Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிருபமா ராவ் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவார் - சம்பந்தன்

Featured Replies

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருக்கும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளார்.

பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் மூன்று நாள்கள் பயணத்தை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/1165

Edited by Aasaan

  • Replies 59
  • Views 3.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வட இந்திய தமிழினக்-கொலைகாரர்களின் பிரதிநிதியாக வரும் நிருபமா:

பிரதானமாக சம்பள, கிம்பள பாக்கிகள் வாங்கிச்செல்ல உள்ளார் என்று தெரிகிறது.

டெல்லியில் அலுவலகம் அமைத்தால் தமிழர் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று தமிழரை ஏமாற்ற ஆரம்பித்திருக்கும் கூட்டமைப்பிற்கு ஆதரவு தேடும் நடவடிக்கையில் ஈடுபடவும் உள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

வடக்கு அபிவிருத்திக்கு உதவி என ஏமாற்றும் ஐந்தாவது போலி அறிக்கையும் விடப்படலாம். தண்டவாளப் பணிகள் ஆரம்பம் என்று அறிவித்து ஏமாற்றவும் முயலலாம்.

  • தொடங்கியவர்

சம்பந்தனின் தேசியம், இறையாண்மை, சுயநிர்ணயம் - நிருபமா கையிலா? காலிலா? என்பது விரைவில் தெரியவரும்

சம்பந்தனின் தேசியம், இறையாண்மை, சுயநிர்ணயம் - நிருபமா கையிலா? காலிலா? என்பது விரைவில் தெரியவரும்

சம்பந்தன் அவர்கள் தானாக உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றிகள்

டெல்லியில் அலுவலகம் அமைத்தால் தமிழர் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று தமிழரை ஏமாற்ற ஆரம்பித்திருக்கும் கூட்டமைப்பிற்கு ஆதரவு தேடும் நடவடிக்கையில் ஈடுபடவும் உள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

எப்போது கூட்டமைப்புக்காரர்கள் டெல்லியில் அலுவலம் அமைத்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று அறிவித்தவர்கள்?

மற்றது

தமிழ் தேசியக் கூட்டமைப்பு டெல்லியில் அலுவலகம் திறப்பதில் என்ன பிழையிருக்கிறது ஆசான்???

  • கருத்துக்கள உறவுகள்

ஆசான் அவர்களின் இந்த தாக்குதல்களின் பின்

நான் இனி கூட்டமைப்பு தொடர்பான எனது வேண்டுகோள்களை நிறுத்தவுள்ளேன்

ஆனால் ஆசான் அவர்கள் எமது இதுபோன்ற கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதில்களை முன் வைக்கவேண்டும்

1- கூட்டமைப்பு இந்தியாவின் சொல்லுக்கு ஆடுகிறது என்று சொன்னார்களா

சொல்லியிருந்தால் ஆதாரம்

நீங்களாக சொன்னால் தங்கள் ஆதாரம்

2- தேசியம் சுயநிர்ணயம்..... கொள்கைகளை கைவிட்டுவிட்டதாக சொன்னார்களா?

சொல்லியிருந்தால் ஆதாரம்

நீங்களாக சொன்னால் தங்கள் ஆதாரம்

3-மக்கள் கூட்டமைப்பை வெறுக்கின்றார்கள் என்று தாங்கள் சொல்வதற்கு ஆதாரம்

4- இன்றைய சூழ்நிலையில் இந்தியாவையும் சேர்த்து செயற்படும் அவர்கள் முடிவில் தங்களின் ஆக்ரோசமான பதிலடிக்கு தங்களிடம் இருக்கும் பலம்

5- கூட்டமைப்பில் இருக்கும் எல்லோரும் சோரம்போய்விட்டார்கள் என்பதற்கான தங்களது ஆதாரம்

6- கூட்டமைப்பில் இருக்கும் எல்லோரும் எவரும் நாட்டுப்ற்றோ தேசியப்பற்றோ அற்ற சுயநலக்காரர்கள் என்பதற்கான தங்களது ஆதாரம்

7- மகிந்தவுடனும் அண்டக்கூடாது இந்தியாவுடனும் சேரக்கூடாது சரத்தையும் காணக்கூடாது ......... என்றால் கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும்

8- இத்தேர்தலில் தாங்கள் தமிழ்மக்களுக்கு சிபார்சு செய்யும் கட்சி அல்லது நபர்கள் யார்.....?

