Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்களுடனான பேட்டி

Featured Replies

பாராளுமன்றப் பொதுத்தேர்தல் - 2010

யாழ்ப்பாணதேர்தல் மாவட்டம்

இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர்

பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்களுடனான பேட்டி

(1) நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிடத் தீர்மானித்ததன் காரணம் என்ன?

தமிழர் அரசியலில் 30 ஆண்டுகால அறவழிப் போராட்டத்திலும் 30 ஆண்டகால ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டு இன்று மீண்டும் ஆரம்பப் புள்ளியில் நிற்க வேண்டிய நிலையில் உள்ளது. தமிழரது எதிர்கால அரசியல் என்பது சர்வதேச சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஜனநாயக அடித்தளத்தில் நின்றுகொண்டு உலக மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி எமது தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றிற்காகக் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்குக் கல்வியாளர்கள் தேவை. சர்வதேச அரங்கில் எமது விடயங்களை எடுத்துக் கூறத்தக்க தெளிந்;த அரசியல் புலமையாளர்களின் அவசியத்தினை உணர முடிகிறது. அரசியல் எல்லோரும் சொல்வது போல் சாக்கடை அல்ல. எமது எதிர்கால மேம்பாடு மற்றும் வாழ்வை நிர்ணயிக்கின்ற சக்தியாகவே அரசியலைப் பார்க்க முடிகிறது. எமது அபிவிருத்தி நிலைத்திருக்க எமக்கான அரசியல் தேவை. அபிவிருத்தி என்ற போர்வையில் உலகமயமாக்கல் என்ற அடிப்படையில் பல்தேசிய நிறுவனங்கள் நுழைந்த நாட்டை மேலும் சுரண்டும் போக்குத் தென்படுகின்றது. எமக்குரியதான அபிவிருத்தி எது என்பது பற்றிய தெளிவு அவசியம். இன்றைய அரசியலை வழிநடத்துவோருக்கு இது இன்றியமையாததாகும். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் அரசியல் தந்த பாடத்தின் அடிப்படையிலேயே இதனைக் கூறுகின்றேன்.

(2) குறிப்பாக நீங்கள் தமிழரசுக் கட்சியில் இணைந்து ஒரு வேட்பாளரானதற்கான அடிப்படை முக்கியத்துவம் என்ன?

வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவன் நான் எனது தந்தையாரும்,தாயாரும் பாடசாலை அதிபர்களாகக் கடமையாற்றியுள்ளனர். தீவுப்பகுதியின் அபிவிருத்தியில் அவர்கள் அதிக அக்கறை செலுத்தியவர்கள். அமரர் வி.ஏ.கந்தையா. புண்டிதர் க.பொ.இரத்தினம் போன்றவர்களின் தேசிய மட்டத்திலான அரசியலுக்கு பிரதேச மட்டத்தில் தூணாக நின்றவர் என் தந்தையார். 1944ல் வேலணை கிராமச் சங்க 2ம் வட்டாரத் தேர்தலில் பங்குகொண்டு ஏக மனதாகத் தெரிவாகி கிராமசபை அரசியலில் அவர் ஈடுபட்டார். பிரதேச மட்டங்களில் சமூக, கல்வி சமய சேவைகளில் ஈடுபாடு கொண்டு விளங்கியதால் எனது பாரம்பரியத்தில் அரசியல் என்பது புதிதல்ல. இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரான காலப்பகுதியில் எனது தந்தையின் தந்தை வைத்தியர்.சிதம்பரப்பிள்ளை கூட வேலணை கிராம சபைத் தலைவராக இருந்துள்ளார். எனவே எனது அரசியல் பாரம்பரியம் இரண்டு தலைமுறைக்கு முந்தியது. மேலும் நீண்ட காலமாக நான் தமிழரசுக் கட்சியின் அங்கத்தவனாகவே இருந்து வருகின்றேன். தமிழர்கட்சி அரசியல் இயங்க முடியாமைக்கான காரணம் உங்களுக்கே புரியும். இப்பொழுது அதற்கான சந்தர்ப்பம் வரும் போது கட்சி அரசியலுக்கு வரும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது.

