Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தலில் தமிழர்கள் யார் பக்கம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் தமிழர்கள் யார் பக்கம்?

நாம் இன்று மிக இன்று ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு வரும் சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை ஈழத்தமிழர்கள் எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றார்கள்?சிங்களம் எம்மை மிகவும் ஒரு இக்கட்டான நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கிறது.தமிழர்களை ஈவிரக்கமற்று அழிப்பதற்கு உத்தரவு வழங்கிய ராஜபக்ச ஒரு புறமும் உத்தரவை நிறைவேற்றிய பொன்சேகா மறு புறமுமாக தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.தமிழர்களை அழித்து அவர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்த? வெற்றியை அரசியல் வெற்றியாக்க மகிந்த ஜனாதிபதித் தேர்தலை முன் கூட்டியே அறிவித்தார்.சிங்களவரின் கதாநாயகனாக நவீன துட்ட கைமுனுவாக தமிழரை வென்ற எனக்கு உங்கள் வாக்குகளைப் போடுங்கள் என்று இனவெறிப் பிரச்சாரம் செய்தார்.அவருக்கு நிகரான ஒரு வேட்பாளர் பாரம்பரிய கட்சியான ஐதேகவிற்கு கிடைக்கவில்லை.யுத்தவெற்றியைப் பங்கு போடக்கூடிய தமிழர்களை அழித்த சரத் பொன்சேகாவே அவர்களுக்கு தற்போதைய நிலையில் நவீன துட்ட கைமுனுவாக காட்சியளித்தார்.எந்த அரசியல் கட்சியையும் சாராத அரசியல் சாயம் எதுவுமில்லாத பொன்சேகா திடீரென்று எதிர்க் கட்சிகளின் அரச தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.அதாவது தமிழர்களை அழிப்பதற்கு ஒன்றாக ஒற்றுமையாக நின்றவர்கள் அந்த வெற்றிக்கு தாமே காரணம் என்று எதிரும் புதிருமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்.சிங்களவர்களுக்கு இந்த ஒரு விடயத்தைத் தவிர வேறு எதனையும் இரு வேட்பாளர்களும் முன்னிறுத்தப் போவதில்லை.

மேற் கூறிய காரணங்களால் சிங்கள வாக்குகள் சம பலமாக இரு தரப்புக்கும் பிரிந்துள்ள நிலையில் தமிழர்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்குகளாகக் கருதப்படுகிறது.ஆனால் தமிழரின் நிலை மிகவும் இக்கட்டான நிலையிலுள்ளது.இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

1.சிறிலங்காவின் அதிபருக்கான தேர்தலில் தமிழர் தேசத்திற்கு என்ன கரிசனை.

2.இருவரும் தமிழின அழிப்பில் முன்னின்று செயல்பட்டவர்கள்.

3.இருவரும் போர்க் குற்றங்களுக்காக சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிய தமிழர்கள் எப்படி அவர்களில் ஒருவரைத் தெரிவு செய்யலாம்.அப்படிச் செய்யும் போது ஒருவர் தமிழர்களால் மன்னிக்கப் பட்டார் அல்லது போர்க் குற்றவாளி அல்ல தீர்மானிக்கப் படக் கூடியவராகிறாரா?

4.அவ்வாறு தமிழர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கும் பட்சத்தில் சிறிலங்காவின் இறைமையை ஏற்றுக் கொண்டு சிறிலங்காவின் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதாக அமையாதா?

5.தேர்தலில் பங்கு பற்றும் பட்சத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலை தமிழ்மக்கள் புறக்கணிக்கவில்லை புலிகளே ஆயுத முனையில் பயமுறுத்தி வாக்களிக்காமல் தடுத்தார்கள் என்ற சிறிலங்காவினதும் அதற்கு ஒத்தூதிய சர்வதேசத்தினதும் குற்றச் சாட்டுக்கள் உண்மையானது என தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?

6.சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கலாமா?

7.தேர்தலைப் புறக்கணிக்கலாமா?

8.தேர்தலைப் புறக்கணித்தாலும் ஒட்டுக் குழுக்கள் கள்ள வாக்குகளைப் போட நாமே வழி செய்து கொடுத்து அதன் மூலம்

மேற்கூறிய 4வது காரணத்திற்கு நம்மை அறியாமலே காரணமாகப் போகிறோமா?