ஆடு பகை குட்டி உறவா...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாலா பிரிஞசிருக்காம்......முந்தியெண்டா கயித்து நீளம்மட்டும்தான். இப்ப டெல்லி அமெரிக்கா பிரித்தானியாவெண்டு ஓடித்திரியிதுகள். :D

நாலா பிரிஞசிருக்காம்......முந்தியெண்டா கயித்து நீளம்மட்டும்தான். இப்ப டெல்லி அமெரிக்கா பிரித்தானியாவெண்டு ஓடித்திரியிதுகள். :D

எது எண்டாலும் அடிபடாமல் பிரிச்சு எடுக்க வேணும்... நாலா பிரிஞ்சதுக்காக எல்லாம் தூக்கு போட்டு கொள்ள கூடாது...

  • கருத்துக்கள உறவுகள்

எமது இதுபோன்ற கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதில்களை முன் வைக்கவேண்டும்

நீங்கள் ஜிரிவி அல்லது தீபம் பார்த்திருந்தால் சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் போன்றோரின் பேட்டிகளைக் கேட்டிருக்கக்கூடும். ஒன்றாக இருந்தவர்களே புட்டு வைக்கும்போது வெளியில் இருந்து ஏன் கஷ்டப்படவேண்டும்.

தமிழ் நாட்டில் உள்ள கட்சிகளுக்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது. அதாவது, கட்சியின் கொள்கைகளைப் பற்றிய அக்கறையற்ற ஒரு பகுதியினர் எதுவித கேள்வி, சிந்தனையன்றி கட்சிக்கு விசுவாசமாகவே இருப்பர். அதுபோல நீங்களும் த.தே.கூ (எந்தப் பிரிவு?) வின் தீவிர தொண்டனாக இருக்கிறீர்கள். அவ்வளவுதான் :D

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியா எங்களையும் கடிக்க தொடங்க்கீட்டீங்கள்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியா எங்களையும் கடிக்க தொடங்க்கீட்டீங்கள்.... :D

இனியென்ன. கட்டவுட் வந்து கனகாலமாச்சு. தேர்தல் காலத்திலதான் தலைவர்களுக்கு மக்கள் நினைப்பு வருது. தலைவர்கள் எப்போதுமே மக்களுக்காக சேவை செய்கின்றோம் என்று தங்களை வளப்படுத்துகின்றார்கள். இப்படி எல்லாம் வந்தாயிற்று. காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதும் ஆரம்பித்தால் நாங்கள் தேசியம், மார்க்சியம், புரட்சி எல்லாத்தையும் விட்டிட்டு மகிந்தவோடு சேர்ந்து மந்தைத் தமிழரை எங்கள் காலில் விழுத்துற வேலையை தொடங்கலாம் என்று தீர்மானிச்சு வைச்சிருக்கிறன். :D

  • கருத்துக்கள உறவுகள்

பனிப்போர்கால சர்வதேச நலன்சார் உதவியின் நிமித்தம் ஒரு நாடு விடுதலைப்புலிகளுக்கு ஒரு தொகுதி ஆயுதம் ஒன்றை அளித்தது,அதை இந்தியா 80% புலிகளுக்கும் 20% புலிகளின் நட்பு சக்தியாக திகழ்ந்த இன்னொரு அமைப்பிற்கு பிரித்து கொடுத்து பிரிவினையை ஊட்டி வளர்த்தனர்,

இலங்கையில் தமிழர் மட்டுமல்ல சிங்களவர்கள் கூட ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்பதுதான் இந்தியாவின் விருப்பம் ஏனெனில் அப்போதுதான் தனது கைக்குள் நிற்பார்கள் என்பது அவர்களின் கணிப்பு

த தே கூ பிளவிற்கும் இந்தியா பிரதான பங்கு வகித்திருக்குமோ தெரியாது.