(3) ஒரு புலமையாளராக அறியப்பட்ட நீங்கள் இலங்கை அரசியலில் இணைந்து கொண்டதை எப்படி உணருகிறீர்கள்?

அரசியல் அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. மக்களின் பல்துறை அம்சங்களிலும் அதன் வளர்ச்சியிலும் அரசியலின் பங்கே கணிசமாக உள்ளது. எனவே அரசியலில் புலமையாளர்கள் வந்து கலந்து கொள்வது மிகவும் அவசியமானது என கருதுபவன் நான். வடக்குக் கிழக்குப் பிரதேசத்தினை தாயகப் பிரதேசம் என்பதை ஆய்வு அறிவியல் பூர்வமாக நிறுவுவதில் தீவிரமாகச் செயற்படுபவன் நான். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தமிழர்களுக்கு எதிரான தரப்படுத்தல் ஒடுக்கு முறைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடும் மனப்பாங்கு எனக்கு இருந்தது. இன்றும் அதே உணர்வுடனேயே செயற்படுகிறேன். இன்று யாழ் தேர்தல் களத்தில் நிற்கின்ற 15 அரசியல் கட்சிகளினதும், 12 சுயேட்சைக் குழுக்களினதும், 324 வேட்பாளர்களின் தகுதி பற்றியும் அவர்கள் மக்களுக்கு என்ன சேவை செய்தனர் என்பது பற்றியும் நீங்கள் அறிவீர்கள். எமது கட்சியில் வேட்பாளர்களாக நிற்கின்ற முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களும் 10 புது முகங்களும் ஒப்பீட்டளவில் புலமையானவர்களாகவே தெரிகின்றனர். இவர்களை ஒற்றுமையாகத் தேர்வு செய்வது தமிழர்தம் அரசியலை முறையாக வழிநடத்தும் என நம்புகிறோம்.

(4) இது தொடர்பாக சமூக நிலைகளில் எவ்வாறான கருத்து நிலைகள் உலாவுகின்றன?

இலங்கையில் யாழ்ப்பாணம் பாரம்பரியமாகவே கல்வியில் உயர் நிலையிலும் சிறந்த புலமையாளர்களையும் கொண்டது. எனவே கல்வியாளர்கள், புலமையாளர்கள் அரசியலுக்குத் தேவை எனும் உண்மை யாழ் சமூகத்திற்கு சொல்லாமலேயே புரியும் ஒரு விடயம். யாழ் தமிழ் வாக்காளர்கள் அறிவு, தெளிவு, துணிவு, அர்ப்பணிப்பு உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு தயாராகி விட்டார்கள் என்பது புரியத் தொடங்கி விட்டது.

(5)உங்களது சமூகத் தொடர்பு அதன் வழியான சமூகம் பற்றிய புரிதல் உங்களது அரசியலுக்கு துணை நிற்குமா?

நான் பல்கலைக்கழக விரிவுரையாளனாக, புவியியற்துறை ஆய்வாளனாக, அதன் தலைவனாக, கலைப்பீடாதிபதியாக, புறநிலைப் படிப்புக்கள் அலகின் இணைப்பாளராக பல்வேறு தளங்களில் புலமை சார்ந்து செயற்பட்டு வந்த போது சமூகத் தொடர்பினையும் அது பற்றிய தெளிவினையும் நன்றாகவே உள்வாங்கியுள்ளேன். இதை விட எனது இலக்கிய, கலையுலகத் தொடர்பும் இதற்கான ஆழத்தினை கொடுத்துள்ளது என நம்புகிறேன். ஊற்று, ஆய்வு, சிந்தனை, மார்க்கம், தமிழ்க் கலை ஆகிய இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய போதும்; அகிலம் எனும்; சமூக, அறிவியல் இதழினை வெளியிட்ட போதும் இதனை நான் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளேன். நான் பல்கலைக்கழகத்தில் இருந்த போது மக்களுடன் இணைந்தவனாகவும் சமூக சேவைக்கான புலம்களைத் தேடுபவனகாவும் இருந்துள்ளேன். நாம் அறிவைப் பரவலாக்கம் செய்பவர்களாகவே பணிபுரிந்து வந்தோம். பொருளாதார, சமூக, அரசியல் மேம்பாட்டை எவ் வழிகளில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதை நாம் அறிவோம். அது மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.

