Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்நகர் சிங்கள மயமாகின்றது - கூட்டமைப்பு வேட்பாளர் கவலை

Featured Replies

யாழ்நகர் சிங்கள மயமாகின்றது - கூட்டமைப்பு வேட்பாளர் கவலை

யாழ் நிருபர்

சனிக்கிழமை , ஏப்ரல் 3, 2010

எமது மண் ஆக்கிரமிக்கப்படுகின்ற அதேவேளை, எமது மக்களுக்குச் சொந்தமான அனைத்து வளங்களும் சுரண்டப் படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வரணியில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வரு மாறு எமது மண்ணில் இருந்து எமது மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் எமது மக்கள் ஒவ்வொரு வேளை உணவுக்காகவும் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

தமது சொந்தங்களைப் பிரிந்து மீள முடியாத சோகத்தில் வாடும் எமது மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடி யாது முள்கம்பி வேலிகளுக்குள் முடக்கப் பட்டுள்ளனர். எமது மக்களுக்குச் சொந்தமான கடற் பரப்பில் அந்நிய மீனவர்கள் மீன்பிடித்த லில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர் தாயகக் கடற்பரப்பில் பெரும்பான்மை மீன வர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு எமது மக் களுக்குச் சொந்தமான மீன் வளத்தை அள்ளிச் செல்கின்றனர்.

எமது பகுதிகளில் அபிவிருத்தி, புனரமைப்பு எனக் கூறி மேற்கொள்ளப்படும் வேலைகளில் சிங்களவர்களே ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். ஆனால் எமது படித்த இளைஞர்கள் எத்தனையோ ஆயிரம் பேர் இன்னமும் வேலையில்லாமல் நாள்க ளைக் கழிக்கின்றனர். பட்டதாரிகளுக்கு வாக்குறுதிகள் இதனை விடவும் பட்டம் பெற்ற பட்ட தாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.

ஆனால் வேலையற்ற பட்டதாரிகளை அழைத்து தமக்கு வாக்களிக்க வேண்டும், தமக்காக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடவேண் டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் சிங்கள வர்த்தக நகரமாக மாறிக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பா ணத்தின் பிரதான தெருக்கள் எல்லாம் சிங்களவர்களே திரிகின்றார்கள். தென்னி லங்கையில் இருந்து யாழ்ப்பாணம் வரு கின்ற சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கின்றார்கள்.

தென்னிலங்கையில் இருந்து வருகின்ற சிங்களவர்களின் பணம் யாழ்ப்பா ணத்தில் உள்ள தமிழர்களுக்குச் சேரக் கூடாது என் பதற்காக தென்னி லங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப் பட்டுள்ள சிங்கள வர்த்தகர்கள் யாழ்ப் பாணத்தின் தெருக்களை ஆக்கிரமித்துள்ளார்கள்.

வெளியிலிருந்து வருகின்ற சிங்களவர்கள் பொருள்களை யாழ்ப்பாணத்தில் தெருவோர விற்பனையில் ஈடுபடும் சிங்களவர்களிடமே பெற்றுச் செல்கின்றனர். இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை.

தமிழ் மக்கள் எவரும் வெற்றிலைச் சின் னத்திற்கு வாக்களிக்கக் கூடாது. அவ்வாறு வாக்களிப்பதாக இருந்தால் அது தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று அரசு சர்வதேசத்திற்கு சொல்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

ஈ.பி.டி.பி. கட்சி வீணைச் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டிருந்தால் அவர்களின் ஆதரவாளர்கள் அந்தச் சின் னத்திற்கு வாக்களிப்பதைப் பற்றி யோசித் திருக்கலாம். காரணம் அந்தக் கட்சியும் தமிழ்க் கட்சியே என்பதால் ஆனால் அந்தக் கட்சியும் வெற்றிலைச் சின்னத் தின் கீழேயே போட்டியிடுகின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கையில் வாழ்ந்தாலும் சரி சர்வதேசத்தில் வாழ்ந்தாலும் சரி வன்னியில் மக்கள் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டபோது அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, நடைபெறவுள்ள நாடாளுமன் றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தெரிவை உறுதிப்படுத்தி, மக்களது உள்ளார்ந்த நிலைப்பாடு என்ன என்பதை இடித்துரைப்பார்கள் என்றார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88

என்னே ஒரு அறிவார்த்தமான சிந்தனை. உடம்பெல்லாம் சிலிர்க்குது.

யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் யாழ்நகர் இன்று சிங்கள வியாபாரிகளின் ஆதிக்கத்துடன்தான் காட்சியளிக்கிறது.

யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் யாழ்நகர் இன்று சிங்கள வியாபாரிகளின் ஆதிக்கத்துடன்தான் காட்சியளிக்கிறது.

கொழும்பிலை தமிழர்கள் செளிப்பாக்கின மாதிரியா அண்ணை...??

கொழும்பிலை தமிழர்கள் செளிப்பாக்கின மாதிரியா அண்ணை...??

இல்லையண்ண, யாழ்ப்பாணத்தை செழிப்பாக்க வந்திருக்கினம் எண்டு கருத்தெடுக்கிறதைவிட, தங்கள செழிப்பாக்க வந்திருக்கினம் எண்டு கருத்தெடுக்கிறதுதான் பொருத்தமாயிருக்கும். :)

இல்லையண்ண, யாழ்ப்பாணத்தை செழிப்பாக்க வந்திருக்கினம் எண்டு கருத்தெடுக்கிறதைவிட, தங்கள செழிப்பாக்க வந்திருக்கினம் எண்டு கருத்தெடுக்கிறதுதான் பொருத்தமாயிருக்கும். :)

கிழக்கிலை போய் சிங்களவன் வளங்களை அள்ளுறான் எண்டு சொன்னால் நம்பலாம்... வன்னியிலை விவசாய காணியை எல்லாம் பிடிக்கிறான் எண்டாலும் நம்பலாம்... மன்னாரை வளங்களை வளைக்க வந்து நிக்கிறான் எண்டாலும் சரி... யாழ்ப்பாணத்திலை இருக்கிற சனத்துக்கே அங்கை விளையிறதுகள் காணாது... அதுக்கை இருக்கிற பனங்காயையும் தேங்காயையும் கொண்டுபோக வந்திட்டான் எண்டு போடாதேங்கோ...

வேணும் எண்டால் சொல்லுங்கோ மீன் பிடிக்க வந்திட்டான் எண்டு அதையும் ஏற்கலாம்... செத்தல் மிளகாய் புகையிலை எல்லாம் சிங்களவன் சுரண்டுகிறான் எண்டு சொல்லலாமே...?

நன்றாய் தான் இனவாதத்தை விதைகின்றீர்கள். நீங்கள் புங்குடுதீவு, காரைநகரில் இருந்து சென்று தென்னிலங்கையில் கடைகளை திறக்கலாம். ஆனால் ஒரு சிங்களவன் யாழ்பாணத்தில் வந்து ஒரு கடை திறந்தால் அது உடன் சிங்கள மயமாகின்றது? நல்ல நீதியடா அப்பு. புங்குடுதீவில் பிறந்த நீங்கள் கொழும்பிலே புகையிலை விக்கும் போது காலியில் பிறந்த ஒரு சிங்களவன் வந்து காங்கேசன்துறையில் ஒரு கடையை திறந்தால் என்ன தப்பா? அது தப்பு என்றால் ஏன் நீங்கள்தென்னிலங்கைக்கு போகின்றீர்கள்?

கொழும்பில இருந்து வாற சிங்களவன் எல்லாம் தமிழன்ர கடையில சாமான் வாங்க கூடாது எண்டு பிரசாரம் செய்யுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாய் தான் இனவாதத்தை விதைகின்றீர்கள். நீங்கள் புங்குடுதீவு, காரைநகரில் இருந்து சென்று தென்னிலங்கையில் கடைகளை திறக்கலாம். ஆனால் ஒரு சிங்களவன் யாழ்பாணத்தில் வந்து ஒரு கடை திறந்தால் அது உடன் சிங்கள மயமாகின்றது? நல்ல நீதியடா அப்பு. புங்குடுதீவில் பிறந்த நீங்கள் கொழும்பிலே புகையிலை விக்கும் போது காலியில் பிறந்த ஒரு சிங்களவன் வந்து காங்கேசன்துறையில் ஒரு கடையை திறந்தால் என்ன தப்பா? அது தப்பு என்றால் ஏன் நீங்கள்தென்னிலங்கைக்கு போகின்றீர்கள்?

