Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவுக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச் செய்தது

Featured Replies

சிறீலங்காவுக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச் செய்தது

திகதி: 16.02.2010 // தமிழீழம்

சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சிறீலங்காவின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை நன்கு ஆராய்ந்த பின்னரே தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் இந்த விடயத்தில் சிறீலங்கா அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை தற்காலிகமானது என்றும் மனித உரிமை குறித்த விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் திருப்திகரமான விதத்தில் செயற்படும் பட்சத்தில் தமது நிலை மீளாய்வு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை பிரசல்சில் உள்ள சிறீலங்காத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார். தான் இந்தத் தகவலை கொழும்புக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் இது குறித்த அரசாங்கத்தின் பதில் நாளைய தினம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3576&cntnt01origid=52&cntnt01returnid=51

தற்காலிகமாக

சிரிலங்கன் அரசு எவளவு நல்லவங்கள் எப்படி அடிச்சாலும் தாங்கிறாங்கப்பா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருந்த சொல்லி ஆறுமாதம் தவனை கொடுத்து இருகிறாங்கள், திருந்தாட்டி நிரந்தரம் ஆகும், ஆனால் தொகை பில்லியன் கணக்காம் நல்லா யோசிப்பினம் என்று நினைக்கிறன். இது புலம்பெயர் தமிழர் செய்த போராட்டத்துக்கு கிடைச்ச முதல் வெற்றி.

மக்களின் வரிப்பணத்தில் அமைச்சர்கள் ஐரோப்பிய பயணத்தை மேற்கொள்வார்கள்:இலங்கை குடிமகனின் தலைக்கு கடன் கூடிக்கொண்டே போகும்.

திருந்த சொல்லி ஆறுமாதம் தவனை கொடுத்து இருகிறாங்கள், திருந்தாட்டி நிரந்தரம் ஆகும், ஆனால் தொகை பில்லியன் கணக்காம் நல்லா யோசிப்பினம் என்று நினைக்கிறன். இது புலம்பெயர் தமிழர் செய்த போராட்டத்துக்கு கிடைச்ச முதல் வெற்றி.

உலக நாடுகள் தமிழனுக்கு ஆதரவாய் ஒண்டும் செய்யாது எண்டுறீயள்... இப்ப போராட்டத்துக்கு வெற்றி எண்டுறீயள்...?? ஏன் இந்த மாறாட்டம்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் அடக்கியொடுக்கப்பட்டு இலங்கையில் பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கத்தின்கீழ் எவ்வித அதிகாரப் பங்களிப்புகளோ, பகிர்வுகளோ இல்லாமல் தமிழினம் வாழவேண்டிய நிலைமைக்குள் கொண்டுவரப்பட்டபின்னர் உலக நாடுகள் எதைச் செய்தாலும் சிங்களம் இனி அதைக் கருத்திலெடுக்கப் போவதில்லை.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலாலும் தமிழர்களின் பிரதிநிதிகளால் அரச இயந்திரத்தைச் சேர்ந்து இயங்க வைக்கக்கூடிய அவசியம் ஏற்படப்போவதில்லை. நூற்றுக்கு நூறு வீத வாக்குகளைத் தமிழர் தரப்பு ஒரே குடையின்கீழ் பெற்றுக்கொண்டாலும் மிகச்சிறிய சிறுபான்மையினரான தமிழரால் அரசநிர்வாகத்தில் ஒற்றையாட்சியமைப்பின் கீழ் எவ்வித பங்களிப்பையும் செய்யமுடியாது. அதற்குரிய தேவை ஏற்படப்போவதில்லை.

இதையெல்லாம எப்போதோ நன்கு ஆராய்ந்த பிறகுதான் தமிழர் தரப்பு தன்னிடமுள்ள ஒரே தகுதியான தமிழர் தாயக அடிப்படையிலமைந்த தேசிய இன அந்தஸ்தை அடையப் பாடுபட்டது. இன்று எல்லாமிழந்து எமது தாயகத்தையும் படிப்படியாகப் பறிகொடுத்து சிறுபான்மையினராகக் கரைந்துபோகும் நிலையில் நாம் நிற்கிறோம்.