(6) உங்களுடைய பார்வையில் பாராளுமன்றத் தேர்தல் 2010 எப்படி?

பொதுவாக ஜனநாயக அரசியலைப் பலமுள்ளவர்கள் கேலிக் கூத்தாக்கும் நிலையே காணப்படுகிறது. உலக நாடுகளில் பல கட்சி ஆட்சிமுறை நிலவுவதைக் காணலாம். இங்கு எதிர்க் கட்சிகளை முற்றாக அழிக்கும் நோக்கில் அரசகட்சிகள் செயற்படுவது அரசியல் நாகரிகமற்ற செயலாகும். விமர்சனங்கள், கருத்துப்பரிமாற்றங்கள் என்பன ஆரோக்கியமான ஜனநாயக முறைக்கு அவசியம். தமிழ்ப் பிரதேசத் தேர்தலில் ஆளும் கட்சி ஆதரவாளர்களே பல சுயேட்சைக் குழுக்களை தேர்தலில்; களமிறக்கியமை திட்டமிட்டு ஜனநாயகத்தை புதைகுழிக்குள்; தள்ளும் நடவடிக்கையாகவே மக்கள் உணர்கின்றார்கள். அவர்களின்பால் வெறுப்புக் கொள்கிறார்கள். தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைப்பது தான் இதன் அடிப்படை நோக்கம். இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் தேர்தலின் பின் தமிழர் கூட்டமைப்புடன் பேசி தமிழருக்கான நிரந்தரத் தீர்வு வேண்டுமென மகிந்த அரசை வற்புறுத்தி வருகின்றன. இன்நிலையில் கூட்டமைப்பின் பலம் சிதைக்கப்பட்டால் பேரம் பேசும் வலு சிதைக்கப்பட்டு தமிழர் அரசியல் பலவீனமாகி விடும். இதனைக் கல்வியில் சிறந்த தமிழ் மக்கள் புரியாமல் இல்லை. ஏப்பிரல் 8ல் மக்கள் இவர்களுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டுவர். இது நிட்சயம். பொறுத்திருந்து பாருங்கள். இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களாக நிற்கின்றவர்கள் பெரும் பலத்துடன் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Edited by நாய்க்குட்டிடி

ஓய்வு பெற்ற பேராசிரியரின் பதில்கள் உப்புச்சப்பின்றி உள்ளது. அவரது பதிலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள், அதை தீர்க்கும் விதங்கள் பற்றிய புலமைசார் கருத்துக்களை காணவில்லை.

மாறாக அவர் வெறும் "புலமையாளர்", "கல்வியாளர்" என்ற மாயையை உருவாக்கி, முன்னிறுத்தி தேர்தலில் வெல்ல முனைகிறார். இதுவரை தான் சமூகத்துக்கு சேவை செய்யாதவர் என்று நிரூபித்துள்ளார்.

ஓய்வு பெற்ற பேராசிரியர் குறிப்பிட்ட பணிகள் யாவும் சம்பளத்துக்கு செய்யப்பட்டவை. புத்தகங்கள், ஆய்வு அறிக்கைகள் வெளியிட்டது பதவியுயர்வு என்னும் சுயநலம் கருதி செய்யப்பட்டவை. ஏனைய பணிகளும் காசுக்கு மாரடித்த பணிகளாகவே உள்ளன.

கடந்த 40 வருடங்களில் அவர் தமிழ் சமூகத்தின் மேன்மைக்காக, காசோ பணமோ சுயநன்மைகளோ கருதாமல் செய்த பணிகளை பட்டியலிட்டால் நல்லது.

பாராளுமன்றப் பொதுத்தேர்தல் - 2010 யாழ்ப்பாணதேர்தல் மாவட்டம்

இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்களுடனான பேட்டி

....... இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் தேர்தலின் பின் தமிழர் கூட்டமைப்புடன் பேசி தமிழருக்கான நிரந்தரத் தீர்வு வேண்டுமென மகிந்த அரசை வற்புறுத்தி வருகின்றன . ??????????

