Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகெங்கும் உள்ள தமிழ் எதிலிகள் திருப்பி அனுப்பப்படலாம்: அமெரிக்க தமிழர் செயலவை

Featured Replies

உலகெங்கும் உள்ள தமிழ் எதிலிகள் திருப்பி அனுப்பப்படலாம்: அமெரிக்க தமிழர் செயலவை

மேற்கு நாடுகளில் தஞ்சம் அடைந்து வாழும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படக்கூடிய ஆபத்து முகிழ்த்து வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்த எச்சரிக்கையை, மொத்தத்தில் கவனயீர்ப்பை அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவை [united States Tamil Political Action Council - USTPAC ] முன்னெடுத்துள்ளது.

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது.

அதனால் இலங்கையில் பூரண அமைதியும் சமாதானமும் உண்டாகிவிட்டதாக வெளியுலகத்தை நம்ப வைக்கும் ராஜதந்திரப் பிரசித்தம் தடல்புடலாக நடை பெற்று வருகிறது.

இத்தகைய ஒரு சூழலில் பின்னணியில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகம் [u. N. H. C. R. ] மேலை நாடுகளில் தஞ்சம் அடைந்த ஈழத் தமிழர்களையும் அரசாங்கத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துடைய சிங்களவர்களையும் திருப்பி அனுப்புவதற்கு ஏதுவான ஒரு நிலைப்பாட்டுக்கு வரக்கூடும் என்று அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவை அச்சம் தெரிவித்திருக்கிறது.

அகதிகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டல்களில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு – அவற்றைப் புதுப்பிப்பதற்கு – U. N. H. C. R. உத்தேசித்து வருவதாகத் தகவல்கள் கசித்துள்ளதாக அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவை தனது அறிக்கையில் பிரஸ்தாபித்துள்து.

அகதிகளை “”அளந்து” கொள்வதற்காக, U. N. H. C. R. இலங்கையின் தற்போதைய சூழ்நிலையை மேலோட்டமாகக் கணித்து மதிப்பீடு செய்து, அகதிகளுக்கான அடிப்படைப் பிரமாணங்களை மாற்றி அமைத்தால், புதுப்பித்தால் – அதனால் மேலை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழர்கள் மட்டுமன்றி, அரசாங்கத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துள்ள சிங்கள மக்களும் கூடப் பாதிக்கப்படுவர் என்று அமெரிக்கத் தமிழர் செயலவை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது.

உத்தேச புதிய பிரமாணங்களின் பிரகாரம் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் சித்திரவதையையும், ஏன் மரணத்தையும் கூட எதிர் நோக்க நேரிடலாம் என்று அமெரிக்கத் தமிழர் செயலவை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2009ஆம் ஆண்டுக்குரிய மனித உரிமைகள் அறிக்கை, இலங்கையில் நிலவும் சூழலை வெகு தெளிவாகச் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் அமெரிக்கத் தமிழர் செயற்பாட்டுக் குழு எடுத்தியம்பியுள்ளது.

யுத்தம் நடைபெற்ற பகுதிகளுக்கு அப்பால் உள்ள பிரதேசங்களில் காணாமற் போதல், படுகொலைகள், துணை இராணுவக் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கல் கொலைகள் அரசாங்கத்திற்குத் தெரிந்தோ அல்லது ஆசீர்வாதத்துடனோ நடைபெற்றன என்று அந்த அறிக்கையில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில், பின்னணியில், அகதிகளைப் பாதுகாப்பதற்கான வழி காட்டல்களையும் பிரமாணங்களையும் மேலெழுந்த வாரியாக மாற்றி அமைத்தால், மேற்கு நாடுகளில் தஞ்சம் அடைந்த தமிழர்கள், மிகக் குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் இங்கு வந்து தமது உயிர்களைக் கூட இழக்க நேரிடும். சித்திரவதை மற்றும் கொடுமைகளை அனுபவிக்க நேரிடும்.

பொய்யான குற்றச்சாட்டுக்களின் பேரில் இளைஞர்கள் நீண்ட காலத்திற்குத் தடுத்து வைக்கப்படலாம்.

இத்தகைய ஒரு நிலைக்களனில், வெளிநாடுகளில் தஞ்சம் பெற்றுள்ள தமிழர்களுக்கும் மாற்றுக் கொள்கையுடைய சிங்களவருக்கும் அகதி அந்தஸ்தை வழங்குவதற்குப் புதிதாக நிர்ணயிப்பதற்கான சிபார்சுகளை, பிரமாணங்களை, வழி காட்டுதல்களை வகுப்பதற்கு முன்னர், U. N. H. C. R. இலங்கை நிலைவரம் குறித்துச் சரியான மதிப்பீட்டைச் செய்வது மிக முக்கியம்.