இப்படிப் பல காரணங்கள் தமிழ்மக்களைக் குழப்பி இருக்கின்றன.

சிவாஜிலிங்கத்தின் தன்னிச்சையான முடிவைத் தமிழ் மக்களில் பலர் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள்.தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணித்தாலோ அல்லது ஒட்டு மொத்தமாக சிவாஜிலிங்கத்தை ஆதரித்தாலோ மகி;ந்தவின் வெற்றி உறுதிப்படுத்தப்படும்.முடிவு எடுப்பதில் ததேகூட்டமைப்பு எடுத்த தாமதம் சிவாஜிலிங்கம் காரணமாக அமைந்ததா? அல்லது வேறேதும் காரணங்கள் இருக்குமா?தன்னிச்சையாக களமிறங்கிய சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதால் பலனேதும் இருக்குமா?

துமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று வர்ணித்த பொன்சேகா ததேகூட்டமைப்பைப் பற்றியும் அப்படித்தான் நினைக்கிறாரா?

மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வருவதே தமிழருக்கு நல்லது.மேற்குலகுடன் முரண்பட்டு நிற்கும் மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்திலே ஏற்றுவதற்கு மேற்குலகு துடித்துக் கொண்டு இருக்கிறது. சுரத் ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் கிடப்பிலே போட்டு விடும் என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.கடந்த தேர்தலிலும் மகிந்த வெல்வதை மேற்குலகம் விரும்பவில்லைத் தான். ஆனால் மகிநத வென்றவுடன் மகிந்தவுடன் சீனா இந்தியா பாகிஸ்தான் ஈரான் ரஸ்சியா போன்ற நாடுகள் கைகோத்த பொழதும் தாங்களும் சேர்ந்து நின்று கை கொடுக்கவில்லையா? சரி சரத் வென்ற பிறகு சீனா பக்கம் சாய மாட்டார்என்பது என்ன நிச்சயம்.இத்தனைக்கும் சரத் மேற்குலகம் சார்பான ஐதேக வைச் சேர்ந்தவரும் அல்ல. ஏந்தக் கட்சியையும் சாராதவர்.அப்பிடியே மகிந்த வென்றாலும் சர்வதேசம் மகிந்தவோடு ஒட்டி உறவாடாமல் இருக்கப் போகிறதா?எல்லோரும் தங்கள் நலம் சார்ந்து சிந்திக்கையில் தமிழர்களும் தங்கள் நலன் சார்ந்து சிந்திப்பதில் என்ன தவறு.தமிழர்கள் தங்கள் அபிலாசைகளை 1977 இல் தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள். அதன் பிறகும் பல முறை அதனை உறுதி செய்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கவனிக்கத் தவறிய சர்வ தேச அரசுகள் இந்தத் தேர்தலையும் தமிழர் நலன் சார்ந்து நோக்க மாட்டார்கள்.ஆகவே தமிழர்கள் முடிவை தெளிவாகவே தெரிவிப்பார்கள். அது தேர்தல் பறக்கணிப்பாக இருக்கலாம் .அல்லது மகிந்தவை வீழ்த்துவதாக இருக்கலாம்.மகிந்தவை வீழ்த்தினால் குறைந்த பட்சம் ஒட்டுக் குழுக்களின் தொல்லையாவது குறையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் |நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன என்று|ஒட்டுக் குழுக்கள் மறுநாளே சரத்திடம் வந்து ஒட்டிக் கொள்வார்கள்;.ஆனால் புலிகள் இல்லாத? இடத்தில் ஒட்டுக் குழுக்கள் வேண்டாத விருந்தாளிகளே!நாங்களும் இனிச் சூழ்ச்சிகள் செய்வோம். சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்வோம்.

தமிழர்கள் தங்கள் அபிலாசைகளை 1977 இல் தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள்

சரத் பொன்சேகா வெற்றி பெற்றால், அவன் இந்தியாவின் அழகுராணி ஜனாதிபதி பிரதீபா பட்டேல் போல காட்சிபொருளாக மாற்றப்படுவான். யூ.என்.பி. ரனில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சிக்கு வருவதாகவே திட்டம் என்பது எனது கருத்து. அமெரிக்க அரசு ரனிலுக்கு ஆதரவே தவிர, தனது நிர்ப்பந்தத்தால் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தப்ப தன்னுடன் ஒத்துளைக்க முன்வந்திருக்கும் சரத்துக்கு அல்ல. மகிந்தவின் போர் வெற்றியையும் மீறி, ரனிலை ஆட்சிக்கு கொண்டுவர சரத் ஏணி மட்டுமே.

