Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா.சம்பந்தனுக்கும் கஜேந்திரனுக்கும் இடையில் நடந்தது என்ன...

Featured Replies

திருகோணமலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் ஒரு முயற்சியாக அரசு சார்பு சக்திகள் தமிழ் சுயேட்சைக் குளுக்களை களமிறக்கியுள்ளன; இதற்கு துணைபோவது போல அகில இலங்கை தமிழ் காங்ரஸ் திருகோணமலையில் போட்டியிடுவது அமைந்துள்ளதென்று இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சம்மந்தனின் வாசல் தலத்தில் மாவட்ட தமிழரசு கட்சி ஆதரவாளர்கள்,நிர்வாகிகள் ஆகியோரின் கூட்டம் ஒன்று நடைபெற்றது; திருமலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்னசிங்கம் தலைமை வகித்தார்.

திருமலையில் தமிழரசுக்கட்சியை பலமற்றதாகக் வேண்டும்,சம்பந்தனை தோற்கடிக்க வேண்டும் என்ற அட்டவணையுடன் அரசு சக்திகள் தீவிரமாக செயற்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது பற்றி ஆராயப்பட்ட ஒரு கூட்டத்தில் தமிழ் காங்ரஸ் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவருடன் வந்த வேறு சிலரும் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பற்றி முதலில் முடிவு செய்யப்பட்டது,அதனையடுத்து தன்னுடன் வந்தவர்களை விட்டு விட்டு கஜேந்திரகுமார் புறப்பட்டு சென்றுவிட்டார்;

அவருடன் வந்தவர்கள் வவுனியாவில் சிற்றம்பலத்தை வேட்பாளராக போடுவீர்களா என முதலில் கேட்டனர் சிற்றம்பலத்தை நியமிக்க தாராளமாக தயார் என கூறினோம்.யாழ்பாண மாவட்டத்திற்கு இரு இடங்களும் திருகோணமலையில் ஒரு இடமும் தருவீர்களா என்று அவர்கள் கேட்டார்கள் ஆம் என்று சொன்னோம்.வருகிறோம் என்று கூறிச் சென்றவர்கள் வரவில்லை மறுநாளும் வரவில்லை; அதன் பின் தமிழ் காங்ரஸ், தமிழ் கூட்டமைப்புடன் பேசவில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நியமனம் மறுக்கப்படவில்லை.அவர் போட்டியிட

மாட்டார் என சொல்லப்பட்டது.அவர்கள் பேச்சை முறித்துக் கொண்டார்கள்.

சில அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம்

;புலம்பெயர் தமிழ் சமூகத்தில் பெரும்பாலானோர் கடும்போக்கை கடைப்பிடிப்பவர்கள் அல்லர் உறிதியானதும் விமோசனம் தரக்கூடியதும் நடைமுறை படுத்தக் கூடியதுமான ஒரு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதுதான் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானோரின் விருப்பம் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கஜேந்திரன் அவர்கள் எமக்கு அவரின் விளக்கம் அனுப்பப்படின் பிரசுரிக்கப்படும்.

http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=195:2010-02-28-05-53-32&catid=34:2010-02-09-12-34-07&Itemid=53

  • கருத்துக்கள உறவுகள்

:D என்ன தாரக்கி,

இறுதியில் தினமுரசுக்காரனின் பேச்சை நம்புமளவிற்கு உங்கள் பத்திரிக்காதர்மம் வந்துவிட்டதா?? எப்போதிருந்து நீங்கள் தினமுரசு சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை என்று நம்பத் தொடங்கினீர்கள்??

உங்களுக்கு செய்தி வறட்சி ஏற்பட்டு விட்டது அப்படித்தானே?? சம்பந்தனை நல்லவர் என்று காட்டுவதற்காக நீங்கள் படும் பாடும், எடுக்கும் செய்தி மூலங்களும் அபாரம். வாழ்த்துக்கள், தொடர்ந்து செயல்படுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது திருமலையைப் போலத்தான் கிள்நொச்சியும்,யாழ்ப்பாணமும்.