என்னமா மனித நேயம்? என்னா நியாயரீகம்?

இவங்கள்தான் புத்தருக்கு பிறகு வந்த புத்தர்களா இருப்பாங்களோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்சேகா வந்திருந்தா கவலையா இருந்திராது. :)

பொன்சேகா வந்திருந்தா கவலையா இருந்திராது. :)

பொன்ஸ் வந்து இருந்தால் வந்த சிங்களவர் எல்லாம் விருந்தாளிகள் எல்லோ...

கடைசியில் இவர்கள் நாடோடிகள் (குறவர்கள்) போன்று தான் வாழப்போகின்றனர். பயத்தில் ஒழித்திருக்கும் நாடுகளில் இவர்களை அந் நாட்டவர்கள் சிறீலங்கன் என்று சொல்லுவார்கள். ஆனால் இவர்களால் சிறீலங்காவை புறம் சொல்லாமல் இருக்க முடியாது, அதனால் அங்கு போகவும் முடியாது. அதனால் தான் சொல்கின்றேன் பாவம் இவர்கள் தான் இனி வரும் காலங்களில் நாடற்ற நாடோடிகள் ஆகப்போகின்றனர்.

நாடோடிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

  • தொடங்கியவர்

நாடோடிகள் எண்றால் வேறை மாதிரி, அர்த்தமும் வேறை அண்ணை. ஒழுங்கா எங்கயாவது பொது அறிவை இன்னும் வளர்த்து வேற விதமாக முயற்ச்சி பண்ணுக்கள்.

நாடோடிகள் எண்டதுக்கு ஆங்கிலத்தில் Gypsy எண்று சொல்கிறார்கள்..

அவர்களுக்கான வரைவிலக்கணம்.

Gypsy has several developing and overlapping meanings under English Law. Under the Caravan Sites and Control of Development Act 1960 Gypsies are defined as "persons of nomadic habit of life, whatever their race or origin, but does not include members of an organised group of travelling showmen, or persons engaged in travelling circuses, travelling together as such.",[6] this definition includes such groups as New Age Travellers, as well as Irish Travellers and Romany.[7][8]

Gypsies of Romany origins have been a recognised ethnic group for the purposes of Race Relations Act 1976 since Commission for Racial Equality v Dutton 1989 and Irish Travellers in England and Wales since O'Leary v Allied Domecq 2000 (having already gained recognition in Northern Ireland in 1997

http://en.wikipedia.org/wiki/Gypsy

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாய் தான் இனவாதத்தை விதைகின்றீர்கள். நீங்கள் புங்குடுதீவு, காரைநகரில் இருந்து சென்று தென்னிலங்கையில் கடைகளை திறக்கலாம். ஆனால் ஒரு சிங்களவன் யாழ்பாணத்தில் வந்து ஒரு கடை திறந்தால் அது உடன் சிங்கள மயமாகின்றது? நல்ல நீதியடா அப்பு. புங்குடுதீவில் பிறந்த நீங்கள் கொழும்பிலே புகையிலை விக்கும் போது காலியில் பிறந்த ஒரு சிங்களவன் வந்து காங்கேசன்துறையில் ஒரு கடையை திறந்தால் என்ன தப்பா? அது தப்பு என்றால் ஏன் நீங்கள்தென்னிலங்கைக்கு போகின்றீர்கள்?

ஓ நீங்கள் ஒரே சட்டம்(equal rights) எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.அப்போ புத்தன் அல்லாத ஒருவர் இலங்கை சனநாயக குடியரசின் சனாதிபதியாக வரமுடியாமல் சட்டம் போட்டு வச்சிருக்கிறாங்களாம்!! இது ஏனுங்கோ? இதை பற்றியெலாம் நீங்கள் ஒண்ணுமே சொல்ல மாட்டீங்களா? அல்லது வசதிக்காக மறந்து விடுவீர்களா?

