Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்!

Featured Replies

தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்!

இலங்கைத் தீவின் தேர்தல் திருவிழா ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. மகிந்த ராஜபக்ஷ விரும்பியது போல் மூன்றில் இரண்டு பங்கிற்கு நெருக்கமான அளவு ஆசனங்களைப் பெற்றுவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த முறை போலல்லாவிட்டாலும், 12 ஆசனங்களைப் பெற்று தமிழீழ மக்களது முக்கிய அரசியல் சக்தியாக மீண்டும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மீண்டும் ஒரு முக்கியமான அரசியல் தீர்மானத்திற்குரிய களம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு நீதியானதொரு தீர்வை வழங்க வேண்டும் என்ற சர்வதேச விருப்பங்களை மகிந்த ராஜபக்ஷ வழக்கம்போன்ற காரணத்தைச் சொல்லித் தப்பிக்க முடியாது. தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கான பலம் தமக்கு இல்லை என்று இப்போது தட்டிக் கழிக்க முடியாது. மகிந்த ராஜபக்ஷ உண்மையிலேயே அரசியல் அமைப்பில் மாற்றங்களைச் செய்து தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க விரும்பினால், அதற்குத் தேவையான மேலதிக அரசியல் பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சாத்தியமும் தற்போது உள்ளது.

தமிழ் வாக்காளர்களில் எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில் தற்போது, மீண்டும் தமிழீழ மக்களுக்கான அரசியல் பலமாக உருவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் காலம் அதிக அளவு கடமைகளைச் சுமத்தியுள்ளது. முன்பு போல அவர்களை நேர் வழியில் பயணிக்க வைக்க களத்தில் விடுதலைப் புலிகள் இல்லை. ஆனாலும், அவர்கள் விட்டுச் சென்ற இலட்சிய தாகம் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்திலும் கனலாகக் கனன்று கொண்டே உள்ளது. கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, ஒட்டு மொத்தமாக 22 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தமிழ் மக்கள் தற்போது அளவுக்கு அதிகமாக நம்பிக்கையைத் தொலைத்து விட்டு மௌனித்துப்போய் உள்ளார்கள். அவர்களை அதிலிருந்து மீட்டு, அவர்களிடம் எதிர்கால நம்பிக்கை ஊட்டும் பணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைத் தடுமாற்றமே புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் குறித்த நம்பிக்கையின்மை வெளிப்பட்டது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய முக்கிய கடப்பாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு. புலம்பெயர் தமிழர்கள் தமது விருப்பு வெறுப்புக்களுக்கும் அப்பால், ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளார்கள். ஈழத் தமிழர்களது விடுதலைக்காகவும், விடிவுக்காகவும் கடுமையாகப் போராடி வருகின்றார்கள். அவர்களது ஆத்மார்த்தமான உணர்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது தமிழீழம் குறித்த அக்கறைகளையும், அர்ப்பணிப்புக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கான பலமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இனியாவது நெருக்கமான உறவினைப் பேண முயல வேண்டும்.

தமிழீழத்திற்கு வெளியே, ஈழத் தமிழர்களின் பலமாக உருவாகிவரும் மக்கள் பேரவைகள், நாடு கடந்த தமிழீழ அரசு ஆகியவை ஈழத் தமிழர்களுக்கான மேற்குலக ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்தி வருகின்றன. புலம்பெயர் தேசம் எங்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது நடாத்தப்பட்ட மீள் வாக்கெடுப்பில் 98 வீதத்திற்கும் அதிகமான புலம்பெயர் தமிழர்கள் 'தமிழீழமே ஒரே தீர்வு' என்ற தமது விருப்பை நிலைநாட்டியுள்ளனர். எண்பது வீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் நிராகரித்த இந்தத் தேர்தல் மூலம் சிங்கள நாடாளுமன்றத்திற்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதற்கு மாறான ஒரு தீர்வை ஈழத் தமிழர்களிடம் திணிக்க முயலக் கூடாது. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் மட்டுமே தமிழீழ மக்களின் ஆணைக்குட்பட்டது. மாறாக, வேறு எந்தத் தெரிவானாலும் அவர்களிடம் மீண்டும் ஆணை பெற்றே தீர்மானிக்கப்பட வேண்டும். தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் விருப்பங்களுக்கு மாறான எந்தத் தீர்வும் நிரந்தரமானதாக இருக்க மாட்டாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரணமான அமைதி வாழ்வு வாழ்ந்த தமிழர்கள் தான் புயலாகச் சினந்து புலியாக மாறினார்கள். இப்போதும் அவர்களது அந்த மாற்றங்களுக்கான காரணங்கள் சிங்கள இனவாதிகளால் அதிகரிக்கப்பட்டே வருவதால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் திசை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களது இந்த மௌனம் நீடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ராஜபக்ஷக்களின் இந்த அரசியல் வெற்றிகள் ஈழத் தமிழர்கள் மீது இன வன்முறையையே தொடர்ந்தும் பிரயோகிப்பதற்குப் பயன்படுமானால், மீண்டும் அவர்கள் புலியாக எழுவது தவிர்க்க முடியாமல் போகும். அது, சிங்கள அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எப்படிப் பயணிக்கப் போகின்றது என்பதில்தான் தங்கியுள்ளது.