தமிழர்கள் கடந்த காலத்தில் தமிழர் சிங்களவர்களுக்கான பொது எதிரியை எவ்வாறு ஓரங்கட்ட நடவடிக்கை எடுத்தார்களோ அதே போல் மீண்டும் ஒன்றிணைந்து அந்த எதிரியை நிரந்தரமாகவே இலங்கைப்பிரச்சனையில் இருந்து ஓரங்கட்ட வேண்டும்.

நிருபமா ராவ் மிகவும் ஆளுமை கொண்டவர் அவருடன் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்,குறிப்பாக அரசியல் அசடு சம்பந்தன் ஐயா கவனம் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விட்டு விடுவார்

  • தொடங்கியவர்

எப்போது கூட்டமைப்புக்காரர்கள் டெல்லியில் அலுவலம் அமைத்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று அறிவித்தவர்கள்?

மற்றது

தமிழ் தேசியக் கூட்டமைப்பு டெல்லியில் அலுவலகம் திறப்பதில் என்ன பிழையிருக்கிறது ஆசான்???

ஆசான் அவர்களின் இந்த தாக்குதல்களின் பின் நான் இனி கூட்டமைப்பு தொடர்பான எனது வேண்டுகோள்களை நிறுத்தவுள்ளேன். ஆனால் ஆசான் அவர்கள் எமது இதுபோன்ற கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதில்களை முன் வைக்கவேண்டும்

நித்திரை கொள்பவரை எழுப்பிவிடலாம்! நித்திரை கொள்பவர்போல் நடிப்பவரை எழுப்பமுடியாது!!

யாழ் களத்தில் தேடினாலே உங்கள் கேள்விகள் பலவற்றுக்கு சான்றுகள் மிக மிக இலகுவாக கிடைக்கும். எனவே யாழ் போன்ற களங்களில் ஆதாரங்களை மீண்டும் மீண்டும் இணைத்து எனது நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.

அதுபோக, யாழ் போன்ற களங்களில், கருத்துக்கு மாற்று கருத்து வைப்பதுதான் முறை. மாறாக கேள்விகளை அடுக்கிக் கொண்டு போவது மாற்றுக் கருத்தாக அமைந்துவிடாது. அதுவும் பொருத்தமற்ற கேள்விகளை கேட்பது முறையல்ல. அதையும் மீறி கேள்விகளை வைப்பது உங்கள் உரிமை. அவற்றுக்கெல்லாம் விரிவான பதில் கிடைக்கும் என எதிபார்ப்பது தவறு.

ஆனால் நான் முன்வைக்கும் கடுமையான கருத்துக்களுக்கு ஆதாரங்கள், சான்றுகள் பல என்னிடமுண்டு என்பதை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். எனக்கு தெரிந்தவை அனைத்தையும் நான் யாழ் களத்தில் எழுதுவதில்லை. உரிய சந்தர்ப்பங்கள் வரும்போது மிகச் சிலவற்றை கூறிவருகிறேன்.