என பேராசிரியர் பொய்சொல்லி மக்களை ஏமாற்ற முயன்றது ஏன்?

சர்வதேச நாடுகள் புலம்பெயர் தமிழருடன் பேசவேண்டும் என வற்புறுத்துவதுகூடத் தெரியாத பேராசிரியர் எமக்குத் தேவையா?

  • தொடங்கியவர்

என பேராசிரியர் பொய்சொல்லி மக்களை ஏமாற்ற முயன்றது ஏன்?

சர்வதேச நாடுகள் புலம்பெயர் தமிழருடன் பேசவேண்டும் என வற்புறுத்துவதுகூடத் தெரியாத பேராசிரியர் எமக்குத் தேவையா?

உங்களுக்கு யார்தான் தேவை? எதபோட்டாலும் தேவை இல்ல! எண்டு எதிர்த்தே கதைக்கிறியல்... மகிந்த மட்டும்தான் கூட்டமைப்பை பிரிக்கிறான் எண்டு நினச்சா, நம்மட ஆக்கள் தான் அத பெருசா செய்யினம்,

சும்மா பின்னூட்டல் இடோணம் எண்டதுக்காக சொல்லுறிங்களா?, அல்லது அவரை பற்றி தெரிஞ்சு சொல்லுறிங்களா? அவர் என்ன செய்தவர் எண்டு அவர பத்தி தெரிஞ்ச ஆக்களுக்கு தெரியும், உதாரனமா : புறநிலை படிப்பலகு எண்டா என்னஎண்டு தெரியுமா? அதால அவருக்கு என்ன நன்மை எண்டு தெரியுமா?, அவர் பேராசிரியரா இருந்து பெருசா செய்யாட்டிலும், மத்த வங்களவிட ஏதோ செய்திருக்கிறார்,

உங்களுக்கு யார்தான் தேவை?

நாய்க்குட்டி! தமிழ் மக்களின் நிரந்திர விடிவுக்கு, நேர்மையாக, உண்மையாக, துணிச்சலாக, உறுதியாக, விவேகமாக, .... .... அர்ப்பணிப்புடன் உழைக்கக்கூடிய அரசியல்வாதிகள் உள்ளார்களா என தேடிக்கொண்டிருக்கிறேன்.

அப்படிப்பட்டவர்கள்,

........ தமிழின படுகொலையாளர்களுடன்,

........ தமிழின விரோதிகளுடன்,

........ தமிழர் சொத்துக்களை அபகரிப்பவர்களுடன்,

........ தமிழரை இழிவு செய்பவர்களுடன்,

........ சுயநலத்துக்கு தமிழர் நட்பு தேடுபவர்களுடன்,

........ தமது அயோக்கியத்தனத்தை மறைப்பதற்கு தமிழர் நட்பு தேடுபவர்களுடன்,

........ தமிழரை அழிக்க / அழித்துக்கொண்டு தமிழர் நட்பு தேடுபவர்களுடன்,

........ ............,

........ ............,

நெருங்கிய தொடர்புகளை, நெருங்கிய நட்பை வைத்திருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறேன்.

அத்தகையவர்கள் தயவில் தமிழர் தீர்வை தேடக் கூடாது.

அத்தகையவர்கள் அடிவருடிகளாக இருக்கக் கூடாது.

அத்தகையவர்கள் செயல்களை நேரடியாகவோ, மறை முகமாகவோ அங்கீகரிக்கக் கூடாது.

அத்தகையவர்கள் மேலுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்கள் விடுபட, நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவக் கூடாது.

அவசிய நேரங்களில் மட்டும் வெறும் சம்பிரதாயத் தொடர்புகளை வைத்துக்கொள்வதில் தவறில்லை. (கொள்கைகளைக் கைவிடாது).

தமிழருக்கு பரவலான நன்மைகள் கிடைக்குமென உறுதியானால், தொடர்புகளை வைத்து, பின்னர் விலகிவிடவேண்டும்.