http://www.pathivu.com/index.php/news/6388/68//d,view/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு புலம்பெயர்ந்து இருப்பவர்களில் நாங்கள் பலரும் நினைக்கிறம்

புலம் பெயர் தமிழர்மட்டும்தான் புத்திஜீவிகள் எங்களுக்குமட்டும்தான் அரசியல்தெரியும்

அங்கு எம்தாயகத்திலுள்ளவர்களெல்லாம் ஒண்டுமே தெரியாதவர்கள்

அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது நாங்கள் சொல்வதைத்தான் அவர்கள் கேட்டுச் செயற்படவேண்டுமென்று

ஆனால் இங்கு எல்லாம் தெரிந்தவர்களென்று சொல்லிக்கோண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் எம்மைவிட

நன்றாகப் படித்தவர்கள் புத்திஜீவிகள் அரசியல் ஞானம் தெரிந்தவர்கள் நிறையவே தாயகத்தில் இருக்கிறார்கள்

அங்குள்ள மக்கள் ஒன்றும் தெரியாத ஆதிவாசிகள் அல்ல அவர்களுக்கும் சிந்தித்துச் செயற்படும் திறன் இருக்கிறது.

எவ்வளவோ பெரிய இழப்புக்களை நேரடியாகத் தங்கள் தோள்களில் சுமந்ததனால் அவர்கள் சற்றே சோர்ந்திருக்கலாம், குழப்பமடைந்திருக்கலாம்.

புலம்பெயர் எம்மிடமுள்ள சோர்வும் குழப்பமும்

ஒருவரது செயற்பாட்டை மற்றவர் குறைகூறுவதிலும் உள்ளமூர்கத்தனத்தையும் மடமையையும்விட அங்குள்ளவர்கள் எவ்வளவோ மேல்.

TNA செய்வதெல்லாமே சரியென்றோ அல்லது ஏனையவர்கள் எல்லோருமே தவறென்றோ சொல்லவரவில்லை எது சரி எது பிழை என்பதை அங்குள்ள மக்களே தீர்மானிக்கட்டும் தேவையற்று அனைத்திலும் நாம் மூக்கை நுழைக்கத்தேவையில்லை என்பதே எனது கருத்தாகும்

அங்குள்ள மக்கள் தீர்மானிக்கட்டும் இன்றைய நிலைமையில் தமக்கு எது தேவையென்பதை

அவர்கள் கேட்கட்டும் தாங்கள் எழுந்து தமது சொந்தக்கால்களில் நிற்பதற்கு எந்தவிதமான உதவிகளை நாம் செய்யவேண்டுமென்று அதைவிடுத்து நாம் நினைப்பதைத்தான் அவர்கள் செய்யவேண்டுமென்று

எமது விருப்புக்களை அவர்களிடம் திணிப்பது எவ்விதத்தில் நியாயம்.

சிங்களவன் தனது முடிவை அவர்கள்மேல் திணிக்கிறான். இன்னொருவிதத்தில் நாங்களும் இங்கிருந்துகொண்டு ஆளாளுக்கு ஒவ்வொருவிதமான முடிபுகளை அவர்கள்மேல் திணிக்கிறோம்.

இது தனது குழந்தைக்கு அளவான சட்டையை, குழந்தைக்கு பிடித்தமான சட்டையை வாங்கிக்கோடுப்பதைவிடுத்து தான் வாங்கிவைத்திருக்கும் ஒரு சட்டைக்கு அளவாகத் தன் குழந்தை வளரவேண்டும் என நினைக்கும் தந்தையின் மடமையை ஒத்ததாகத்தான் இருக்கிறது.

Edited by naanal

100 சதவீதம் உண்மை...

இப்போ இலங்கையில் அரசியல் செய்ய யாருக்கும் தடையில்லை.இப்பவும் புலம் பெயர்ந்த நாட்டில் இருந்துதான் தமிழருக்கான அரசியல் செய்யப் போகின்றோமென்பது கூளுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற கதைதான் .

பிள்ளகளை நன்றாக படிப்பிக்க வேண்டும்,தாங்கள் அடிக்கடி கொலிடேகள் செல்லவேண்டும்,அதிவிட கையில காசும் நல்லா பிழங்க வேண்டும் மொத்தத்தில் சகல சுகபோகமும் அனுபவிக்க வேண்டும்,பின்னர் சைட்டில இலங்கை பொலிடிக்ஸும் செய்ய வேண்டும.

இதாலதான் ஒன்றுமில்லாமல் உலமெல்லாம் அகதியாய் அலைகின்றோம்.

அரசியலில ஆர்வம் இருந்தால் புலம் பெயர்ந்தநாடுகளில் உங்கள் அரசியலைச் செய்து அதன் மூலம் நாட்டில இருக்கின்ற எங்கடை தலைமைகளுக்கு ஒரு பக்க பலமா இருக்கலாமே?