எங்கும் பிரதிநிதிதத்துவம் பறிபோகும்நிலை.

:D என்ன தாரக்கி,

இறுதியில் தினமுரசுக்காரனின் பேச்சை நம்புமளவிற்கு உங்கள் பத்திரிக்காதர்மம் வந்துவிட்டதா?? எப்போதிருந்து நீங்கள் தினமுரசு சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை என்று நம்பத் தொடங்கினீர்கள்??

என்ன புதுசா கதை சொல்லுறீயள்.?

தினமுரசம் அவரின் சொந்த இணைய இதழ் இல்லையா.? நான் எல்லாம் அப்படித்தானே நம்பி இருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய தாரக்கி,

சம்பதரை அழிக்க கண்கனம் கட்டி நிற்க்கும் யாழ்ப்பாண மைய வாதிகளின் குடும்ப வாரிசு தலைமையும் கிழக்கு மாகாண தமிழர் நலன்களை கபளீகரம் செய்ய கண்கனம் கட்டி நிற்க்கும் ராஜபக்ச குடும்ப வாரீசுகளும் திருகோணமலையில் கைகோர்த்து நிற்பதை அம்பலப் படுத்தும் கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி. தோல்வியாவது எங்கள் கண்களைத் திறக்கட்டும். எங்கள் எங்கள் மனசுகளில் எஞ்சியிருக்கும் யாழ்ப்பாண மையவாத அழுக்கை அகற்றவேண்டிய தருணமிது. நாம் நமது கிழக்கு மாகாண அயலாரிடமிருந்தும் புத்தகங்களில் இருந்தும் கிழக்கு மகாணத்தைப் பற்றி கொஞ்சமாவது கற்றுக் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போலி தமிழ் தேசியவாதத்தை தோலுரித்துக் காட்டுகிறது கட்டுரை.

  • தொடங்கியவர்

மதிப்புக்குரிய தாரக்கி,

சம்பதரை அழிக்க கண்கனம் கட்டி நிற்க்கும் யாழ்ப்பாண மைய வாதிகளின் குடும்ப வாரிசு தலைமையும் கிழக்கு மாகாண தமிழர் நலன்களை கபளீகரம் செய்ய கண்கனம் கட்டி நிற்க்கும் ராஜபக்ச குடும்ப வாரீசுகளும் திருகோணமலையில் கைகோர்த்து நிற்பதை அம்பலப் படுத்தும் கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி. தோல்வியாவது எங்கள் கண்களைத் திறக்கட்டும். எங்கள் எங்கள் மனசுகளில் எஞ்சியிருக்கும் யாழ்ப்பாண மையவாத அழுக்கை அகற்றவேண்டிய தருணமிது. நம்மில் பலருக்கு கிழக்கு தெரியாது. நமது அமைப்புகள் பலதில் கிழக்குமாகாணத்தவர்கள் குறைவு. இனியேனும் நாம் நமது கிழக்கு மாகாண அயலாரிடமிருந்தும் புத்தகங்களில் இருந்தும் கிழக்கு மகாணத்தைப் பற்றி கொஞ்சமாவது கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை புரிந்துகொள்ளாமல் விடுதலை இல்லை.

உங்கள் கருத்துக்கு நன்றி; அத்துடன் நான் பிரதேச வாதம் கதைக்கவில்லை; என்ன நடந்தது என்பதை எழுதினேன்;

இன்னும் வரும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலர் இந்த விடயத்தை பிரதேச வாதமாக திசை திருப்ப முனைவது கண்டிக்கதக்கது அவர்களது நோக்கங்கள் உள்நோக்கம் கொண்டது. :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தரைக் காப்பாற்ற களம் இறங்கிஇருப்பவர்களை ஒருகணம் பாருங்கள்.