ஆனால், சுயநலம் கருதி தொடர்ந்து நெருங்கிய தொடர்புகளை, நெருங்கிய நட்பை வைத்திருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறேன்.

அத்தகையவர்களின் தவறுகளை, அயோக்கியத்தனங்களை, ........ தொடர்ந்து சுட்டிக்காட்டி, கண்டித்து வரவேண்டும்.

அத்தகையவர்களின் தவறுகளை, அயோக்கியத்தனங்களை, ........ நிறுத்த தொடர்ந்து விவேகமாகச் செயற்பட வேண்டும்.

================================

நாய்க்குட்டி!! ஓய்வு பெற்றபின் கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த பேராசிரியர் மேல் உங்களுக்கு விசுவாசம் இருந்தால், தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் பணிகளில் அவரை ஈடுபட வையுங்கள்.

எனக்கு உண்மையெனபட்டதை, நான் அறிந்ததை எழுதிவருகிறேன். அது தவறாக இருந்தால் சுட்டிக்காட்டி திருத்துங்கள். அதை விட்டுவிட்டு என்மேல் கோபப்படாதீர்கள்.

என்னுடைய காரசாரமான கருத்துக்கு அப்பால், தமிழர் அனைவருடனும் நட்பாகவே இருக்க விரும்புகிறேன்.

  • தொடங்கியவர்

நாய்க்குட்டி!! ஓய்வு பெற்றபின் கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த பேராசிரியர் மேல் உங்களுக்கு விசுவாசம் இருந்தால், தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் பணிகளில் அவரை ஈடுபட வையுங்கள்.

இது தவறான கருத்து.. அவர் யாழ்ப்பாணத்தில்தான் இருக்கிறார்... பொய்யான கருத்துக்களைபரப்பாதிங்க, யாழ்ப்பாணத்தில் இருக்க வேண்டும் எண்ட வைராக்கியத்தில் அவர் அங்கு இருக்கிறார், ஆனா நீங்க அபாண்டமா பளி போடுறிங்க...

  • தொடங்கியவர்

 ஓய்வு பெற்றபின் [b]கொழும்பில்[/b] வாழ்ந்து கொண்டிருந்த பேராசிரியர்

பொதுவான வாத்தை எண்டு சொன்னிங்கபோல? உண்மையில் யாழ்மண்ணை நேசிப்பவர்களுக்கு இந்த வசனம் எவளவு கவலைதரும் எனதெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு யார்தான் தேவை? எதபோட்டாலும் தேவை இல்ல! எண்டு எதிர்த்தே கதைக்கிறியல்... மகிந்த மட்டும்தான் கூட்டமைப்பை பிரிக்கிறான் எண்டு நினச்சா, நம்மட ஆக்கள் தான் அத பெருசா செய்யினம்,

இது ஒருவித தொற்றுநோய்நாய்க்குட்டி

தொடர்ந்து கொஞ்சநேரம் கதைத்தீர்கள் என்றால் தங்களையும் பிடித்துவிடும்

ஆனால் ஒன்று இன்றையகளநிலையை கருத்தில் எடுக்காத எந்த முடிவும் எழுத்தும் விதண்டாவாதமே.

இதேநேரம் இன்று தமிழரது கொள்கைகள் அல்லது வீரம் பற்றி கதைப்பவர்களும் இதற்குள்ளேயே அடக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்குட்டி!! ஓய்வு பெற்றபின் கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த பேராசிரியர் மேல் உங்களுக்கு விசுவாசம் இருந்தால், தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் பணிகளில் அவரை ஈடுபட வையுங்கள்.

இதனை எழுதுகின்ற ஆசான் மட்டும் இப்ப எங்கிருந்து எழுதுகின்றார், யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டா? இப்படி இப்படி இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் வெறும் விசைப்பலகையில் வீர வசனம் எழுதாமல் தாமே போய் அங்கு அரசியல் செய்தால் என்ன?