அதைவிடுத்து உலகமெங்கும் கூத்தாட காவடியாட நிற்கின்றார்கள்.என்ன செய்தாலும் பின்னால தொங்க நாலு விசுக்கோத்துக்கள் இருக்க மட்டும் இது தொடரும்.

தமிழீழ மக்கள் எனண்டால் புலம்பெயர்ந்த மக்களும்தான் அதுசரி புலம்பெயர்ந்த மக்களிட்ட பேசிறதெண்டால் யாரிட்ட பேசவேணும். உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டின்ர மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு சங்கம் ஒவ்வொரு அமைப்பு மொத்தமா ஒரு பட்டியல் போட்டு வெளியிட்டா எதிர்காலத்திக்காவது உதவிய இருக்கும்.

  • தொடங்கியவர்

இங்கு புலம்பெயர்ந்து இருப்பவர்களில் நாங்கள் பலரும் நினைக்கிறம்

புலம் பெயர் தமிழர்மட்டும்தான் புத்திஜீவிகள் எங்களுக்குமட்டும்தான் அரசியல்தெரியும்

அங்கு எம்தாயகத்திலுள்ளவர்களெல்லாம் ஒண்டுமே தெரியாதவர்கள்

அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது நாங்கள் சொல்வதைத்தான் அவர்கள் கேட்டுச் செயற்படவேண்டுமென்று

ஆனால் இங்கு எல்லாம் தெரிந்தவர்களென்று சொல்லிக்கோண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் எம்மைவிட

நன்றாகப் படித்தவர்கள் புத்திஜீவிகள் அரசியல் ஞானம் தெரிந்தவர்கள் நிறையவே தாயகத்தில் இருக்கிறார்கள்

அங்குள்ள மக்கள் ஒன்றும் தெரியாத ஆதிவாசிகள் அல்ல அவர்களுக்கும் சிந்தித்துச் செயற்படும் திறன் இருக்கிறது.

எவ்வளவோ பெரிய இழப்புக்களை நேரடியாகத் தங்கள் தோள்களில் சுமந்ததனால் அவர்கள் சற்றே சோர்ந்திருக்கலாம், குழப்பமடைந்திருக்கலாம்.

புலம்பெயர் எம்மிடமுள்ள சோர்வும் குழப்பமும்

ஒருவரது செயற்பாட்டை மற்றவர் குறைகூறுவதிலும் உள்ளமூர்கத்தனத்தையும் மடமையையும்விட அங்குள்ளவர்கள் எவ்வளவோ மேல்.

TNA செய்வதெல்லாமே சரியென்றோ அல்லது ஏனையவர்கள் எல்லோருமே தவறென்றோ சொல்லவரவில்லை எது சரி எது பிழை என்பதை அங்குள்ள மக்களே தீர்மானிக்கட்டும் தேவையற்று அனைத்திலும் நாம் மூக்கை நுழைக்கத்தேவையில்லை என்பதே எனது கருத்தாகும்

அங்குள்ள மக்கள் தீர்மானிக்கட்டும் இன்றைய நிலைமையில் தமக்கு எது தேவையென்பதை

அவர்கள் கேட்கட்டும் தாங்கள் எழுந்து தமது சொந்தக்கால்களில் நிற்பதற்கு எந்தவிதமான உதவிகளை நாம் செய்யவேண்டுமென்று அதைவிடுத்து நாம் நினைப்பதைத்தான் அவர்கள் செய்யவேண்டுமென்று

எமது விருப்புக்களை அவர்களிடம் திணிப்பது எவ்விதத்தில் நியாயம்.

சிங்களவன் தனது முடிவை அவர்கள்மேல் திணிக்கிறான். இன்னொருவிதத்தில் நாங்களும் இங்கிருந்துகொண்டு ஆளாளுக்கு ஒவ்வொருவிதமான முடிபுகளை அவர்கள்மேல் திணிக்கிறோம்.

இது தனது குழந்தைக்கு அளவான சட்டையை, குழந்தைக்கு பிடித்தமான சட்டையை வாங்கிக்கோடுப்பதைவிடுத்து தான் வாங்கிவைத்திருக்கும் ஒரு சட்டைக்கு அளவாகத் தன் குழந்தை வளரவேண்டும் என நினைக்கும் தந்தையின் மடமையை ஒத்ததாகத்தான் இருக்கிறது.

தாயகத்திலை இருக்கும் மக்களுக்கும் இங்கை இருக்கும் மக்களுக்கும் வித்தியாசம் அறிவு இல்லை... அங்கை மக்கள் அறிவோடை இருக்கினம் இங்கையும் அறிவோடை இருக்கினம்... ஆனால் சுதந்திரமாக கருத்து சொல்லும் நிலையில் இருக்கினம்...??

அங்கை இருப்பது எங்கட உறவுகள் தான்... அவர்களின் இன்னல்கள் எங்களை விட யாருக்கு தெரியும்.... நாங்கள் பேசாமல் யார் பேசுவது...??