1.தமது நாடுகளில் மே18க்கு முன்னர் தமிழர்களுக்கு தனித்தஉரிமை கிடையாது.சுயநிர்ணயம் கிடையாது.தமிழர்களின்போராட்டம் ஒரு பயங்ங்ங்கரவாதம் என்று போட்டுக்கொடுத்த கவித்திலகங்களும்,

2.விடுதலைப்புலிகளுக்கு எதிரான வேறுஇயக்கங்களில் இருந்து அப்போதைய படுகொலைகளை ஒத்துஊதியவர்களும்

3.தாம் இருக்கும் நாடுகளின் தமிழ்மக்களால் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டவர்களும்,

4.ஊடகங்களுக்கிடையில் கோல்மால் செய்தவர்களும்

5.இந்தியாவில் தமது வியாபார,கலை த்தொடர்புகளை கொண்டுள்ளவர்களும்தான்.

சம்பந்தரை ஆதரித்தால் இந்தியதேசியவாதி!

எதிர்த்தால் வடக்குமையவாதி!!

இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள் புலிக்கொடியை தூக்கிக் கொண்டு சம்பந்தரை திருமலையிலிருந்து யாழ்பாணத்துக்கு பாத யாத்திரை வரச்சொல்றயலா;

ஒரு விடயத்தை புரிந்துகொள்ளுங்கள்;உதாரணத்திற்கு நாம் ஒரு கால் பந்து விளையாட்டு போட்டிக்கு சென்று விட்டோம்

அதில் ஒரு சிலருக்கு சிவப்பு அட்டை காட்டிவிட்டால் நாம் வேறுசிலரை வைத்துத்தான் போட்டியை வெல்ல வேண்டும்.

இல்லை சிவப்பு அட்டை காட்டப்பட்டவர்களை வைத்துத்தான் விளையாட வேண்டுமென்றால்;யாரும் அதை ஏற்றுக் கொள்ள்மாட்டார்கள்.

நமது நோக்கம் தமிழர்களுக்கு விமோசனம் தரக்கூடியதும் நடைமுறை படுத்தக் கூடியதுமான ஒரு அரசியல் தீர்வு .

சும்மா வெளிநாடுகளில் இருந்து கத்துபவர்கள் எவனாவது தைரியம் இருந்தால் தனது குடியுருமையை ரத்து செய்துவிட்டு

அவர் புலம்பெயர் நாட்டில் பேசும் அவ்வளவு விடயத்தையும் ;இங்கே யாழிலோ ,அல்லது மட்டக்களப்பிலோ வந்து பேசட்டும்;

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தைரியம் இருந்தால் தனது குடியுருமையை ரத்து செய்துவிட்டு

அவர் புலம்பெயர் நாட்டில் பேசும் அவ்வளவு விடயத்தையும் ;இங்கே யாழிலோ ,அல்லது மட்டக்களப்பிலோ வந்து பேசட்டும்;

ஒருவனும் வரமாட்டான். அப்பிடிப்பட்ட தேசியவாதிகள் தான் இருக்கினம். :D

Edited by நல்லூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள் புலிக்கொடியை தூக்கிக் கொண்டு சம்பந்தரை திருமலையிலிருந்து யாழ்பாணத்துக்கு பாத யாத்திரை வரச்சொல்றயலா;

ஒரு விடயத்தை புரிந்துகொள்ளுங்கள்;உதாரணத்திற்கு நாம் ஒரு கால் பந்து விளையாட்டு போட்டிக்கு சென்று விட்டோம்

அதில் ஒரு சிலருக்கு சிவப்பு அட்டை காட்டிவிட்டால் நாம் வேறுசிலரை வைத்துத்தான் போட்டியை வெல்ல வேண்டும்.

இல்லை சிவப்பு அட்டை காட்டப்பட்டவர்களை வைத்துத்தான் விளையாட வேண்டுமென்றால்;யாரும் அதை ஏற்றுக் கொள்ள்மாட்டார்கள்.

நமது நோக்கம் தமிழர்களுக்கு விமோசனம் தரக்கூடியதும் நடைமுறை படுத்தக் கூடியதுமான ஒரு அரசியல் தீர்வு .