இப்படி கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும்

அதனால்தான் களநிலையை யோசித்து யோசித்து எழுதுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் எழுதுகின்றேன்

நான் கூட்டமைப்பை உடைக்கக்கூடாது என்றே எழுதுகின்றேன்

ஆனால் மிகவும் வருந்தத்தக்க விடயம் என்னவெனில் இத்தனை பிரிவுகளுக்கும் சிக்கல்களுக்கும் வசைகளுக்கும் தூபம்போட்டோர் சிலர் யாழ். களத்திலிலுள்ளனர் என்பதுதான்.

இதை ஆரம்பம் முதல் நான் சுட்டிக்காட்டினேன்

வாதாடினேன்

ஓரம் கட்டப்பட்டேன்

ஆனால்

இன்று செல்வராசா கஜேந்திரன் அவர்கள் சொல்லியதாக ஒரு செய்தி பார்த்தேன்

டக்லசு வென்றாலும் பரவாயில்லை

கூட்டமைப்பு தோக்கணும் என்று ...

அதே கணக்கெடுப்பு இங்கு முன்பே நடத்தி பல ஆயிரம் கருத்துக்கள் டக்லசுக்காக எழுதியாச்சு....

இது தவறான கருத்து.. அவர் யாழ்ப்பாணத்தில்தான் இருக்கிறார்... பொய்யான கருத்துக்களைபரப்பாதிங்க, யாழ்ப்பாணத்தில் இருக்க வேண்டும் எண்ட வைராக்கியத்தில் அவர் அங்கு இருக்கிறார், ஆனா நீங்க அபாண்டமா பளி போடுறிங்க...

நாய்க்குட்டி, உங்கள் பேராசிரியர் கொழும்பு தெற்கில் ஓரிடத்தில் வாழ்ந்து வந்தார். எனக்கு தகவல் தந்தவர் முகவரியையும் தந்துள்ளார்.

Edited by நிழலி
நீக்கப்பட்ட கருத்துக்கு எழுதிய பதிலின் பகுதி நீக்கப்பட்டது

இதனை எழுதுகின்ற ஆசான் மட்டும் இப்ப எங்கிருந்து எழுதுகின்றார், யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டா? இப்படி இப்படி இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் வெறும் விசைப்பலகையில் வீர வசனம் எழுதாமல் தாமே போய் அங்கு அரசியல் செய்தால் என்ன?

பிழம்பு! கடந்த பல வருடங்களாக கஷ்டப்படும் மக்களுடன் இருப்பதால் தான் எழுதுகிறேன்.

தெருக்களிலும், கடற்கரைகளிலும், காடுகளிலும், மருத்துவமனைகளிலும் நித்திரை கொண்டு மக்களுக்கும் ஏனையவர்களுக்கும் உதவியவன், இன்றும் உதவி வருபவன் என்ற அடிப்படையில், அனைத்து தகுதிகளுடன் தான், எழுதிவருகிறேன். பல அவலங்களை நேரில் கண்டவன். வடக்கு - கிழக்கு - மலையகம் அனைத்து பகுதிகளிலும் உள்ள கஷ்டப்பட்ட மக்கள் பலர், இடம்பெயர்க்கப்பட்டு மீண்டும் வாழ்வைத் தொடங்கப் போராடும் மக்கள், சுயநலமற்ற களத்து வீரர்கள் பலர் என்னை அறிவார்கள்.

Edited by Aasaan

இது தங்களுக்கு மட்டும் தான் சொந்தமா..?

எங்களை விசாரித்தீர்களா...?

மன்னிக்கவும் ஆசான், உங்களைப் பற்றி அறியாமல் எழுதிவிட்டேன். நீங்கள் உங்களைப் பற்றி எழுதிய அனைத்தும் உண்மையாக இருக்கும் என்று கருதி மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன், மன்னிக்கவும்.

இது தங்களுக்கு மட்டும் தான் சொந்தமா..?

எங்களை விசாரித்தீர்களா...?

சொலுங்கள் விசு! உங்களைப் பற்றி சொல்லுங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

இது தங்களுக்கு மட்டும் தான் சொந்தமா..?

எங்களை விசாரித்தீர்களா...?