இந்தத் தலைப்பில் இருக்கும் செய்தி புலத்தையும் சேர்த்துதான் தமிழ் ஈழ மக்கள் என்று சொல்லுது

இந்தச் செய்திக்கும் இந்த இணைப்பில் இருக்கும் செய்திக்கும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=70864

எழுதப்பட்ட கருத்துக்கள் மிகவும் சுவாரிசியமானது.

இரண்டு செய்திகளுக்கும் எத்தினை விதமான கருத்துக்கள் எத்தினைவிதமான வேறுபாடுகள்?

செய்திகளுக்குள் இருக்கும் ஒருமைப்பாடுகள் கருத்துக்களில் இல்லை. வேடிக்கை.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் தலைப்பில் இருக்கும் செய்தி புலத்தையும் சேர்த்துதான் தமிழ் ஈழ மக்கள் என்று சொல்லுது

இந்தச் செய்திக்கும் இந்த இணைப்பில் இருக்கும் செய்திக்கும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=70864

எழுதப்பட்ட கருத்துக்கள் மிகவும் சுவாரிசியமானது.

இரண்டு செய்திகளுக்கும் எத்தினை விதமான கருத்துக்கள் எத்தினைவிதமான வேறுபாடுகள்?

செய்திகளுக்குள் இருக்கும் ஒருமைப்பாடுகள் கருத்துக்களில் இல்லை. வேடிக்கை.

தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்!

தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் விருப்பங்களுக்கு மாறான எந்தத் தீர்வும் நிரந்தரமானதாக இருக்க மாட்டாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

http://www.pathivu.com/index.php/news/6388/68//d,view/

நான் இங்கு எனது வாதத்தில் திரு.சம்மந்தன் கூறியவிடயங்களை அலசியாராயவோ,

நாட்டிலுள்ள ஏளைவர்களின் நடவடிக்கைகளை ஆராயவோ இல்லை.

தாயகத்திலுள்ளவர்கள் புலம்பெயர் தமிழரின் எண்ணங்களைமீறிச் செயற்படக்கூடாதென்றவிதமாக

நண்பர் தயா எழுதியதற்குத்தான் மாற்றுக்கருத்தை முன்வைத்திருந்தேன்.

இது வேடிக்கையானதாகப் பட்டிருந்தால் நீங்கள் தப்பாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்றுதான் நினைக்கவேண்டும்.

மிகவும் இக்கட்டான போராட்டகாலத்தில் சுயநலத்துக்காக நாட்டைவிட்டுத் தப்பி ஓடிவந்துவிட்டு

இங்கு சொகுசாக இருந்துகொண்டு தாயகத்தில் அத்தனை பிரச்சனைகளுக்கும் நேரடியாக முகங்கொடுத்துக்கொண்டிருக்கும்,

அந்த மக்களை நீ அதைத்தான் செய்யவேண்டும் அல்லது இப்படித்தான் செய்யவேண்டுமெனக் கட்டளையிடுவது எந்தவிதத்தில் நியாயமாகும்.

அங்குள்ள எங்கள் உறவுகளில் யாராவது ஒருத்தர் இங்கு புலத்திலுள்ள நாங்கள் எப்படிச் செயற்படவேண்டும் எந்தவிதமான அரசியல்

நகர்வுகளை மேற்கொள்ளவேண்டுமென ஆலோசனை அல்லது கோரிக்கைகள் முன்வைக்கிறார்களா?

இல்லையே முடிந்தவரை தமக்குப் பக்கபலமா நிற்வேண்டுமென்றுதான் விரும்புகிறார்களே அன்றி

நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்தவேண்டுமென்று விரும்பவில்லை.

நாம் இங்கு செய்யும் நடவடிக்கைகள் அங்கு தமிழர்தரப்பும் அரசும் ஒரு தீர்வை எட்ட முயலும்போது

நமது உறவுகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்வதற்குரிய அழுத்தத்தை அரசுக்குக் கொடுப்பதாக அமையவேண்டும்.

அதற்கு இங்கு பலரும் பலவழிகளில் நடடிக்கைள் எடுக்கிறார்கள்.

அவற்றில் சரியானதைத் தெரிந்து நாங்கள் ஆதரவுகொடுப்பதுடன் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

அதைவிடுத்து அளவுக்கதிகமான எமது திணிப்புக்கள் ஒருகாலகட்டத்தில்

தாயக மற்றும் புலம்பெயர் சமுகங்களுக்கிடையில் ஒரு அரசியல்விரிசலையே ஏற்படுத்தும்.

இதை நாங்கள் அனைவரும் உணர்ந்துகொண்டால் சரி

Edited by naanal

புலம் பெயர் மக்களின் கருத்தை தாயக மக்களும், தாயக மக்களின் கருத்துக்களை புலம் பெயர் மக்களும் உள்வாங்கி செயற்படுவதே நல்லது.

நான் யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை.

உங்கள் பக்கத்து நியாயங்களை நான் நிச்சயமாக உள்வாங்கிக்கொவேன்.