இனியென்ன. கட்டவுட் வந்து கனகாலமாச்சு. தேர்தல் காலத்திலதான் தலைவர்களுக்கு மக்கள் நினைப்பு வருது. தலைவர்கள் எப்போதுமே மக்களுக்காக சேவை செய்கின்றோம் என்று தங்களை வளப்படுத்துகின்றார்கள். இப்படி எல்லாம் வந்தாயிற்று. காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதும் ஆரம்பித்தால் நாங்கள் தேசியம், மார்க்சியம், புரட்சி எல்லாத்தையும் விட்டிட்டு மகிந்தவோடு சேர்ந்து மந்தைத் தமிழரை எங்கள் காலில் விழுத்துற வேலையை தொடங்கலாம் என்று தீர்மானிச்சு வைச்சிருக்கிறன். :D

வட்டுகோட்டை தீர்மானம் இயற்றி போட்டு கூட்டணியினர் வெண்று வந்து ஜே ஆருடன் கூடி கும்மாளம் அடித்தனர்.... இதை முன்னமே உணர்ந்து( வட்டுகோட்டை தீர்மானம் இயற்றும் போது கூட்டணியில் இருந்த ) கூட்டணியை எதிர்த்த குமார்பொன்னம் பலமும், இண்டைக்கு அதே காரணத்தாலை வெளியிலை வந்த கஜேந்திரன் பொன்னம்பலமும் குழப்பவாதிகள் எண்டுகினம்...

என்ன எண்டாலும் கவர்ச்சிகரமான கோசங்களுக்கு மட்டும் நாங்கள் எடுபடுவம் எண்டது மட்டும் நல்லா விளங்குது... உண்மையை சொன்னால் குழப்பவாதியாம்..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நித்திரை கொள்பவரை எழுப்பிவிடலாம்! நித்திரை கொள்பவர்போல் நடிப்பவரை எழுப்பமுடியாது!!

மிகச் சிலவற்றை கூறிவருகிறேன்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எனது குடும்பம் மீதான தாக்குதலுக்கு ஆதாரம் தரும்படி கேட்பது எனது தார்மீகக்கடமை

தங்களிடம் எதுவுமில்லை என்பதை லாவகரமாக மறைக்கின்றீர்கள்

இங்கு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் எல்லாமே இப்படி இருக்கலாம் என்ற ரீதியில் வைக்கப்படுபவையே.

ஆனால் எமது இனத்தை பாதாளத்தில் தள்ளக்கூடியவை.

தங்களிடம் அதிகம் எதிர்பார்த்தேன் ஆசான்

ஏமாற்றிவிட்டீர்கள்

நன்றி வணக்கம்

Edited by விசுகு

  • தொடங்கியவர்

ஏமாற்றிவிட்டீர்கள்

எட்டாத பழம் புளிக்கும் என்பர். அது ஒருவித உளவியல் கருத்தும் தான்.

போகப் போக உண்மைகள் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்டுவதுடன் இதை நிறுத்துகின்றேன்

1981 இல் என்று நினைக்கின்றேன்

எனக்கு அப்போது வயது 18

கூட்டணியை பலமாக எதிர்க்க தொடங்கினோம்

அப்போது கூட்டணியின் அபிமானி என்னைவிட 10 வயது மூத்தவருடன் கடுமையான விவாதம் ஏற்பட்டது

இன்றும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது

என்னை அடிக்கடி தொந்தரவு செய்கிறது

அவர் என்னிடம் கேட்டது 1981 இல் எத்தனைபேர் இப்படி வெளிக்கிட்டுள்ளீர்கள் என்று.

அவர் அப்போது இலங்கை வங்கியில் வேலை செய்தார்

வவுனியா நொச்சிமோட்டையில் பிறந்தவர்

7 ஆண்பிள்ளைகளில் ஒருவர்

பின்னர் 83 கலவரத்தில் எல்லாவற்றையும் இழந்து ...

இன்று எங்கேயோ தெரியாது

ஆனால் 2009இல் நாம் எல்லாவற்றையும் இழந்து நின்றபோது எனக்கு அவரது முகம்தான் கண்ணுக்குள் நின்றது

ஏனென்று தங்களுக்கு புரிகிறதா...?

இன்று அதேநிலையில் என்ன முடிவு எடுக்கப்போகின்றோம்

என்னிடம் வருவது அதே கேள்விதான்...

எத்தனைபேர் இப்படி வெளிக்கிட்டுள்ளீர்கள் என்று.