நீங்கள் பாரிஸில்தானே இருக்கின்றீர்கள் :rolleyes:

அப்படிப்பட்டவர்கள்,

........ தமிழின படுகொலையாளர்களுடன்,

........ தமிழின விரோதிகளுடன்,

........ தமிழர் சொத்துக்களை அபகரிப்பவர்களுடன்,

........ தமிழரை இழிவு செய்பவர்களுடன்,

........ சுயநலத்துக்கு தமிழர் நட்பு தேடுபவர்களுடன்,

........ தமது அயோக்கியத்தனத்தை மறைப்பதற்கு தமிழர் நட்பு தேடுபவர்களுடன்,

........ தமிழரை அழிக்க / அழித்துக்கொண்டு தமிழர் நட்பு தேடுபவர்களுடன்,

........ ............,

........ ............,

தற்போது இப்படியானவர்கள் மிஞ்சி இருக்கின்றனர். இதற்குள் அடங்க மறுப்பவர்கள் அழிவைத்தான் காணவேண்டிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்த அத்தனையையும் 30 வருடமாக கொடுத்தவன்

கிருபன் பரிசில் தொடர்பிருந்தால் கேளுங்கள்

Edited by விசுகு

மன்னிக்கவும் ஆசான், உங்களைப் பற்றி அறியாமல் எழுதிவிட்டேன். நீங்கள் உங்களைப் பற்றி எழுதிய அனைத்தும் உண்மையாக இருக்கும் என்று கருதி மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன், மன்னிக்கவும்.

மன்னிப்பு கேட்பதற்கு நீங்கள் எதுவும் தவறாக கேட்கவில்லையே! உங்கள் கேள்விகள் நியாயமானவை. உங்கள் கேள்விகளை மதித்துத் தான் பதில் எழுதினேன்.

நான் தாயகத்தில் இருந்துகொண்டு கத்தியின் மேல் நடப்பதால், பல காரணங்களால், என்னை உங்களுக்கு அடையாளம் காட்டமுடியாமை தான் எனது இக்கட்டான நிலைமை. இன்று வவுனியா அருகில் உள்ளேன்.

நான் கடந்த டிசெம்பர் வரை பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை எங்குமே முன்வைக்காதவன். உரியவர்களுடன் மட்டும் நேரடியாக கதைத்துளேன். எனினும் நான் அரசியல்வாதி அல்ல. சில காரணங்களுக்காக, பணிப்பளுவை குறைத்தமையால், உங்களுடன் யாழ் களத்தில் எனது கருத்துக்களை வைக்கிறேன். எனது அனுபவங்கள் காரணமாக எனது கருத்துக்கள் கடுமையாக இருக்கிறதுபோல உணர்கிறேன். மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுபவங்கள் காரணமாக எனது கருத்துக்கள் கடுமையாக இருக்கிறதுபோல உணர்கிறேன். மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன்.

ஐயா

தங்களது ஆவேசம் புரியாதவனல்ல யான்.

30 வருடங்களுக்கு முன்பிருந்து சில மாதங்களுக்கு முன்வரை இதையே செய்து வந்தவன்யான்.

தைப்போல கதைப்பவர்கள் எழுதுபவர்கள் கிடைக்கமாட்டார்களா என்று தேடி தேடி அலைந்தவன் யான்.

ஆனால் இன்று எமது நிலையை அளந்து கொண்டு களமிறங்கவே முயல்கின்றேன்

நோக்கம் ஒன்றாயினும் வழிகள் மாறுகின்றன. என்பது எம்மை பிரித்து எம் இனத்துக்கு மேலும் துன்பங்களை கொடுத்துவிடுமோ என்றே ஏங்கி எழுதினேன்தங்களது கடமைகளுக்கு தலைவணங்குகின்றேன்

நன்றி

Edited by விசுகு

தற்போது இப்படியானவர்கள் மிஞ்சி இருக்கின்றனர். இதற்குள் அடங்க மறுப்பவர்கள் அழிவைத்தான் காணவேண்டிவரும்.

கிருபன், நாம் சாகப் பயப்படவில்லை!