நான் சொல்லவந்த விடயம் வேறு. புலத்தில் உள்ளமக்கள் தம்ம்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள் என்கிறார்கள் கூட்டமைப்பினர். அதுக்கு ஆமோதித்தும் எதிர்த்தும் கருத்துக்கள் எழுதப்பட்டன.

பின்னர் கூட்டமைப்பு எல்லாத்தையும் உள்வாங்கவேண்டும் என்று இந்த தலைப்பில் சொள்ளப்பட்டதுக்கும் பல கருத்துக்கள் வருகிறது. அதைத்தான் நான் சொன்னேன்.

அதாவது ஒருத்தர் இன்னொருத்தரைப் பார்த்து நீங்கள் எனக்கு நண்பர் எனும்போது அதுக்கு இல்லை இல்லை நீங்கள் அப்ப்டியானவரில்லை என்பதும் பின்னர் அவரையே பார்த்து நீங்கள் அவருடன் நண்பனாக இருக்க்வண்டும் என்று சொல்வது வேடிக்கை தானே?

உங்கட கருத்தை பார்த்து சிரிக்கிறதோ அழுகிறதோ.? நீங்கள் தரும் இணைப்பு இரண்டும் இரண்டுபட்ட வேறானவை.

நீங்கள் இணைத்த இணைப்பில் சம்பந்த சொல்வதின் சுருக்கம் புலம்பெயர்ந்த தமிழர்களின் பெரும்பான்மையானவர்கள் தனது பக்கம் என்கிறார். இது உண்மையா என்பது வேறு விடயம். ஆனால் உண்மையான விடயம் கிடையாது. சம்பந்தரின் பக்கம் தாயகத்திலேயே 15% மானவர்கள் தான் இருந்தார்கள் எனும் போது புலம்பெயந்தவர்களை பற்றி ஏன் புழுக வேண்டும்.?

உங்களின் இணைப்பில் உள்ளதில் சம்பந்தர் தான் செய்யும் வேலை திட்டங்களுக்கு எல்லாம் புலம்பெயர்ந்தவர்களும் ( இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் உட்பட) உடன்படுகிறார்கள் என்பது அப்பட்டமான புழுகல். புலம்பெயந்தவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்க படவில்லை என்பதும் தான் நினைப்பதை செய்வதுக்கு சம்பந்தன் முயல்கிறார்ன் என்பதுமே அது.

இந்த தலைப்பை பற்றி பார்ப்போம். கூட்டமைப்பினர் புலம்பெயர்ந்த மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் அதுதான் தலைப்பு. அப்படியானால் புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதாகும். அப்படி எண்றால் சம்பந்தர் புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்க வில்லை என்பது பொருள்.

உங்கள் அவசரத்தைப் பற்றி பார்த்தால் எனக்கு கவலையா கிடக்கு.

நான் இணைக்கப்பட்ட செய்திகளைப்பற்றி எதையும் சொல்லவில்லையே...

அது செய்தி மட்டும்தான் அது உண்மையா பொய்யா என்பது வேறுவிடையம். ( அனால் எது உண்மை எது போய் என்று உங்களுக்குத் தெரியும். இனிமேல் செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி உங்களிடம் கேட்கலாம் போலகிடக்கு).

இணைக்கப்பட்ட செய்திகளுக்கு மக்கள் எழுதிய கருத்துக்களைத்தான் சொன்னேன். எனக்குப்படது உங்களுக்குச் சிரிப்பாய் இருந்தால் நல்லது என்னால் உங்களை சிரிக்கவைக்க முடிந்ததை இட்டு மகிழ்ச்சிதான்.

கூட்டமைப்பு என்றாலும் 15% வீதம் எடுத்தது.. உங்கட கஜேந்திரனுக்கு எத்தினை வீதம் கிடைத்தது?

உங்களுக்கு பிடிக்காவிட்டால் விடுங்கள் அவர்களை யார் ஆதரித்தார்களோ அவர்களுக்கு அது சரிதானே.

15% மும் தமிழர்கள் தானே?

சம்பந்தர் தமிழ் பேசும் புலம்பெயர்ந்த மக்களின் விருப்புக்களையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதுக்கும், புலம்பெயர்ந்தவை எனது தலைமையை ஏற்று கொண்டனர் எண்று சம்பந்தன் சொல்வதுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. செய்திகள் இரண்டையும் படியுங்கள்.

புலம் பெயர்ந்தவர்கள் சம்பந்தரை ஏற்று கொண்டனர் எண்றா இது நாள் வரை நீங்கள் வரைக்கும் ஒற்றுமை இல்லை எனும் கோசத்தை வைத்தீர்கள்.?

இரண்டும் ஒரே மாதிரியான தலைப்புக்கள் எண்று நீங்கள் சொல்வதில் உண்மை எதுவும் இல்லை..

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழருக்கு தானே நாடு கடந்த அரசு இருக்கு, 17 லச்சம் இருக்காமே...வட்டுக்கோட்டையாரோட சேந்து சுழச்சி முறையில தலமை பதவிய எடுத்து புலத்தில அரசாட்சி செய்ய துடைச்சோ கழுவியோ நிலத்தில உயிரோட இருக்குங்கள்.

