திற்கு ஈடுகொடுக்க மேற்குலகம் ஒன்றாய் திரண்டு இந்தியாவுக்கு முண்டு கொடுப்பதால் - ஆகக் குறைந்தது அடுத்த 30 வருட காலத்திற்கு இந்தியா தான் உலகம்."

இந்த எடுகோள் (Assumption) எவ்வளவு தூரம் உண்மை ?

1. ஐரோப்பிய நாடுகளைப் போல இந்தியாவை சிறு சிறு நாடுகளாக உடைப்பதன் மூலம் வளமான ஆசிய பிராந்தியத்தை உருவாக்க முடியும் என சீனா நம்புகின்றது. இலங்கையில் அண்மையில் நடைபெற்ற மிகப்பெரும் மோதல்களைத்தொடர்ந்து மேற்குலகமும் அந்த நிலைப்பாட்டைத் தான் எடுத்துள்ளதாக தெரிகின்றது.

2. சோவியத்தின் வீழ்ச்சி தொடக்கம், யூகோஸ்லாவாக்கியாவின் உடைவு வரையிலும் அவர்கள் பயன்படுத்திக்கொண்ட உத்திகளைத்தான் ஆசிய பிராந்தியத்திலும் பயன்படுத்த முற்பட்டு வருகின்றனர்.http://noolaham.net/project/18/1761/1761.pdf )

3. இந்தியாவின் உடைவை மறைமுகமாக ஆதரிப்பதன் மூலம் தமக்கு சார்பான சில நாடுகளையாவது உருவாக்கிவிடுவது, அதன் பின் அங்கு கால்பதிப்பதன் மூலம் சீனாவை அச்சுறுத்துவது. அதனைத் தான் மேற்குலகம் மறைமுகமாக சாதிக்க முற்படுகின்றது. இந்தியாவைச் சுற்றி அதற்கு பாதகமான ஒரு புறச்சூழலை சீனா உருவாக்கி விட்டது.

4. இந்தியாவின் அரசியல் கலாசார உட்கட்டுமானங்களை நோக்கும் போது அது சுலபமானது என்ற முடிவுக்கே பல ஆய்வாளர்கள் வருகின்றனர். ஏனெனில் அங்கு காஷ்மீரிலும், நாகலாந்திலும் பிரிவினைக்கான உந்துதல்கள் உள்ளன. ஏற்கெனவே பிரிவினைக்கான போரை ஆரம்பித்து பின்னர் அடங்கிப்போன சீக்கிய மக்களின் அடிமனதிலும் விடுதலை வேட்கை உண்டு.

5. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அங்கு ஆட்சியில் இருப்பவர்கள் தமது அதிகார சுகத்திற்காக மத்திய அரசை நம்பி வாழ்ந்தாலும், தமிழ் மக்களிடம் ஒன்றுபட்ட இந்தியா என்ற நம்பிக்கையின் வலு குறைந்துவிட்டது.

6. இந்தியாவை பல நாடுகளாக உருவாக்குவதன் மூலம் வளமான ஆசியாவை உருவாக்க முடியும் என சீனா கருதுவதற்கு அப்பால் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் ஒரு வளமான எதிர்காலத்தை அது உருவாக்கும் என்பதே பெரும்பõலானவர்களின் கருத்தாக அமைந்திருந்தது.

முன்னால் சென்றவர்களின் கொள்கை வழியில் பின்னால் செல்ல மாட்டோம் என்பதை வெளிப்படையாக மக்களுக்குச் சொல்லி, அரசியல் செய்வதற்கு, அரசியல் அடித்தளம் இல்லாதவர்கள், புனைகதைகள் புனைவதையும், புழுதி அள்ளி வீசிப் புறணிபாடுவதையும் நிறுத்திவிட்டு, மக்களை அரசியல் அறிவுமயப்படுத்தி, தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, வெளிப்படையாக அரசியல் செய்வது அழகு, தேவையும் இருக்கின்றது.

"வட்டுக்கோட்டைத் தீர்மானம்" மீதும், நாடு தழுவிய 'தமிழர் பேரவை' என்ற அமைப்புக்கள் மீதும் நடாத்தப்படும் இந்த தேர்தல்கள் - தமிழரது சக்தியையும், வளத்தையும், நேரத்தையும், விடுதலை வேட்கையையும் விரயமாக்கும் செயல்.

இந்த எடுகோள் (Assumption) எவ்வளவு தூரம் உண்மை ?

a) வட்டுக்கோட்டைத் தீர்மானம்:

1.வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அத் தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது.

2.ஈழத்தமிழர்களுக்காக ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் இடத்தில் ஒரு பிரகடனம் செய்தனர்.

-- இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.

-- அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.

-- அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும்

3. கடந்த 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம், நாம் சந்தித்த அழிவுகள், செய்த தியாகங்கள், கொடுத்த விலைகள், இழந்து போன 200,000-ற்கும் மேற்பட்ட உயிர்கள் - எல்லாமே - 30 ஆண்டுகளுக்கு முன்னைய அந்த 'மக்கள் ஆணை'க்கு உரமூட்டின.

b) நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Government of Tamil Eelam)

1. தமிழ் மக்களது அரசியல் வேட்கையை உயிர்ப்போடு பேணித் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஓர் அரசியல் அமைப்பாகும். இது ஒரு புதுமையான எண்ணக் கருவாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசு (Provisional Transitional Government of Tamil Eelam) என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக தமிழீழத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும். இலங்கையின் அரசியலில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடருவதற்காக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது.

2. தமது தாயகத்தில் தமிழ் மக்கள் தமது அரசியல் வேட்கைகளையும் உரிமைககளையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்பொழுது எவ்வித வாய்ப்புகளும் இல்லை. ஸ்ரீலங்கா அரசு சட்ட அடிப்படையான தடைகள், இராணுவ ஆக்கிரமிப்பு, படுகொலை ஆகிவற்றின் ஊடாகத் தமிழ் மக்களது விடுதலை வேட்கையையும் உரிமைகளையும் ஒடுக்கி வருகின்றது.

3. http://govtamileelam.org/gov/

Edited by akootha

டி) நாடு கடந்த தமிழீழ அரசு (வுசயளெயெவழையெட புழஎநசnஅநவெ ழக வுயஅடை நுநடயஅ)

1. தமிழ் மக்களது அரசியல் வேட்கையை உயிர்ப்போடு பேணித் தமிழர் தேசியம்இ தாயகம்இ தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஓர் அரசியல் அமைப்பாகும். இது ஒரு புதுமையான எண்ணக் கருவாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசு (Pசழஎளைழையெட வுசயளெவைழையெட புழஎநசnஅநவெ ழக வுயஅடை நுநடயஅ) என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக தமிழீழத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும். இலங்கையின் அரசியலில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால்இ அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடருவதற்காக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது.

2. தமது தாயகத்தில் தமிழ் மக்கள் தமது அரசியல் வேட்கைகளையும் உரிமைககளையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்பொழுது எவ்வித வாய்ப்புகளும் இல்லை. ஸ்ரீலங்கா அரசு சட்ட அடிப்படையான தடைகள்இ இராணுவ ஆக்கிரமிப்புஇ படுகொலை ஆகிவற்றின் ஊடாகத் தமிழ் மக்களது விடுதலை வேட்கையையும் உரிமைகளையும் ஒடுக்கி வருகின்றது.

நாடு கடந்த அரசு தொடர்பாக வழுதி, குழுமத்திற்கு மாற்றுக்கருத்து இருப்பதாக தெரியவில்லை.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த அரசு தொடர்பாக வழுதி, குழுமத்திற்கு மாற்றுக்கருத்து இருப்பதாக தெரியவில்லை.

அப்ப இது என்ன கருத்து. :huh:

//"வட்டுக்கோட்டைத் தீர்மானம்" மீதும், நாடு தழுவிய 'தமிழர் பேரவை' என்ற அமைப்புக்கள் மீதும் நடாத்தப்படும் இந்த தேர்தல்கள் - தமிழரது சக்தியையும், வளத்தையும், நேரத்தையும், விடுதலை வேட்கையையும் விரயமாக்கும் செயல்.//

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த 2009மே 19க்கு பிறகு இப்படியான ஆரூடங்களும்,யோசனைகளும்,பிரேரணைகளும் நிரம்பியதாகவே தமிழ்

வாழ்வு அமைந்துள்ளது.

இவை எல்லாம் கவலையளிக்கக்கூடிய விதத்தில் செயல்திறன் குறைந்த சொற்களாகவே கடந்த எட்டுமாதங்களாக

வந்துகொண்டிருக்கின்றன.

மே19க'கு பிறகு பிரபாகரனின் ஆகர்சம் இன்னும் பலமடங்கு எமது மக்களிடம் சேர்ந்துள்ளது.

ஏனென்றால் கடந்த எட்டுமாதங்களில் நாம் காணும் கோமாளித்தனங்களும்,தலைவர்களின் திடீர் பரம்பலும், கேணைத்தனங்களும்

எமது மக்களை ரொம்ப களைப்பில் ஆழ்த்திவிட்டது.

இந்த உலகம் வைகாசி 19 வரை "புலிகளை அழிக்க வேண்டும்" என்பதற்காக மனித உரிமைகள்; ஜெனீவா போர்விதிகளை சிங்களம் மீறியும் மொனம் சாதித்தன.