தமது சொந்த அதிகாரிகளைக் கொண்டு இப்போதைய நிலையைப் பூரணமாக, மிக ஆழமாக, அவசரப்படாமல் மதிப்பீடு செய்வதே நல்லது.

அதன் பின்னர் உண்மை நிலையைப் பகுத்துணர்ந்து, வேண்டுமானால் புதிய வழிகாட்டுதல்களையும் பிரமாணங்களையும் வகுக்கலாம்.

மக்களின் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் U. N. H. C. R. மனிதாபிமானத்துடன் செயற்படும் என நம்புகிறோம்.

அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவைக்கு ஏற்பட்டுள்ள அச்சம் நியாயமானது என்பதனை U. N. H. C. R. மனித மாண்புடன் சீரமைக்கும் என்றும் எதிர் பார்க்கலாமா…?

U. N. H. C. R. என்ற பெரு விருட்சம் இயற்கையினாலும், வெவ்வேறு நாட்டு அரசுகளினாலும் முறையே வாழ் வாதாரங்களையும் வாழ்வு உரிமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு நிழல் கொடுக்கும் நிறுவனம்.

ஆகையால் இது விடயத்தில் உலகளாவிய மட்டத்தில் செயற்படும் அந்த அமைப்பு அவசரப்படாமல், எடுப்பார் கைப்பிள்ளையாக மாறாமல், அதற்கு வேண்டிய நிதானத் துடன் செயற்படும் என்று நம்பலாமா?

http://meenakam.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோ....வயித்தில புளிய கரைச்சு ஊத்தாதேங்கோ. :)

யோ....வயித்தில புளிய கரைச்சு ஊத்தாதேங்கோ. :)

உங்களுக்கு தான் எந்த பிரச்சினையும் இல்லையே. ? பிறகு ஏன் கவலை.? அந்த மாதிரி வாழவைப்பாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்நாடுகளில் வரும் கோடைகாலவிடுமுறைகளின் பின் புதிய அத்தியாயங்கள் நிறைவேறும்.(கொழும்புக்கு சாதகமாக)

அதன் பின்.....

மட்டுவில் கத்தரிக்காயும்...

நாகர்கோவில் மீனும்...

பூனகரி அரிசியும்...

மட்டக்களப்பு சம்பாவும்...

பருத்தித்துறை வடையும்.....

மீசாலை பலாப்பழமும் கறுத்தைக்கொழும்பானும்...

வரணி கருப்பணியும்....

பளை தேங்காயும்...

சுடச்சுட புலம்பெயர்மக்களுக்கு கிடைக்கும்.

இதன் பலாபலன்கள்...உண்மையான எதிலிகளின் வாழ்க்கை?

  • கருத்துக்கள உறவுகள்

யோ....வயித்தில புளிய கரைச்சு ஊத்தாதேங்கோ. :)

நீங்கள் வாழுகிற நாட்டில குடியுரிமை பெற்றால் பயப்படத்தேவையில்லை. அல்லாவிட்டால் குடியுரிமை பெற்றவராய்ப் பார்த்து கல்யாணம் கட்டுங்கோ.

நீங்கள் வாழுகிற நாட்டில குடியுரிமை பெற்றால் பயப்படத்தேவையில்லை. அல்லாவிட்டால் குடியுரிமை பெற்றவராய்ப் பார்த்து கல்யாணம் கட்டுங்கோ.

இப்பிடியும் ஒரு பிழைப்பு :):rolleyes::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாமில் எத்தனை பேர் எமது நாடு அரசியல், தலைவர்களுக்கும் உலக, ஐநா மற்றும், மனித உரிமை அமைப்புகளின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதுகிறோம்?

நாமில் எத்தனை பேர் எமது நாடு அரசியல், தலைவர்களுக்கும் உலக, ஐநா மற்றும், மனித உரிமை அமைப்புகளின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதுகிறோம்?

என்னெண்டு? திருப்பி அனுப்ப வேண்டாமேண்டோ?

இதுக்கு முன்னம் கனக்கப் பேர் எழுதவில்லைத்தான் அனால் இனிப் பாருங்கோ கருனாநிதிய தந்தியடிச்சு வேல்லப்போரம்..

-

d'nt wory ... the earth gose like this ...

& we are the smart arctic peoples... so

we gona build a country like this below... ham... hm...! non! ... a bit diferant ... may be in a big ship like ... ...?!

but remember ... u can only eat fish & fish ! :(:D ... watch !!

-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.