ரனில் பிரதமராக இருந்தபோது அவரின் ஆட்சி சந்திரிக்காவால் கலைக்கப்பட்டது. அது ஏன் கலைக்கப்பட்டது? எப்போது கலைக்கப்பட்டது என்பதை பாருங்கள். விடுதலைப்புலிகளுக்கு இடைக்கால நிருவாகத்தை அவர்கள் கேட்டுக்கொண்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு கையளிக்க இணங்கிய ஒரு சில நாட்களில், அந்த காரணத்தை காட்டி சந்திரிக்காவால் கலைக்கப்பட்டது. அடுத்து வந்த ஜனாதிபதி தேர்தலை தமிழ்மக்கள் புறக்கணித்து அதன்மூலம் மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்று இன்று இந்த அவலநிலை உருவாக காரணமானது. விடுதலைப்புலிகளின் இடைக்கால நிருவாகம் உருவாகியிருந்தால் இந்த அழிவு தவிர்க்கப்பட்டிருக்க கூடுமல்லவா?

மேற்குலக நாடுகள் தமது திட்டங்களை மாற்று திட்டங்களால் தகர்ப்பவர்கள் மீது பரிதாபம் கொள்வதில்லை. இன்று தமிழ்மக்களை மேற்குலக நாடுகள் பெருமளவில் கைவிட்டு இருப்பதற்கு ஒரு காரணம் ரனிலை நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய செய்ததும் ஆகும். மீண்டும் இதை நாம் செய்துவிட்டு மேற்குலகின் ஆதரவை எதிர்பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். மகிந்த சீன, ஈரான், இந்திய எடுபிடியாக வேலை செய்வான் என்பது மேற்குலகு அறிந்ததே. அது மேற்குலக நாடுகளுக்கு மிகவும் பாதகமானது. அந்த பாதகத்தை மேற்குலக நாடுகளுக்கு செய்து அவர்களின் பரிதாபத்தை நாம் பெற்று கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ஒருமுறை முள்ளிவாய்க்காலாக இம்முறை யாழ்ப்பாணத்தில் முடியலாம்.

மறுவளமாக பார்த்தால், மேற்குலக நாடுகள் தமது திட்டங்களுடன், அவற்றை தெளிவாக புரிந்து கொண்டு, மேற்குலக நாடுகளின் நலன்களையும் கருத்தில் எடுத்து செயற்படும் நாடுகளையும் மக்களையும் மேற்குலகு கைவிட்டதில்லை. ஜப்பான், சிங்கப்பூர், இஸ்ரேல், தாய்வான் என்று இந்த நாடுகளை நிரல்படுத்த முடிகிறது. முடிவை எமது மக்களும், தலைவர்களும் தான் எடுக்க வேண்டும். சம்பதன் சரியான முறையில் சிந்திப்பதாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

[தமிழர்கள் தங்கள் அபிலாசைகளை 1977 இல் தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள்

அப்போது யுத்தம், அவலம் எல்லாம் என்னவென்று தெரியாமல் கூட்டணியின் உசுப்பலினால் வாக்களித்தார்கள். தற்போது நிறைய நொந்து வெந்து போயுள்ளனர். எனவே இன்னுமொருமுறை தங்கள் அபிலாசைகளை மறு பரிசீலனை செய்யச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எப்படியும் தெரிவிப்பார்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.ஒரு கணவனும் மனைவியும் மனைவியின் சகோதரனும் காட்டு வழியே சென்றார்களாம்.தாகமெடுக்கவே அவர்களைக் காத்திருக்குமாறு சொல்லி விட்டு கணவன் தண்ணீர் தேடிச் சென்றான்.சென்ற இடத்தில் காட்டுவாசிகள் கணவனின் தலையை வெட்டி தங்கள் குல தெய்வத்திற்கு பலியிட்டு விட்டார்கள்;.நெடுநேரமாகியும் கணவன் வராதிருக்கவே அவனைத் Nடி வருமாறு தன் சகோதரனை அனுப்பினாள்.காட்டுவாசிகள் சகோதரனையும் கழுத்தை வெட்டி பலி கொடுத்து விட்டார்கள் சகோதரனும் வராதிருக்கவே.அவர்கள் இருவரையும் தேடிச் சென்றாள்.அங்கே அவர்களின் பிணங்களைக் கண்டு அழுது புலம்பினாள்.பக்கத்தில் இருந்த சாமியிடம் இருந்த கத்தியை எடுத்து தன் தலையை வெட்ட எத்தனித்தாள்.கடவுள் அவள் முன் தோன்றி அவர்களுக்கு உயிர்கொடுப்பதாகக் கூறி தலையையும் முண்டத்தையும் பொருத்தச் சொன்னார்.அவள் பதட்டத்தில் கணவனின் தலையை சகோதரனின் முண்டத்திலும்.சகோதரனின் தலையை கணவனின் முண்டத்திலும் பொருத்தி விட்டாள்.இப்போது யார் கணவன்?யார் சகோதரன்?