பின்னர் மகிந்தாவை சீனாவிடம் இருந்து அல்லது சிறிலங்காவை சீனாவிடம் இருந்து பிரிக்க ஒரு வழி தேடின. பொன்சேகா மூலம் அந்த வழியை தேடியுள்ளன. தை 27 சொல்லும் முடிவை வைத்து அவை தம் நகர்வுகளை மேற்கொள்ளும்.

இதில் இந்த வளைவுகள் சுளிவுகளுக்கு இடையில் எம்மினத்தை விலை பேசாத தலைவர்கள் சாதுரியமாக சாணக்கியமாக உரிமைகளை பெறவேண்ண்டும்.

  • தொடங்கியவர்

6. இந்தியாவை பல நாடுகளாக உருவாக்குவதன் மூலம் வளமான ஆசியாவை உருவாக்க முடியும் என சீனா கருதுவதற்கு அப்பால் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் ஒரு வளமான எதிர்காலத்தை அது உருவாக்கும் என்பதே பெரும்பõலானவர்களின் கருத்தாக அமைந்திருந்தது.

கடந்த 30 வருட அனுபவங்களை ஆற அமர அலசினால் - Akootha கூறிய இந்த விடயம் முற்றிலும் உண்மையே.

ஈழத் தமிழரின் எதிர்காலமும் இதில்தான் தங்கியுள்ளது என்பது எனது கருத்தாகும்.

தெலுங்கானா - இந்தியாவின் உடைவு?

தெலுங்கானா அறிவிப்பால் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ள 10க்கும் மேற்பட்ட தனிமாநிலக் கோரிக்கை மற்றும் 2 தனி நாடு கோரிக்கையை இந்தியா எப்படி கையாளப் போகிறது?”

ராயலசீமா, மகாராஷ்ட்ரா, உத்திரப்பிரதேசம், புதுச்சேரி, வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த தனிமாநில நெருப்பு எரியத் துவங்கியுள்ளது. இரண்டு பகுதிகளில் தனிநாடு கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

தனி மாநிலம் உருவானால், தனி தலைநகர் உருவாகும். ஒரு மாநில தலைநகருக்குரிய அத்தனை வசதிகளும் ஏற்படுத்தப்படும். இதனால் உருவாகும் வேலைவாய்ப்பு, பணப்புழக்கம், உள் கட்டமைப்பு மேம்பாடுகள் போன்றவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரே எல்லை என்ற கோஷம் உணர்ச்சிகரமாக இருந்தாலும், அது வாழ்க்கை மேம்பட உதவப் போவதில்லை. நடைமுறையை யோசிக்க வேண்டும்.

http://www.telangana.com/

http://www.telangana.org/home.asp

ஃஃ"அப்ப இது என்ன கருத்து.

வட்டுக்கோட்டைத் தீர்மானம்" மீதும்இ நாடு தழுவிய 'தமிழர் பேரவை' என்ற அமைப்புக்கள் மீதும் நடாத்தப்படும் இந்த தேர்தல்கள் - தமிழரது சக்தியையும்இ வளத்தையும்இ நேரத்தையும்இ விடுதலை வேட்கையையும் விரயமாக்கும் செயல்.ஃஃ

நாடுகடந்த அரசு அரசு, வட்டுக்கோட்டை, நாடு தழுவிய தமிழர் பேரவை என மூன்று முயற்சிகள் இடம் பெறுகின்றன.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசு வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்குப் பதிவு போன்றவற்றிற்கு பெருமளவில் பணவிரயமமோ நேரவிரயமோ இருப்பதாகத் தெரியவில்லை.மக்களிடம் அது தொடர்பாக பணம் சேகரித்ததாகத் தகவல் இல்லை.வெறுமனே வாக்குச் சாவடிகளுக்கு போய் உங்கள் கருத்தைப் பதிவு செய்வதற்கு விருப்பமில்லாதவர்களுக்கு எதற்குத் தனிநாடு தேவை. பிடிக்காவிட்டால் எதிர்க் கருத்துக்களையாவது பதிவு செய்வதற்கு முயலலாமே. அதை விடுத்து எதற்கும் குற்றம் சொல்வது விவேகமாகாது.இந்த வாக்குப் பதிவுகள் சர்வதேசத்திற்கு ஒரு நிலையான உறுதியான முடிவை நீதியான சுதந்திரமான தேர்தல் மூலம் சொல்வதற்கு உதவும்.தாயக மக்கள் 1977 இற்குப் பிறகு இப்படியான சந்தர்ப்பம் ஏற்படவேயில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.