அப்போது எல்லானந்த தேரை சொன்ன மாதிரி சிங்களவன் வைக்கும் தண்ணியை நீங்கள் நக்கித்தானே குடிப்பியள். ? நீங்கள் எதுக்கும் தயார் எனும் போது உங்களை பற்றி கவலை இல்லை பாருங்கோ. ஆனால் உங்களுக்கு பின்னாலை எப்பவும் வராமல் நிக்கும் மற்றவர்களை பற்றி மட்டுமே தான் எங்கட கவலை எல்லாம்.

அது சரி உங்கட கூட்டத்துக்கு பின்னாலை கள்ளவோட்டுக்களை எல்லாம் களிச்சு எத்தினை சனம் நிக்குது.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.....புலம்பெயர் தமிழருக்கு உரித்து கிடையாது அங்கை இருக்கிறவைக்குத்தானே உரித்து, நக்கிறவை நக்க கழுவுறவை கழுவ மிச்சாக்கள நீங்கள் கொண்டுவாற வழிய பாக்கிறத விட்டு ...... தலைவர் ஜேஆருக்கு வச்ச ஆப்புல எங்களுக்கு இங்க உரித்து கிடைச்சிட்டு. தலைவற்ற ஆப்பு தலைகீழா வேலை செய்திருக்கு .... செய்தி தலைப்பே சொல்லுது. :blink:

சம்பந்தர் தமிழ் பேசும் புலம்பெயர்ந்த மக்களின் விருப்புக்களையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதுக்கும், புலம்பெயர்ந்தவை எனது தலைமையை ஏற்று கொண்டனர் எண்று சம்பந்தன் சொல்வதுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. செய்திகள் இரண்டையும் படியுங்கள்.

புலம் பெயர்ந்தவர்கள் சம்பந்தரை ஏற்று கொண்டனர் எண்றா இது நாள் வரை நீங்கள் வரைக்கும் ஒற்றுமை இல்லை எனும் கோசத்தை வைத்தீர்கள்.?

இரண்டும் ஒரே மாதிரியான தலைப்புக்கள் எண்று நீங்கள் சொல்வதில் உண்மை எதுவும் இல்லை..

இரண்டு தலைப்புக்களும் ஒன்று இல்லைத்தான் அனால் இரண்டு செய்திகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டது.

நான் சொல்வது இரண்டு செய்திகளுக்குப் பின்னும் பின்னூட்டப்பட்ட கருத்துக்களை. (செய்திகளை படித்த பின்னர் தானே கருத்துகள் எழுதினார்கள்? பிறகு ஏன் செய்தியைப் படிய்ங்கோ என்று சொல்லப்போறன்? எழுதப்பட்ட கருத்துக்களைப் பாருங்கோ என்றுதான் சொல்கிறேன்)

அவரவர் பார்வையில் இந்தத் தலைப்புக்கள் வேறு வேறு மாதிரித் தெரியலாம் அனால் எல்லாருக்கும் ஒரே மாதிரித் தெரியவேண்டும் என்றில்லை. எனது பார்வையில் ஒருவருக்கு ஒவ்வொரு நேரத்தல் ஒவ்வொருமாதிரி கிடக்குதே என்பதைத்தான் சொன்னேன்.

நான் எழுதி இருந்தது இரண்டு செய்திகளையும் ஒப்பிடவில்ல இரண்டு செய்திக்கும் எழுதப்பட்ட கருத்துக்களைத்தான்.

உங்களுக்கு அவைகள் சரியாகப்பட்டல் நல்லதுதான் நீங்கள் தெளிவாக இருப்பவராக இருக்கலாம். உங்களைப்போலவே எல்லாரும் சிந்திக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

சரி இப்ப நீங்கள் சொன்னதுக்கே வருவோம்.

சம்பந்தர் தனது தலைமையை புலத்தார் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று சொல்கிறார். அதாவது அவர் தனக்கு ஆதரவு தந்த தன்னோடு தொடர்பில் இருந்த புலத்தார்களின் கருத்தை வைத்து அப்படி சொல்லி இருக்கலாம்.

அதே போல அவருக்கு எதிரான கொள்கையுடைய புலத்தார்கள் சம்பந்தருக்கு புலத்தில் ஆதரவு இல்லை என்கின்றார்கள்.

தேர்தலுக்கு முன்னம் கூட்டை உடைக்கவேண்டாம் என்று நான் சொன்ன ஒற்றுமை ஒப்பாரிக்கும் இப்போது இருக்கும் இந்த புலம்பல் செய்திகளுக்கும் எப்படி தொர்டர்பு படுத்தப் போறிங்கள்?