  • தொடங்கியவர்

கவலைப்படாதீர்கள் விசுகு.

1981 இல் உள்ள நிலையும், இன்று உள்ள நிலையும் முற்றிலும் தலைகீழானவை. விளக்கமாக சொன்னால் மட்டும் தான் உங்களுக்கு விளங்கும் என்ற நிலையில் நீங்கள் இல்லை, நீங்கள் அனுபவ - அறிவு முதிர்விடையவர் என நான் எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்படாதீர்கள் விசுகு.

1981 இல் உள்ள நிலையும், இன்று உள்ள நிலையும் முற்றிலும் தலைகீழானவை.[b] விளக்கமாக சொன்னால் மட்டும் தான் உங்களுக்கு விளங்கும் என்ற நிலையில் நீங்கள் இல்லை, நீங்கள் அனுபவ - அறிவு முதிர்விடையவர் என நான் எண்ணுகிறேன்.

என் முடிவுகளுக்கான காரணத்தை தாங்கள் உள் வாங்கிவிட்டீர்கள்

அதுதான் எனக்கு வேண்டும்

இத்துடன் முடிக்கின்றேன்.

நிறுத்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனைபேர் இப்படி வெளிக்கிட்டுள்ளீர்கள் என்று.

எல்லாம் உந்தப் புலியளில பலர் சேர்ந்து வெளிக்கிட்டதால்தான் இப்படி நிலைமையாப் போச்சு. பேசாமல் விட்டிருந்தால் கூட்டணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி ஒரு கிராபசபையை வென்று இதுதான் தமிழீழம் என்று சொல்லியிருக்கும். நாங்களும் ஊரில சந்தோசமாக எங்கள் 'தமிழீழத்தை" ஆண்டுகொண்டிருக்கலாம்! :D

:D^_^:D:D:lol::lol::lol::lol:

இப்படி சிரிப்பதை தானே தாங்கள் இப்போ எதிர்பார்க்கின்றீர்கள்

அதுதான் சிரிச்சனான்

ஆனால் உலகம் இப்ப எம்மை பார்த்து இப்ப இப்படித்தான் சிரிக்குது

அது தங்களுக்கு உறைக்காவிட்டாலும் 30 வருட வலியைத்தாண்டியும் கூட்டமைப்பைத்தான் மீண்டும் தொடரவேண்டியிருக்கும் என் நிலையால் எனக்கு வலிக்குது.

Edited by விசுகு

  • தொடங்கியவர்

என் முடிவுகளுக்கான காரணத்தை தாங்கள் உள் வாங்கிவிட்டீர்கள்

அதுதான் எனக்கு வேண்டும்

இத்துடன் முடிக்கின்றேன்.

நிறுத்துகின்றேன்.

"1981 இல் உள்ள நிலையும், இன்று உள்ள நிலையும் முற்றிலும் தலைகீழானவை." இந்த விடயத்தை மட்டுமே முன்னிறுத்தி "விளக்கமாக சொன்னால் மட்டும் தான் உங்களுக்கு விளங்கும் என்ற நிலையில் நீங்கள் இல்லை, நீங்கள் அனுபவ - அறிவு முதிர்விடையவர் என நான் எண்ணுகிறேன்" என்று மட்டுமே கூறினேன்.

நீங்கள் "அர்த்தமில்லாத விதண்டாவாதி" என்றும், "பொழு போக்குக்காக விவாதிப்பவர்" என்றும் நான் முன்னமே கருதினாலும், உங்கள் வயதின் காரணமாக, உங்களை விதண்டாவாதத்திலிருந்து திருப்பலாம் என்ற நல்லெண்ணத்தில் அப்படி கூறினேன்.

ஆனால் நீங்கள் அவசரப்பட்டு மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட முனைந்துள்ளீர்கள்.

இப்போது உங்களைப்பற்றிய எனது நல்லெண்ணம் தவறானது என்று உணர்ந்துள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.