நன்றாய் தான் இனவாதத்தை விதைகின்றீர்கள். நீங்கள் புங்குடுதீவு, காரைநகரில் இருந்து சென்று தென்னிலங்கையில் கடைகளை திறக்கலாம். ஆனால் ஒரு சிங்களவன் யாழ்பாணத்தில் வந்து ஒரு கடை திறந்தால் அது உடன் சிங்கள மயமாகின்றது? நல்ல நீதியடா அப்பு. புங்குடுதீவில் பிறந்த நீங்கள் கொழும்பிலே புகையிலை விக்கும் போது காலியில் பிறந்த ஒரு சிங்களவன் வந்து காங்கேசன்துறையில் ஒரு கடையை திறந்தால் என்ன தப்பா? அது தப்பு என்றால் ஏன் நீங்கள்தென்னிலங்கைக்கு போகின்றீர்கள்?

நியாயமான கருத்துத்தான். ஆனால் நாங்கள் புகையிலை விற்கமட்டும்தான் போகிறம். அங்கு போகும் போது புகையில விற்பதுதான் எங்கட நோக்கம் பாருங்கோ.

"தெஹிவல"வில கோயில் கட்டினாலும் "தெஹிவல" என்றும் "தெஹிவல" தான். அதில் மாற்றமில்லை. ஆனால் காங்கேசன்துறையில கடையைப்போடுறவன்ர நோக்கம் வியாபாரமில்லை பாருங்கோ.

கடையைப்போட்ட கொஞ்சநாளில ஒரு அரசமரத்தை வைப்பான், பின்னர் அரச மரத்துக்கு கீழே ஒரு புத்தர் சிலையை வைப்பான், பிறகு காங்கன்சந்துறை வீதிக்கு ஒரு புதிய பெயர் வைப்பான், பிறகு கொஞ்சநாள் போக காங்கேசன் துறையையே புனித நகரமாக்கி அதற்கு புதிய பெயரையும் வைத்துவிடுவான்.

இப்படி நாம் கிழக்கில் இழந்த பகுதிகள் நிறைய இருக்கிறது. இதற்குத்தான் நாம் எல்லோரும் அஞ்சுகின்றோம். வேறொன்றுக்குமில்லை.

இதே போல தமிழர்கள் வாழ்ந்த அல்லது தமிழர்கள் கடை போட்ட சிங்கள பகுதிகள் தமிழ் கிராமங்களாக மாற்றப்பட்டிருக்கிறதா????????

பொன்சேகா வந்திருந்தா கவலையா இருந்திராது. :)

ஏன் இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை. உங்கட காட்டில இப்பவும் மழை தானே..........

" If you win, you need not have to explain.....

If you lose, you should not be there to explain !" - Adolf Hitler.

..........

Wenn du gewinnst, du brauchst nicht zu erklären

Wenn Sie verlieren, sollten Sie nicht da sein, um zu erklären

Adolf Hitler.

ஆஹா.... கையெழுத்து ஏதோ ஹிட்லர் போல் கம்பீரமாக நிற்கின்றது. அதை பயந்து வெளிநாடு ஓடி வந்த தாங்கள் இடுவது தான் வருத்தமாக உள்ளது.

Edited by விடிவெள்ளி

  • கருத்துக்கள உறவுகள்

நாய் கடித்தால் திருப்பிக்கடிப்பதால்....

என்னை நான் இழக்கவிரும்பவில்லை

அது என்னை சண்டைக்கு இழுக்கிறது

ஆனால்

அந்த சண்டைக்கு முன் அது சில நிபந்தனைகளுக்கு உட்படவேண்டும்

இல்லையென்றால் அந்த சண்டையில் தர்மம் இல்லை நீதியில்லை

வெற்றி தோல்வியும் நடுநிலையாய் இருக்கப்போவதில்லை.

அது போறவாறவரையெல்லாம் கடித்து..

எல்லோரும் சேர்ந்து அதை அடித்துக்கொல்லணும் என்ற முடிவு வரும் போது..

நானும் கல்லுடன் வருகிறேன். வருவேன்.

நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தநேரம்

எனது வர்த்தக பாட ஆசிரியர்

நாங்கள் எல்லோரும் எழுந்து வணக்கம் சொன்னதும் என்னைப்பார்த்து கேட்பார்

எப்படி புங்....புகையிலை வியாபாரம் எல்லாம் எப்படி போகுது என்று.....

நான் கொஞ்சம் மரியாதைக்கு பயந்தவன். அதனால் பதில் சொல்லமாட்டேன். அதுவே அவருக்கு சாதகமாகி காலை வணக்கத்துடன் இதையும் ஒரு கடமையாக சேர்த்துக்கொண்டார்.

ஆனால் அவருக்கு படிப்பிக்க தெரியாது. ஒரு மாணவரைக்கூப்பிட்டு வாசிக்க சொல்லிவிட்டு குறட்டை விட்டு தூங்குவார்

அந்த நாளும் வந்தது. வந்தார் காலை வணக்கத்துடன் எனது முறையையும் சேர்த்தார். ஆனால் அன்று அவரது நேரமோ என்னமோ இன்னொன்றையும் சேர்த்தார்.

அதுசரி முருகனை ஏன் கோவணத்துடன் விட்டீர்கள் புங்.... என்றார்.

நான் எழுந்து நிதானமாக சொன்னேன்.

அந்த கதையின் முழுவிபரமும் தெரியுமா தங்களுக்கு...

அவருடைய செருக்கு தாங்கமுடியாமல்தான் முருகனை மலைவரை கொண்டு போய் கோவணத்தோட விட்டிருக்கு.

நீங்கள் இனியும் இந்தமாதிரி என்னுடைன் தொடர்ந்தால் தங்களுக்கு அதுவும் இருக்காது என்று.

அன்றுடன் நிறுத்திக்கொண்டார்.

Edited by விசுகு

Wenn du gewinnst, du brauchst nicht zu erklären

Wenn Sie verlieren, sollten Sie nicht da sein, um zu erklären

Adolf Hitler.

ஆஹா.... கையெழுத்து ஏதோ ஹிட்லர் போல் கம்பீரமாக நிற்கின்றது. அதை பயந்து வெளிநாடு ஓடி வந்த தாங்கள் இடுவது தான் வருத்தமாக உள்ளது.

அண்ணா மன்னிச்சுக்கொள்ளுங்கோ, கடிநாய் என்று அறிந்தும், அறியாமல் வாலை மிதித்துவிட்டேன். தவறு என்னுடையதுதான்.

இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை காங்கேசன் துறையில கடை போட விடவில்லை என்பதுதானே. யார் தடுத்தா...நன்னா..போடுங்கோ.

அதுக்குப்போய்.....வெளிநாடு......கையெழுத்து....கிட்லர்.....அது இது எண்டு.. என்ன இது சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கு.

முடிந்தால் கருத்துக்கு கருத்தை எழுதி பழகவும். கையெழுத்துக்கு கருத்தெழுதுவது தங்களிடம் உள்ள கருத்து பஞ்சத்தையே காட்டுகின்றது.

என்ன விசுகு சும்மா ஒரு பேச்சுக்கு புங்குடுதீவு என்று சொன்னால் அப்பிடி பீல் பண்ணுறீங்க ? நிஜமா அது உங்களை பாதித்துவிட்டதா? சொறி விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் முடிய கூட்டமைப்பு வேட்பாளர் அவரவர் தெகுதியளில இருக்கவேணும்.

எங்கள அனுப்ப ஜேஆர் செய்த சதிக்க விழுந்திட்டமோ? :)

யாழ்நகர் சிங்கள மயமாகின்றது - கூட்டமைப்பு வேட்பாளர் கவலை

தேர்தல் முடிய கூட்டமைப்பு வேட்பாளர் அவரவர் தெகுதியளில இருக்கவேணும்.

எங்கள அனுப்ப ஜேஆர் செய்த சதிக்க விழுந்திட்டமோ? :)

அதாலைதான் தமிழர்கள் சிங்களவர்களை விட அதிக பணக்காறர்களாக இருக்கிறார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.