அந்நிய சக்திகள் தமிழரின் உரிமைகளை வழங்கும்படி எவ்வகையான அரசியல் பொருளாதார அழுத்தங்களைக் கொடுத்தாலும் தேசிய விடுதலைப் போராட்டம் என்ற உள்ளிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு நிகராக எதையும் அச்சக்திகளால் கொடுக்க முடியாது. சிங்களம் அதை இன்று வெற்றிகொண்டு விட்டது.

இனிப்பொருளாதாரத் தடைகள் அதற்கு ஒரு தூசு. உயர்ந்த இராஜதந்திரமட்டத்தில் அவை வெற்றிகொள்ளப்பட்டுவிடும். போதாததற்கு இன்றைய உலக பொருளாதாரத் தேக்க நிலை காலகெதியில் இத்தகைய ஜிஎஸ்பி வரிச்சலுகைகளை மீண்டும் கொண்டுவந்து இலங்கையின் ஏற்றுமதிகளை உள்வாங்கவேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தலாம். 2012 இல் வரப் போகும் ஒலிம்பிக் இலங்கையை மீண்டும் அழைக்கவேண்டிய கட்டாயத்தை பிரிட்டனுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் கொண்டுவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதனால் தமிழர்கள் இந்த வரிச்சலுகை இரத்தையிட்டுத் தற்காலிகமாக மகிழச்சியடைந்தாலும், அது இலங்கையில் அரசியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குரியதே.

  • கருத்துக்கள உறவுகள்

திருந்த சொல்லி ஆறுமாதம் தவனை கொடுத்து இருகிறாங்கள், திருந்தாட்டி நிரந்தரம் ஆகும், ஆனால் தொகை பில்லியன் கணக்காம் நல்லா யோசிப்பினம் என்று நினைக்கிறன். இது புலம்பெயர் தமிழர் செய்த போராட்டத்துக்கு கிடைச்ச முதல் வெற்றி.

இதனைப் புலம்பெயர்ந்த தமிழர்களது போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியென்பது பொருத்தமற்றது. ஏனெனில் மிகக் கொடூரமான இனப்படுகொலை நடந்தபோது வீதி வீதியாகத் தமிழர்கள் நின்று கூவியும் குழறியழுதும் அவர்களது செவிகளில் விழுந்தபோதும், சாரளங்கள் வழியாக ஒரு மெத்தனப் பார்வையோடு விலகியே நின்றார்கள். புலிகள் மீது தடையைப்போட்டு தமிழினத்தினது அழிவுக்கு ஒத்தூதி ஒரு நிரந்தமான பிரியாத சந்தையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டார்கள். ஒரு கதைக்காகச் சிறிலங்கா மேற்கை அனுசரித்து சீனாவை ஓரங்கட்டியவாறு, ஒரு பெயர்பட்டியலைக் கொடுத்து இவர்களை பிடித்து தமக்குத்தேவை ஒப்படைக்குமாறு கேட்டால் அதையும் இந்த மேற்குலகு செய்யும்.ஆனால் சடுதியாக மாறிவரும் அரசியல் நகர்வுகளில் சிறிலங்கா மேற்கை ஓரங்கட்டத் தொடங்கியதன் விளைவே இது. தமது நலன்பேணப்படுமாயின் தமிழர்களென்ன சிங்களவர்களைக் கொன்றாலும் அனுமதிக்கும் மேற்கின் சனநாயகம் என்பது உலகறிந்த ரகசியம்.