சும்மா வெளிநாடுகளில் இருந்து கத்துபவர்கள் எவனாவது தைரியம் இருந்தால் தனது குடியுருமையை ரத்து செய்துவிட்டு

அவர் புலம்பெயர் நாட்டில் பேசும் அவ்வளவு விடயத்தையும் ;இங்கே யாழிலோ ,அல்லது மட்டக்களப்பிலோ வந்து பேசட்டும்;

அதுக்காக சேம்கோல் போடுபவனை வைத்து விளையாட கூடாது என்பதில் அவதானமாக இருக்க வேண்டும்தானே. :lol:^_^:D

  • கருத்துக்கள உறவுகள்

த தே கூ உள் முரணுக்கு முள்ளுக்கம்பி வேலிக்குள் மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படும் மக்களுக்காக குரல் கொடுத்ததற்காவோ அல்லது அம்மக்களை காட்டு மிராண்டித்தனமாக சுட்டு கொல்வதினாலோ அல்லது தொடர் வன்முறைகளுக்கு கேள்வி முறையின்றி உட்படுத்தப்படுவதை தட்டி கேட்டதனாலோ வராமல் நல்ல வேளையாக அதிகாரப்போடியால் வந்தது என்றதைக்கேட்க ஒரு வளியாக எமது பாரம்பரியத்தைக்காப்பாற்றிப்போட்டினம் என்ற சில்லறை சந்தோசம்!

எங்கட பாரம்பரியம் வீட்டுக்க பிணத்தை வைச்சுக்கொண்டு சொத்துக்கு சண்டை பிடிக்கிறாக்களல்லோ

இதில வடக்கு கிழக்கு எதுவும் விதி விலக்கில்லை.

இதிலயும் குமார்பொன்னம்பலம் விலகினதுக்கு சொல்லபட காரணம் கூட்டமைப்பு அடிப்படையில் இருந்து விலகிவிட்டது என்ற காரனம்தான். :D

அடிப்படையில் இருந்து விலகினால் தான் விளயாட அனுமதிப்பார்கள் என்றால், போட்டி தேவையா?

விடயத்திற்கு நேரவாருங்கள், வெளிப்பூச்சு, விண்பேச்சு வேண்டாம் ஈழத்தமிழரின் இருப்பிற்கு இந்தியா துணையிருக்கும் என்றால் இந்த விளையாட்டுக்குத் தேவையிருக்கா? சிவப்பு அட்டை காடடுறவை யார்?

"ரெட் காட் காட்டுபவர்கள் யார்" கலைவாணி.

உலகம் தான்.முதல் பவுலுக்கு வோனிங் கொடுத்து,பின்னர் யெலோவ் காட் காட்டி, பின்னர் தான் ரெட் காட் காட்டி வெளியனுப்பினார்கள்.இதெல்லாம் நடந்தது பார்வையாளர்கள் மச் வெல்லாட்டியும் பரவாயில்லை காலை முறி என்றதால் வந்தது.

என்ன அடிப்படை? எல்லோருக்கும் தெரிந்ததுதானே,அதற்காக எந்தநேரமும் அதையேவைத்து கோசம் போட்டுக்கொண்டு இருக்க முடியாது.

இது தொடர்பாக கஜேந்திரன் அவர்கள் எமக்கு அவரின் விளக்கம் அனுப்பப்படின் பிரசுரிக்கப்படும்.

http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=195:2010-02-28-05-53-32&catid=34:2010-02-09-12-34-07&Itemid=53

ஐயோ சாமி இந்த லொள்ளைத் தாங்க முடியேல்லை!

----

கிழமைக்கு ஒரு இணையத்தளத்தை திறக்கிற இந்தப் --- கஜேந்திரனும் கஜேந்திரகுமாரும் ஒருவர் எண்டு நினைச்சுக்கோண்டு செய்தியை எழுதியிருக்குதுகள் போல.

தலைப்பிலையும் முடிவிலையும் கஜேந்திரன் நடுவுக்குள்ள கஜேந்திரகுமார்.

Edited by நிழலி
அநாகரீகமாக எழுதப்பட்டவை நீக்கப்பட்டன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.