ஆனால் அதற்குமுன், சிதறியிருக்கும் தமிழினத்தை, நம்பிக்கையுடைய, வலிமையுடைய, ஒற்றுமையான இனமாக மாற்றும் முயற்சி பலன் தந்தால் - அதுவொன்றே ஆனந்தமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பு கேட்பதற்கு நீங்கள் எதுவும் தவறாக கேட்கவில்லையே! உங்கள் கேள்விகள் நியாயமானவை. உங்கள் கேள்விகளை மதித்துத் தான் பதில் எழுதினேன்.

நான் தாயகத்தில் இருந்துகொண்டு கத்தியின் மேல் நடப்பதால், பல காரணங்களால், என்னை உங்களுக்கு அடையாளம் காட்டமுடியாமை தான் எனது இக்கட்டான நிலைமை. இன்று வவுனியா அருகில் உள்ளேன்.

நான் கடந்த டிசெம்பர் வரை பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை எங்குமே முன்வைக்காதவன். உரியவர்களுடன் மட்டும் நேரடியாக கதைத்துளேன். எனினும் நான் அரசியல்வாதி அல்ல. சில காரணங்களுக்காக, பணிப்பளுவை குறைத்தமையால், உங்களுடன் யாழ் களத்தில் எனது கருத்துக்களை வைக்கிறேன். எனது அனுபவங்கள் காரணமாக எனது கருத்துக்கள் கடுமையாக இருக்கிறதுபோல உணர்கிறேன். மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன்.

நன்றி.... நானெல்லாம் நல்ல வசதியான கணணி வேலையில் அமெரிக்க பிரதேசத்தில் இருந்து கொண்டு விண்ணாளம் கதைப்பவர்கள். எனவே உங்களை போல் நானில்லை... உங்கள் எழுத்தில் பல நேரம் தவறான பிரயோகங்களை பார்த்திருக்கன், ஆனால் நிச்சயம் அவற்றை மாற்றுவீர்கள் என நம்புறேன்

  • தொடங்கியவர்

நாய்க்குட்டி, உங்கள் பேராசிரியர் கொழும்பு தெற்கில் ஓரிடத்தில் வாழ்ந்து வந்தார். எனக்கு தகவல் தந்தவர் முகவரியையும் தந்துள்ளார்

.

முகவரி எனக்கும் தெரியும், ஆனால் அவர் அங்கு இருக்கவில்லை.. அவர் யாழ்ப்பாணத்திலேயே இருந்தார், இருக்கின்றார், ஓய்வு பெற்றபின் தனியார் பல்கலைகழகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் தெடங்க உதவியாக இருந்தவர்.. மற்றும் அந்த பல்கலைகழக யாழ் கிளை நிர்வாகியாகவும் இருந்தவர், மனுதாக்கல் செய்தபோதுதான் அப்பதவியிலிருந்து விலகினார், இது தான் உண்மை..

நீங்கள் யாரெண்டு எனக்கு தெரியாது... நான் உங்களுக்கு எதிராக கதைக்கவில்லை... உங்கள் கருத்தையே மறுக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், நாம் சாகப் பயப்படவில்லை!

ஆனால் அதற்குமுன், சிதறியிருக்கும் தமிழினத்தை, நம்பிக்கையுடைய, வலிமையுடைய, ஒற்றுமையான இனமாக மாற்றும் முயற்சி பலன் தந்தால் - அதுவொன்றே ஆனந்தமாக இருக்கும்.

நல்லது. தங்களைப் போன்றவர்களின் தேவை/சேவை தமிழினத்திற்குத் தொடர்ந்தும் இருக்கவேண்டும்.

ஆனால் அதற்குமுன், சிதறியிருக்கும் தமிழினத்தை, நம்பிக்கையுடைய, வலிமையுடைய, ஒற்றுமையான இனமாக மாற்றும் முயற்சி பலன் தந்தால் - அதுவொன்றே ஆனந்தமாக இருக்கும்.

ஆனால் அண்ணையின் எழுத்தைப் பார்த்தால் அப்படியாகத்தெரியவில்லை,குட்டையை கலக்கி மீன் பிடிப்பது போலல்லோ படுகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.