தேர்தலில் மக்கள் தங்கள் முடிவை கூட்டமைப்புக்கு என்று சொல்லிவிட்டார்கள். அவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் முடிவு இறுதியானது மக்கள் பிளவை விரும்ப வில்லை என்பதுதான். அந்த முடிவை புலத்தில் இருந்ப்பவர்கள் ஏற்றால் சம்பந்தருக்கு தங்களையும் சேர்த்துதான் நீங்கள் முடிவேடுக்கவேனும் என்று சொல்லத் தேவை இல்லை. மக்களின் முடிவை மதித்தால் சம்பந்தரோட சேருங்கோ இல்லையென்றால் உங்கள் தெரிவிபடி சம்பந்தரை விலத்தி செயற்படுங்கோ.

சேர்ந்து வேலைசெய்வோம் என்று அழைத்தாலும் குற்றம் அழையாவிட்டாலும் குற்றம்

எதுக்கெடுத்தாலும் குற்றமா?

இதுக்குமேலும் தோடர்ந்தால் தேவை இல்லாமல் இது நீளும்.

உங்களால் இரண்டு தலைப்புக்கும் எழுதப்பட்ட கருத்துக்களை படித்து ஏதாவது அறியமுடிந்தால் அறியுங்கள்

இரண்டு தலைப்புக்கும் உள்ள தொடர்புகளையும் இடைவெளிகளையும் அறிய முடிந்தால் அறியுங்கள்.

இல்லையா தொடர்ந்த ஆரும் கருத்தேளுதுவாங்கள் அதுக்கு எதிர்க்கருத்து எழுதுங்கள்.

தேர்தலில் மக்கள் தங்கள் முடிவை கூட்டமைப்புக்கு என்று சொல்லிவிட்டார்கள். அவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் முடிவு இறுதியானது மக்கள் பிளவை விரும்ப வில்லை என்பதுதான். அந்த முடிவை புலத்தில் இருந்ப்பவர்கள் ஏற்றால் சம்பந்தருக்கு தங்களையும் சேர்த்துதான் நீங்கள் முடிவேடுக்கவேனும் என்று சொல்லத் தேவை இல்லை. மக்களின் முடிவை மதித்தால் சம்பந்தரோட சேருங்கோ இல்லையென்றால் உங்கள் தெரிவிபடி சம்பந்தரை விலத்தி செயற்படுங்கோ.

நாடாளாவிய ரீதியில் தமிழர்களுக்கான் ஆசனங்கள் 33 அதில் ஒரு கட்ச்சி பெற்றது கூட்டமைப்புக்கே ( 15 ஆசனகள்) அதிகம் என்பதுக்காக கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்து விட்டனர் என்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்.

18 பாராளுமண்ற ஆசனங்களை தமிழ் மக்கள் எப்படி பார்த்தாலும் வேறு யாருக்கோ தான் கொடுத்து இருக்கிறார்கள்.

33 ஆசனங்கள் நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். :blink:

சரி உங்கட கணக்குப்படி பார்த்தால் கூட்டமைப்புக்கு தோல்விதான்.

மக்கள் கூட்டமைப்பை நிராகரித்து விட்டார்கள்.

உங்கட தலைமை எங்கட தலைமை இல்லை. நிராகரிக்க பட்ட அமைப்புக்கு ஏன் பின்னை வக்காலத்து வங்குகிறீர்கள்.?

ம்.....புலம்பெயர் தமிழருக்கு உரித்து கிடையாது அங்கை இருக்கிறவைக்குத்தானே உரித்து, நக்கிறவை நக்க கழுவுறவை கழுவ மிச்சாக்கள நீங்கள் கொண்டுவாற வழிய பாக்கிறத விட்டு ...... தலைவர் ஜேஆருக்கு வச்ச ஆப்புல எங்களுக்கு இங்க உரித்து கிடைச்சிட்டு. தலைவற்ற ஆப்பு தலைகீழா வேலை செய்திருக்கு .... செய்தி தலைப்பே சொல்லுது. :blink:

உங்களுக்கே நீங்கள் எழுதினது விளங்கிலால் தான் உண்டு. ஆனால் உந்த புலம்பெயந்தவை எண்டதுக்கு ஒண்டு சொல்ல வேணும்.

இப்ப புலம் பெயந்தவைக்கு உரித்து இல்லை எண்டு சொல்லுற யார் புலம் பெயராதவை.? உந்த கருத்தை எந்தக்காலத்திலையும் புலம் பெயராதவை சொல்லட்டும்.

Edited by பொய்கை

உங்கட தலைமை எங்கட தலைமை இல்லை. நிராகரிக்க பட்ட அமைப்புக்கு ஏன் பின்னை வக்காலத்து வங்குகிறீர்கள்.?

உங்கட அந்த கணக்குப்படி நிராகரிக்கப்பட்டவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

அனால் யதார்த்த நிலையில் அவர்கள் தான் பெரும்பால தமிழ் மக்களின் நாடாளுமன்றப் பிரதி நிதிகள்.

அவர்கள் தாங்கள் என்ன அரசியல் நிலை எடுத்தார்கள் என்று சொல்லித்தான் வாக்கு கேட்டார்கள் அதன்படியே மக்கள் வாக்களித்தார்கள். வாகளிக்கத மக்கள் பேசாப்பொருள் மாதிரி

அதாவது எதிர்த்து வாக்களிக்காமல் இருந்ததன் மூலம் சம்பந்தருக்கு வாகளித்ததை ஆமொதித்திருக்கலாம்.