இதே குழப்பம் ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்களுக்கு இருக்கிறது.யாரைத் தெரிவு செய்தாலும் பிரச்சனை தீராது கூடிக்கொண்டே போகும் என்பதுதான் உண்மை.தமிழரை திரிசங்கு நிலையில் நிறுத்திய இந்தியாவையும் சர்வதேசத்தையும் நினைத்தால் பற்றிக் கொண்டு வருகிறது.

தமிழர்கள் யார்பக்கம் என்பது தெளிவு. எனது நண்பர் ஒருவர் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்தவர். காவலரண்களில் நிற்கும் இராணுவத்தினர் மக்களோடு சிநேகமாக உரையாடுகிறார்களாம். பொன்சேகாவிற்கு வாக்களிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொள்கிறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே குழப்பம் ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்களுக்கு இருக்கிறது.யாரைத் தெரிவு செய்தாலும் பிரச்சனை தீராது கூடிக்கொண்டே போகும் என்பதுதான் உண்மை.தமிழரை திரிசங்கு நிலையில் நிறுத்திய இந்தியாவையும் சர்வதேசத்தையும் நினைத்தால் பற்றிக் கொண்டு வருகிறது.

எமது பிரச்சினைகளை குறைந்த பாதிப்புகளுடன், அல்லது பாதிப்புகள் இல்லாமல் தீர்க்கமுடியாத எமது கையாலாகா நிலைக்கு, இந்தியாவையும், மேற்குநாடுகளையும் குறை சொல்வது எமக்கு பயன்தராது. சிறிலங்காவிலும் பார்க்க இனத்துவேசம் கூடிய நாடான மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் இழப்புகள் இன்றி பிரிந்த வரலாற்றையாவது பார்த்து நமது தலைவர்கள் சிந்தனை மாற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

தேர்தலில் தமிழர்கள் யார் பக்கம்?

ராஜபக்ஸ - ஐந்தெழுத்து,

சிங்களம் - ஐந்தெழுத்து.loll-out.gif

தமிழ் - மூன்றெழுத்து,

ரணில் - மூன்றெழுத்து.

சரத் - மூன்றெழுத்து,MKOaCInu54005924.gif

இப்போ.... தெரியுமே..... தமிழர் யார் பக்கம் என்று. :):lol:

.

.

ராஜபக்ஸ - ஐந்தெழுத்து,

சிங்களம் - ஐந்தெழுத்து.loll-out.gif

தமிழ் - மூன்றெழுத்து,

ரணில் - மூன்றெழுத்து.

சரத் - மூன்றெழுத்து,MKOaCInu54005924.gif

இப்போ.... தெரியுமே..... தமிழர் யார் பக்கம் என்று. :):lol:

.

கருணாநிதியையும் மிஞ்சிவிட்டீரையா வார்த்தையில். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

ராஜபக்ஸ - ஐந்தெழுத்து,

சிங்களம் - ஐந்தெழுத்து.loll-out.gif

தமிழ் - மூன்றெழுத்து,

ரணில் - மூன்றெழுத்து.

சரத் - மூன்றெழுத்து,MKOaCInu54005924.gif

இப்போ.... தெரியுமே..... தமிழர் யார் பக்கம் என்று. :lol: :lol:

.

எப்படி தமிழ்சிறி அண்ணா இப்படி யோசிக்கிறிங்க‌ :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிக்கு கலைஞர் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப் போகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.