சதாமை வளர்த்துவிட்டதும் இவர்களே. அழித்ததும் இவர்களே. இவர்களது மனித உரிமையென்பது தமது நலன்பேணும் நுகத்தடியேயன்றி வேறில்லை. இவர்கள் சிறிலங்காவை தமது வழிக்குக் கொண்டுவர எடுக்கும் முதல் நகர்வே இது. ரஸ்யா-சீனா-ஈரான் (இந்த வளையத்தை இந்தியா பெரிதாக நோக்காது ஏனெனில் அதனது நட்புச் சக்தியாக உள்ள ரஸ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்த நடைமுறைகள் கரணமாக.. ) என்ற இணைப்புப் புள்ளியில் நடுவிலே இலங்கை காலாறிச்செல்லப் பயன்பட்டால் போதும் என்பதோடு, தமக்கான சந்தை நலனும் இருந்தால் சரியென்பதே இந்த முக்கூட்டு அணியின் நிலை. இதில் வடவர்கள் நிலைதான் பரிதாபத்திற்குரியதாய் மாறக்கூடும்.சிங்களத்தை நம்பி ஏமாந்தாலும் நாயிலும் கீழாகச் சிங்களம் அவமதித்தாலும் இவர்கள் அலைந்து கொண்டே திரிவார்கள். இவர்களுக்குத் தற்போது கிடைத்துள்ள துருப்புச் சீட்டாகத் த.தே.கூ. ஆனால் மேற்கானது, இனியும் இந்தியாவை நம்புவதில் பயனில்லை என்று உணரத்தலைப்பட்டதன் விளைவாகப் புதிய நகர்வை மேற்கொள்ள எத்தனிப்பதாகவே இந்த விடயம் அமைகிறது. இதில் தமிழருக்கான நலன் என்பதைவிட தமது நலனே முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவேளை தமது கையை மீறி முழுத்தமிழினமும் மேற்கிடம் கைகோர்த்து தம்மையும் ஒதுக்கிவிடலாம் என்ற அச்ச உணர்வே இந்தியா அப்பப்போவிடும் அறிக்கைகளாகும். அதனால் ஒன்றினைந்த வட.கிழக்கில் தமிழர்கள் பலம் பெறுவதைக் கூட இந்தியா விரும்பவில்லை என்பதையே தம்மால் இணைக்கப்பட்டதைப் பிரித்தபோது பேசாமிலிருந்து ஆசி வழங்கினார்கள்.

தமிழினம் இனியும் இந்தியாவோடு தொடர்ந்து சமரசம் செய்யுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை ஏனெனில் தமது உறவுகளை, தமது பெற்றோரை, அவயவங்களை இளந்தோரை, தாயக மண்ணுக்காககத் தம்மை ஈந்தோரை என்று நீண்டு செல்லும் பட்டியலில் உள்ள இவர்களைப் பார்க்கும் அடுத்தலைமுறை இந்தியாவினது செயல்களை வேடிக்கை பார்க்குமா போன்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது. தமிழினம் தனது சக்திக்கு மீறிய அர்ப்பணிப்பினைக் காலத்துக்குக் காலம் செய்தபோதும் அது விடியலைக்காணாத நிலையே தொடர்கிறது. ஒல்லாந்தரது வருகைக் காலம் முதல் கடந்து வந்த வரலாற்றுக் காலங்களில், தமிழினம் வீச்சோடு எழுந்து போராடியதேயன்றி வாழாதிருக்கவில்லை. அன்று தாயகம் என்ற தளமே இருந்தது. ஆனால் இன்று பல்வேறு நாடுகளிலும் எமது இனம் பல்வேறு புலமையோடு வளர்கிறது. எனவே இளையோரிடையான தாயகப்பற்று கணிசமான அளவில் வேரோடி உள்ள நிலையில் தமிழினத்தினது விடுதலை வேட்கையை யாரும் இலகுவில் விலைபேசுதல் சாத்தியமா?

Edited by nochchi

நீங்கள் சொல்வது மிகச்சரி தயா

மேற்கின் உணமையான நிலைப்பாட்டை புரிந்துள்ளீர்கள். மேற்கைப் பொறுத்தவரை எங்கள் இழப்புக்கள் போராட்டங்கள் ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு தேவை எங்களால் தங்கள் சனநாயக மனிதவுரிமை முகமூடி கிளியக்கூடது என்பதுதான்.

தாங்கள் கொடுக்கும் ஒரு வரிச்சலுகையையே எங்கள் இழப்பின்போது கூட நிப்பாட்டாதவர்கள் சிங்களம் சீனச்சார்பு என்றவுடன் நிறுத்த முடிவெடுக்கிறார்கள் என்றால் எங்களுக்கு எபோதாவது நீதி தருவார்கள் என்று நினைப்பது விரயம்.

இன்னமொன்று மேற்கின் பார்வையில் நாங்கள் ஒரு பொருட்டே அல்ல. அவர்களுக்கு எங்களால் ஆவதுக்கு ஒன்றுமே இல்லை. எங்களை நம்பி இந்தாவுடன் பகைப்பார்கள் என்று யாரும் நினைத்தால் அனுதாபங்கள்.

உலக நாடுகளின் பார்வையில் எங்களின் கதை முடிந்துபோன ஒரு இடியம். நாங்கள்தான் ஏதோ உலகமே எங்களை பார்ப்பதாகவும் நீதி செய்ய முயல்வதாகவும் நினைக்கின்றோம். உண்மை அதுவல்ல. நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.