அல்லது தமிழர்களின் கட்சிகள் சிதைவடைந்ததனால் புறக்கணித்திருக்கலாம்

தெர்தளில்னால் என்னபயன் என்று புறக்கணித்திருக்கலாம்

நடந்து முடிந்த யுத்தத்தில் இருந்து இன்னும் மீளாமல் இருந்திருக்கலாம்

சனநாயகத்தில் முழுதாக நம்பிக்கை அறுரிக்கலாம்

இதுக்குப் போய் ஈன வீண்வம்பை வாகுவாநேன்று இருந்திருக்கலாம்

இல்லை புலிகளைத் தவிர எங்களுக்கு ஒருதலைவன் இல்லை என்றும் இருந்திருக்கலாம்.

இதை விட வேற எதாகவும் இருந்திருக்கலாம்.

அனாலும் இன்றைக்கு இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் எல்லாரும் தாயகக் கனவை கைவிட்டார்கள் என்பதில்லை. ஆனால் அதற்கான தருணம் இதுவல்ல என்பதே அவர்களின் நிலைப்பாடாகவும் இருக்கலாம்.

இப்போது எந்த ஆயுதம் எங்களால் பாவிக்க முடியுமோ அதைத்தான் பாவிக்கவேண்டும்.

சம்பந்தரையும் ஒரு ஆயுதமாக் பாவிக்கமுடியாது என்று நினைத்து இன்று பலர் புலம்புகின்றனர்.

முன்னம் எங்களை ஒழுங்கு படுத்துவோம் சீர் திருத்துவோம் நிமிந்து நிப்போம் நேரம்வரும்போது எமது இலக்கை நோக்கி முயற்சிக்கலாம். இப்போது விழ்த்து கிடந்தது இருக்கும் எமக்கு குறிப்பிட்ட கயிறு வந்தால்தான் ஏறுவமேன்று இருக்கூடாது.

ஐயோ... இனிமேல் எனக்கு எழுத வேண்டாம் போல் தெரிகிறது. மற்றையது உங்களுக்கு நீங்களும் தேடுங்கோ விடையை யார் கண்டு பிடித்தாலும் நல்லதுதானே.

அப்படியானால் நீங்கள் சொல்லுங்கள். கூட்டமைப்பினால் தமிழர்களுக்கு விடிவு நிச்சயமாக கிடைக்கும் எண்று நீங்கள் நம்புகிறீர்களா.? இதுக்கு பதிலை சொல்லுங்கள்.

நீங்கள் நிச்சயமாக நம்பும் விடயங்களை மட்டும் விடயங்களை மற்றவருக்கு புகுத்துவதுதானே அழகு.

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ... இனிமேல் எனக்கு எழுத வேண்டாம் போல் தெரிகிறது. மற்றையது உங்களுக்கு நீங்களும் தேடுங்கோ விடையை யார் கண்டு பிடித்தாலும் நல்லதுதானே.

உண்மையில் மக்கள் வாக்களிக்கமால் விட்டதற்கு காரனம் யாரையும் ஆதரிச்சோ அல்லது யாரையும் எதிர்த்தோ இல்லை.மக்களுக்கு இப்போ முக்கியம்.தமது வாழ்வாதாரம்.இதை இங்கை மோகன் இணைத்த ஒரு வானொலி பேட்டியுலம் கேட்டேன்.ஊரில் உள்ள எனக்கு தெரிஞ்சைவையும் சொல்லுகினம்.ஆனால் இங்க யழ்களத்தில் வாக்களிக்காமல் விட்ட மக்களின் காரனத்தை ஒவ்வருத்தரும் தமது தமது வசதிக்காக பாவிக்கினம்.நாங்கள் எங்கடை வீட்டுக்கு மட்டும் பணம் அனுப்பிப்போட்டு பக்கத்து வீட்டுக்காரனுக்கு கொமான்ட் பண்ணினால் சனம் கேக்குமோ.பாதிக்க பட்டமக்களுக்கு உதவாமல் அரசியல் மட்டும் பேசினால் எங்களுக்கும் சராசரி அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம். :blink:

எங்கட வசதிக்காக நாங்கள் எதையும் மாத்த இல்லை. மக்கள் அங்கை அரசியல் செய்யும் யாரையும் நம்பவில்லை என்பது மட்டுமே நான் உட்பட பலர் சொல்வது. அவர்களால் தமிழ் மக்களுக்கு எந்த மாற்றமும் வராது இதுதா உண்மையும் கூட.

இதுக்காக புலம்பெயர்ந்தவர்களில் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள் எண்டு நான் சொன்னதாக பலர் சொல்லக்கூடும். புலம்பெயர்ந்தவர்களும் தங்கள் மீதான நம்பகத்தை உணர்த்த வேண்டிய நிலையில் தான் இருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை பெற வேண்டியது அவசியம் எனும் பொது அவை செயற்பாடுகளூடிதான் ஏற்படுத்த கூடியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.